வேலையின்மை, தரித்திரம், பொருள் விரயம், மனக்குழப்பம், கொடிய சேதம், விபத்து, விபத்துக்களால் மரணம், பொருட்சேதம் போன்றவற்றிற்கும் வளர்பிறை பிரதோஷ பூஜையை 49 முறை மேற்கொண்டால், கண்டிப்பாக விமோசனம் உண்டு. நாடியும் இதைத்தான் சொல்கிறது:
"பேரிடர் நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே.
மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும்.
விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே: புவியுறை,
சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே
பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம்
ஏகித் தொழுத பேறு பெறுவீரே ப்ருஹந்நாயகி யுறை
தக்ஷிணமேரு தன்னை கை தொழுதக் கால்
சிவனே தரிசனம் தருவான் பொய்யல்ல.
தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க் கே."பிரதோஷம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது......
நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறி, நம் சந்ததி முழுக்க சிவன் அருள் கிடைக்க - பிரதோஷ நேர வழிபாடு , நமக்கு கிடைத்து இருக்கும் பொக்கிஷம் என்பதை சித்தர்கள் உணர்த்தி உள்ளனர்.
என் மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய வழிபாடு இந்த பிரதோஷ வழிபாடு.....
(இலங்கையில் எங்கள் சித்தர்களின் குரல் அன்பர்களினால் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வாழைச்சேனை ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வர வைத்திய நாத சுவாமி தேவஸ்தானத்தில் ஒவ்வொரு பிரதோஷமும் சிறப்பாக உரிய முறையில் எங்களால் நடத்தப்படுகிறது..... அனைவரும் வருக....)
- சித்தர்களின் குரல் shiva shangar
No comments:
Post a Comment