Search This Blog

Monday, October 14, 2019

ஜான் கென்னடி கொல்லப்பட்டது ஏன் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.



அகிலத்தின் மிகப்பெரிய வல்லரசு... உலகத்தை ஆட்டிப்படைக்கும் போலீஸ்காரன் என்று உலக மக்களால் மிரட்சியோடு பார்க்கப்படும் அமெரிக்க தேசத்தின் பாதுகாப்பு 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளியும் மர்மமான முறையில் கொல்லப்பட்டான். ஆனால், ஜான் கென்னடி கொல்லப்பட்டது ஏன் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது.

உலக நாடுகளில் நடக்கும் விவகாரங்களில் மூக்கை நுழைத்து உளவுபார்க்கும் அமெரிக்கா, ஜான் கென்னடி கொலை வழக்கில் உள்ள புதிர்களை இதுவரை விடுவிக்கவில்லை. ஜான் கென்னடி கொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட வாரன் கமிஷனின் முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த வழக்கு பற்றி பல்வேறு சந்தேகங்கள் இதுவரை எழுந்துகொண்டே இருக்கின்றன.

ஜான் கென்னடியைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும், ஆஸ்வால்டு தனது சுயவிருப்பத்தின் பேரில்தான் கென்னடியைச் சுட்டானா? வேறு யாருடனாவது கூட்டு சேர்ந்து சதி செய்தானா? கியூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் ஏஜன்ட்டாக இருந்து சுட்டானா? அமெரிக்க உளவுத் துறை, சி.ஐ.ஏ. விருப்பத்தின் பேரில்தான் கென்னடியைச் சுட்டானா?
தேசிய காப்பகம், இந்த கொலை தொடர்பான பெரும்பாலான கோப்புகளை ஏற்கனெவே வெளியிட்டுவிட்ட நிலையில், கடைசிகட்ட கோப்புகள் மட்டும், இன்னும் பூட்டப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
`மேலும் தகவல்களை பெரும் பொருட்டு, அதிபர் என்ற முறையில், பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்த கென்னடியின் கோப்புகளை திறக்க நான் அனுமதிப்பேன்` என்று டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
1992ஆம் ஆண்டு, அமெரிக்க காங்கிரஸ், ஆவணங்கள் வெளியிடப்படும் தேதிகள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாதவையாக இருக்குமென்றால், அதிபர் கென்னடி குறித்த ஆவணத்தை 25ஆண்டுகளில் வெளியிடலாம் என தெரிவித்துள்ளது.
இந்த காப்பகம் வெளியிடப்படாத மூன்று ஆயிரம் ஆவணங்களுக்கு மேல் கொண்டுள்ளது. இதற்கு முன்பு முப்பது ஆயிரம் ஆவணங்களுக்கு மேல் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்களை அதிபர் மொத்தமாக வெளியிடுவாரா அல்லது தொகுப்பாகவா என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.
`வாஷிங்டன் போஸ்ட்` பத்திரிக்கையின் அறிக்கைப்படி, கென்னடி கொலை குறித்த நிபுணர்கள், கடைசிகட்ட ஆவணங்களில், அவரின் கொலைகுறித்த பெரிய ஆச்சரிய தகவல்கள் ஒன்றுமில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், கொலைக்கு முன்பாக, மெக்சிகோ நகரில் ஆஸ்வோல்ட்டின் நடவடிக்கைகள் குறித்து இந்த கோப்புகள் கூறலாம்.
கொலை நடந்த அன்றே டாலஸில் ஆஸ்வோல்ட் கைது செய்யப்பட்டார். கொலை செய்ததை மறுத்த அவர், தன்னை ஒரு பலிகடா என குறிப்பிட்டார்.
காவல்துறையின் விசாரணையில் இருந்த போதே, ஆஸ்வோல்ட் அங்குள்ள இரவு விடுதியின் உரிமையாளர் ஜாக் ரூபியால் கொல்லப்பட்டார். கென்னடியின் கொலையே, அமெரிக்க வரலாற்றின் மிகவும் சக்திவாய்ந்த சதி கோட்பாடாக உருவாகியது.
`அமெரிக்க மக்கள் உண்மையை அறியும் தகுதியை பெற்றுள்ளனர். குறைந்தபட்சம், இத்தனை ஆண்டுகளாக அரசு எதை மறைத்து வைத்தது என்பதையாவது அவர்கள் அறியும் தகுதி பெற்றுள்ளனர்` என்று கென்னடி குறித்த புத்தகம்எழுதியவரும், வெர்ஜீனியா பல்கலைக்கழகத்தின், அரசியல் பிரிவின் இயக்குநரான லாரி சபடோ ஏ.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment