சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும், முதலில் தல விநாயகர் நர்த்தன விநாயகர் திருக்காட்சி தருகிறார்.
இங்கு அன்னை கற்பகாம்பாளிடம் முருகப்பெருமான் சூரனை சம்கரிக்க சிங்கார வேல் பெற்றபோது, ஈசன் இங்குள்ள விநாயகரை வழிபட்ட பின்பே முருகப்பெருமானை போருக்கு செல்ல பணித்தாராம். இதனால் சிங்காரவேலர் இத்தல விநாயகரை வழிபட்டாராம். இதனைக்கண்டு மகிழ்ச்சி அடைந்த விநாயகர், அந்த மகிழ்ச்சியில் ஆனந்தித்து நர்த்தனம் ஆடினாராம்.
நர்த்தன கோலத்திலேயே முருகப்பெருமானையும் ஆசீர்வதித்தாராம். இதனால்தான் இத்தல விநாயகர் நர்த்தன விநாயகர் என்றானார் என்கிறது தலபுராணம். விநாயகர் என்றும் இத்தலத்தில் ஆனந்தித்த நிலையில் நர்த்தன திருக்கோலத்தில் இருப்பதால் விநாயகர் அகவல் பாராயணம் செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் வாழ்வில் சகல நலத்தையும், வளத்தையும் தருவார் என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, முருகப்பெருமான் சூரனை வதைப்பதற்கு நர்த்தன விநாயகர் அருளாசி வழங்கியதால் இத்தல நர்த்தன விநாயகரை அருகு சாற்றி விநாயகர் அகவல் பாராயணம் செய்து தொடர்ந்து வழிபட பகை, பில்லி, சூன்யம், எதிரி தொல்லை, கடன் தொல்லை அகலும் என்கிறார்கள். நர்த்தன விநாயகரை சங்கட ஹர சதுர்த்தி நாட்களில் அபிஷேகம் செய்வித்து வழிபட்டு வந்தால் வாழ்வின் கவலைகளை ஒழிப்பாராம்.

No comments:
Post a Comment