Search This Blog

Tuesday, June 19, 2018

ஆற்றாமை. இயலாமை. முயலாமை


ஆற்றாமை. இயலாமை. முயலாமை. இந்த மூன்று வார்த்தைகளும் முதல்வர் தவிர்ந்த மூவருக்கும் பொருந்தும்.!
திரு சுமந்திரன் அவர்கள் தனக்கிருக்கும் அறிவித்திறமையால் இலங்கை அரசை பாரிய சர்வதேச நெருக்கடிக்குள் தள்ளி பல் வகையான அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வை கண்டு ( குறிப்பாக) காணி விடுவிப்பு. கைதிகள் பிரச்சனை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு இவை அனைத்தும் பெற்று கொள்ள வாய்பிருந்தது...!
ஆனால் அவர் என்றுமே தமிழ் மக்களுக்காக எதையும் செய்தது கிடையாது. தனது தாய்கட்சியான ஐ தே க வை ஆட்சிக்கு கொண்டுவர தமிழ் மக்களை சாதகமாக முன் நகர்த்துவதே அவரின் செயல்பாடாக இருந்ததை யாவரும் அறிவர்...! தமிழ் மக்களுக்காக அவர் இதயசுத்தியுடன் எதையும் செய்ய '' முயலவில்லை..!
இதுவரை.(முயலாமை...! என்ற வார்த்தை இவருக்குரியது.
திரு மாவை சேனாதிராசா இவர் வடிவேலு பானியில் சொல்வதானால் கட்சிக்கு தலைமை பதவியை வகுத்தாலும்! கட்சிக்குள் டம்மி பீஸ்சாகவே உள்ளார். மேயர் பதவியாகட்டும் முதல்வர் பதவியாகட்டும் யாவும் இவர் நினைப்பது போல் நடப்பதில்லை காரணம் பெறும் பதவியை அலங்கரிப்பது மட்டுமே இவர் செயல். அவரின் கடமையை செய்வது சுமந்திரனே.
இவரின் இயலாமையை இவர் உரையாற்றும் கூட்டங்களில் காணலாம். சம்மந்தமே இல்லாமல் முக்கால் மணிநேரம் வெற்றுக் கதிரைகளை பார்த்து உரையாற்றுவதே தனிச்சிறப்பு. விடுதலைக்காக உரிமைக்காக போராடும் சமூகத்தில் இவ்வாறனவர்களை எவ்வாறு வாக்களித்து மக்கள் தேர்ந்து எடுக்கிறார்கள் என்ற குழப்பம் என்மனதில் அடிக்கடி எழும். இயலாமை இவருக்குரியது.
திரு சம்பந்தன் ஐயா இன்று எம்மத்தியில் வாழும் வயது முதிர்ந்த கற்றறிந்த அரசியல்வாதி மட்டுமல்ல சிறந்த ராஜதந்திரி இருந்தும் என்ன பயன்? தாம் வகிக்கும் பதவியை கூட ஆளும் அரசுக்கு எதிராக ஒருபோதும் பயன்படுத்தாத விசித்திரமான எதிர்க்கட்சி தலைவர். இத்தனை வருடகால் அரசியலில் இவர் தமிழ்மக்களுக்காக எதையும் சாதித்ததில்லை.
தனது சொந்த தொகுதியில் கூட அவர் நிகழும் அத்துமீறல்களை தடுத்தவருமில்லை. நல்லாட்சியை நிறுவியது தாங்களே என அடிக்கடி மார்தட்டும் இவர் அந்த நல்லாட்ச்சியை கொண்டு வந்த நோக்கத்தை நிறைவு செய்ய தவறியது மட்டுமல்லாது அரசுக்கு வரும் சர்வதேச அழுத்தங்களை வலுவிழக்க அவரும் துணைபோயுள்ளார்.
இந்த நிலையில் அங்கு இன்னும் பதவிக்காக ஒட்டியிருக்கும் திரு செல்வம் சித்தர் அவர்கள் ஒற்றுமை பற்றி வியாக்கீனம் செய்வது வேடிக்கை..! பல எண்ணற்ற போராளிகளை கொண்டிருந்த இயக்கத்தின் தலைவர்களான இவர்கள் தமக்கு கீழ் இருந்த போராளிகளை ஒருமுக படுத்தும் தகுதியை எப்பவே இழந்துவிட்டனர்.
இவர்கள் தலைமை பண்பை பெறுவதற்கு அருகதை அற்றவர்கள்.
இவ்வாறான நிலையில் காலம் காலமாக பேசி வந்த மாற்றணி உருவாகும் வேளையில் இவர்கள் ஒற்றுமை என்ற ஒற்றை வார்த்தையை பிரயோகித்து மீண்டும் தமது தலைமை பதவியை தக்க வைப்பது எதற்காக? தமிழ் மக்களின் நன்மை கருதியல்ல...!
தற்போது எமக்கு தேவையானது நேர்மையான பன்முகதன்மையுடைய தலைமையே...
நீக்கள் ஒற்றுமை பற்றி பேசுவதைவிட உங்கள் தமிழரசுக்கட்சியை முதல்வர் தலைமையில் அணிதிரளும் கட்சியுடன் தமிழ் மக்களின் நலன் கருதி இனைத்துவிடுங்கள்.
நீங்களும் உங்கள் அரசுக்கான ஆதரவை விலக்கிவிட்டு வகிக்கும் பதவிகளை துறந்து முதல்வர் ஆரம்பிக்க உத்தேசித்துள்ள கட்சியுடன் இனைந்துவிடுங்கள். அதுவே நீங்கள் தமிழ்மக்களுக்கு செய்யும் பெரும் உதவியாகும்.!
மாற்றமே விடிவை தரும். வெறுமையை போக்குவோம்.
அன்புடன் ஸ்ரீரங்கன்.

No comments:

Post a Comment