அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது, பெளத்தத்தைத் தழுவுவது என்று எடுத்த முடிவு உணர்ச்சிவசப்பட்ட முடிவு அல்ல. பல ஆண்டுகாலமாக வரலாற்றை ஆராய்ந்தபிறகே அவர் அப்படியான முடிவுக்கு வந்தார். பிரெஞ்சுப்புரட்சி மானுடச் சமூகத்துக்கு அளித்த நவீன சிந்தனைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அளவுகோலைக்கொண்டு இந்து மதத்தைப் பரிசோதித்தார்.
''உலகில் உள்ள எல்லா மதங்களும் ‘இறைவன் மனிதனைப் படைத்தார்’ என்று சொல்கின்றன. ஆனால் இந்து மதம் மட்டும்தான் இறைவன் ஒரு மனிதனை முகத்தில் இருந்து...ம் இன்னொரு மனிதனைக் காலில் இருந்தும் படைத்தார்’ என்று சொல்கிறது”
என்று தன் விமர்சனத்தை முன்வைத்தார். இந்து மதத்தில் உள்ள சாதியமைப்பு பிரமிட் முக்கோண அமைப்பில் இருக்கிறது என்று சொன்ன அம்பேத்கர், ஒவ்வொரு சாதிக்காரனும் தன்னை மேலே இருந்து அழுத்துகிறவன் மீது கோபப்படுவதில்லை. ஏனெனில், அவன் அடிமைப்படுத்துவதற்குக் கீழே ஒரு சாதி இருக்கிறது. இந்த உளவியல் திருப்தி, சாதியமைப்பை வலுவாகத் தக்கவைத்துக்கொள்வதைக் கண்டுபிடித்துச் சொன்னார். ''இந்து மதம் என்பது ஒவ்வொரு சாதிக்காரனும் இன்னொரு சாதிக்காரனிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்பது போன்ற விதிமுறைகளின் தொகுப்பாகத்தான் இருக்கிறது” என்றார்.
“இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு வர்ணமும் பல மாடிகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு போலத்தான். ஆனால் ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்குச் செல்வதற்கு என்று எந்தப் படிகளும் கிடையாது” என்றார். அதனாலேயே “ஓர் ஆதிக்கச்சாதியில் பிறப்பவன் கருவிலேயே நீதிபதி ஆகும் கனவைக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு தோட்டியின் மகனோ கருவில் இருக்கும்போதே தோட்டியாவதற்கான வாய்ப்பைத்தான் கொண்டிருக்கிறான்” என்றார்.
அம்பேத்கர் அவர்கள் திரு காந்தியை சாடி (ஹரிஜன்) எங்களை இந்து மதம் அடிமைபடுத்துவதைத்தான் திரு காந்தி விரும்புகிறாரா? தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜன் (ராமனின் பிள்ளை) என்று திரு காந்தி அழைப்பதையும் அதன் பெயரில் பத்திரிகை வருவதையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்கிறார் ( சாதி ஒழிப்பு நூல் ) ஆக அம்பேத்கரும் பெரியாரும் ஹிந்து சனாதன சாதிய வன்மத்தை போட்டு உடைக்கிறார்கள்... காந்தியின் கூற்றுப்படி ஹரிஜன் என்பது ராமனின் பிள்ளை எனில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெருமைதானே என நினைக்கத் தோன்றும் ஆனால்
அம்பேத்கரும், பெரியாரும் மிகத் தெளிவாக ராம ராஜியத்தை உடைத்தெறிகிறார்கள், ராமாயணத்தில் உள்ள சம்பூகன் வதத்தை இருவருமே மிக நேர்த்தியாக கையாண்டார்கள் ... ராமனின் ஆட்சியில் ஒரு பார்ப்பனின் கோரிக்கைக்காக எவ்வித விசாரணையுமின்றி கொலையும் செய்யத் துணியும் கேடுகெட்டதுதான் ஹிந்து சனாதன ராம ராஜ்ஜியம் என அறிவுறுத்துகின்றனர்... இங்கு ராமாயணத்தில் ஒரு பார்ப்பனன் ராம ராஜ்ஜியத்தை குறை கூறுகிறான் அதற்கு நாரதர் என்பவர் குறையை தீர்க்க வழி சொல்கிறார், என்னவென்றால் கடைகோடியில் எங்கோ பார்ப்பனர் அல்லாத ஒருவன் தவம் இருப்பதாகவும் (பார்ப்பனர் அல்லாதோர் தவம் இருப்பது குற்றமா?) அவன் உயிரை பறித்து விட்டால் தீர்வு வரும் என்கிறார்... ராமனும் அவனை தேடி அலைகிறார் சம்பூகன் அவன் என அடையாளம் காண்கிறார் ... எந்த சாதி என மட்டும் வினவுகிறார் ( வேறு எதுவும் அவனிடத்தில் கேட்கப்படவில்லை) அவன் "சூத்திரன்" என்றதும் தலையை துண்டிக்கிறார்... இதுதான் ராம ராஜ்ஜியம் எனில் எங்களை எப்படி ராமனின் பிள்ளை என அழைப்பீர்கள் என அம்பேத்கரும் பெரியாரும் சாடுகிறார்கள்...ஸ்ரீமத் ராமாயணம் உத்தர காண்டம் 65 – 77
அத்தியாயம் 76 ( 613) சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்)ஹிந்து மதம் எந்த விதத்திலும் , எக்காலத்திலும் சாதியத்தை வைத்தே பிழைப்பு நடத்துவதைத்தான் நோக்கமாககொண்டிருக்கிறது அதிலும் குறிப்பாக பார்ப்பனியத்தை.... இடைநிலை சாதிகளான ஏனைய அனைத்து "சுமார் 3000 க்கும் மேலான சாதிகள்) சாதிகளுமே பார்ப்பனனை பொறுத்தவரையில் "சூத்திரன் (தேவடியாள் மகன்) மட்டுமே.... ஆனால் இந்திய சாதிய அமைப்புகள் தங்களை சூத்திரன் என்றழைக்கும் பார்ப்பனியத்தை எதிர்க்காமல் தங்களுக்கு கீழான அடிமை சாதிகளை உறுவாக்கி அவர்களை ஒடுக்குதலையே முதன்மையாக கொண்டிருக்கிறார்கள்.... இவர்களுக்கு தேவை எதிர்ப்பு அல்ல ஏனைய அடிமைகள் அவ்வளவே....
தங்களை ஆண்ட சாதி , படியளந்த சாதி, அரசாண்ட ஷத்ரியர்கள் என பெருமை பிதற்றிக்கொடண்டாலும் ஹிந்துமத பார்பனனை கேட்டுப்பாருங்கள் "அவாள்ளாம் சூத்திரா" என்பார்கள்... இதுதான் ஹிந்துமதம்...
இந்த இடைநிலை சாதிகளானாலும் , அதன் கீழான தாழ்த்தப்பட்டவர்களானாலும் ஹிந்து மதத்தின் மிக நுணுக்கமான அடிமை படுத்துதலையே கடைபிடிக்கிறார்கள்... தங்களை வைசியர்களாக , ஷத்ரியர்களாக , அடையாளப்படுத்தும் சாதிகள் சூத்திரர்களை ஒடுக்குவது, சூத்திரர்கள் தங்களை ஒடுக்கும் இடைநிலை சாதிகளை எதிர்க்காமல் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குவது , தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களையே ஒடுக்குவது... அதன் வழி ஹிந்து மதத்தை விடாப்பிடியாக இறுக்கமாக கட்டமைப்பது என்பதைத்தான் காலங்காலமாக பின்பற்றப்படுகிறது...ஒரு சாதிகள் சூழ்ந்து இன்னொரு சாதிகளை அனுசரிக்கும் வழக்கம் ஹிந்து மதத்திற்கோ, அதன் பார்ப்பனியத்திற்கோ அறவே இருக்காது.... ஏனென்னால் அப்பொழுது ஹிந்துமதம் அழிந்து போகும்... இதன் காரணமாகவே பெருந்தலைவர்களையெல்லாம் ஹிந்துமதம் சாதிய வட்டத்திற்குள் அடக்கி வைக்கும் , அம்பேத்கரை தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமான தலைவராக ஹிந்து மதம் வைத்தது இதன் மூலமேயாகம், நடைமுறையில் காமராஜரை கூட சாதித்தலைவராக மாற்றியதும் குறிப்பிடப்பட வேண்டும், மக்களின் உணர்வுகளில் , அவர்களின் பலவீனங்களில் ஒவ்வொன்றிலும் ஹிந்து மதத்தின் அனுகூலங்களை புகுத்தி அவர்களின் சாதிய உணர்வுகளை எப்பொழுதுமே ஹிந்து மதம் கிளரிக்கொண்டே இருக்கும்...
என்ன சாதித்தது ஹிந்து மத சாதிகள் , தாழ்த்தப்பவர்கள் கல்வி யை செவி வழியில் கேட்டால்கூட பொசுக்கி விடு என்றதும்(கீதை) , பெண்களுக்கு (பார்ப்பன பெண்களும்) கல்வி அறவேக்கூடாது அவர்கள் ஆண்களுக்கு அடிமையாளர்கள் என்றும்தான் ஹிந்துமத பார்ப்பனிய சாதனையா? இப்போதெல்லாம் இப்படி நடப்பதில்லையே என்கிறீர்களா? "நான் உன்னை கல்யாணம் பன்னிட்டேன்டி இனிமேல் எனக்கு நீ அடிமை" என எத்தனை உதடுகள் சொல்லியிருக்கும் என்று மனதை திறந்து வைத்து உங்களை நீங்களே உணருங்கள், சாதியின் பெயரால் ஆணவக்கொலைகளை நிகழ்த்துவதில் , தீண்டாமை கடைபிடிக்கப்படுவதில் ஹிந்து மத சனாதனம் மிகப் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது என்பது இந்த நாட்டின் மிகப் பெரிய சாபம் என்றால் அது மிகையாகாது.
No comments:
Post a Comment