Search This Blog

Monday, April 20, 2015

தாலி அறுத்தான் சந்தை ,,,,,! ஆடை அணிய கூடாது என்றது ஒரு சட்டம்.



ஆடை இல்லா மனிதன் அரைமனிதன்" - ஆடை அணிய கூடாது என்றது ஒரு சட்டம்.
ஆம்,
10 மற்றும் 11- ஆம் நுற்றாண்டுகளில் ஆரியப் பிராமணர்களின் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கியது. அந்த வேளையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் சாதிக் கட்டுபாட்டுக்குள் வந்தன.
நமக்கு தெரியுமோ என்னவோ, நம்பூதிரிகள் யார் என்று? மலையாளம் மொழியை தாய்மொழியாக கொண்ட பிராமணர்கள். ( ஆதிசங்கரர் இந்த இனத்தை சேர்ந்தவர் தான்).
ஜென்மி சம்பிரதாயத்தின் ஆதிக்கத்தால் 12 - ஆம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் அதிகரித்தது. மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகியது.இந்த பாகுபாட்டால் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முழங்காலுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்த விதிப்படி அவர்கள் சாதி வரிசையை உருவாக்கினார்கள்.
உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மார்பகங்களை மறைக்ககூடாது .
பிராமணர்கள் முன்பு தாழ்த்தப்பட்ட அனைத்து பெண்களும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும்.அப்படி அவர்கள் மறைத்து நடந்தால், தங்களுக்கு மரியாதை தரவில்லை என்று தண்டித்து வந்தனர். மரண தண்டனை கூட விதித்தனர்.
இந்த வரிசையில் நாடார், முக்குவர், புலையர் போன்ற பதினெட்டுக்கும் மேற்பட்ட சாதிகள் இந்த விதிக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் நாடார் இனத்தவர் சீர்திருத்த கிருத்தவ மதத்தில் இணைந்து சார்ல்சு மீட் என்ற பாதிரியாரின் அறிவுரைப்படி, பெண்கள் தங்களின் மார்பகங்களை மறைத்தது மட்டும் அல்லாது அதற்கு மேல் சேலையும் அணிய ஆரம்பித்தனர்.
இதை விரும்பாத மேல் சாதி இனத்தவர் 1822 - இல் கலவரத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சனை பெரிதாக, மீட் ஆங்கில தளபதிக்கு விரிவாக கடிதம் எழுதினார். அதன் பயனாக இந்த பிரச்சனை நீதிமன்றத்துக்கு வந்தது. கிருத்தவ பெண்கள் குப்பாயம் என்ற வகை ஆடையை பயன்படுத்தலாம் என்று நீதிமன்றம் 1823 - இல் தீர்ப்பு விதித்தது.
இந்த தீர்ப்பு நிரந்தரமான தீர்வாக இல்லாததால் 1827 - இல் ஆத்தூர் (கன்னியாகுமரி மாவட்டம்) மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இப்பிரச்சனை மிக பெரிய அளவில் பரவியது. இதற்கு காரணம் இந்த கிருத்தவ இன பெண்கள் தங்களுக்கு சொன்ன தீர்ப்பின் படி குப்பாயம் அணியாமல் ஐரோப்பியர்களின் ஆடைகள் மற்றும் உயர் சாதிக்காரர்களின் ஆடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர்களை பார்த்து இந்து நாடார் இனத்தவரும் மேலாடைகள் அணியும் பழக்கத்திற்கு வந்தனர்.
இது ஒருபுறம் நடந்து முடிய, 1858 - இல் விக்ட்டோரிய மகாராணியின் வருகையால், இந்த தோள் சீலை போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது. இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவை ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியிடமிருந்து அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது நடந்தது. உயர் சாதிக்காரர்கள் ஆங்கிலேய அரசிடம் முறையிட்டு சரிவர அமையாததால் பெரும் கலவரம் வெடித்தது.
மேல் சாதி காரர்கள் நாடார்குல மற்றும் கிருத்தவ பெண்களின் குப்பாயத்தை கிழித்தும் அவர்களை துன்புறுத்தியும் வந்தனர். அவர்களின் அருகாமையில் சென்றால் தீட்டு என்பதால் நீண்ட கழியின் முனையில் அரிவாளை கட்டி அவர்களின் மேலாடையை கிழித்தனர். அப்படி கிழிக்கும் போது ஒருநாள் சந்தைக்கு வந்த ஒரு பெண்ணின் குப்பாயதோடு தாலியும் அறுந்து விழ்ந்தது. அன்றிலிருந்து அந்த சந்தைக்கு தாலி அறுத்தான் சந்தை என்று பெயர் வந்தது. கன்னியாகுமரியில் உள்ள இந்த சந்தை இன்றும் தாலி அறுத்தான் சந்தை என்றே அழைக்கப்படுகிறது.
இப்போராட்டத்தின் முடிவில், அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர். இதற்கான அரசாணை 26, சூலைத் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை மற்ற கீழ் சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.
இந்த கதை குறிப்பிட்டதற்கு காரணம்,
முட்டாள்கள் இன்னும் அடிமையாய் வாழவே விரும்புகிறார்கள் அவர்கள் இதை அறியமாட்டார்கள் ,,,,
அதற்க்கு தான்

No comments:

Post a Comment