Search This Blog

Monday, February 2, 2015

உறக்கமின்மை


நள்ளிரவில் விழித்தெழுந்து என்னையே கேட்டுக்கொள்கிறேன்
என்ன நேரும் சிலிக்கு?
எனது ஏழை தேசம், இருண்ட தேசம் என்னவாகும்?
இந்த நீண்ட மெல்லிய கப்பலை
இந்தக்கற்களை
இந்தச் சிறு வயல்வெளிகளை
நுரைகளுக்கிடையே வாழும் வாடாத ரோஜாவை
அளவற்று நேசித்து
எனது தேசமும் நானும் ஒன்றானோம்
அதன் புதல்வர்கள் ஒவ்வொருவரையும் நேசித்தேன்
அழுகையுடனோ மலர்ச்சியுடனோ
பருவங்கள் என்னுள் ஒன்றன் பின் ஒன்றாய்த் தொடர்ந்தன
சந்தேகம் இறந்தவருடம் மெல்ல முடிவடைகிறது.
நம் எல்லோரையும் இரத்தம் சிந்தச் செய்த
தவறுகள் முடிவடைகின்றன,
ஒரு சிறந்த வாழ்க்கையை, நியாயமான வாழ்க்கையை
மறுபடியும் திட்டமிட்டுத் தொடங்குகிறோம் நாம்.
தொல்லை மீண்டும் தோன்றுகிறது -
அவர்கள் மீது எழுகிறது குரோதம்.
ஒவ்வொன்றும் புதிதாய் இருந்தது எனக்கு. இந்த முழுக்கிரகமும்
வெறும் வயோதிகத்தால் இறந்து கொண்டிருக்கிறது.
ஆனால், ஒவ்வொன்றும் நான் பரிசோதிக்கத் திறந்து கொண்டிருந்தது
அந்த மின்னல் வீச்சை நொடிநேரம் பார்க்க
எனது சிறிய கண்களுடன்
கசப்புத்திரை உயர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
நிரந்தரமான புன்னகையுடன்
உலகியல் புன்னகையுடன் உயர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
ஐரோப்பா மீது திரை விலகுவதைப் பார்த்தேன்.
பாப்லோ நெரூதா
தமிழில்: கவிஞர் சுகுமாரன்
('நெரூதா கவிதைகள்' தொகுப்பிலிருந்து)
புது எழுத்து வெளியீடு

No comments:

Post a Comment