வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.
வாழை வகையில் தென்னிந்தியாவை மிஞ்ச முடியாது. மலைப்பழம், ரஸ்தாளி, சிறுமலைப்பழம், பூவன், சர்க்கரை கதளி, செவ்வாழை, பச்சைப்பழம், பேயன் இப்படி.
வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தில் இதுவே சர்க்கரையாகி மிருதுத்தன்மையையும் நல்ல மணத்தையும் தருகிறது.
எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.
மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.
வயது ஆக ஆக எல்லோருக்கும் கண்பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.
Related Posts : Health
No comments:
Post a Comment