ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க வழிவகை செய்யும் ஹோர்மோனை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இவர்களுக்கு இன்சுலின் மருந்து பயன்படுகிறது.
இதற்கு மாற்று வழியை கண்டுபிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைக்கும் ஹோர்மோனை கண்டுபிடித்துள்ளனர்.
முதல் கட்டமாக இந்த ஹோர்மோனை எலிக்கு சோதனை செய்து பார்த்து வெற்றியடைந்துள்ளனர். இதை மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்கும் முயற்சியில் விஞ்ஞானி ஜொனாதன் க்ராப் தலைமையிலான குழு ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து விஞ்ஞானி க்ராப் கூறுகையில், இந்த பரிசோதனை வெற்றியடைந்தால் இன்சுலின் மூலமோ அல்லது மாற்று வகையிலோ இந்த ஹோர்மோனை செலுத்தி ரத்தத்தில் சர்க்கரையை கணிசமாக குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
|
Search This Blog
Friday, April 6, 2012
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் ஹோர்மோன் கண்டுபிடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment