Search This Blog

Thursday, January 12, 2012

உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கும் மாம்பழம்




மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.
மாம்பழம் பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது.
பழச்சதை நன்றாக கூழாக்கப்பட்டு, மாம்பழச்சாறாகவும் பருகப்படுகிறது. மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பருகப்படுகிறது அல்லது ஐஸ் கிரீம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.
100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு
வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவார்கள்.
மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.
வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

No comments:

Post a Comment