Search This Blog

Tuesday, June 23, 2015

காலப்பயணம்(Time travel)


பிரபல இயற்பியலாளர்,வானியலாளர் ஸ்டீபன் ஹாகின்ஸ் (Stephan hawkins)காலப்பயணம் சாத்தியமே எனக் கூறுகிறார்.
இறந்தகாலத்துக்கு பயணிப்பதில் சில முரண்கள் உள்ளன ஆனால் எதிர்காலத்துக்குப் பயணிப்பது சாத்தியமே என்றும் அதற்கு இரண்டு வழிமுறைகளையும் முன்வைக்கிறார்.....
1.நம்மால் ஒருவேளை.ஒரு விசேஷ விண்கலனை உருவாக்க முடிந்து அதன் மூலம் ஏதேனும் ஒரு பிளாக்ஹோலை (black hole)அதனுள்ளே சிக்கிக் கொள்ளாமல் பக்கவாட்டில்(பூமி சூரியனைச் சுற்றுவது போல) சுற்றிவர முடிந்தால்,அந்த விண்கலத்தில் உள்ளவர்ளின் நேரம் பூமியை விட அரை மணிநேரம் தாமதமாக இருக்கும்.எனவே அவர்கள் பூமிக்குத் திரும்பும்போது அரைமணி நேர காலப்பயணம் செய்திருப்பர்.
காரணம் இந்த பிரபஞ்சத்திலேயே அடர்த்தியும் எடையும் அதிகமானது பிளாக் ஹோல்,இயற்பியலின்படி எந்த ஒரு அதிக எடை கொண்ட பொருளும் காலத்தைத் தாமதமாக்கும்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் பிரமிட் உலகிலேயே அதிக எடை கொண்டது பிரமிட் அதன் மிக அருகில் நிற்பவர்களின் கடிகாரம் பூமியின் நேரத்தைக்காட்டிலும் 10 நிமிடம் தாமதமாக ஓடும்,அதாவது அவர்கள் 10 நிமிடம் தாமதமாக நேரத்தைக் கடக்கின்றனர்.
2.பூமியை முழு சுற்று சுற்றி வருவது போல ஒரு தண்டவாளம் அமைத்து அதில் ஒரு ரயிலில் ஒளியின் (Light) வேகத்தில் 3,00,000 km/sec (ஒரு வினாடிக்கு 7முறை பூமியை சுற்றுதல்) ஒரு வாரம் பயணித்து மீண்டும் இறங்கினால் அந்த ரயிலில் பயணணித்தவர்கள் 50 வருடங்கள் பிந்தைய பூமியைக்காண்பர்(Future).
அதாவது வேகத்துடன் பயணிக்கும் பொருளின் நேரம் சாதாரண நேரத்தை விட மிக மெதுவாக ஓடும்.இந்த பிரபஞ்சத்திலேயே மிக வேகமானது ஒளி,எனவே அதனுடன் சேர்ந்து பயணிக்கும்போது நேரத்தை மிக எளிதாக கடக்கலாம்.
ஆனால் அவர் கூறும் இவ்விரண்டு வழிமுறைகளும் இப்போதைக்கு சாத்தியமில்லை.எனவே காலப்பயணமும் இப்போதைக்கு சாத்தியமில்லை.
சில நூறு ஆண்டுகளுக்குப் பிறகு வேண்டுமானால் நம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப சாத்தியமாகலாம்..
கா.அருண்பாண்டியன்

No comments:

Post a Comment