Search This Blog

Friday, May 8, 2015

இன்டர்நெட் சுவாரஸ்யமான தகவல்கள்

இன்டர்நெட் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
* 2010ம் ஆண்டு கூகுள் நிறுவனம் இன்டர்நெட்டின் மொத்த அளவு 6 மில்லியன் டெராபைட்களாக (terabyte) இருக்கும் என எதிர்பார்த்தது.
* இன்டர்நெட் பயன்படுத்தும் 2.4 பில்லியன் பயனாளிகளில் 50 சதவீதத்தினர் பேஸ்புக் தளத்தினை மட்டும் தான் பயன்படுத்துகின்றனர்.
* உலகின் முதல் மின்னஞ்சல் 1971 ஆம் ஆண்டு ரே டாமிலின்ஸன் (ray tomlinson) என்பவரால் அனுப்பப்பட்டது.
* தினமும் 250 பில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் 81 சதவீத மின்னஞ்சல் ஸ்பேம் (Spam) ஆகும்.
* உலகின் முதல் ட்வீட்டினை அதன் நிறுவனர் ஜாக் டார்சீ (Jack Dorsey)2006 ஆம் ஆண்டு மார்ச் 21ம் திகதி பதிந்தார். தற்போது தினமும் 1,700 டுவீட்கள் ஒவ்வொரு நொடியிலும் பதியப்படுகின்றன.
* தற்சமயம் 637 மில்லியன் வெப்சைட்களும் (Website), 250 மில்லியன் ப்ளாகுகளும் (Blog)பயன்பாட்டில் இருக்கின்றன.
* ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 4200 புதிய டோமைன் (Domain)பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் எண்ணிக்கை 37 மில்லியனாக இருக்கின்றது.
* பேஸ்புக் தளம் 1.2 பில்லியனாக தற்சமயம் இருக்கின்றது. இது 17% மக்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர்.
* 19% சதவிகிதத்தினர் தங்கள் துணைகளை ஆன்லைன் மூலமாக தேர்ந்தெடுத்து திருமணம் செய்துக்கொள்கின்றனர்.
* பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கின் (mark zuckerberg)பேஸ்புக் ஐடி நம்பர் 4.
* முதல் யூடியூப் (youtube)வீடியோ ஏப்ரல் 23, 2005ம் ஆண்டு பதிவேற்றப்பட்டது. அந்த வீடியோ “Me at the zoo” ஆகும். தற்போது அந்த வீடியோவை 23 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
* இணையத்தில் அதிகமாக தேடப்பட்ட வார்த்தை “What is”
* GIF format ஸ்டீவ் வில்கே (Steve wilke)என்ற கணனி சேவை பொறியாளரால் 1987ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
* “Gangnam Style” என்ற பாடல் யூடியூப்பில் அதிக பேர் பார்த்த வீடியோவாக இருக்கிறது. இதுவரை 2 பில்லியன் பேர் இதை பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment