Search This Blog

Thursday, May 21, 2015

முதலாளிகள் வேலையாட்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?


ஒரு நிறுவனமோ அல்லது கடையோ செழிப்பாக இருக்க, செம்மையான முறையில் செயல்பட முதலாளியும், தொழிலாளியும் ஆரோக்கியமான மனோநிலையில் இருக்க வேண்டும்.
முதலாளிகள் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் வேலையாட்கள் அற்புதமாக செயல்படுவார்கள். அதற்கான சில டிப்ஸ் பின்வருமாறு:
1. வெற்றிக்கான 80/20 சட்டத்தை எப்போதும் நினைவில் கொண்டிருங்கள். அதாவது எண்பது சதவீத நேரங்களில் நான் சரியான தீர்மானங்களை எடுப்பேன். ஆனால் இருபது சதவீத நேரங்களில் நானும் தவறான தீர்மானங்கள் எடுக்கிறேன். தவறுகளைச் செய்கிறேன். அல்லது சிறப்பாக செய்திருக்க மாட்டேன். என்னுடைய பணியாளர்களுக்கும் இதே 80/20 சட்டத்தின்படியான சுதந்திரத்தை அளிக்கிறேன். அவர்கள் தவறு செய்யவும் வாய்ப்புண்டு என்பதை அறிகிறேன்.
2. நம் பணியாளர்களின் முன்னேற்றத்தை சோதிக்கலாம். தவறில்லை. ஆனால் எப்போதும் அவர்களையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இப்படித்தான் வேலை செய்ய வேண்டுமென கூறக் கூடாது. நம்முடைய ‘நிபுணத்துவ’ அணுகுமுறைக்குச் சாதகமாக அவர்களின் வேலையைத் தள்ளிவிடக் கூடாது. தலைவராக நீங்களிருப்பதால் மற்றவர்களுக்கு சாதகமாக இருக்கும் பொருட்டு அவர்களுடைய தீர்மானங்களை மாற்றக் கூடாது.
3. நீங்கள் அதிகாரம் அளிப்பவரிடம் (வேலையாளிடம்) நம்பிக்கையுடனிருக்க வேண்டும்.
4. உங்கள் முறைப்படிதான் அது செய்யப்பட வேண்டும் என்ற முறையிலிருந்து விடுபட்டு இளைப்பாறுங்கள்.
5. வேகமாகச் செய்யும் ஆசையிடமிருந்து பொறுமையுடனிருங்கள்.
6. அதிகாரத்தை அளிப்பதில் உள்ள உங்கள் சுதந்தரத்தின் மூலம் மற்றவர்களின் முன்னேற்றத்தைக் காணுங்கள்.
7. தகுதியுள்ள மக்களைத் தேர்ந்தெடுங்கள்.
8. அவர்கள் மீதுள்ள உறுதியை வெளிப்படுத்துங்கள்.
9.அவர்களுடைய கடமைகளைத் தெளிவாக்குங்கள்.
10. சரியான அதிகாரத்தை அவர்களுக்கு அளியுங்கள்.
11. எப்படி வேலை செய்ய வேண்டுமென அவர்களுக்கு அடிக்கடி கூறாதீர்கள்.
12. எதற்கெல்லாம் உங்களுக்கு கணக்கு கூறவேண்டுமென்பதை அவர்களுக்கு கூறுங்கள்.
13. அவர்கள் செயல்படும் முறையைக் கவனியுங்கள்.
14. எப்போதாவது தவறு செய்வதற்கு இடமளியுங்கள். சாத்தியமிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.
15. சிறப்பாக செய்யப்பட்ட வேலைகளுக்கு புகழையும், பெருமைகளையும் அளியுங்கள்.
இந்த வழிமுறைகளையெல்லாம் கடைப்பிடித்துப் பாருங்கள். உங்கள் வேலையாட்கள் மிகச்சிறப்பாக செயல்படுவார்கள்.

No comments:

Post a Comment