Search This Blog

Friday, January 10, 2014

சிறுநீரக கல் உள்ளவர்களுக்கு...

டாக்டர் விகடன் இதழில் இருந்து
‘நீரின்றி அமையாது உலகு’ இது உலகுக்கும் பொருந்தும்... உடலுக்கும் பொருந்தும். நம் உடலின் செயல்பாட்டுக்கு, தண்ணீர் மிக முக்கியம். தினமும் உடலுக்கு, போதிய தண்ணீர் இல்லாமல் போகும்போது, சிறுநீரகச் செயல்பாட்டில் பிரச்னை ஏற்படும். அதுவே, சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கு மிக முக்கியக் காரணம். அதிக அளவு தண்ணீர் குடிப்பதும், கல் அடைப்பு உருவாகாமல் தடுக்கும் சத்தான உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமே கல் அடைப்பு வராமல் காக்கலாம்.

‘கால்சியம் கல்’ இருப்பவர்களுக்கான உணவுப் பட்டியல்:

பூசணிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்ற நீர்ச் சத்துடைய காய்கறிகள். சூப், சாலட், பொரியல் செய்து உண்ணலாம்.
கதக்காளி, வெண்டைக்காய் சாப்பிடக் கூடாது என்ற தவறான நம்பிக்கை உள்ளது. இரண்டு காய்களையுமே சாப்பிடலாம்.

அத்திப்பழம் மற்றும் விளாம்பழம் தவிர, அனைத்துப் பழங்களையும் சாப்பிடலாம்.

அசைவ உணவில் நண்டு தவிர மற்ற அனைத்து இறைச்சி மற்றும் மீன் வகைகளை சேர்த்துக்கொள்ளலாம்.

அனைத்து தானிய வகைகள் எடுத்துக்கொள்ளலாம்.

பாலில் அதிக கால்சியம் இருப்-பதால், குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. எல்லோரும் ஒரு நாளைக்கு 500 மி.லி. பால் அருந்தலாம் என்-றால், கால்சியம் கல் உள்ளவர்கள் 250 மி.லி.தான் (தயிரையும் சேர்த்து) அருந்த வேண்டும்.

வாரம் ஒரு முறை கால்சியம் செரிந்த கேழ்வரகு, கீரை (கூட்டு, கடைசல், பொரியல் தவிர்த்து, குழம்பு அல்லது அடை-யில் சேர்க்கலாம்), வாரம் ஒருநாள் மட்டும் அனைத்து வகைக் கிழங்குகள்.

கால்சியம் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment