Search This Blog

Sunday, September 9, 2018

*எந்தெந்த கோயில்களில் என்னென்ன நமக்கு தெரியாத பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.*


*ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி,வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது.தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.*
*திருவாரூர் தியாகராஜ பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.*
*திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.*
*காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு,மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.*
*திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும், குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.*
*திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலில் ஆத்மநாதருக்கு புழுங்கலரிசி சோறும் பாகற்காய் கறியுமே பிரசாதம்.*
*கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர்.உதயம் முதல் அஸ்தமனம் வரை அப்பம் ஏற்கும் கணபதி இவர்.*
*ஸ்ரீமுஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது.இந்த பிரசாதம் நோய்களை தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.*
*கேரளம்,திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர்.இந்த பால் வயிற்றுக் கோளாறுகளை தீர்க்கிறது.*
*நவகிரக,சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.*
*மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் காலையில் ஞானப்பால் பிரசாதமும் இரவில் பள்ளியறையின் போது கமகமக்கும் சுண்டலும் பாலும், நிவேதனம் செய்யப்படுகின்றன.*
*கொல்லூர் மூகாம்பிகைக்கு இரவு அர்த்தஜாம பூஜையின் போது சுக்கு,மிளகு, திப்பிலி,ஏலம்,லவங்கம், சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் மணமிக்க கஷாயம் பிரசாதமாகத் தரப்படுகிறது.*
*நெல்லையில் உள்ள புட்டாத்தி அம்மன் ஆலயத்தில் அரிசி, வெல்லம், ஏலக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் புட்டுதான் பிரசாதம்.*
*கேரளம்,குருவாயூரில் குருவாயூரப்பனுக்கு சுண்டக்காய்ச்சிய பால் பாயசம் பிரசாதமாக படைக்கப்படுகிறது.*
*திருச்சியில் கோயிலடி அப்பக்குடத்தானுக்கு தினமும் அப்பம் நிவேதனம் செய்யப்படுகிறது.*
*கேரளம், இரிஞ்சாலக்குடாவில் பரதன் ஆலயத்தில், கத்தரிக்காயால் தயாரிக்கப்பட்ட வழுதனங்கா எனும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. செம்பைவைத்யநாத பாகவதர் இந்தப் பிரசாதம் உண்டு தன் வயிற்று நோய் தீர்ந்ததாக எழுதிய கடிதம் ஆலயத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.*
*குற்றாலம் குற்றாலநாதருக்கும் குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள்தோறும் சுக்கு,மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது. அருவியால்,அவருக்கு தலைவலியும், ஜலதோஷமும் வராமல் இருக்க இந்த ஐதீகம்.*
*முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றி தயாரிக்கப்படும் தோசை, மதுரை அழகர் கோயிலின் பிரதான பிரசாதம்.*
*திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும்,சர்க்கரை பொங்கலும் நிவேதனம் செய்வர்.துவரம்பருப்பு, அரிசி,காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து விடப்பட்டு தயாரிக்கப்படுவதுதான் கூட்டாஞ்சோறு.*
*சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள்.*

இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!


1) உயரமான போர்களத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கிறது:: உலகிலேயே உயரமான போர்க்களம் என்று கருதப்படும் சியாச்சென் கிளேசியர் (Siachen Glacier) இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 5,000 மீட்டர்களுக்கும் மேலாகும். கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இங்கு போரிட்டதுக் குறிப்பிடத்தக்கது.
2) தன்னார்வம் அதிகம்:: உலகிலேயே அதிகமான தன்னார்வ வீரர்கள் கொண்ட ராணுவப்படை இந்தியாவுடையது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
3) மலை பகுதிகளிலும், உயரமான பகுதிகளிலும் செயல்படுவதில் நமது இந்திய ராணுவ வீரர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர்.
4) கடந்த 2013 ஆம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய மீட்புப் பணியாகக் கருதப்படும் ஆப்ரேஷன் ராஹத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர்கள் நமது இந்திய ராணுவப்படை வீரர்கள். இது, உத்தரகாண்ட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக நடந்தது.
5) கேரளத்தில் இருக்கும் எழிமலாக் கப்பற்படை (Ezhimala Naval Academy) தான் இதன் பிரிவில் ஆசியாவிலேயே பெரியது ஆகும்.
6) உலகிலேயே மிகவும் பழையப் படையாக கருதப்படும் மூன்றில் ஒன்றான குதிரைப்படை இன்னமும் நமது இந்திய ராணுவத்தில் செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.
7) இந்திய ராணுவம் கட்டமைத்த பெய்லி பாலம் தான் உலகிலேயே ராணுவ வீரர்களால் மிக உயரத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும். இது கடந்த 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டமைக்கப்பட்டது ஆகும்.
9) கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போரில் 93,000 எதிர் நாட்டு (பாகிஸ்தான்) வீரர்கள் சரணடைன்ததே, ஓர் போரில் சரணடைந்த வீரர்களின் அதிகப்படியான எண்ணிக்கை ஆகும்.
10) உலகிலேயே பெரிய ராணுவ பிரிவுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் முறையே அமெரிக்காவும், சீனாவும் இருக்கின்றன. நமது நாட்டில் 13,25,000 பட்டாளங்களும், 9,60,000 ரிசர்வ் படைகளும் இருக்கின்றன.
11) அக்னி ஏவுகணை உலகிலேயே சிறந்த ஏவுகணைகளில் இந்தியாவின் அக்னி எவுகனைவும் ஒன்றென்பதுக் குறிப்பிடத்தக்கது.
12) வேகமான ஏவுகணை ப்ராஹ் மோஸ் 2 (BrahMos-2) என்ற நமது ஏவுகணை தான் உலகிலேயே வேகமான ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆகும்.
13) இந்திய ராணுவப்படை கடந்த 1776ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தினால் கொல்கத்தாவில் துவங்கப்பட்டது.
14) உலக அமைதிகாக ஐ.நாவிற்கு பங்களிப்பு தரும் பட்டாளங்களில் இந்திய பட்டாளம் தான் பெரியது என்பது பெருமைக்குரியது.
THANKS ONE INDIA....