Search This Blog

Tuesday, May 23, 2017

ஆதி விருட்சம்


அது
உடலுக்கும்
பருவத்திற்கும் நடுவே
தீர்க்க முடியாத புதிரென
திங்கள்தோறும்
முகிழ்கிறது

‘தாங்கவே முடியவில்லை’
என்கிறாள் மகள்

அம்மாவுக்குத் தெரியும்
அது எப்போதும் அப்படித்தான்
மடல் பூத்த தாழையின்
மணம் போலும்
மடந்தையர் எவரும்
கடந்துவரும் இரகசியமெனவும்

பேதைமை தொலைந்து
பெதும்பையென திரளும் பொழுதில்
ஒவ்வொரு சிறுபெண்ணையும்
சேர்த்தணைக்கும் இவ்வலி
வழிவழியாகத் தொடர்ந்திருக்கிறது

துளிர்த்து இலைவிட்டு கிளைப்பரப்பியிருக்கும்
அடிபெருத்த மரத்தின்
திண்மைக்குள்
வளையமிட்டிருக்கும்
அநாதியான காலமென
அந்த நித்திய வேதனை. 


 Sakthi Jothi

இதய ரேகைகள் ஒருவரது காதல் வாழ்க்கைக் குறிக்கும்

இரு உள்ளங்கைகளையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது, கையில் உள்ள இதய ரேகைகளைப் பாருங்கள். இதய ரேகைகள் ஒரே அளவில் இருக்கிறதா இல்லையா என்றும் பாருங்கள். அப்போது இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இம்மாதிரியான இதய ரேகைகள் அனைவருக்குமே அமையாது. இதய ரேகை என்றதும் அது நம் இதய ஆரோக்கியத்தைப் பற்றி எதுவும் கூறாது. உண்மையில் இது ஒரு காதல் ரேகை. இது ஒருவரது காதல் வாழ்க்கைக் குறிக்கும்.
இதய ரேகை கைரேகை ஜோதிடர்கள் கையில் உள்ள இந்த இதய ரேகையின் அளவு மற்றும் அமைப்பைக் கொண்டு தான், ஒருவரது காதல் அல்லது திருமண வாழ்க்கை குறித்து கூறுகின்றனர். எனவே உங்களது வலது மற்றும் இடது கைகளில் உள்ள இதய ரேகையை சோதித்துப் பாருங்கள்.
இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால்… இதய ரேகைகள் ஒரே அளவில் இருந்தால்..
வாழ்க்கைத் துணை இம்மாதிரியான இதய ரேகைகளைக் கொண்டவர்களுக்கு துணையாக வருபவர்கள், அவர்கள் மீது கொள்ளை பிரியம் வைத்திருப்பார்கள். இந்த மாதிரியான இதய ரேகை கொண்டவர்களுக்கு அமையும் துணை, அவர்களை நன்கு புரிந்தவர்களாகவும், அனுசரித்து நடந்து கொள்பவர்களாகவும் இருப்பர்.
இடது கையை விட வலது கையின் இதய ரேகை உயரமாக இருந்தால்… இந்த மாதிரியான இதய ரேகையைக் கொண்டவர்கள், நல்ல காதலராக இருப்பர். காதலுக்காக எதையும் செய்யக்கூடியவர்களாக இருப்பர். மற்றவர்களைப் பற்றி எதையும் யோசிக்காமல், தனக்கு தோன்றுவதை மட்டும் செய்வார்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்காமல், தன் இதயம் சொல்வதைக் கேட்டு நடப்பார்கள். மேலும் இவர்கள் சொந்த வரையறையில் வாழ்க்கையை வாழ விரும்புவார்கள் மற்றும் மற்றவர்களது கருத்துக்களின் மீது அக்கறை கொள்ளமாட்டார்கள்.
வலது கையை விட இடது கையின் இதய ரேகை உயரமாக இருந்தால்… இந்த மாதிரியான இதய ரேகையைக் கொண்டவர்கள், மிகவும் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள் மற்றும் ஆக்கிரோஷ குணம் கொண்டவர்களாக இருப்பர். சவால்களை விரும்புவார்கள்.
அதுமட்டுமின்றி இந்த வகையினர் தனக்கு ஒரு துணை வந்தால் தான் தன் வாழ்க்கை முழுமை அடையும் என்றெல்லாம் உணரமாட்டார்கள். மேலும் இவ்வகையினர் எதற்கும் அஞ்சமாட்டார்கள். காதலுக்காக யார் பின்னாலும் செல்லமாட்டார்கள். ஆனால் இத்தகையவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் கவர்ச்சிகரமாக இருப்பார்கள்.

Saturday, May 20, 2017

ஒருவரது பிறந்த திகதியை கூட்டினால், எண் 7 வந்தால், அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும்



ஜோதிடத்தில் கைரேகை, கிளி, நாடி என பல வகைகள் இருக்கின்றன. இந்த ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விஷமாக ஜோதிட பலன்கள் கூறுவார்கள். இவற்றுள் ஒன்று தான் எண் கணித முறை. இதில், ஒவ்வொரு எண்ணை வைத்தும் ஒருவரது வாழ்க்கை எப்படி அமையும் என கூறப்படும்.

அந்த வகையில் ஒருவரது பிறந்த திகதியை கூட்டினால், எண் 7 வந்தால், அவர்களது வாழ்க்கை எப்படி இருக்கும் என இங்கு காணலாம்...

கிரக அதிபதி!

7ம் எண்ணின் அதிபதியாக இருப்பது கேது பகவான். கேது பகவானை ஞானகாரகன் என்றும் கூறுவர்.

கூட்டு எண் 7!

உங்கள் பிறந்த திகதி மாதம், வருடம் மூன்றையும் கூட்டி, அது 7 என்று வந்தால் அவர்களுக்கு பொதுவாக திருமண தடங்கல்களும், தாமதமும் ஏற்படுகின்றன என கூறப்படுகிறது.

கணவன் - மனைவி!

இவர்களுக்கு திருமணம் நடந்தாலும் கூட, கணவன் - மனைவி உறவில் ஏதாவது காரணத்தால் சண்டை, பிரச்சனைகள் எழும்.

திருமண நாளும்!

பிறந்த திகதி மட்டுமின்றி, திருமண நாளின் கூட்டு எண் 7 என வருபவர்களுக்கும் இந்த தாக்கம் இருக்கிறது என ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

மாற்று என்ன?

திருமண திகதியை நாம் கூட்டு எண் 7 வராமல் தடுக்கலாம். ஆனால், பிறந்த தேதி கூட்டு எண் 7 வருவதை நாம் தடுக்க முடியாது.

தீர்வு? எனவே, பிறந்த திகதி கூட்டு எண் 7 வருபவர்கள், 1,2,5,6 என்ற தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொண்டால் இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என கூறுகின்றனர்.

கவனம்!

மேலும், இவ்வாறு திருமணம் செய்பவர்கள், அவர்களது திருமண நாளும் 1, 2, 6 திகதிகளாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

8 வேண்டாம்!

முக்கியமாக, பிறந்த திகதி கூட்டு 7 வருபவர்கள், 8-ம் தேதியில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்ள கூடாதாம். 8 தேதியிலும் திருமணம் செய்துக் கொள்ள கூடாதாம்.
- See more at: http://www.manithan.com

புதிய பொழுது


செவ்வானம் மூடிய அஸ்தமனத்தின் பின்
இரவின் இருளின் முற்றுப் புள்ளியோடு
முடிவடைந்ததாய் சொல்லப் பட்ட
...
நாளொன்றின் பின்னலும்
தினமொரு புதிய பொழுது
நீள்கிறது
தீர்ந்து போன பத்தியின்
சாம்பலின் நசிவிலும்
வீடெங்கும்
விரட்டி விட முடியாது
நிறைந்து கிடக்கும் வாசமாய்
நீயும் நானும் பேசி முடித்து விட்ட
வாக்கியங்களின் நீள்
அமைதியின்
பின்னும்
இன்னும்
சொல்லி விட முடியாத
தேவையுமில்லாத
உணர்வுகள் நீளப் போகின்றன
சுவாசமுடன்

- கவிஞர் திலகபாமா

Friday, May 19, 2017

Sin City Movie

இந்த படம் எனக்கு குடுத்த ஃபீலிங்க் விவரிக்க முடியாதது... சின்ன வயசுல கருப்பு வெள்ளையில படிச்ச ராணி காமிக்ஸ், முத்து காம்க்ஸ் எல்லாம் ஞாபகபடுத்திடுச்சு....

ஒரு கார்ட்டூன் மாதிரியான மேக்ல ஒரு படம் எடுக்கனும்ன்னா??? எப்பா என்னா உழைப்பு.... காமிக்ஸ் கேரக்டர்க்கெல்லாம் உயிர் வந்து அது எல்லாம் துப்பாக்கியும் கையுமா சுத்துனா எப்படி இருக்கும்??!!.. அப்படி இருக்கு.

செம வயலன்ட்...செம ஸ்டைல், கண் கொள்ளா காட்சிபடுத்தல்....Mickey Rourke ஒரு காட்சியில் தண்ணீரில் காருடன் மூழ்குவார்... கார் ஒரு புறம் மூழ்க அவர் மேலே நீந்தி வரும் காட்சி... அக்மார்க் காமிக்ஸ் காட்சி... அசந்து விட்டேன்..!! (அந்த காட்சியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கமென்ட்டில் போடுகிறேன்).

கதையினு பார்த்தா... ஒரு கலவையான காமிக்ஸ் கதை... ஆக்ஷன் த்ரில்லர்...// காமிக்ஸ் நாம கதை தெரிஞ்சா படிக்கிறோம் ?? எஞ்சாய் பண்றதில்ல?? படம் வாய்ப்பு கிடைத்தால் மிஸ் பண்ணாதீங்க... //

நிறைய நல்ல படங்களை அது கருப்பு வெள்ளையில இருக்குன்னே பார்க்காம விட்டிருக்கேன்.... :( So Sad.... இனி எல்லாத்தையும் பார்த்துறனும்...

:) 
If film noir was not a genre, but a hard man on mean streets with a lost lovely in his heart and a gat in his gut, his nightmares would look like "Sin City." The new movie by Robert Rodriguez and Frank Miller plays like a convention at the movie museum in Quentin Tarantino's subconscious. A-list action stars rub shoulders with snaky villains and sexy wenches, in a city where the streets are always wet, the cars are ragtops and everybody smokes. It's a black-and-white world, except for blood, which is red, eyes which are green, hair which is blond, and the Yellow Bastard.

This isn't an adaptation of a comic book, it's like a comic book brought to life and pumped with steroids. It contains characters who occupy stories, but to describe the characters and summarize the stories would be like replacing the weather with a weather map.
The movie is not about narrative but about style. It internalizes the harsh world of the Frank Miller "Sin City" comic books and processes it through computer effects, grotesque makeup, lurid costumes and dialogue that chops at the language of noir. The actors are mined for the archetypes they contain; Bruce Willis, Mickey Rourke, Jessica Alba, Rosario Dawson, Benicio Del Toro, Clive Owen and the others are rotated into a hyperdimension. We get not so much their presence as their essence; the movie is not about what the characters say or what they do, but about who they are in our wildest dreams.
On the movie's website, there's a slide show juxtaposing the original drawings of Frank Miller with the actors playing the characters, and then with the actors transported by effects into the visual world of graphic novels. Some of the stills from the film look so much like frames of the comic book as to make no difference. And there's a narration that plays like the captions at the top of the frame, setting the stage and expressing a stark existential world view.
Rodriguez has been aiming toward "Sin City" for years. I remember him leaping out of his chair and bouncing around a hotel room, pantomiming himself filming "Spy Kids 2" with a digital camera and editing it on a computer. The future! he told me. This is the future! You don't wait six hours for a scene to be lighted. You want a light over here, you grab a light and put it over here. You want a nuclear submarine, you make one out of thin air and put your characters into it.
I held back, wondering if perhaps the Spy Kids would have been better served if the films had not been such a manic demonstration of his method. But never mind; the first two "Spy Kids" were exuberant fun ("Spy Kids 3-D" sucked, in great part because of the 3-D). Then came his "Once Upon a Time in Mexico" (2003), and I wrote it was "more interested in the moment, in great shots, in surprises and ironic reversals and closeups of sweaty faces, than in a coherent story." Yes, but it worked.
And now Rodriguez has found narrative discipline in the last place you might expect, by choosing to follow the Miller comic books almost literally. A graphic artist has no time or room for drifting. Every frame contributes, and the story marches from page to page in vivid action snapshots. "Sin City" could easily have looked as good as it does and still been a mess, if it were not for the energy of Miller's storytelling, which is not the standard chronological account of events, but more like a tabloid murder illuminated by flashbulbs.
The movie is based on three of the "Sin City" stories, each more or less self-contained. That's wise, because at this velocity, a two-hour, one-story narrative would begin to pant before it got to the finish line. One story involves Bruce Willis as a battered old cop at war with a pedophile (Nick Stahl). One has Mickey Rourke waking up next to a dead hooker (Jaime King). One has a good guy (Clive Owen) and a wacko cop (Benicio Del Toro) disturbing the delicate balance of power negotiated between the police and the leader of the city's hookers (Rosario Dawson), who, despite her profession, moonlights as Owen's lover. Underneath everything is a deeper layer of corruption, involving a senator (Powers Boothe) whose son is not only the pedophile but also the Yellow Bastard.
We know the Bastard is yellow because the movie paints him yellow, just as the comic book did; it was a masterstroke for Miller to find a compromise between the cost of full-color reproduction and the economy of two-color pages; red, green and blue also make their way into the frames. Actually, I can't even assume Miller went the two-color route for purposes of economy, because it's an effective artistic decision.
There are other vivid characters in the movie, which does not have leads so much as actors who dominate the foreground and then move on. In a movie that uses nudity as if the 1970s had survived, Rosario Dawson's stripper is a fierce dominatrix, Carla Gugino shows more skin than she could in Maxim, and Devon Aoki employs a flying guillotine that was borrowed no doubt from a circa-1970 Hong Kong exploiter.
Frank Miller and Quentin Tarantino are credited as co-directors, Miller because his comic books essentially act as storyboards which Rodriguez follows with ferocity, and because he was on the set every day, interacting with the actors; Tarantino because he directed one brief scene on a day when Rodriquez was determined to wean him away from celluloid and lure him over the dark side of digital. (It's the scene in the car with Owen and Del Toro, who has a pistol stuck in his head.) Tarantino also contributed something to the culture of the film, which follows his influential "Pulp Fiction" in its recycling of pop archetypes and its circular story structure. The language of the film, both dialogue and narration, owes much to the hard-boiled pulp novelists of the 1950s.
Which brings us, finally, to the question of the movie's period. Skylines suggest the movie is set today. The cars range from the late 1930s through the 1950s to a recent Ferrari.The costumes are from the trench coat and G-string era. I don't think "Sin City" really has a period, because it doesn't really tell a story set in time and space. It's a visualization of the pulp noir imagination, uncompromising and extreme. Yes, and brilliant.
thanks: rogerebert.com

What is the significance behind this Hindu statue


அழகான, அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ள ராசி



உடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும். அனைவருக்கும் இப்படி அமைவது சாத்தியமற்றது. அழகை ரசிக்க தெரியாதவர்களுக்கு தான் அழகான மனைவி கிடைப்பார்கள் அதாவதுதிங்க தெரியாதவனுக்கு தான் பன்னு கிடைக்கும்என்பது போல.

அதே போல சில சுமார் மூஞ்சி குமார்களுக்கு தான் நயன்தாரா போன்ற அழகான, அறிவான பெண்கள் அமைவார்கள். இதெல்லாம் அவரவர் செய்த புண்ணியம் போல. ஜாதகத்தில் கட்டம் சரியாக இருந்தால், நீங்கள் கட்டம் கட்டாமலே அழகான பெண் உங்களுக்கு அமையுமாம்.
ஏழாம் இடத்தில் சுபர் இருத்தல், குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன் போன்றவர்கள் அமர்தல், பாவர்கள் பார்க்காமல் இருத்தல் போன்றவை அழகான, அறிவான மனைவி/கணவன் அமைய வாய்ப்புள்ளதாம்

அனுபவிக்க பிறந்தவங்க

துலாம் ராசிக் காரர்கள் அனுபவிக்க பிறந்தவர்கள். இந்த உலகில் இவர்களுக்கு வாய்க்கும் அனைத்தையும் அனுபவித்து, இரசித்து வாழ்வார்கள். உணவாக இருந்தாலும் கூட நல்ல ருசியாக இருக்க வேண்டும், சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த இராசிக் காரர்கள்.

உஷாரான ஆளுங்க

ரிஷப இராசிக் காரர்கள் மிகவும் உஷாராக இருப்பார்கள் இந்த விஷயத்தில். அதனால் இவர்களுக்கு அழகான மனைவி/கணவன் கிடைப்பது நிச்சயம்.

காதல் திருமணம்

தனுசு, துலாம், கடகம் இராசிக் காரர்கள் ஆண்/பெண் விஷயத்தில் பெரிய ஆய்வாளர்களாக இருப்பார்கள். ரசனையான ஆட்கள், புன்னகை, பேச்சு, கண்கள், மூக்கு என ஒவ்வொரு பாகத்தையும் ரசித்து காதலித்து திருமணம் செய்பவர்களாக இருப்பார்கள் இவர்கள்.

கஷ்டமப்பா நீங்க

மகரம், கும்பம், சிம்மம், மேசம், விருச்சிகம் போன்ற இராசிக் காரர்கள் எல்லாம் இஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று கூறுவதை விட மிகவும் கஷ்டப்பட்டு திருமணம் செய்பவர்கள் என்று கூறலாம். இதை ஜோதிடமே சொல்கிறது.

அதிர்ஷ்டம் அடிக்கனும் உங்களுக்கு

நல்ல நேரம் வந்தால் திருமணம் நடக்கும். இவர்கள் ஒருபக்கம் வேலையை பார்க்க, சுபர் லக்னம் ஏழாமிடத்தில் இருந்தால் இவர்களுக்கும் அழகான வாழ்க்கை துணை அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

கணக்கு போடுவதில் வல்லவர்கள்

கன்னி, மீனம் இராசிகாரர்களுக்கும் மிதுனம் இராசிகாரர்களும் எதுவாக இருந்தாலும் கணக்குப் போட்டுப் பார்த்து செயலில் இறங்குபவர்கள். இவர்கள் இவர்களுக்கான துணையை தேர்வு செய்வதிலும் கூட இவ்வாறு தான் இறங்குவார்கள்.

கேரக்டரே புரிஞ்சுக்க முடியலேயே

ஒருவரது குணாதிசயங்கள், அவரது குடும்பம், என எல்லார் பற்றியும் தெரிந்துக் கொண்டு தான் திருமணம் செய்துக் கொள்ள இறங்குவார்கள். இவர்களுக்கு அழகு என்பது இரண்டாம் பட்சம் தான். அறிவும், திறமையும் தான் இவர்கள் எதிர்பார்ப்பது.

குறிப்பு

இவை யாவும் பொதுவான குறிப்புகள் தான். ஜாதகத்தில் நான்காம் இடம் வலுத்தவர், 7 ஆம் இடத்தை சுபர் பார்வை செய்பவர், சுக்கிரன், குரு வலிமையான நிலையில் உள்ளவர்களுக்கு அழகான கணவன்/மனைவிதான் அமையும்.
- See more at: http://www.manithan.com