Search This Blog

Saturday, January 16, 2016

Study reveals the way CRISPR/Cas9 cleaves enzymes and positions them for cutting


A team of researchers with the University of California has learned more about the process that is involved during CRISPR/Cas9 gene splicing by using a crystallization technique to get a closer look. In their paper published in the journal Science, the team describes their study of the way three-stranded structures known as R-loops are formed during the technique and how they used a familiar technique to capture 3D images of the process and what they learned as a result.



Over the past three years, the CRISPR/Cas9 gene splicing and editing tool has been used in a variety of experiments to better understand how genes work and to possibly edit them to cure genetic diseases. The technique has been in the news again recently as two parties have claimed to be the original inventors of the technique and the U.S. Patent and Trademark Office has agreed to move forward with interference hearings to decide the case. It is one of those two teams, led by Jennifer Doudna, that has now made clearer the means by which R-loops are formed as part of the technique.
The CRISPR/Cas9 technique, as its name implies, is based on the Cas9 protein and they way it causes R-loops to form, but until now, no one had ever seen it actually do its work. In this new effort, the researchers used a technique that has been used to study proteins before—where a protein under study is caused to grow into a crystal where it is then exposed to x-rays—the diffraction patterns given off offer clues about its structure. In this case the technique was used to allow the researchers to capture 3D images of the Cas9 protein during the moments it was editing a DNA sequence—those images showed the interactions that occurred between the protein and DNA strands that led to the strands bending at a 30° angle, which then caused the DNA and RNA strands to move into a position that led to the formation of an R-loop.

ஆஹா, அருமை!! தவற விடாதிங்க Nice Video


Friday, January 15, 2016

Walking


பாலாவின் ? தாரை தப்பட்டை - சினிமா விமர்சனம்

ராஜாவின் ஆயிரமாவது படம் - இசை - இளையராஜா என்று போடும்போது விசில் மற்றும் கைத்தட்டல் காதை கிழிக்கிறது !

நாம் பார்க்க முக்கிய காரணம் பாலா !



கதை 

தஞ்சை அருகே வாழும் தாரை தப்பட்டை கலைஞர்கள் - வறுமையில் வாடுகிறார்கள். அந்த ட்ரூப் நடத்தும் சசிகுமார் மேல் - டான்சர் வரலட்சுமிக்கு அதீத காதல்.. சசிகுமாரும் காதலித்தாலும் வெளியே சொல்லாமல் இருக்கிறார்.

அந்த ஊருக்கு புதிதாய் வரும் இளைஞன் ஒருவன் - வரலட்சுமி மீது ஆசைப்பட்டு வந்து பெண் கேட்க- அவர் அம்மா - " அவளாவது நம் மாதிரி கஷ்டப்படாமல் நல்லாய் வாழட்டும்" என சசிகுமாரை கன்வின்ஸ் செய்து - வரலட்சுமி - இளைஞனை மணக்கிறார்.

 வரலட்சுமி கணவனின் கொடூர முகம் தெரியும் இரண்டாம் பாகம்... கற்பனைக்கும் எட்டாத சம்பவங்களை கொண்டது !

பிளஸ்

பல்வேறு பாத்திரங்களின் இயல்பான நடிப்பு.. குறிப்பாக முதல் பாதியில் வரலட்சுமி பிய்த்து உதறுகிறார்.. ஆண்களையே தூக்கி போட்டு அடிக்கும் இந்த பாத்திரம் நிச்சயம் புதிது. கிராமத்து பெண் டான்சர்கள் - இப்படி சற்று பருமனாக தான் இருப்பார்கள்; இது வரை இருந்த இமேஜ்ஜில் இருந்து முழு மாறுதல்.

சசிகுமார் தந்தையாக வரும் GM குமார்.. இன்னொரு அட்டகாச நடிப்பு; துவக்க காட்சியில் வாசிக்கும் விதம் தத்ரூபம் - இவருக்கும் - சசிகுமாருக்கும் இருக்கும் சண்டையுடன் கூடிய அன்பு.. அழகு..



சசிகுமார். அநேகமாய் அடக்கி வாசிக்கிறார்; கிளை மாக்ஸ் மட்டும் ஆக்ரோஷம்..

இன்னொரு பெரிய ஆச்சரியம்.. வில்லன்; பாலா படங்களில் வில்லன் பாத்திரம் மிக கொடூரமாக இருக்கும். சிறிதும் இரக்கமோ, மனித தன்மையோ இல்லாதோர் வில்லனாக இருப்பர். பெரும்பாலும் புது முகங்களை வில்லனாக அறிமுகம் செய்வார். இங்கு இரண்டாம் பகுதி முழுதும் சுரேஷ் ராஜ்ஜியம் தான்.. அனைவரின் வெறுப்பையும் சேர்த்து பெற்று கொள்கிறார்..

ராஜாவின் பாடல்கள் .. பலவும் மிக அற்புதம். நீதானே என் பொன் வசந்தத்திற்கு பிறகு அற்புத பாடல்களுடன் ராஜா இசை. .. பின்னணி இசையில் ராஜாவை யாராலும் விஞ்ச முடியாது !

படத்தின் இருட்டு பக்கம் 

பாலா படம் என்றாலே வன்முறை அதிகம்; இங்கு மிக சரியாக "A" சான்றிதழ் தந்துள்ளனர்.



இருந்தும் கூட இப்படத்தில் ஹீரோயின் -  மீது நடத்தும் வன்முறை மிக அதிகம்.. குறிப்பாக ஒன்பதரை மாத கர்ப்பிணி பெண்ணை மார்ச்சுவரி அட்டெண்டர் - உயிரோடு கொன்று குழந்தையை வெளியே எடுப்பதெல்லாம் .. ரொம்ப ரொம்ப ஓவர்.. நிச்சயம் இத்தகைய காட்சிகள் பெண்கள் -  படத்தை பார்க்க வைக்காது.

பாலாவின் படங்களின் இறுதி பகுதி அநேகமாய் ஒரே டெம்ப்ளேட்- டில் இருப்பது சலிப்பூட்டுகிறது

ஹீரோயினை  - வில்லன் கொடுரமாக கொல்ல (அரிதாக இன்னொரு ஹீரோ) , நம்ம ஹீரோ வில்லனது  - குரல்வளையை சர்வ நிச்சயமாக கடித்தோ - குத்தியோ கொல்வார்.

உலகமே வெறுத்து - தனியாக - ஒரு மரத்தின் அருகே ஹீரோ நடந்து போகும் ஸ்டில்லுடன் A film By Bala என்று  போட - நாமும்  - சோக மூடுடன் - தியேட்டர் விட்டு வெளியேறுவோம் ..

ஹீரோ அல்லது ஹீரோயின் - இருவரில் ஒருவர் சாகாத பாலா படமே கண்டுபிடிக்க முடியாது ! அப்படி அதிசயமாய் சாகாத - பரதேசியில் - " இதுக்கு ஹீரோ இறந்திருக்கலாம் !!" என்று எண்ணியபடி வெளியே வருமளவு சோகம் !

பைனல் வெர்டிக்ட்: 

தாரை தப்பட்டை - பாலா டைப் படங்களை தீவிரமாய் காதலிப்போருக்கு மட்டும் ! பெண்கள் - 
குழந்தைகள் தவிர்க்கவும் !
பாலாவின் ?தாரை தப்பட்டை "
ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு அதை தடை செய்யக் கூடாது என்று ஊரெங்கும் கொ டி பிடிக்கும் தமிழர்களைப் பார்த்து மவுனமாக , ஆனால் அழுத்தமாக , " ஏண்டா வெண்ணைகளா சப்தமில்லாது ஒரு பாரம்பரியக் கலை அழிந்து கொண்டு இருக்கிறதே அதை காக்க என்ன செய்தீர்கள் ? என்று கேட்கிறார் இயக்குனர் பாலா தன் தாரை தப்பட்டை வாயிலாக .. கரகாட்டக் காரர்களின் வாழ்க்கையை , அவர்களின் வேதனையை , அவர்களின் கொண்டாட்டத்தை இதை விட அழகாக சொல்ல முடியாது . இதை சொல்ல முன் வந்ததற்காக பாலாவுக்கு ஒரு ஓஹோ .!
ஒரு பொண்ணு உங்களையே சுத்தி சுத்தி வந்து தன் காதலை , காமத்தை வெளிப்படையாக சொன்னால் அவளை அசிங்கப் படுத்தாமல் , அவளை ஒதுக்கி தள்ளாமல் , உங்கள் உள் மனசில் ஆசைகளை ஊருக்காக புதைத்து வைத்து விட்டு நீங்கள் தியாகி ஆகி விட்டு பின் ஓரமாக உட்கார்ந்து ஒப்பாரி வைக்காதீர்கள் என்பதை மண்டையில் அடித்து மயங்கும்போது தண்ணீர் அடித்து தெளிய வைத்து ... தெளிய வைத்து சொல்கிறார் இயக்குனர் பாலா . " என் மாமன் பசிக்கு சோறு வேணும்னா .. நான் அம்மணமா கூட ஆடுவேன் " என்று சொல்லி மயங்கும் வரலட்சுமி மனதை அள்ளுகிறார். இந்த சூறாவளி கேரக்டர் வரலட்சுமி தவிர வேறு எந்தப் பெண்ணும் செய்ய இயலாது . . மாமன் சன்னாசி பசிக்குதுண்ணே என்றவுடன் , தன கால்வலி யை மறந்து வேகமாக எழுந்து கிளம்பி ஆடத் துவங்கும் வரலட்சுமி .....பார்க்கும்போது இயக்குனர் விளக்க வரும் காதலின் ஆழம் நம் கண்களின் நீராகப் பனிக்கிறது . பெண்புலியாக சீறும் சூறாவளி வரலட்சுமியிடம் சாமிக்கு முன் சத்தியம் கேட்கும் இடத்தில் , என் சாமியே நீதானய்யா உனக்கு என்ன வேணும் சொல்லு நம் இருவருக்கும் இடையில அந்த கல்லு எதுக்கு ? வசனத்தில் ஆங்காங்கே பின்னுகிறார் இயக்குனர் . உன் மாமனுக்கு ஊத்தி கொடு மனசுல இருக்கிறத உளறிடுவான் ... என்று சொல்லும்போது சீறும் சூறாவளி , குடித்து விட்டு மாமன் நீ ஊர் பார்க்க அவுத்து போட்டு ஆடுணவ தானடி எனும்போது மாமனின் வார்த்தைகளில் கொஞ்சம் கொஞ்சமாக மரத்து போவதை காணும்போது ஆஹா வரலட்சுமியா இது என்று அதிசயம் பிறக்கிறது . ஒரு பெண்புலி , தன சுபாவத்தை காதலை இழக்கும்போது .. இழந்து விடுகிறாள் என்று அழகாக புரியவைத்து காய் நகர்த்துகிறார் இயக்குனர் .
மனதில் உள்ள காதலை மறைத்து கொண்டு , திரியும் போதும் , காதலியின் வேதனையை தான சுமக்கும் காட்சிகளிலும் , கண்களிலேயே தன காதலையும் , வேதனையையும் , அடக்கி , அடக்கி வைத்து குமுறும் சசிகுமார் வெல்டன் . சசிகுமார் படத்தில் தெரியவில்லை சன்னாசி மட்டுமே தென்படுகிறார் . அறிமுக வில்லன் சுரேஷ் அப்பாவியாக அடிவாங்கும் போதும் , வில்லனாகி மூர்க்கத்துடன் அடிக்கும்போதும் இது முதல்படம் என்பதே தெரியாத அளவில் அவரிடம் நடிப்பை வாங்கியிருக்கிறார் இயக்குனர் . சுரேஷ் ஒரு வான்டட் வில்லனாகி விடுவார் நிச்சயம் . வித்யா கர்வத் திமிருடன் ஜி எம் குமார் தன் பங்கை செவ்வனே செய்து இருக்கிறார் . அதிலும் ஆஸ்திரேலியா கவர்னருக்கு மாலையை திருப்பி அணிவிக்கும் இடத்தில் ,இசைஞானி இளையராஜா வை நிற்க வைத்து காலில் விழுந்து வணங்க ஆசைப் படுகிறது மனது .. படம் ஆரம்பிக்கும்போது கம்பீரமாக தஞ்சை பெரியகோவிலை காட்சி படுத்தும் இடத்தில் ஆரம்பித்து , கிளைமாக்ஸ் சண்டை வரை செழியனின் கேமரா தனி ஆவர்த்தனம் செய்கிறது . பின்னணிப் பாடகி ரம்யா டிஸ்கவரி சேனலுக்காக இந்த கலைஞர்களை பேட்டியெடுக்க வரும் இடத்தில் இசைஞானி எழுந்து நின்று வாசிக்க , தியேட்டரே எழுந்து நின்று ஆடுகிறது படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் , இளையராஜாவும் , பாலாவும் போட்டி போட்டுக் கொண்டு நம்மை ஆளுகிறார்கள் .
படத்தில் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது . ஆனால் பாலா சார் எனக்கு மிகவும் பிடித்தது . அருமையான காதலை மனதில் வைத்து வாழும் ஆணின் வாயில் செய்வதறியாது கலங்கி நிற்கும் இடத்தில் எப்படி கேவலமான பேச்சு தான் காதலிக்கும் பெண்ணின் மேல் அடியாக விழும் என்பதை அழகாக கையாண்டு இருக்கிறீர்கள் . அங்கு நீங்கள் ஆணாக நிற்கிறீர்கள் . தான் விரும்பும் ஆண் தவிர வேறு எவனையும் அனுமதிக்க மாட்டேன் என்று திமிருடன் நிற்கும் ஆண்மைத் தனமான அன்பான பெண் , காதலனே இன்னொருவனுக்கு தன்னை கொடுக்க தயாராகி விட்டான் என்றவுடன் தன உடம்புக்கு என்னவேண்டுமானாலும் நடக்கட்டும் என்று இறுகிப் போய்விடுவாள் என்பதை காட்சிப் படுத்தும் இடத்தில் நீங்கள் பெண்களின் மனோ நிலை புரிந்த தாயுமான்வராகி விடுகிறீர்கள் . ஆட்டக்காரி எல்லாம் அவுசாரிகளா என்று கேட்கும் இடத்திலும் , தங்கச்சிய நல்ல இடத்துல கட்டிக் கொடுக்கணும்கிற ஆசையில்தான் தங்கச்சிகூடவே இரட்டை அர்த்தம் பேசி ஆடறேன் .. வாய்லேர்ந்து வர்ற வார்த்தை தானே அண்ணே ... ஏன்னாஇப்போ .... வாயப் பிளந்து கிட்டு காசக் கொடுக்கிறாங்க இல்லே... அதுதானே வேணும் எனும் இடத்திலும் ... பல வசன வரிகளிலும் உங்கள் வசனங்கள் நம் நாட்டில் தெரிந்த கலையை விட இயலாமல் , வேறு என்ன செய்து வாழ என்று வகை தெரியாமல் திகைத்து தங்கள் வாழ்வை தாங்களே விழுங்கி கொண்டு இருக்கும் கூத்து , கரகாட்டக் கார , தப்பு கலைஞர்களின் ஜீவனாக ஒலிக்கிறது .படத்தில் ஆங் காங்கே நம் கண்கள் குளமாவதை தடுக்க இயலவில்லை , வீட்டுக்கு வந்தவுடன் இந்தக் கலைஞர்களின் அவல வாழ்வை நினைத்து ஓவென்று கட்டுப்பாடு இல்லாமல் நான் அழுதது தான் இயக்குனர் பாலாவின் வெற்றி. இந்தப் படத்தில் குறை சொல்ல தோண்டி துருவிப் பார்க்கலாம் ... ஆனால் நம் சமூகத்தின் முகமுடிகளுக்குள் மூச்சு முட்டி செத்துக் கொண்டிருக்கும் கலையை நினைத்தால் ...நாம் செய்வதறியாது திகைத்து நின்று படம் முடிந்ததும் எழுந்து நின்று இயக்குனர் பாலாவிற்கும் , இப்படத்தை தயாரித்த கம்பெனி நிறுவனத்தினருக்கும் ஐந்து நிமிடம் கை தட்டுவது மட்டுமே முடிந்தது . தரை தப்பட்டை ... சும்மா அதிருதுல்ல ..!

கதை: கிராமத்துல ஒரு கரக கோஷ்டி இருக்குது. அந்த கோஷ்டியில அம்சமா, அழகா இருக்கிற ஒரு பொண்ணு அதே கோஷ்டியை நடத்துறவர் மேல கொள்ள லவ்வா திரியுது… ஆனா அந்த புள்ளய நல்லவன் மாதிரி நடிச்ச ஒருத்தன் கல்யாணம் பண்ணி கிட்டு  போறான். அவன் தொழிலே பொம்பள பிஸ்னஸ். கட்டிகிட்டு வந்தவளையும் பிசிஸ்னஸ்ல இறக்கி விட்டுடுறான். ஒரு கட்டத்துல வாடகை தாயா மாத்தி அடுத்தவன் புள்ளய சுமக்க வைக்கிறான். அவ அங்கயிருந்து தப்பிச்சாளா… கரக கோஷ்டி இன்னா ஆச்சி… இதாம்பா ‘தாரை தப்பட்டை’ கதை லைனு…சமூகத்துக்கு சொல்ற வர்றது: ஆபாச கலையாக மாறிப்போச்சாம் கிராமிய கலைகள். விபச்சார விடுதிகளில் தப்பிச்சி போற பெண் களை புடிச்சி வந்தா மொட்டை அடிச்சி, பெல்டால விளாசுவாங்களாம். பணம் வைச்சிருக்கிறவன் அதை குடுத்து ஏழைகளை வாடகை தாயா மாத்தி குழந்தை பெத்துக் கிறானாம். காசு குடுத்தா அரசு ஆஸ்பத்திரியில பிணவறையில கூட பிரசவம் பாக்கலாமாம்.
ஹீரோ சசிக்குமார்: இவருதாங்க படத்துல கரக கோஷ்டியை நடத்துற சன்னாசி. ஏம்பா சசிக்குமாரு சுப்ரமணியபுரம் தொடங்கி சுந்தரபாண்டியன் வரைக்கும் நல்லதான கதை கேட்டு நடிச்ச… படம் தயாரிச்ச… காசு சம்பாரிச்ச… பாலா உன்னோட குருவா இருக்கலாம் அதுக்காக கதை கேக்காம 2 வருசம் மீசையும், தாடியையும், குடுமியையும் வளத்துகிட்டு திரிஞ்சியே படத்தை முழுசா உனக்கு திருப்தியா இருக்குதா… குடும்பத்தோட சசிக்குமார் படம்னு நம்பி இந்த படத்துக்கு ஜனங்க வருவாங்களா…
இயக்குனர் சசிக்குமார்: நல்ல கதையோட இருக்குற படத்தை இயக்குவார்… நடிகர் சசிக்குமார்: நல்ல கதையோட இருக்குற கேரக்டரா மாறி நடிப்பார். ஈகோ இல்லாம கூட நடிக்கிறவங்களுக்கும் ஸ்கோப் இருக்குற மாதிரி கதைய தேர்ந்தெடுப்பார். சின்ன குழந் தைங்க தொடங்கி வயசு பொண்ணுங்க, வயசு பசங்க, பல்லுபோன பாட்டிவரைக்கும் சுந்தரபாண்டியனாதான உன்னை கொண்டாடுது…. தயாரிப்பாளர் சசிக்குமார்: தரமான படததை தயாரிக்கிறதோட எடுக்குற படத்தை வாங்கி வினியோகம் பண்ற வினியோ கஸ்தர் தொடங்கி தியேட்டர்காரங்க, தியேட்டர்ல படம் பாக்க வர்ற ஆடியன்ஸ் வரைக் கும் போட்ட காசுக்கு பழுதில்லாம படம் எடுப்பார்னுதான இதுவரைக்கும் சசிக் குமாரை அப்படிதான நெனச்சிகிட்டிருந்தாங்க. இந்த தாரை தப்பட்டை படம் ரிலீஸ் ஆகிற வரைக்கும். இனிமே கஷ்டதாண்டி…
ஹீரோயின் வரலட்சுமி: சூறாவளி இதுதாங்க வரலட்சுமியோட பேரு. அதுக்கேத்த மாதிரி குரலும், கரகாட்டமும், கூத்தும் பிரமாதம். ‘மாமனுக்கு பசி வந்துட்டா அம்மணமா கூட ஆட்டம்போடுவேன்னு’ டைரக்டர் டயலாக் குடுத்தாலும் ஜர்க்கே இல்லாம அதை பேசி அசத்துற அசட்டு தைரியம் வரலட்சுமிக்கு ரொம்பவே அதிகம்… என்ன ஒண்ணு மத்த படங்கள் மாதிரி ஹீரோயினுக்கு ஆகிற காஸ்டியூம் செலவு எதுவும் வரலட்சுமிக்கு இல்ல. கரகாட்டம் ஆடும்போது ஜட்டியவிட பெருசா ஒரு டவுசரு, அத மூட பேருக்கு ஒரு மினி ஸ்கர்ட்டு, டைட்டா ஒரு ஜாக்கெட்டு, வீட்டுல தூங்கும்போது ஒரு நைட்டி, போனா போகுதுன்னு அந்தமானுக்கு கப்பல்ல போகும்போதும், கிளைமாக்சுலயும் மட்டும் புடவையை குடுத்திருக்காரு இயக்குனரு. சொந்தக்குரல்ல பேசியிருக்கிறதால வர லட்சுமிக்கு விருதுங்க வர்றதுக்கும் வாய்ப்பு இருக்குதுங்க. வரலட்சுமியும் வாங்கின சம்பளத்துக்கு வஞ்சனை வைக்காம நல்லாவே குத்து குத்துன்னு குத்தி அடிச்சி ஆடி யிருக்குது. ஹீரோக்கு வைச்ச சண்டை காட்சியை மிஞ்சுற அளவுக்கு வரலட்சுமி ஆக்ஷன்லயும் அசத்தியிருக்குது. துணிக்கடையில வாங்குவதற்கு எவ்ளோ டிரஸ் இருந்தாலும் ‘மாமா என் சைஸ் இன்னா’ன்னு சசிக்குமாரிடம் முன்னாடி வந்து நின்று சைஸ் கேட்க வரலட்சுமிக்கு டயலாக் குடுத்த தேசிய விருது இயக்குனரின் ‘காம’ நெடி தியேட்டரில் அள்ளும் பாருங்க…
ஹீரோவின் அப்பா ஜி.எம்.குமார்: நாட்டுப்புற கலைகள் மீது மரியாதை வைத்திருக்கிற பாரம்பரிய பழைய கலைஞன். காசுக்காக கலையை விற்காத சாமிபுலவர் இவர்தான். இவர் பெருமையை தெரிந்து கொண்ட டிஸ்கவரி தமிழ் சேனல் இவரை பேட்டி எடுக்க வருதுங்க. அந்த சீனோட அந்த கம்பெனிய காணோம். அதென்னவோ இயக்குனர் பாலா படத்துல இவர் நடிக்கும்போதெல்லாம் ரொம்ப நல்ல கேரக்டர் குடுத்துட்டு படம் தொடங்கி கொஞ்ச நேரத்துலயே கொடூரமா செத்துபோயிடுவாரு. இதுலயும் செத்து போறாரு. வழக்கமான நடிப்புதான். பெருசா சொல்ற அளவுக்கு ஜி.எம்.குமார் கேரக்டரான சாமிபுலவருக்கு கதையில வெயிட் இல்ல…
வில்லன் ஆர்.கே.சுரேஷ்: விபச்சார புரோக்கர் கருப்பையா இவருதாங்க. குடுத்த வேஷத்தை கச்சிதமா செய்திருக்காரு. வில்லன் வேஷத்த மெருகேத்திக்கிங்க சுரேஷ்.
கரகாட்டக்காரன் அமுதவாணன்: டிவியில டான்ஸ் ஷோ பாத்த மாதிரியே இருந்துச்சி இவரு ஆட்டம். சிம்பு ஒரு ‘பீப்’ பாட்டு போட்டதுக்கே கொந்தளிச்சி கோஷம்போட்டுகிட்டு திரிஞ்சவங்க அமுதவாணன் ஆடி பாடின ‘செரச்சி வைச்சிருக்கேன்… செரச்சி வைச்சி ருக்கேன்… 2 ரூபா பிளேடு வாங்கி செரச்சி வைச்சிருக்கேன்னு’ பாட்டுக்கு என்ன கொந் தளிக்க போறாங்களோ… பாட்டு மட்டுமா இவுரு ஆட கூடவே தங்கச்சியும் ஆட வைச்சி கிட்டு இரண்டு பேரும் காது கூசுற ‘பீப்ப்ப்ப்ப்ப்’ டயலாக்கெல்லாம் பேசிகிட்டு இருக்கறத படமா பாத்து கேக்கும்போது… சென்சாரு கத்திரி சாண புடிக்க போயிருச்சோன்னு லேசா ஒரு டவுட்டு…
ஆட்டக்காரி காயத்திரி ரகுராம்: அழகான பொண்ணு. நல்ல டான்சர். ஹீரோயினா நடிச்சிகிட்டிருந்த புள்ள. இந்த புள்ளைக்கும் ஜட்டியை விட கொஞ்சம் பெருசா ஒரு டவுசரு. அத மறைக்க மினி ஸ்கர்ட்டு, டைட்டா ஒரு ஜாக்கெட்டு இதாங்க காஸ்டியூம். பொணத்துக்கு முன்னாடி குத்து குத்துன்னு ஆட்டம்…
ஒளிப்பதிவு செழியன்: படம் ஆபாசமாக காம நெடியாக சைக்கோதனமாக இருந்தாலும் ஒளிப்பதிவில் அதை உருப்படியாக காட்டியிருக்கிறார் செழியன். ஒரு படத்துக்கு இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் இரு கண்கள் போல என்று சொல்வார்கள். இதில் இயக்குனர் என்ற கண் ‘காம’மாலை… காமாலை யாகிப் போனதால் ஒளிப்பதிவு என்ற ஒரே கண் மட்டுமே சரியாக வேலை செய்திருக்கிறது. கதை உருப்படியாக இல்லை. ஆனால் காட்சிகளில் தெளிவு இப்படித்தான்… விளம்பரம் செய்ய வேண்டும்.
இசை: இசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது படம். ராஜா கதைகேட்டு ஒப்புக் கொண்டாரா இல்லை தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் என்பதற்காக ஒப்புக் கொண்டாரா என்பது தெரிய வில்லை. ராஜாவின் இசைப்பயணத்தில் அவரது ஆயிரமாவது படம் அவருக்கு பெரும் கரும்புள்ளி… என்பது மட்டும் நிச்சயம். இப்படிபட்ட ‘காம’நெடி வீசும் ஆட்டங்களுக்கும், வஞ்ச மில்லாத வன்முறைக்கும் எப்படி ராஜா இசையமைத்தார் என ரசிகர்கள் கொஞ்சம் யோசித்தால் உங்கள் மீதுள்ள மரியாதையே குறைந்துவிடும் அளவுக்கு தேசிய விருது பெற்ற இயக்குனரின் தரம் உங்களை தாழ்த்தியிருக்கிறது. ஆயிரமாவது படம் என்று போற்றி கொண்டாடும் அளவுக்கு பாடல்களில் பெருசாக தாக்கமும் இல்லை. தரம்கெட்ட இயக்குனரின் காட்சிகளை பார்க்கிறவர்களுக்கு பின்னணி இசையின் வீரியம் தெரிய நியாயமே இல்லை. இசைஞானிக்கு ஒரே ஒரு வேண்டுகோள்… இனி இதுபோன்ற பிரபல இயக்குனர், தேசிய விருது பெற்ற இயக்குனர் என யாராவது படத்துக்கு இசை கேட்டு வந்தால் வாசலோடு பத்தி விடுங்கள்… இதுவரை நீங்கள் காப்பாற்றி வைத்திருக்கிற பேராவது மிஞ்சும்…
இயக்குனர் : பாலாவுக்கு பெண்கள் மீது அப்படி என்ன கோபம் என்பதை தயவு செய்து கண்டுபிடிக்க வேண்டும். பெண்களை ஆபாசமா காட்டுறதும், மொட்டை அடிச்சி விடுறதும், பெல்டால விளாசுறதும், விபச்சார விடுதியில சீரழிக்கப்படுறமாதிரி காட்டுறதும், பிச்சை எடுக்கவிடுறதும், அரைகுறையான காஸ்டியூம்ஸ் குடுத்து அழகு பாக்குறது அதிலும் அழகான பெண்கள் என்றால் அவர்களை அவலட்சமாக்குவதில் அவருக்கு நிகர் அவரே. பாலாவோட பி ஸ்டுடியோ கம்பெனி லோகோவ நல்லா பாருங்க அதுலயும் வில் வைச்சிருக்கிறவன் கோவணம் மட்டும்தான் கட்டியிருப்பான் அதுவும் கிராபிக்ஸ்ல நல்லா பறக்கும்…
வரலட்சுமி வெளிநாட்டில் படித்து வளர்ந்தவர். பாலே நடனம் எல்லாம் கற்றவர். முதல் படத்திலேயே அழகான ஹீரோயினாக அறிமுகம் ஆன வரலட்சுமிக்கு குரல் மட்டும் கொஞ்சம் கட்டை. அதற்காக இத்தனை ஆபாசமாக, அவலட்சணமாகவாக காட்சிப் படுத்துவது.
கிராமிய கலைகள் மீது அப்படி என்ன கோபம் பாலாவுக்கு என்று தெரியவில்லை. கிராமங்களில் நடக்கும் திருவிழாவில் ஆடும் கிராமிய கலைஞர்களை இதைவிட கேவலப்படுத்த முடியாது. சுடுகாட்டையும், வெட்டியான் வேலையையும், பிணவறை யையும் காட்டுவதுதான் உங்களின் யதார்த்த சினிமாவா பாலா?
தேசிய விருது தவறுதலாக ஒரு மனநோயாளிக்கு வழங்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் இதுபோன்ற உங்கள் படங்களை தொடர்ந்து பார்க்கிறதன் மூலம் ஏற்படுகிறது.
சிம்புவாவது போட்ட பாட்டுல ஒரு வார்த்தை தப்பா இருக்குன்னு அதுல ஒரு ‘பீப்’ போட்டதுக்கே கொந்தளிச்ச சமூகம் ‘தாரை தப்பட்டை’ மூலம் ‘பீப்ப்ப்ப்ப்ப்ப்’னு படம் தொடங்கி முடியிற வரைக்கும் ஏகப்பட்ட இடங்கள்ள ‘பீப்’பே போடாம ஆபாச வசனம்… அருவருப்பான நடனம்… சகிக்க முடியாத காட்சின்னு படம் முழுக்க எடுத்திருக்காரே இந்த தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா. இதுக்கு இந்த சமூகம் என்ன பதில் சொல்லும்…
‘ஏ’ சான்றிதழ் வாங்க கூட தகுதி இல்லாத இந்த படத்தை இயக்குறதுக்கு 2 வருஷம் ஆகியிருக்கு. ஒவ்வொரு படத்துலயும் தம் அடிக்கிறவனையும், கஞ்சா அடிக்கிற வனையும் வித்தியாச வித்தியாசமாக காட்டி அதுல இன்பம் அடையிறீங்க போல. தன்னோட உதவியாளராக இருந்த சசிக்குமார் இயக்குனரா, தயாரிப்பாளரா குறிப்பா நடிகராகவும் வெற்றி பெற்று விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை கூப்பிட்டு படம் தயாரிக்கச் சொல்லி நடிக்கவும் வைச்சி சசிக்குமார் தயாரிப்பாளரா சம்பாதிச்ச பணமும், நடிகராக சம்பாதிச்ச மக்கள் மனசையும் ஒரே நேரத்துல தாரை தப்பட்டையில அடிச்சி கிழிச்சி தொங்க விட்டுட்டீங்க…டிஸ்கவரி சேனல் உங்களுக்கு எதுவும் பண்ண மாதிரியே தெரியலியே… பின்ன அவங்கள ஏன் இந்த கேவலமான படத்துல கோத்து விட்டுட்டு அவங்க பேரையும் காலி பண்ணியிருக்கீங்க…
தயவு செய்து இயக்குனர் பாலா கதை இல்லனா படம் எடுக்காதீங்க… நல்ல தயாரிப் பாளரா இருங்க… உங்க உதவியாளர்கள் கதை வைச்சிருந்தா அவங்களை இயக்குனராக வளர்த்து விடுங்க… இல்ல நல்ல கதை வைச்சிருக்கவங்க பி ஸ்டுடியோ பக்கம் வாங்கன்னு ஒரு லைன் மட்டும் பேஸ்புக்லயும், டிவிட்டர்லயும் போட்டுப் பாருங்க அப்ப தெரியும்… உலகம் முழுவதும் தமிழ் சினிமாவுக்கும், தமிழ் கிராமிய கலைகளுக்கும் நல்ல இமேஜ் இருக்கு… தயவு செய்து அதை இந்த மாதிரி கேவலமான படங்களை எடுத்து தமிழ் கிராமிய கலைகள் என்றாலே இப்படித்தான் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி வரலாற்றில் தவறாக இடம்பிடித்து விடவேண்டாம்.
பின்குறிப்புஇதுவரைக்கும் நீங்க படிச்சதை ‘தாரை தப்பட்டை’ படத்தோட விமர்சனம்னு எடுத்துக்கலாம்… இல்ல இயக்குனர் பாலாவுக்கு சொல்ற கடுதாசியாகவும் எடுத்துக்கலாம்… இந்த தமிழ் சமூகத்துக்கு இயக்குனர் பாலா எதாவது நல்லது செய்யனும்னு நினைச்சார்னா தயவு செய்து இனிமே படம் இயக்க வராதீங்க
கோடங்கி

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள்

புகழ்பெற்ற கல்லறை வாசகங்களாக யாரோ எழுதியதை இன்று படித்தேன் ...மிகவும் பொருத்தமாகவே இருந்தது ..
புகழ்பெற்ற கவிஞர் ஷெல்லி தனது தாயாரின் கல்லறையில் பொறித்திருந்த கல்லறை கவிதை ..." சப்தமிட்டு நடக்காதீர்கள் , இங்கே தான் என் அருமைத் தாயார் இளைப்பாறிக்கொண்டிருக்கிறார்கள் ",
உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம் ," உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டிருக்கிறது . நல்ல வேளை இவள் பிணமானாள் , இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும் ".
மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள் , " இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது " ..
ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம் , "இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான் " ....
அரசியல்வாதியின் கல்லறையில் , " தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள் , இவன் எழுந்து விடக்கூடாது ".
ஒரு விலை மகளின் கல்லறை வாசகம் , " இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள் ,தொந்தரவு செய்யாதீர்கள் , பாவம் இனி வர முடியாது இவளால் "....
இவ்வளவு தானா வாழ்க்கை ??? ஆம் அதிலென்ன சந்தேகம் ?? ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல் .... உலகையே நடுங்க வைத்த ஹிட்லர் தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான் .
அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட முசோலினி இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள் .....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் , ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை ..... நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம் ?? காலம் நம்மை எத்தனை நாள் விட்டு வைக்கும் ?? நமது பதவியா ?? நாம் சேர்த்த சொத்து சுகங்களா ? நமது படிப்பா ?? நமது வீடா ?? நம் முன்னோர்களின் ஆஸ்தியா ?? நமது அறிவா ?? நமது பிள்ளைகளா ?? ஆணவத்தை பறைசாற்றும் நமது ஜாதியா ?????? எது நம்மைக் காப்பாற்றப் போகிறது ??? ரத்தம் சுருங்கி , நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை ... பசித்தவனுக்கு உணவு கொடுத்து , உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து , எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள் . இறந்த பின்னும் இறைவனோடு பேரின்ப வாழ்க்கை . கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும் பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும் . ஜாதி ....இந்தத்தீ தான் இன்றைய பயங்கரம் .. நல்லவன் கெட்டவன் இந்த இரண்டு ஜாதி மட்டுமே நிஜம் . ஒரே முறை வாழப்போகிறோம் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம் ....நல்ல செயல்களை , எண்ணங்களை விதைப்போம் .... அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக ....பிறரை வாழ வைத்து வாழ்வோம் .

Wednesday, January 13, 2016

கால ஓட்டத்தில் நான் மறந்த, இழந்த என் நண்பன் குருசாமி!'' சமுத்திரக்கனி


'சேரன் அண்ணனோட 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ பட ஸ்பெஷல் ஷோ போயிருந்தேன். அதுல ஒரு சீன். கூடவே இருந்த நண்பன் ஒருத்தன் இறந்துபோயிடுவான். அப்ப, 'மூத்த புள்ளைய நம்பித்தானடா ஒவ்வொரு குடும்பமும் இருக்கு. பொறுப்பு இல்லாம நீங்க செத்துப்போயிடுறீங்க. இங்க மொத்தக் குடும்பமும் ஆடிப்போய்க்கிடக்கே’னு அவனோட அப்பா கதறுவார். அந்தக் காட்சியிலேயே மனசு நின்னுடுச்சு. வீட்டுக்கு வந்தா, ஒரு வேலையும் ஓடலை. ஏதோ உறுத்துது. அந்தக் குடைச்சலுக்குக் காரணம், கால ஓட்டத்தில் நான் மறந்த, இழந்த என் நண்பன் குருசாமி!''
''1992-ல் நான் சென்னைக்கு வந்தேன். கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் மெயின்ரோடில் சின்ன அறையில் தங்கியிருந்தப்ப, குருசாமி என் பக்கத்து அறை நண்பர். 'நண்பர்’ காலப்போக்கில் 'நண்பன்’ ஆனான். பாக்யராஜ் சார்கிட்ட உதவியாளரா இருந்துட்டு வெளியே வந்து, தனியா சினிமா பண்ணும் முயற்சியில் இருந்தான். சென்னையையும் சினிமாவையும் எனக்கு அணுஅணுவா அனுபவிக்கக் கத்துக்கொடுத்தவன். இன்னைக்கு நான் ஆறேழு படங்கள் பண்ணி, ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கேன். ஆனா, இப்போ அவன் இல்லை. ஆமா, குருசாமி இறந்து 11 வருஷம் ஆகுது!''
''பல நாள் காலைல அஞ்சு மணிக்கு எல்லாம் எழுப்பிவிட்ருவான். கோடம்பாக்கம் டு சேப்பாக்கம் தூர்தர்ஷன் ஆபீஸ் வரை நடந்தே போவோம். சாப்பாட்டுக்கு எல்லாம் வழி இருக்காது. ரெண்டு மணி நேரம் நடந்து ஏழு மணிக்குப் போய்ச் சேருவோம். தூர்தர்ஷன் அதிகாரிகள் வர்ற வரை காத்திருந்து, 'ஏதாவது நிகழ்ச்சி இருந்தா குடுங்க... பண்றோம்’னு கேட்போம். அவங்க பெரும்பாலும் எங்களை நிராகரிச்சிருவாங்க. திரும்பி ரூமுக்கு நடக்க ஆரம்பிப்போம். இப்படி, சென்னையில் எங்க கால் படாத இடங்களே இல்லை."
போன இடங்களில் எல்லாம் தோல்வி... தோல்வி. ஒருகட்டத்துல குரு துவண்டுட்டான். 'என்னால இனி முடியாதுனு நினைக்கிறேன்டா... நீ ஜெயிச்சு வந்துடுவ. அப்ப நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்’னு சொல்வான். தன்னைத் தோக்கடிச்ச, தான் தொலைச்ச சினிமாவை என் மூலமா மீட்டு எடுக்கணும்னு நினைச்சான். 'கனி, இன்னைக்கு வேணும்னா நம்ம கையில அஞ்சு பைசா இல்லாம இருக்கலாம். ஆனா, உன் ஒவ்வொரு கதையிலும் பல கோடிகள் இருக்குடா. நம்பிக்கையை மட்டும் விட்டுராதடா’னு, நான் தளர்ந்து போகாமப் பார்த்துக்கிட்டான்''
''தொண்ணூறுகளின் கடைசினு நினைக்கிறேன். ஒருநாள் டீ குடிச்சிட்டு இருந்தப்ப, குரு தன்னை மறந்து திடீர்னு பயங்கரமாக் கத்த ஆரம்பிச்சான். எங்களால அவனைக் கட்டுப்படுத்த முடியலை. நடுரோட்டுக்கு ஓடி, பல்லவன் பேருந்தை மறிச்சு, ரெண்டு கைகளாலும் ஆங்கிள் பார்த்து ஷாட் வெச்சான். அன்னைக்கு அவன் பேசினது இப்பவும் ஞாபகம் இருக்கு. 'எல்லாம் முடிஞ்சிருச்சுல்ல... இனிமே பிரச்னை இல்லை. அப்படியே ஏத்து. என் மேல ஏத்திட்டுப் போயிட்டே இரு’ன்னான். சினிமா கொடுத்த ஏமாற்றங்களும் வலிகளும் அவனை என்னமோ பண்ணிருச்சு. ஒரு மணி நேரம் போராடி, இழுத்து உக்கார வெச்சோம்.
எங்களுக்கு என்ன பண்றதுனு தெரியலை. 'குரு, உனக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லைபோல. எல்லாரும் திசைக்கு ஒருத்தரா ஓடிட்டு இருக்கோம். எப்படியாச்சும் கொஞ்சம் பணம் புரட்டித் தர்றோம். தயவுசெஞ்சு சொந்த ஊருக்குப் போயிடு. கொஞ்ச நாள் கழிச்சு நானே உன்னைக் கூப்பிட்டுக்கிறேன்’னு சொல்லி, அன்னிக்கு முடிஞ்சது 200 ரூபாய் புரட்டிக்கொடுத்தோம். 'ஊருக்குப் பத்திரமா போயிடுவதானே?’னு கேட்டதுக்கு, 'என்னைப் பைத்தியக்காரன்னு நினைச்சுட்டீங்களாடா?’னு கோபமாத் திட்டிட்டே போனான். அவனை, அன்னைக்குத்தான் கடைசியாப் பார்த்தேன்!
டி.வி சீரியல் பண்ண எனக்கு வாய்ப்பு கிடைச்சப்போ அவனைக் கூப்பிட்டுக்கலாம்னு விசாரிச்சா, மனநோயாளி ஆகிட்டான்னு தகவல். மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு. பிறகு, 'நிறைஞ்ச மனசு’ பட வாய்ப்பு கிடைச்சது. அப்பவும் அவனைத் தேடினேன். 'செத்துப்போயிட்டான்’னு சொன்னாங்க... அதிர்ந்துட்டேன். 'நிறைஞ்ச மனசு’ படம் எடுத்து நான் தோத்துப்போயிட்டேன். கிட்டத்தட்ட அப்ப எனக்கும் அவனோட கடைசிக் கால மனநிலைதான். 'இப்படித்தானே அவனுக்கும் வலிச்சிருக்கும்’னு தோத்தவனோட வலியை அனுபவபூர்வமா உணர்ந்தேன்.
அப்புறம் எல்லாத்தையும் முதல்ல இருந்து ஆரம்பிக்க வேண்டிய சூழல்; நிரூபிக்கவேண்டிய போராட்டம். 'சுப்ரமணியபுரம்’ எடுத்து 'நாடோடிகள்’ல மீண்டோம். இந்தக் காலகட்டங்கள்ல குருசாமியை மொத்தமாவே மறந்துட்டேன். 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ எனக்குள் குருசாமி ஞாபகத்தைத் திரும்பத் தூண்டிருச்சு. அதான் அவனைப் பெத்தவங்களைப் பார்க்கலாமேனு போனேன்''
தேனியில் இருந்து குச்சனூர் போகும் வழியில் உள்ள சின்ன கிராமம் பத்ரகாளிபுரம். உழைத்துக் களைத்த கிராமத்து முகங்கள். விசாரிப்புகளுக்குப் பிறகு, மிகச் சிறிய ஓட்டு வீட்டுக்குள் நுழைகிறார் சமுத்திரக்கனி. வீட்டின் உள்ளே ஒரு கட்டிலில் படுத்திருந்தார் பெரியவர் கணபதி. அவரிடம், ''குருவோட அப்பாங்களா? நான் அவனோட சென்னையில ஒண்ணா இருந்தவன். என் பேரு சமுத்திரக்கனி'' என்று அறிமுகப்படுத்திக்கொண்டதும், எழுந்து உட்கார்ந்தவர், ஒன்றும் பேசவில்லை.
கொஞ்ச நேரம் கழித்து, ''நல்லா இருக்கீங்களாய்யா?'' என்றவர், ''குழந்தைங்க?'' என்று விசாரிக்கிறார். ''ரெண்டு புள்ளைங்க'' என்றேன், ''நல்லா இருப்பய்யா, வா... உட்காரு!'' என்று பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டார். குருசாமியுடனான நட்பை விவரிக்க, கைகளைப் பற்றிக்கொண்டவர், ''நீ ஜெயிச்சவன் இந்த வீட்டுக்குள்ள வந்து நின்னுட்டல்ல... இனிமே என் புள்ளையை இந்த ஊர்ல ஒரு பய தப்பாப் பேச முடியாது. குருசாமி வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைச்சிருக்கு. நீ இவ்ளோ வருஷம் கழிச்சு வந்ததுல ரொம்ப சந்தோ ஷம்யா'' என்றவரின் விழிகளில் கடகடவென கண்ணீர் வழிகிறது.
''மனநிலை தடுமாறி எங்களை அவன் ரொம்பக் கஷ்டப்படுத்திட்டான்ப்பா. இதே சந்துல, நானும் அவனும் எத்தனைவாட்டி அடிச்சு விழுந்து உருண்டு இருக்கோம் தெரியுமா? ரொம்பச் சிரமப்படுத்திட்டான். என் எதிரிக்குக்கூட அந்த நிலைமை வரக் கூடாது. டிகிரி முடிச்ச கையோட சினிமாக்குப் போறேன்னுட்டுக் கிளம்புனான். வெடிவெச்சு, கிணறு வெட்டி சம்பாதிச்ச காசுலதான் அவனை பி.ஏ படிக்கவெச்சேன். குடும்பத்தைக் காப்பாத்துவான்னு நினைச்சேன். கடைசில சித்தம் கலங்கித்தான் வந்து நின்னான்!'' எனக் குமுறி அழுகிறார்.
''குரு மட்டுமில்லப்பா, நான் உட்பட பல சினிமாக்காரங்க அந்த நிலைமைக்குப் போயிட்டுத்தான் திரும்பி வந்திருக்கோம். ஒவ்வொரு நிமிஷமும் போராட்டம்தான். நாங்க தட்டுத்தடுமாறி கோட்டுக்கு இந்தப் பக்கம் விழுந்துட்டோம். அவன் அந்தப் பக்கம் விழுந்துட்டான். அவ்வளவுதாம்பா. ஆனா, அவன் திறமைக்காரன்ப்பா...'' - வெவ்வேறு வார்த்தைகளில் அந்தப் பெரியவரின் மனதைத் தேற்றினேன்.
''எதுக்கும் கவலைப்படாதீங்க. குருசாமி இருந்திருந்தா உங்களுக்கு என்னல்லாம் செஞ்சிருப்பானோ, அதையெல்லாம் இனி நான் செய்றேன். கடைசிக் காலத்துல ஏன் இன்னும் காட்டு வேலைக்குப் போறீங்க. ஆடு-மாடுக கொஞ்சம் வாங்கித் தர்றேன்... பார்த்துக்கங்க'' என்ற சமுத்திரக்கனியின் வார்த்தைகளை அமைதியாகக் கேட்டவர், ''எனக்கு நீ வந்ததே போதும்பா. அதெல்லாம் ஒண்ணும் வேணாம்'' என்று கைகளைப் பிடித்துக்கொண்டார்.
''அம்மா எங்க?'' என்றதற்கு, ''அது சோளக் கருது வெட்டப் போயிருக்கு. அவளையும் ஒரு எட்டு பார்த்தீங்கனா சந்தோஷப்படுவா'' என்றார்.
சோளக்காட்டில் காய்ந்த கரும்புத் தட்டை போல ஒடிசலான ஓர் அம்மா ஓட்டமும் நடையுமாக வந்தார். குருவின் அம்மா காளியம்மா. என் கைகளைப் பற்றிக்கொண்ட அவர் கேட்ட முதல் கேள்வி, ''எம் புள்ளைக்கு மெட்ராஸ்ல என்னய்யா ஆச்சு?'' 15 வருடங்களாக அவருக்குள் தொக்கி நின்ற கேள்வி. சமுத்திரக்கனி உடைந்த குரலில் ''என்னைப் பெத்தவளே...'' என்றதும், வெடித்து அழுகிறார் அந்த அப்பாவித் தாய்.
கையெடுத்துக் கும்பிட்ட அந்த அம்மாவிடம், ''மகனைப் பார்த்து யாராவது கும்பிடுவாங்களாத்தா?'' என்றார் சமுத்திரக்கனி. ''இல்லப்பா... இவ்வளவு காலத்துல அவனை விசாரிச்சு வந்த ஒரே ஆளு நீதான்யா. அங்கே அவன் அநாதையாத் திரிஞ்சிட்டு இருந்தானோனு நினைப்பேன். அவனுக்கும் ஆதரவா ரெண்டு மூணு பேரு இருந்திருக்காங்கனு இப்பத்தான் தெரியுது. அது போதும்யா!''
''ஆத்தா, குரு திரும்ப வந்துட்டான்னு நினைச்சுக்க. மூணு புள்ளைகளைப் பெத்துட்டு இந்த வயசுல ஏன் வயக்காட்டுல கிடந்து கஷ்டப்படுற? உனக்கு வேணுங்கிறதை எல்லாம் இனி நான் செய்றேன். மத்த ரெண்டு பசங்களும் என்ன பண்றாங்க?''.
இரண்டாவது மகனிடம் நலம் விசாரித்தேன், எம்.ஏ படித்த அவரின் மகள் ஆசைப்படி, சென்னையில் உள்ள பிரபல ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் சேர்த்துவிடுவதாகவும், மூன்றாவது மகனின் +2 முடித்த மகளின் கல்லூரிப் படிப்புக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் சொன்னார். ''ஆத்தா, நான் இப்ப கிளம்புறேன். எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டு மறுபடியும் வந்து உங்களைப் பார்க்கிறேன்'' என்று கிளம்பிய போது கார் கண்களைவிட்டு விலகும் வரை, கலங்கியபடியே நின்றிருந்தார் அந்தத் தாய்.
''சினிமாவுக்காக வர்ற நம்மக் கிராமத்துப் பசங்களுக்கு, குருவை மையமா வெச்சு ஒரு விஷயத்தைச் சொல்லணும். குரு, ரொம்ப உண்மையானவன்; திறமைக்குக் குறைவில்லாதவன்; அதே சமயம் கொஞ்சம் பயந்தவன். நேர்மையும் பயமும் ஒண்ணா இருந்தா, கோடம்பாக்கத்துல ஜெயிக்கிறது கஷ்டம். இது எவ்வளவு பெரிய திறமைசாலிக்கும் பொருந்தும்.
ரூம்ல எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடுவோம். 'வாடா... நாலு பேரும் சேர்ந்து சாப்பிட்டா வேலை முடிஞ்சிடும். நீயும் ஒரு தட்டை எடுத்துட்டு வந்து உட்காரு’ம்பேன். 'நீங்க ரெண்டு பேரும்தானே அரிசி வாங்கிட்டு வந்தீங்க. என் பங்கு அதுல இல்லை. அதனால முதல்ல நீங்க சாப்பிடுங்க. மிச்சம் ஏதாச்சும் இருந்தா, நான் சாப்பிட்டுக்கிறேன்’னு சின்னச் சிரிப்போட பம்மிக்குவான். எதுலயும் கொஞ்சம் தாழ்வுமனப்பான்மை. 'பயப்படாத... 100 பேர் நின்னா, முன்னாடி போய் முதல் ஆளா நில்லு. அப்பத்தான் அவங்க பார்வை உன் மேல விழும்’னு சொல்வேன். 'என்னமோடா... அது எனக்கு வரவே மாட்டேங்குது’ம்பான். அது அவனோட மிகப் பெரிய மைனஸ். ஆனா, அவனை எனக்கு ரொம்பப் பிடிச்சதுக்கு அந்த உண்மையும் நேர்மையும்தான் காரணம்.
ஆனா, இங்கே அந்த உண்மையை, திறமையை யார் மதிக்கிறா? ஜெயிக்கணும்கிற வெறியில மத்தவங்களை ஏறி மிதிச்சுட்டுப் போயிட்டே இருக்காங்க. குருவோட வீட்டு நிலைமையைப் பார்த்தீங்கள்ல. சினிமாவுல ஜெயிக்கணும்னு கிளம்பி வர்ற ஒவ்வொருத்தரும், இந்த மாதிரி வலியுள்ள குடும்பத்துல இருந்துதான் வர்றாங்க. அவங்க உணர்வுகளையும் திறமைகளையும் நாம் இன்னும் சரியா அங்கீகரிக்கணும்!''

S.P.Balasubramaniam Tamil Songs - Ganapathy - JUKEBOX - BHAKTHI

REVERSING AGING WITH ONE PROTEIN: GDF11


The pioneering discovery that young blood—and in particular, a single blood protein called GDF11—can regenerate many organs, including your Heart and your Brain
This research is truly the future finding its way back to us right now. The effects they show with GDF11 are remarkable, but in a sense inevitble once one realizes the nature of the incredible system of life and death of cells in which that one protein works.
The fact of which we have been speaking here for a while, that we are being reborn every day from stem cells nursing in niches in different tissues and just waiting to be allowed to "graduate" from state to stage of differentiation before they can go "on stage" to perform is dependent on a complex interaction among various elements.
Growth differentiation factor 11 (GDF11) also known as bone morphogenetic protein 11 (BMP-11) is a protein that in humans is encoded by the GDF11 gene GDF11 belongs to the transforming growth factor beta superfamily. It operates in the brain as well as in the heart and muscles. Various different TGFBeta Family Growth factors operate in different tissues of the body.
GDF11 is of interest to us here because it already is known to play a similar role in the brain as a regulator of neurogenesis. We shall be dealing with the "system" of which GDF11 is a part in the brain extensively. If you wish to look ahead, here is one recent study of a more technical nature:
Transcriptional basis for the inhibition of neural stem cell proliferation and migration by the TGFβ-family member GDF11.
http://www.ncbi.nlm.nih.gov/pubmed/24244313
But we mention this neurogenesis research because we truly wish the reader to appreciate how relevant and imminent the knowledge being uncovered in this area of "anti-aging" is to our understanding of neuroscience and the Brain.
Whether this protein GDF11, which was found by sheer technological force s to be the likeliest canddiate through the analysis of differencebetween the blood of the young organism and the blood of the older organism which shared their circulation, is the ultimately optimal messenger that we needed to utilize while it was signalling in that complex over all system is not yet clear.
What is clear however is that these researchers have regenerated hearts in mice by interceding in this process of progression from stem cell to final functioning heart cells. And it also clear that since muscle and nerve are similarly myeloid in origins, very much of what works for muscle tissues works for nerves and neurogenesis in the brain.
Indeed research has already been done where young blood has renewed and revitalized the brains of aged mice (we'll be posting on that shortly)
The Wagers study at Harvard is described below
Growth Differentiation Factor 11 Is a Circulating Factor that Reverses Age-Related Cardiac Hypertrophy
http://www.cell.com/abstract/S0092-8674(13)00456-X
And this is an interview with Wagers from which most of this post is drawn
It was a series of “oh my moments,” Wagers said, when her group, and that of Harvard neurologist Lee Rubin, found that GDF11 can rejuvenate stem and differentiated cells in muscles and brains of old mice—in many ways, including via DNA repair. “On the other hand, all that occurred only because we had been looking for a long time for something that could recapitulate the effects of heterochronic parabiosis,” she said
The latter involves hooking old mice to young via the blood system, which Wagers and others used a decade ago to prove muscles in old mice can rejuvenate. Similar Stanford University work, which Wagers called “exciting,” was also named a 2014 Science breakthrough. It boosted cognition in old mice by giving them infusions of young blood, and led to a clinical trial.
Heterochronic parabiosis was first described in 1864 by Paul Bert, a French zoologist. When Cornell University’s Clive McKay tried it in the 1950s, he noted that it appeared to rejuvenate old mice, but he lacked the tools to prove it.
Then in 2005 Wagers, in collaboration with her former mentor, Stanford stem cell scientist Irv Weissman, along with Stanford biologist Thomas Rando and post doc Irina Conboy, published a paper in Nature, which found that parabiosis revives aging mouse muscle.
Wagers began analyzing young blood, trying to find a driving molecule behind the stunning effects they had all seen.
In 2013, Wagers and Lee showed that GDF11 tightened hypertrophic mouse hearts, restoring efficiency. This year, Wagers and Rubin published two separate Science papers finding GDF11, in the equivalent of “70-year-old” mice, rejuvenated muscles enough to improve exercise capacity, and rejuvenated brain neurons and blood vessels well enough to improve sense of smell.
As noted, a Stanford group—led by neurologist Tony Wyss-Coray—has launched a clinical trial for Alzheimer’s based on a similar approach detailed in a 2014 Nature Medicine study. In the study, old mice performed better cognitively after receiving several infusions of young blood. More synaptic connections formed in their hippocampi. The related Phase 1 clinical trial is giving 18 patients with mild-to-moderate Alzheimer’s many transfusions of young blood.
Her group has narrowed the source of GDF11 to three different cell types, for which they have animal models. “We are working very hard on that. The mRNA transcript is present in many cell types, so the key question is where the majority of the production happening.
Our own impression here is that the particular cell of origin is of less interest than understanding the complex system dynamics of the various components in this progression of from stem cells through pluripotent cells to differentiation to various cell types and then when they are "ready for prime time" to performing with their predecessors.
It seems to us that the microglial cells are at the very top of the list of likely suspects for being the most important regulators. but that, of course, astrocytes are involved as are T-cells...as well as the older cells already "on stage"
Most likely the GDF11 is providing a quintessential "butterfly" effect when a complex system can be sent into another pattern by intervention at one moment in the overall harmony of the whole system. But that still is all the more remarkable if that is the case.
Wagers asks, "If you deplete it from a particular cell source, do you cause a decline in blood levels? We should know shortly. This is a big deal because we still don’t know why GDF levels decline with age. One possibility is that the cells that make it, make less. The other possibility is that the cells that normally make it are lost with age. If it’s the latter, another therapeutic avenue is to boost the number of those cells.”
Cells affected are sometimes multipotent stem cells, sometimes not. “The heart remodeling involved no stem cells,” Wagers said. “Adult cardiomyocytes changed their size. Terminally differentiated satellite muscle cells underwent a remodeling of their structural integrity. In the brain, neural stem cells expanded. But we don’t think stem cells were involved in remodeling the blood vasculature.”
A really important question is `Do you need to continuously supply the factor, or does it re-set the system?’ So far there is some evidence it re-sets.” The Stanford transfusion work is encouraging as “it says whatever activity is causing the changes persists in plasma for a period of time.” Aging may be about “imbalance of signals.”

அந்தரங்கம் காதலின் எண்ணிலிக் கரங்கள்

பனியின் குளிர்மை
சாளரம் வழியே
உள்ளிறங்கிப் பரவியது
அந்தரங்கம் 
தன்னுடைய வெதுவெதுப்பை
உணர்த்திக்கொண்டிருக்க
அகன்ற படுக்கையின்
பூவிரிப்புக்குள்
தன்னை மலர்த்திக்கொள்கிறாள்
இளமகள் ஒருத்தி
மேலும்
அதிகமாக நனைக்கிற
பனியின் அடர்வில்
மோகம் பாவனையாக
முகிழ்கிறது
அரும்பி
மலர்ந்த பூக்களின் வாசத்தை
நெஞ்சோடுஅணைத்தது
காதலின் எண்ணிலிக் கரங்கள்.
Courtesy :Painting by *Zhaoming Wu*@World Class Art
Sakthi Jothi

Monday, January 11, 2016

சம்பளம் வாங்கும் அடிமைகளுக்கான அறிகுறிகள்:


- "என்ன செய்கிறீர்கள்?" என்று யாராவது கேட்டால் உங்களது பதில் வேலை பற்றியதாக இருக்கிறது.
- ஓய்வு நாட்களிலும் வேலைக்கு செல்லும் அதே நேரத்திற்கு எழுந்திருக்கிறீர்கள்.
- சுகயீனம் இல்லாத நேரத்திலும் விடுப்பு எடுப்பதில் குற்றவுணர்ச்சியை உணர்கிறீர்கள்.
- வேலைக்கு செல்ல வேண்டி இருப்பதால் வாழ்வில் முக்கியமான கொண்டாட்டங்களை இழக்கிறீர்கள்.
- வேலை செய்யுமிடத்தில் நீங்கள் ஓர் அவசியமான ஆள் என்று நம்புகிறீர்கள்.
- வேலை இல்லாத நேரங்களிலும் உங்களது உரையாடல் வேலை பற்றியே இருக்கின்றது.
- சக வேலையாட்கள் மட்டுமே உங்களது நண்பர்கள்.
- வேலையற்ற மக்களை தரக் குறைவாக பார்க்கிறீர்கள். சோம்பேறிகள் மட்டுமே வேலையில்லாமல் இருப்பதாக நினைக்கிறீர்கள்.
- நீங்கள் அதிக நேரம் வேலை செய்வதால் குறைந்த நேரம் செய்பவரை விட சிறந்தவராக தற்பெருமை கொள்கிறீர்கள்.
- சம்பள உயர்வு கிடைக்கும் முன்னரே எந்த நுகர்வுப் பொருளை வாங்கலாம் என்பதை தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.
- வேலையில்லாத நாட்களில் சலிப்படைகிறீர்கள். பொழுதுபோக்கு எதுவுமின்றி டிவி பார்க்கிறீர்கள்.

Bommala Srinu ARTS


Saturday, January 9, 2016

"The 7 Stages of Grief"




1. SHOCK & DENIAL-
You will probably react to learning of the loss with numbed disbelief. You may deny the reality of the loss at some level, in order to avoid the pain. Shock provides emotional protection from being overwhelmed all at once. This may last for weeks.
2. PAIN & GUILT-
As the shock wears off, it is replaced with the suffering of unbelievable pain. Although excruciating and almost unbearable, it is important that you experience the pain fully, and not hide it, avoid it or escape from it with alcohol or drugs.
You may have guilty feelings or remorse over things you did or didn't do with your loved one. Life feels chaotic and scary during this phase.
3. ANGER & BARGAINING-
Frustration gives way to anger, and you may lash out and lay unwarranted blame for the death on someone else. Please try to control this, as permanent damage to your relationships may result. This is a time for the release of bottled up emotion.
You may rail against fate, questioning "Why me?" You may also try to bargain in vain with the powers that be for a way out of your despair ("I will never drink again if you just bring him back")
4. "DEPRESSION", REFLECTION, LONELINESS-
Just when your friends may think you should be getting on with your life, a long period of sad reflection will likely overtake you. This is a normal stage of grief, so do not be "talked out of it" by well-meaning outsiders. Encouragement from others is not helpful to you during this stage of grieving.
During this time, you finally realize the true magnitude of your loss, and it depresses you. You may isolate yourself on purpose, reflect on things you did with your lost one, and focus on memories of the past. You may sense feelings of emptiness or despair.
5. THE UPWARD TURN-
As you start to adjust to life without your dear one, your life becomes a little calmer and more organized. Your physical symptoms lessen, and your "depression" begins to lift slightly.
6. RECONSTRUCTION & WORKING THROUGH-
As you become more functional, your mind starts working again, and you will find yourself seeking realistic solutions to problems posed by life without your loved one. You will start to work on practical and financial problems and reconstructing yourself and your life without him or her.
7. ACCEPTANCE & HOPE-
During this, the last of the seven stages in this grief model, you learn to accept and deal with the reality of your situation. Acceptance does not necessarily mean instant happiness. Given the pain and turmoil you have experienced, you can never return to the carefree, untroubled YOU that existed before this tragedy. But you will find a way forward.
You will start to look forward and actually plan things for the future. Eventually, you will be able to think about your lost loved one without pain; sadness, yes, but the wrenching pain will be gone. You will once again anticipate some good times to come, and yes, even find joy again in the experience of living.
http://www.recover-from-grief.com/7-stages-of-grief.html

"அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்"


ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும்.
ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .
வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.
ஆறு, கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .
ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான்.
அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.
நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.
உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.
கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோவத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.
பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.
ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.
யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.
எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.
அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.
சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.
அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,
வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.
அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.
கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.
எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.
மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.
பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .
பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.
கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.
கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.
வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.
பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.
வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.
சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.
கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோவம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.
உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.

வேட்டை- பவா செல்லதுரை

தெருவில் மூட்டப்பட்ட கல் அடுப்புகளில் எரிந்த சைக்கிள் டயர்களில் சோறு வெந்து கொண்டிருந்தது. சில சட்டிகளில் புனுகுபூனைக் கறி வத்தல். சாராயநெடி தெருவெங்கும் பனிமூட்டமாய் இறங்கி, உற்சாகமூட்டிக் கொண்டிருந்த சாயங்காலத்தில் ஜப்பான் கிழவன் கிழக்குப் பார்த்துக் கும்பிட்டு தெருவிறங்கினான்.bava
“நானும் வரேன் தாத்தா.” என்ற குரலை அலட்சியப்படுத்தினான். “வேட்டைன்றது எனக்கும்  காட்டுக்குமான சண்டை” என்ற குரல் அலட்சியத்திற்குள் புதைந்திருந்தது. இனி அவன் மட்டும்தான். எல்லாமும் அவனுக்கு அலட்சியம்தான். வெகுநாட்களாகவே துயருற்றிருந்தான். துயரம் அவன் பேச்சை உறிஞ்சி விட்டிருந்தது. ஆலமர மைதானத்திலிருந்து மறுக்க, மறுக்க கூட்டிவந்து இந்த ஓட்டுவீட்டில் உட்கார்த்தி வைத்தபோது, அவன் நினைவில் மைதானம் காணாமல் எகிறிப்போயிருந்தது. தூங்கி எழுந்தவுடன் சுவர்களின் முகத்தில் முழிச்சது தாங்கமுடியாமல் இருந்தது. எந்நேரமும் அவன் முன்னால் விரிந்திருந்த மைதான பலியில் அவன் பேச்சை இழந்திருந்தான். எதுவுமே பிடிக்கவில்லைதான். அப்புறம் எதுக்கு வாழ?
காட்டுக்கு... இவனோடு சதா மல்லுக்கட்டிக் கொண்டிருப்பது அதுதான். இவன்தான் எப்போதும் ஜெயித்துக் கொண்டிருந்தான். கொஞ்சம் கொஞ்சமாக காடு இவனிடம் இழந்து கொண்டிருந்தது தன்னை.
தெருவில் கால் வைத்த நிமிஷம் எதிரில் பெரிய பெரிய வாத்யக் கருவிகளோடு வேதக்காரர்கள் கரேலென்ற அட்டை போட்ட தடிதடியான புத்தகங்களோடு எதிர்ப்பட்டார்கள்.
“இவனுங்க வேற...” முணுமுணுத்தான். “குர்யகாரனுங்க கிட்ட என்னத்த கண்டுட்டானுங்க... ராத்திரில, காட்ட சுத்தற பையனுங்களைக் கூட்டி வச்சிக்கினு பாட்டு பாடி... கத்தி, கூப்பாடு போட்டு... ச்சேய்...”
ரோட்டுக்கு வந்து விட்டிருந்தான். பஸ், லாரி சப்தங்களால் அதிர்வுற்றான். சத்தம் எப்போதுமே பொறுக்க முடியாததுதான். ஆலமர மைதானம்தான் ஒட்டிக்கிடந்தது மனசோடு. மரத்தை விட்டுவிட்டு, இவனை வேரோடு பிடுங்கி வந்து தெருவில் நட்டார்கள். துளுக்காமல், கொள்ளாமல் மரக்கட்டையாய் கணக்குக்கு நின்றுகொண்டிருந்தான் ஜப்பான் கிழவன்.
தோளில் தொங்கிய திட்டுத்திட்டாய் தீட்டுக்கரை போலப் படிந்திருந்த தோல்பையில் புதைந்திருந்த கண்ணிகளின் கனம் கனத்தது. கொஞ்சநேரம்... கொஞ்சமே கொஞ்ச நேரம் கண்ணிகளை அவிழ்த்து, சிக்கெடுத்து காட்டில் பரத்தி... இந்த நினைவுகள் மட்டுமே அவனை ஈரப்படுத்திக்கொண்டிருந்தன. சுத்தி, சுத்தி முகத்தில் நெருப்பள்ளிக் கொட்டின வாழ்வில் முகம் கருகி, நாக்கு வெளித்தள்ளி செத்துப்போயிருப்பான். இந்தக் காடுதான் காப்பாற்றியது.
ரோட்டிலிருந்து ஒத்தையடிப் பாதையில் இறங்கின கால்கள். தார் ரோட்டை மறுத்து மண்ரோட்டில் இறங்குகின்றபோதே ஜப்பான் கிழவன் காட்டோடு மல்லுக்குத் தயாராகின்றான். வெறி ஏறுகிறது ரத்தத்திற்கு... “மாட்டேன்... மாட்டேன்...” என்று கதறக் கதற... இவன் வெளியேறும்போது அதன் குழந்தைகுட்டிகளைக் குத்துயிரும், குலையுயிருமாக இழுத்துக்கொண்டுதான் போகிறான்.
நரைத்துத் துடிக்கும் காவியேறிய மீசையின் பக்கத்தில் வெற்றியின் சிரிப்பு வந்து மறைவதும் அந்த நேரத்தில் மட்டும்தான். மண்தரையில் பட்டவுடன் சனிமூலையில் கும்பிட்டான். வேலிக்காத்தான் முள் இடதுகால் பெருவிரல்பட்டுத் தைத்தது. அனாவசியமாகக் காலை மேல் தூக்கிப் பிடுங்கி எடுத்தான். ரத்தம் கசிந்தது. எச்சிலை மண்ணில் தொட்டு ரத்த வாயில் பூசினான்.
நடந்தான்... எப்போதும் செருப்பு போடறவங்களைப் பாத்தா எகத்தாளம்தான் கெழவனுக்கு. செருப்பு சத்தத்துல ஒரு மொசக்குட்டிக்கூட ஓடிடும். ஆலமர மைதானத்தில் மல்லாந்து கிடந்தபோது. எதுவுமற்று இருந்த மனசிருந்தது. ஒத்தையடிப் பாதையின் கடேசியாய் இவன்முன் சண்டையிட்டு நிற்கப் போகும் காடு பெரும் ஆரவாரமான காற்றோடு பயமுறுத்திக் கொண்டிருந்தது.
இருட்டிக் கொண்டிருந்தது. இவனுள் இவன் மட்டுமே இருந்த நாழிகை அது. எதுவுமற்று அம்மணமாய் இருந்தது மனசு. பார்த்தான். எதிரில் தன் ராட்சதச் சிறகை விரித்து இவனை அப்படியே அலகில் குத்திக் குதறித் தூக்கிப் போக, நின்று கொண்டிருக்கும் அந்தக் காட்டை. இந்தக் கணங்களில்தான் இவன் பயமற்றுப் போகிறான். அச்சங்கள் உதிர்த்து லேசாகிறான். காற்று மாதிரி உரிமையோடும், அந்நியமற்றும் காட்டுக்குள் நுழைகிறான். இருட்டிவிட்டிருந்தது.
குளிர்ந்த காற்று முகத்திலடித்தது. நிதானமாக மடியைப் பிரித்து புகையிலையை எடுத்து வாய்க்குள் அதக்கினான். இது அவன் உலகம். அவசரமற்ற உலகம். அவசரம் சீவனை உசுப்பி விடும். ஒரு நீண்ட இரவு அவனுக்கு மட்டுமே இந்தக் கானகத்தில் காத்திருக்கிறது. எதற்கு அவசரம்?
தாலியறுத்தான் பாறையில் ஏறினான். ஏறும்வழி பழகிவிட்டிருந்தது. அம்மாவாசைக்கு முந்தின ஐந்து நாட்களும் பிந்தின ஐந்து நாட்களும் வேட்டைக்கு உகந்தவை. வெளிச்சமற்ற இரவுகள் ஆள் வருவதை சீவன்களுக்கு உணர்த்தாது. வெளிச்சத்துக்கு எப்போதுமே டார்ச் லைட் கிடையாது. கண்கள்தான் சுற்றிலும் சாம்பல் பூத்து நடுவில் மணி மணியாய் ப்ரவுன் கலரில் மின்னுதே அதைவிடவா செல் அடைத்த டார்ச் லைட்?
போன வாரம் பெய்திருந்த மழைக்கு ஆப்பு சுலபமாகத் தரையிறங்கியது. மெல்ல கண்ணிகளை விடுவித்தான். நிதானம்.. நிதானம்... ஒவ்வொன்றாய் தரையில் நிற்கின்றன. இழுத்துக் கொண்டே நகர்கின்றான். இரும்புச் சங்கிலிகளின் அசைவுகள் கூட அவன் கட்டுப்பாட்டிலிருந்தது. செவடன்குளக் கிழக்குப் படிவரைக்கும் வந்தது கண்ணி.
ஏறி நிதானித்தான். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சை அடர்ந்த இருட்டு. அண்ணாந்தான். தூரத்தில் வெளிச்சமற்ற ஒன்றிரண்டு நட்சத்திரங்கள். மழை வரும்போலிருந்தது. வரட்டுமே. அதனாலென்ன? என்ன வேணுமானாலும் வரட்டும். கானகத்தின் தலை உச்சியில் நின்று அதையே வம்புக்கிழுப்பது போல ஒரு பார்வை பார்த்துத் தீர்மானித்தான்.
“சனி மூலைக்கும் செவடன் குளத்துக்கும் நடுவுல...”
என்னைக்கு தப்பியது அவன் கணக்கு? ஞாபகமாய் மடியில் வைத்திருந்த கற்பூரம் பற்ற வைத்து, சனிமூலையைப் பார்த்து மீண்டும் ஒரு கும்பிடு. கண்ணிக்கும் அவனுக்குமான உறவு சட்டென அறுந்து போனது மாதிரி ஒரு உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது. தற்காலிகம்தான். மண் முழுவதும் வெற்றுடம்பில் ஒட்ட குளக்கரையின் மேல் படுத்து கண்ணிமேல் கண்வைத்து நேர்பார்த்தான். எதுவும் தவறவில்லை. நடந்தான்.
இனி நடைதான். நடை மட்டும்தான். கிழக்கிலிருந்து தெற்காகக் கால்களைத் தள்ளிப்போட்டான். கால் எலும்புகளுக்கு உடும்பு வத்தல் வலுவேற்றியிருந்தது. தேய்ந்த பாதை வழிகாட்ட இரட்டைச் சலங்கை கட்டிய கம்பை ஊனியும், விசிறியும் நடந்தான். இரண்டு பக்கத்துப் புதர்களும் மரங்களும் அவனுக்கு அத்துப்படி.
காட்டில் சமீபமாக, குழிவெட்டிப் புளியங்கன்றுகள் நட்டிருந்தது கோபமூட்டியது அவனுக்கு. “வேலையத்த... வேலை...” என்று காவியேறிய மீசை துடித்தது. “ஆண்டவனுக்குத் தெரியாதா... இந்தக் காட்டு சீவன்களுக்கு என்ன என்ன மரம்?... என்ன என்ன தழைன்னு?... புளியங்கண்ணு வைக்கறானுங்க... புளியங்கண்ணு... மசுருல...” கோபத்தில் ஒரு மரக்கன்றைக் குழியிலிருந்து பிடுங்கினான். வரவில்லை.
வலுவாய் பூமியில் ஊனிவிட்டிருந்தன வேர்கள். ஆத்திரத்தோடு கைகளை விடுவித்து, கையிலிருந்த கம்பால் மேல் நுனியில் அறுத்தான். நுனிக்கிளை துளிரோடு வீழ்ந்தது. பாதி வெற்றியும், மீதித் தோல்வியுமாய் நடந்தான். நுணாத் தழையைக் கொத்தாய்ப் பறித்து முகர்ந்தான். காட்டுவாசம் மூளைக்கேறியது. சின்ன சின்ன டூம் லைட்டுகளாய் பழுத்திருந்த நுணாப் பழத்தைக் கொத்தாய்ப் பறித்து வாயில் போட்ட மறுநிமிஷமே துப்பினான். கொட்டைகளாய் வந்து விழுந்தன.
இன்று, நேற்றல்ல அம்பது அறுபது வருசமா நடக்கின்றான் இந்த திப்பக் காட்டுல. தெக்கால போயி மேக்கால திரும்பி மீண்டும் அவன் கண்ணிக்கு சமீபிக்கும்போது விடிந்துவிட வேண்டும். இது கணக்கு? இது தப்பக்கூடாது. கடவுளே இதில் தப்பு பண்ண முடியாது. சுத்தி, சுத்தி சேத்து வைக்கும் காசில் எருமைக்கடா வெட்டுவதெல்லாம் இந்தக் கணக்கு தப்பாமலிருக்கத்தான். அதைப்போய் வேண்டான்றானுங்க... புடிக்கலை... காட்டை வுட்ருன்றானுங்க முடியுமா? கடை வச்சி தராங்களாம் கடை...
தனித்த நடையில் பழைய நினைவுகள் வரிசையிட்டன. இப்படித்தான் சித்திரை மாத இருட்டு. எதிர்பார்க்காத மழை. திமிற முடியலை. திரும்பி ஓடி தாலியறுத்தான் பாறைக்கு கீழேயே குத்துக்காலிட்டு உட்கார்ந்தான். வெள்ளம் புரள மழை நின்றதும், பாறை மீதேறி நின்று பார்த்தான். எங்கும் இருள் அப்பிக் கிடந்தது. இவன் டார்ச் லைட் கண்கள் அடைந்து போயிருந்தது. எதன் மீதும் ஊடுருவமுடியாமல், தூறலினூடே நடந்தான். சில்லிப்பான விடியல், அவன் கண்ணிகளில் நாலைஞ்சு காட்டுப்பன்னி. நம்ப முடியாமல் கண்களை அழுத்தித் துடைத்து பார்த்தான். அந்த இடமே துவம்சமாகி இருந்தது. அரையடி, ஒருஅடிக்கு குழி விழுந்து கிடந்தது. பன்றிகளின் மூர்க்கத்தனம் குழிகளின் ஆழத்தில் தெரிந்தது. மர திம்மைக்குப் பின்புறம் மறைந்து நிதானித்தான். ஒண்ணும் வழியில்லை. திரும்பி ஊர்ந்தான். புதருக்குப் புதர் நிமிர்ந்து பார்த்தான். பன்னிகளின் உறுமல் கானகத்தை நடுங்கச் செய்து கொண்டிருந்தது.
துணையின் அவசியம் ஒரு நிமிடம் புரிந்தது. மறுநிமிடம் மனதால் நிராகரித்தான். ஒத்தையடிப் பாதை பிடித்து ஓடிக்கொண்டிருந்தான், மூச்சிரைத்தது. அப்பொதெல்லாம் நாலு சுவரற்ற ஆலமர மைதானம்தான். சத்தம் போட்டு பேரம் பேசி மதுரையோடு துப்பாக்கி சகிதம் ஓடலான நேரம், சூரியன் சுர்ரீரென உறைக்க ஆரம்பித்து விட்டிருந்தான்.
தூரத்திலிருந்தே அடையாளம் காட்டினபோது இரண்டு தப்பித்திருந்தது. அறுந்த கண்ணிகள் இவனைக் கலவரமூட்டியது. வெடிச்சத்தத்திற்கு மீதி இரண்டும் சாய்ந்தது. கூட்டமே கறி தின்று குடித்தது. வந்தவிலைக்கு கவுண்டர்களுக்கு வாரிக் கொடுத்தான். மல்லாட்டைக் கூடைக்கு ஒரு கூறு வாரி வைத்தான். அந்த மாதிரி நாட்களின் தெம்புதான் இந்த நடை.
மேற்கால திரும்பிவிட்டிருந்தான். கம்பின்மேல் எகிறி கொத்துகிறது. நல்லது இல்லை. விரியன்... நிதானித்தான். உடம்பெல்லாம் கண்ணாடி கண்ணாடியாய்... கண்ணாடி விரியன். நாலடி பின் நகர்ந்து ஓடிப்போய் நடுமுதுகில் எட்டி உதைத்தான். பொத்தென்ற சத்தத்தோடு புதரில் விழுந்தது கேட்டது. திரும்பிப் பார்த்து நடந்தான்.
சத்தம் போட்டு ஜீவன்களைத் துரத்தினான். எந்த அரவமும் இல்லை. சலங்கைக் கோல், காற்றில் விளையாடிக்கொண்டு வந்தது. புதரின் அசைவுக்கு நின்றான். மரம் மாதிரி நின்று, புதருக்குள் கண்களால் நுழைந்தான்.
அஞ்சாறு காட்டுப் பன்னிக்குட்டிகள். நேத்து ராத்திரி அல்லது இன்னிக்கு முன்னேரம். ரத்தப் பிசுபிசுப்பு கையிலெடுத்த குட்டியில் தெரிந்தது. சகிக்கமுடியாத சத்தம் போட்டுக்கொண்டேயிருந்தது. இவைகளைக்கூட வாரிக் கொண்டு போன நாட்கள் உண்டு. அது காசிம்மாவுக்குமுன். தாய்ப் பன்னியின் மூர்க்கத்திற்குப் பயந்து சட்டென சகல ஜாக்கிரதையோடும் நடந்தான்.
ரத்தப்போக்கை நிறுத்தமாட்டாமல், கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு தூக்கினுபோய், அந்த டாக்டர் முண்டைங்க அவளைத் தொட அருவறுப்படைந்து... ஜன்னி வந்து செத்து போனதுக்கு அப்புறம்... எதன் குட்டிகளையும், குஞ்சுகளையும் தொடறதில்லை காசிம்மாள் நினைவாக. கண்ணியைச் சமீபத்தபோது விடிந்து கொண்டிருந்தது. பரபரப்பு அடைந்து சுற்றிய கண்களுக்கு, வெறுமைதான் மிஞ்சியது. ஒண்ணுமேயில்லை. ஒரு புனுகுப்பூனைகூட இல்லை. நாலஞ்சு தடவை கண்ணியின் தூரத்திற்கு நடந்து பார்த்தான். எந்த ஜீவனின் காலடியும்கூடத் தெரியலை. வாழ்வின் முதல் தோல்வி. ஆடிப்போனான்.
கால்நீட்டி தரையில் உட்கார்ந்தான். பிருஷ்டத்தில் சுரீரென முள்குத்தியது. துடித்துப் பிடுங்கினான். காரமுள். மலைக்க மலைக்கப் பார்த்தான். காடு வெற்றிக்களிப்பில் காற்றில் கூத்தாடிக்கொண்டிருந்தது.
ஆப்பு பிடுங்கி கண்ணிகளை அவிழ்த்தான். அதன் மீதான தொடலே அருவறுப்பாய் இருந்தது. இதுவரை ஏமாற்றினதில்லை. ஒரு மொசக்குட்டியாவது மாட்டியிருக்கும். என்ன ஆச்சினே யோசிக்க முடியல.
எப்படி வெறுங்கையோட போவ? “இன்னா தாத்தா கொண்ணாந்தே...”ன்ற கேள்விக்கு என்ன பதில் சொல்வேன்?
ரத்தக்கறை படிந்த பையிலிருந்து சிறுங்கண்ணி வலையெடுத்தான். எப்போதும் பையில்தான் கிடக்கும். ராத்திரி முடிஞ்சு அப்படியே பகலுக்கும். இதை இதுவரை எடுத்ததில்லை. எப்பனா... பகல்ல... மைனா,காடை, கௌதாரி குஞ்சு புடிக்கத்தான். இந்த வெறுமை, இதை எடுக்க வெச்சிருச்சி... சிறுங்கண்ணிக்குப் பறவைகளை அழைத்து, அழைத்து சோர்ந்தான். முடிச்சிலிருந்த கேவுரும், கம்பும் கண்ணிக்கருகில் கேட்பாரற்றுக் கிடந்தன. காடை கத்தல், கௌதாரிக் கத்தல் எல்லாமும் அன்று எதன் காதுக்கும் கேட்காமல் போனது.
காடு, காற்றின் சத்தத்துக்கு வெறியாட்டம் போட்டு இவனை வெறிகொள்ள வைத்துக்கொண்டிருந்தது.
கண் இருட்டிக்கொண்டு வந்தது. செவடன்குளத்துத் தண்ணி எத்தனை வேளை பசியாற்றும். உடும்பு வத்தல் குழம்பும், சுடுகளியும் நேத்து சாயங்காலம் சாப்பிட்டது. வெய்யில் வேறு. சகல வித்தைகளும் பிரயோகிக்கப்பட்டு தோற்றுக் கொண்டிருந்தன. கண்ணியைச் சுருட்டக்கூட மனமின்றி நடந்தான்.
காட்டோடு அவனுக்கிருந்த பந்தம், பாசம், உரிமை எல்லாம் விடப்பட்ட மாதிரி இருந்தது. காவி மீசைக்கருகில் இருந்த புன்னகை செத்துத் தொங்கிக் கொண்டிருக்க, மண்ணுக் கோனார் பம்புசெட் வழியே ரோடேறினான்.
எட்டிப்போட்ட நடை தளர்ந்திருந்தது. யாராவது ஒரு டீத்தண்ணி வாங்கித்தர மாட்டார்களா... என்றிருந்தது. வெற்று பை தோளில் தொங்க, எதிர்ப்பட்ட பழக்கதாரர்களின் ““இன்னாடா இருக்கு...”“ என்ற கேள்விகளை முற்றாக நிராகரித்து கைவிரித்துக் காட்டிப் பேச மனமின்றி நடந்தான்.
அவன் தெரு அவனைப் பழித்துக் காட்டுவது மாதிரி நின்றுகொண்டிருந்தது. விளக்குகள் ஏற்றிவைத்துக் கொண்டிருந்தார்கள். வேதக்காரர்களின் மேடையில், ஒரே பாட்டும், சத்தமுமாய் இருந்தது. இவன் வீட்டைச் சமீபித்திருந்தான்.
மருமகக்காரியும், பேரனும் சாப்பாட்டைப் போட்டுக்கொண்டு தெருவுக்கு வந்துவிட்டிருந்தார்கள். தளர்ந்து போயிருந்தான். தூரத்திலிருந்த பாட்டு தெருவெங்கும் நிரம்பியிருந்தது. மெர்க்குரி வெளிச்சத்தில் ஆறேழு பெண்கள் பாடிக் கொண்டிருப்பது தெளிவாய்த் தெரிந்தது.
ஆத்துமமே என் முழு உள்ளமே - உன் 
ஆண்டவரைத் தொழுதேத்து - இந்நாள்வரை 
அன்புவைத்தா தரித்த உன் ஆண்டவரைத் 
தொழுதேத்து.
எப்போதும் இல்லாமல், இப்போது அவன் மனதில் கசிந்திறங்குகிறது பாட்டு. அடிபட்ட காயங்களுக்குத் தவிட்டு ஒத்தடம் தருகிறமாதிரி, வலியெல்லாம் கரைந்து போகிறது, சீவனைப் பற்றியிழுத்துக் கொண்டிருந்தது பாட்டு. இவன் வீட்டின்முன் நிற்காமல், தாண்டி, மேடையை நோக்கி போய்க் கொண்டேயிருந்தான். கண்ணிகள் இவன் பையில் பத்திரமாக இருந்தன.