Search This Blog

Sunday, September 27, 2015

ஜெய் ஆஞ்சநேயா..Lord Panchamukhi Hanuman Temple in PAKISTAN








Lord Panchamukhi Hanuman Temple in PAKISTAN

Karachi Panchmukhi Hanuman Mandir in Pakistan, 1500 years old Panchmukhi Hanuman Mandir located at Soldier Bazaar in Karachi is one of the oldest Hindu temples in Pakistan. The temple holds special significance for Hindus as it is the only shrine in the world which has a “natural statue” of Hanuman that is not man-made.

The blue and white 8 feet statue was found many centuries ago at the place where the temple now stands; it bears all five aspects of Hanuman : Narasimha, Adivaraha, Hayagriva, Hanuman and Garuda.It is believed that such naturally-formed idols of deities possess exceptional power and appear to bless worshipers.
Upon entering the temple, one is struck by the intricately carved yellow stone structure in the middle of the temple premises. This temple’s renovation work has started in 2012 and to preserve the look of the temple, its original yellow stones are being used to rebuild the arched walls.
The small front porch has pillars of carved yellow stone on either side with a black and white marble floor, a wide passage for clockwise circumambulation (parikrama / pradakshina) runs around it.It is believed that completion of 108 rounds around the chambers, cleanses all pain, evil and adversity, making this temple a citadel of healing for all castes and creed. India.Multiple communities like Maharashtrians, Sindhis, Balochis visit this temple.
Jai Sriram
Jai Sri Hanuman

ராஜா விஜய் சிங்..


ஒருமுறை ராஜா விஜய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்ற
பொழுது.சாதரணமாக இங்கிலாந்து தெருவில் நடந்து போய் கொண்டு இருந்தார்.
அப்போது அவர் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோரூமை பார்த்தார். அங்கே சென்று கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்தார்.
அப்பொழுது ஷோ ரூம் ஊழியர்கள் இவர் மன்னர் என்பதை அறியாமல் ஒரு ஏழை இந்திய குடிமகன் என எண்ணி அவரை அடித்து விரட்டினர்.
இதை கண்ட ராஜா தனது ஓட்டல் அறைக்கு சென்று விட்டார்.
பிறகு சில மணி நேரம் கழித்து முழு வியத்தகு தனது ''அரச உடையில்'' மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம் அடைந்தார் .
ஷோரூம் ஊழியர்கள் அவருக்கு முழு ராஜ உபசாரம் செய்தனர்.
சிவப்பு கம்பள வரவேற்பும் அளித்தனர்.
ராஜா 6 ரோல்ஸ் ராய்ஸ்கார்களை முழுதொகையும் செலுத்தி வாங்கினார்.
இந்தியா அடைந்த பிறகு, நகரின் கழிவுகளை சுத்தம் செய்ய இந்த கார்களை பயன்படுத்துமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டார். .
உலகின் நம்பர் ஒன் ரோல்ஸ் ராய்ஸ்கார்கள் நகரத்தின் கழிவு
போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும், செய்தி விரைவில் உலகம் முழுவதும் பரவி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின்
நற்பெயர் நாறிப்போனது.
யாரவது ஐரோப்பா அல்லதுஅமெரிக்காவில் நான் ரோல்ஸ் ராய்
கார் வைத்துள்ளேன் என்று பெருமை பீத்திகொண்டால்.
இது இந்தியாவில் குப்பை அல்ல பயன்படுகிறது என்று மக்கள் ஏளனம் செய்யும் நிலைமைக்கு ஆளானது.
இதன் காரணமாக நிறுவனத்தின் மதிப்புகெட்டு அதன் விற்பனை
சரிய தொடங்கியது.
ரோல்ஸ் ராய்ஸ்நிறுவன தலைவர் உடனடியாக ராஜ விஜய் சிங்கிற்கு ஒரு அவசர தந்தி அனுப்பினார் அதில் தாங்கள் உடனடியாக எங்கள் கார்களை குப்பை அள்ள பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
அதற்கு பதிலாக நாங்கள் உங்களுக்கு மேலும் 6 கார்களை இலவசமாக தருகிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதற்கு ராஜா விஜய் சிங் எனக்கு உங்கள் கார்கள் மேல் வெறுப்பு
இல்லை
உங்கள் ஊழியர்கள் என் நாட்டவரை ''குப்பை போல் வெளிய
வீசினர்''... அதற்கு பதில்தான் நான் உங்கள் கார்களை குப்பை அள்ளுவதர்க்கு உபயோகித்தேன்.
முதலில் மக்களை மதியுங்கள்...! என்று பதில் அனுப்பினார்.
வெள்ளைக்காரனை செவிட்டில் அறைந்த ''ராஜ விஜய்சிங்கின்'' ''சுய மரியாதை''யை நாமும் பாராட்டலாமே நண்பா...!

பண்டைய கால தமிழர்களின் கருவி "வளரி"( boomerang )


வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர்.
அமைப்பு
ஆஸ்திரேலிய ஆதிவாசிகளினால் பாவிக்கப்பட்ட பூமராங்
இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும்.
ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு. கால்களுக்குக் குறிவைத்து சுழற்றி, விசிறி, வீசி விட வேண்டும். சிலவற்றை இரும்பிலும்கூட செய்வார்கள். பட்டையான கூரான வளரியை வீசினால் சுழன்று கொண்டே சென்று, வெட்டுப்படக்கூடிய இலக்காக இருந்தால் சீவித்தள்ளி விடும்.
எறியப்படும் முறைகள்
வளரிகள் குறிவைத்து எறிவதற்குப் பல முறைகள் உண்டு. பொதுவாக சுழற்றப்பட்டே எறியப்படும். இப்படி எறியப்படும்போது இது செங்குத்தாக அல்லது கிடையாக சுழலும். அல்லது சுழலாமலே செல்லக்கூடும். அதன் சுழற்சி வேகத்திலும் தங்கியுள்ளது. உயிராபத்தை விளைவிப்பதற்கு வளரியானது ஒருவனின் கழுத்தைக் குறிவைத்து எறியப்படும். பொதுவாக கால்களையே தாக்குவதற்கு எறியப்படும்.
வளரி மான் வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில்கள்ளர் நாடு, சிவகெங்கை, மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பாவிக்கப்பட்டிருக்கின்றது.வளரி எறிதல் போட்டிகளும் நடைபெற்றிருக்கின்றன. சிவகெங்கையில் ஆட்சியிலிருந்த மருது சகோதரர்கள், மற்றும் அவர்களது படைத்தளபதிகளான வைத்திலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியையே ஆயுதமாகப் பாவித்து ஆங்கிலேயர்களுடன்சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் வளரி
“வைகை அணைக்கட்டுக்கு அருகிலுள்ள கூடலூர்ப் பகுதியில் ஆனிரை கவரும் கள்வர், எயினர் (மறவர்) போன்ற குலத்தவர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்க இலக்கியமாகிய புறநானூறு 347ஆம் பாடலில் மணம் நாறு மார்பின் மறப்போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல் என்ற ஒரு குறிப்பு உள்ளது. அகுதை என்ற குறுநிலத் தலைவன் ஒருவன் பொன்புனை திகிரி (உலோகத்தாலான சக்ராயுதம்) என்ற ஆயுதத்தைக் கண நேரத்துக்குள், கண்டது உண்மையோ பொய்யோ என்று மருளும் வண்ணம், கண் பார்வைக்குத் தோன்றி மறைந்து விடக்கூடிய வகையில் விரைந்து செலுத்தவல்ல ஒரு வீரன் என்று புறநானூறு 233-ஆம் பாடலில் (அகுதைக் கண் தோன்றிய பொன்புனை திகிரியிற் பொய்யாகியரோ) கூறப்பட்டுள்ளது. மறவர்களின் முதன்மையான போர்க்கருவி என்று இலக்கியங்களும் பிற குறிப்புகளும் தெரிவிக்கின்ற வளைதடி (வளரி)யே திகிரி என்று இப்பாடலில் குறிப்பிடப்படுகிறது.

நன்றி‘
ஜெய்வந்த் செலவகுமார்