Search This Blog

Monday, September 21, 2015

ஐ.நா அறிக்கை


ஐ.நர் மனித உரிமை ஆணையாளரின் காரியாலத்தினால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை ஆணையாளர் கூறியது போல் கடந்த 16ந் திகதி வெளியாகியிருந்தது.
இவ்வறிக்கையின் குறியீட்டு இலக்கம் A/HRC/30/CRP.2 என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வறி;க்கை 261 பக்கங்கள் கொண்ட அதேவேளை 1281 முக்கிய பத்திகளையும ;மூன்று முக்கிய அத்தியாயங்களையும் கொண்டுள்ளது.
முதலாவது அத்தியாயத்தில் முன் அரை: இவ் விசாரணை பற்றிய ஆரம்பம், காரணங்கள் ஸ்ரீலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய ஓரு கண்ணோட்டம், அத்துடன் மற்றைய குழுக்கள் பற்றியும் சட்ட நுணுக்கங்களும ;குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது அத்தியாயத்தில் கொலை, காணாமல் போதல், சித்திரவதை, பாலியல் வன்முறை, ஆட்கடத்தல், சிறுபிள்ளைகளை இராணுவத்தில் இணைத்தல், இடப்பெயர்வு அத்துடன் மக்களுக்கு நிராகரிக்கப்பட்ட உணவு, நீர், மருத்துவம் போன்ற நிவாரண பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளமை பற்றியும் இடம்பெயர்ந்தோர் அனுபவித்த கஷ்ங்கள் போன்று பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவது அத்தியாயத்தில் இவ் விசாரணையின் போது கண்ட பரிகாரம் சட்ட நடவடிக்கைகள் பரிந்துரைகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.
இங்கு கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை ஆறு பிரிவுகளாக உள்ளடக்கப்பட்டுள்ளது. பொதுவானவை: நிறுவன நடைமுறைகள் அல்லது மாற்றங்கள் நீதி, உண்மை,உரிமை நஷ்டஈடுகள் ஆகியவற்றுடன் ஆறாவதாக ஐநா அங்கத்துவ நாடுகளிற்கு பல முக்கிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
இவற்றுள் நாடுகளிற்கான பரிந்துரைகள் மிகவும் முக்கியமானவையாகக் காணப்படுகின்றது. எம்மைப் பொறுத்தவரையில் இவ்வறிக்கை தமிழ் மக்களின் ஆயதப் போராட்ட காலத்தின் முக்கிய ஐ.நா. அங்கீகாரம் கொண்ட ஓர் ஆவணமாக காணப்படுகின்றது.
இவ்வறிக்கை பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களை திருப்திப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இவ்வறிக்கையை ஒழுங்காக வாசித்து புரிந்து கொள்ளாதவர்கள் இவ்வறிக்கையின் கனதியை அதாவது உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள மாட்டார்கள் என்தை நாம் அறிவோம்.
இவ்வறிக்கை தமிழ் மக்களுக்கு நடைபெற்றவை யாவும் ஓர் இன அழிப்பு என்பதைக் கூறாமல் கூறுகின்றது.
இவ்வறிக்கை நிச்சயம் காலப்போக்கில் ஓரு சர்வதேச விசாரணைக்கு வழிவகுக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
ஆணையாளர் ஸ்ரீலங்கா விஜயம்
கடந்த வியாழக்கிழமை ஐ.நாஆணையார் காரியாலயத்தில் சிவில் கழகத்திற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் பல கேள்விகளுக்கு பதில் கூறிய ஐ.நா. உத்தியோகத்தர் கூடிய விரைவில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ஹூசெய்ன் அவர்கள் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்ய எண்ணியுள்ளதாகக் கூறியதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐ.நாவின் காணாமல் போனோருக்கான குழு ஸ்ரீலங்காவிற்கு செல்லவுள்ளதாகவும் கூறினார்.

புதையுண்ட தமிழகம்: தமிழக அகழாய்வுகள் காட்டும் பண்டைய தமிழர் சமூகம்













Excavations at the Palaeolithic Site of Attirampakkam, South India
1.5 Million-year-old tools found near Chennai (South India)
Gudiyam Cave

மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துவிட்டன. அவனின் பரிணாம வளர்ச்சி அளவிடற்கரியது. நனி நாகரிகம் சிறந்த வாழ்வை வெளிப்படுத்தியவர்களாகத் தமிழர்கள் திகழ்கிறார்கள். அவர்களது இத்தகைய அபரிமிதமான முன்னேற்றத்துக்கு யார் காரணம்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் எனப் பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன. தமிழர்களைப் பற்றி இலக்கியங்கள் கூறும்பொழுது, ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி’ என்று குறிப்பிடுகின்றன. அத்தகைய மூத்தகுடி, இந்தியாவில் முதன்முதலில் எந்தப் பகுதியில் தோன்றியது? அதன் உண்மை வரலாறு என்ன? போன்ற கேள்விகளுக்கு அகழாய்வுச் சான்றுகளின் முடிவுகளுடன், வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் வல்லுநர்களும் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்றால், தமிழகத்தின் தொன்மைவாய்ந்த பகுதிகளை அகழாய்வு செய்து அதன்மூலம் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் கூறப்பட்டால், அவை வரலாற்றுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்பார் கே.கே.பிள்ளை அவர்கள். அது முற்றிலும் உண்மைதான். வரலாற்று நிகழ்வுகள் மீது அவரவர்க்குத் தோன்றியதுபோல் தங்களது சொந்தக் கருத்தைக் கூறாமல், அகழாய்வில் கிடைத்த தொல்லியல் சான்றுகளைக் கொண்டு உறுதிபடக் கூற வேண்டும்.
தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளைக் கவனத்தில் கொண்டும், தமிழகத் தொல்லியல் துறையின் மூலம் நடைபெற்ற அகழாய்வுகளில் பெரும்பகுதி பங்கேற்று ஆய்வு செய்தவன் என்ற வகையிலும், இவ்வகையில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் சான்றுகளை முறைப்படுத்தியும், காலவரிசையாக வரலாற்றை காண்பதே ‘தமிழக அகழாய்வுகள் காட்டும் பண்டைய தமிழர் சமூகம்’ என்னும் இப்பகுதி. (இப்பகுதியில், உரிய இடத்தில் நிழற்படங்கள் இணைத்துத் தெளிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது).
மனிதன் தோன்றிய காலம் முதலாக அவன் பெற்ற பரிணாம வளர்ச்சிகளையும், அவன் ஆரம்பக் காலத்தில் முதன்முதலாகப் பயன்படுத்திய கல் அயுதங்கள் அவனால் தயாரிக்கப்பட்டன என்பதையும், அவன் அவற்றை எவ்வாறு தயாரித்தான், எப்படிப் பயன்படுத்தினான் என்பதிலும் தொடங்கி, அவன் வளர்ந்த விதமும், அவன் கண்டறிந்த பல அறிய கல் ஆயுதங்களின் படைப்புகளைக் குறித்தும் தகுந்த சான்றுகளுடன் இனி காண்போம்.
இத்தொடர், ஆதிகால மக்களின் வாழ்க்கை முறையில் தொடங்கி, அவன் புதிய பரிமாணத்தைப் பெற்று புதிய கற்கால மக்களாக வலம் வந்து, விவசாயத்தையும், உணவுப் பொருட்களை சேமித்தலையும் கற்ற விதம் குறித்தும், மனிதன் கூட்டமாக வாழ்ந்தமையும், கூட்டங்கள் குழுக்கலாக மாறியதும், பின்னர் அவை அரசு உருவகம் பெற்றமையும், தொடர்ந்து சங்க காலத்தின் துவக்கம் அமைந்து தமிழக வரலாற்றுக் காலம் தொடங்குவது வரையும் காணலாம்.
முதன்முதலின், கொற்றலை ஆற்றுப் படுக்கையில் வாழ்ந்த தமிழர் தம் வாழ்க்கையிலிருந்து தொடங்கலாம்.
கொற்றலை ஆறும் தமிழர் வாழ்வும் – பகுதி 1
கொற்றலை ஆறு
இந்தியத் தொல்லியல் வரலாற்றில் சிறப்புமிக்க ஓர் தனியிடத்தைப் பெற்றுள்ள பகுதிதான் கொற்றலை ஆறு. கொற்றலை ஆறு, சென்னைக்கு அருகாமையில் ஓடுகிறது. (இதை குஸஸ்தலை ஆறு என்றும் சொல்வார்கள்). இன்றைய வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைக்கு அருகில் பாலாற்றில் இருந்து கிளை பிரிந்து செல்லும் ஒரு நதியே கொற்றலையாக உருமாறி அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி வழியாகச் சென்று எண்ணூருக்கு அருகில் கடலில் கலக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டிக்கு அருகாமையில்தான் தொல் மனிதர்கள் வாழ்ந்த பழமைவாய்ந்த பகுதிகள் அமைந்துள்ளன என்பதை மனத்தில் கொள்ளலாம்.
கற்காலம்
‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவரின்*1 வாய்மொழிக்கு ஏற்ப, மக்கள் நீர்நிலைகளை அடுத்தே தங்களது வாழ்விடங்களை அமைத்துக்கொண்டனர். அங்கு வரும் விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்தனர். காடுகளில் அலைந்து அங்கு காணப்பட்ட காய், கனிகள், கிழங்குகள் ஆகியவற்றைக் கொண்டுவந்து உணவாக உட்கொண்டனர். இந்தக் காலகட்டத்தில், இவர்களது பாதுகாப்புக்காகக் கருவிகள் தேவைப்பட்டன. அதன் அடிப்படையில் உருவானவைதான் கற்கருவிகள்.
வலிமையான கற்களைக் கொண்டு தாமே கற்கருவிகளைத் தயாரிக்க முற்பட்டனர். எளிதில் கிடைக்கக்கூடிய மரம், செடிகளைவிட, அருகாமையில் காணப்பட்ட இயற்கையான, உருண்டையான கற்கள், பயனுள்ளவை, வலிமையானவை என்பதை உணர்ந்து, அவ்வகைக் கற்களைக் கொண்டு, தமது தேவைக்கேற்ப கருவிகளைத் தயாரிக்க முற்பட்டனர். கருவிகள் செய்ய அதிக அளவில் கற்களைப் பயன்படுத்தியதால், அக்காலத்தைக் ‘கற்காலம்’ என்று குறிப்பர்.
பழைய கற்காலம்
கற்கருவிகளின் தொழில்நுட்ப அடிப்படையிலும், மண்ணடுக்குகளின் அடிப்படையிலும், பழைய கற்காலத்தை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை - முதல் பழைய கற்காலம் (Lower Palaeolithic Age), இடைப் பழைய கற்காலம் (Middle Palaeolithic Age), கடைப் பழைய கற்காலம் (Upper Palaeolithic Age) என்பவை.*2
இந்தியாவில் பழைய கற்காலம் குறித்த ஆய்வுகள்
இந்தியத் தொல்லியல் ஆய்வில், இந்தியாவிலேயே சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில்தான், முதல்முதலாகப் பழைய கற்காலக் கருவியை, 1863-ம் ஆண்டு மே மாதத்தில், இந்தியத் தொல்பழங்காலத்தின் தந்தை எனப் போற்றப்படும் சர். இராபர்ட் புரூஸ் புட் (இவரைப் பற்றி தனி கட்டுரையாகப் பிறகு பார்க்கலாம்) கண்டறிந்து உலகுக்கு அறிவித்தார்*3. இதனைத் தொடர்ந்து, அவரும் அவரது அலுவலர் வில்லியம் கிங் என்பவரும் சேர்ந்து, கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்கில் தீவிரமான கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அத்திரம்பாக்கத்தில் அதிக அளவு கற்கருவிகளையும், குடியம் என்ற ஊருக்கு அருகில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த குகைகளையும் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்தனர்.
கொற்றலை ஆற்றுப் பகுதியில்தான், உலகத்தின் தொன்மையான வாழ்விடம் அமைந்துள்ளது என்பது வரலாற்று உலகுக்குச் சிறப்பு சேர்க்கும் செய்தி ஆகும். இராபர்ட் புரூஸ் புட், இந்தியாவில் தனது ஆய்வை மேற்கொண்ட பிறகு, ஆய்வாளர்கள் கோஜின் பிரௌன் (Coggin Brown - 1917), காக்பர்ன் (Cock Burn - 1888) மற்றும் அய்யப்பன் (1942) ஆகியோர், ராஜ்புத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒரிஸா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பழைய கற்காலத் தடயங்கள் உள்ள பல இடங்களைக் கண்டறிந்து, ஆய்வு மேற்கொண்டனர்*4.
இராபர்ட் புரூஸ் புட் அவர்களின் மறைவுக்குப்பின் (1912), இந்த ஆய்வில் தொய்வு ஏற்பட்டு, பிறகு 1930-ல் மீண்டும் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது எனலாம். காமியாட், பர்கிட், வி.டி.கிருஷ்ணசாமி, டி.டி.பேட்டர்ஸன் மற்றும் கே.வி.சௌந்திரராஜன் போன்ற அறிஞர்கள், மீண்டும் இப்பகுதிகளை ஆய்வுசெய்து, பல அறிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இவற்றில் குறிப்பிடத்தக்கது, கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்கில் நான்கு படிவுப் படுக்கைகள் (Four Fold Terrace System) உள்ளன என்றும், வடமதுரையில் கூழாங்கற்திரளை அடுக்கின் பகுதி (Boulder Conglomerate Horizon) ஒன்று காணப்படுகிறது என்றும் தெரியவந்தது. மேலும், இப்பகுதியில் இரண்டு வகை மண்பரப்புகளை அடையாளம் கண்டு வெளிப்படுத்தினர். அவை - இப்பகுதியில் சிறப்பாகக் காணப்படும் செம்மண் படிவங்களின் பரப்பு (Latrite Formation), மற்றும் பிளைஸ்டோசின் கால சிதைந்த செம்மண் படிவப் பரப்பு என்பன ஆகும். இப்பகுதியில் காணப்படும் பழைய கற்காலப் பண்பாட்டை, ‘சென்னைக் கைக் கோடாரி தொழிற்கூடம்’ (Madras Hand Axe Industry) என்று குறிப்பிட்டனர்*5.
கொற்றலை ஆற்றுப் பகுதியில் காணப்படும் படிவுப் பகுதியில், முதல் இரண்டு படிவுப் படுக்கைகள், வடமதுரை, அத்திரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளன என்கிறார் வி.டி.கிருஷ்ணசாமி (1947). ஏனெனில், வடமதுரையில் காணப்படும் கற்கருவிகள் மிகவும் பழமையானவை. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகளில் அச்சூலியன் தொழில்நுட்பம் சற்று முரண்பட்டதாகக் காணப்படுகிறது. ஆனால், குடியம் மற்றும் பூண்டி சுற்றுப்பகுதிகளில், அச்சூலியன் பண்பாடே அதிக அளவில் விரவிக் காணக் கிடக்கின்றன என குறிப்பிட்டு, தனது நான்கு படிவப் படுக்கைகள் பற்றித் தெளிவுபடுத்துகிறார்*6.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும், முதல் பழைய கற்காலக் கைக் கோடாரிகள் கிடைத்துள்ளன. கர்நாடக மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களிலும், தமிழகத்தில் தென்மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களிலும், அதிக அளவில் கரடுமுரடான கற்கருவிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மேலும், சுரண்டிகள், மூலக்கற்களான கூழாங்கற்களும் இங்கு காணப்பட்டன*7. அத்திரம்பாக்கம் பகுதியில்தான், சிறிய வடிவில் நன்கு முழுமை பெற்ற அழகிய வடிவமைப்புடன் கூடிய, பழைய கற்கால கைக் கோடாரிகள் கிடைத்துள்ளன. வேட்டையாடும் தொழிலையும், மீன்பிடித்தல் தொழிலையும் மேற்கொண்டிருந்த இவர்களிடம், கலைநயம்மிக்க அறிவும் காணப்பட்டதை இக் கைக் கோடாரிகள் மூலம் உணரமுடிகிறது*8.
பழைய கற்காலக் கற்கருவிகள், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பரவலாகக் கிடைத்துள்ளன. அவற்றை, மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அவை -
1. குகைத் தலங்களில் காணப்படும் கற்கருவிகள்
2. தரைத்தளத்தில் கிடைத்த கற்கருவிகள்
3. ஆற்றுப்படுகைகளில் காணப்படுபவை*9
தமிழகத்தில் குகைப் பகுதிகளில் காணப்படும் கைக் கோடாரிகள் என, குடியம் பகுதியில் காணப்படுபவற்றைக் குறிப்பிடலாம். தரைப்பகுதியில் காணப்படுபவற்றை, தொழில்பட்டறை வகையில், குறிப்பாக வறட்டனப்பள்ளியைக் (இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம்) குறிப்பிடலாம். ஆற்றுப்படுகையில் காணப்படுபவையாக, அத்திரம்பாக்கம், பரிகுளம் (இன்றைய திருவள்ளூர் மாவட்டம்) போன்றவற்றையும் கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன.
இடைப் பழைய கற்கால மக்கள் பயன்படுத்திய மூலக்கற்கள், படிகக் கல் வகை (Quartz), செர்ட் (Chert), அகேட் (Agate) (மணி வகை ரத்தினங்களில் ஒன்று), ஜாஸ்பர் (Jasper) (பழுப்பு நிற மணிக் கல் வகை) மற்றும் சால்சிடோனி (Chalcedony) (வெண்ணிற மணிக் கல் வகை). இதுவும் படிகக் கல் வகையைச் சார்ந்ததுதான். இவற்றில், செர்ட் வகைக் கற்களே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன*10.
இந்தியாவில் இரண்டுவிதமான தொழிற்பட்டறைகள் இருந்தன என ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளனர்*11. அவை, தென்னிந்தியாவில் சென்னைத் தொழிற்கூடம் (Madras Hand Axe Industry). அடுத்து, வடஇந்தியாவில் சோகன் தொழிற்கூடம் (Sohan Hand Axe Industry).
சென்னைத் தொழிற்கூடம்
ஒரே வகையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் காணப்படும் கற்கருவிகளின் தொகுதியை, அப்பகுதி சார்ந்த தொழில் மரபாகக் கருதினர். அவ்வாறு, இந்தியாவில் காணப்படும் கற்கருவிகளின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில், பழைய கற்காலத்தை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.
தமிழகத்தில், சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொற்றலை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் கிடைக்கும் கற்கருவிகளை ‘சென்னை மரபு சார்ந்தது’ என்று பகுத்தனர்*12. சென்னைப் பகுதியின் மேற்பரப்பாய்விலும் அகழாய்விலும், அதிக அளவு கைக் கோடாரிகளே காணப்பட்டன. எனவே, இதனைக் குறிப்பாக, ‘சென்னைக் கைக் கோடாரி பண்பாடு’ (Madras Hand Axe Culture) எனக் குறித்தனர்.
இக்கற்கருவிகள் பெரும்பாலும், படிகக் கல்லில் இருந்து (Quartzite) செய்யப்பட்டவை. படிகக் கல்லில் இருந்து சில்லுகளைப் பெயர்த்து எடுப்பது எளிமையானது. எனவே, இக்கற்களை அதிகம் பயன்படுத்தியதால், இப்பகுதியில் வாழ்ந்த பழைய கற்கால மக்களை, ‘படிகக் கல் மனிதர்கள்’ (Quartze Men) என்றும் அழைக்கலாம் என்பர். இங்கு காணப்படும் பழைய கற்காலக் கற்கருவிகள், இரண்டு பக்கமும் (Bifacial) சில்லுகள் பெயர்த்த நிலையில் அமைந்துள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலேதான், இங்கு கிடைக்கும் பழைய கற்காலக் கருவிகளை, சென்னைத் தொழிற்கூடத்தைச் சார்ந்தவை எனப் பிரித்தனர். சென்னைத் தொழிற்கூடத்தில் காணப்படும் கற்கருவிகள், ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்கா போன்ற இடங்களில் காணப்படும் கற்கருவிகளைப் போன்று அமைந்துள்ளன*13.
சோகன் தொழிற்கூடம்
சோகன், சிந்து நதியின் ஒரு கிளை நதி ஆகும். இங்கு இரண்டுவிதமான மரபுகள் பின்பற்றப்பட்டதாக, எச்.டி.சங்காலியா தெரிவிக்கிறார். கூழாங்கற்களைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கைக் கோடாரிகள் இங்கு அதிக அளவில் கிடைத்துள்ளன. இயற்கையாகக் கிடைக்கும் கூழாங்கற்கள் மற்றும் அவற்றின் சில்லுகள் பெயர்த்த கற்கருவிகளும் இங்கு கிடைத்துள்ளன. எனவே, சோகன் தொழிற்கூடத்தில் இரண்டு வகையான பண்பாடு காணமுடிகிறது. ஒன்று, கூழாங்கற் கருவி. இன்னொன்று, சில்லுகள் பெயர்த்த கற்கருவி. இந்த இரண்டு வகைக் கற்கருவிகளும் மண்ணடுக்குகளிலேயே கிடைத்துள்ளன என ஆய்வாளர்கள் குறித்துள்ளனர்.
இங்கு காணப்படும் பழைய கற்காலக் கற்கருவிகளில், ஒருமுகமாக (Unifacial) சில்லுகளைப் பெயர்த்தெடுத்த நிலையைக் காணமுடிகிறது. இந்த வகைத் தொழில்நுட்பத்தைக் கொண்டு, சோகன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் காணப்பட்ட கற்கருவிகளை சோகன் தொழிற்கூடத்தைச் சார்ந்தவை எனப் பிரித்தனர். சோகன் ஆற்றங்கரைப் படிமங்களில், அதிக அளவில் பழைய கற்கால கைக் கோடாரிகள் காணப்பட்டதால், இதை ‘சோகன் பண்பாடு’ என, டி டெரா மற்றும் பேட்டர்ஸன் (De Terra & Patterson) அழைத்தனர்*14.
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள்
பழைய கற்காலம் குறித்த அகழாய்வுகள், தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கொற்றலை ஆற்றுப் பகுதியான பூண்டியைச் சுற்றியுள்ள இடங்களில்தான் அதிக அளவில் நடைபெற்றுள்ளன. பூண்டி, குடியம், நெய்வேலி, வடமதுரை, அத்திரம்பாக்கம், பரிக்குளம் போன்றவை பிற இடங்களாகும். இந்திய அரசு தொல்லியல் துறையின் கே.டி.பானர்ஜி - நெய்வேலி (1962-67), குடியம் (1962-64), பூண்டி (1965-68), வடமதுரை (1966-67), அத்திரம்பாக்கம் (1963-71); சாந்தி பப்பு (1999-2006) - சர்மா மரபியல் ஆய்வு மையம், சென்னை மற்றும் தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை (2006) சார்பில் பல்வேறு காலகட்டங்களில், தமிழகத்தில் பழைய கற்கால அகழாய்வுகள் நடத்தப்பட்டு பல புதிய தகவல்கள் வெளிக்கொணரப்பட்டன.
தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையின் ஓய்வுபெற்ற மண்ட உதவி இயக்குநர் து.துளசிராமன் அவர்கள், தமிழகப் பழைய கற்காலக் கற்கருவிகள் மற்றும் தொல்பழங்கால இடங்களான குடியம், அத்திரம்பாக்கம் பகுதிகளில் தீவிரமான கள ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 107 இடங்களில் பழைய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளதையும் அவர் குறித்துள்ளார். இவரது கள ஆய்வுத் தகவலின்படி, பரிக்குளம் என்ற இடத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுப் பணியை மேற்கொண்டது. இப்பணியில், து.துளசிராமன் அவர்களும் நானும், துறையின் தொல்லியல் ஆய்வாளர்களும் இணைந்து ஈடுபட்டோம். இந்த அகழாய்வின் முடிவில், இப்பகுதியில் இங்கு பழைய கற்காலக் கற்கருவிகள் தயாரிக்கும் தொழிற்பட்டறை இயங்கிவந்தது கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
அகழாய்வுகள் ஒரு பார்வை -
பூண்டி
கே.டி.பானர்ஜி தலைமையில், இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை, 1965-66-ம் ஆண்டு அகழாய்வை மேற்கொண்டது*15. இங்கு, ஏழு வகை மண் அடுக்குகள் வெளிக் கொணரப்பட்டன. இடைப் பழைய கற்காலத்தின் பிந்தைய காலத்தின் அசூலியன் வகைக் கற்கருவிகள் இங்கு கிடைத்துள்ளன*16.
நெய்வேலி
திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டிக்கு அருகில் உள்ள ஊர். இங்கு, 1962-63-ல் கே.டி.பானர்ஜி தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, 1963-64-ம் ஆண்டுகளிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு பல கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. கைக் கோடாரி, வெட்டுக் கருவிகள், கூர்முனைக் கருவிகள் போன்ற, இடைப்பட்ட பழைய கற்காலக் கருவிகளும் கிடைத்தன. இங்கு, நீண்ட கத்தி போன்ற அமைப்புடைய அச்சூலியன் தொழில்நுட்பத்தைச் சார்ந்த கற்கருவிகளும் கிடைத்துள்ளன*17.
குடியம்
திருவள்ளூர் மாவட்டம், பூண்டியை அடுத்து, குடியம் எனும் பழங் கற்கால மக்கள் வாழ்விடமான, இயற்கையான குகைத்தலத்துடன் கூடிய ஊர்ப்பகுதி அமைந்துள்ளது. இக்குடியம் குகைத்தலம், கூனிபாளையம், பிளேஸ்பாளையம் ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இவை, பூண்டியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றன. இங்கு மொத்தம் 16 குகைகள் உள்ளன. இக்குடியம் குகையின் உட்பகுதியில், ஒரு அகழ்வுக் குழியும், வெளியில் இரண்டு அகழ்வுக் குழிகளும் இடப்பட்டன*18.
இவ்வாய்வில், இரண்டு வகையான கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன. குழியின் அடிப்பகுதியில், அச்சூலியன் வகையைச் சார்ந்த கற்கருவிகளும்; மேல்பகுதியில், இடைக்கால அச்சூலியன் வகையைச் சார்ந்த கற்கருவிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. அச்சூலியன் வகைக் கற்கருவியில் இருந்து, நுண் கற்காலக் கருவிகளின் வளர்ச்சி நிலைகள் வரை தொடர்ச்சியாக இடைவெளியின்றி இங்கு காணப்படுகின்றன. இங்குள்ள மண்ணடுக்குகளும், முறையான வளர்ச்சி நிலையையே காட்டுகின்றன.
இங்கு கிடைத்த கைக் கோடாரி, கிழிப்பான்கள் (Cleaver), சுரண்டிகள் (Scrapper), வெட்டுக்கத்திகள் (Blade) போன்ற கற்கருவிகள் குறிப்பிடத்தக்கவை. இக் கற்கருவிகளில், அதிக அளவில் சில்லுகள் பெயர்த்த நிலையைக் காண முடிகிறது. இவையே பின்னர், நுண் கற்கருவிகள் தொழிற்கூடத்துக்கு வழிவகுக்கக் காரணமாக அமைந்துள்ளதை இதன்மூலம் அறியமுடிகிறது. குகைகளில் வாழ்வதைவிட வெளியிலேயே அதிகமாக வாழ்ந்துள்ளனர் என்ற கருத்தை, இங்குக் கிடைத்த கைக் கோடாரிகளின் அளவை வைத்து, இங்கு அகழாய்வு மேற்கொண்ட கே.டி.பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இங்கு கிடைத்துள்ள பழைய கற்காலக் கற்கருவிகள் மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் செதுக்கப்பட்டவை. வடிவத்தில் இதயம் போன்றும், வட்ட வடிவிலும், நீள்வட்ட வடிவிலும், ஈட்டிமுனை போன்ற கற்கருவிகளும் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கூர்மையான முனைகளும், பக்கவாட்டின் முனைகளும் கருவியை மிகவும்; கூர்மைபடுத்துவதற்காக நுன்னிய சில்லுகளைப் பெயர்த்துள்ளதும் நன்கு தெளிவாக அறியமுடிகிறது. இவை அனைத்தும் சென்னை கைக் கோடாரி மரபைச் சார்ந்தவை என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். அடுத்து, இங்கு சேகரிக்கப்பட்ட கைப்பிடியுடன் கூடிய ஓர் கற்கருவி மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் தொழில்நுட்ப அறிவு காண்போரை வியக்கச் செய்கிறது. இக்கற்கருவி ஆமை வடிவத்தில் அமைந்துள்ளது. இதனை து.துளசிராமன் அவர்கள் தனது கள ஆய்வின்போது கண்டறிந்தார். இக்கருவியை ஆமை வடிவ (Micoqurin) கைக் கோடாரி என்றே குறித்தனர். இவை மட்டுமின்றி, கற்கருவிகள் செய்யப் பயன்படுத்திய கல் சுத்திகள் பலவும் இவ்வாய்வில் சேகரிக்கப்பட்டன. இக் கல் சுத்திகள், பல வடிவங்களில் கிடைத்துள்ளன. இவை அனைத்தும், தமிழகத்தில் பரிக்குளம் அகழாய்வில்தான் முதன்முதலாக கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்திரம்பாக்கம்
திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையில் இருந்து சத்தியவேடு செல்லும் சாலையில் 56 கி.மீ. தொலைவில், கொற்றலை ஆற்றின் அருகே குன்றுகளும் காடுகளும் நிறைந்த பகுதியின் நடுவே, வரலாற்றுச் சிறப்புமிக்க அத்திரம்பாக்கம் அமைந்துள்ளது. இந்த ஆற்றை ஒட்டியுள்ள மேட்டில் இருந்து, பழைய கற்காலக் கற்கருவிகளை, 1863-ல் இராபர்ட் புரூஸ் புட் கண்டறிந்தார். மேலும், இங்கு காணப்படும் மேட்டுப்பகுதியில் உள்ள கூழாங்கற்கள் படிவடுக்கில், கைக் கோடாரிகளும், அவற்றுடன் மனித எலும்புப் பகுதியின் தொல்லுயிர்ப் படிமம் (fossil) ஒன்றையும் அவர் கண்டெடுத்தார்*19. இவருக்குப் பிறகு, வி.டி.கிருஷ்ணசாமி, பேட்டர்ஸன், எச்.டி.சங்காலியா போன்ற தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு செய்து, பழைய கற்காலக் கருவிகள் செய்யப்பட்ட தொழிற்கூடமாக அத்திரம்பாக்கம் விளங்கியது எனத் தெரிவித்தனர்.
இங்குதான், பழைய கற்காலத்தைச் சார்ந்த முதல், இடை, கடைநிலைப் பழைய கற்காலக் கற்கருவிகள் கிடைத்துள்ளன. இவற்றை, சென்னை மரபு சார்ந்தவை என்றும், இவை சென்னைத் தொழிற்பட்டறையில் தயாரானவை என்றும் தரம் பிரித்துக் காட்டினர்.
உலகப் புகழ்பெற்ற பழைய கற்காலத் தடயங்களைக் கொண்ட பகுதியாக இப்பகுதி திகழ்ந்தது. இங்குதான், 1964-65-ல் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, நான்கு மண்ணடுக்குகள் இருப்பதைக் கண்டறிந்தனர். இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில், பழைய கற்கால மக்கள் வாழ்ந்தமைக்கான எச்சங்கள் காணப்படுவதைக் கண்டறிந்தனர்*20.
1999-2004-ம் ஆண்டுகளில், சாந்தி பப்பு என்பவர், சென்னை, சர்மா மரபியல் கல்வி மையம் மூலம், அத்திரம்பாக்கம் பகுதியில் அகழாய்வுப் பணியை மேற்கொண்டு சில கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்*21. அகழாய்வில், முதல், இடை, கடைப் பழைய கற்காலப் பண்பாடுகள் தொடர்ச்சியாக நிலவியிருந்ததை மண்ணடுக்குகளின் ஆய்வு மூலம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
2,50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய கற்கால மக்கள் வாழ்ந்த தரைப்பகுதி, அச்சூலியன் வகைக் கற்கருவிகளுடன் வெளிப்படுத்தப்பட்டது. மேலும், மாட்டினுடைய நீள்வட்ட வடிவமான 17 காலடித் தடங்கள் (Bovid Hoof Impression), மூன்று மீட்டர் ஆழத்தில் பழைய கற்கருவிகளுடன் காணப்பட்டன. பழைய கற்கால மனிதனுடன் வாழ்ந்த விலங்கினுடைய காலடித் தடங்கள், இந்தியாவிலேயே இங்குதான் முதன்முறையாக அகழாய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 3.6 மீட்டர் ஆழத்தில், அச்சூலியன் கால தரைப்பகுதியும், அங்கு பழைய கற்காலக் கைக் கோடாரிகளுடன், மூலக் கற்கலான பெரிய பெரிய கூழாங்கற்களும் காணப்பட்டதாக சாந்தி பப்பு குறிப்பிட்டுள்ளார்*22.
கடைக் கற்காலப் பண்பாடு (Upper Palaeolithic Phase) இருந்ததற்கான சான்றுகள், மண்ணடுக்குகளில் துல்லியமாகக் காணப்படுவதை முதன்முறையாக இங்கு கண்டறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்து, விலங்குகளின் தொல்லுயிர்ப் படிமங்களாக, எருமை, கொம்புகளற்ற மான், குதிரை போன்றவற்றின் பற்கள் இங்கு கிடைத்துள்ளன.
எனவே, அத்திரம்பாக்கம் 5,00,000 ஆண்டுகளுக்கு முன்னர், வெப்ப மண்டலச் சமவெளியாக இருந்தது என்பதை, வெப்ப மண்டலச் சமவெளிப் பகுதியில் வாழும் விலங்குகளின் எச்சங்கள் காணப்பட்டதன் மூலம் உணரலாம் எனத் தெளிவுபடுத்தியுள்ளார். அதன் அடிப்படையில், அத்திரம்பாக்கம் அகழாய்வின் காலத்தைக் கீழ்க்கண்டவாறு பகுத்துள்ளனர். அவை -
முதல் பழைய கற்காலம் (Lower or Early Palaeolithic): 5,00,000 - 2,50,000 ஆண்டுகள்.
இடைப் பழைய கற்காலம் (Middle Palaeoloithic): 2,50,000 - 30,000 ஆண்டுகள்.
கடைப் பழைய கற்காலம் (Upper Palaeolithic): 30,000 - 10,000 ஆண்டுகள்.
இவ்வாறு, தனது அகழாய்வு மூலம், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் அத்திரம்பாக்கம் எவ்வாறு சிறப்பு பெற்றிருந்தது என்பதையும், சென்னை தொழில்நுட்பத்தையும் இதன்மூலம் சாந்தி பப்பு தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அத்திரம்பாக்கம் தொல்லுயிர்ப் படிமங்களின் அடிப்படையில், இதன் காலத்தை 15,00,000 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆய்வு அறிக்கை தெரிவிப்பதாக, புதிய கருத்தாக அண்மையில் அவர் குறிப்பிட்டுள்ளார்*23.
சாந்தி பப்புவின் இந்தக் காலக்கணிப்பு ஆய்வுக்குரியது. மேலும், முதல் மற்றும் இடைப் பழைய கற்காலத்தைச் சார்ந்த கைக் கோடாரிகள் அதிக அளவில் இங்கு கிடைத்துள்ளன. கடைப் பழைய கற்காலம், நுண் கற்காலத்தின் துவக்க நிலை என்பதையே, இந்த அகழாய்வு மண்ணடுக்குகள் வெளிப்படுத்துகின்றன.
வட மதுரை
ஆரணி ஆற்றின் கிழக்குப் பகுதியில், சென்னையில் இருந்து 42 கி.மீ. வட மேற்கே அமைந்துள்ளது வடமதுரை. இங்கு, பழைய கற்காலக் கருவிகள் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கற்கருவிகளை ஆய்வு செய்த பேட்டர்ஸன் (1939) மற்றும் வி.டி.கிருஷ்ணசாமி (1947) இருவரும், கருவிகள் மேல் படர்ந்திருந்த மென்பாசிப் படலத்தின் (Pattination) அடிப்படையிலும், தொழில்நுட்ப அடிப்படையிலும் மூன்று பிரிவாகப் பிரித்தனர்*24.
கருக்கற்கள், உருண்டையான பெரிய அளவிளான சரளைக் கற்களில் இருந்து வந்தவை என்றும், அதனை மேலும் இரண்டு பிரிவாகப் பிரித்து, கரடுமுரடானவை என்றும் அச்சூலியன் வகையைச் சார்ந்தவை என்றும் கற்கருவிகளைப் பகுத்தனர். இங்கு அகழாய்வு மேற்கொண்ட கே.டி.பானர்ஜி, தனது அகழாய்விலும் இதேபோன்று மூன்று பிரிவுகளைச் சேர்ந்த கற்கருவிகள் கிடைத்துள்ளதை உறுதிசெய்துள்ளார்.
இங்கு வெட்டுக்கருவிகள், கிழிப்பான்கள், சுரண்டிகள் மற்றும் கைக் கோடாரிகள் போன்றவை கிடைத்துள்ளன. தொழில்நுட்ப அடிப்படையில், வடமதுரை அகழாய்வில் காணப்படும் தொழிற்கூடமானது, பழமையான அச்சூலியன் (Early Acheulian) வகையைச் சார்ந்தது என பானர்ஜி தெரிவிக்கிறார்*25. மேலும், இவ்வகழ்வாய்வில் கிடைத்த கற்கருவிகளை, அதன் மீது படர்ந்துள்ள மென்பாசிப் படலத்தின் அடிப்படையில் கடைக் கற்காலத்தைச் சார்ந்தவை எனக் கூறுகிறார். மென்பாசிப் படிவ அமைப்பைக் கொண்டு காலத்தை நிர்ணயிப்பது ஏற்புடையதாக இல்லை. இதன் தொழில்நுட்ப அடிப்படை மற்றும் மண்ணடுக்கு நிலை இவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு காலத்தைக் கணிப்பதே சிறந்தது.
பரிக்குளம்
திருவள்ளூர் மாவட்டம், பூண்டிக்கு தென்மேற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்குளம். இங்கு, தென்பகுதியில் காணப்படும் செம்மண் சரளைக்கல் மேடு (Laterite Gravel Deposit), சுமார் 5,00,000 ஆண்டுகளுக்கு முன் நிலவிய பிளைஸ்டோசின் காலத்தில் தோன்றியதாகும். இங்கு நான்குவிதமான படிவ அடுக்குகள் அமைந்துள்ளன. அவை –
சிதைந்த சரளைக்கல் அடுக்குகள் (Detrital Laterite Deposit)
சிறு கூழாங்கற்களுடன் கூடிய சரளைக்கல் (Laterite Mixed with Pebble)
பெருங்கற்களுடன் கூடிய சரளைக்கல் (Laterite Mixed with Boulders)
கெட்டியான களிமண் பகுதி (Sriperumbudur or Avadi Shale)
இந்த நான்கு படிவங்களும், மண்ணடுக்கில் தெளிவாகக் காணப்பட்டன*26.
பரிகுளம் அகழாய்வில், இரண்டுவிதமான பழைய கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன*27. அவை -
அபிவில்லியன் - அச்சூலியன் பண்பாட்டைச் சேர்ந்தவை.
அச்சூலியன் பண்பாட்டைச் சேர்ந்தவை.
அபிவில்லியன் கைக் கோடாரி
ஃபிரான்ஸ் நாட்டின் சோம பள்ளத்தாக்குப் (Somme in France) பகுதியில் உள்ள அபிவில்லி (Abbeville) (அ) அபிவில்லியன் (Abbevillean) என்ற இடத்தில் கிடைத்த கைக் கோடாரிகள், அவ்விடத்தின் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன*28. தொழில்நுட்ப அடிப்படையில் காணும்பொழுது, இவற்றில், அதிக அளவில் சில்லுகள் பெயர்க்கப்படாமல் ஆழமாகப் பெயர்க்கப்பட்டும், அதிக வேலைப்பாடும் இல்லாமல் இருக்கும்.
அச்சூலியன் கைக் கோடாரி
அச்சூலியன் கைக் கோடாரியும் இடத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இவற்றில், அதிக அளவில் சில்லுகள் பெயர்த்தும், வேலைப்பாடுகள் நிறைந்தும் காணப்படும். முழுமை பெற்ற அழகிய இலை வடிவ அமைப்பைக் கொண்டதாக இருக்கின்றன.
ஃபிரான்ஸ் நாட்டில் சோம் பள்ளத்தாக்கில் உள்ள அச்சூல் (Acheul) பகுதியில்தான், இக்கோடாரிகளை பொ.மு. 1836-ல் பௌச்சர் (Boucher) கண்டறிந்தார்*29.
பரிக்குளம் அகழாய்வில் 243 கற்கருவிகள் சேகரிக்கப்பட்டன. அவை தரம்வாரியாகப் பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளன*30. இவற்றின் மேல் பகுதியில், அதிக காலம் மண்படிவத்தில் தேங்கி இருந்ததால் ஏற்படும் மென்பாசிப் படலம் காணமுடிகிறது. இங்கு அகழாய்வில் சேகரிக்கப்பட்ட கற்கருவிகள், வரலாற்றுச் சிறப்புமிக்கவை. இவற்றை விரிவாக ஆய்வு செய்து, தொழில்நுட்ப விவரங்களோடு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது*31.
கைக் கோடாரிகள் (Hand Axe)
இதய வடிவிலான கைக் கோடாரிகள் (Cordate Hand Axe)
முக்கோண வடிவ கைக் கோடாரிகள் (Triangular Hand Axe)
வெட்டுக்கத்திகள் (Cleavers)
சுரண்டிகள் (Scrappers)
சிறிய வெட்டுக் கருவிகள் (Small Choppers)
கூர்முனைக் கருவிகள் (அ) துளையிடும் கருவி (Points)
வட்டுகள் (Ovate)
கல் சுத்தி (Stone Hammer)
இதுபோன்ற பல்வேறுவிதமான கற்கருவிகள் வகைப்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கற்கருவிகளில் அதிக அளவில் சில்லுகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி பழைய கற்காலத்தில் கற்கருவிகள் செய்யும் தொழிற்கூடமாக (Factory Site) விளங்கியிருக்க வேண்டும்.
Courtesy:
http://www.dinamani.com/…/%E0%AE%A4%E0%A…/article3034481.ece

Writer Sumathisri| How love has changed over centuries | காதல் சுகமானது

Birds






Bridge To Healing For Emotional Issues

Visualize bringing yourself back to a center within yourself, a calm and protected inner space where you are in touch with your spiritual resources.
2. Once centered, place yourself within the image of a personal safe place such as a garden or meadow that is protected by a gate, a wall, and if you choose guardian angels.
3. From this safe place, imagine the person or situation you are concerned about. Visualize spirals of clear light around them bringing blessing, harmony, and resolution. Do not try to make 'Bridge to Healilng' for Emotional Issuesthe outcome specific, but with trust, place the event or person(s) in the hands of how you personally experience Universal Healing or Creative Force.
4. Stay with the visualization until you feel a drop in tension, a relaxation into a less agitated or fearful state of mind. Continue to deepen the feeling of relaxation and the associated images with the intention to reach every cell in the body.'Bridge to Healing' for Emotional Issues
5. Now the action portion of your cells, has shifted out of rapid production of ‘fight or flight’ hormones. This means that the communication system between cells is now also shifting out of the highly alert mode back toward normal.
6. When you feel the exercise is complete, see yourself alone in your special inner space. Surround yourself with glowing spirals of light. Actively accept blessing and renewal. Consciously depart from your inner space of safety, remembering that you can return anytime you wish.
‘Don’t Worry, Stay Happy’, your cells will thank you.
http://balancedwomensblog.com/bridge-to-healing-for-emotio…/

அனாத ரட்ஷகா! சுவாமியே சரணம் ஐயப்பா!


Wednesday, September 16, 2015

Monkeys, money and prostitution

Two scientists from Yale University (economist and psychologist) decided to teach monkeys to use money. And they did it. The idea of money, as it turned out, can learn creatures with tiny brain and needs, limited to food, sleep and sex. Capuchins, where an experiment was performed, are zoologists among the most stupid primates.
"At first glance, it really seems that they are in life nothing more is needed. You can feed them with superkame all day, and they will come and go, come and go at them constantly. So you think that the Capuchins - walking stomachs", say the researchers.
American ecology conducted an experiment on the introduction of labor relations in the flock of the Capuchins. They came up with in a cage "work" and "universal equivalent" - money. The job was to pull the lever with the effort to 8 kilograms. Considerable effort for small monkeys. For them this unpleasant work.
With each push of a lever monkey was to get a bunch of grapes. Once the Capuchins have learned a simple rule "work = reward", they introduced an intermediate agent - colored plastic rings. Instead of grapes, they began to receive the tokens of a different "face value". For white tag you could buy from people one bunch of grapes, for the blue - two, red - glass of soda and so on.
Soon the monkey's society is stratified. He felt the same types of behavior as in the human community. Appeared workaholics and bums, bandits and drives. One monkey managed ten minutes to click the lever of 185 times! Very money would earn. Someone preferred work racketeering and took the other.
But most importantly, noted experimenters: the monkeys revealed those traits that were not previously apparent greed, cruelty and rage in defending their money, suspicion of each other.
In continuation of the study of economic behavior, monkeys handed other "money" in the form of a silver discs with a hole in the middle. In a few weeks Capuchins have learned that for these coins you can get some food.
The experimenter, who in his youth was fond of Marxism, did not verify whether the work makes a monkey in a man. He just gave the monkey these coins and taught to use them to buy fruits. Before that I knew who that loves to be set for each of monkeys scale of preferences.
First, the rate was unified for sour Apple and brush sweet grapes asked the same number of coins. Of course, Apple is not a success and the volume of grapes was melting. But the picture changed dramatically, when the price of apples has dropped. After quite a long confusion monkeys decided almost entirely to spend coins on apples. And only occasionally allowed himself to eat the grapes.
One day, when all the test animals in a common space already knew that some things are more expensive, while others are cheaper, one of the monkeys had penetrated into the Bay, where they kept the municipal office and assigned all the coins themselves, fighting off people who tried to Rob her of metal production. So the monkey did the first "Bank robbery".
Among monkeys and got out of the counterfeiters. Once scientists are cut out of the cucumber similar to the currency of the apes circle. First Capuchin began to chew but then I tried to buy these "fake money" something tastier.
Some more days passed, and Capuchins discovered the phenomenon of prostitution. Young male gave a coin to the female. Scientists thought, fell in love and made a gift. But no, the girl came for money with knight in a sexual relationship, then walked to the window, which was on duty scientists, and bought them a few grapes.
All were satisfied: and monkeys, and scientists. Monkeys have mastered the liberal-capitalist relations, and scientists defended his doctor.
http://direct-travel.ru/…/5879-monkeys-money-and-prostituti…

மகாகவி பாரதியும் இசையும்

மகாகவி பாரதியும் இசையும். மகாகவி பாரதியாருக்கு இசை, நாட்டியம் ஆகிய கலைகளில் மிகுந்த பற்று உண்டு. பரத நாட்டியம் குறித்து அவருடைய கருத்துக்களை அவருடைய மகள் சகுந்தலா "என் தந்தை" எனும் நூலில் எடுத்துரைக்கிறார். அவர் சொல்கிறார் என் தந்தை பரத நாட்டியத்தில் மிகுந்த ஆவல் கொண்டவர். கோபாலகிருஷ்ண பாரதியாரின் "ஆனந்த நடனம் ஆடினார்" எனும் பாடலை அவர் அடிக்கடி பாடிப்பாடிப் பரவசமடைவார். அவரே பாடிய "தகதகத் தகதக வென்றாடோமோ?" போன்ற பாடல்களில் அவருடைய நாட்டிய பரவசம் வெளிப்படும். மேலும் பரதநாட்டியக் கலை பொதுமக்கள் கையில் வராமல் குறிப்பிட்ட ஒரு சமூகத்தார் வசம் இருப்பதனால் அதை வெளிப்படையாகப் பார்க்கவோ, ரசிக்கவோ முடியாமல் போனதைக் குறித்து பாரதியின் கருத்தையும் சகுந்தலா விவரிக்கிறார். அவர் சொல்கிறார், "பரதநாட்டியம் என்ற மாபெரும் கலை, தற்காலத்தில் தனித்து ஒதுக்கப்பட்ட ஒரு வகுப்பினரால் கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் அதன் மேன்மையைச் சகலரும் கண்டு ஆனந்தமடையத் தக்கதாக இருந்தும் நம்முள் நாமே வெட்கப்பட்டுக்கொண்டு இலை மறைவு காய் மறைவாக ரகசியமாகப் பார்த்து ரசிக்க வேண்டியிருக்கிறது. அந்த தெய்வீகக் கலையை நம் வீட்டில் தாய்மார்களும், சகோதரிகளும் நடத்தினால், நாம் பகிரங்கமாகக் கண்டு ஆனந்தப்படலாம்". இப்படிச் சொல்வதன் மூலம் பரதக் கலை எல்லோராலும் அந்தக் காலத்தில் கற்கவோ, பொது மேடைகளில் ஆடவோ இயலாமல் இருந்திருக்கிறது. ஆலயங்களில் அதற்கென்று குறிப்பிட்டவர்கள் அதை 'சதிர்' எனும் பெயரால் ஆடி அந்த அற்புதமான கலையை உயிர்ப்புடன் காத்து நம் கையில் கொடுத்துச் சென்றிருக்கின்றனர். பாரதியாருக்கு இசையில் தணியாத ஆர்வம் உண்டு. இயற்கையிலேயே தனக்கிருக்கும் இந்த இசை ஞானத்தை மேலும் விருத்தி செய்துகொள்ள முடியாமல் தவித்தார். ஒரு நல்ல இசைக் கலைஞரை அணுகி அவருக்கு குரு தட்சிணை கொடுத்துக் கற்றுக்கொள்ள அவரிடம் வசதி இல்லாமல் போயிற்று. அன்றாட வாழ்க்கையை ஓட்டுவதே சிரமமாக இருந்த நிலையில் ஊரைவிட்டு ஓடிப்போய் புதுச்சேரியில் வாழவேண்டிய கட்டாய சூழ்நிலையில் இசையை எங்கே போய் கற்றுக் கொள்வது. இருந்தாலும் அவரால் ஒரு தேர்ந்த இசைக் கலைஞரைப் போல பாட முடிந்தது, அதற்கான ஞானமும் அவரிடம் இருந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கில அரசின் எடுபிடிகளான ரகசிய போலீசார் அவரிடம் இசை கற்றுக் கொள்ள வேண்டி வந்திருப்பதாகவும், சிலர் தமிழ் கற்க வந்திருப்பதாகவும், சிலர் வேத, உபநிஷதங்                   களைக் கற்க வந்ததாகவும் பொய்சொல்லி வேவு பார்த்தார்கள். அவர்களை இனங்கண்டுகொண்டு பாரதியார் அத்தகைய சூது நிரம்பியவர்களைத் தன்னை அண்டவிடாமல் பார்த்துக் கொண்டார். சகுந்தலா மேலும் சில அரிய தகவல்களைக் கூறுகிறார். பாரதியாரிடம் ஸீ.ஆர்.சீனிவாச ஐயங்கார் என்பார் தியாகராஜ கீர்த்தனைகளுக்கு ஸ்வரம் போட்ட புத்தகம் ஒன்று இருந்தது என்கிறார் அவர். அந்த புத்தகத்தில் உள்ள ஸ்வரங்களைப் பயன்படுத்தித் தானே பாட முயற்சிகள் செய்வாராம். தியாகராஜ சுவாமிகளின் 'நகுமோமு', 'மாருபல்க', 'நிதிசால சுகமா' போன்ற கீர்த்தனைகள் மீது அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தாராம்.  மகாகவிக்கு தெலுங்கு மொழியும் நன்கு தெரியும். இது அவருடைய 'சந்திரிகையின் கதை'யைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும். அதில் சந்திரிகையும் பந்துலுவும் தெலுங்கில் பேசிக்கொள்ளும் பகுதிகள் சுவாரசியமானவை, அவை நல்ல தெலுங்கில் அமைந்தவை. தெலுங்கு மொழி தெரிந்த காரணத்தால் பாரதியார் தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகளில் உள்ள சொற்களின் பொருளையும் அவற்றின் நயத்தையும், பாவத்தையும் ரசித்து மகிழ்வாராம். 'மாருபல்க' கீர்த்தனை இவருக்கு எவ்வளவு பிடிக்கும் என்பதற்கு இவர் 'சந்திரிகையின் கதையின்' நாயகி விசாலாட்சி இந்தப் பாடலைப் பாடுவதாக எழுதியிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். பாரதியின் தமிழ்மொழிப் பற்று உலகம் அறிந்தவொன்று. தமிழே உயர்ந்த மொழி என்றும் தமிழிலே எண்ணி, தமிழிலே பேசு, ஆங்கிலத்தில் எண்ணி பின் தமிழில் மொழிபெயர்க்காதே என்றெல்லாம் அவர் சொல்வதுண்டு. அப்படிப்பட்டவர் இசையில் மொழி பேதம் பார்த்ததில்லை. அவரைப் பொறுத்தவரை சங்கீதம் என்பது வேறு, அதற்கு மொழி ஒரு தடை இல்லை என்பார் அவர்.  "சங்கீத விஷயம்" என்ற அவருடைய கட்டுரையில் பாரதியார் தியாகராஜ சுவாமிகள் தன்னுடைய கீர்த்தனங்களில் அந்தந்தப் பாடலின் கருத்துக்கேற்ப பாவம் வெளிப்படும் வகையில் ராகங்கள் அமைந்திருப்பதை வெகுவாகப் பாராட்டி எழுதியிருக்கிறார். ஆனால் அவர் காலத்துக்குப் பின்னர் இயற்றப்பட்ட தெலுங்கு கீர்த்தனைகள் அப்படி அமையவில்லை என்பது அவர் கருத்து. அவர் தியாகராஜரின் ஒரு பாடலை எடுத்துக்காட்டாகச் சொல்கிறார். அது "நன்னு ப்ரோவ நீகு இந்த தாசமா?" எனும் கீர்த்தனை. அதில் பாடலின் பொருளுக்கேற்ப அமைக்கப்பட்ட ராகம் பொருந்தி வருவதைச் சுட்டிக் காட்டி, அதைப் போல பட்டணம் சுப்பிரமணிய ஐயர் இயற்றிய 'வரமுலொசகி" எனும் பாடலில் இல்லை என்றும் சொல்லுகிறார். பின்னதில் இசை சண்டைத் தாளம் போடுகிறது என்று எழுதுகிறார்.  அவருடைய புகழ்பெற்ற பாடலான "சிந்துநதியின் மிசை நிலவினிலே, சேரநன் நாட்டிளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து, தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்" எனும் பாடலைக் குறிப்பிட்டு சகுந்தலா தன் தந்தையிடம் "ஏன் அப்பா தெலுங்கில் பாட வேண்டும்? தமிழில் நல்ல பாடல் இல்லையா?" என்று கேட்டிருக்கிறாள். அதற்கு பாரதியார் சொன்ன பதில்: "பாப்பா! தமிழ்ப் பாட்டும் பாடலாம்; இந்துஸ்தானியிலும் பாடலாம். பெரிய பெரிய கவிஞர்கள் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறார்கள். ஆனால் பாடுவதற்குரிய முறையில் பாடலை இயற்றி, அதற்கேற்ற இசையுடன் பொருத்தி சுவையுடன் பாடும் சங்கீத வித்வான்கள் நம் தமிழுலகில் அதிகம் இல்லாமல் போய்விட்டனர். சங்கீதத்தில் தெலுங்கு என்றும் உருது என்றும் பேதம் கிடையாது. ஆங்கிலேயர் தேசாபிமானம் அதிகம் உடையவர்கள். மொழிப்பற்றிலும் அவர்களுக்கு இணை கிடையாது. ஆனால் சங்கீதத்தில் ஜெர்மன் சங்கீதமும், இத்தாலிய சங்கீதமும் உயர்ந்தவை என்பதை அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மேலும் வடதேசத்தில் இருக்கிற சிந்து நதியின் மீது, தென் தேசத்தில் உள்ள அழகிய சேரநாட்டுப் பெண்களுடன் தமிழ் நாட்டவர்களாகிய நாம், சங்கீதத்துக்கு அழகு தரும் தெலுங்கு மொழியில் பாடி மகிழ்வோம் என்று சொன்ன கருத்து, நம் இந்திய தேசம் முழுவதையும் ஒற்றுமைப்படுத்தி ஒன்றாக்குவதுதான்." என்று பதில் சொன்னார் பாரதியார். பாரதியார் தான் இயற்றிய "என்று தணியுமிந்த சுதந்திர தாகம்" எனும் பாடலை அவரே பாடும்போது கமாஸ் ராகத்தில் பல சங்கதிகளுடன் பாடுவாராம். அவருடைய எல்லா பாடல்களையும் இசையோடு பாடுவதற்கேற்ப அவற்றை ஸ்வரப்படுத்தி ஒரு புத்தகம் வெளியிட ஆவல் கொண்டிருந்தாராம். பாவம், அவர் ஆசைப்பட்டது எதுதான் நடந்தது? அவர் பாடலை பலர் அறிய பாடுவதற்கே தமிழ் மக்கள் பயந்த காலம் அது. பாரதியார் ஒரு பாட்டை இயற்றுகிறார் என்றால் அந்தப் பாடலுக்கு ராகம், மெட்டு இவை அமைக்க எந்த உதவியையும் யாரிடமும் நாடியதில்லையாம். ஏதோ அவர் மனதுக்குத் தோன்றிய ஒரு மெட்டில் அவரே பாடிப் பார்ப்பாராம். அந்த மெட்டு அவருக்குப் பிடித்துப் போய்விட்டால் அந்த மெட்டு எந்த ராகத்தின் ஸ்வரங்களோடு பொருந்துகிறதோ அந்த ராகத்தின் பெயரை மட்டும் எழுதி வைத்து விடுவாராம். அதற்குரிய தாளம் தானாக அமைந்து விடுமாம். பாரதியார் தான் இயற்றிய பாடல்களைத் தனக்கு நெருக்கமாக உள்ள நண்பர்களிடம் பாடிக்காட்டுவாராம். அப்படிப்பட்ட நண்பர்களில் ஒருவர்தான் வ.வெ.சு.ஐயர். பாரதியாரின் கண்ணன் பாட்டுக்கு வ.வெ.சு.ஐயர் முன்னுரை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிடும் செய்தி பாரதியின் இசைத் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அவர் சொல்கிறார் "பாரதி தன் கற்பனா பாவத்தோடும், சிருஷ்டி உற்சாகத்தோடும் தனது பாடல்களைப் பாடும்போது அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அட்சர லட்சம் பெற்றதாக‌ மதிப்பர்".  திருநாவுக்கரசு சுவாமிகள் திருவையாற்றுக்கு வந்து ஐயாறப்பனைத் தரிசித்து மகிழும்போது "ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே" என்கிறார். உலகின் இயக்கங்கள் அனைத்திலும் ஒளிர்பவன் இறைவன், அந்த இயக்கம் எழுப்பும் ஒலி, ஓசை அனைத்துமே இறைவன் தந்தவையாகும் என்பதை அப்பர் அழகாகச் சொல்லியிருக்கிறார். அதனால்தான் இறைவனை நாதப்பிரம்மம் என அழைக்கிறார்கள். கண்ணபிரானை பல்வேறு வடிவங்களில் கண்டு ரசித்துத் தன் கண்ணன் பாட்டில் அழகுற வடித்துத் தந்திருக்கிறான். அவை அத்தனையும் பல்வேறு ராகங்களில் இசையோடு பாடக்கூடிய பாடல்கள் என்பதிலிருந்தே அவன் கண்ணனை இசை வடிவில் தரிசித்திருக்கிறான் என்பது விளங்கும். இசையை ஆராதித்த பாரதி அந்த இசையே துன்பம் தருவதாகவும் தொல்லை தருவதாகவும் இருக்கக்கூடாது என்பதையும் தெரிவிக்கிறான். தன்னுடைய "சங்கீத விஷயம்" எனும் கட்டுரையில் பாரதி சொல்லும் கருத்துக்கள் இன்றளவும் உண்மை என்பதை நாம் காண முடிகிறது. அவர் சொல்லுகிறார், எந்த ஊருக்குப் போ, யாருடைய கச்சேரியை வேண்டுமானாலும் கேள்! அங்கெல்லாம் அவர்கள் நமக்குப் புரியாத மொழியில் பாடிக் கொண்டிருப்பார்கள். அவர் சொல்வதை அப்படியே பார்க்கலாமே! "நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் கச்சேரி தொடங்குகிறது. வித்வான் 'வாதாபி கணபதிம் பஜே' என்று ஆரம்பஞ் செய்கிறார். தொடர்ந்து 'ராமநீ ஸமான மெவரு', 'மரியாதை காதுரா', 'வரமு லொஸகி' ... ஐயையோ, ஐயையோ, எங்கும் ஒரே கதை!." "எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்துக்குப் போ எந்த வித்வான் வந்தாலும் இதே கதைதான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரும்புக் காதாக இருப்பதால், திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப ஏழெட்டுப் பாடல்களை வருஷக் கணக்காக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோற்காது உள்ள தேசங்களிலே இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்." பாரதியின் இந்தக் கருத்துத் தெலுங்கிலும், சம்ஸ்கிருத மொழியிலும் பாடிய வித்வான்களை குறைவாக மதிப்பிட்டார் என்பது இல்லை. அவர்களை அவர் மிகவும் உயர்வாகவும், மரியாதையுடனும் மதித்துப் போற்றியிருக்கிறார். ஆயினும் ஒரே பாடல்களைப் பாடி கேட்போர் உள்ளங்களை சோர்வடையச் செய்யாதீர்கள்; புதிது புதிதாக கீர்த்தனைகளை உருவாக்குங்கள்; புதிய பாடகர்களை அறிமுகம் செய்யுங்கள் என்கிறார். அப்படியானால் பழம்பெரும் மகான்களை உதாசீனம் செய்யலாமா என்று யாராவது கேட்டால், அவர்களுக்கும் அவர் பதில் சொல்கிறார். தியாகராஜர் பிறவியிலேயே பெரிய மகான். அவருடைய உயர்வை குறைத்து மதிப்பிடவில்லை. இப்படிச் சொல்லிவிட்டு அவர் தன் கருத்தையும் தெரிவிக்கிறார். அது "பூர்வீக மகான்களுடைய பாட்டுக்களை மறந்து போய்விட வேண்டுமென்பது என்னுடைய கட்சியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாட வேண்டும். பதங்களைப் பிழையாக உச்சரிக்கக்கூடாது. பத்து முப்பது கீர்த்தனங்களையே ஓயாமல் பாடி ஸங்கீதத்தை ஒரு தொல்லையாகச் செய்து விடக்கூடாது". இப்படிச் சொல்லியதோடு பாரதி நிறுத்திக் கொள்ளவில்லை, இந்த நிலைமை மாற என்ன செய்யவேண்டும் என்பதையும் அவர் சொல்கிறார். "புதிய புதிய கீர்த்தனங்களை வெளியே கொண்டு வரவேண்டும். இப்போது சங்கீத வித்வான்களில் தலைமைப் பட்டிருப்போர் தமிழிலே புதிய மெட்டுக்களில் கீர்த்தனங்கள் செய்ய முயல வேண்டும்". பாரதியார் இப்படிச் சொன்னால் அதற்கு வித்வான்கள் சொல்கிறார்கள் "பூர்வ காலத்து மகான்களுக்குத் தெய்வ பிரசாதமிருந்தது. எங்களுக்கு இல்லையே என்ன செய்வோம். இப்படிச் சொல்லிவிட்டால் போதுமா? இப்போதைய வித்வான்கள் புதிய கீர்த்தனைகளை அமைப்பதில் பின் வாங்கக்கூடாது, தெய்வங்கள் இறந்து போய்விடவில்லை, அவைகள் இவர்களுக்கு அந்த சாதனையை நிகழ்த்த அனுக்கிரகம் செய்வார்கள்" என்கிறார். அவருடைய குயில் பாட்டில் இசை அனுபவத்தை எங்கெல்லாம், எப்படியெல்லாம் அவர் அனுபவித்தார் என்பதை மிக அழகாக எடுத்துரைக்கிறார். இயற்கையோடு ஒன்றிய அவருடைய மனப்பாங்கு அவரைச் சுற்றிலும் எழுகின்ற ஓசைகள் அனைத்திலும் இசையை ரசிப்பதாக இருப்பதை நம்மால் உணரமுடிகிறது. இதோ 'குயில் பாட்டின்' வரிகள்: "கானப் பறவை கலகலெனும் ஓசையிலும், காற்று மரங்களிடைக் காட்டும் இசைகளிலும் ஆற்று நீரோசை அருவி யொலியினிலும் நீலப் பெருங்கடல் எந்நேரமுமே தானிசைக்கும் ஓலத்திடையே உதிக்கும் இசையினிலும் மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால் ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும் ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்கும் கொற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் சுண்ணமிடிப்பார் தம் சுவைமிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி யிசைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும் வேயின் குழலோடு வீணை முதலா மனிதர் வாயினிலுங் கையாலும் வாசிக்கும் பல்கருவி நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும், நெஞ்சம் பறிகொடுத்தேன் பாவியேன்" பாரதியாரின் கூற்றின்படி அவர் ரசித்து நெஞ்சைப் பறிகொடுத்த இசை அத்தனையும் மனிதர் பாடும் அல்லது வாசிக்கும் இசைகளில் மட்டுமல்ல, தாவரங்கள் முதல் மானுடர் வரையிலான அத்தனை உயிர்களிலும் எழும் ஓசையை அவர் நல்ல இசையாக ரசித்திருக்கிறார் என்பதை அறியமுடிகிறது. வாழ்வை இசைவிப்பது இசை; அந்த இசைக்கு உருகாதார் யார்? பாரதி மட்டும் விதிவிலக்கா என்ன?
Posted by Thanjavooraan 

What is consciousness?


The hard problem. Defining what is means to be human.
“I THINK, therefore I am.” René Descartes’ aphorism has become a cliché. But it cuts to the core of perhaps the greatest question posed to science: what is consciousness? The other phenomena described in this series of briefs—time and space, matter and energy, even life itself—look tractable. They can be measured and objectified, and thus theorised about. Consciousness, by contrast, is subjective. As Descartes’ observation suggests, a conscious being knows he is conscious. But he cannot know that any other being is. Other apparently conscious individuals might be zombies programmed to behave as if they were conscious, without actually being so.
In reality, it is unlikely that even those who advance this proposition truly believe it, as far as their fellow humans are concerned. Cross the species barrier, however, and matters become muddier. Are chimpanzees conscious? Dogs? Codfish? Bees? It is hard to know how to ask them the question in a meaningful way.
Moreover, consciousness is not merely a property of having a complex, active brain, for it can vanish temporarily, even while the brain is healthy and functional. Most people spend a third of their lives in the state described as “sleep”. Unless awoken while dreaming, they have no sense of being conscious during these periods. Recordings of the brain’s electrical activity show, though, that a sleeping brain is often as busy as one that is awake. Subjective though it is, consciousness therefore looks like a specific phenomenon, not a mere side-effect. That suggests it has evolved, and has a biological purpose. These things—specificity and purpose—give researchers something to hang on to.



Very high-calorie diets show how overeating may lead to diabetes



The research involved six healthy men who were either of normal weight or overweight. The research team asked the men to consume 6,000 calories of a typical American diet every day for one week.

That's a huge boost in food intake: According to the Institute of Medicine, a healthy diet for the average sedentary male aged 30 to 50 years should average around 2,200 calories per day.

The six men were monitored closely in a hospital as they engaged in the high-calorie diet. The men were also not allowed to engage in any physical activity during this time.

Reporting in Science Translational Medicine, the research team said that all of the men gained an average of about eight pounds in just a week.

In addition, in as little as two days after starting the diet, all of the men reached a metabolic state known as insulin resistance—often a precursor to diabetes. Insulin resistance occurs when the body produces the hormone, but cannot use it efficiently. What exactly is happening?

The new study suggests that the oxidative stress on cells—stemming from eating excessive amounts of food—may be the missing link. Oxidative stress involves the overproduction of oxygen byproducts that are toxic to cells, the researchers explained in a university news release.

After analyzing the men's urine and fat tissue, the researchers spotted a rise in proteins associated with oxidative stress.

Oxidative stress appeared to trigger changes to a glucose transporter protein, known as GLUT4. These changes may have affected the protein's ability take up glucose in response to insulin, leading to insulin resistance, the team theorized.

According to the researchers, the findings suggest an antioxidant treatment, or a therapy designed to target GLUT4, might someday help control obesity-linked insulin resistance.

While the study was small and relatively brief, it certainly does reinforce recommendations for folks to be mindful about their intake of calories and to exercise more.

http://stm.sciencemag.org/content/7/304/304re7

Three New Studies Converge on Promising New Target for Addiction Treatment

Metabotropic glutamate receptors, which include the subtypes mGluR2 and mGluR3, have been known targets for addiction treatment. Unfortunately, mGluR2/3 agonists studied to date have shown important limitations, including development of tolerance and decreasing food intake along with drug intake.
Recent issue of Biological Psychiatry presents the results of three studies implicating metabotropic glutamate receptor 2 (mGluR2) as a new molecular target for the treatment of addiction.
The first study investigated whether non-neuronal glial cells regulate the activity of brain circuits that mediate relapse to cocaine. They used a molecular switch called Gq-DREADD to activate glial release of the chemical messenger glutamate in a key reward center of the brain, the nucleus accumbens.
The authors found that activating glutamate release prevented relapse to cocaine use in rodents who previously self-administered this drug. They also found that the effect of glial activation was mediated by stimulating mGluR2 and mGluR3.
The second and third studies reported encouraging anti-addiction effects of AZD8529, an AstraZeneca drug, which works by selectively enhancing the stimulation of mGluR2.
2nd study reported that AZD8529 reduced nicotine self-administration and prevented relapse to nicotine seeking following withdrawal in squirrel monkeys. They also showed that this drug decreases the ability of nicotine to stimulate dopamine release in brain regions implicated in reward in rodents.
A different research team discovered that AZD8529 reduced cravings to self-administer methamphetamine in rodents following voluntary abstinence.
Dr. John Krystal, Editor of Biological Psychiatry, summarized, "It is unusual to have three papers supporting a new treatment mechanism emerge at the same time. Enhancing mGluR2 function may hold promise for the treatment of addiction."

Tuesday, September 15, 2015

Ten Ways to Become a More Confident Person


"பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படைகோயில் "ராமசாமி கோயில்”

ஷாஜகானின் 17ஆவது மனைவிக்கு கட்டிய மண்டபத்தை விட சோழ மன்னவனின் ஒரே தாய்க்கு கட்டிய கோவில் - பரவ செய்யுங்கள்.

பளிங்குக் கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமா?
ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்....வழி....என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது! உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது. "பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மசூதி, அப்படியே இன்னும் நடந்தால் ஒரு சிமெண்ட் சாலை பிரிவு, அங்கே தான் பார்க்க நாதியில்லாமல் கிடக்கின்றது இந்த ஆயிரம் வருட அற்புதம்!.
தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த ராஜ ராஜ சோழனின் மனைவி தான் இந்த "பஞ்சவன் மாதேவி" , தன்னை மிகுந்த பாசத்தோடு வளர்த்த சிற்றன்னையின் பிரிவை தாங்க முடியாமல் அவருக்காக ஒரு கோயிலை எழுப்பியுள்ளான் கங்கை முதல் கடாரம் வரை வென்ற "ராஜேந்திர சோழன்". உலகில் தாயிற்காக கட்டிய முதல் கோயில் அநேகமாக இதுவாகவே இருக்கக்கூடும், அதுவும் அதை ஒரு தமிழ் மன்னன் கட்டியிருக்கிறான் என்பது நாம் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விசயம். தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் அவளின் நினைவாக எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை இந்த உலகமே கொண்டாடுகிறது, தாஜ் மஹாலை நான் குறை கூற வில்லை அதுவும் பாசத்தின் வெளிப்பாடு தான், ஆனால் தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா? குறைந்த பட்சம் எத்தனை தமிழர்களுக்கு தெரியும்? பளிங்குக்கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமாக கணக்கிடப்படுமா?வேதனை! இந்த பட்டீஸ்வரத்தின்அருகில் தான் சோழர்களின் மாளிகை இருந்தது, ராஜ ராஜன் தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தன் கடைசி காலத்தை இங்கு தான் கழித்தார், தன்னுடைய மனைவியின் பிரிவை தாங்காமல் அடிக்கடி இந்த கோயிலுக்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இன்றைக்கும் அந்த ஊரின் பெயர் "சோழன் மாளிகை". கேட்பாரற்று இடிந்து கிடந்த இந்த கோயிலை சில வருடங்களுக்கு முன் தான் புதுப்பித்து இருக்கிறார்கள்.
பஞ்சவன்மாதேவி எப்பேர்பட்ட சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்த பெண்மணியாக இருந்தால் தன் அன்னை அல்லாத ஒரு பெண்ணுக்கு பள்ளிப்படை அமைத்து இருப்பார் ராஜேந்திர சோழர். தனது சிற்றன்னையின் மேல் எத்தனை அன்பு இருந்தால் இந்த எண்ணம் அவருக்கு தோன்றி இருக்கும். இது இந்த மண்ணில் வாழ்ந்த மகத்தான பெண்ணின் நினைவிடம் மட்டும் அல்ல, உண்மையான தாய் பாசத்தால் தனயன் எழுப்பிய புனித தளம். உங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த புண்ணியவதி தரிசித்துவிட்டுவாருங்கள்,அப்படியே தனயன் ராஜேந்திர சோழனையும் நினைவு கூறுங்கள் 

பஞ்சவன் மாதேவிச்சரம் வரலாறு !!!!!
சோழப் பெருமன்னர்கள் வரிசையில் திலகமென திகழ்ந்த முதலாம் ராஜராஜனின் மனைவியே இந்த பஞ்சவன்மாதேவி.இவர் சேரர் குறுநில மன்னர்களுள் ஒருவராகிய பழுவேட்டரையரின் மகள்.திருச்சி மாவட்டம் உடையார்குடி தாலுகாவில் உள்ள பழுவுரே இவரின் ஊராகும்.பழுவூர் கோவிலில் உள்ள முதலாம் ராஜராஜனின் 27 ஆம் ஆண்டு கல்வெட்டில் இவரைப்பற்றி “அவனி கந்தர்ப்புரத்து பழுவூர் தேவனாரின்(பழுவேட்டரையரின்) திருமகள்” என்று கூறுகிறது.திருப்புகலூர் கல்வெட்டால் இத்தேவியின் மற்றொரு பெயர் “நக்கன் தில்லையழகி” என அறிய முடிகிறது.
கோவிலின் முன் தோற்றம்
கோவிலின் முன் தோற்றம்
பஞ்சவன் மாதேவி ஒரு தளிச்சேரி பெண் என்றும் ,ஆடல் கலை மற்றும் போர்த்திறனிலும் சிறந்து விளங்கியவள் என்றும். ராஜராஜன் உள்ளம் கவர்ந்த அன்பு மனைவி என்றும், ராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவில் எழுப்பிய பொழுது மன்னனுக்கு எல்லாமுமாக இருந்து உதவி செய்தவர் என்றும். ராஜேந்திர சோழனை தன்னுடைய சொந்த மகனாக பாவித்து வளர்த்தவர் அதலால் ராஜேந்திரனை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று மூலிகை மருந்து உண்டு தன்னை மலடாக்கி கொண்டவள் போன்ற பல செவிவழி செய்திகள் உண்டு.
IMG_20141102_121909
தேவியின் ஆடல் திறனை விளக்கும் சிற்பம்
பஞ்சவன் மாதேவி அளித்த கொடைகளும்,சாதனைகளும் பலவாகும்.நினைவு கூறத்தக்க வகையில் புகழ் மிகுந்து திகழ்ந்ததால் சோழ நாட்டில் ஓர் ஊருக்கே இவர் பெயரால் “பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்களம்” என பெயர் மாற்றம் ஏற்பட்டது.
IMG_20141102_121918
போர்த்திறனை விளக்கும் சிற்பம்
பஞ்சவன் மாதேவிச்சரம் என்பது ராஜராஜனின் தேவி பஞ்சவன்மாதேவி மறைந்த பிறகு, ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் தன் சிற்றனைகாக எடுக்கப்பட்ட நினைவாலயம்.இத்திருகோவிலில் காணப்படும் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு இதனை “பழையாறையான முடிகொண்ட சோழபுரத்துப் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவிச்சரம்” என்று குறிப்பிடுகிறது. இதே கல்வெட்டில் ராஜேந்திர சோழனின் தளபதி அருண்மொழியான உத்தம சோழ பிரம்மராயன் பற்றியும், சைவ மடங்களுள் ஒன்றான லகுலிசமடம் பற்றியும் அதன் தலைவர் லகுலிச பண்டிதர் பற்றியும் பல வரலாற்று தகவலை சுமந்து நிற்கிறது.

பழையாறையான முடிகொண்ட சோழபுரத்துப் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவிச்சரம்
பழையாறையான முடிகொண்ட சோழபுரத்துப் பள்ளிப்படை பஞ்சவன் மாதேவிச்சரம்
இக்கோவில் திருச்சுற்றில் உள்ள விநாயகர்,பிச்சை தேவர்,ஆலமரச் செல்வர்,லிங்கோத்பவர், பிரம்மன்,துர்க்கை போன்ற சிற்பங்கள் ராஜேந்திர சோழனின் தனி முத்திரையாகும்.இரண்டு சிவபெருமானின் கோல நிலைகளில் பல்லவர்களின் கலைமனம் கமழ்கிறது. இவை கி.பி. 710-715 வரை ஆண்ட இரண்டாம் நந்தவர்ம பல்லவனின் காலத்தில் அவனது கோநகரான பழையாறையில் இடம் பெற்று இருந்த சிலைகளாய் இருக்கலாம்.
IMG_20141102_122433
பல்லவர் கால சிவபெருமான் சிற்பம்
கருவறையின் அர்த்தமண்டபத்தில் உள்ள நந்தியும் கல்தூணும் பழுவேட்டரையர்களின் கலைப்படைபாகும்.இதே போன்ற நந்தியும் தூணும் பழுவுரிலும் காணபடுகிறது. பழுவேட்டரையரின் மகள் என்பதால் இத்தேவி பிறந்த மண்ணின் கலைமனம் கருவறையில் வீசுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து
பழுவேட்டரையர் பாணியில் அமையபற்ற நந்தி
பழுவேட்டரையர் பாணியில் அமையபற்ற நந்தி
IMG_20141102_122306
பழுவேட்டரையர் பாணியில் அமையபற்ற லிங்கம்
சோழ பெருமன்னர்களின் தலைநகராகவும்,சோழ அரச குடும்பத்தினர் இறுதிவரை வாழ்ந்த இடம் என்ற பெருமையை உடைய பழையாறை மாநகரில் ஒரு பகுதியாக திகழ்ந்த பட்டீச்சரம் எனும் சிற்றூரில் அமைந்துள்ளது இந்த பஞ்சவன் மாதேவிச்சரம். பட்டீச்சரம் தேனுபுரிச்சரர் திருகோவிலில் இருந்து அரை கி மீ துரத்தில் உள்ளது இந்த பள்ளிப்படை ஆலயம். தற்பொழுது இந்த கோவில் ராமநாதன் கோவில் என்று அழைக்கபடுகிறது.
IMG_20141102_121951
மேற்கூரிய தகவல்கள் குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயாவின் குடவாயில் கட்டுரைகள் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. பலர் பார்த்து படித்து பஞ்சவன் மாதேவியின் வரலாற்றை தெரிந்துகொள்ள போகும் படி எங்களின் Natives OF Thanjavur Public Welfare Trust அறக்கட்டளை சார்பில் இந்த வரலாற்றை அந்த கோவில் வைத்துள்ளோம், இந்த வரலாற்றை படித்து அதை தொகுத்து எழுதும் பாக்கியத்தை அடியேனுக்கு வழங்கிய எங்கள் Natives OF Thanjavur Public Welfare Trust அறக்கட்டளை நண்பர்களுக்கு என் சிரந்தாழ்த்த நன்றிகள், நான் படித்து பரவசமடைந்த பஞ்சவன் மாதேவி வராலாற்றை இன்று பலரும் பார்க்கும் வண்ணம் அங்கே நிறுவியுள்ளோம், அதை என் கையால் எழுதி கொடுக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது என்பதை நினைக்கும் பொழுது வரும் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. எல்லாம் பஞ்சவன் மாதேவியின் அருள்.
IMG_20141102_122029


Thanks-Thiruganansambandham chandru