Search This Blog

Monday, December 23, 2013

பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்..!



* அசுவினி:-- செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

* பரணி:-- நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.

* கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.

* ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.

* மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.

* திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப் பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.

* புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.

* பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.

* ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.

* மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.

* பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.

* உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.

* அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.

* சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.

* சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.

* விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி, கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.

* அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.

* கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி, புகழ் மிக்கவர்.

* மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம் மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.

* பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர், வாக்குவாதத்தில் வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

* உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.

* திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.

* அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

* சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.

* பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.

* உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.

* ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.,,,
பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்..!

* அசுவினி:-- செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

* பரணி:-- நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.

* கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.

* ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.

* மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.

* திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப் பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.

* புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.

* பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.

* ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.

* மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.

* பூரம்: ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.

* உத்திரம்: நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.

* அஸ்தம்: ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.

* சித்திரை: ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.

* சுவாதி: புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.

* விசாகம்: வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி, கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.

* அனுஷம்: நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.

* கேட்டை: கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி, புகழ் மிக்கவர்.

* மூலம்: சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம் மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.

* பூராடம்: சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர், வாக்குவாதத்தில் வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

* உத்திராடம்: தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.

* திருவோணம்: பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.

* அவிட்டம்: கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

* சதயம்: வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.

* பூரட்டாதி: மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.

* உத்திரட்டாதி: கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.

* ரேவதி: தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.,,,

Thursday, December 19, 2013

ஒரு தம்பதியின் சிக்கல்கள் -இடாலோ கால்வினோ

தொழிலாளி ஆர்த்துரோ மஸொலோரி ஒரு தொழிற்சாலையில் காலை ஆறு மணிக்கு முடிவுறும் ஷிப்டில் வேலை செய்தான். வீட்டைச் சென்றடைய அவன் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. நல்ல சீதோஷ்ணத்தில் அவன் இத்தூரத்தை சைக்கிளிலும் மழை மற்றும் குளிர் காலத்தில் ட்ராம் வண்டியிலும் கடந்து சென்றான். ஆறே முக்காலிலிருந்து ஏழு மணிக்குள் ஏதோ ஒரு நேரத்தில் அவன் வீட்டை அடைந்தான். பொதுவாக அவன் மனைவி எலைட்டை எழுப்ப கடியாரத்தின் அலாரம் ஒலிப்பதற்கு சில சமயங்களில் முன்பாகவும் சில வேளைகளில் பின்பும் வீட்டிற்குள் நுழைவான்.
பல சமயங்களில் இரண்டு சப்தங்கள் - அலாரம் மற்றும் உள்ளே நுழையும் அவனுடைய italoகாலடிச் சத்தம் எலைட்டின் மூளையில் ஒன்றின் மேல் ஒன்றாகப் பதியும். தலையணையில் முகம் புதைந்து மேலும் ஒரு சில விநாடிகளுக்குக் கச்சிதமான காலை நேர உறக்கத்தைப் பிழிந்தெடுக்க முயலும் அவளுடைய உறக்கத்தின் ஆழத்தை அத்தகைய சப்தம் சென்றடைந்தது. அவள் சடக்கென்று படுக்கையிலிருந்து எழுந்து, தன்னிச்சையாகத் தனது கைகளை உடையினுள் நுழைத்துக்கொண்டு கண்ணை மறைத்து விழுந்திருந்த முடியை ஒதுக்கிக்கொண்டாள். சமையலறைக்குள் நுழைந்திருந்த ஆர்த்துரோவின் எதிரில் அவள் அந்தத் தோற்றத்திலேயே காட்சியளித்தாள். அவன் தான் வேலைக்கு எடுத்துச் செல்லும் பையிலிருந்து காலி பாத்திரங்களான சாப்பாடு டப்பி, பிளாஸ்கை வெளியே எடுத்து கழுவுவதற்காக அமைக்கப்பட்ட தொட்டியினுள் வைத்தான். அதற்குள்ளாகவே அவன் ஸ்டவ்வைப் பற்ற வைத்து காபி தயாரிக்க ஆரம்பித்திருந்தான். அவன் அவளைப் பார்த்ததும் அவள் இயல்பாக ஒரு கையால் தலைமுடியைக் கோதிக் கொண்டு கண்களை அகலத் திறந்தாள்.
தன் கணவன் வீட்டிற்கு வந்ததும் காணும் முதல் காட்சியாக, எப்போழுதுமே தாறுமாறான பாதி உறக்கத்தைத் தேக்கியவாறு தன் முகம் அமைந்ததற்காக அவள் ஒவ்வொரு முறையும் வெட்கப்படுவதைப்போலத் தோன்றியது. இருவர் இணைந்து உறங்கியிருந்தால் அது வேறு மாதிரி } காலையில் இருவரும் அதே தூக்கத்திலிருந்து விழிப்பின் மேல் தளத்தைத் தொடும்போது ஒரே சமனின் இருப்பார்கள். சில சமயங்களில் அவன் அலாரம் ஒலியெழுப்புவதற்குச் சற்று முன்பாகவே அவளை எழுப்ப, ஒரு சிறிய கோப்பை காப்பியுடன் படுக்கையறைக்குள் வருவான். பிறகு எல்லாமே மிக இயல்பாகப்படும். தூக்கத்திலிருந்து வெளிப்படும் போதிருக்கும் முகச்சுளிப்பு ஒருவிதமான சோம்பலான இனிமையாக மாறிப்போகும். சோம்பல் முறிக்க நீளும் நிர்வாணமான கைகள் அவன் கழுத்தை இறுகப் பற்றிக்கொள்ளும்.
எலைட் அவனைத் தழுவிக் கொண்டாள். ஆர்த்துரோ மழை புகாத மேல் கோட் ஒன்றை அணிந்திருந்தான். அவனை அவ்வளவு நெருக்கமாக உணரும்போது வானிலை எப்படிப்பட்டதாயிருந்தது என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவன் எந்த அளவிற்கு நனைந்தும் ஜில்லிட்டுப் போயும் இருக்கிறான் என்பதைப் பொறுத்து, வெளியே மழையா அல்லது பனிமூட்டமா அல்லது பனி விழுகிறதா என்பதை அவள் புரிந்துகொள்வாள். ஆனாலும் அவள் அவனைக் கேட்டாள்: "சீதோஷ்ண நிலை எப்படியிருக்கிறது?''
அவன் வழக்கமான பாணியில் முணுமுணுப்போடு எதிர்கொண்ட சிரமங்களையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து, பாதி கேலியுடன் கடைசியிலிருந்து துவங்கி சொல்ல ஆரம்பித்தான்: சைக்கிளில் செய்த பயணம், தொழிற்சாலையிலிருந்து வெளியே வந்தபோது எதிர்ப்பட்ட வானிலை, இதற்கு முந்தைய மாலையிலிருந்த சீதோஷ்ணத்திற்கும் இதற்குமிருந்த வேறுபாடு, வேலையின் கஷ்டங்கள்,வேலைப் பிரிவில் உலவும் வதந்திகள் இப்படியாக.
அந்நேரத்தில் வீடு சிறிதளவே சூடாக்கப்பட்டிருந்தது. ஆனால் எலைட் முழுவதுமாக ஆடைகளைக் களைந்து சிறிய குளியலறையில் குளிக்கத் துவங்கியிருந்தாள். பிறகு அவன் சந்தடியின்றி உள்ளே நுழைந்து ஆடைகளைக் களைந்து தொழிற்சாலையின் தூசு மற்றும் கிரீஸ் பிசுக்கினை மெதுவாகத் தேய்த்து அகற்றியபடி குளிக்க ஆரம்பித்தான். இருவரும் ஒரே குளியல் தொட்டியில் நிர்வாணமாய், சிறிது மரத்துப் போய், ஒருவரையொருவர் சமயங்களில் இடித்துக்கொண்டு ஒருவரிடமிருந்து ஒருவர் சோப்பு, பற்பசையை வாங்கியபடி நின்றுகொண்டிருந்தனர். பரிமாறிக் கொள்ளப்பட வேண்டிய செய்திகளைக் கூறும்போது நெருக்கத்தின் க்ஷணம் உருவானது. ஒருவர் முதுகை ஒருவர், ஒருவர் மாற்றி ஒருவர் உதவிகரமாகத் தேய்த்து விடும்போது ஒரு சிறு தழுவல் இடைப்புகுந்து பிறகு அணைப்பில் முடிந்தது.
ஆனால் திடீரென எலைட் உரத்த குரலில் கத்தினாள். "கடவுளே! நேரம் என்னவாயிற்று பாருங்கள்.'' அவள் தனது காலுறை கட்டும் பெல்ட்டையும் பிரஷ்ஷால் நீவி சீராக்கிக்கொண்டு, கொண்டை ஊசிகளை உதடுகளுக்கிடையில் பிடித்தபடி முகம் பார்க்கும் கண்ணாடிக்குத் தன் முகத்தைக் காட்டினாள். ஆர்த்துரோ அவன் பின்னால் வந்தான். ஒரு சிகரெட் அவன் வாயில் புகைந்து கொண்டிருந்தது. நின்றபடி அவன் புகைத்துக் கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். தான் ஒரு உதவியும் செய்ய முடியாத நிலையிலிருப்பதை நினைத்து சில சமயங்களில் சங்கடமாக உணர்ந்தான். எலைட் தயாராகி, நடைவழியில் மேல் கோட் ஒன்றை அணிந்தவுடன் இருவரும் ஒரு முத்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். அப்புறம் அவள் கதவைத் திறந்து படிகளில் இறங்கி ஓடிச்செல்வது கேட்டது.
ஆர்த்துரோ தனியனாக இருந்தான். படியிறங்கிச் செல்லும் அவளது காலடிச் சத்தத்தைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்தான். அவளது காலடிச் சத்தத்தை இனியும் கேட்க முடியாதுபோது, அவளை அவன் எண்ணங்களில் பின் தொடர்ந்தான். அவளது அந்த விரைவான சிற்றடிகளை முற்றத்தின் வழியாகக் கட்டிடத்தின் வெளிக் கதவின் வழியாக, நடைபாதை மீது, ட்ராம் நிறுத்தம் வரை தொடர்ந்தான். இதற்கு மாறாக, ட்ராமின் சப்தத்தை அவனால் தெளிவாகக் கேட்க முடிந்தது. ட்ராம் க்ரீச்சொலியிட்டபடி நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு பயணியும் படியை மிதித்து ஏறும் சப்தத்தைக் கேட்டான். அதோ அவள் ட்ராமைப் பிடித்து விட்டாள் என நினைத்தான். அவளைத் தினந்தோறும் தொழிற்சாலைக்கு இட்டுச்செல்லும் பதினொன்றாம் நெம்பர் ட்ராமில் ஆண்கள், பெண்கள், தொழிலாளர் கும்பல்களுக்கு மத்தியில் தன் மனைவி, ட்ராம் கைப்பிடியைத் தொற்றிக்கொண்டு நிற்பதை அவனால் காட்சிப்படுத்த முடிந்தது. அவன் சிகரெட் துண்டை அணைத்த பின் ஜன்னல் ஷட்டர்களை இழுத்து மூடி, அறையை இருட்டாக்கி, படுக்கையில் விழுந்தான்.
எலைட் எழுந்தபோது, எப்படி விட்டுச்சென்றாளோ அப்படியே இருந்தது படுக்கை. ஆனால் அவனுடைய படுக்கைப் பகுதி மட்டும் இப்போதுதான் விரிக்கப்பட்டது போல கசங்கலில்லாமல் இருந்தது. அவன் படுக்கையின் தனது பகுதியில் சரியாகப் படுத்துக் கொண்டான். ஆனால் சிறிது நேரத்தில் படுக்கையில் தன் மனைவி விட்டுச் சென்ற, வெதுவெதுப்பு நிலைத்திருந்த பகுதிக்கு ஒரு காலை அவன் நீட்டினான். பிறகு இன்னொரு காலையும் அங்கே நீட்டினான். எனவே, சிறிது சிறிதாக அவன் எலைட் படுத்திருந்த பகுதிக்கு, இன்னமும் அவளுடைய உடலின் வடிவத்தைத் தக்க வைத்துக்கொண்டிக்கிற அந்தக் கதகதப்பின் குழிவிற்குள் முழுவதுமாக நகர்ந்தான். எலைட்டின் தலையணைக்குள் அவளுடைய வாசத்திற்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டே அவன் உறங்கிப் போனான்.
எலைட் மாலையில் வீடு திரும்புகிற நேரத்தில் ஆர்த்துரோ சுறுசுறுப்பாக வீட்டில் வளைய வந்துகொண்டிருந்தான். ஸ்டவ்வைப் பற்றவைத்துவிட்டு எதையோ சமைத்துக்கொண்டிருந்தான். படுக்கையை ஒழுங்குபடுத்துவது, வீட்டைப் பெருக்குவது, அழுக்குத் துணிகளை ஊற வைப்பது போன்ற சில வேலைகளை இரவு உணவிற்கு முன்பாக அவன் செய்து முடிப்பான். இவை எல்லாவற்றையும் எலைட் விமரிசிப்பாள். ஆனால் ஆர்த்துரோ, உண்மையில் இந்த வேலைகளைச் செய்ய மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. மாறாக அவன் அவளுக்காகக் காத்திருக்கும் சமயத்தில் செய்யும் ஒருவிதச் சம்பிரதாயங்கள் அவை, வீட்டின் சுவர்களுக்குள் இருந்தபடியே அவளை அவன் பாதி வழியில் எதிர்கொண்டு சந்திப்பதைப் போன்று. மாலையில் கடைகளுக்குச் செல்ல முடிகிற பெண்கள் வசிக்கும் அந்தச் சுற்று வட்டாரத்தின் தெருவிளக்குகள் எரியத் தொடங்கும்போது, தாமதமாகத் துவங்கிய பரபரப்பான சூழலினூடே, எலைட் கடைகளைக் கடந்து வந்து கொண்டிருக்கும் நேரத்தில், ஆரத்துரோ இவ்வேலைகளைச் செய்வான்.
இறுதியில் மாடிப்படிகளில் ஏறும் அவளுடைய காலடிச் சத்தத்தை அவன் கேட்டான். இச்சத்தம் காலையில் இருந்ததைவிட முற்றிலும் வேறாக கனமாகக் கேட்டது. ஏனெனில், எலைட் ஒரு நாளைய உழைப்பிற்குப் பின் களைத்துப் போயும் கடைகளில் வாங்கிய பொருட்களின் கனத்தைச் சுமந்தபடியும் மாடிப்படியேறி வந்தாள். ஆர்த்துரோ மாடிப்படிகளின் மட்டப் பகுதிக்குச் சென்று பொருட்கள் நிறைந்த பையை அவளிடமிருந்து வாங்கிக்கொண்டு பேசியவாறே அவளுடன் வீட்டினுள் நுழைந்தான். எலைட் தன் கோட்டைக் கூட கழற்றாமல் சமையலறையின் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தாள். அவன் பையிலிருந்து பொருட்களை வெளியே எடுத்து வைத்தான். பிறகு எலைட் ""சரி, நாமிருவரும் சற்று சுதாரித்துக்கொள்வோம்'' என்றாள். அவன் எழுந்து நின்று மேல் கோட்டைக் கழற்றி வீட்டினுள் அணியும் அங்கியைப் போட்டுக்கொண்டாள். அவர்கள் உணவைத் தயாரிக்க ஆரம்பித்தனர். அவர்களிருவருக்குமான இரவு உணவு, தொழிற்சாலையில் இரவு ஒரு மணி இடைவேளையில் அவன் சாப்பிட எடுத்துச் செல்லும் உணவு மற்றும் அவன் தூங்கி எழும்போது தயாராக இருக்கப்போகும் காலை பலகாரம் ஆகியவற்றைத் தயாரித்தனர்.
அவன் விட்டுவிட்டுச் சிறுசிறு வேலைகளைச் செய்தபின் சற்று நேரம் நாற்காலியில் உட்கார்ந்து அவன் என்ன வேலை செய்ய வேண்டும் எனக் கூறினாள். இதற்கு மாறாக அவனைப் பொறுத்தவரை அவன் ஓய்வாக உணர்ந்தான். தீர்மானத்தோடு காரியங்களைச் செய்தான். ஆனால் எப்போதுமே சிறிய மறதியாய், அவன் மனது பிற விஷயங்களில் ஈடுபட்டவாறிருந்தது. இத்தகைய சமயங்களில் ஒருவர் மற்றவரை எரிச்சலடையச் செய்து, கடுமையான வசைகளைப் பரிமாறிக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு. ஏனெனில் அவன் செய்யும் காரியங்களில் மேலும் அதிக கவனம் கொள்ள வேண்டுமென்று அவள் விரும்பினாள். அல்லது அவன் தன்னிடம் மேலும் பிணைப்பாகவும், நெருக்கமாகவும் இருந்து தன்னை அதிகப்படியாக ஆறுதல்படுத்த வேண்டுமென்று அவள் விரும்பினாள். ஆனால் எலைட் வீட்டிற்குள் நுழைந்த போதிருந்த முதல் உத்வேகத்திற்குப்பிறகு, அவனுடைய மனம் அதற்குள்ளாகவே வீட்டிற்கு வெளியே அலை பாய்ந்தது. அவன் சிறிது நேரத்தில் வேலைக்குச் சென்றாக வேண்டியிருப்பதால் தன்னைத் துரிதப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருந்தான்.
உணவருந்துவதற்கான மேசையைத் தயார் செய்து, பின்னர் அவர்கள் மேசையிலிருந்து எழவேண்டியில்லாதபடிக்கு, சமைக்கப்பட்ட உணவுகளைக் கைக்கெட்டும் தூரத்தில் மூழ்கடித்த கணம். இருவரும் சேர்ந்திருக்கும் நேரம் மிகக்குறைவானது என்ற சிந்தனையினாலும் அவ்விடத்திலேயே இருவரும் கைகளைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துகொள்ள வேண்டுமென்ற தவிப்பினாலும் உணவு நிரம்பிய ஸ்பூனை வாயருகே கொண்டு செல்வது கூடச் சிரமமாக இருந்தது.
ஆனால் பாத்திரத்தில் காபி பொங்கி வழிவதற்கு முன்பாகவே அவன் தன் சைக்கிளினருகே சென்று எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். பிறகு இருவரும் இறுகத் தழுவிக் கொண்டனர். அப்போதுதான், தன் மனைவி எவ்வளவு மிருதுவாகவும் கதகதப்பாகவும் இருக்கிறாளென்பதை ஆர்த்துரோ உணர்ந்த மாதிரி தோன்றியது. ஆனால் உடனே அவன் சைக்கிளைத் தோளில் சுமந்து எச்சரிக்கையுடன் படியிறங்கிப் போனான்.
எலைட் பாத்திரங்களைக் கழுவினாள். வீடு முழுவதையும் மேற்பார்வையிட்டாள். மறுப்பு தெரிவிக்கும் வகையில் தலையை அசைத்து ஆர்த்துரோ செய்துவிட்டுச் சென்ற வேலைகளை மறுபடியும் சீர்படுத்தினாள். இப்பொழுது அவன் விளக்குகள் குறைவான தெருக்களின் வழியே விரைந்து சென்று கொண்டிருந்தான். ஒருவேளை அவன் அதற்குள்ளாக காஸ் டாங்கைக் கடந்து சென்றிருக்கக் கூடும்.
எலைட் படுக்கையில் படுத்து விளக்கையணைத்தாள். தனது பகுதியில் படுத்திருந்த அவள் கணவனுடைய கதகதப்பைத் தேடி, ஒரு காலை அவன் படுக்கும் பகுதிக்கு நகர்த்தினாள். ஆனால் ஒவ்வொரு முறையும் தான் உறங்கும் இடம்தான் அதிக கதகதப்பாக இருப்பதை உணர்ந்தாள். ஆர்த்துரோவும் அங்கே உறங்கியதற்கான அடையாளத்தினால் அவள் பெரும் மன நெகிழ்ச்சியை உணர்ந்தாள்.
*******
நூல்: மஞ்சள்பூ 
(இடாலோ கால்வினோ, டொனால்ட் பார்த்தெல்மே, இஸபெல் ஆலெண்டே, கேப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ், ஜூலியோ கொர்த்தஸôர் சிறுகதைகள்)   தொகுப்பு: தளவாய்சுந்தரம் வெளியீடு: சந்தியா பதிப்பகம்

Wednesday, December 18, 2013

நற்கிள்ளி (வரலாறு).


நற்கிள்ளி (வரலாறு).
================

ஊர் எனப்படுவது உறையூர் (தமிழகத்தில் உள்ள பழைமையான ஊர்களில் ஒன்று) ஆகும். இது, சோழ அரசர்களுடைய தலைநகரங்களுள் ஒன்று; மிகவும் பழையது; அறம் பிறழா அவையை உடையது; நீடு புகழ் பெற்றது.

இவ்வூரைச் சுற்றி மலை உண்டு; மதில் உண்டு, காவற்காடு உண்டு; வளம் நிறைந்த வயல்கள் உண்டு. மேலும், இவ்வூர்க் கோழி ஒன்று யானை யானை வென்ற நில மாண்பு உடையது. அதனால், கோழியூர் என்றும் இதனைக் கூறுவர்.

இத்தகைய வளம் மிக்க நகரில் இருந்து சோழப் பெருநாட்டை ஆண்ட அரசர்கள் பலர் ஆவர். அவர்களுள் ஒருவன் தித்தன் என்பவன்.

இவன் ஒரு பெரு ங்கொடைவள்ளல்; பெரும் படை உடையவன்; வீரன்; குடிமக்கள் குறை தவிர்க்கும் கொற்றவன்; மற்போர் புரிவதில் வல்லவன். இவருக்கு மக்கள் இருவர் இருந்தனர். மூத்தவள் ஐயை. அவளை அறிந்த அளவு அவன் தந்தையாகிய தித்தனை மக்கள் அறிந்திலர்.

தந்தையைச் சுட்டி மக்களை அறிமுகம் செய்து வைப்பதே உலகியல் மரபாகும். ஆனால், அதற்கு மாறாக, மகளைக் காட்டித் தந்தையை அறிமுகம் செய்து வைக்க வேண்டிய நிலை, ஐயை அழகால் ஏற்பட்டது. அதனால், அனைவரும், "ஐயை தந்தை தித்தன்" என அவனை அழைத்தனர்.

ஐயை அத்துணை உயர்ந்தவள்; சிறந்தவள்; பேரழகு மிக்கவள்; கவின் நிறை காட்சி உடையவள். இளையவன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி.

பெருநற்கிள்ளி கவின் மிகு வனப்புடையவன்; பேராண்மை நிறைந்த இளைஞன்; மற்போர் புரிவதில் மாவீரன்; விற்போர் புரிவதிலும் வீரம்; நல்ல உடற்கட்டும் உடையவன்.

தித்தனுக்கு யாது காரணத்தாலோ தன் மகன் நற்கிள்ளி மீது வெறுப்பு உண்டாயிற்று. அதனால், இருவரிடையேயும் ஒற்றுமை குறைந்தது; வேற்றுமை விரிந்தது. பகைமை வளர்ந்தது.

தந்தையாரோடு பகை கொண்டான் நற்கிள்ளி. ஆயினும் அவரோடு போரிட்டு அவரை அழிக்க எண்ணினான் இல்லை. தந்தையைப் பிரிந்தான். நாட்டை விட்டு அகன்றான்; தொண்டை நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய முக்காவல் என்னும் நாட்டைச் சேர்ந்த ஆமூரை அடைந்தான்; அங்கேயே தனித்து வாழ்ந்திருந்தான்.

ஆமூர் மற்போர் புரியும் மல்லர்க்கும் மற்போருக்கும் பேர் பெற்றது. அழகான அகழிகையும் அரிய காவலையும் உடையது.

அவ்வூரில் மல்லருள் சிறந்தவன் ஒருவன் இருந்தான். அவன் தனக்கு இணையாகப் போர் புரியக் கூடிய மல்லர் ஒருவரும் இக் கடல் சூழ் உலகமெங்கணும் இல்லை என்ற தருக்குடன் விளங்கினான்.

உள்ளபடியே அவன் புரிந்த மற்போர் அனைத்திலும் நிழல் போல் வெற்றி மகளே அவனைத் தொடர்ந்து திரிந்தாளே தவிர, தோல்வி மகள் அவனைத் தொட்டது கூட இல்லை. இத்தகைய மல்லனின் ஆற்றற் சிறப்பை அறிந்தனர் அவ்வூர் மக்கள். அதனால், அவனை, "ஆமூர் மல்லன்" என்று பெயரிட்டு அழைத்தனர்; பலவாறு புகழ்ந்தனர்.

ஆமூரை அடைந்த நற்கிள்ளி, அங்கு மல்லனொருவன் செருக்குற்றுத் திரிவதை கேள்விப்பட்டான்; அவன் மீது பகை கொண்டான்; உடனே, அவனது இருப்பிடம் தேடிச் சென்றான்; அவனைத் தன்னுடன் போர் புரிய வருமாறு அழைத்தான். இதைக் கேட்ட மல்லன் எள்ளல் நகை புரிந்தான்; இகழ்ந்து பேசினான்.

அவனுடைய பேச்சும் நகைப்பும் பெருநற்கிள்ளிக்கு உணர்ச்சியை எழுப்பின; கிளர்ச்சியை ஊட்டின. கண்கள் சிவந்து கோவைப்பழம் போல் ஆயின.

"இவற்றால் எல்லாம் உன் பெருமை விளங்கமாட்டா! நீ வல்லவனானால் வா, என்னுடன் போர் புரிய; இல்லையானால் உனக்குப் பேச்செதற்கு? நகைப்பெதற்கு? என்னைப் பணிந்து போ! அதுவே மேலானது" என்று வீர முழக்கமிட்டான் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி.

பெருநற்கிள்ளி பேராண்மை யுடையவன் எனப் பலராலும் பாராட்டப்படுவதை முன்னரே ஆமூர் மல்லன் கேட்டிருந்தான். அவ்வாறு பாராட்டப்படுவதைக் கேட்கக் கேட்க அவன் மனம் பொறுமை இழந்தது. அதனால், அவன் மீது பகை கொண்டு அவனை அழிக்க ஏற்ற சமயத்தை எதிர்பார்த்திருந்தான். அதனால், அவன் மீது புலியெனப் பாய்ந்துவிட்டான் மல்லன்.

மல்லன் பாய்ந்ததைப் பெருநற்கிள்ளி வெறுமே பார்த்துக் கொண்டா இருப்பான்? அவனும் சிங்கமெனச் சீறி எழுந்தான். இருவரும் மற்போர் புரியலாயினர்.

ஊர் மக்கள் எல்லோரும் மற்போர் காண வெள்ளம் போல் ஒன்று திரண்டு கூடினர். ஒழுங்குற நின்று வேடிக்கை பார்த்தனர்.

இருவரும் போர்த்திறங்கள் பலவற்றை வரிசை வரிசையாகக் காட்டிப் போர் புரிந்தனர்; போர் நுணுக்கங்கள் பல வெளிப்படலாயின.

நற்கிள்ளி வேறு நாட்டவன்; முக்காவல் நாட்டினையோ, ஆமூரினையோ சேராதவன். ஆதலால், மக்கள் அவனது இயல்பும், தகுதியும், திறமையும் தெரியாது வியந்தனர்; போர் முடிவு பற்றிப் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர்.

உள்ளபடியே வெற்றி தோல்வி இன்னாருக்குத் தான் என்பதை உறுதிபடுத்த முடியாத அளவுக்குப் போரும் மிக மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல மல்லன் சோர்வுறலானான். கிள்ளியின் கை ஓங்கியது. ஆற்றல் பெற்ற பெருநற்கிள்ளி ஆமூர் மல்லன் மீது பாய்ந்தான்; அவனது மார்பின் மீது முழங்கால் ஒன்றினை மண்டியிட்டு வைத்து ஊன்றி அழுத்தினான்; மற்றொரு காலை அவன் காலில் வைத்து, அவனைச் சிறிதும் அசைய இயலாவண்ணம் அமுக்கினான். மல்லன் ஆற்றல் குன்றினான்.

மல்லனுடைய காலும் தலையும் வேறு வேறு ஆயின! அவற்றை தூக்கி வீசி எறிந்தான். எல்லோரும் பெருமுழக்கம் செய்தனர். வெற்றி நற்கிள்ளிக்கே என ஆயிற்று. அவனை மக்கள் புகழ்ந்து பாராட்டினர். அதில் புலவர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் சாத்தந்தையார் என்பது. அவரும் ஆமூர் மக்களைப் போலவே பெருநற்கிள்ளியின் போர் வல்லமையை வியந்து பாராட்டினார்.

(புறம்-80)

ஓர் அழகான உவமையின் வழியாகக் கிள்ளியினுடைய கைகளின் விரைவினைப் படம் பிடித்துக் காட்டினார்.

"இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே;
நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்

போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லற் கடந்துஅடு நிலையே"

இதன் பொருள்:-

இனிமையும் புளிப்பும் கூடிய (அழன்ற ) கள்ளையுடைய ஆமூரில் வலிமை பொருந்திய மற்போர் வீரன் ஒருவனின் மிக்க வலிமையை அழித்து, ஒரு கால் அவன் மார்பிலும், மற்றொரு கால் அவன் சூழ்ச்சியைத் தடுக்கும் வகையில் அவன் முதுகிலும் வைத்துப் பசியோடு மூங்கிலைத் தின்ன முயலும் யானையைப்போல் தலையும் காலும் ஆகிய இரண்டும் முறிய மோதிப் போரவையில் மற்போர் புரிய வந்த மல்லனை எதிர்த்து நின்று அவனைக் கொன்ற நிலையை வெல்லும் போரினையுடைய பொருதற்கரிய இவன் தந்தையாகிய தித்தன் விரும்பியோ அல்லது விரும்பாமலோ காண்பானாக.

இதுவே சாத்தந்தையார் படம் பிடித்துக் காட்டிய கவிதை ஓவியம் ஆகும். இதனைக் கேள்விப் பட்ட மக்களிற் பலர், புலவரின் கவிதைத் திறத்தையும் உவமை அழகையும் பாராட்டி மகிழ்ந்தனர். வெற்றி பெற்ற பெருநற்கிள்ளி புலியைக் கொன்ற சிங்கம் போல காட்சியளித்தான்.

பிறகு பெருநற்கிள்ளி ஆமூரை விட்டு உறையூரை அடைந்தான். அந் நகர் வணிகன் மகன் ஒருத்தியை, நக்கண்ணை என்னும் பெயருடைய நல்லாளை, பல்லோர் வாழ்த்த வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டான்.

பின்னர்த் தந்தையில்லாக் குறையைத் தவிர்த்து, மக்கள் பாராட்டச் சோழ நாட்டை ஆண்டு வரலாயினான்.

வரவேற்பு.....!

வரவேற்பு.....!

.யேசுராசா



ஸ்ரீலங்கா புத்தகசாலை'யிலிருந்து 'தாமோதர விலாசி'ற்குள் நான் நுழைந்தபோது வெட்கப்பட்டுச் சிரித்துக் கொண்டு, அவன் என்னை வரவேற்றான். நானும் பதிலுக்கு சிரித்தேன்.

கைகழுவிட்டு உள்ளுக்குள் சென்று அமர்ந்தபோது முன்னுக்கு வந்து 'என்ன சாப்பிடுறீங்க' என்று ஆதரவாகக் கேட்டான்.

நான் சொல்லியபடி அவன் கொண்டுவந்து வைத்த வடையைச் சாப்பிடத் தொடங்கியபோது,

'உங்கட ஊர் இங்கையா? லீவில வந்தனீங்க போல?'

'ஓம்' நான் தலையை ஆட்டினேன்.

'எங்க?'

'குருநகர், பழைய போஸ்ற் ஒவ்வீஸ்... அதுக்கங்கால கொஞ்சம் போகவேணும்.'

'நான் அங்கால போகஇல்லை'

மேலே ஒன்றுமே தோன்றாதபடி நின்றான். பழையபடி அதே வெட்கம் நிறைந்த சிரிப்பு.

நான்தான் தொடர்ந்தேன்.

'அந்த கொழும்புக் கடைய ஏன் விட்டனீர்?'

'சம்பளங் காணாது'

'இஞ்சவந்து, இப்ப எத்தின மாதம்?'

'அஞ்சு மாதம்'

'அங்கையும் இப்ப எல்லாம், புது ஆக்கள்'

'ரீ மேக்கர்.....?'

' அந்தாள், பழைய ஆள்.'

அவன் உள்ளுக்குப் போனான்.

'இதார்?' யாரோ கேட்டார்கள்.

'நான் நிண்ட கொழும்புக் கடைக்கு சாப்பிடவாற........'

அது அவனின் குரல்தான். வேறு ஒன்றும் கேட்கவில்லை.

வடையைச் சாப்பிட்டுவிட்டு தேத்தண்ணீருக்குச் சொல்ல ஆளைப் பார்த்தபோதும் அவன் வரவில்லை, வேறொரு பெடியன் வந்தான்.

நான், 'ஷஸ்றோங்கப் ரீ'க்குச் சொல்லிவிட்டு இருந்தேன்.

அப்போது, அவன் என்னைக் கடந்து முன்னுக்கு.... கஷpயர் மேசைக்குக் கிட்டப் போனான். உடனே திரும்பி வந்தவன் என்னைப் பார்த்துவிட்டு, மெல்லிய ஓட்டத்தோடு உள்ளுக்குச் சென்று 'கப் ரீ'யை எடுத்து வந்தான்.

'ரீ'யைக் குடித்துவிட்டு பக்கத்துக் கதிரையிலிருந்த புத்தகப் பார்சலையும் எடுத்துக்கொண்டு எழும்ப ஆயத்தமானபோது அவன் சொன்னான்:

'பில்ல நான் குடுத்திற்றன்.'

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

'எங்க?' நான் கேட்டேன்,

'இல்ல.... நான் அங்க குடுத்திற்றன், இப்பதான் காசு குடுத்தனான்' என்றபடி அதே வெட்கச் சிரிப்புடன் கஷpயரைக் காட்டினான்.

நான் எதிர்பார்க்கவேயில்லை! எழும்ப ஆயத்தமானவன் அப்படியே கதிரையில் இருந்தேன், எனக்கு ஒரே ஆச்சரியம், இப்பொழுதான் அவன் உள்ளுக்குப் போய் விட்டு வந்தது விளங்கியது.

உடனே எழுந்து சென்றுவிடாதபடி, அவனது செய்கை என்னைக் கட்டுப்படுத்தியது. அவனோடு இன்னும் நெருங்க வேண்டுமென்று நினைத்து,

'உம்மட பேர்...? வேதம் என்று தெரியும்: பேர் ஞாபகத்திற்கு வருகுதில்லை...' என்றபடி அவனைப் பார்த்தேன்.

அவன் சிரித்தபடி சொன்னான். 'மரியசூசை'

'இப்பயும் அங்க ஒரு வேதக்காறப் பெடியன் நிக்கிது: பேர் அந்தோனியாயிருக்க வேணும்'

'....! எனக்குத் தெரியாது'

தொடர்ந்து ஓர் மௌனம்.

நேரம் போய்க் கொண்டிருந்தது: பப்ளிக் லைபிறறிக்கும் போக வேணும்.

அந்த இதமான மௌனத்தொடேயே நான் போவதற்காக எழும்பி,

'அப்ப.... நான் வாறன்' என்று சொன்னபோது அவன் சரி என்பதைப்போல் தலையாட்டி, என்னைத் தொடர்ந்து வந்தான்,

கஷpயரும் பழ்கியவரைப்போல் சிரித்தார்.

'சரி: அப்ப நான் வாறன்....' என்று அவனுக்குச் சொல்லியபடி வெளியே வந்தேன்.

சைக்கிளை எடுத்து ஏறி அமர்ந்து ஓடியபோதும், அவனின் ஞாபகம்...

'மரிய சூசை....'

வெள்ளவத்தையில, 'மஹா லக்சுமி பவானில' நாங்க கதைச்சிருக்கிறம். தேத்தண்ணீர்க் கடைப் பெடியங்களில, எனக்கு எப்பவும் அனுதாபம், காலமையில இருந்து ராப் பத்து மணிவரை, ...! இந்த நீண்ட நேரம் இவங்க வேலை செய்ய வேணும்.....

கடைக்கு வந்தபோது நான் ஆதரவாக நடந்து கொண்டது அவனை என்மேல் ஈடுபாடு கொள்ளச் செய்திருக்கலாம். அவனின் தோற்றத்திலும், பழக்கத்திலும் எனக்கும் ஒருவித பிடிப்பு. எப்பவோ ஒருக்கா அவனின் பேரைக் கேட்டு வேதக்காரனெனத் தெரிந்தபோது எனக்கு ஆச்சரியம். அவனது ஊர் நாவலப்பிட்டி. 'அப்ப தோட்டக் காட்டிலும் வேதக்காறர் இருக்கினம்....'

நானும் வேதக்காரனென்பதை அவனுக்குத் தெரியப்படுத்தினபோது அவனுக்கு ஆச்சரியம். மேலும் ஒருவித அக்கறையுடனும் மரியாதையுடனும் அவன் நடந்துகொண்டான். இதைவிட குறிப்பிடத்தக்க தொடர்பு ஏதும் எனக்கும் அவனுக்குமில்லை.

இப்ப, யாழ்ப்பாணத்தில அஞ்சு மாதத்திற்குப் பிறகு அவனைச் சந்தித்தபோது, தனக்குத் தெரிஞ்ச ஒருவரை பழக்கமானவரை, தன்னுடைய வீட்டில்... கடையில், வரவேற்க விரும்பினானா.......?

'மரிய சூசை....'

இதை என்னால் மறக்க முடியாது!.