Search This Blog

Monday, July 29, 2013

தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.

முன்னுரை
 தமிழர்கள் காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. அதன் படிநிலை வளர்ச்சியை இக்கட்டுரையில் காண்போம்.
தொல்காப்பியர் கூறும் கதை மரபு
கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,
                            ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்’ ன்று உரைப்பார்.
சிறுகதைக்கான இலக்கணம்
அரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பர் எட்கார் ஆலன்போ. சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் இதன் உத்திகளாகும். அதனால் நீண்ட வருணனைகளுக்கு இங்கு இடமில்லை. குதிரைப் பந்தையம் போலத் தொடக்கமும் முடிவும் சுவைமிக்கனவாக இருத்தல்வேண்டும் என்பர் செட்ஜ்விக். புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராசாசி. செகாவிவ் என்பவர் தரமிக்க சிறுகதைகளைத் தந்து சிறுகதைப் படைப்புக்கான நோபல் பரிசைப் பெற்றார். .இவரைச் சிறுகதை உலகின் தந்தை என அழைப்பர்.
சிறுகதை தோன்றிய சூழல்
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்துதமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும்ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது.  வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன.  இவ்வகையில் முதன்முதலில் அச்சில்வந்தது வீரமாமுனிவரின் பரமார்த்த குருவின் கதை’ அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள்,திராவிட பூர்வகாலக்கதைகள்தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின.  இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும் அதிகமானது.
தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகள்
·         வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து வினோத ரசமஞ்சரிஎன்று வெளியிட்டார்.
·         வ. வே. சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியது விவேக போதினி ஆகும்இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டார்.குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதைமங்கையர்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமைகால ஒருமைபாத்திர ஒருமைஉணர்வு ஒருமை என்ற சிறுகதைக்குரிய இலக்கணம் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம்.
·         செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற தொகுப்பு பெரிதும் பாராட்டப் பட்டது.
·         ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா குறிப்பிடத்தக்கவர்.  இவரது குசிகர் குட்டிக்கதைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம்விதவைகள் பட்ட துயர்வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர்.
·         மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
·         கல்கி அவர்கள் சிறுகதைத் துறையில் கால்வைத்து, புதினங்களால் புகழடைந்து கல்கி இதழைத் தொடங்கினார். இவரது கதைகளில்  கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பித்தக்கன.
·         சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டார். கேலியும்,கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டியது.சிறுகதைச் செல்வர் என்றும், தமிழ்நாட்டின் மாப்பசான் எனப் போற்றப்பட்டார். இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம், பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும்.
·         மௌனி என்ற புனைப் பெயரில் எழுதிய மணி அவர்களைப் புதுமைப்பித்தன் சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைப்பார்
இதழ்களால் வளர்ந்த சிறுகதை
தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது         டி. எஸ். சொக்கலிங்கம்ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன்கு.ப.ராஜகோபாலன்ந.பிச்சமூர்த்திமௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள். தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம்,சி. சு. செல்லப்பாலா.ச.ராமாமிருதம், ஜெயகாந்தன்சுந்தரராமசாமிகு அழகிரிசாமி,  தி. ஜானகிராமன்]கி. ராஜநாராயணன்மு.வ, அகிலன் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
முடிவுரை
காலத்துக்கு ஏற்ப வளர்ந்து வந்த தமிழ்ச்சிறுகதை இன்றைய அவரசகாலத்துக்கு ஏற்ப ஒருபக்கக் கதை,அரைப்பக்கக் கதைகால்பக்கக் கதைமைக்ரோக் கதை என தன் வடிவத்தை மாற்றிக்கொண்டுள்ளதுஉலகசிறுகதைகளுக்கு  இணையாக தமிழ்ச்சிறுகதை இலக்கி்யத்தை வளர்தெடுத்த எழுத்தாளர்களைத் தமிழுலகம்என்றும் மறக்காது.

Kamadhenu

KAMADHENU, the sacred cow, is a part and parcel of Hindu mythology. She is the cow, which grants all wishes and desires. She is the cow of plenty, which emerged from SAMUDRAMANTHAN (the churning of the ocean) and taken by seven gods, who compose the constellation of the Great Bear in the sky. She is also called SURABHI, SHAVAL, ADITI and KAMDUH. She is the mother of all cows.

According to mythological accounts, Brahma created the Brahmins and the Cow at the same time, the Brahmins were to recite Vedas and scriptures while the cow was to afford ghee (clarified butter) for burnt-offerings in religious sacrifices. The cow is deemed to be the mother of gods and is declared by Brahma to be a proper object of worship. The unclean places are purified with cow-dung and in rural areas still the cow-dung is to be used to rub the ground of the doorway, which is the first act in the morning.

Amongst orthodox Hindus she is worshipped on the first of VAISHAKH, when Brahma created the cow. The milkmen paint the horns and hoofs of their cattle yellow or saffron and bathe them in the river. Whoever kills a cow or allows another to kill it, shall rot in hell, as many years as there are hairs upon his body. A child born under unlucky stars is passed under the body of a cow to offset the effects.

KAMADHENU - THE MOTHER OF ALL COWS

Moreover cow plays a very important role in the cult of god Krishna. It follows the cowherd Krishna through his life on earth and also symbolizes with its four legs the four Vedas of the Hindus. Every part of cow's body has a religious significance. Its horns symbolize the gods, its face the sun and the moon, its shoulders Agni, the god of fire, and its legs the Himalayas.

Cow also symbolizes Dharma itself. It is said to have stood steadily upon the earth with its four feet during the SATYUG (world's first age of truth), upon three feet during the, TRETAYUG (the second stage of less than perfection), upon two feet during the DWAPARYUG (the third stage of dwindling and disappearing perfection) and only on one leg during KALIYUG (the fourth and current age

Some temples and houses have images of Kamadhenu, which are worshipped. However, she has never had a worship cult dedicated to her and does not have any temples where she is worshipped as the chief deity. In Monier-Williams's words: "It is rather the living animal [the cow] which is the perpetual object of the object" Cows are often fed outside temples and worshiped regularly on all Fridays and on special occasions. Every cow to "a pious Hindu" is regarded as an Avatar (earthly embodiment) of the divine Kamadhenu

Kamadhenu-Surabhi's residence varies depending on different scriptures. The Anushasana Parva of the Mahabharata tells how she was given the ownership of Goloka, the cow-heaven located above the three worlds (heaven, earth and netherworld): the daughter of Daksha, Surabhi went to Mount Kailash and worshipped Brahma for 10,000 years. The pleased god conferred goddess-hood on the cow and decreed that all people would worship her and her children – cows. He also gave her a world called Goloka, while her daughters would reside on earth among humans.

n one instance in the Ramayana, Surabhi is described to live in the city of Varuna – the Lord of oceans – which is situated below the earth in Patala (the netherworld). Her flowing sweet milk is said to form Kshiroda or the Kshirasagara, the cosmic milk ocean. In the Udyoga Parva book of the Mahabharata, this milk is said to be of six flavours and has the essence of all the best things of the earth.. The Udyoga Parva specifies that Surabhi inhabits the lowest realm of Patala, known as Rasatala, has for daughters – the Dikpalis – the guardian cow goddesses of the heavenly quarters: Saurabhi in the east, Harhsika in the south, Subhadra in the west and Dhenu in the north.

Apart from Goloka and Patala, Kamadhenu is also described as residing in the hermitages of the sages Jamadagni and Vashista. Scholar Mani explains the contradicting stories of Kamadhenu's birth and presence in the processions of many gods and sages by stating that while there could be more than one Kamadhenu, all of them are incarnations of the original Kamadhenu, the mother of cows.
Photo: Kamadhenu  

தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.

கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.  இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ்நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது.

தமிழ்நாடகத்தின் தொன்மை
·          தொல்காப்பியர் ”நாடக வழக்கினும்” என்று நாடகத்தைக் குறிப்பிடுகிறார்.
·          சிலப்பதிகாரம் நாடகக்கூறுகளுடன் நாடகக் காப்பியமாகவே திகழ்கிறது.
·    அகத்தியம்,குணநூல், கூத்தநூல், சயந்தம்மதிவாணர் நாடகத் தமிழர்,  முறுவல் போன்ற  நாடக நூல்கள்பழந்தமிழர் வழக்கில் இருந்தன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுச் செல்கிறார்.

சங்ககால கூத்துகள்
       குறவைக் கூத்து, துணங்கைக் கூத்து, ஆடிப்பாவை போன்ற கூத்துவகைகளை சங்ககாலத்தில் காணமுடிகிறது.

இருவகை நாடகங்கள்
       வேத்தியல், பொதுவியல் என நாடகங்களை இருவகையாகப் பகுக்கலாம். வேத்தியல் என்பது வேந்தனுக்காக நடித்துக்காட்டப்படுவதாகும், பொதுவியல் என்பது மக்களுக்காக நடித்துக்காட்டப்படுவதாகும்.

இருண்ட காலம்
       சமண, புத்த சமயங்கள் கலைகளுக்கு எதிராக செயல்பட்டதால் இருண்ட காலத்தில் நாடகத்தமிழ் ஒளியிழந்தது.

பல்லவர் கால நாடகங்கள்
       நாயன்மார்களும், ஆழ்வார்களும் இசைக் கலைக்கு உயிரூட்டினர். எனினும் நாடகத்துக்கு பெரிய செல்வாக்கு ஏற்படவில்லை. இக்காலத்தில் மகேந்திர வர்ம பல்லவனின் “மத்தவிலாச பிரகசனம்“ என்ற நாடகநூல் புகழ்பெற்றிருந்தது. இன்னிசைக்கூத்து, வரலாற்றுக் கூத்து என இருவகை நாடக மரபுகளும் இக்காலத்தில் இருந்தன.

சோழர் கால நாடகங்கள்
       சோழர் காலத்தில் இராஜராஜனின் வெற்றிச்சிறப்பைப் பாராட்டும் “இராஜராஜவிஜயம்“ நிகழ்த்தப்பட்டது. இதில் நடித்தவர்களுக்கு “ராசராச நாடகப்பிரியன் என்று பட்டம் வழங்கினர் என்பதைக் கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது.

தமிழ் நாடகத்தின் எழுச்சி
       இசுலாமியர் படையெடுப்புக்குப் பிறகு கலைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடகங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று வளரஆரம்பித்தன. குற்றாலக்குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரிதக் கீர்த்தனை ஆகிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.
·   காசி விசுவநாதமுதலியார் அவர்களின் டம்பாச்சாரி நாடகம் தான் முதன்முதலில் மேடையில் நடிக்கப்பட்ட சமூகநாடகமாகும்.
·   மேடைநாடக அமைப்புக்கு முன்மாதிரியான, நவாப் கோவிந்தசாமி ராவ் அவர்களை தமிழ்நாடகத்தின் தாத்தா என்று அழைப்பர்.

தமிழ் நாடக மூவர்         
       பம்மல் சம்பந்தம் முதலியார், சங்கரதாசு சுவாமிகள், பரிதிமாற் கலைஞர் ஆகிய மூவரையும் தமிழ்நாடக மூவர் என்று அழைப்பது வழக்கம்.
1.பம்மல் சம்பந்தம் – இவர் எழுதிய மொத்த நாடகங்கள் 93 ஆகும். இவரே தமிழ்நாடகத்தின் தந்தை என அழைகப்படுகிறார். மேலும் இவரைத் தமிழ் சேக்சுபியர் என்றும் அழைப்பர். இவர்தம் நாடகங்கள் இன்பியல், துன்பியல், கேளிக்கை, அங்கதம், நையாண்டி, புராணிகம், வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலதரப்பட்டவையாகும்.
2.பரிதிமாற் கலைஞர் – நாடகம் படித்தல், நடித்தல், இலக்கணம் வகுத்தல் என மூன்று பெரும் பணிகளை ஆற்றினார். நாடகவியல் என்ற தமிழ்நாடக இலக்கண நூலை இயற்றினார். இவர் படைத்த நாடகங்களுள் ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், சூர்ப்பனகை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.
3.சங்கரதாசு சுவாமிகள்- முறைப்படுத்தப்பட்ட தமிழ்நாடகவரலாறு இவரிலிருந்தே தொடங்குகிறது. இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையை நசிவடையாமல்க் காத்ததால் இவரைத் தமிழ்நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றுவர்.  அபிமன்யு சுந்தரி, இலங்காதிலகம், கோவலன், நல்லதங்காள், பிரகலாதன்  உள்ளிட்ட 40 நாடகங்கள் இவர் படைத்தவையாகும்.

தமிழ் நாடகக் குழுக்கள்
·          பம்மல் சம்பந்தம் முதலியார் – சுகுணவிலாச சபை
·          சங்கரதாசு சுவாமிகள் - சமரசசன்மார்க்க சபை
·          சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் – பாலமனோகரசபா
என்.எஸ்.கே, பாலாமணி அம்மையார், கே.பாலசந்தர், எஸ்வி.சேகர், விசு ஆகியோரும் நாடகக்குழுக்கள் வைத்து நாடகம் வளர்த்தனர்.

நாடகங்களின் வகை
       நாவல்களைப் போலவே தமிழ்நாடகங்களையும் புராண நாடகம், இலக்கிய நாடகம்  துப்பறியும் நாடகம், வரலாற்றுநாடகம், நகைச்சுவை நாடகம், மொழிபெயர்ப்பு நாடகம், தழுவல் நாடகம், என வகைப்பாடு செய்ய இயலும் சான்றாக புராண நாடகங்கள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைய தோன்றின.பிரகலாதன், ஐயப்பன், தசாவதாரம், சிறுதொண்டர் ஆகிய நாடகங்கள் அவற்றுள் குறிப்பித்தக்கனவாகும்.இலக்கிய நாடகங்களைப் படித்துமுடித்தவுடன் ஒரு நாடகம் பார்த்த நிறைவு கிடைக்கும். அவ்வகையில், சுந்தரம்பிள்ளையின் – மனோன்மணீயம், பாரதிதாசனின் – பிசிராந்தையார், மறைமலையடிகளின்- அம்பிகாபதிஅமாராவதி, அ.ச.ஞானசம்பந்தனின் தெள்ளாறு எறிந்த நந்தி முதலிய நாடகங்கள் இலக்கி்ய நாடகங்களுள் குறிப்பித்தக்கனவாகும்.

முடிவுரை

       இன்றை சூழலில் கல்விச்சாலைகளில் ஓரங்கநாடகம், நாட்டிய நாடகங்கள் நடித்துக்காட்டப்படுகின்றன, வார, மாத இதழ்களிலும், வானொலி தொலைக்காட்சிகளிலும் நாடகங்கள் நடித்துக்காட்டப்படுகின்றன. இன்று அதிகமான தொழில்நுட்பங்களோடு நிறைய படங்கள் வருகின்றன. இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்த மேற்கண்ட நாடகங்களையும் அக்கலையை வளர்த்த சான்றோர்களையும் தமிழுலகம் என்றும் மறவாது.