Search This Blog

Monday, June 29, 2020

Doctrine of Ultra Vires (வலுவிகழ்தல் கோட்பாடு )


The object clause of the memorandum of the company contains the object for which the company is formed. An act of the company must not be beyond the object clause otherwise it will be ultra vires and therefore, void and cannot be ratified even if all the member wish to ratify. This is called the doctrine of ultra vires. The expression “ultra vires” consists of two words: ‘ultra’ and ‘vires’. ‘Ultra’ means beyond and ‘Vires’ means powers. Thus, the expression ultra vires means an act beyond the powers. Here the expression ultra vires is used to indicate an act of the company, which is beyond the powers conferred on the company by the objects clause of its memorandum. An ultra vires act is void and cannot be ratified even if all the directors wish to ratify it. Sometimes the expression ultra vires is used to describe the situation when the directors of a company have exceeded the powers delegated to them. Where accompany exceeds its power as conferred on it by the objects clause of its memorandum, it’s not bound by it because it lacks legal capacity to incur responsibility for the action, but when the directors of a company have exceeded the powers delegated to them. This use must be avoided for it is apt to cause confusion between two entirely distinct legal principles. Consequently, here are restricting the meaning of ultra vires objects clause of the company’s memorandum.

வலுவிகழ்தல் கோட்பாடானது நிலைமுறை அதிகார வரம்பு மீறல், நடைமுறை அதிகார வரம்பு மீறல் என வகைப்படுத்தப்படும்.

இதனைத்தவிர சரியான விடயத்தை பொருத்தமான வழியில் பிழையான நோக்கத்திற்காக செய்தலும் வலுவிகழ்தலாகவே கருதப்படும். நியதிச் சட்டத்தின் நோக்கம், அதன் எல்லையை கருதாமல் எடுக்கப்படும் தீர்மானங்கள் முதலாவது வகையாகும்.


இங்கு நியதிச்சட்ட ஏற்பாடுகளின் படி நிர்வாக செயல் செய்யப்பட்டதா என பார்க்கப்படுமே தவிர அச்சட்டத்தை இயற்றிய அதிகார அமைப்பின் அதிகார தன்மை பற்றி கவனத்தில் எடுக்காது.


இந்திய வழக்கொன்றில் மாநில அரசானது தேயிலை பயிரிடுவதற்காக நிலமொன்றை மாற்றிக்கொடுக்க மறுத்தமை நியதிச்சட்டத்தின் நோக்கத்தை அடைவதற்காக செய்யப்படாததால் வலுவிகழ்தல் என கூறப்பட்டது.

அதிகாரசபையொன்று சட்டத்தால் அவர்களுக்கு அதிகாரமளிக்கப்படாத துணி சலவை தொடர்பான சேவையை வழங்கியமை வலுவிகழ்தலாகும். பொலீஸ்மா அதிபர் தனக்கு அதிகாரம் வழங்கப்படாத இடமாற்றம் செய்யும் நடைமுறையை முன்னெடுத்தமை வரம்பு மீறலாகும். அனிஸ்மினிக் வழக்குக்கு முன்னர் நியாயாதிக்க எல்லைக்குள் செய்யப்பட்ட தவறுகள் வலுவிகழ்தலாக கருதப்படவில்லை.

இது பதிவேட்டின் முகத்தோற்றத்திலுள்ள தவறுகள் எனும் கோட்பாட்டின்படி (Error of Law on the Face of the Record) கையாளப்பட்டது.


இதன்பின்னர் வந்த வழக்குகளில் அனிஸ்மினிக் விதி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வழக்க்கில் நீதியரசர் றீட், கெட்ட நோக்கம், இயற்கை நீதி மீறல், நல்ல நோக்கமெனினும் ஏற்பாடுகளை தவறாக பொருள்கோடல் செய்தல், கட்டாயப்படுத்தப்பட்ட விடயங்களை கவனத்தில் எடுக்காமை போன்ற காரணங்களால் வலுவிகழ்தல் ஏற்படுமென கூறினார்.

இதன்படி நியாய சபைகளின் நியாயாதிக்கற்திற்குள் இடம்பெறும்; தவறுகள் வலுவிகழ்தலாகும். கீழ் நிலை நீதி மன்றங்களின் நிலை தொடர்பாக வழக்குகளில் முரண் நிலை காணப்படுகின்றது.

ஆனால் உயர்நிலை நீதி மன்றங்களின் நியாயாதிக்கற்திற்குள் விடப்படும் தவறுகள் மீளாய்வு மூலம் சீர்செய்ய முடியாது. நியதிச்சட்டத்தில் ஏற்பாடுகள் இருந்தால் மட்டுமே மேன்முறையீடு செய்யமுடியும்.

கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டுமென நியதிச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போது அதனை கவனத்தில் எடுக்காத நிலையில் நடைமுறை அதிகார வரம்பு மீறல் நிகழும்.


கல்வி ஆணைக்குழுவால் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்ட அறிக்கையை கருத்திலெடுக்காமல் அதிகாரசபையினால் வழங்கப்பட்ட தீர்மானமானது வரம்பு மீறலாகும். சம்பள உயர்வுக்காக செய்யப்படும் மதிப்பீட்டு முறைமை சரியான செயன்முறைகளை பின்பற்றி தயாரிக்கப்படாமையால் வெற்றாக்கப்பட்டது.


கையளிப்பு செய்யப்பட்ட சட்டவாக்கம் வலுவிகழ்ந்ததா என தீர்மானிக்க நீதிமன்றமானது சட்டவாக்கத்தின் பின்னணி, பாராளுமன்ற மன எண்ணம் ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செழுத்தும். கையளிப்பு சட்டவாக்கமொன்றின் வலிதுடைமை தொடர்பில் முடிவெடுக்க சில சட்டக் கொள்கைகளை விருத்தி செய்துள்ளது.

வரிவிதிப்பு, நீதிமன்றத்ததை நாடுவதற்கான வழிவகைகள், மீள் கையளிப்பு, பின்னோக்கியாழும் சட்டம், நிச்சயத்தன்மை, நியாயபூர்வ தன்மை, முரண்பாடு, முறையற்ற நோக்கம் போன்ற கொள்கைகளே அவையாகும்.


நிர்வாகச் சட்டத்தின் அடுத்த முக்கிய கோட்பாடாக கருதப்படுவது இயற்கை நீதிக் கோட்பாடாகும். இது நடைமுறை அதிகார வரம்பு மீறலுடன் தொடர்புபட்டது. இருபுறம் கேட்டல் விதி, பக்கச்சார்புக்கு எதிரான விதி எனும் இரு முக்கிய கொள்கைகளை உள்ளடக்கியது.

https://tamilbreakingnews.com/

https://www.lawteacher.net/

அன்னதானத்தின் மகத்துவம் பற்றி வள்ளலார் சொன்னது.....

(1) மிக கடும் தோஷங்களையும் குறைக்கும் மகத்தான சக்தி அன்னதானத்திற்கு உண்டு. அன்னதானம் ஒருவரின் பசியைப் போக்குவது எவ்வளவு புண்ணியம் வாய்ந்த செயல் என்று வள்ளலார் பெருமான் பகன்றதை இங்கே படித்துப் பாருங்கள் , கண்ணீர் பெருகும்....

(2) அன்னதானம் செய்யுமிடத்தில் அருளும், அன்பும் தழைத்தோங்கும், தர்மதேவதை அவ்விடத்தில் நித்தியவாசம் செய்யும். கல்வி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி என அனைத்து நன்மைகளும் கிடைக்கும். என்றும் நம்மைப் பாதுகாத்து துணை நிற்கும்.

(3) அன்னமிட்டு புண்ணியம் செய்பவர்கள் அரசாங்கத்தால் மதிக்கப்படுவர். அவர்களின் வயலில் விளைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் தடையின்றி நடந்து பெரும் லாபம் கிடைக்கும். அவர்கள் வீட்டில் திருட்டு நடக்காது. விரோதிகளினால் சிறிதும் பயம் ஏற்படாது.

(4) பசித்தவர்களுக்கு உணவிட்டவனை கோடைகால சூரியன் கூட வருத்தமாட்டான். வெம்மை மிக்க மணலும் வருத்தாது. மழை, நெருப்பு, காற்று என்று பஞ்சபூதங்ளாலும் சிறுதீங்கும் உண்டாகாது.

(5) பசி நீங்கினால் உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். அகமும் முகமும் மலரும். உள்ளும் புறமும் களை உண்டாகும். கடவுள் நம்பிக்கை துளிர் விடும். தத்துவம் தழைக்கத் துவங்கும்.

(6) பசி என்பது ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு. அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று. பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி. உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.

(7) பசித்த உயிர்களுக்கு உணவளித்தும், உயிர்க்கருணை செய்தும் ஜீவகாருண்ய நெறியைப் பின்பற்றினால், தனிப்பெருங்கருணையோடு விளங்கும் அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.

(8) உண்மையான அன்புடன் ஒளிவடிவில் அவரை வழிபாடு செய்ய வேண்டும். தெய்வ வழிபாட்டில் ஜீவ இம்சைக்கோ, உயிர்ப்பலிக்கோ சிறிதும் இடம் இல்லை. அன்பு நெறியில் அமையும் வழிபாடே உயர்ந்த வழிபாடாகும்.

(9) மனிதன் வேற்று நாட்டினரிடத்தும், வேற்று மதத்தினரிடத்தும் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தின் மீதும் அன்பு கொள்ள வேண்டும். இதுவே ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்.

(10) எந்த நேர உணவிலும், எந்த வகையிலும் மாமிசம் சேர்த்துக் கொள்ளக்கூடாது, எப்படிப்பட்ட உணவாக இருந்தாலும் குறைத்தே சாப்பிட வேண்டும். பசி எடுக்கவில்லையென்றால் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.

(11) ஆனால், இந்தக் காலத்தில் அன்னதானம் பண்ணினால் கூட வாங்குவதற்கு தகுதியான ஆட்கள் கிடைப்பதில்லை. பெரிய கோவில்களில் எல்லாம் அன்னதான திட்டம் வந்துவிட்டது. திருவண்ணாமலையில் உணவு ஏதாவது கொடுத்தால் காசு இருந்தால் கொடுக்கலாமே என்று கேட்கும் சாதுக்கள் தான் அதிகம். அந்த அளவுக்கு அவர்களைப் பொறுத்தவரை உணவுக்கு பஞ்சமில்லை.

(12) அதனால் அன்னதானம் செய்ய நினைப்பவர்கள் ஏதாவது நல்ல கோவில்களின் அன்னதான திட்டத்திற்கு உதவி செய்தால் கூட போதுமானது. அல்லது அனாதை / முதியோர் காப்பகங்களுக்கு நன்கொடை அளிக்கலாம். அல்லது பசுவிற்கு வாழைப்பழம் அல்லது அகத்தி கீரை வாங்கி கொடுக்கலாம். இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அன்னதானம் செய்து வர, அவரவர் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் படிப்படியாக குறைந்து, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமும் கிடைக்கும். மனசும் வயிறும் குளிர கிடைக்கும் அந்த ஜீவன்களின் வாழ்த்து , நம் புண்ணிய பலன்களின் தட்டை கனப்படுத்தி, பாவ பலன்களின் தட்டை லேசாக்குகிறது.

(13) நிஜமாகவே பசிக்கு துடித்துக் கொண்டு இருக்கும் ஜீவன், உங்கள் முன் கையேந்தும்போது - இறைவன் உங்களை சோதிக்கிறான் என்பதை மனதில் வையுங்கள். அந்த நேரத்தில் , உங்களால் உதவ முடிந்த சூழல் இருந்தும், முகத்தை திருப்பிக் கொண்டு சென்றால் - அது நமக்கு புண்ணியம் கிடைக்கவிருக்கும் ஒரு வாய்ப்பை தவிர்ப்பதற்கு சமம்.

(14) நம் வீட்டில் ஏதாவது விசேஷம் , விருந்து என்றால் - கூடி இருக்கும் விருந்தினர்களை மட்டும் கவனித்து, பசிக்கு துடிக்கும் எளியவர்களை துரத்தி அடிப்பது கொடிய பாவம். அது போன்று வருபவர்களுக்கு சபையில் வைத்து உணவு அளிக்க வில்லை எனினும், தனியாக அவர்களுக்கு கொடுத்து அனுப்ப முயற்சிக்கலாமே.

- சித்தர்களின் குரல் shiva shangar

Sunday, June 28, 2020

கொடிய நோய்கள் நீக்கும் அகத்தியர் பெருமான் நாடியில் உரைத்த இந்த அற்புத பாடல்...

கொடிய நோய்கள், குறிப்பாக முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாக தோன்றும் கர்ம வினை நோய்களான புற்று, குஷ்டம், மலட்டுத்தன்மை போன்றவை 48 பிரதோஷ தரிசனத்தால் நீங்கும் என்கிறது அகத்தியர் பெருமான் நாடியில் உரைத்த இந்த அற்புத பாடல்...

வேலையின்மை, தரித்திரம், பொருள் விரயம், மனக்குழப்பம், கொடிய சேதம், விபத்து, விபத்துக்களால் மரணம், பொருட்சேதம் போன்றவற்றிற்கும் வளர்பிறை பிரதோஷ பூஜையை 49 முறை மேற்கொண்டால், க
ண்டிப்பாக விமோசனம் உண்டு. நாடியும் இதைத்தான் சொல்கிறது:

"பேரிடர் நீங்குமே பிணி யாதாயினுஞ் சாம்பலாகுமே.
மறை போற்றும் தேவரிட்ட சாபமாயினும் விமோசனம் காணும்.
விவாகமும் விமரிசையாய் நடந்தேறுமே: புவியுறை,
சம்பத்தெல்லாம் சித்தம்போல் சித்திக்குமே
பூதலத்தே நின்ற சிவனம்பலமெலாம்
ஏகித் தொழுத பேறு பெறுவீரே ப்ருஹந்நாயகி யுறை
தக்ஷிணமேரு தன்னை கை தொழுதக் கால்
சிவனே தரிசனம் தருவான் பொய்யல்ல.
தப்பாது மண்டலச் சதுர்த்தசி முன் தொழுபவர்க் கே."பிரதோஷம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது......

நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேறி, நம் சந்ததி முழுக்க சிவன் அருள் கிடைக்க - பிரதோஷ நேர வழிபாடு , நமக்கு கிடைத்து இருக்கும் பொக்கிஷம் என்பதை சித்தர்கள் உணர்த்தி உள்ளனர்.

என் மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய வழிபாடு இந்த பிரதோஷ வழிபாடு.....

(இலங்கையில் எங்கள் சித்தர்களின் குரல் அன்பர்களினால் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட வாழைச்சேனை ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வர வைத்திய நாத சுவாமி தேவஸ்தானத்தில் ஒவ்வொரு பிரதோஷமும் சிறப்பாக உரிய முறையில் எங்களால் நடத்தப்படுகிறது..... அனைவரும் வருக....)

- சித்தர்களின் குரல் shiva shangar