கொரோனா வைரசை மட்டும் அல்ல எந்த வைரசையும் அழிக்க முடியாது என்கிறது 'தெரிந்த மருந்துகள் தெரியாத விளைவுகள்' புத்தகம்.
இந்தப் புத்தகம் புதிய ஆராய்ச்சிகளை சொல்லவில்லை. ஆனால் அமைதியாக பல அடிப்படை பச்சை உண்மைகளைக் கூறுகிறது. ஒரு வைரசை தடுக்க முடியுமே ஒழிய அழிக்க முடியாது என்பது அந்த ரகம்தான்.
காலை மருந்தை மாலையில் சாப்பிடலாமா? ஆகாரத்திற்கு முன் கொடுத்த மாத்திரையை பின் சாப்பிட்டால் என்னவாகும்? மரு எப்படி வருகிறது? மாத்திரையை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாமா? டீயுடன் சேர்த்து மாத்திரையை எடுத்துக் கொள்வது சரியா? இ வைட்டமின் ஏறினால் என்னவாகும்? ஈ கோலி பாக்டீரியா எத்தனை பெரிய ஆபத்து? மருத்துவர் உரிமை என்ன? நோயாளி கடமை என்ன? கோழிக்கறியிலும் வைரஸ் உண்டு? இப்படி பக்கம் பக்கமாக எழத வேண்டியதை எட்டு வரியில் எழுதி நகர்கிறார் இந்த டாக்டர்.
பொதுவாக உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரைப் பார்ப்பதைப் பலர் தவிர்ப்பார்கள். இந்தப் புத்தகத்தைப் படித்தால் ரவிக்குமார் என்ற மருத்துவரைப் பார்க்க துடிப்பார்கள். அதற்கான வீரியம் இந்த நூலில் விதையாக உள்ளது.
அவர் 'குறத்திமுடுக்கு' மற்றும் 'நாளைமற்றும்ஒருநாளே' ஆகியகுறுநாவல்களும் 17 சிறுகதைகளுமேஎழுதியுள்ளார். அதேபோலஆங்கிலத்தில்கட்டுரைகளும், ஒருபுத்தகமும்எழுதியுள்ளார்.
‘சிதையில்படுத்தால்தான்குளிர்அடங்கும்’ – ஜி. நாகராஜன் ஜி.நாகராஜன்பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்
ஜி.நாகராஜன் நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். அவரைப்பற்றிய என் முழுமையான மதிப்பீட்டை எழுதியிருக்கிறேன். அது நான் நவீனத்தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசை என்ற பேரில் இருபது எழுத்தாளர்களைப்பற்றி எழுதிய ஏழு நூல்களில் ‘நவீனத்துவத்தின் முகங்கள்’ என்ற நூலில் உள்ளது
நாகராஜனின் கசந்த அங்கதம் பற்றியும் எதிர்மறை வாழ்க்கைநோக்கு பற்றியும் விரிவாக இங்கே பேசவில்லை. நீங்கள் கோரியபடி அவரது பாலியல்சித்தரிப்பு ஏன் முக்கியமானது என்று சொல்கிறேன். அவர் பாலுறவை சித்தரிக்கிறார். ஆனால் அந்தச் சித்தரிப்பு மேலோட்டமான பரபரப்பை அல்லது ஈர்ப்பை மட்டும் உருவாக்குவதில்லை. அதை வாசகன் கடந்தானென்றால் நுட்பமான கண்டடைதல்கள் வழியாகச் செல்லமுடியும்
’நாளை மற்றும் ஒரு நாளே’ நாவலில் மீனாவை கந்தன் ஒரு விபச்சார விடுதியில்தான் கண்டுகொள்கிறான். விலைகொடுத்து வாங்குகிறான். அவளை விபச்சாரத்துக்கு அனுப்பிச் சம்பாதிப்பதுதான் அவன் நோக்கம். அவள் சம்பாத்தியத்தில்தான் வாழ்கிறான். அவளை இன்னொருவருக்கு விற்றுவிடவும் எண்ணம் கொண்டிருக்கிறான், அவளுக்கு நல்ல ஒரு ஏற்பாட்டைச் செய்வதற்காக.
ஆனால் அவன் அவளுடன் உடலுறவு கொள்ளும் சித்தரிப்பிலுள்ள உரையாடலைக் கவனியுங்கள். ’அக்கா வீட்டுக்கு கண்டவனும் வருவானே , இப்பிடித்தான் ரொங்கிப் படுத்திருப்பியா?” என்கிறான். அவளுடன் பிற ஆண்கள் உறவுகொள்கிறார்கள் என்பதுதான் அவனுக்கு அப்போது முக்கியமாகப் படுகிறது. அது அவனை உள்ளூர அரிக்கிறது. பெண்ணை தன் உடைமை எனக் கருதும் ஆதி மிருகம்.
அவள் எத்தனை நுட்பமாக அதைப்புரிந்துகொள்கிறாள். ‘அக்கா வீட்டுக்கு கண்டவனும் வரமாட்டான். ஒருமாதிரி டீசண்டானவங்கதான் வருவாங்க’ என்கிறாள். ஆண் மிருகத்திற்கு ஒரு துண்டு மாமிசம்.
உடலுறவு நடக்கிறது. ‘தலையணை வச்சுக்கவா?’ ‘வேண்டாம். சரியா இருக்கு’ கூடவே உள்ளங்களும் உரையாடிக்கொள்கின்றன. ‘எப்டிப்பட்டவங்க வருவாங்க?’ என்கிறான். அவள் நுணுக்கமாகச் சொல்கிறாள். ‘காலேஜ் பசங்க வருவாங்க’. அதாவது அவள் அவனுக்குச் சமானமாகப் பொருட்படுத்தக்கூடியவர்கள் வருவதில்லை. இரண்டு விளையாட்டுக்கள்!
மொத்த நாவலையும் இப்படியே வாசித்துக்கொண்டே செல்லலாம். மீனா தன்னம்பிக்கை கொண்ட உற்சாகமான அடாவடியான பெண். ஆனால் உடலுறவு முடிந்து கந்தன் திரும்பிப்படுத்தால் அவள் அழுதுகொண்டிருக்கிறாள். அது மனஅழுத்தம் கொண்ட பெண்களின் இயல்பு. [ஹென்றி மில்லர் அற்புதமாக அந்த பின்மனநிலையை எழுதியிருக்கிறார். நெக்ஸஸ் நாவலில்] உண்மையில் மீனா உள்ளூர துயரமான மனச்சோர்வு கொண்ட இன்னொரு பெண்.
’குறத்திமுடுக்’கில் ‘ஏன் உதட்டிலே முத்தமிடக்கூடாதுன்னு சொல்றாங்க?” என்று தங்கம் அவனிடம் கேட்கிறாள். ‘தெரியலை’ என்கிறான். அவளுடைய நோய் தனக்குத் தொற்றிவிடுமெனும் அவநம்பிக்கை அது என்று சொல்லவில்லை. பெண்ணை புணர்கையிலேயே அவளை வெறுக்கும் விபச்சார மனநிலையின் வெளிப்பாடு அது
அவன் அவளை அள்ளி உதட்டில் முத்தமிடுகிறான். தங்கமும் அவனும் காதல்கொள்ளும் தருணம் அது. மறைந்த நண்பர் குவளைக்கண்ணன் அந்த இடத்தைச் சுட்டிக்காட்டி ‘வச்சாண்டா பாரு… அவன் அறிஞ்சவண்டா’ என்று குதூகலித்ததை நினைவுகூர்கிறேன்.
தங்கம் மாதாமாதம் போலீஸில் கைதாகி கோர்ட்டில் அபராதம் கட்டி வருபவள். ஆனாலும் அவளுக்கு ஒருமுறை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அபராதம் கட்டாமல் வாதாடவேண்டும் என அடம்பிடிக்கிறாள். அந்த வேகம் எவருக்கும் புரியவில்லை. அவனுக்கும்தான். ‘ஏன்?’ என்கிறான். ‘காலிப்பய சேதுவ நான் கூப்பிட்டதா கேஸ போட்டிருக்கானே. அதை ஏத்துக்கவே முடியாது’ என்கிறாள். ஏன்? அவன் ஒருவனை மட்டும் அவள் ஏன் வெறுக்கிறாள். அவனைக் கூப்பிட்டாள் என்று சொன்னால் ஏன் அவள் சுயமரியாதை புண்படுகிறது? சேது யாரென்றே நாவலில் இல்லை. ஆனால் வாசகன் அந்த மனநிலையை தொட்டு அறியமுடியும்.
இந்த நுட்பங்களை வாசிக்கத்தெரிந்த வாசகர்களுக்கு ஜி.என். அசலான புனைவுக்கலைஞன். தமிழின் இலக்கியசாதனையாளர்களில் ஒருவர். வெறுமே உடல்விவரணைகளை மட்டும் வாசிக்கத்தெரிந்தவர்களுக்குத்தான் அவர் போதாதவர். துரதிருஷ்டவசமாக பாலியல்சார்ந்த எழுத்துக்கு மொண்ணை வாசகர்களே அதிகமும் வருகிறார்கள். ஜி.என் ஐ அவர்கள் மேல்மட்டம் வழியாகக் கடந்துசெல்கிறார்கள்.
தமிழ்
இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கி, தமிழ் இலக்கிய எல்லைகளைப் புதிய திசையில் விரிவடையச் செய்த படைப்பாளி ஜி.நாகராஜன், 1981-ம்
ஆண்டு பிப்ரவரி மாதம் 52-வது வயதில் மறைந்தார்
ஜி.
நாகராஜன் (செப்டெம்பர் 1, 1929 - பிப்ரவரி 19, 1981 ) மதுரை, இந்தியா) தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.
அ. ராமசாமி
ஒரு சிறுகதை: ஒருகுறும்படம்
=============================
ஜி.நாகராஜனின் எல்லாக்கதைகளையும் வாசித்திருக்கிறேன். ஆனால் இந்தக் கதையைப் பற்றி எழுதவும் செய்துள்ளேன். நான் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றிருந்த குறிப்பு இது:
--------------------------------------------------------------------------------- கல்லூரி முதல்வர் நிர்மலா கதையை ஜி.நாகராஜன் எழுதியுள்ள விதம் திரும்பத் திரும்பப் படித்துப் படைப்பாளிகள் பின்பற்றத் தக்கதாக இருக்கிறது. மனிதர்களுக்குள் உறையும் காமத்தின் இயல்புக்கு முன்னால் வயது, பதவி, கட்டிக்காத்த பிம்பம் என எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது என்பதை வாசகர்களுக்கு உணர்த்தும் விதம் அற்புதமானது. கல்லூரி முதல்வரின் அலுவலக அறையைக் கதை நிகழும் இடமாகக் கொண்டிருந்தாலும், கதையின் ஒவ்வொரு நிகழ்வும் நினைவுகளிலும், கடித வரிகளின் விரிவா கவும் தரப்பட்டுள்ள லாவகம் சிறப்பான ஒன்று. எழுதப் போகும் விசயத்தின் கூர்மையைக் கவனத்தில் கொண்டு இந்த உத்திகளைப் பின்பற்றியுள்ள ஜி.நாகராஜன் தமிழ்ச் சிறுகதையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் என்பதற்கு இந்த ஒரு கதையே போதும். =================================== இந்தக் கதையைக் குறும்படமாகத் தந்துள்ளார் தயாரிப்பாளர்&இயக்குநர் ஸ்ரீராம் . கதையைத் திரைக்கதையாக்கிய செந்தில் ஜெகந்நாதன் கதையிலிருந்து விலகவில்லை. அதில் நிர்மலாவாக நடித்துள்ள பொற்கொடியும் மாணவியாக நடித்துள்ள ஜனனியும் எழுதப்பெற்ற கதாபாத்திரங்களுக்குள் இருந்த உணர்வுகளை நடித்துக்காட்டியுள்ளனர். மறைந்துவிட்ட நண்பர் அருண்மொழியை அப்பாவாகப் பார்க்கமுடிந்தது. ஆனால் அவரது பெருங்குரல் அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்தவில்லை.
கதை எழுதப்பெற்ற காலத்தையே படத்திற்கான ‘நிகழும் காலமாக (1980)’ வைத்திருக்கிறார்கள். அக்காலத்தைக் கொண்டுவரச் சினிமாப் பாடல்களும் இளமைத் தோற்றத்தோடிருக்கும் கமல்ஹாசனின் படமும் பயன்பட்டுள்ளது. அதே கவனத்தைக் கொலுசில் காட்டாமல் விட்டுள்ளனர்;புத்தம் புதிதாக இருக்கின்றது. படத்தைப் பாருங்கள். பிறகுகூடக் கதையை வாசிக்கலாம். அதன் பிறகு நான் எழுதிய கட்டுரையையும் வாசிக்கலாம்.