Search This Blog

Tuesday, August 28, 2012

ஹெராயினை விட தீமை வாய்ந்தது சர்க்கரை?



போதை பொருள் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை அதற்கு இணையாக மனிதர்களிடம் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இவற்றின் ஒரே வித்தியாசம் சர்க்கரை அங்கீகரிக்கப்பட்ட பொருளாக உள்ளது.

சர்க்கரை உடலில் அதிகமாக சேர்ந்து பின்னர் இன்சுலின் சுரப்பு பாதிப்பால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. இந்த சர்க்கரை வியாதி 2000 ஆம் ஆண்டில் உலகளவில் 17 கோடி பேரை பாதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது 2030 ஆம் ஆண்டில் 36 கோடியை தொடும் என எச்சரிக்கப்படுகிறது. 

இதுவே இந்தியாவில் 2000 ஆம் ஆண்டில் 3 கோடி பேர் சர்க்கரை வியாதியால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 2030 ஆம் ஆண்டில் 8 கோடியை எட்டும் என்றும் கூறப்படுகிறது. சராசரியாக ஒரு மனிதன் வருடம் ஒன்றிற்கு 80 கிலோ அளவிற்கு சர்க்கரையை எடுத்து கொள்கிறான். மனிதனின் வாழ்க்கையில் மெல்ல ஆக்கிரமிப்பு செய்யும் இந்த சர்க்கரை எவ்வாறு ஹெராயின் போன்ற போதைபொருளோடு ஒத்து போகிறது என பார்ப்போம்.

பாப்பி என்ற ஒரு வகை செடியில் இருந்து ஓபியம் என்ற பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. அது பின்னர் மார்பின் ஆக மாற்றப்படுகிறது. மேலும் அது சுத்திகரிக்கப்பட்டு ஹெராயின் என்ற போதைபொருளாக மாற்றப்படுகிறது. ஆரம்பத்தில் இது வலி நிவாரணி ஆக பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் அது படிப்படியாக போதைபொருள் பயன்பாட்டுக்கு உலகை கொண்டு சென்று விட்டது.

சர்க்கரையும் அதுபோல தான். கரும்பில் இருந்து பெறப்படும் சாறு பின்னர் மொலஸ்ஸஸ் என்ற பொருளாக மாற்றப்படுகிறது. பின்னர் மேலும் மேம்படுத்தப்பட்டு பிரவுன் சுகர் மற்றும் வொய்ட் சுகர் என்ற இரு வேறு பொருள்களாக பெறப்படுகிறது. 

இந்த வெண்மை நிற படிக வடிவம் பெற்ற சர்க்கரை (வொய்ட் சுகர்) மனிதனுக்கு வேண்டிய எந்தவித சத்துள்ள பொருளையும் தன்னுள் கொண்டிருப்பதில்லை. இது உடலுக்குள் செல்லும் போது அதனை எவ்வாறு எடுத்து கொள்வது என்பதில் வயிற்றுக்குள் சிக்கலான போராட்டமே நடைபெறுகிறது.

பழக்கவழக்கத்திற்கு அடிமையாதல்.

போதை பொருளான ஹெராயின் எடுத்து கொள்ளப்பட்ட உடனேயே அது தீவிரமாக செயல்பட ஆரம்பிக்கிறது. அதன் துகள்கள் உட்கொண்ட பின் விரைவாக செயல்புரிந்து கிளர்ச்சி நிலையினை அடைய செய்கிறது.

சர்க்கரை உட்கொள்ளும் போது அது மெதுவாகவே செயல்புரிகிறது. உடலில் கொழுப்பு சத்து தேவைப்படும் வரை கல்லீரலில் சர்க்கரை பொருள் சேமித்து வைக்கப்படுகிறது. மற்ற போதைபொருள் போன்றே இதுவும் நம்மை அந்த பழக்கத்திற்கு அடிமையாக செய்கிறது. சுமார் 95 சதவீத மக்கள் சர்க்கரை பயன்பாட்டில் இருந்து மீள முடியாமல் உள்ளனர் என திட்டமதிப்பீடு செய்துள்ளனர்.

உறுப்புகளின் பாதிப்பு

ஹெராயின் போதைபொருள் நுரையீரல் மற்றும் இதயம் ஆகியவற்றை விட மூளையையே அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. பெரும்பாலானவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட முயன்று மேலும் அதிகமாக அடிமையாகும் நிலையே காணப்படுகிறது.

சர்க்கரை மெதுவாகவே தன் வேலையை செய்கிறது. ஆனால் அதன் பாதிப்பின் தன்மை மிக அதிகமாகவே காணப்படுகிறது. சற்று அதிகமாக எடுத்து கொண்டால் அதன் பாதிப்பு உடலில் பலமாகவே எதிரொலிக்கிறது. இத்தகைய தன்மையினால் ஹெராயினை காட்டிலும் அதிக தீமை வாய்ந்ததாகவே இது கருதப்படுகிறது.

மிக அதிக அளவாக 8 தேக்கரண்டி சர்க்கரை எடுத்து கொள்ளுதல் போதுமானது என பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் சர்க்கரையின் அளவு எப்பொழுதும் அதிகமாகவே காணப்படுகிறது. காலையில் குடிக்கும் காபி, மதியம் எடுத்து கொள்ளும் சாக்லேட் மற்றும் இரவில் ஒரு வெண்ணிலா ஐஸ் கிரீம் என நம்மை அறியாமலேயே அளவுக்கதிகமான சர்க்கரையை மறைமுகமாக எடுத்து கொள்கிறோம்.

பதப்படுத்தப்பட்ட சர்க்கரையில் சுக்ரோஸ் என்ற வேதிபொருள் மட்டுமே அதிகமாக காணப்படுகிறது. இந்த சர்க்கரை பொருள் உடலின் செயல்பாட்டுக்கு அவசியமில்லாதபோது வயிறு, தொடை, மார்பு போன்ற இடங்களில் சேகரித்து வைக்கப்படுகிறது. 

ஆனால் அந்த இடங்கள் நிரப்பப்படும் போது அவை கல்லீரல் மற்றும் இதயம் போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளில் சேர ஆரம்பிக்கின்றன. மேலும் அது இரத்தத்தில் கலந்து சர்க்கரை அளவை அதிகரிக்க செய்கிறது. எனவே இன்சுலின் சுரப்பு அதிகரிக்கப்படுகிறது. 

உடலில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அது உடலின் பி.எச். சமன்பாட்டினை (அமில மற்றும் கார நிலைகளின் சமன்பாடு) வெகுவாக பாதிக்கிறது. மேலும் அமில நிலையை உடலில் அதிகரிக்கிறது. குறிப்பாக உற்பத்தி செய்யப்படும் பைருவிக் அமிலம் உடலுக்கு அதிக தீங்கு விளைவிப்பதாகும். இது நம் உடலின் அடிப்படை அமைப்பான செல் அமைப்பை பாதிக்கிறது.

அளவுக்கதிகமான அமில தன்மை உடலின் எடையை அதிகரிக்க செய்கிறது. மற்றும் உடலில் சோர்வை ஏற்படுத்துகிறது. இந்த அமில தன்மையை சமன் செய்ய உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களில் காணப்படும் கால்சியம் என்ற வேதிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பற்களில் பாதிப்பு, வலு குறைந்த பற்கள் மற்றும் எலும்பு தொடர்பான ஆஸ்டியோபோரசிஸ் போன்ற வியாதிகள் ஏற்பட ஏதுவாகின்றன.

இத்தகைய தன்மை வாய்ந்த சுக்ரோஸ் மிகுந்த மேம்படுத்தப்பட்ட சர்க்கரையின் பாதிப்பை தவிர்க்கும் வழிகள் பற்றி பார்ப்போம்.

உணவு முறை

உணவு உட்கொள்ளுதலை சீராக வைத்திருத்தல் அவசியம். தினமும் மூன்று வேளை உணவு மற்றும் இரு முறை நொறுக்கு தீனி என எடுத்து கொள்ளலாம். அல்லது தினமும் ஐந்து வேளைகள் சிறு சிறு அளவாக உணவினை எடுத்து கொள்வதும் நலம் தரும். 

ஒழுங்கான முறையில் உணவு எடுத்து கொள்ளாவிடில் அது இரத்தத்தில் சர்க்கரை அளவினை பாதிக்கும். அவர்களுக்கு பசி எடுப்பது போன்ற உணர்வு இருக்கும். எனவே இனிப்பான பதார்த்தங்களை சாப்பிடுவதற்கு தோன்றும்.

உணவினை தேர்ந்தெடுக்கும் முறை 

சாப்பிடும் பொழுது சர்க்கரை அளவு குறைவான உணவை தேர்ந்தெடுங்கள். பெரும்பாலும் காய்கறிகள் மற்றும் கனிகள் ஆகியவற்றை அதன் இயற்கையான நிலையிலேயே உட்கொள்ளுங்கள். அது நமது உடலுக்கு ஊறு விளைவிப்பதில் மேலும் அவற்றின் முழு பயனும் நமக்கு கிடைக்கின்றன.

காலை உணவு

காலையில் உண்ணும் உணவு ஆரோக்கியமான புரதம், கொழுப்பு மற்றும் ஊட்டசத்து மிகுந்தவையாக இருப்பது நல்லது. மாறாக கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவு பொருள் தவிர்க்கப்படல் வேண்டும்.

புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு அவசியம்

ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த பதார்த்தங்கள் இருப்பது போல் சாப்பிடுவது அவசியம். ஏனெனில் இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அவை ஆரோக்கியத்திற்கு அவசியமானதும் ஆகும்.

நறுமண பொருள்கள் 

கொத்தமல்லி, ஏலக்காய், இலவங்கம், கிராம்பு மற்றும் இதுபோன்ற இயற்கையான நறுமண பொருள்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது உங்கள் உணவினை இயற்கையாகவே இனிப்புள்ளளதாக மாற்றுகிறது. மேலும் பசியையும் குறைக்கிறது.

தாதுபொருள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவு

அன்றாட உணவில் தாதுபொருள்கள் மற்றும் அனைத்து வைட்டமின்களும் நிறைந்து காணப்படுவது மிகச்சிறந்தது. குறிப்பாக குரோமியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி3 ஆகியவை இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியினை நன்றாக செய்கிறது. 

உடலினை அசையுங்கள்

உடற்பயிற்சி, நடனம் மற்றும் யோகா ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள். எந்த செயலையும் மகிழ்வுடன் செய்யுங்கள். அது உங்களது மன இறுக்கத்தை போக்குகிறது. ஆற்றலை பெருக்குகிறது. மேலும் சர்க்கரை பொருள் தேவையினை வெகுவாக குறைக்கிறது. 

போதிய தூக்கம் அவசியம்.

மனிதனுடைய வாழ்வில் தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று. தூங்கி எழுகின்ற பொழுது உடல் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். அதுவே நல்ல தூக்கத்திற்கு அறிகுறி. நீங்கள் எப்பொழுது தூங்கப் போகின்றீர்கள் என்பது அவசியமில்லை. தூங்கும்பொழுது தன்னை மறந்து உறங்க வேண்டும். கடின உழைப்பு அல்லது சிறிது நடைப்பயிற்சி இருந்தால் போதும். தூக்கம் வரவில்லை என்று பெரிதாக கவலைப்படாமல் இருந்தாலே போதும்.

டிடாக்ஸ் முறை

தற்போதுள்ள உணவு பழக்கத்தில் ஏற்படும் நச்சுகளை முற்றிலும் களைவதற்காக டிடாக்ஸ் என்ற முறை உள்ளது. இதனை எடுத்து கொண்டவர்கள் தங்களது சுவை விசயத்தில் பழைய நிலைக்கு மாற்றி கொள்கின்றனர். மேலும் இனிப்பு பொருள்களின் மீது உள்ள தாகத்தினையும் அது வெகுவாக குறைக்கிறது. பின்னர் சர்க்கரை பொருளின் மீதான ஆர்வம் குறைந்து முற்றிலும் மறைந்து விடுகிறது.

சர்க்கரை பயன்பாட்டில் கவனம் தேவை

சர்க்கரை பொருள் மீதான விருப்பத்தை எப்பொழுதும் ஒரு கட்டுபாட்டிற்குள் வைத்து இருந்தால் அது நன்மை தருவதாக அமையும்.

கூடுமானவரை தவிர்த்தல் நலம்

உங்களது வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இனிப்பினால் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்களை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

செயற்கை சர்க்கரை பயன்பாட்டினை தவிருங்கள்

செயற்கை சர்க்கரை பயன்பாடு தவிர்க்க வேண்டியவற்றுள் ஒன்று. இல்லையென்றால் அது இனிப்பின் மீதான தாகத்தை அதிகரிக்க மட்டுமே செய்யும்.

பொருட்களின் லேபிளை பாருங்கள்

ஏதேனும் ஒரு உணவு பொருளை வாங்கும் பொழுது அதனுடைய லேபிள் பகுதியை பார்த்து வாங்குங்கள். ஏனென்றால் அதில் சர்க்கரை பொருளின் அளவு அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளது. எனவே குறைவான சர்க்கரை கலந்த உணவு பொருளை பார்த்து வாங்குவது சிறந்தது.

சர்க்கரை பொருளின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்

இனிப்பூட்டிகளான கார்ன் சிரப், பிரக்டோஸ் நிறைந்த கார்ன் சிரப், சுக்ரோஸ், டெக்ஸ்ட்ரோஸ், தேன், மொலஸ்ஸஸ், டர்பினடோ சர்க்கரை மற்றும் பிரவுன் சுகர் போன்றவற்றை பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

மறைமுகமான பயன்பாட்டினை தவிர்த்தல்

சிக்கலான கார்போஹைட்ரேட் பொருள் கொண்டதென நாம் கருதும் பிரெட், பாஸ்தா மற்றும் பேஜல்ஸ் போன்றவை உண்மையில் கார்போஹைட்ரேட் நிறைந்தவை அல்ல. அவை மறைமுகமாக தம்முள் அதிகமான சர்க்கரை பொருள் மட்டுமே கொண்டவை. அவை நன்கு பதப்படுத்தப்பட்டவை. அதனால் அவை சர்க்கரை போன்றுதான் நம் உடலில் செயல்படும். எனவே அவற்றை தவிர்த்திடல் வேண்டும்.

மூச்சு பயிற்சி மேற்கொள்ளுங்கள்

அமைதியான இடம் ஒன்றை தேர்ந்தெடுங்கள். பின்னர் நல்ல முறையில் அமர்ந்து சில நிமிடங்கள் சீரான சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள். சிறிது நேரத்திற்கு பின்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தானாகவே மறைந்து விடும்.

உற்சாகமாக இருங்கள்

அடிக்கடி உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள். முடிந்தால் இயல்பாக நடை பழகுங்கள். 10 அல்லது 20 நிமிடங்கள் இவ்வாறு நடை பயிற்சி மேற்கொண்டால் உங்களது எண்ணம் சீர்படும். பின்னர் தேவையில்லாத நொறுக்கு தீனிகளை உண்ண வேண்டும் என்ற எண்ணம் எழாது.

அதிகமான நீர் அருந்துங்கள்

அதிகமான அளவிற்கு நீர் அருந்துதல் அவசியம். சில சமயங்களில் உண்ணும் உணவே அதிக தாகத்தை ஏற்படுத்தி பின்னர் மேலும் அதுபோன்ற உணவை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தேவையான அளவில் நீர் அருந்துவது நன்மை பயக்கும்.

பழங்களை உண்ணுங்கள்

ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அப்பொழுது பழங்களை சிறு துண்டுகளாக எடுத்து கொள்ளுங்கள். இதனால் இனிப்பு பதார்த்தங்கள் உண்டது போன்ற நிறைவும் ஏற்படும். உடலுக்கும் ஆரோக்கியம் தரும்.

சுமார் முப்பது வருடங்களுக்கு முன் சர்க்கரை நோயாளிகள் நூற்றுக்கு ஐந்து பேர் மட்டுமே இருந்தார்கள். ஆனால் தற்போது அனைவருமே சர்க்கரை நோயாளிகள். 

இவ்வாறு நமக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும் சர்க்கரை பொருளை அளவுக்கதிகமாக பயன்பாட்டில் எடுத்து கொள்ளாமல் நம்முடைய உடலினை பாதுகாத்து கொள்வோம்.

ஓம்


ஓம் என்று ஒரு உலகமயமாக்கபட்ட சொல்லின் மகத்துவம் தெரியுமா?
என்னது உலகமயமாக்கபட்ட சொல்லா இது நம்மூர் ஹிந்துக்கள் தானே உபயோகிக்கும் ஒரு தமிழ் சொல் அல்லது எனக்கு தெரிந்த வரை ஓம், அல்லது அவும் அல்லது அம் என்ற வட மொழி சொல்லின் மறுவலே இந்த ஓம் என்ற சொல் இது எப்படி உலகம் முழுவதும் என்று கேட்பவர்களுக்கான விளக்கத்தை இரண்டாம் பாராகிராஃபில் தெரிவித்துள்ளேன்

அதற்கு முன் இந்த ஓம் என்ற சொல் நம் மனித வாழ்வில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வழக்கத்தில் இருந்தாலும் இதை நவீன விஞ்ஞானம்- இந்த சொல்லுக்கு ஒரு சூப்பர் பவர் என நிருபித்து உள்ளது……….ஓம் என்ற சொல் தமிழில் பிரணவ மந்திரமாக குறிக்கபட்டதன் காரணம் அதற்குள் அடங்கிய பாசிட்டிவ் வைப்ரேஷன் எனப்படும் ஒரு நல்ல விஷயங்களுக்கான அதிர்வு தான் அந்த வார்த்தை.
ஆம் ஒரு சில கோயில்களிலும், அரண்மனைகளிலும், சில வீடுகள் மடங்கள் இந்த மாதிரி இடத்திலும் நீங்கள் காணக்கூடிய ஒரு ஸ்ரீ சக்கரம் (யந்த்ரம்) என்னவென்று பலருக்கு தெரியாது. பலர் இதை ஒரு செப்பு தகடின் கிறுக்கல்கள் என நினைத்திருக்கலாம். ஓம் என்ற சொல்லின் உருவம் அல்லது படிவம் தான் என்று சயின்ஸ் நிருபித்துள்ளது.
ஆம் ஹான்ஸ் ஜென்னி என்னும் விஞ்ஞானி ஸ்விஸ் நாட்டை சேர்ந்தவர்தான் ஒலியின் பரிமாணத்தை நம் பார்வைக்கு கொண்டுவந்தவர். இவர் கண்டுபிடித்த சாதனம் தான் டோனோஸ்கோப் (Tonoscope) என்னும் ஒரு வரலாற்று முக்கிய கருவி. இந்த டோனோஸ்கோப்பில் ஓம் என்று உச்சரித்தால் ஸ்ரீ சக்ரா எனப்படும் யந்திர உருவத்தை .காண முடியும் அதன் படத்தையும் இங்கு இணைத்துள்ளேன். நீங்களும் உச்சரித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆனால் இந்த உருவத்தை நாம் வரைந்து வைத்திருப்பதை அதுவும் பல ஆயிரகணக்கான ஆண்டுகளூக்கு முன் ஒம் என்ற உச்சரிப்பின் பரிமானம் இது தான் என்று வேத ரிஷிகளும் முனிவர்களும் இதன் அர்த்தத்தை உணர்ந்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு பெரிய உண்மை.
சரி நம் ஓம் சொல்லுக்கு வருவோம்….
ஒம் பல மொழிகளின் பிரணவ மந்திரமாக, வடிவ, உருவ அளவில் வேறுபட்டாலும் இதன் ஒலி ஓங்கார நாதமாக ஒன்றாக இணைந்த அளவில் உள்ளது. ஒம் என்ற தமிழ் சொல்லிற்கு ஒ = அ + உ + ம் (அ என்பது முதல்வனான சிவனையும், உ என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள்).
இதை பிராமண சொல் என்று கூறுபவர்களுக்கு இந்த ஓம் வடிவம் சட்டைமுனி சூத்திரத்தில் – ” ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு ” என்று சட்டைமுனி தனது சூத்திரத்தில் பாடியுள்ளார். ஓ என்ற சொல் தாழ்ந்தும் ம் என்ற சொல் நீண்டும் இருந்தால் ஒருவித ஒலி அதிர்வுகள் கிடைக்கும். அது போக ஒ என்ற வார்த்தை உச்சரிக்கும் போது மூச்சை உள்ளே இழுத்து ம் என்றும் கூறும் போது எல்லா வாயுவையும் வெளியே அனுப்பும் இன்னொரு சான்றோரின் மூச்சு பயிற்சியின் சீக்ரெட்.

அது போக ஓ என்று ஜெபிக்கையில் நினைத்த நல்ல விஷயத்தை/உருவத்தை/விரும்பும்கடவளை நிலை நிறுத்தினால் ம் என்று கூறும்போது அது அப்படியே அந்த அதிர்வலை நம்மை சுற்றி சூழ்ந்து கொண்டு நல்லது நடக்கும் என உறுதியாகிறது. அது போக ஓம் என்ற ஒலியை நம் கேட்கும் போது சயின்டிஃபிக்காய் கெட்ட விஷயங்கள் தோன்றுவது தடைப்படும். நிறைய குழப்பங்கள் இருக்கும் போது இந்த ஓம் ஒலி அதிர்வின் எல்லையில் நாம் இருந்தால் நம் மனதும் தெளிவுபெறும் என்பது தெளிவாகிறது.
பகவத் கீதை ஒரு கற்பனை கதை அல்லது அது கிருஷ்ணின் அவதாரத்தை குறிக்கும் ஒரு வரலாற்று உண்மை என கூறுபவர்களுக்கு இதோ கீதையில் கூட ஓம் என்ற வார்த்தை வருகிறது பாருங்கள் கீதை – 8 – 13 “எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்.” ஓம் என்ற சொல் ஓம் என்ற மந்திரத்தின் பெருமையை உபநிடதங்கள் கொடி உயர்த்திப் பறை சாற்றுகின்றன. அச்சொல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளைக் குறிக்கிறது. அச்சொல்லே பரம்பொருள் தான் என்று கூடச்சொல்லப்படுகிறது.
ஓம் என்ற சொல்லில் அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன.இவைமூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிப்பதாகவும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை இம்மூன்று நிலைகளையும் (அ-து, விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது.

சாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய பாரதி கூட தன் மனைவிக்கும் குடும்பத்தாருக்கும் கடிதம் எழுதும் போது ஓம் என்று முதலில் எழுதி தான் இந்த கடிதத்தை எழுதவே ஆரம்பிப்பானாம். இதை விட இதை 108 தடவை உச்சரிக்கும் ஒரு விஷயமும் அறிவியல் பூர்வ உண்மையை பல ஆன்டுகளுக்கு முன் கணித்த நம் மாமுனிவர்களின் விளக்கமும் சில ஆண்டுகளுக்கு முன் வான் வெளி ஆராய்ச்சி உண்மையும் ஒன்று தான்.
அதாவது சூரியன், சந்திரனின் சராசரி டயாமீட்ட்ர்களின் அளவு தான் பூமியின் தூரம். இது 0.5% சூரியனுக்கும் 2.0% சந்திரனுக்கும் என்ற சமீபத்திய துள்ளிய தூர விவரம் பல்லாயிர ஆண்டு இந்தியர்களின் அறிவை மெச்சுகின்றன.
ஓம் என்ற வார்த்தை பிராமணர்களின் சொல், அல்லது வட மொழி சொல், அல்லது இது ஆர்யர்களின் சொல் என்று சிலர் கூறலாம். இது உண்மையல்ல. பிரபஞ்சம் எப்படி கடவுளின் வடிவமைப்போ அது போலத்தான் இந்த ஓம் என்ற சொல்லும். சிந்து வெளி நாகரிகம் என்ன என்பது நம் எலோருக்கு தெரிந்ததே, பல்லாயிரகணக்கான வருடங்களுக்கு முன்பே அருமையாக கட்டபட்ட கட்டிடங்கள், நவீன மாட மாளிகைகள், பிரமாண்டமான வேலைப்பாடுகள் நிறைந்த நவீன கட்டமைப்பை கொண்டு வந்தவர்கள் தான் இந்த சிந்து வெளி சமூகம்.
இந்த சிந்து வழி சமூகத்தின் செங்கல்களில் கூட இந்த ஓம் என்ற சொல் இருந்ததாக தொல் பொருள் ஆராய்ச்சி தெரிவிக்கிறது. இது பல நாடுகளில் பல மாதிரி கூறினாலும் இதன் வலிமையை உணர்ந்த முதல் ஐரோப்பிய மனிதன் ஹிட்லர் தான். சிந்த நதிக்கரையில் வசிக்கும் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களை கொண்ட உலக பெருமைகள் கொண்ட நாடென்றால் அது இந்தியா என்னும் மாபெரும் நாடுதான்.

உலகத்தின் ஒவ்வொரு ஆளும் கண்களுக்கு இந்தியா தான் டார்க்கெட். அது பிரிட்டிஷ் ஆகட்டும், போர்ச்சூகீஸ் அகட்டும், பிரஞ்சு ஆகட்டும், ஜப்பானியர்கள் ஆகட்டும், மொகலாயர்கள் ஆகட்டும் இந்தியாவின் மீது கொண்ட ஆசை இங்கிருந்த கலாச்சாரம், விலை மதிப்பில்லா பொருட்கள் என அடுக்கிகொண்டே செல்லலாம். அதன்படி பார்த்தால் ஹிட்லரின் ஸ்வஸ்திக் சின்னமும் இந்த ஓம் என்ற சொல்லின் தழுவல் தான். இது ஹிட்லர் உபயோகிக்கும் முன் இந்துக்கள் இப்படி இருக்க காரணம் அவர்களிடம் உள்ள முதல் மந்திரமான ஓம் என்ற எழுத்துதான் என மேடிசன் கிரான்ட் என்பவரின் நூலே(தி பாஸிங் ஆஃப் கிரேட் ரேஸ்) இதற்கு சான்று.
அதை நிலை நிறுத்தி ஹிட்லரின் மூளையாக செயலபட்ட ஹென்ரிச் மூலரும் இதை கூறியுள்ளார். இதை விட அவர் கூறிய வார்த்தைகள் தான் மிகுந்த ஆச்சரியத்தில் உண்டாக்கியது அது அவர் எப்படி யூத இனத்தை அழிக்க ஹிட்லர் கமான்டை நான் உபயோகித்தேன் என்றால் ஒரு கையில் பகவத் கீதை மற்றும் ஹிட்லர் வார்த்தை கிருஷண பகவான் அர்ஜுனனுக்கு எப்படி ஒரு சத்திய வாக்கோ அதே தான் என்னுடைய பணியும் அது போல ஹிட்லரை நான் 11ஆவது கிருஷ்ண அவதாரமாக காண்கிறேன் என்று அவர் மட்டுமல்ல மேக்ஸ்னியானி போர்ட்டஸ் எனற பிரஞ்சு பெண்( பின்பு தன்னை சாவித்ரி தேவி என்று மாற்றி கொண்டவர்)கூட கூறுகிறார்.
இதற்கு மேலே இதை பற்றி நாம் பேசினால் பவர்ஃபுல் ஆர்யர்கள் நாங்கதான் என்று குரல் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ஒலிக்க இதற்கு போட்டி இருந்தது- இருக்கிறது.
ஓம் என்ற வார்த்தை ஒரு காலத்தில் நல்லது நினைத்து தியானம் கொண்ட முனிவர்களுக்கும் கெட்டது நினைத்து தவம் கொண்ட சில அரக்கர்களுக்கும் உருவான ஒரு காமன் லேங்குவேஜ் இந்த ஒம்.
ஓம் என்ற வார்த்தையை உச்சரிக்க முடியாதவர்கள் அவர்கள் மனதுக்குள் தியானம், யோகா, உடற்பயிற்ச்சி செய்யும் போது கூட இதை ஃபாலோ பண்ணினாலெ நிறைய மாறுதல்கள் உண்டாகும் என சவுன்ட் ஆஃப் ஹீலீங் கோட்பாடுபடி இது மரணத்தை கூட தள்ளி வைக்கும் ஒரு அற்புத செயல் என ஜொனாதன் கோல்ட்மேன் என்ற அமெரிக்க டாக்டர் கூறுகிறார். ஓம் ஓம் ஓம்…………. நன்றியுடன் ரவி நாகராஜன் …..
thanks http://www.aanthaireporter.com/?p=10301

SAB KA MAALIK EK