Search This Blog

Monday, June 11, 2012

முழு இணைய பக்கத்தையும் Screen Shot எடுப்பதற்கு

எந்தவொரு மென்பொருளும் நிறுவாமலேயே Screen Shot எடுக்கலாம் என்ற போதிலும், முழு தளத்தையும் நம்மால் ஸ்கிறீன் ஷாட் எடுக்க இயலாது.
Capturefullpage.com
இந்த தளத்தில் சென்று உங்களுக்கு ஸ்கிறீன் ஷாட் எடுக்க வேண்டிய பக்கத்தின் முகவரி மட்டும் கொடுத்தால் போதும், அது முழு பக்கத்தையும் எடுத்து தந்து விடும்.
FireShot - Webpage Screenshots - Firefox Add-On
Firefox Browser-ஐ பயன்படுத்துபவர்கள் இந்த Add-On ஐ நிறுவி ஸ்கிறீன் ஷாட் எடுக்கலாம். அதை பேஸ்புக்கில் பகிரலாம், உங்கள் கணணியில் சேமிக்கலாம், பிரிண்ட் செய்யலாம். இதிலேயே இமேஜ் எடிட் செய்யும் வசதியும் உள்ளது.
Screen Capture - Chrome Add-On
கூகுள் குரோம் பயன்படுத்துபவர்கள் இந்த Add-On ஐ நிறுவி ஸ்கிறீன் ஷாட் எடுக்கலாம். இதில் ஸ்கிறீன் ஷாட் எடுக்க பல வித வசதிகளும் உள்ளன. குறிப்பிட்ட பகுதி, முழு பக்கம், முழு ஸ்கிறீன் என இதிலேயும் இமேஜ் எடிட் செய்யும் வசதியும் உள்ளது.
DuckLink
ஸ்கிறீன் ஷாட் எடுக்க பயன்படும் மிக அருமையான மென்பொருள் என்றால் அது இது தான். இதை நிறுவி விட்டு, தேவையான பக்கத்தை ஓபன் செய்து வைத்துக் கொண்டு ஸ்கிறீன் ஷாட் எடுக்க கிளிக் செய்தால் போதும், அதன் பின்னர் இதிலேயே எடிட் செய்தும் கொள்ளலாம்.

Sysrestore Pro 3.3: கணணியை பழைய நிலைக்கு மீட்பதற்கு உதவும் மென்பொருள்

சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் உங்கள் கணணிகள் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக பிரச்னையை ஏற்படுத்தலாம். இதனால் சேமிக்கப்பட்ட தரவுகள், தகவல்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
இவ்வாறு இழக்கப்படும் தரவுகளை மீளப் பெறுவதற்காக Sysrestore, Recovery முறைகள் பயன்படுத்தப்படும்.
தவிர சில மென்பொருட்கள் சீராக இயங்காது தொல்லை செய்யலாம், இவற்றிற்கு Sysrestore முறை சரியான தேர்வாக அமையலாம்.
இவ்வாறான தலைவலிகளுக்கு சிறந்த நிவாரணியாக Sysrestore Pro 3.3 மென்பொருள் காணப்படுகின்றது.
இம்மென்பொருளானது கணணி சிறந்த நிலையில் இயங்கும் போது ஆயிரக்கணக்கான ஸ்னாப் ஷாட்களை எடுத்துக் கொள்கின்றது. இவற்றைப் பயன்படுத்தி குளறுபடி செய்யும் நிலையிலிருந்து கணணியினை பழைய நிலைக்கு மீட்க முடியும்.

Tamil Numbers

THE GREAT...
தமிழ் எண்கள்: பத்தும் நாலுமே பதினான்கு; ஒன்றும் நான்குமல்ல.

இந்தக் கல்வெட்டில் தமிழ் எண்கள் மற்றும் இந்தோ-அரேபிய எண்கள் இரண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். இது ஒரு மைல்கல் (தஞ்சாவூர் அருங்காட்சியகம்).

இங்கு 14 என்பதற்கு சமமான தமிழெண் ௰௪ (14= ௰௪) என்றே சரியாகப் பதியப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். ௰=10, ௪=4. இன்று பலரும் 14=௧௪, அதாவது ௧=1, ௪=4 என வசதிக்காகப் பாவிக்கின்றனர். இது தவறானது. பிற்காலத்தில் நம்மூலச் சுவடிகளை வாசிக்கும்போது குழப்பங்களைத் தோற்றுவிக்கும். பத்தும் நாலுமே பதினான்கு; ஒன்றும் நான்குமல்ல நன்றி.

தமிழ் எண்கள்
௦ - 0
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௱ = 100
௲ =1000
Photo: THE GREAT...