Search This Blog
Thursday, May 31, 2012
முட்டை கருவாடு மிளகு குழம்பு செய்யும் முறை
தேவையான பொருட்கள்
வஞ்சிரம் கருவாடு : 3 துண்டு
முட்டை : 3
மிளகு சீரகம் : 25 கிராம்
நாட்டு பூண்டு : 30 பல்
நல்லெண்ணை : 50 கிராம்
புளி : எலுமிச்சம்பழம் அளவு
உப்பு : தேவையான அளவு
செய்முறை:
மிளகு சீரகத்தை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். பூண்டை உரித்து அதில் பாதியை ஒன்றிரண்டாக தட்டிக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணை ஊற்றி அதில் முழுதாக உள்ள பூண்டை வதக்கவும். பிறகு தட்டிய பூண்டையும் வதக்கி அதனுடன் அரைத்து வைத்துள்ள மிளகுசீரகத்தை போட்டு நன்றாக வதக்கி கருவாடையும் போட்டு பொரிந்தவுடன் புளியை கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து முட்டையை உடைத்து ஊற்றி வாணலியை மூடி வைத்து முட்டையை வேகவிடவும். சிறிது நேரம் கழித்து முட்டையை திருப்பி போட்டு வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான முட்டை கருவாடு மிளகு குழம்பு தயார்.
குறிப்பு : இந்த குழம்பிற்கு நல்லெண்ணை தான் ஊற்றவேண்டும். குழம்பில் அதிகம் தண்ணீர் ஊற்றக் கூடாது.
கணமேனும் அவனை மறக்கிலேன்!
என் மனவெளியில் விதைக்கப்பட்ட வலிகளில் இருந்துதான் வாழ்விருப்பின் அடையாளம் அர்த்தப்படுத்தப்பட்டது. அவ்வலியின் உச்சமே என்னுள் மலைசுமக்கும் மறத்தையும் தந்தது. என் தல யாத்திரைகள் ஒவ்வொன்றும் தங்குமடங்களிலேயே நிறைவுற்றுப் போயினவெனினும்… மாற்றீடாய் தங்குமடங்களைத் தரிசனத்துக்கான தலங்களாய் ஆக்கும் திறனைத் தந்ததும் அவ்வலிகளே. வலிகள் ஏனோ வற்றாத ஊற்றாய்… பீறிட்டுக் கொண்டிருந்தன. இருந்தும் என் மனவாழம் அறியாமலவை தோற்றே போயின. குருசேஸ்த்திரத்தில் என் வாழ்வு பாண்டவர்கள் பக்கத்தில் இருந்தாலும் துரியோதனன் எனக்கு உயிர்ப்பிச்சை தந்துள்ளான். அர்ச்சுணன் கையில் நாகஸ்திரம் இருந்திருந்தால்… அது பலமுறை ஏவப்பட்டிருப்பதுடன் பல தலைகளையும் கொய்திருக்கும். காக்கப்பட்டவன் எவனெனினும் ‘காத்தவன்’ கடவுளல்லவா கணமேனும் அவனை மறக்கிலேன்!
Subscribe to:
Comments (Atom)

