பயனுள்ள யோசனைகள்
1. கம்பளி உடைகளின் மேல் பொடி செய்த படிகாரத்தை தூவி வைத்தால் பூச்சி அரிக்காமல் இருக்கும்.
2. கறுத்து மங்கலாகிப் போன அலுமினியப் பாத்திரங்களை எலுமிச்சை சாற்றினால் துடைத்தால், பளீர் என்று ஆகும். 3. மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் கோதுமைக் கஞ்சி குடித்து வந்தால்,வயிற்று வலி வராது. 4. ஓமத்தை அரைத்து தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்தால் கடுமையான தலைவலி நீங்கும். 5. வெந்தயக் கீரையை சாம்பார்,கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு குறையும். 6. காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு மென்று,தண்ணீர் குடித்தால் உடல் சூடு தணியும். 7. வாரம் ஒரு முறை பாகற்காயை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் மடிந்து விடும். 8. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ,அடிக்கடி இளம் முருங்கக் கீரையை உண்டு வந்தால்,பால் அதிகம் சுரக்கும். 9. சலித்த சப்பாத்தி மாவுக் கப்பியை,வீணாக்காமல் அடை மாவில் கலந்து அடை தயாரிக்கலாம். 10. ஆம்லேட் மேல் உப்பு,மிளகுத் தூளுடன் சீரகப் பொடியையும் தூவினால்,சுவையாக இருக்கும். 11. பாயசம் நீர்த்துப் போனால்,அதில் வாழைப் பழத்தை பிசைந்து போட்டு,சிறிது தேனும் கலந்து விட்டால் சுவையான பாயசம் தயார். 12. நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால்,இளமையாக இருக்கலாம். 13. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை, அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது. 14. வாழைப் பூவை நறுக்கிய பின் வினிகர் கரைத்த நீரில் கை கழுவினால்,கறை நீங்கி விடும். 15. அசைவ உணவு சாப்பிட்ட பின் சிறு துண்டு வெல்லம் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
- ச.விஜயலட்சுமி ,ஈரோடு.
|
Search This Blog
Tuesday, October 11, 2011
பயனுள்ள யோசனைகள்
கால் சுளுக்கு
இயன்முறை மருத்துவம்
|
கால் சுளுக்கு
டாக்டர். தி. செந்தில்குமார்
நாம் நம் கடந்து வந்த பகுதி வாழக்கையில் இந்த வார்த்தையை பிறர் மூலம் கேட்டோ அல்லது நாமோ உணர்ந்து வந்து இருப்போம். கால் சுளுக்கு என்றால் என்ன, சுளுக்கு உடலில் எந்தப் பகுதியை பாதிக்கும், இதை எப்படி தவிர்ப்பது, வந்த பின் அதற்குத் தகுந்த மருத்துவம் செய்வது எப்படி என்று இங்கே காணலாம்.
இந்த சுளுக்கு உடலில் உள்ள எந்த பகுதியைப் பாதிக்கிறது என்றால் உடம்பில் அனைத்து மூட்டுகளிலும் உள்ள ஜவ்வு பகுதியைப் பாதிக்கிறது. உடம்பில் அனைத்து மூட்டுகளிலும் அமைந்து உள்ள இந்த ஜவ்வு பகுதியை ஆங்கிலத்தில் லிகமென்ட் என்று மருத்துவர்கள் அழைப்பர். இந்த ஜவ்வு - லிகமென்ட்(ligament), மூட்டுகளுக்கு உறுதியை அளித்து, வலுவை கூட்டி தேவை அற்ற இயக்கங்களைத் தவிர்த்து, மூட்டுகளை காயங்களில் இருந்து பாதுகாக்கிறது. இந்த சிறந்த பணியைச் செய்யும் ஜவ்வுகள் சில நேரங்களில் ஏற்படுத்தும் காயங்கள் மிகுந்த சிரமங்களைத் தரலாம். உடம்பில் உள்ள கணுக்கால் மூட்டு, முழங்கால் மூட்டு, மணிக்கட்டு, தோள்ப்பட்டை, முழங்கை மூட்டு போன்ற பகுதிகளில் உள்ள இந்த ஜவ்வுகள் எளிதாய் காயங்களுக்கு உள்ளாகலாம். சவ்வுகளில் காயங்கள் ஏற்பட சில காரணங்கள், 1. வலுவற்ற ஜவ்வுகள் எளிதில் காயங்களுக்கு உள்ளாகலாம். 2. போதிய பயிற்சிகள் அற்ற ஜவ்வுகள் . 3. திரும்ப திரும்ப உபயோகிக்கும் போது 4. சரியான பாதுகாப்பற்ற காலணிகள் அணியும் போது 5. வெளிச்சம் குறைவான பாதை, பார்வைக் குறைபாடு, கரடு முரடான பாதைகளில் நடக்கும் போது - இப்படி சவ்வுகளில் ஏற்ப்படும் காயங்களை மருத்துவர்கள் காயத்தின் வீரியங்களை கொண்டு மூன்று நிலைகளாக பிரிக்கின்றனர். இந்த நிலைகளை கொண்டே குணப்படுத்தும் முறைகளும் மாறுபடுகிறது. அந்த முன்று நிலைகள் எது? 1. முதல் நிலை - சிறிய காயம் 2. இரண்டாம் நிலை - ஜவ்வு சிறிதே கிழிந்த நிலை 3. மூன்றாம் நிலை - ஜவ்வு முற்றிலும் கிழிந்த நிலை. முன்பு கூறியது போல முதல் இரண்டு நிலைகளும் மருந்தின் மூலமும், இயன்முறை மருத்துவத்தின் மூலமும் எளிதாய் குணப்படுத்தும் நிலை ஆகும். இந்த இரண்டு நிலைகளைக் குணப்படுத்த ஜவ்வுக் காயங்களை உறுதி செய்த பின்பு, ஐஸ் மூலம் ஒத்தடம் கொடுப்பது சிறந்த மருந்து. அதாவது இதனை ஆங்கிலத்தில் கிர்யோதேரபி(cryotherapy) என்பார்கள். கிர்யோதேரபி என்றால் நோய்களை மருந்து இல்லாமல் ஐஸ் மூலம் குணப்படுத்தும் முறை. அதாவது ஜவ்வில் காயங்களை மருத்துவர் மூலம் உறுதி செய்த பின் குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று முறை முதல் இரண்டு நாட்களுக்கு ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனைச் செய்யும் போது, ஐஸ் கட்டியை எடுத்துக் கொண்ட பின் அதனை பிளாஸ்டிக் பையில் அடைத்து அடிபட்ட பகுதியில் ஒத்தடம் அல்லது ஐஸ் கட்டியை கைக்குட்டைக்குள் போட்டு அடிபட்ட பகுதியில் மேலே தடவுவதின் மூலமும் ஒத்தடம் கொடுக்க வேண்டும் குறைந்தது பதினைத்து நிமிடங்கள் அளிப்பது தகுந்த பயனைத் தரும். இப்படி ஐஸ் ஒத்தடம் கொடுக்கும் போது காயங்களால் ஏற்படும் அழற்சி inflammation தடுத்து நிறுத்தப்படுவதோடு, ஜவ்வில் ஏற்ப்பட்ட காயம் எளிதில் குணமாக உறுதுணையாக இருக்கும். முதல் இரண்டு நாட்கள் கடந்த பின் தகுந்த இயன்முறை மருத்துவம் மேற்கொள்வதன் மூலம் காயம் அடைந்த சவ்வின் வலுவை திரும்பப் பெற முடியும். மூன்றாம் நிலை சற்றே மோசமான நிலையாக இருப்பதால் மருத்துவர்கள் இதனை அறுவை சிகிச்சை மூலமே சரிசெய்ய முடியும். அதாவது கிழிந்த சவ்வின் பகுதிகளை நீக்கி விட்டு பின்பு கிழிந்த பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் தைத்து காயங்களைச் சரி செய்வார்கள். இதற்குப் பிறகு குறைந்தது ஆறு முதல் எட்டு வாரங்கள் இயன்முறை மருத்துவர் ஆலோசனைப்படி பயிற்சிகளை மேற்கொண்டால், கிழிந்த சவ்வின் வலுவைத் திரும்பப் பெறலாம். இது போன்ற ஜவ்வில் ஏற்ப்படும் காயங்கள் பொதுவாய் விளையாட்டு வீரர்களை அதிகம் பாதிக்கிறது, முறையான உடற்பயிற்சியும், தகுதியான இயன்முறை மருத்துவமும், இதே போன்ற ஜவ்வில் ஏற்ப்படும் காயங்களை வாராமல் தடுப்பதோடு, ஒரு சிறந்த விளையாட்டு வீரரை இந்த நாட்டிற்குக் கொடுக்க முடியும், இது போன்ற ஜவ்வில் ஏற்ப்படும் காயங்கள் விளையாட்டு வீரரின் விளையாட்டுத் திறனை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் அந்த விளையாட்டு வீரர் வாழ் நாள் முழுவதும் அந்த விளையாட்டைத் தொடராமலே போகவும் வாய்ப்பு உள்ளது. எனவே வருமுன் காப்போம் உடற்பயிற்சி மூலம், வந்த பின் தகுதியான சிறந்த மருத்துவத்தை பின்பற்றுவோம். |
நிஜத்தில் நடக்குமா?
தே. சுந்தர்ராஜ்
மாலை நேரம். மஞ்சள வெய்யில் கண்ணைக் கரித்தது. சாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்தது. வண்டி ஓட்டுவது மிகுந்த சிரமமாயிருந்தது.ரவிக்கு வீடு வந்து சேர்ந்தால் போதும் என்றாகிவிட்டது. ஸ்கூட்டி தெருமுனை திரும்பும் போதே தன் வீட்டின் முன்பு கூட்டமாய் பரபரப்புடன் தெரிந்தது.
வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.வீடு வந்ததும் வண்டி யை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான். எதிர் வீட்டு கனகம்மாள், “தம்பி நல்லவேளை நீங்க சீக்கிரமா வந்துட்டீங்க. பார்வதிக்கு மத்தியானத்திலிருந்தே உடம்பு சரியில்லை. ஒரே வாந்தி. நா கசாயம் கூட வச்சிக் கொடுத்தேன்.ஒண்ணுத்துக்கும் அசைய மாட்டீங்குது. சீக்கிரமா டாக்டர் கிட்டே போகணும். நீங்க கிளம்புங்க. ஒரு நொடி லெ வீட்லே சொல்லிட்டு வந்தர்றறேன்.” கனகம்மா கிளம்பினாள். அக்கம் பக்கம் வீட்டிலிருந்து வந்தவர்கள் மெல்ல கலைந்தனர். ரவி பார்வதி அருகே வந்து, “ என்ன பண்ணுது பார்வதி?” “முடியலங்க வயிறு ரொம்ப வலிக்குதுங்க. சீக்கிரமா டாக்டர் கிட்ட போலாங்க.” அவள் துடித்தாள். “இதோ புறப்படலாம்.” என்று கூறிவிட்டு பக்கத்து வீட்டுப் பையனை ஒரு ஆட்டோவை அழைத்து வரச்சொன்னான். சில நிமிடங்களில் ஆட்டோ வந்து நின்றது. பக்கத்து வீட்டுப் பெண்கள் கைத்தாங்கலாய் ஆட்டோவில் ஏற்றினார்கள். நின்று கொண்டிருந்தவர்கள், “பாவம் ரொம்பவும் முடியல போலிருக்கு” என்று பேசிக் கொண்டனர். ஆட்டோ கிளம்பியது. கூட்ட நெரிசலையும் சிக்னல்களையும் தாண்டி ஆஸ்பத்திரியை அடைந்தது. ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகமாகயிருந்தது. டாக்டர் அப்போதுதான் வந்திருந்தார். ரவியைப் பார்த்ததும் நின்று, “என்ன ரவி. யாருக்கு உடம்பு சரியில்லை.” “மிஸ்ஸசுக்குதான். ரொம்ப முடியல்ல. வயிறு வலிக்குதாம்” “அப்படியா உள்ள வாங்க” அவனுக்கு ஒரே ஆச்சர்யமாயிருந்தது. இவ்வளவு பேர் காத்திருக்க தன்னை உடனே அழைத்தது சந்தோசமாக இருந்தது. டாக்டர் பரிசோதித்தார். “ ரவி நீங்க இவங்கள அழைச்சுட்டு பின்பக்கம் போய் ப்ளட் டெஸ்ட் ஆப்டம் ஸ்கேன் ஒண்ணு பண்ணிட்டு அடமிட் ஆய்க்கங்க. ரிப்போர்ட் வரட்டும். அதுவரைக்கும் வலியில்லாம இருக்க மாத்திரை கொடுத்திருக்கேன் உள்ள பார்மஸில வாங்கிக்கங்க.” “ சார் அட்மிஸன் அவசியமா? மாசகடைசி நீங்க சொல்றதப் பாத்தா ஏகப்பட்ட செலவாகும் போலிருக்கு.” “என்ன விளையாடறீங்களா. உங்களுக்கென்ன சார். நம்ம பங்களா பக்கத்திலே வீடு கட்டீட்டிருக்கீங்க... வீடு எந்தலெவலுக்கு இருக்கு.” “அது ஒரு பக்கம் இருக்கு லோன்ல தான் வீடுகட்டறேன். லிண்டல் லெவலுக்கு வந்தாச்சு. அடுததது கான்கிரீட் போடணும் பணம் எதிர்பார்த்துட்டிருக்கேன். இநத நேரத்திலே, அவளுக்கு இந்த மாதிரி உடம்பு முடியாம.... அதான் என்ன பண்றதுன்னு தெரியலே?” “டோன்ட் வொரி காசப்பத்திக் கவலப்படாதிங்க. ஒருபைசா செலவு பண்ண வேண்டாம் எல்லாம் நல்லா ஆனதுக்கப்புறம் பாத்துக்கலாம். இப்போதிக்கு அவங்களுக்குத் துணையாயிருந்தா அதுவே போதும் “ பார்வதியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் ரவி. “என்னம்மா வலி பரவாயில்லையா?” “ம். அவர் தொட்டதுமே வலியே போயிடுச்சு போலிருக்கு.” “என்னடி சொல்றே?” என கேக்க வேண்டும் போலிருந்தது. என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. எல்லாம் முடிந்து எப்போது அறைக்கு வந்து படுத்தோம் என்பதே புரியவில்லை. கதவு தடதட வென்று தட்டும் ஒலி கேட்டது. “சார் பால்” என்று வாய்கிழிய கத்துவது மட்டுமே கேட்டது. எழுந்ததும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. தான் எழுந்தது தன் வீட்டில் ஆஸ்பத்திரியுமில்லை ஒரு மண்ணுமில்லை. இத்தனை சந்தடியிலும் எருமை மாதிரி தூங்குகிறாள் பார்வதி. அப்ப அவளுக்கு ஒன்றுமில்லையா? இதுவரை நடந்தது முழுவதும் கனவா? பிறகு நிஜத்தில் எங்காவது இதுபோல நடக்கிற காரியமா? |
Subscribe to:
Comments (Atom)