Search This Blog

Thursday, October 6, 2011

பெண்களை மார்பகப் புற்று நோயில் இருந்து விடுவிக்கும் கரட்


Carrots Carrots, Vegetables are very useful for health

கரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்று முற்றாமல் காத்துக்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஃபுளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் “ஏ” விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து, சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள ஃபாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா ஃபெர்ணாண்டஸ் கூறுகையில், இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார்.

பாரிசவாதத்திலிருந்து நோயாளிகளை காக்கும் மூளை அலைகள்




மூளை அலைகளை மட்டுமே பயன்படுத்தி ஒரு கணினியில் ஒரு கையைக் கட்டுப்படுத்தும் பரீட்சார்த்த திட்டத்திற்குக் குரங்குகள் பயிற்சியளிக்கப்படுகின்றன.
வெவ்வேறு பொருட்களின் அமைப்புகளை உணரத் தமது கைகளை மிருகங்கள் பயன்படுத்தக்கூடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நுட்பம் உடற்பாகங்கள் இயலாத நிலையிலுள்ள நோயாளிகளால் அவர்களது நகர்வுகளை மீண்டும் செயற்பாட்டிற்குக் கொண்டுவர முடிவது மட்டுமல்லாது தொடுகை உணர்வையும் மீளப்பெறக் கூடியவாறுள்ளது.
பரிசோதனைகளில்  திரையில் உள்ள ஒரு கையைக் கட்டுப்படுத்த அவற்றின் மூளைகளில் மின்னலைகளை உருவாக்குவதன் மூலம் பயிற்சியளிக்கப்பட்டது.
இதனால் அந்தக் குரங்குகள் திரைகளில் காணப்பட்ட வெவ்வேறுபட்ட அமைப்புகளை உணரக்கூடியதாயிருந்தன. வட கரோலினாவைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தான் இந்த ஆய்விற்குத் தலைமைதாங்கினார்.
இவர்கள் ஒரு கணினி விளையாட்டின் மூலம் joystick இனைப் பயன்படுத்தி ஒரு கையை நகர்த்தப் பயன்படுத்தினர். இது மோசமான நரம்பியல் தாக்கத்தினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் மீட்பிற்குப் பயன்படும் என இவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
குரங்குகளின் மூளையில் பலதரப்பட்ட மின்னலைகள் செலுத்தப்பட்டுப் பின்னர் அவற்றைக் கணினித் திரையுடன் தொடுத்தனர்.
பின்னர் joystick உம் அகற்றப்பட்டது. இதனால் குரங்கின் மூளையினால் இந்தக் கை நகர்த்தப்பட்டது. இதனால் கிடைத்த சமிக்கைகள் அந்தக் கையினை நகர்த்தின.
இதனால் கம்பிகளற்று குரங்குகளால் கட்டுப்படுத்த முடியும் என்ற முறை தற்போது மேம்படுத்தப்பட்டுவருகின்றது எனப் பேராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
மீண்டும் நடக்கும் திட்டத்தினை டியூக் பல்கலைக்கழக அணி மேற்கொண்டுவருகின்றது.
இதனை பிரேசிலில் எதிர்வரும் 2014 இடம்பெறப்போகும் உலகக்கோப்பை காற்பந்தாட்டப் போட்டியில் விளக்கப்போவதாக இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

முட்டை தொடர்பான சில மூட நம்பிக்கைகளுக்கு ஆய்வு ரீதியான முடிவு



images (44)
அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது.
சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.
அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன.
முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஆய்வு தெரிவிக்கிறது.
“சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது.
இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் ‘பி’ குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன” என்கிறார் டாக்டர் டெனால்ட் மெக்மைரா.
1976-ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இந்த ஆய்வு 2 வருடம் நடந்தது.
1986-ம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், கால்நடை வைத்தியர்கள் தினமும் முட்டை சாப்பிட்டனர். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, 12 ஆண்டுகள் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.
80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவ குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவ குறிப்பேடுகள் தெரிவிக்கும் உறுதியான தகவல்கள்: தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்பதுதான்.
சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துச் சாப்பிட்டால் கெடுதல் தான்.
நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைப்படி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்.