பெர்சனல் கணணியின் இடத்தை விரைவில் பிடித்துவிடும் என அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு சாதனம் டேப்ளட் பிசி. இன்று இது ஒரு புதிய சாதனம் அல்ல. கைகளில் எடுத்துச் சென்று எங்கும் பயன்படுத்தக் கூடிய மிகச் சிறந்த சாதனமாக டேப்ளட் பிசி உருவாகியுள்ளது. நமக்குப் பிடித்த செய்தி சேனல்களைப் பார்க்கலாம், பிரியமான திரைப்படங்களைப் பார்க்கலாம், மின்னஞ்சல்களைப் பார்க்கலாம், அனுப்பலாம், கேம்ஸ் விளையாடலாம், இசையை ரசிக்கலாம். இப்படி இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையோடு ஒட்டிய அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். முதலில் வெளியான டேப்ளட் கணணிகள் பயன்படுத்த மிகவும் கடினமாகவும், அதிக எடை கொண்டதாகவும் இருந்தன. ஒரு சில மணி நேரங்களிலேயே அதன் பற்றரிகள் தங்கள் மின் சக்தியை இழந்தன. அதனால் லேப்டாப் கணணியே போதும் என்று மக்கள் அவ்வளவாக இதன் மீது அக்கறை காட்டாமல் இருந்தனர். தற்போது இதன் அனைத்து குறைகளும் களையப்பட்டு சிறப்பான பயன்பாட்டினைத் தரும் பல அம்சங்களை இவை கொண்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதில் உள்ள சில அனுகூலங்களை இங்கு காணலாம். 1. டேப்ளட் பிசி என்பது முழுமையான ஒரு பெர்சனல் கணணி என்று சொல்லலாம். இன்றைக்கு கணணி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள் அதனை இன்டர்நெட் பிரவுஸ் செய்திடவும், வீடியோ மற்றும் ஓடியோ ரசிக்க மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த செயல்களை பெர்சனல் கணணிகளில் மேற்கொள்கையில் கட்டாயமாக அதன் முன் அமர்ந்து தான் செயல்பட வேண்டியுள்ளது. ஆனால் ஒரு டேப்ளட் கணணியில் நமக்கு வசதியான இடத்தில் நின்று கொண்டோ, படுத்துக் கொண்டோ, அமர்ந்தோ, சுகவாசியாக டேப்ளட் பிசியைப் பயன்படுத்தலாம். 2. டேப்ளட் பிசியைக் கையாள்வது மிக இயற்கையான ஒரு செயலாக உள்ளது. குறிப்பாக அதன் தொடுதிரையைத் தொட்டுச் செயல்படுவது, மவுஸினைக் கையாள்வதனைக் காட்டிலும் எளிதாகவும், இயற்கையாகவும் உள்ளது. மேலும் டேப்ளட் பிசியைப் பயன்படுத்த, சிறப்பாக எந்த பயிற்சியும் தேவையில்லை. ஒரு குழந்தை கூட எளிதாக இதனைப் பயன்படுத்த முடியும். 3. டேப்ளட் பிசி மிகவும் வேகமாகச் செயல்படுகிறது. இன்டர்நெட் பிரவுஸ் செய்வதில் இதன் வேகம் பெர்சனல் கணணியையும் மிஞ்சி விடுகிறது. 4. நண்பர்களுடன் வீடியோ சேட் செயல்களில் ஈடுபடுவது, பெர்சனல் கணணிகளில் முடியும் என்றாலும் ஒரு டேப்ளட் பிசியில் மேற்கொள்வது இன்னும் இயற்கையாக ஒரு நெருக்கத்தினை நண்பர்களுடன் ஏற்படுத்துகிறது. 5. ஒரு டேப்ளட் பிசியில் ஆயிரக்கணக்கான மின் நூல் பக்கங்களை சேவ் செய்து நாம் விருப்பப்படும் நேரத்தில் படிக்க இயலும். தனியாக இதற்கென ஒரு இ–ரீடர் என்னும் சாதனத்தினை வாங்க வேண்டியதில்லை. 6. டேப்ளட் பிசியை எந்த ஒரு சாதனமாகவும் இயக்க பல அப்ளிகேஷன்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இதற்கென அப்ளிகேஷன் ஸ்டோர்கள் இணையத்தில் நிறைய இயங்குகின்றன. கமெரா, நூல்கள், மியூசிக் பிளேயர், பருவ இதழ்கள் எனப் பல வசதிகள் கிடைக்கின்றன. 7. பெர்சனல் கணணி பயன்படுத்துவதில் மொனிட்டர் மூலம் நம் கண்களுக்கு ஏற்படும் இடையூறுகள், ஒரு டேப்ளட் பிசியைப் பயன்படுத்துகையில் அறவே நீக்கப்படுகின்றன. இதனை எந்தக் கோணத்திலும் வைத்துப் பயன்படுத்தலாம். நடந்து கொண்டும் படுத்துக் கொண்டும் கூட இதனை எளிதாகப் பயன்படுத்த முடியும். 8. டேப்ளட் பிசிக்கள் வந்த புதிதில், ஒரு பெர்சனல் கணணி விலைக்கே விற்பனை செய்யப்பட்டன. இப்போது பல நிறுவனங்கள் இந்த சந்தையில் இயங்குவதால் இவற்றின் விலை மிக வேகமாகக் குறைந்து வருகிறது. ஒரு பெர்சனல் மற்றும் லேப்டாப் கணணியைக் காட்டிலும் குறைவான விலையில் இதனை வாங்கிப் பயன்படுத்த முடியும். |
Search This Blog
Monday, October 3, 2011
டேப்ளட் கணணிகள் தரும் புத்தம் புதிய வசதிகள்
மூளைக் கோளாறுக்கு அருமருந்தாகும் சிரிப்பு: ஆய்வுத் தகவல்
சிரிப்பு தான் உலகின் சிறந்த மருந்து என்பது நமக்குத் தெரிந்தது தான். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று மூளைக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிரிப்பு அருமருந்தாகப் பயன்படுவதாகத் தெரிவித்துள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள 36 மருத்துவமனைகள் மற்றும் 400 வீடுகளில் கடந்த மூன்றாண்டுகளாக வயதானோரிடையே ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய இதில் விளையாட்டுகள், நகைச்சுவை மற்றும் பாடல்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. ஆய்வாளர்கள் தினசரி மருத்துவமனைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று வயதானோருடன் பேசி சிறிது நேரம் இருப்பர். அப்போது விளையாட்டு, நகைச்சுவை போன்றவற்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்வர். இந்த ஆய்வில் 200 வீடுகளில் உள்ள வயதானோரைச் சந்திக்கும் ஆய்வாளர்கள், விளையாட்டு போன்ற எதையுமே பயன்படுத்தாமல் வெறுமனே பேசி விட்டு வந்து விடுவர். ஆய்வின் இறுதியில் வயதானோர் குறிப்பாக பல்வேறு நோய்களால் மூளைக் கோளாறு ஏற்பட்டு அதனால் பாதிக்கப்பட்டோர், விளையாட்டு, நகைச்சுவை போன்றவற்றால் மூளைக் கோளாறின் பாதிப்பில் இருந்து 20 சதவீதம் விடுபட்டது தெரியவந்தது. |
அலர்ஜி குறித்த சில தகவல்கள்
அலர்ஜி என்பது மைக்ரோப், பக்டீரியா, வைரஸ் போன்றவற்றால் வரக்கூடிய நோய் அல்ல. நம் உடலின் தற்பாதுகாப்பிற்காக இம்யூன் சிஸ்டம் என்ற ஒரு அமைப்பு உள்ளது. சில நேரங்களில் நம் உடலில் இந்த சிஸ்டம் வேலை செய்யாமல் போய் விடுகிறது. அப்போது சாதாரணமான பொருட்களை சாப்பிட்டாலும் கூட அதைச் சரியாகக் கவனிக்காமல் இது தவறாக செயல்பட்டு விடுகிறது. அதனால் தான் கத்திரிக்காய் கூட சிலருக்கு அலர்ஜியாகத் தெரிகிறது. எதனால் இந்த அலர்ஜி வருகிறது என்று கண்டுபிடிப்பது சற்று சிரமம்தான். ஏனென்றால் ஒரு நாளில் நாம் எத்தனையோ வாசங்களை நுகர்கிறோம். எத்தனையோ பொருட்களை சாப்பிடுகிறோம். அவற்றில் அலர்ஜிக்கு காரணமான பொருள் எது என்று கண்டுபிடித்தால் தான் அவற்றை நாம் ஒதுக்கிவிட்டு அலர்ஜியில் இருந்து விடுபட முடியும். உதாரணமாக ஆஸ்துமா உள்ளவர்களுக்கு அலர்ஜி தான் 40 சதவீதம் காரணமாக உள்ளது. “அனாபைலாக்டிக் ஷாக்” என்று ஒரு நோய் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் உள்ள திசுக்கள் எல்லாம் வீங்கி விடும். அதைத் தொடர்ந்து வயிற்றுத் தசைகளில் துடிக்கும் படியான வலியும் உண்டாகும். தொண்டைக் குழாய் வீங்கி நெருக்க ஆரம்பிக்கும். மூச்சுத் திணறல், பிளட் பிரஷர் என்று ஒவ்வொன்றாக தாக்க ஆரம்பித்து விடும். அதனால் உடனடியாக மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இந்த வகையான அலர்ஜிக்கு சில வகை மீன்கள், பூச்சிக்கடி, பெனிசிலின் போன்றவை தான் காரணம். தோல் பரிசோதனையை செய்து கொள்வதன் மூலம் சில நோய்களில் இருந்து அலர்ஜிக்கான காரணத்தைக் கண்டறிகின்றனர். இந்த சோதனையில் அலர்ஜியை உண்டாக்கக்கூடிய பொருளை சிறு ஊசியின் மூலம் உடலில் செலுத்துகின்றனர். அப்போது உடல் ஏதாவது ரியாக்ஷனை வெளிப்படுத்துகிறதா என்று பார்க்கின்றனர். தற்போது உலகம் முழுவதும் அலர்ஜியைப் பற்றிய ஆராய்ச்சிகளும், அதற்கான எதிர்ப்பு மருந்துகளும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த ஹின்ச் கிளிப் என்பவர் நுகர்வதால் உண்டாகும் அலர்ஜியைத் தடுக்க ஒரு பிளாஸ்டிக்கால் ஆன கருவியைக் கண்டறிந்துள்ளார். இதனுள் ஒரு சிறிய மின்விசிறி சுழன்று கொண்டிருக்கும். இந்த சாதனத்தைத் தலையில் கவிழ்த்துக் கொண்டால் பில்டர் செய்யப்பட்ட சுத்தமான காற்றை சுவாசிக்கலாம். அலர்ஜியைத் தூண்டி விடுவது எது என்று தெரியுமா? உடலுக்குள் இருக்கும் ஆர்க்கிடோனிக் என்ற அமிலம் தான் என்றும் மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். |
Subscribe to:
Comments (Atom)