Search This Blog

Monday, October 26, 2015

KILL BILL (கில் பில்):


கத்தியின்றி, துப்பாக்கியின்றி ரத்தம் வழிய வேண்டுமா? ஹாலிவுட் சூப்பர்
இயக்குனர் என்று வருணிக்கப்படும் குவெண்டின் டேரன்டினோவின் கில் பில் பார்த்தால் போதும். படம் முடியும்போது நிச்சயம் உங்கள் சட்டை முழுவதும் ரத்தம் படிந்திருக்கும். ஏனென்றால் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை, திரை முழுவதும் ரத்தம் தெறித்துக்கொண்டே இருக்கும்.
டைட்டானிக் படம் பார்த்தால் உடனே யாரையாவது காதலிக்கத் தோன்றும். சைனீஸ் டைப் சண்டை படம் பார்த்தால் உடனே குங்பூ கற்றுக்கொண்டு யாரையாவது அடிக்கத் தோன்றும். இந்த கில் பில் பார்த்தால்… இன்னும் நாம் உயிரோடு இருக்கிறோமா என்று தலையையும் கையையும் தொட்டு உறுதிப்படுத்தவும், கையாலாகாத குற்றவுணர்ச்சியும் தோன்றும்.

ஆரம்பமே அமர்க்களம், அதிரடி என்றெல்லாம் பார்த்திருப்போம். இது ஆரம்பமே உவ்வேக். ரத்தக் கோரமாக சிதைக்கப்பட்ட உமா தர்மன் முகத்தை டிஷ்யூ பேப்பரை வைத்து துடைக்கிறான் பில். நீ என்னை சாடிஸ்ட் என்று தவறாக எண்ணிவிடாதே என்று சமாதானம் சொன்னபடி துப்பாக்கியை எடுக்கிறான். என் வயிற்றில் உன் குழந்தை வளர்கிறது என்று உமா தர்மன் சொல்வதை கண்டுகொள்ளாமல் சுட்டுவிடுகிறான் பில். இது ஒரு பாகமாக சொல்லப்படுகிறது.
திடீரென மஞ்சக்கலர் காரில், மஞ்சக்கலர் டிரஸ் போட்டு ஒரு பெண்ணின் வீட்டுக்கு வருகிறாள் உமா. இருவரும் ஒருவரையொருவர் பார்த்ததும் முடியை பிடித்துக்கொண்டு ஆக்ரோஷமாக சண்டை போடுகிறார்கள். அந்த நேரம் பள்ளி பஸ் வந்துவிடவே, அந்தப் பெண்ணின் குட்டிப்பெண் வீட்டுக்குள் நுழைகிறாள். சண்டையினால் அமளிதுமளியாகிக் கிடக்கும் வீட்டைப் பார்த்து அதிர்ந்து நிற்கிறாள். சின்னப் பெண்ணின் முன்பு சண்டை போடவேண்டாம் என்று அவள் அறைக்குப் போகும் வரையிலும் காத்திருக்கிறார்கள். அவள் போனதும் உமாவை அந்தப் பெண் கொல்வதற்கு முயல, கத்தியை வீசி அவளை கொன்றுவிடுகிறாள். அதனை குட்டிப்பெண் பார்த்துக்கொண்டே இருக்கிறது. இது ஒரு பாகம்.
திருமணம் நடக்க இருந்த நேரத்தில் திடுமென ஏழெட்டு பேரை கொன்று போட்டிருக்கிறது பில்லின் அதிரடி படை. அனைவரும் இறந்துவிட்டார்கள் என்று சுற்றிலும் கோடு போட்டு இன்வெஸ்டிகேஷன் செய்யும்போதுதான், மணமகளாக இருக்கும் கர்ப்பிணி பெண் உமா தர்மன் இன்னமும் சாகவில்லை என்று தெரியவருகிறது.
இப்போது உமா தர்மன் ஆஸ்பத்திரியில் நான்கு வருடங்களாக கோமா நிலையில் இருக்கிறாள். அவளை கொல்வதற்கு பில்லின் அடிமை ஒருத்தி வருகிறாள். துர்மனை கொலைசெய்ய முயற்சிக்கும் நேரம், பில் போன் செய்து தடுத்து நிறுத்துகிறான். இந்த நேரத்தில் அவளை கொன்றுவிட்டால் நிம்மதியாக செத்துவிடுவாள். அதற்கு நாம் அவளை அனுமதிக்கக்கூடாது. அவள் திரும்பி எழுந்துவரட்டும், ரசித்து ருசித்து கொலை செய்வோம் என்கிறான். இது ஒரு பாகம்.
நான்கு ஆண்டுகள் கழித்து கோமா நிலையில் இருந்து கண் விழித்து எழுகிறாள் உமா தர்மன். தலையில் குண்டு துளைத்த இடத்தில் இரும்பு பிளேட் வைத்திருப்பது தெரிகிறது. யாரோ வரும் சத்தம் கேட்க… விழிப்பு வராதவள் போல் அமைதியாக படுத்துக்கொள்கிறாள். ஒரு மனிதனை உள்ளே அனுப்பும் ஆஸ்பத்திரி வார்டுபாய், உன்னுடைய இஷ்டம் போல் அவளை அனுபவித்துக்கொள் என்று அனுப்பி வைக்கிறான். இத்தனை அழகியான ஒருத்தியை (உமா தர்மனை அழகி என்று சொன்னதற்காகவே இவனை கொலை செய்யலாம்) அனுபவிக்கப் போகிறேன் என்று உமாவின் முகத்திற்கு அருகே செல்ல, படக்கென்று எழுந்து அவன் உதட்டையும் நாக்கையும் கடித்துத்துப்பி, கழுத்தையும் கடித்து தன்னையும் அவனையும் ரத்தாபிஷேகம் செய்து கொலை செய்கிறாள். அடுத்து உள்ளே வந்து எட்டிப்பார்க்கும் வார்டுபாயை, கதவு இடுக்கில் அடித்து அடித்து நசுக்கியே கொலை செய்கிறாள். இது ஒரு பாகம்.
தன்னை கொலை செய்த பில் மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த நான்கு பேரையும் பழிவாங்க வேண்டும் என்று கிளம்புகிறாள் உமா. சைனாவுக்குச் சென்று ஒரு மாதம் தங்கியிருந்து அபாரமான ஒரு கத்தியை வாங்கிக்கொள்கிறாள். ஜப்பானுக்குச் சென்று அங்கே இருக்கும் ஓ-ரென் இஷ்லியை (லூசி லியு) கொல்வதற்கு ஒற்றை மனுஷியாக கிளம்புகிறாள்.
இந்தப் படத்தில் ஒரே ஒரு அழகு தேவதையாக வரும் ஷோபியின் (ஜூலி டிரஃபஸ்) கையை தோள்பட்டைக்குக் கீழே வெட்டி எறிந்து ஆட்டத்தை தொடங்கிவைக்கிறார். ஒற்றைக் கையில் இருந்து பீய்ச்சியடிக்கும் ரத்தம் கூரையைத் தொடுகிறது. அதன்பிறகு தங்கள் தலைவி ஓ-ரென்னை காப்பாற்றுவதற்காக நூற்றுக்கணக்கான அடிமைகள் வந்து, அத்தனை பேரும் வெட்டுப்பட்டு ரத்தம் ரத்தமாக சிந்துகிறார்கள். இந்த சண்டையில் ஏகப்பட்ட தலைகள் உருளுகின்றன, கைகள் வெட்டப்படுகின்றன, கண்கள் சிதறுகின்றன, ரத்தம் நீருற்று போல் பீய்ச்சி பீய்ச்சி அடிக்கிறது. அதாவது கொலை செய்வதை கலை போல் காட்டியிருக்கிறாராம். ஒரு வழியாக அத்தனை பேரையும் கொன்றுவிட்டு ஓ-ரென்னுடன் சண்டை போடுகிறாள்.
மற்றவர்களை கொன்றுவிட்டதைப் போல் அவளையும் கொன்றுவிட்டால் அத்தனை நன்றாக இருக்காதே… அதனால் அவள் தலையை மூளை வெளியே தெரியும் அளவுக்கு மட்டும் வெட்டி எறிகிறாள். நுங்கு எடுப்பதற்காக பனங்காயை சீவியது போல் மூளை வெளியே தெரிவதை அழகியல் காட்சியாக தந்து ரசிக்க வைக்கிறார். இது ஒரு பாகம்.
சுருக்கமாகவும் இந்தப் படத்தின் கதையை சொல்லலாம். பில்லின் கூட்டாளியாக பணிபுரிந்து அவன் காதலியாக மாறியவள் உமா தர்மன். திடீரென நல்லவளாக மாறி அதாவது பழைய வாழ்க்கையில் இருந்து வெளீயேறி வேறு ஒருவனுடன் திருமணம் முடிக்க இருக்கும் நேரத்தில், அத்தனை பேரையும் சுட்டுப் போடுகிறான் பில். அப்போது கோமாவில் விழுந்துவிட்ட உமா தர்மன், விழிப்பு வந்ததும் அத்தனை பேரையும் பழிவாங்க முடிவெடுக்கிறாள். இதனை எப்படி முடிக்கிறாள் என்பதைத்தான் தனக்கேயுரிய கொடூர புத்தியுடனுடன் குண்டக்கமண்டக்க நான்லீனியர் திரைக்கதை உத்தியைக் காட்டியும் இயக்கியிருக்கிறார் குவெண்டின்.
இந்தப் படத்தை யாரும் பார்க்காமல் இருப்பது நலம். அப்படி பார்த்தே தீரவேண்டும் என்றால் குழந்தைகளுக்குத் தெரியாமல் பார்க்கவும். ஏனென்றால் இந்தப் படத்தில் தெறிக்கும் ரத்தத்தைப் பார்த்து, குழந்தைகளுக்கும் ரத்தம் பார்க்கும் ஆசை வரலாம். தூங்கும்போது உங்கள் கழுத்தை அறுத்து ரசிக்கலாம்.
ஒரே பாகமாக எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டு படமாக்கப்பட்ட கில் பில், நான்கு மணி நேரத்தைத் தாண்டும் அளவுக்கு வந்துவிட்டது. அதனால் இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டது. முதல் பாகம் 2003-ம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2004-ம் ஆண்டும் வெளியானது. மக்கள் மனதில் வன்முறையும் ரத்தத்தைப் பார்க்கும் ஆவலும் பெருகிவிட்டது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, இரண்டு படமும் ஹிட்.
கா.அருண் பாண்டியன்.
It's a story of revenge: the traditional perfunctory pretext for martial arts - a unidimensional narrative motivation. Uma Thurman has never looked better than here, as the Bride, who, demure and pregnant in white, takes a bullet in the head on her wedding day, an attempted whack by her former associates under the control of our eponymous bad guy. They are Darryl Hannah, Lucy Liu and Vivica A Fox: not so much Charlie's Angels as Bill's Devils. (But who is the Groom, that unfortunate man whom the Bride appears to have deceived in the profoundest way possible? This may or may not be revealed in Volume 2.)
She awakens from her coma with none of the speech and motor-skill problems associated with serious head injury. A brief sojourn in a wheelchair triggers off the opening bars of the Ironside theme on the soundtrack, but she makes her legs work through sheer willpower. Uma has a fearsome samurai sword, fashioned for her in Okinawa by the Japanese master Hattori Hanzo (Chiba), and sets off on her blood-splattered odyssey in this through-the-looking-glass world where people fight without encountering guns or cops - a world perhaps inspired by British Hong Kong, where weapons were not as current as in the United States. Uma takes her sword into the plane as carry-on, and actually has it propped insouciantly next to her seat! Airport security presumably confiscated her tweezers and manicure scissors.


A superb, virtuoso anime -style sequence introduces her first enemy: the yakuza boss O-Ren Ishii (Liu), with whom she has a monumental showdown in a Tokyo nightclub. Tarantino shows us this happening after her second kick-ass confrontation with Vernita Green (Fox) in Pasadena, California leading to a horrible denouement - in parallel to O-Ren's early life - and the Bride solemnly offers a little girl her own future chance for violence. This is the movie's steeliest and most insolent provocation, and it has already moved Variety magazine to suggest it's obvious that Tarantino does not have children of his own. But all the violence is just too cartoonishly absurd to be culpable in that sense.
Outrageous and trashy it may be: but how many commercial American movies get to be set outside America with whole stretches of subtitled non-English dialogue? This is world cinema without the po-face. Weirdly, arthouse master Tsai Ming-Liang's forthcoming Goodbye Dragon Inn has a comparable reverence for classic Asian martial-arts pulp-celluloid, complete with appearances from its ageing stars. 

Remote-Controlled Mice

In vivo pharmacology and optogenetics hold tremendous promise for dissection of neural circuits, cellular signaling, and manipulating neurophysiological systems in awake, behaving animals.
Existing neural interface technologies, such as metal cannulas connected to external drug supplies for pharmacological infusions and tethered fiber optics for optogenetics, are not ideal for minimally invasive, untethered studies on freely behaving animals
.
Researchers introduce wireless optofluidic neural probes that combine ultrathin, soft microfluidic drug delivery with cellular-scale inorganic light-emitting diode (μ-ILED) arrays.
Click the link below to read more:
http://sciencemission.com/site/index.php…

Powerful plastic microscope for diagnostics

In a project funded by the Bill and Melinda Gates Foundation's Grand Challenges in Global Health Initiative, a research team from Rice University has recently developed a plastic, miniature digital fluorescence microscope that can quantify white blood cell levels in patients located in rural parts of the world that are far removed from the modern laboratory.
The fluorescence microscope system was described in a paper published in Biomedical Optics Express.
Click the link below to read more:
http://sciencemission.com/site/index.php…

Sunday, October 25, 2015

Contemporary Single Storey House






புராதன இலங்கை

தற்காலத்தில் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். ஆனால் அதிபூர்வீக இலங்கையில் தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். அவர்களது சமயம் சைவசமயமாகவே இருந்தது. இராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள் வாயிலாககும் புராணங்கள் வாயிலாகவும் இவ்வுண்மை அறியக் கூடியதாக இருக்கின்றது..எனவே இலங்கை தமிழரின் முதுசொத்து எனலாம். இதுயாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும்.
தோற்றுவாய்
அகத்திய முனிவர் இலங்கையின் பூர்விகம் பற்றி இராமனுக்குச் சொல்லுகின்ற பாங்கிலே இதன் மூல நூல் அமைந்தமையால் அதற்கு ஷஅகத்தியர் இலங்கை” எனப் பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்றுதான் தமிழர் கண்டம் என்பதாகும். இதுவே பிற்காலத்தில் தமிழகம் என அழைக்கப்பட்டது. மிகப் புராதன காலத்தில் தமிழகத்தில் வாழ்தவர்கள் தமிழர்கள் மட்டுமே. ஆட்சி புரிந்த அரசர்கள் தமிழர். அவர்களது நெறி சைவநெறி. மொழி தமிழ். அக்காலத்திலுருந்தே தமிழர்கள் மிக முன்னேற்றமுள்ளவர்களாக விளங்கினார்கள். கமத்தொழில், கைத்தொழில் இரண்டையுமே இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தார்கள்.
அரசர்களோ நீதி வழுவா நெறிமுறையில் ஆட்சி புரிந்தனர். மக்களும் தென்புலத்தார், தெய்வம், விருந்து, தான் என்னும் பலமும் ஓம்பி வாழ்ந்து வாந்தனர். பிராமணர்கள், அரசர்கள், வைசியர் எனப்படும் வர்த்தகர்கள், வேளாண்மக்கள் எனப்படும் கமக்காரர் ஆகியோர் தமக்குரிய கடமைகளின்றும் வழுவாது ஒழுகிவந்தனர். அரசனது ஆணைகள் இவற்றுக்கு வழிவகுப்பதாய் அமைந்திருந்தன. இதன் பலனாக மாதம் மூன்று மழை பெய்தது. நீர்வளம் பெருகியது. நிலவளமும் பெருகியது.  உணவு உடை உறையுள் ஆகிய மனிதனின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. பசியால் மெலிபடைபவர்களோ, பிணியால் நலிவடைபவர்களோ மிக மிக அரிதாகவே காணப்பட்டனர். இத்தகையதோர் ஒப்பற்ற சமுதாயம் நிலவிய தமிழகத்தை அவ்வப்போது ஆட்சி புரிந்த தமிழரசர்கள் உருவாகினர்ர்கள்.
இவ்வாறு தமிழகத்தைச் சிறப்பாக ஆட்சி புரிந்த அரசர்களுள் மனு என்னும் அரசனும் ஒருவனாவன். இவன் தமிழன். இந்த மனு அரசனுக்கு தமிழர் வரலாற்றில் முதன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் தனி இடம் உண்டு. ஒரு காலத்தில் நெப்போலியன் போர்ன்பாட் என்பவனால் உருவாக்கப்பட்ட சட்டவாக்கங்கள், பிற்காலத்திலும் இக்காலத்திலும் எழுந்த சட்டவாக்கங்களுக்கு எவ்வாறு அடித்தளமாக அமைந்தனவோ அது போலவே புராதன காலத்தில் மனு அரசன் எழுதிய சட்டவாக்கமும் அவனைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் சட்டவாக்கங்களுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது எனலாம்.
மனுதர்ம சாத்திர நூலும் இவ்வகையில் உருவானதே எனலாம். இந்த மனுசக்கரவர்த்தியானவன் தானுருவாக்கிய நீதி நெறியின் படியே ஆட்சியும் புரிந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சாதி வேறுபாடு காட்டுதல் போன்ற அநாகரிகமான சட்டங்கள் அவனது நீதிநூலில் இடம் பெறவில்லை என்பதும், ஆனால் சுயநலவாதிகளும் சாதியின் பெயரால் தம்மைப் பெரியவர்களாகக் காட்டிக் கொண்டவர்களும் அதனால் தம்மை வளர்த்துக் கொண்டவர்களுமே இந்த அநாகரிகமான சட்டத்தை இந்நூலில் புகுத்தி இந் நூலுக்கு இழுக்குத் தேட முற்பட்டனர். இந்த உண்மையை நாம் உணர்ந்து தெளிவு பெற வேண்டும். இந்த மனு சக்கரவர்த்தி தமிழகத்தை நாற்பத்து நான்கு வருடங்கள் ஆட்சி புரிந்தான்.
இந்த மனுசக்கரவர்த்திக்கு ‘சமன்” என்னும் புத்திரனும் ‘ஈழம்” என்னும புத்திரியும் பிறந்தார்கள். மனுவின் பின் தமிழகம் இந்த இருவராலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. தென்னகத்தை மகனாகிய சமனும், அவனது சந்ததியினரும், வடபாகத்தை மகளாகிய ஈழமும் அவளது சந்ததியினரும் ஆண்டு வந்தனர். மனுவின் மகளாகிய ஈழம் என்பவளுக்கு குமரி என்று வேறு பெயரும் உண்டு. குமரி என்று அழைக்கப்பட்ட இந்த மனுவின் மகள் ஆட்சி புரிந்த பகுதி குமரிக்கண்டம் எனப்பட்டது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இந்த நான்கு மண்டலங்களும் ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாகவே இருந்தன. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட ஈழ மண்டலத்தை ஏனைய மூன்று மண்டலங்களிருந்து பிரித்து விட்டன.
எனினும் ஈழமண்டலமாகிய இலங்கையில் தமிழரே வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில்தான் தமிழலரல்லாதோர் இங்கு வந்து குடியேறினர் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே தமிழர்கள் இலங்கையில் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களாகவும் நாகரீக வளர்ச்சி பெற்றவர்களுமான ஓர் இனமாக வாழ்ந்து வந்தனர்.
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலைநகராகி விளங்கியது. பிற்காலத்தில் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதி கடல் கொள்ளப்பட்டது. இக்கடல் கோல்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் பல தமிழ் சங்க மண்டபங்கள், அவைகளில் இருந்த இலக்கண இலக்கிய நூல்கள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.
விஜயன் இலங்கையில் காலடி வைத்த பின்பே இலங்கையில் சிங்கள இனம் தோன்றியது. இந்த விஜயன் யார் ? இவன் இலங்கைக்கு எவ்வாறு வந்தான் என்பன ? பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
சிங்கள இனத்தின் தோற்றம்
வட இந்தியாவில் “லாலா” என்று ஒரு நாடு அதனைச் சிங்கபாகு என்பவன் ஆட்சி புரிந்தான். இவனது தந்தை சிங்கன் என்பவன் ஆவான். சிங்கனைப் பற்றிய பலவித புனை கதைகள் உண்டு. மிருக இராசவாகிய சிங்கமே இவன் என்பது அவற்றுள் ஒன்று. சிங்கத்தில் இருந:து வந்த சந்ததியினரே சிங்களவர் என்றும் சொல்லப்படுகின்றது. இதனாலேயே சிங்கள மக்களின் தேசியக்கொடி சிங்கமாக இருக்கின்றதென்றும் சொல்வாரும் உளர். இவையெல்லாம் ஆதாரமற்ற வெறும் ஐதீகங்களே என இவற்றை இவ்வளவில் விட்டு விடுவோம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிங்கபாக ஆசியவம்சத்தை சார்ந்தவன். வடஇந்தியாவில் இமயமலை அடிவாரம் வரை ஒரு காலத்தில் திராவிட இனம் வாழ்ந்து வந்தது என்றும் அந்தத் திராவிடரைத் துரத்திவிட்டு வந்து குடியேறிய நாடோடி மக்களே ஆசியராவர். இவர்கள் மெல்லிய சிவந்த மேனியைக் கொண்டிருந்தனர். இவர்களுக்கு நிரந்தரமான வதிவிடங்களோ நிலங்களோ இருக்கவில்லை. இவா்கள் அடிக்கடி கைபர்கணவாய் வழியாகத் திடீர் திடீரென இமய மலையின் தென்பகுதிக்குள் நுழைந்து அங்கு வாழ்ந்து வந்த திராவிட மக்களுக்குத் தொல்லை கொடுக்கு அவர்களது பொருட்களையும் உணவுப்பண்டங்களையும் மந்தைகளையும் அபகரித்து சென்று அதன் மூலம் வாழ்க்கையை நடாத்தி வந்தவர்கள். இவர்களது தொல்லை பொறுக்க முடியாமலே வட இந்தியாவில் வாழ்ந்து வந்த திராவிடமக்கள் மெது மெதுவாகத் தெற்கு நோக்கி நகரத் தொடங்கினர். ஆரியர் திராவிட மக்களைத் துரத்தி விட்டு அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் வந்து குடியேறினர். தம்மை ஆரியர் எனக்கூறி சிங்களவரும் இதனைத்தான் இங்கு செய்கின்றனர். இந்த அநாகரீகமான மக்களே ஆரியர்.
இத்தகைய ஆரிய வம்சத்தைச் சார்ந்தவன்தான் சிங்கபாகு ஆவான். அவனின் மைந்தனே விஜயன் ஆவான்.விஜயனின் சந்ததியினரே சிங்களவர்கள். எனவே சிங்களவரும் ஆரியர்களே. தமிழர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த வகையிலேதான் இலங்கையில் வாழ்கின்ற ஆரியர்களாகிய சிங்களவர்களுக்கும் திராவிடர்களாகிய தமிழர்களுக்கும் ஒத்துப் போவதில்லை என்பது புலனாகின்றது.  சிங்கபாகுவின் மைந்தனாகிய விஜயன் இளவரசனாக இருந்த பொழுது அவனுக்கு எழுநூறு பேர் தோழர்கள் இருந்தார்களாம். விஜயன் இளவரசனாக இருந்தமையால் அவனுக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன. அதனாலே அவனுக்கு எழுநூறு பேர் தோழராயினர். இந்த விஜயனும் இந்த தோழர்களும் நினைத்தவற்றையெல்லாம் செய்தார்கள். நாகரீக சமுதாயத்திற்கு ஒவ்வாத காரியங்களை எல்லாம் இவர்கள் மிகமிக விருப்பமாகச் செய்தார்கள். தந்தை சிங்கபாகுதான் தட்டி கேட்க வேண்டியவன். அவனாலும் தட்டிக் கேட்க முடியவில்லை. அவன் அந்த நாட்டின் அரசனாக இருந்தமையினால் அந்த நாட்டின் மக்களின் நன்மைக்காகத் தன் மகனேன்றும் பராது அவனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் நாடுகடத்த விரும்பினான். அவர்கள் அனைவரையும் ஒரு பாய் கப்பலில் ஏற்றி வங்கக் கடலில் அலையவிட்டான். அக்கப்பல் காற்றினால் அள்ளுண்டு அவர்களைக் கொண்டு வந்து எனது ஈழத்திருநாட்டில் மாந்தை நகரில் ஒதுக்கிவிட்டது.
வந்தாரை வரவேற்று உபசரிக்கும் தமிழர்களின் பண்பாட்டுக்கமைய வந்தாரை வாழவைத்தாள் ஒருத்தி. அவள்தான் இலங்கையில் அந்நாள் அரசி குவேனி என்பாள். அவள் ஒரு தமிழ் அரசி, அவள் வந்தவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் செய்து கொடுத்தாள். விஜயனின் அழகில் மயங்கி தன்னையே கொடுத்து விட்டாள். அத்தோடு இலங்கையில் தமிழர்க்கு இருந்த இறைமையையும் கூடவே தரைவார்த்துக் கொடுத்து விட்டாள். இத் தொடர்பினால் விஜயன் இலங்கையின் இலங்கையின் ஆட்சியுரிமையை இலகுவில் பெற்றுக் கொண்டுவிட்டான். ஆட்சியுரிமையை தந்திரமாக கைப்பற்றிக் கொண்ட விஜயன் தன் காரியம் முடிந்ததும், தனது அதிகாரதுக்கு உதவிய மனைவி குவேனியையும் பிள்ளைகளையும் அடித்து துரத்திவிட்டான்.
குவேனியைத் துரத்திய பின் இவனும் இவனது தோழர்கள் ஏழுநூறு பேரும் பாண்டிய நாட்டிலுள்ள நாயக்க வம்சத்தைச் சேர்ந்தவர்களும் அழகுடையவர் ஆகிய தமிழ்ப்பெண்களை வரவழைத்துத் திரமணஞ் செய்த கொண்டனர். இவர்களது சந்ததியினரே இன்று இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர் ஆவர். அன்று அதிகாரத்தைத் தம்வசம் வைத்திருந்த விஜயனும் அவனது தோழர்களினது சந்ததியினரும் ஏற்கனவே இங்கு வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களோடு திருமணம் செய்து கலந்து கொண்டனர்.
இவர்களது சந்ததியாரும் சிங்களவராயினர். இவ்வகையிலும் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராகப்பட்டனர். இவ்வாறு தமது தனித்துவத்தையும் பண்பாட்டையும் கைவிட்டுச் சிங்களவர்களாக மாறிய தமிழர்களே தமது தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து வருகின்ற உண்மையான தமிழர்களுக்கு எதிராகத் கிளம்பி இலங்கை சிங்களவருக்கு மாத்திரமே உரியதென்று விதண்டாவாதம் பேசுகின்றனர். கூப்பாடு போடுகின்றனர். எஞ்சிய தமிழர்களையும் சிங்களவர் ஆக்க முனைகின்றனர். இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்கள். இலங்கையின் சுதேசிகள் தமிழர்கள். விஜயன் வழி வந்தவர்கள் அந்நியர்.  இத்தகையோர் இலங்கைக்குத் தாம் மாத்திரமே உரிமையுடையோம் என்றும், தமிழர்களுக்கு எவ்வித உரிமை இல்லை என்றும், சிங்களப் பொது மக்களிடையே பிரச்சாரஞ் செய்து வருகின்றனர். துட்டகைமுனுவின் தாயாகிய விகாரமகாதேவியும் இதனையே செய்தாள். இதனால்தான் துட்டகைமுனு தமிழருக் கெதிராகக் கிளர்ந்து எழுந்தான்.
தமிழர் படையுடன் நேர் நின்று யுத்தம் புரிய முடியாத துட்டகைமுனு கபட நாடகமாடி மனுநீதி தவறாது செவ்வனே ஆட்சி புரிந்த தமிழரசனாகிய எல்லாளனைக் கொன்றான். இளைஞனாகிய துட்டகைமுனு கிழவனாக இருந்த எல்லாளனைத் தனிப் போருக்கு அழைத்துப் போர்புரியும் வேளை எல்லாளனது பட்டத்து யானை போரில் கால் தடுக்கி விழ ஈட்டியால் குத்திக் கொன்றான். இத்தகைய வாரலாற்று உண்மையை இன்றைய எம் நிலைகளோடு ஒப்பிட்டு நோக்கிச் செயற்பட வேண்டியது ஈழத்தமிழராகிய எம் கடனாகும்.
பரதன் என்னும் தமிழ் அரசன்
குமரியின் சந்ததியில் தோன்றிய தமிழ் அரசர்களுள் பரதனும் ஒருவன். இந்தப் பரதன் குமரிகண்டத்தை நாற்பது வருடங்களாக ஆட்சி புரிந்தான். ஒரு தாயானவள் தனது பிள்ளைகளை எல்வளவு கரிசனையுடனும் அன்புடனும் பராமரிப்பாளோ அது போலவே பரதனும் தனது குடிமக்களையும் பராமரித்தான். இதனால் அவனது குடிமக்கள் அவளை மிகவும் நேசித்தார்கள். அது மாத்திரமன்றி இக் குமரிகண்டமானது பரதனது திறமையான ஆட்சி முறையினால் பலவகைகளிலும் சிறப்புற்று விளங்கிற்று. இக்காரணங்களினால் அவன் ஆட்சி புரிந்த நிலப்பரப்பாகிய குமரிக் கண்டமே பரதகண்டமென வழங்கப்படலாயிற்று.
இப்பரத கண்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை அந்நிய நாட்டினர் பலவாறு அழைத்தனர்.                             அவை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என்பனவாகும். இராமாயணத்தில் தமிழர்களை வானரர் (குரங்குகள்) என்றும் இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர். அனுமான் சுக்கிரீவன் வாலி போன்ற பலம் பொருந்திய திறமைமிக்க போராளிகளை குரங்குகளின் அரசர்கள் என்றும் இலங்கையை ஆண்ட ஒப்புயர்வற்ற சிறந்த அரசனாகிய இராவணன் தமிழன் என்ற காரணத்தால் அவனையும் அவனது இனத்தினரையும், நரமாமிசம் புசிக்கின்ற இராட்சதர் என்றும் பழித்துரைத்தனர். உண்மை அவ்வாறு அன்று. இராமன் இலக்குமணன் போன்ற திராவிடர்கள் (தமிழர்கள்) பலசாலிகளாகவும் அறிவாளிகளாகவும் சித்துக்களில் வல்லவர்களாவும் விளங்கினர் என்பதே உண்மை.
உண்மையில் இவர்கள் அவர்கள் குறிப்பிடுவது போன்று குரங்குகளோ, இராட்சதர்களோ அல்லர். சிறப்புற்று விளங்கிய தமிழர்களோயாவர். இவ்வாறு அந்நியர்களால் பல்வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்ட போதிலும் எல்லோரும் சமத்துவம் உடைய தமிழர்களேயாவர்.
அன்று வாழ்ந்த தமிழ் மக்கள் தம்மிடையே உயர்வு தாழ்வு காட்டுவதில்லை. ஒருவருடைய பிறப்பினைக் கொண்டு அவரின் உயர்வு தாழ்வுகளைக் கணிக்காது அவரவரின் சிறப்பினைக் கொண்டே, செயற்பாடுகளைக் கொண்டே கணித்தனர். ‘இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்”என்னும் ஒளவை வாசகங்களும் இவ்வகையில் எழுந்தனவே. செயற்கரியனவற்றைச் செய்பவர்கள் பெரியோர் என்னும் செயற்கரியன செய்ய முடியாதவர்கள் சிறியோர் என்றும் வள்ளுவன் வாய்மொழியும் இதனையே தெளிவுபடுத்துகின்றது.
இலங்கையில் தமிழ் மன்னர்களின் ஆட்சி
சுகேசனின் ஆட்சி
சுகேசன் தெய்வதி என்னும் அரச குமாரியை விவாகஞ் செய்து மாலியவான், மாலி என்னும் புத்திரர்களைப் பெற்றான். சுகேசனின் ஆட்சி மிகவும் மெச்சத்தக்தாக அமைந்திருந்தது. இவன் கிராமங்கள் தோறும் ஆலயங்களை அமைப்பித்தான். பல வீதிகளைப் புதிதாக உருவாக்கினான். பழைய வீதிகளைப் புதிப்பித்தான், காடுகளை அழித்து நாடுகளாக்கினான். விவசாயத்தை விருத்தியடையச் செய்தான்.
குளங்கள், கால்வாய்கள் பல வெட்டியும் புதுப்பித்தும் பயிர்ச் செய்கைக்கு உதவியளித்தான். நூல் நூற்றல், ஆடை நெய்தல் ஆகிய கைத்தொழில்களையும் விருத்தி பண்ணினான். வைத்தியரையும் வைத்திய நூல்களையும் ஆதரித்ததோடு பல வைத்தியசாலைகளிலும் நிறுவினான். பல பாடசாலைகளை அமைத்தான். பல தமிழ்ச்சங்கங்களையும் உருவாக்கினான். இவன் காலத்தில் தமிழ் மொழியில் எல்லாத் துறைகளிலும் நல்ல நல்ல நூல்கள் எழுந்தன. நீதி பரிபாலனமும் செவ்விதாய் அமைந்திருந்தது. சுகேசன் நாற்பத்தொரு வருடங்களும் ஏழுநாட்களும் ஆட்சி புரிந்த பின் தனது மூத்த புத்திரனாகிய மாலியவானை இலங்கைக்கு அரசனாக்கி காட்டுக்கு சென்றான்.
மாலியவான் ஆட்சி
தமிழ் அரசனாகிய மாலியவான் நாகதீவுக்கு அரசனாகி இலங்காபுரம் என்னும் நகரத்தை அழகாக கட்டுவித்து, அதைத் தலைநகராக்கி அங்கிருந்து இலங்கை என்னும் நாகதீவை ஆண்டான். இவன் கட்டுவித்த அரண்மனைகளும் மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் விலையுர்ந்த இரத்தினக் கற்களாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டன. இவனது முடியின் மீது பத்துக் கிரீடங்கள் அமைந்திருந்தன. இவனுடைய சிங்காசனமும் வாளும் முடியும் செங்கோலும் கட்டிலும் நவரத்தினங்களாலும் முத்துகளாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. அக்காலத் தமிழர்களில் பலர் எல்லா வசதிகளும் ஒருங்கே அமைந்த பல அடுக்கு மாளிகைகளில் வாழ்ந்தனர்.
இவனது முடியை அலங்கரித்துக் கொண்டிருந்த பத்து கிரீடங்களும் பத்து நாடுகளுக்கு இவன் அதிபதி என்பதை எடுத்து காட்டுகின்றன. இவன் இருபத்தொரு வருடங்கள் இலங்கையை மகோன்னதமாக ஆட்சி புரிந்து வந்தான். மாலியவான் இறந்த பின்பு அவனுடைய தம்பியாகிய சுமாலி என்பவன் ஆட்சி புரிந்தான். இவன் மாந்தையிலிருந்தும் இலங்காபுரத்தில் இருந்தும் அரசான்டான். சுமாலி கேதுமதியை மணந்து ஒரு மகளைப் பெற்றேடுத்தான். அவளின் பெயர் கைகேசி என்பதாகும். சூரியப் பிரகாசம் என்னும் ஆகாய விமானத்தை அவன் வைத்திருந்தான்.
சுமாலியின் ஆட்சி முன்னையவர்களது ஆட்சி போன்று அத்துனை சிறப்பாக அமையாமையால் அவனால் ஐந்தரை வருடங்களும் மூன்றரை மாதங்களுமே ஆட்சி புரிய முடிந்தது. மக்கள் கிளர்ச்சி செய்து அவனை சிங்காசனத்தில் இருந்து நீக்கி விட்டனர். இவனது ஆட்சியில் வெறுப்படைந்த தமிழ்மக்கள் பாண்டி நாடு, சேரநாடு, சோழ நாடு முதலிய தமிழ் நாடுகளில் சென்று குடியேறினர். சுமாலிக்குப்பின் அரசாட்சிக்குரிய கைகேயி சிறு குழந்தையாய் இருந்த படியால் இலங்கையை ஆழ அரசனில்லாதிருந்தது. இதனால் வச்சிரவாகு என்பவன் தனக்கும் இயக்கப் பெண்ணாகிய தேவகன்னி என்பவளுக்கு பிறந்த புத்திரனாகிய வைச்சிரவணானை இலங்கைக்கு அரசனாக்கினான். வச்சிரவாணனுக்கு குபேரன் என்னும் மறு பெயரும் உண்டு.
குபேரன் ஆட்சி
குபேரன் அரசானான பின்பு அவனது தாய் வழியைச் சேர்ந்த பல இயக்க குடிகள் இலங்கையில் வந்து குடியேறினார்கள். இவர்களும் தமிழர்களே. நாகரிகத்திலும் கல்வியிலும் இயக்கர் என்னும் தமிழர் மிகவுஞ் சிறந்தவர்களாய் இருந்தார்கள். இயக்கரும் தமிழரும் பேசிய மொழி தமிழேயாகும். பண்டைக்காலத்தில் வரன் என்பவன் புலத்தியவனைப் பெற்றான். புலத்தியன் குணவதியை மணந்து வச்சிரவாகுவைப் பெற்றான். இந்த வச்சிரவாகு குபேரனுடைய தந்தையவான். இந்தக் குபேரன் இலங்கையை நீதியாக ஆண்டான். இவன் புட்பக விமானம் என்னும் ஆகாய ஊர்தியை வைத்திருந்தான்.
இராவணன் ஆட்சி
கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான்.
அழகாபுரியில் வாழ்ந்தவர்களும் இயக்கர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். குபேரனோடு இலங்கையில் வந்து குடியேறிய தமிழர் குபேரனோடு திரும்பிப் போகாமல் இலங்கையிலேயே தங்கி விட்டனர். குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இவன் இலங்கையை பல வருடங்களாக மாற்றாரும் மெச்சும் வகையில் சிறப்பாக அரசோச்சி வந்தான். இவன் தனது மூதாதைகளில் ஒருவனான மாலியவனைப் போன்றே பத்து நாடுகளுக்கு அரசனாக முடி சூடப்பட்டான்.
இதனால் இவனை தசக்கீரிவன் என்றும் அழைத்தனர். இரமாயணத்தில் கூறுவது போன்று இவனுக்கு பத்து தலைகள் இல்லை. பத்து கிரீடங்களே அன்றி பத்து தலைகள் அன்று. இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள். இராவணன் பல துறைகளிலும் ஒப்பற்று விளங்கினான். சங்கீத துறையானாலும் சரி, போர்த் திறமையானலும் சரி, தவ வலிமையிலும் சரி, கடவுட் பக்தியிலும் சரி இவன் ஒப்பாரும் மிக்காரும் இல்லாது விளங்கினான். இவற்றை விட யோக சித்திகளும் கைவரப்பட்டவனாக விளங்கினான். இதனால் இவன் தான் நினைத்த வடிவத்தை கொள்ளவும், எதிரிகளுக்கு தெரியாமல் மறைத்து நிற்கக் கூடிய பல சித்துகளில் வல்லவனாக விளங்கினான்.
யாகங்களில் மிருகங்களை பலி கொடுத்தலை இராவணனும் அவனுடைய இனத்தவர்களும் வெறுத்தார்கள். மிருக வதை அவனுடைய காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு பிடிக்காது. இராவணன் சிவபூசை செய்யும் நியமம் உடையவன். ஏகபத்தினி விரதம் பூண்டவன். பழிக்குப் பழி வாங்கும் நோக்குடனேயே சிதையை சிறை வைத்தான். இம்சித்து அல்ல. இவனது பகைவர்களாகி ஆரியர்களே இவன்மீது இவ்வாறு வீண் பழி சுமத்தினர். இவனும் இவனது தாயாகிய கைகேசியும் மனைவியாகிய மண்டோதரியும் சிவபெருமான் இடத்தில் மிகுந்த பற்றுக் கொண்டவர்கள். இந்த இராவணன் ஆகியோரின் ஆட்சிக்காலம் ஈழத்தமிழரின் பொற்காலம் எனப்போற்றப் படுகின்றது.
இராம இராவண யுத்தத்தில் இராவணன் தம்பி விபீஷணன் தமையனாகிய இராவணனை விட்டு நீங்கி இராமன் பக்கம் சேர்ந்து இராவணன் படைப்பலம் யுத்ததந்திர முறைகள், அந்தரங்கள் எல்லாவற்றையும் இராமனுக்கு காட்டிக் கொடுத்து இராவணனின் அழிவுக்கு ஏதுவாக இருந்தான். இராவணனுக்குப் பின் இராமனுடைய அனுசரணையுடன் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டான்.

Sri Lanka






























ஸ்ரீ பாலா மந்திரம்


மந்திரஜபத்தில் கணபதிக்கு அடுத்ததாக
வருவது ஸ்ரீ பாலா மந்திரம்.
ஸ்ரீ ராஜராஜேஸ்வரியாகிய பராசக்தி தானே
விரும்பி எடுத்துக்கொண்ட
குழந்தைப்பருவ வடிவமே ஸ்ரீ
பாலாதிரிபுரசுந்தரி.எந்த யோகப்பயிற்சி
முறையை பின்பற்றி சித்தர்கள் சித்தி
அடைந்தாலும் அனைவரும் வழிபட்ட
தெய்வம் அன்னை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரிய
ே.எல்லா யோகிகளுக்கும் யோக
முதிர்சசியின் போது அன்னை ஸ்ரீ பாலா
திரிபுரசுந்தரி காட்சியளிக்கிறாள்
என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன
மேலும்
சில சூபி ஞானியாரின்
பாடல்களும் நூல்களும் இதை
ஒப்புக்கொள்கின்றன.புனித மறைகளும்,சிததர்
களும் ஞானியரும் இறைவன் நமக்குள்ளே தான்
இருக்கிறான் என்று கூறுகின்றனர்
ஆனால் இது ஓரு தகவலாக நமக்கு
புரிந்தாலும் எவ்வாறு,எங்கு நமக்குள்
உள்ளான் என்று நமக்கு நாமே
கேட்டுக்கொண்டால் பதில் உண்டா
நம்மிடம்.அந்த இறை சக்தி முதலில் அன்னை
ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியாகவே
வெளிப்படுகின்றது
பின்னர் அவள்தான் அந்த பிரம்மத்தை நோக்கிய
நம் பயணத்திற்கு கைப்பிடித்து அழைத்து
செல்லும் கருணைக்கடல்.
சிவம் என்பது அசையப்பொருளாக உள்ளது
அதுவே மூலசக்தி அதை இயங்க வைக்கும்
ஆற்றலே அன்னை பராசக்தி.மும்மூர்த்திகளின்
செயல் ரூபமே சக்தி.
ஸ்தோத்திரங்களை,ஸ்லோகங்களை விட
மூலமந்திர ஜெபம் அந்த குறிப்பிட்ட
தெய்வத்திற்கு அருகில் விரைவாய் அழைத்துச்
செல்லும்.பீஜம் என்றால் விதை எப்படி
விதைக்குள் மரம் அடக்கமோ அப்படி
பீஜத்திற்க்குள் தெய்வங்கள் அடக்கம்.எனவே
பீஜ மந்திரஜபம் உயர்வாக சொல்லப்படுகிறது.
ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள் :-
1. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி
மந்திரம்:-
ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|
இதில் சௌம் என்பதை "சௌஹூம் "என்று
சொல்லுவது சிறந்தது.
ஐம் - என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.-
பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம்
மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்),வ
ாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.
க்லீம் - என்ற பீஜம் காமராஜபீஜம்
எனப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி,
மன்மதன் இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்ல
செல்வம்,செல்வாக்கு,கௌரவம்,வசீக
ரசக்தி,உடல்,மன பலம் இவற்றை தரும்.
சௌஹூம் - இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,ம
ுருகன் இவர்கள் அடக்கம்.சௌம் என்ற பீஜத்தில்
இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை
தோன்றியதாக வேதம் கூறுகிறது.இப்பீஜம்
சௌபாக்கியம் நிறைந்த வளவாழ்வினைத்தரும்.
இவ்வாறு மும்மூர்த்திகளின் பீஜத்தையும்
ஒருங்கே கொண்டவள் வாலைத்தாய் என்ற ஸ்ரீ
பாலா திரிபுரசுந்தரி அன்னை.இவள்
மந்திரத்தை முறையாய் ஜெபித்து நல்வாழ்வு
வாழ்ந்து ஆன்மீகத்திலும் ,வாழ்விலும் உயர்ந்த
நிலையை அடையலாம்.
2.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி சடாட்சரி
மந்திரம்:-
ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||
3.ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி நவாட்சரி
மந்திரம்:-
ஓம்|ஐம் க்லீம் சௌம்|சௌம் க்லீம் ஐம்||ஐம்
க்லீம் சௌம்||
முதலில் திரியட்சரம் ஜெபித்து சித்தியடைந்த
பின் சடாட்சரியும் பின்னர் நவாட்சரியும்
ஜெபிக்க உத்தமம்.
இந்த தாயை வாலை என்றும் பாலம்பிகா
என்றும் அழைப்பர். சித்தர்கள் அனைவரும்
தங்களின் பாடலில் வாலை கும்மி பாடி
வணங்கி தொடங்குகின்றனர். வாலை தாய்
அன்னை அதிபராசக்தியின் 10 வயது பால
பருவமாக காட்சியளித்த தோற்றம். சித்தர்
களின் தலைவன் முருக பெருமானை வணங்கி
வந்தால் அன்னை வாலை தாய் அருள் புரிந்து,
சித்தி பெற முடியும். முக்தியடைய முடியும்.
சக்தியை பெற்று பரம்பொருளுடன் இணைத்து
முக்தியடைய முடியும்.
வாலையடி சித்தருக்கு தெய்வம் என்று
சித்தர்களால் சிறப்பித்துக் கூறப்பட்ட அன்னை
ஸ்ரீ பால திரிபுரசுந்தரியின் அருள்
நம்மனைவரையும் வாழ்விலும்
ஆன்மீகத்திலும் மென்மேலும் உயர
வழிகாட்ட,உறுதுணையாய் நிற்க
வேண்டுகிறேன்.

Elamıts woman spınnıng wool, found in ancient city Susa


Bear paw Armor Cuprum Guard, Indo Persian islamic empire dynasty.


Saturday, October 24, 2015

Ancient Persians


Che Guevara speech at UN 1964 (English subtitles!!)

 

தமிழ் மன்னன் எல்லாளன் பற்றிய வீர வரலாறு.


 எல்லாளன் கி.மு 145 இல் இருந்து கி.மு 101 வரை அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன். இந்தத் தகவலைச் சிங்கள வரலாற்று ஆவணமான மகாவம்சம் பதிவுசெய்துள்ளது. இவனது ஆட்சிக்காலம் நீதியானதாகவும், சிறப்பானதாகவும் அமைந்ததாகப் பொதுவாக சிங்களச் சார்பான ஆவணமாக பார்க்கப்படும் மாகவம்சம் குறிப்பிடுகின்றது.
மகாவம்சத்தின் படி எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்த சோழ நாட்டைச் சேர்ந்த ஒருவன் ஆவான். இவன் “பெருமை மிக்க உஜு இனக்குழுவைச்” சேர்ந்தவன் என்று மகாவம்சம் கூறுகிறது. ஆனால் எல்லாளன் ஈழவூரின் உத்தரதேசத்தை (தற்போதைய பூநகரி) சேர்ந்தவன் என்று சிலர் கருதுகிறார்கள். அதற்கான ஆதாரமாக, உத்தரதேசத்தில் குறுநில மன்னனாக எல்லாளன் முதலில் விளங்கியமையால் தான் வவுனிக்குளத்தை அக்காலவேளையில் கட்டியுள்ளான் என்பர். ஆங்கிலேய நாட்டவரான எச்.பாக்கர் மகாவம்சத்தில் அநுராதபுரத்திற்கு வடக்கேயமைந்த பெபிலாபியை பூநகரியின் தென்னெல்லையிலுள்ள பாலியாறு என அடையாளம் கண்டு இங்குள்ள வவுனிக்குளத்தின் ஆரம்பத்தோற்றம் எல்லாளனின் சாதனைகளில் ஒன்றாக இருக்கலாமெனக் கூறியுள்ளார்.
இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்ட தமிழ் மன்னன்
 எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது.சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் “மகாவம்சம்.” சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது.இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கிருந்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
விஜயன் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்குவதற்கு முன்பே, அனுராதபுரத்தில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நடந்திருக்கிறது. விஜயனின் வருகைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே அனுராதபுரம் பெரிய நகரமாக இருந்திருக்கிறது என்பது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு. அந்தக் காலத்தில் இந்தியாவில் உஜ்ஜயினி பெரிய நகரமாக இருந்தது. அதற்கு சமமாக அனுராதபுரம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
புகழ் பெற்ற தமிழ் மன்னன்
இலங்கைக்கு இந்தியப் பேரரசர் அசோகர் அனுப்பிய புத்த மதக் குழுவினர், அனுராதபுரத்தில் திசையன் என்ற தமிழ் மன்னனை சந்தித்தது பற்றி, பாலி மொழி வரலாற்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.திசையன் இறந்த பிறகு, சேனன், குத்தன் என்ற இரு தமிழ் மன்னர்கள் 22 ஆண்டுகள் அனுராதபுரத்தில் நல்லாட்சி நடத்தினர்.இவர்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர் எல்லாளன்.சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட “மகாவம்சம்” நூலில், எல்லாளனின் வீரம் பற்றி உயர்வாகவே கூறப்பட்டுள்ளது. அவனுடைய குணநலன்கள், மனுநீதிச் சோழனின் இயல்பை ஒட்டி சித்தரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மன்னன் எல்லாளன் பற்றி மகாவம்சம் கூறுவதாவது
Fotor01020235159
எல்லாளன், இயேசு கிறிஸ்துவுக்கு 235 ஆண்டுகளுக்கு முன்னதாகப் பிறந்தவன். அவன் அனுராதபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, 44 ஆண்டுகள் ஆட்சி நடத்தினான். அவன் சோழ வம்சத்தை சேர்ந்தவன். நீதி தவறாதவன்.அவன் தன் படுக்கை அறையில் ஒரு மணியை தொங்கவிட்டிருந்தான். அது, அரண்மனைக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த ஒரு கயிற்றுடன் இணைக்கப்பட்டு இருந்தது. தங்களுடைய குறைகளை மன்னருக்குத் தெரிவிக்க, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் மணியை அடிக்கலாம்.
ஒருமுறை, ஒரு பெண் அந்த மணியை அடித்தாள். எல்லாளன் அந்தப் பெண்ணை அழைத்து, “உன் குறை என்ன?” என்று கேட்டான்.”உன் மகன் ரதத்தில் செல்லும்போது, என் கன்றுக்குட்டி மீது ரதத்தை ஏற்றிக் கொன்றுவிட்டான்” என்று கூறினாள்.அதைக்கேட்ட எல்லாளன், தன் மகனையும் ரதத்தை ஏற்றி கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அக்கட்டளைப்படி இளவரசன் கொல்லப்பட்டான். (மனுநீதி சோழன் வரலாற்றிலும் இதே போன்ற சம்பவம் வருகிறது)
ஒருமுறை எல்லாளன் ரதத்தில் செல்லும்போது, ரதம் மோதி புத்தர் கோவில் சேதம் அடைந்தது. ரதத்தில் இருந்து கீழே இறங்கிய எல்லாளன், கோவில் இடிந்ததற்காக மிகவும் வருந்தினான்.உடனே மந்திரிகளை அழைத்து, “புத்தர் கோவிலை சேதப்படுத்திய நான் படுபாவி; பெரிய குற்றவாளி. என்னைக் கொன்றுவிடுங்கள்’ என்றான்.அதற்கு மந்திரிகள் மறுத்துவிட்டனர். “நீங்கள் உங்களுக்கே மரண தண்டனை விதித்துக் கொள்வதை, புத்த பகவானே ஏற்கமாட்டார்” என்று கூறினர். “நீங்கள் உங்கள் உயிரைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக, கோவிலை புதிதாகக் கட்டிக் கொடுத்து விடலாம்” என்று தெரிவித்தார்கள்.மந்திரிகளின் இந்த யோசனையை ஏற்றுக்கொண்ட எல்லாளன், புத்தர் கோவிலை முன்பைவிட அழகாகக் கட்டிக் கொடுத்தான்.
துட்ட காமினி (துட்ட கைமுனு)
இந்தக் காலக்கட்டத்தில் தென் இலங்கையை கவந்திசா என்ற சிங்கள மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகன் பெயர் துட்டகாமினி. (இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது.)ராஜ்ஜியத்தை விரிவுபடுத்த விரும்பிய துட்டகாமினி, பல சிற்றரசர்களை தோற்கடித்து விட்டு, வடக்கு நோக்கி முன்னேறினான். தமிழ் மன்னன் எல்லாளனை முறியடித்து, அனுராதபுரத்தை கைப்பற்ற வேண்டும் என்பது அவன் எண்ணம்.
தன் விருப்பத்தை தன் தந்தைக்குத் தெரிவித்தான். அதை மன்னர் ஏற்கவில்லை. “எல்லாளனிடம் ஒரு லட்சம் போர் வீரர்கள் இருக்கிறார்கள். மேலும் அவர் நல்லவர். மக்களின் ஆதரவைப் பெற்றவர். அவர் மீது படையெடுக்க வேண்டாம்” என்று தகவல் அனுப்பினார். இதனால் சீற்றம் அடைந்த துட்ட காமினி, பெண்கள் அணியும் வளையல்களையும், சேலைகளையும் தந்தைக்கு அனுப்பி வைத்து, தந்தையை அவமானப்படுத்தினான்.
இதனால் கோபம் அடைந்த மன்னர், துட்ட காமினியை கைது செய்து, தன் முன் கொண்டு வந்து நிறுத்துமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டார்.இதை அறிந்து கொண்ட துட்ட காமினி, காட்டில் போய் ஒளிந்து கொண்டான்.சில நாட்களில் மன்னர் மரணம் அடைந்தார். துட்ட காமினி, நாட்டுக்குத் திரும்பி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். பின்னர், அனுராதபுரத்தின் மீது படையெடுத்தான்.பெரும் படையுடன் துட்ட காமினி வருவது பற்றி அறிந்த எல்லாளன், மந்திரிகளை அழைத்து அவசர ஆலோசனை நடத்தினார்.துட்டகாமினியை கோட்டைக்குள் வரவிடக்கூடாது என்றும், கோட்டைக்கு வெளியே அவனை எதிர்கொண்டு போரிடுவது என்றும் முடிவ செய்யப்பட்டது. அதன்படி, அனுராதபுரம் கோட்டைக்கு வெளியே இருதரப்பு படைகளும் மோதின. போர் பயங்கரமாக நடந்தது. ரத்த ஆறு ஓடியது.இந்நிலையில், எல்லாளனுக்கு துட்டகாமினி சவால் விட்டான்.”நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்” என்றான்.போர் நடந்தபோது எல்லாளனுக்கு வயது 74. துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, எல்லாளன் ஏற்றுக்கொண்டார்.
இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அதே நேரத்தில் துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது.எல்லாளன் இறந்த இடத்திலேயே அவர் உடலை தக்க மரியாதையுடன் துட்ட காமினி தகனம் செய்தான். அதே இடத்தில் கோவில் ஒன்றை கட்டவும் ஏற்பாடு செய்தான்.”இந்த வழியே செல்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் அரசர்களே ஆனாலும் கோவிலை கும்பிட்டு விட்டு செல்லவேண்டும்” என்று உத்தரவிட்டான். எல்லாளனின் வீரத்துக்கு, துட்ட காமினி அளித்த மரியாதை இது.அனுராதபுரத்தைக் கைப்பற்றிக்கொண்ட துட்டகாமினி, அதை மேலும் விரிவுபடுத்த எண்ணமிட்டான்.ஆனால், அவன் திட்டங்கள் நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து இறந்து போனான்.
இவ்வாறு மகாவம்சம் கூறுகிறது.

Monster machine is building bridges across China


The first case of sexually transmitted Ebola

Genetic tests have confirmed that a Liberian woman contracted Ebola in March after having sex with a survivor of the disease.
Even though it was known that Ebola could survive in semen for weeks after a patient's symptoms had cleared up, this is the first time it's been confirmed that the disease can be transmitted sexually - and it also show that the virus can persist in bodily fluids a lot longer than we ever suspected.
The couple in question had unprotected sex six months after the man was first infected with Ebola, and 155 days after a blood test declared that he was clear of the virus - well past the 90 days that the virus was previously assumed to survive in bodily fluids, and that survivors are currently told to abstain from sex.
But analysis has shown that not only were the genomes of the man's and woman's virus virtually genetically identical, they were also different from all other Western African Ebola viruses that had been sequenced.
The researchers also ruled out that contact with other infected people could have transmitted the virus to the woman - in fact, she caught the disease 30 days after Liberia had been declared Ebola-free.
The results are published in the New England Journal of Medicine, alongside apreliminary report that suggests Ebola's genetic material can persist in semen an incredible nine months after infection.
Combined, the two papers show that we still have a lot to learn about how Ebola spreads, and just how long it takes to declare someone clear of the virus.
But the good news is that even though we now know sexual transmission is possible, the epidemiological evidence so far suggests that it can't be very common. There are more than 17,000 people who have survived the West African Ebola outbreak, and yet fewer than 20 suspected incidences of sexually transmitted infection have been reported.
"If sexual transmission from survivors were an important means of disease propagation, we would have seen a number of cases by now," wrote Armand Sprecher from Doctors Without Borders in Brussels, who wasn't involved in the research, in an opinion piece accompanying the research.
He also urges people not to use this research as further reason to stigmatise survivors of the virus. 
"Let us not forget that survivors have already endured a painful severe illness, and many emerge from it to find that friends and family members have died,"he writes. "If they are then treated as pariahs and threats, we add a terrible unkindness on top of their suffering. They should be treated with all the compassion we can muster."
Still, it's a significant breakthrough in our understanding of this persistent and deadly virus, and with further research it will help scientists develop safer guidelines and better protection in communities affected by the disease.
"It’s a really exciting article ... Ebola is a really complex and fascinating virus and we keep discovering new things about it every day," Jeremy Farrar, Director of the Wellcome Trust, who didn't work on the study, said in a statement. "The take home message from this article it’s not over when we think it’s over."
http://www.sciencealert.com/

The New Richest Man in the world Spanish clothing magnate billionaire Amancio Ortega


Typhoid Fever ::


Typhoid Fever or Enteric Fever is an acute, life-threatening febrile illness charaterized by a typical continuous fever for 3 to 4 weeks, relative bradycardia with involvement of lymphoid tissue and considerable constituinal symptoms. It is mainly caused by S. typhi or S. Paratyphi.
Typhoid fever occurs in all parts of the world where water supplies and sanitation are sub-standard. The disease is now uncommon in the developed countries where most of the cases that occur are either acquired abroad or imported by immigrants. In developing areas of Asia, Africa, Latin America. however, the disease continues to be a public health problem.


Incubation Period
Usually 10-14 days. But it may be as short as 3 days cr :.
long as three weeks depending upon the dose of the bac,. ,
ingested.
Mode of Transmission
1. It is transmitted via the faecal-oral route OR urine -oral routes.
2. Transmission through sexual contact, especially among men who have sex with men, has rarely been documented.
Clinical Features
1. First week :
- Gradual onset high grade fever (Stepladder pattern)
- Abdominal pain
- Constipation
- Diarrhoea, vomiting
- Relative bradycardia
- Generalized aches and pains
- Cough (Non-productive).

How Is Typhoid Fever Treated?

Typhoid fever is treated with antibiotics which kill the Salmonellabacteria. Prior to the use of antibiotics, the fatality rate was 20%. Death occurred from overwhelming infection, pneumonia, intestinal bleeding, or intestinal perforation. With antibiotics and supportive care, mortality has been reduced to 1%-2%. With appropriate antibiotic therapy, there is usually improvement within one to two days and recovery within seven to 10 days.
Several antibiotics are effective for the treatment of typhoid fever. Chloramphenicol was the original drug of choice for many years. Because of rare serious side effects, chloramphenicol has been replaced by other effective antibiotics. The choice of antibiotics is guided by identifying the geographic region where the infection was contracted (certain strains from South America show a significant resistance to some antibiotics.) If relapses occur, patients are retreated with antibiotics.
Those who become chronically ill (about 3%-5% of those infected), can be treated with prolonged antibiotics. Often, removal of the gallbladder, the site of chronic infection, will provide a cure.
For those traveling to high-risk areas, vaccines are now available.