Search This Blog

Sunday, January 26, 2014

ரிக்வேதத்தில் வரலாறு

ரிக்வேதம்: பத்து மண்டலங்களையும் 191 சூக்தங்களையும் 1028 பிரிவுகளையும் 10552 பாடல்களையும்; அவற்றில் பல வேண்டுதல்களையும் பாராட்டுக்களையும் துதிப்பாடல்களைச் சுலோகங்களாகக் கொண்ட இனம் பிரிக்கப்படாத தொகுப்புநூல். ரிக்வேதத்திலிருந்தும் அதனைச்சார்ந்த பிராமணங்கள் மற்றும் உபநிஷத்துக்களிலிருந்தும், அனைத்தையும் பயன்படுத்திக் கொண்ட மாபாரதத்தின் இடையே; மகதத்திலிருந்து நாடு கடத்தப்பட்டுத் தெற்கேசென்று மீண்டும் மாபாரத வரலாற்றின் திருப்பத்துக்கு வித்திட்ட நாடுகடத்தப்பட்டோரின் வரலாற்றைக் கொண்ட இராமயணத்திலிருந்தும் முழுமையான வரலாற்றை வெளிக் கொண்டுவர முடியும். இவற்றை முழுமையாக வெளிப்படுத்த நமது பழந்தமிழ்ப் பாடல்களும் காப்பியங்களுமே உதவுகின்றன. சூரிய குலம் சந்திர குலம் என இரு மாறுபட்ட இயல்பும் கலாச்சாரமும் கொண்ட இனங்களுக்கிடையான மோதல்களே அனைத்திலும் இடம்பெற்றுள்ளன. சந்திரகுலத்தினரால் கெடுத்தும் அழித்தும் கொலைசெய்யப்பட்டும் வாழ்விழந்த பெண்களின் வரலாறு பழந்தமிழ்ப் பாடல்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
கிரேக்கத்தில் நடந்த ஒருநிகழ்வைக் காண்பது சிறப்பாக இருக்கும். இதில் இடம்பெறுவோர் அலெக்சாந்தனுக்கு முன்னரும் சமகாலத்திலும் அங்குச்சென்ற; பெயர் மாற்றப்பட்ட பாரதப்புதல்வர்களே. அங்கும் சினிக் (ஆசீவக) தத்துவத்தைத் தோற்றுவித்த ஆண்டிஸ்தெனிஸ், சாக்ரெடீஸ்சின் மாணவர். பிரசித்திபெற்ற டயோஜினிஸ் -ஆண்டிஸ் தெனிசின் மாணவர்-ஒரு பீப்பாய்க்குள்(முதுமக்கள் தாழி?) வாழ்ந்ததாகச் சொல்லப் படுகிறது. ஒரு மேலங்கி ஒரு கம்பு மற்றும் ரொட்டி வைத்துக்கொள்ள ஒரு பை ஆகியவை மட்டுமே உடைமைகள்; அதனுள் வைக்கப்பட்டோரின் மகிழ்ச்சியைத் திருடுவது எளிதாக இல்லை. ஒருநாள் பீப்பாய்க்குள் இருந்துகொண்டு சூரியனை ரசித்துக் கொண்டிருந்தபோது அலெக்சாண்டர் அவரைப் பார்க்க வந்தார். தான் அவருக்குச் செய்யவேண்டியது ஏதாவது உள்ளதா? அவருடைய விருப்பம் என்ன? என வினவினார். டயோஜினிஸ்;"ஆம்! ஒதுங்கி நில்; சூரியனை மறைத்துக் கொண்டிருக்கிறாய்" எனத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார் எனக்காண்கிறோம். (இத்தகவல் காலச்சுவடு பதிப்பகத்தாரின் "சோஃபியின் உலகம்" என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது) படிமவடிவிலான இத் தகவலிலிருந்து உணருவது; வசிட்ட அலெக்சாந்தனால் பிடித்துச்செல்லப்பட்ட அறிவாளரில் ஒரு புலவரே இவர் என்பதாகும்.
அறிஞர் போப்-அறிஞர் எல்லிஸ்: "தமிழ்நூல்களைப் பயின்ற வடமொழியாளர் பலரும், அவற்றை ஒத்த பாடல்களையும் செய்யுள்களையும் எழுதியுள்ளனர். தமிழ்க் கவிதைகளில் உள்ள நீதிக் கருத்தைச் சொல்லும் ஒவ்வொரு பாவிற்கும் ஒரு வடமொழிப் பாடலைஅதனோடு நெருக்க முடையதாகக் காட்ட முடியும். ஆனால் இத்தகைய ஒற்றுமை கொண்டுள்ள பாக்கள் பலவற்றுள்; அழகு, இயல் புடன் இயங்குதல், அகத்தூண்டல், சுருக்கம், தெளிவு ஆகிய தன்மைகளை வைத்துப் பார்க்கும்போது தமிழ்க் கவிதையே மூலம் என்று நிறுவக் காணலாம். "(pOp .xxx iv.)
திரு. டேவிட்சன்: "சமூகப் பொருளதார, கலாச்சாரக் கூறுகளின் மையமாக உள்ள வரலாறு; ஒருகணக்கீட்டு எந்திரமல்ல"
Dr.இராதாகிருஷ்ணன்: "வரலாறு என்பது; சிந்தனையாளர்கள் ஆய்வுசெய்து விட்டுச்சென்ற எண்ணச் சிதறல்களின் வழிநின்று; அறிவு முதிர்ந்த ஒருவர் மனவழியில், முழுமை பெற்று (வரலாறாக) வெளிப்படுகின்றது."
சர் டி.மாதவராவ்: "இந்த உலகத்தில் அரசியல் தீமைகளால் குறைவாகவும், தாங்களே உருவாக்கிக்கொண்ட அல்லது ஏற்றுக்கொண்ட (நம்பிக்கை)தீமைகளினால் மிக அதிகமாகவும் துன்பதுக்கு உள்ளாகும் இனம் இந்து சமூகமே ஆகும்.''
வேதங்களில் ஆன்மிகக்கருத்துக்கள் எவையும் இல்லை; வரலாற்றுத் தகவல்களும் பாரதத்தில் தங்களது மேலாண்மையை நிறுவ முயன்ற ஆரியர் மற்றும் பிராமணரின் வேண்டுதல்களும் பிரார்த்தனைகளுமே அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் இனப்பாகுபாடு வருணப்பாகுபாடு போன்றவை பிற்காலத்தில் புகுத்தப்பட்டவையாக உள்ளன.
எகிப்திய கிரேக்க நந்தர்(அலெக்சாந்தர்கள் எத்தனைபேர்? காசிராசனே அலெக்சாந்தன் தானோ? காசிராசனுடனான கிரேக்கரது உறவு எப்படிப்பட்ட தென்பது? அறியப்படவில்லை); சந்திரகுப்தனின் தந்தையைத் தோற்கடித்துப் பஞ்சாபிலிருந்த துவரை=துவாரகையைக் கைப்பற்றிக்கொண்டனர்(துவரை ஆப்கானிஸ்தானில் உள்ளதாகவும் திரு.டி.டி. கோசாம்பி குறிப்பிடுகிறார்); சந்திரகுப்தன் வளர்ந்து (கோசர் படை எனத் தமிழ்ப்பாடல்களில் இடம்பெற்றோர்)படையைத்திரட்டி ஆண்டபோது மகதத்தின் மீதும் அலெக்சாந்தன் போர் தொடுத்தான். சந்திரகுப்தன் வெற்றிபெற்று மீண்டும் துவரையைக் கைப்பற்றினான். கிரேக்கன் உபரிசரவசு(தந்தை=சிரவசுவுக்கு அடுத்த நிலையில் உள்ளவன்)=அலெக்சாந்தன்; அடிமைப் படைத் தளபதி(இவன் ஒரு மீனவனாக=மீன் பாண்டியரின் சின்னமாக்கப்பட்டது; விதுரனின் பிறப்பும் விதுரனின் மகன் பாண்டியன் நெடுஞ்செழியனும் இவனது கால்வழியில் வந்தவர்களே என வேதங்களும் மாபாரதமும் குறிப்பிடுகின்றன) செல்யூக்கஸ் நிகந்தனின் மனைவியைப் புணர்ந்ததால் பிறந்த பெண் ஹெலன்(இவள்மீது மீன்வாடை வீசியதாகவும் கங்கை நதியில் படகு ஓட்டியபோது பராசரனைப் புணர்ந்ததால் இவ்வாசம் நீங்கி வியாசன் பிறந்ததாகவும் குறிப்பிட்டு; ஹெலன் ஒரு கிரேக்க அடிமைப்பெண் என்பதை மறைத்து; சமதக்கினியின் தாய் என்பதையும், விசுவாமித்திரனின் சகோதரி எனவும் மாபாரதம் குறிப்பிட்டுக் குழப்புகிறது) மீது சந்திரகுப்தன் ஆசை கொண்டான். அவளோ தனக்குப் பிறக்கும் புதல்வர்க்கே ஆட்சியுரிமை கொடுக்கவேண்டும் என நிபந்தனை விதித்ததால் மனம்தளர்ந்து திரும்பிவிட்டான். சந்திரகுப்தனின் மகன் கரவேலன்= கிருஷ்ணன்; நீக்கப்பட்டு அவ்விடத்தில் அசோகன் என முசுகுந்தன்=காசியப்பன்= காசி ராசனின் மகன், தேவவிரதனாகப் புகுத்தப்பட்டுச் சந்திரகுப்தனின் ஆசையை நிறை வேற்றுவதாக நடித்துத் தனது ஆட்சியுரிமையை விட்டுக்கொடுத்து ஹெலனை மணம் முடித்து பீஷ்மனானான் எனவும் மாபாரதம் குழப்புகிறது. பீஷ்மனை முசுகுந்தனாகப் பல புராணங்கள்-குறிப்பாக கந்தனின் தந்தை என ஸ்ரீமஹா கந்த புராணம்- குறிப்பிடுகின்றன. ரிக்வேதம் பீஷ்மனை இந்திரனாகவும் தமிழரான தஸ்யூக்களுக்கு எதிரானவனாகவும் குறிப்பிடுகிறது;
ரிக்வேதமண்டலம் 7;சூக்9:(ஆரியபிரகத்தன் படையினருடன் பல்லவராகத் தொண்டைநாட்டில் குடியமர்த்தப்பட்டதை) " (முசுகுந்த) இந்திரன் சோம்பிப்பேசித்திரியும் எதிரிகளை எண்ணற்ற வழித்தோன்றல்களுடன் (கரிகால்சோழன்)சுதாசனுக்கு அடிமையாக்கினான்"
10.49: இந்திரன் "நான் மனித நலனுக்காக வச்ராயுதத்தைப் பயன்படுத்தி அழித்தேன், காத்தற்பணி மேற்கொண்டு கூபா(?)வைப்பேணி, சுசுனா(?)வை அழிக்க வச்ராயுதம் ஏந்தினேன். தஸ்யூக்கள் 'ஆரியன்' என்னும் பட்டத்தை இழக்கச்செய்தேன்"
10-49.3: "தஸ்யுக்களிடமிருந்து ஆரியர் எனும் உயரினப்பெயரைப் பறித்துவிட்டேன்" என முசுகுந்தனின் கூற்றுக்கள் இடம்பெற்றுள்ளன.
கரவேலன்=கண்ணனும் தேவவிரதன்=பீஷ்மனும் எட்டாவதாகப் பிறந்தவர்கள் என அறிகிறோம். சதபத பிராமணம்(மேற்கோள்-ஆன்டன்பர்கின் நூல் 'புத்தர் வாழ்க்கை' பக் 404): பாஞ்சால மன்னன் சோஹன்(சோழன்) சத்திரகன்[சோழன் சத்தியவிரதன் என்னும் திரிசங்குவுக்கு வேங்கடமலைக் காட்டில் விசுவாமித்திரர்) யாகம் செய்த போது தௌர்வசர்கள்(துர் என, பெயருக்கு முன்னர் ஒட்டாகக்கொண்டர் வாசர்கள்(அனேகமாக மீன் வாடைகொண்டவர்கள்); விசுவாமித்திரனின் சோழ சூரிய குலத்தருக்கு எதிரிகள்]ஆறாயிரம்பேர் கவசமணிந்து எழுந்து(எதிராக)நின்றனர்". எனக் குறிப்பிடுகிறது. ரிக்வேதம் 3-53.24: "விசுவாமித்திர குலத்தரான பாரதர்க்கும், வசிட்ட குலத்தரான திரித்சூக்களுக்கும் பகை இருந்தது" எனக்குறிப்பிடுகிறது. ரிக்வேதம்: 8.96.13-14: கிருஷ்ணன் ஒர் அசுரன்; அம்சுமதி ஆற்றங்கரையில் இந்திர(முசுகுந்த=பீஷ்ம)னோடு போரிட்டான்"(ஒடிஸ்ஸாவின் கலிங்கத்தில் அசோக=இந்திர முசுகுந்த பீஷ்மனுடன் போரிட்டதையே காலிங்கனோடு கரவேல்=கண்ணன் போரிட்டதாகக் காணவேண்டும்)
இந்தியாமீது போரிட்ட அலெக்சாந்தன் வெற்றிகொண்ட பல குடியரசுகளும் சுதந்திரமான தற்சார்புடைய சுயாட்சியுரிமை படைத்தவை என வரலாற்றாளர்கள் விவரித்துள்ளனர். இக்குடியரசுகளுள் சோடாரி(சோழர்) இன மக்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் விந்தியமலைக்குத் தெற்கே வாழ்ந்ததாக பதஞ்சலியின் மாபாடியத்தில் 1,2,3 லும்; மாபாரதம் இயல் XXXII சபாபருவத்திலும் விஷ்ணுபுராணத்திலும் மார்க்கண்டேய புராணத்திலும் இதர சில இனங்களுக்கிடையே குறிப்பிடப்பட்டுள்ளனர்; தஸ்யுக்களாகத் தமிழரை 78 இடங்களில் ரிக்வேதம் குறிப்பிடுகிறது. கிரேக்கர்கள் பல்வேறு வர்க்கத்தினரை உள்ளடக்கிய ஒரு லட்சிய சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என ஒப்பற்ற ஞானி பிளேட்டோ விரும்பியபோதிலும் அங்கு நிறுவுவதைக் கிரேக்கர்கள் விரும்பவில்லை; அதனை நிறுவிஸ் சோதனையிட இந்தியா தேர்வுசெய்யப்பட்டதாகத் தெரிகிறது. அன்றைய கிரேக்கத்தில் மக்களிடையே மூன்று வகுப்புக்கள் மட்டுமே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நான்காவதாக்ச் சூத்திரர் என ஒரு இனத்தைப் புகுத்தும் முயற்சி இந்தியாவில் கிரேக்கராலேயே ரிக்வேத காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை; மீண்டும் பிற்காலப் பாண்டியருக்காதரவாக வந்துசேர்ந்த கிரேக்கராலேயே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
வரலாற்றில் பீஷ்மன் என அசோகனைப் புகுத்தியதும் கற்பனையே; அசோகன் என்பதாக ஒருவன் இருந்ததில்லை; அவனால் வெட்டப்பட்டதாகக் கருதப்படும் கல்வெட்ட்டுக்களும் வரலாற்றை மாற்றியமைக்கவும் பௌத்தமதம் என்பதாக ஒன்று அசோகனது காலத்துக்கு முன்னரே தோன்றியது என்பதை நிறுவவும் சிங்கள=நகுஷ=உஷனர்கள்(எகிப்திய கிரேக்க அடிமைகள்) மஹாவமிசம் மற்றும் புத்தசாதகக் கதைகளில் எழுதிவைத்தனர்.
வால்மீகி இராமாயணம்-சுந்தரகாண்டம்-அத்யாயம்-4-சருக்கம்:14 முதல்: (பாண்டிய இராவணனிடம் ஒப்படைக்கப்பட்ட சோழநாட்டை ஆளும் தகுதிக்கான இந்திர ஆரத்தை)சீதையைத் தேடிச்சென்ற அஞ்சனஏயன்=அஞ்சனையின் மகன்; புத்தனின் ஆலயம் போன்ற மேடையில், ஒற்றை ஆடையுடன்(உரிமையாளன்/ கணவன் பாதுகாப்பில்லாமல்) சீதையைக்கண்டு; இராமன் தன்னிடம் கூறியபடி நகைகளெல்லாம் மரக்கிளைகளில் உள்ளதையும் சீதையையும் கண்டு உறுதிசெய்தான். இந்த (சீதை)பொன்ஆரமே இராமனால் கைப்பற்றப்பட்டு மீண்டும் அணிந்து ஆட்சிசெய்யப்பட இருந்தபோது பொதுமக்களில் ஒருவன்: "சீதை(ஆரம்) பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இராவணனிடம் இருந்துள்ளதால் அவன் அதைத் தொடாமலா இருந்திருப்பான்; எனவே சீதை(ஆரம்) கறைபடிந்தது" என ஐயம் எழுப்பியதால் பொன் ஆரமான சீதை மீண்டும் அக்கினிப்பிரவேஷம் செய்து புதுப்பிக்கப்பட்டது என்பதைக் காணத்தவறிவிட்டோம்.
புத்தனுக்குப் பிறகே இயற்றப்பட்ட இராமாயணத்தில் குழப்பமிருப்பதுவியப்பல்ல!?(புத்தன் யார்?)புத்தனின் வாரிசு(செவ்வேல்=செங்குட்டுவன்) அநந்தனுடன் முரணிய பௌத்த= சிங்களர்; புத்தனின் காலத்தை மாற்றி; '500 ஆண்டுகளுக்குத் தனது சிலையை வைத்து வணங்கக்கூடாது' எனப் புத்தன் கட்டளையிட்டதாக; ம(க)ாவம்சத்தில் எழுதிவைத்து; அங்கிருந்த தமிழரை அடக்கினர்; ஆயினும் மக்களோ தங்களது வழிபாட்டு நெறிகளை விடுவதாக இல்லை; புத்தனின் காலடிச்சுவட்டை(பாதுகா) வணங்குவதாக மாற்றிக்கொண்டனர். இதனையும் பிராமணர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்; ஆயினும் ஒன்றும் செய்யமுடியாத நிலையில் பாதுகா என்பதை யதுகா என மாற்றிவிட்டனர்.
பீஷ்மனின் அறிமுகத்தின்போதே கங்கைநதியை (கங்கைப்பகுதிப் பெண் தனது காதலன் திலீபனுடன்=தென்னகவேந்தனுடன் சேர்வதை) அணைபோட்டுத் தடுத்ததாகக் காண்கிறோம். மேலும் சந்திரகுப்தனுக்கும் ஹெலனுக்கும் பிறந்த பிந்துசாரன்=சித்ராங்கதன், பிம்பிசாரன்=விச்சித்ரவீர்யன் ஆகியோருக்கு முசுகுந்த பீஷ்மன்; தனது தந்தை காசிராசனின் பெண்களான அம்பா அம்பிகா அம்பாலிகா என மூவரையும் மணம் முடிக்க முயன்றதையும் காண்கிறோம்.
இந்நிலையில் அலெக்சாந்தன்= வசிட்டனோ; சந்திரகுப்தனின் பிற வாரிசுகளால் உருவாக்கப்பட்ட நாடுகளின் மீதும்; குறிப்பாகக் கரவேலன் கண்ணனுக்காக விசுவாமித்திரன் உருவாக்கிய வேங்கடக் காட்டுப்பதியில் திருப்பதியில்=த்ரௌபதியிலும், சோழன் சேத்சென்னி உருவாக்கிய சோழநாட்டிலும் தங்களது உரிமைகளை நிலைநாட்ட முயன்றதைக் கரவேலன்= கண்ணன்=திரிசங்கு என்னும் சத்திய விரதனின் வரலாற்றிலும் (ஹரிவம்சம்-முய்ர் மேற்கோள் தொகுதி 1 பக்கம் 377-378; இராமாயணம் மேற்கோள் பக் 401-404) விசுவா மித்திரனுடனான வசிட்டனின் மோதல்களிலும் சந்திரகுப்தனின் தங்கையை மணந்த சோழன் இளஞ்சேத்சென்னியின் வரலாற்றிலும் காண்கிறோம். சோழநாட்டில் விசுவாமித்திரனுக்கு எதிராகத் தனது மகன் சமதக்கினியைப் புரோகிதனாக்கினான்; சமதக்கினியை வசிட்டன் எனவும் வசிட்டனுக்கு நூறு புதல்வர்கள் எனவும் மாபாரதக் கிளைக்கதைகளில் காட்டி; கண்ணில்லாத திருதராட்சனானகவும் மாற்றி வரலாற்றை மறைக்க முயன்றதை மாபாரதத்தில் காண்கிறோம்.
ஹெலனுடன் சந்திரகுப்தன் கொண்ட புணர்ப்பினாலேயே நமது நாட்டுக்கு ஒழுங்கான வரலாறு இல்லை; அந்நியரிடம் நாடுகளை இழந்தோம்; இளஞ்சேத்சென்னியின் மகன் கரிகால் மற்றும் முசுகுந்தனுக்கும் கரிகால் சோழனின் தங்கைக்கும் பிறந்த செங்குட்டுவனின் காலத்தில் மீண்டும் போரிட்டுப் பெற்றோம்; ஆயினும் நமது முன்னோன் சந்திரகுப்தன் ஹெலனுக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறமுடியாமல்; வாய்மையால் கட்டுண்டு வரலாற்றை இழந்து ஒடுக்கப்பட்டோராக வரலாற்றை அறியாமலேயே மௌனமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இவர்களது வரலாறு சந்தனு சத்தியவதி எனப் புராணவடிவில் இடம்பெற்றுள்ளது. அந்நியரின் மேலாதிக்கத்தால் நாடு பல மாற்றங்களுக்கு உள்ளானதைக் கலித்தொகை-பாலைக்கலிப் பாடல் 25:
"வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்;
ஐவர்என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தரா;
கைபுனை அரக்குஇல்லைக் கதல்எரி சூழ்ந்தாங்கு
கலிதிகழ் கடாஅத்த கடும்களிறு அகத்தவா
முளிகழை உயர்மலை முற்றிய முழங்குஅழல்
ஒள்ளுரு அரக்குஇல்லை வளிமகன் உடைத்துத்தன்
உள்ளத்துக் கிளைகளொடு உயப்போகு வான்போல
.. .. சிறப்புச்செய் துழைய்யராப் புகழ்பேத்தி மற்றவர்
புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல் ..." என; அந்நியப்பெண் ஹெலனுடன் சந்திரகுப்தன் கொண்ட புணர்ப்பினால்; மகன் கரவேலன்=கண்ணன்= திரிசங்கு= சத்திய விரதன் உரிமையை இழந்து தவித்தபோது விசுவாமித்திரனால் ஆதரிக்கப்பட்டதையும் இதனால் விசுவாமித்திரனும் தண்டிக்கப் பட்டதையும் மாபாரதமே எடுத்துரைக்கிறது.. 'கிருஷ்ணனுடைய மக்கள் சராசந்தனால் மதுராவிலிருந்து விரட்டப்பட்ட போது மேற்குப்பக்கமாக நகர்ந்து துவாரகையில் குடியேறினர்' என நச்சினார்க்கினியர், தொல்காப்பிய உரையில் மேற் கோள்காட்டியுள்ளார். எங்கிருந்து பெறப்பட்டனவோ?; அவற்றுள் போரில் ஈடுபட்ட பரசுராமனைக் காண்போம்:
"மறங்கெழு வேந்தன்; குறங்கறுத் திட்டபின்
அருமறை யாசா னொருமகன் வெகுண்டு
பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமொ
டிரவூ ரறியாது துவரை வேந்தொடு
மாதுலன் றன்னை வாயிலி னிறீ இக்
காவல் பூட்டி யூர்ப்புறக் காவயின்
ஐவகை வேந்தரோ டரும்பெறற் றம்பியைக்
கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற்
றொக்குடம் பிறீ இத் துறக்க மெய்திய
தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனென
துஞ்சிடத் தெழீ இக் குஞ்சி பற்றி
வடாஅது பாஞ்சால னொடுமுதற் புதல்வனைக்
கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக்
கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற்
றம்பியர் மூவரு மைம்பால் மருகரு
முடன்சமர் தொடங்கி யொருங்குகளத் தவிய
வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை, யால் வினைக்
கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத்
தன்முதற் றாதையொடு கோன்முத லமரர்
வியந்தனர் நயந்து; விசும்பின்
இயன்றதா யுலகமு மறிந்தா லதுவே"
-பாஞ்சாலம்-திரௌபதி-திருப்பதி- பாஞ்சாலி; குறங்கறுத்தல்=தொடைபிளத்தல்-பிராமணருடன் தொடையிற் பிறந்த வைசியர் தொடர்பை நீக்குதல்; மறங்கெழு வேந்தன்=தருமன்=கரிகால்; சோழரின் துணையுடன் சமதக்கினியுடனான வைசியரின் தொடர்பைத் துண்டித்ததால் சமதக்கினியின் மகன் பரசுராம துர்யோதனன் வெகுண்டு; தனது தந்தையின் கொலைக்கும் காரணமான கண்ணனின் மகன் பரீச்சித்துவை வேள்வியாகங்கள் செய்து வேந்தனாகாமல் தடுத்தான். இதனை எதிர்த்த அனைவரும் நூற்றுவருக்கெதிராகத் திரண்டனர்; மேலும் கதை தொடர்கிறது; ஆயினும் இவ்வரலாற்றைத் தெளிவாகக் காட்டும் பாடல்கள் எங்குமே இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டதால் விளக்கம் காண்பதி எளிதாக இல்லை. தலையற வெறிதல்= தலையிற் பிறந்த அறிவாளர், அந்தணருடனான வசிட்ட-சமதக்கினி கூட்டத்தாரின் தொடர்பை நீக்குதல்; மாபாரதத்தில்; சரசுவதிநதி-அறிவாளர்படை; சிந்துப் பகுதியை நீங்கி; மகதத்துக்கும் தென்னகத்துக்கும் சென்றதை(சதபத பிராமணம்-1-4-10 குறிப்பிடுகிறது); மகதம் சென்ற இப்படையை முசுகுந்தனிடம் பரசுராமன்=துர்யோதனன் பெற்றான். மேலும் இப்பாடல் சந்திரகுப்தனால் அல்லலுற்ற, மாபாரதத்தில் இடம்பெறும் ஐவரும் சகோதரர்கள் அல்ல; ஐந்து திணை நிலங்களின் தலைவர்கள் என்பதையும் உறுதிப்படுத்துகிறது. மேலும் புறநாநூறு- 2:
"மண்தினிந்த நிலனும் நிலம்ஏந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும் .. .
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும்நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்நாட்டுப் பொருந
...அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
. .. திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலைஇய அத்தை; அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே" என மாபாரதப் போர் குறித்த தகவல்களைக் காண்கிறோம்.
அகத்தியனும் வேலிரும்
புறநாநூறு 201, 202ல் வரலாற்றைக் கபிலனும் காட்டுகிறான்:
".. நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி
செம்புபுனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை ஆண்டு
நாற்பத் தொன்பது வழிமுறை * வந்த
வேலிருள் வேலே விறற்போர் அண்ணல்
தாரணி யானைச் சேட்டிருங் கோவே *
ஆண்கடன் உடைமையின் பாண்கடண் ஆற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல் .. .. .
பொன்படு மால்வரைக் கிழவ வென்வேல்
உடலுநர் உட்கும் தானைக்
கெடலருங் குரைய நாடுகிழ வோயே"
என: அகத்தியனின் 'தடவினுள்' 49வது வழிமுறைத் தமிழன் கோவேலைக் காண்கிறான். (பாட்டன்-பெயரன்)வழிமுறைக்கும், (தந்தை-மகன்)தலைமுறைக்கும் உரைகாரர்கள் வேறுபாடறியவில்லை. [*49x60+கிமு161+கிபி 2013=5114 கலியுகத்தின் துவக்கம்}சந்திரகுப்தனுக்குப்பின்; விசுவாமித்திரன், கரவேலன், கரிகால் என அகத்தியர் ஆயினர். பெருஞ்சேரலாதனும் கோ வேலும்; ஒலியற்கண்ணிப் புலிகடி மா அல்-கரிகாலால் அடக்கப்பட்டோராவர். வேலிரின் 5000ஆண்டுப் பழமையையும், உலகில் எங்கே உள்ளது என அறிய வியலாத துவரை நாட்டை ஆண்டதாகவும் காண்கிறோம். ஆங்கிலத்தில்; "Life Time" =பாட்டன் பெயரன் என்னும் மூன்றுதலைமுறையைக் கொண்டது ஒரு வழிமுறை; பஞ்சாங்க ஆண்டு வட்டமான 60 ஆண்டுகளில் சந்திரகுப்தன் காலம்வரை 2880 ஆண்டுகள்; வரலாறற்றுக் கழிந்துள்ளன. பின்னரே சந்திரகுப்தன் மணந்த கிரேக்கப்பெண் ஹெலனால் தொல்லை துவங்கியது. ஒட்டக் கூத்தரின், தக்கயாகப் பரணியில் இந்திரனின் மக்கள் நாற்பத் தொன்பதின்மர் எனவும்; களவியல் உரைப்பாயிரம் 'சங்கம் இரீ இனார் முடத்திருமாரன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப' எனவும் குறிப்பிடுகின்றன. 5114 ஆண்டுகளை உள்ளடக்கிய வரலாற்றை வெளிக்கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல என்பதை மறந்துவிடக்கூடாதல்லவா? முதுகுடி- தொல் குடித் தமிழரின் வரலாறும் மொழியும் நிச்சயமாக 5000 ஆண்டுகளுக்கு மேற்பட்டது என்பதை நமக்குக் கிடைத்துள்ள பழமையான இலக்கிய இலக்கணங்களின் பொருள்களைத் தெளிவாக உணர முடியாத போதிலும்; செழுமையைக் காண்போரால் உணரமுடியும். புறநாநூறு 201ம் பாடலின் இறுதி நான்கு அடிகளுக்குச் சரியான விளக்கம் இல்லை. பாரிமகளைப் பார்ப்பார்ப்படுத்தி; மண முடிக்கக் வேண்ட, கோவேல் மறுத்துவிட்டபின்; புறம் 202ல் கபிலன்:
"..இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்
கோ(டு)டிபல அடுக்கிய, பொருள்நுமக்கு உதவிய
நீடுநிலை அரையத்துக் கேடும் கேள்இனி:
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள்; கழாஅத் தலையை/ தானையை
இகழ்ந்ததன் பயனே: இயல்தேர் அண்ணல்
எவ்வி; தொல்குடிப் படீஇயர்"
என்கிறான். "புலிகடி மாஅல்" யார்?; "எவ்வி; தொல்குடிப் படீஇயர்" என்பது என்ன?; குறுந்தொகை 19: "சூரியனின் மறைவால் வாடும் பூக்களை(பெண்களை)ப்போன்று; எவ்வி(மயன்=விசுவகர்மன்) எனும் மன்னனை இழந்த யாழ்ப்பான நாட்டார் வருந்தும் நிலையொப்ப உதவுவாரின்றி நானும் வாடுகிறேன்" எனப் பாவை குறிப்பிடுகிறாள்.எவ்வி குறித்த பாடல்கள் மேலும் பல உள்ளன. விசுவகர்மனை ரிக்வேதம் இலங்கையின் அதிபனாகவும் சந்திரகுப்தனைப் பலிப்பொருளாக=புருஷனாகப் பிணித்தபோது பிற மூன்று பகுதிகளில் ஒன்றான தென்திசைக் காப்பாளருள் ஒருவனாகக் குறிப்பிடுகிறது; இதனை மாபாரதமும் உறுதிப்படுத்துகிறது. 'இரு பால் பெயரிய உருகெழு மூதூர்'; எது? ஏன் இரண்டுபட்டது?; திருமா, பிரகத் மற்றும் முசுகுந்தனுக்குப் பிளவுபட்ட தென்னகமும் தொண்டைநாடுமா, தென்னகமும் மகதமுமா? விந்தியமலையை எல்லையாகக்கொண்ட இரு நாடுகளா? இந்தியரும் எகிப்தியருமா? தொல்குடி: பண்டவர் பண்டையர் பழங்குடி முதுகுடி திரையர் தொண்டையர் எனப்பலவாறாக அறிவாளர் வேலிரைப் பார்ப்பனரும் பிராமணரும் இழிவுபடுத்தியதை உணர்த்தும் பாடல்கள் பலவற்றைக் காண்கிறோம். புறம் 69ல் கிள்ளி-கரிகால்வளவனை: "கழாஅத் தானையன்" எனக் குறிப்பிடுவதையும் காண்கிறோம். இலங்கையை வென்று சீதை=ஆரத்தைக்கைப்பற்றிய ராமன் அங்கிருந்து சிறைப்பிடித்துவந்த சிங்களரைக்கொண்டு இன்றைய காவிரிநதியைஸ் சிவசமுத்திரத்திலிருந்து திசைமாற்றி ஒகெனக்கல்லுக்குக் கொண்டுவந்து பாறைகளை உடைத்து வழியமைத்து மேட்டூர் வழியாகத் தனது கடற்கரை நகரமான காவிரிப்பூம்பட்டனத்துக்குக் கொண்டுசென்றான் என்பதை எவரும் விரிவாக வெளிப்படுத்தவில்லை; ஆயினும் "க" மண்டலத்திலிருந்து காவிரியை விடுவித்துத் தென்னகத்துக்குக் கொண்டுவந்த கவேரன் என வரலாற்றில் இடம்பெற்றுள்ளான். "நீடுநிலை அரையத்தினர் கேடுறப்போவதாக" எச்சரிப்பது இமைய மலைச்சாரல் சார்ந்தோரை எச்சரிப்பதாகும். இவையனைத்தும் நுணுகி ஆய்வுகொள்ளத்தக்கன. நற்றிணை 281:
"வெல்போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல்வகை மிகுபலிக் கொடையோடு உகுக்கும்
அடங்காச் சொன்றி, அம்பல் யாணர்
விடக்குடைப் பெருஞ்சோறு உள்ளுவன இருப்ப" என்னும் அடிகளும் நோக்கத்தக்கன. பாடல் 345:
"களிறு அனைப்பக் கலங்கின காஅ
தேரோடத் துகள் கெழுமின தெருவு
மா மறு/வழ ங்கலின் மயக்குற்றன வழி
கலங் கழாஅலின் துறை கலக்குற்றன
தெறல் மறவர் இறை கூர்தலின்
பொறை மலிந்து நிலன் நெளிய
வந்தோர் பலரே வம்ப வேந்தர்
பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின்
ஓவுறழ் இரும்புறம் காவல் காணிக்
கருங்கண் கொண்ட நெடும்கண் வெம்முலை
மையில் நோக்கின் தையலை நயந்தோர்
அளியர் தாமே இவள்தன்னை மாரே
செல்வம் வேண்டார் செருப்புகழ் வேண்டி
நிரல்அல் லோர்க்குத் தரல் இல்எனக்
கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர்
குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
இன்னம் மறவர்த் தாயினும்/பிறவாததாயினும் அன்னோ
என்னா வதுகொல் தானே
பன்ன/னெல் வேலிஇப் பணைநல் லூரே." என முசுகுந்தனால் கெடுத்து நாசப்படுத்தப்பட்ட பாவை; கரிகால்சோழனின் தங்கையின் துயரையும் அதன் விளைவுகளையும், போரையும் வரலாற்றுத் தகவல்களுடன் கபிலன் குறிப்பிடும் "கழாஅத் தலையர்" இடம்பெறுவதையும் காண்கிறோம்.
(சந்திரகுப்தனுக்கும் ஆசைமனைவி ஹெலனுக்கும் பிறந்த பிம்பிசாரனுக்கு மணம் செய்யப்பட்ட இருபெண்களுக்குக் குழந்தை பிறக்கும் முன்னரே சந்திரகுப்த) மௌரியரின் கடைசி வாரிசை (பிம்பிசாரனை) புஷ்யமித்திர சுங்கன் கொலைசெய்தான் என; திரு. ஹரப்பிரசாத்சாஸ்திரியின் "பௌத்த ஆய்வுகள்" நூல் குறிப்பிடுகிறது. சத்தியவதி=ஹெலனுக்கும் சந்தனு=சந்திரகுப்தனுக்கும் பிறந்த இரு புதல்வர்களுள் சித்ராங்கதன்=பிந்துசாரன் இளம் வயதிலேயே கொலை செய்யப்பட்டான்; மற்றொருவன் பிம்பிசாரன்=விச்சித்ரவீர்யனுக்கு மணமுடிக்கப்பட்ட அம்பிகாவும் அம்பாலிகாவும் குழந்தை பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை; ஆயினும் மாபாரதம் இப்பெண்கள் சந்திரகுப்தனின் ஆசைமனைவிக்குத் திருமணத்துக்கு முன்னரே பராசரனுடன் கூடியதால் பிறந்த வியாசனுடன் கூடி திருதராட்சதனும் பாண்டுவும் பிறந்ததாகவும்; மேலும் அம்பிகாவின் பணிப்பெண்ணுடன் வியாசன் கூடியதால் விதுரன் பிறந்ததாகவும் குழப்புகிறது. திருதராட்சசனும் பாண்டுவும் கற்பணைப் பாத்திரங்களே; விதுரன் மட்டுமே வரலாற்றில் இடம்பெற்றவனாகத் தெரிகிறான். அம்பா; முன்னரே சால்வன்மீது காதல் கொண்டதால் பீஷ்மனால் விடுவிக்கப் பட்டும் சால்வன் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை; பீஷ்மனும் ஏற்க மறுத்துவிட்டதால் அம்பா சிகண்டியாக மாறி பீஷ்மனைக் கொலைசெய்யப் போவதாகச் சபதம் செய்ததாகவும் மாபாரதம் குறிப்பிடுகிறது.
சதபதபிராமணத்தில் அசுவமேதயாகத்தில் அம்பா, அம்பிகா, அம்பாலிகா மூவரும் இடம் பெறுகின்றனர்; அதர்வ வேதத்தில் 4.37.7ல் சிகண்டி என்னும் ஒரு கந்தர்வன் இடம்பெறும் கதை; ஊர்வசியின் கதைக்குத் தொடர்பு கொண்டதாக திரு.டி.டி.கோசாம்பி குறிப்பிடுகிறார். மேலும் அவரது "மாயையும் எதார்த்தமும்" நூலில்; ரிக்வேதத்தின் சிறு நூலான அனுக்கிரஹமணி என்னும் நூல் குறிப்பிடுவதாக 'புத்த இலக்கியங்களில் புத்தரின் மறு அவதாரமே பிராமணரான நாரதர்' எனவும்; 'தேவதைகளான நாரதரும் அவரது சகோதர் பப்பதாவும் உள்ளனர்' எனவும்; 'ரிக்வேதம்: 9.104 பாடலை; இவர்கள் இயற்றியதாகக் குறிப்பிடுவதாகவும்; மேலும் இரு சிகண்டிகள், அப்சரசுகள் கசியப்பனின் புதல்வியர்கள் எனக் குறிப்பிடுவதாகவும்' குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிடும் காசியப்பனே 'பூர்ண காசியப்பன் என்னும் காசிராசன், முசுகுந்தன் என்னும் காசியப்பனின் தந்தை'. ஆகவே காசிராசனின் புதல்வியர் அம்பா அம்பிகா அம்பாலிகா மூவரும் சிகண்டியராக மாறினர் என்பது உறுதிப்படுகிறது. இதனை மாபாரதம் முற்றிலுமாக மறைத்துக் குழப்பியுள்ளதைக் காணத்தவறிவிட்டோம்.
ரிக்வேதத்தில் வரலாற்றைக் காணும் முன்னர் சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
ஊர்வசி, அப்சரசு, ரம்பா, மேனகா, திலோத்தமை, இந்திராணி போன்றவை நாடுகளையும்; சில சமயங்களில் அந்நாட்டுக்குரிய தாய்வழிச் சமுதாயப் பெண்ணையும் குறிக்கும். நீர்த்தேவதைகளாக இடம் பெறுவோர் இமையப்பகுதி நீங்கலாக, "நாமநீர்வேலி" எனப் பழந்தமிழ்ப்பாடல்கள் குறிப்பிடும் முக்கடல் சூழ்ந்த இந்தியப்பகுதியில் பிறந்த பெண்ணையும் நாட்டையும் குறிக்கும்; ஆடை என்பது பாதுகாப்பையும், ஒற்றையாடை என்பது பாதுகாப்பற்ற அல்லது கணவனை இழந்த அல்லது நீக்கிய பெண்ணையும் நாட்டையும் குறிக்கும்; தன்னிச்சையாக எவரும் எந்தநாட்டையும் எவருக்கும் ஒப்படைத்துவிட முடியாது. சுயம்வரம் என்பதாக ஒன்றை நடத்திப் பலபோட்டிகளில் வெற்றிபெற்றால் மட்டுமே அந்நாட்டைக் கைப்பற்ற=மணமுடிக்க முடியும் என்பதையும் இராமன்=கரிகால் சீதை=சோழநாட்டைப் பலருடன் போட்டியிட்டு அசுரமுறையில் வென்றான் என்பதை இராமாயணத்தில் காண்கிறோம். மாபாரதத்தில் சந்திரகுப்தனின் மகன் கரவேலனை வசிட்டன் நாடுகடத்தியபோது, விசுவாமித்திரனால் வேங்கடமலைக்காட்டுப்பகுதியில் உருவாக்கிக் கொடுக்கப்பட்ட திருப்பதியை அடைவதிலும் கடுமையான போட்டி இருந்தது; திருப்பதி=த்ரௌபதியை கரிகால்=தருமனும் பிறரும் அசுரமுறையிலேயே வென்றனர்; ஐவரும் பொதுவாக வைத்து ஆட்சிசெய்தனர் என்பதையும், சீதையும் த்ரௌபதியும் பெண்கள் அல்ல, நாடுகள் என்பதையும் மனதில் கொண்டு வரலாற்றைக் காணவேண்டும். பெண் தனது மார்பைத்க்காட்டி அதன் வடிவமைப்பைப் பிறர் காணச்செய்வதென்பது தனது நாட்டின் வளத்தையும் செழுமையையும் அறிவிப்பதாகும். 12 ஆண்டுகளுக்கு மழைபெய்யாமல் இருக்கச் சபித்தல், 12 ஆண்டுகள் கொடிய பஞ்சம், பிராமணனைக் கொன்ற தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்றவை; மனு=மரீசியின் மகன் பூர்ணகாசியப்பன் செய்த மனுநீதிப்படி வசிட்டனால் தண்டிக்கப்பட்டதை மறைக்கும் சொற்களாகும். மனு: 11.75: "வேதமோதின, அக்னிஹோத்ரிகளாயும் இருக்கிற; மூன்று வருணத்தாருள் எவரேனும்; ஒழுக்கமில்லாத பிராமணனை அக்ஞானத்தால் கொன்றுவிட்டால்; தோஷம் நீங்க ஜிதேந்திரியாளாய், கொஞ்சமாகப் புசித்துக் கொண்டு, ஒரு வேதத்தை முழுவதுஞ் சொல்லிக் கொண்டு, நூறுயோசனை தூரம் புண்ணிய யாத்திரை செய்ய வேன்டும்; (நாடுகடத்துதல்) 11.78: இவ்விதமாகப் பன்னிரண்டு வருசம் விதிப்படி க்ஷவுளஞ் செய்து கொண்டு, அவ்வூர் ஓரத்தில் இருக்கப்பட்ட மாட்டுத் தொழுவத்தில் இருந்து; பசு, பிராமணர் இவர்களுக்குபகாரஞ் செய்யவேண்டியது; 11.81: இவ்வித விரதமுள்ளவனாய்; மனதையடக்கி 12வருசம் ஸ்த்ரீபோகமில்லாமல் சீவித்தால் தோசத்தினின்றும் நீங்குவான்" என்கிறது. கரிகால், பாவை, செங்குட்டுவன் போன்றோர் தண்டிக்கப்பட்டு சாய்காடுகளில் நாட்டின் எல்லையில் இருந்ததை "அருவழி இருத்தல்" எனத் தமிழ்ப்பாடல்கள் குறிப்பிடுகின்றன; யாப்பருங்கலம் விருத்தியுரை மேற்கோள்: கரிகாலை; சேரலத்தின் பொதியைப்பகுதியில் "எருமலி பெருந்தொழுவின் இறுத்ததுநின் இல்லாமோ?"என்கிறது.
இந்தியப் பழங்குடியினர்; அமண நெறிகளைக் கொண்டோராக நாகம் / நாகர் என வரலாற்றில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். புத்தன் யார் என்பதை எவரும் ஆய்வுசெய்யவில்லை; புத்தனும் 25ஆவது தீர்த்தங்கர அமணனே; 23ஆவது தீர்த்தங்கரி ஒரு பெண் என்பதை மறைத்ததையும்; 24ஆவது தீர்த்தங்கரனான மாவீர் யார் என்பதையும் எவரும் ஆய்வுசெய்யவில்லை; பொதுவாகவே அமணத்துக்கு வரலாறில்லாமல் மறைத்து அழிக்கப்பட்டதையும் புத்தமதம் என்பதாக ஒன்று உருவாக்கப்பட்ட காலம்; உலக மதங்கள் உருவாக்கப்பட்ட காலமான 4ஆம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமே என்பதையும் அறிதல் வேண்டும். அதன் பின்னரே இராமாயணமும் மாபாரதமும் உருவாக்கப்பட்டன. தமிழ் இலக்கியங்கள் உட்படப் பிற அனைத்தும் திருத்தப்பட்டு மாற்றியும் மறைத்தும் நீக்கியும் ஏடுகளில் இடம்பெற்றன. நாகரத்னம் என்பது அமணத்தில் தலைமைப்பதவியைக் குறிக்கும் படிமம். நாகருக்கு எதிரான நந்தர் குறித்துப் பழந்தமிழ்ப் பாடல்கள் விரிவாக குறிப்பிடுகின்றன. கடல் நதி நீர் என்பன பல இடங்களில் படைவீரரையும் படையையும் பெரும் படையையும் குறிக்கும் படிமங்களாககவே பெருமளவில் இடம்பெற்றுள்ளன.
ஊர்வசி, உஷையாக இருளாக மாறுவதென்பது கன்னித்தன்மையை இழப்பது அல்லது முறையற்றுத் தாய்மை அடைவதைக் குறிக்கும். பகைவனுக்குத் தங்களது இனப் பெண்ணைக் கொடுத்தும், பகைவனின் இனத்துப் பெண்ணுடன் உறவாடிக் கெடுத்தும்; நந்தர்கள் தங்களை மேன்மைப்படுத்திக் கொண்டுள்ளனர். இவற்றில் முதலாம் வகை, சந்தனு=சந்திரகுப்தனுடன் சத்தியவதி=ஹெலன் கொண்ட உறவு; இரண்டாம்வகை, துஷ்யந்தன்=முசுகுந்தனால் சகுந்தலை=கரிகாலின் தங்கை பாவை கெடுக்கப்பட்டது. மூன்றாவதாகவும் ஒருவழியைக் கைக்கொண்டுள்ளனர் என்பதை விதுரனின் வரலாற்றில் காண்கிறோம்; நந்தரால் அம்பிகாவின் பணி(அடிமை)ப்பெண்ணுக்குப் பிறந்ததால் சூத்திரனாக்கப்பட்டவனே விதுரன்; விதுரனின் மகனே நகுஷ இன =நெடுஞ்செழியன். செழியனின் உதவியுடனேயே சோழநாடான சீதையைக் கவர முயன்றனர்.
வரலாறும் மாபாரத மாந்தரும்
சந்தனு=சந்திரகுப்தனின் ஆசை மனைவி ஹெலன்=சத்தியவதியைப் போலவே வசிட்டனின் மனைவியாக மற்றொரு சத்தியவதி இடம் பெறுகிறாள்; இந்த வசிட்டனின் மகனே சமதக்கினி; ஆயினும் வசிட்ட / சமதக்கினிக்கும் திருத ராட்சசனைப் போலவே நூறு புதல்வர்கள் என உள்ளது. அத்துடன் சந்திரகுப்தனின் ஆசைமனைவி சத்தியவதி திருமணத்துக்கு முன்னர் பராசரனுடன் கூடி வியாசனைப் பெற்றாள் என மாபாரதம் ஆதிபருவம் குறிப்பிடுகிறாது. வசிட்டனின் மகன் சமதக்கினிக்குப் பிறந்தவனே பராசரன் என மாபாரதம் உறுதிப்படுத்தவில்லை. பராசரனின் மகனே மாபாரதத்தை இயற்றிய வியாசன் எனக்காண்கிறோம். வசிட்டனின் மனைவி சத்திய வதிக்கும் சத்தியவதியின் தந்தை கன்ய குப்ச மன்னைன் காதியின் மனைவிக்கும் பிறந்தோரே சமதக்கினியும் விசுவாமித்திரனும். இவர்களைப் பிறப்பிக்க வசிட்டன் ஏதேதோ திட்டமிட்டபோதிலும் பெண்களிலிருவரும் திட்டத்தைத் தலைகீழாக மாற்றியதால் தனது மனைவி சத்தியவதிக்குப் பிறந்த சமதக்கினியை மட்டும் பிராமணனாக ஏற்றுக்கொண்டு சத்தியவதியின் தாய்க்குப் பிறந்த விசுவாமித்திரனை ஒதுக்கியதாகவும் காண்கிறோம். சமதக்கினியின் தந்தை யார்? எந்த இலக்கியமும் தெளிவுபடுத்தவில்லை.
ரிக்வேதம்-3-53.24: "விசுவாமித்திர குலப் பாரதர்க்கும் வசிட்ட குலத் திரித்சூக்களுக்கும் பகை இருந்தது" எனக் குறிப்பிடுகிறது. இந்த ரிக்வேத வாசகத்தைக் கொண்டுதான் நமது வரலாற்றைக் காணவேண்டும். காண்போம். 

 http://nhampikkai-kurudu.blogspot.com

Is Cannabis Really That Bad?

Though some studies point to negative consequences of pot use in adolescents, data on marijuana’s dangers are mixed.
By Sabrina Richards 
Flickr, PabloEvans
Marijuana is a tricky drug, alternately demonized as a gateway drug and lionized for its medical promise. And while the juries remain out on both sides of the coin, one thing is clear: its use is on the rise. According to the US Department of Human Health and Services, the number of people in the United States who admit to smoking pot in the last month climbed from 14.4 million in 2007 to over 18 million in 2011.
This increase may in part be due to the lack of strong evidence supporting the suspected risks of cannabis use. Indeed, though marijuana smoke carries carcinogens and tar just as tobacco smoke does, definitive data linking marijuana to lung damage is lacking. And a recent long-term study that seemed to conclusively link chronic marijuana initiated in adolescence to a lowered IQ in New Zealanders was quickly challenged by a counter-analysis that pointed to socioeconomic status as a confounding factor. According to survey data from the Centers for Disease Control and Prevention, cannabis use increases in teenagers as marijuana’s perceived risks decline, and researchers—and undoubtedly some parents—are anxious to get to the bottom of the matter.
Take a deep breath
In 2012, a study at the University of California, San Francisco (UCSF) calculated that even smoking a single joint every day for 20 years might be benign, though most participants only smoked two or three joints each month. “I was surprised we didn’t see effects [of marijuana use],” said UCSF epidemiologist Mark Pletcher, who led the study.
One assessment of various epidemiological studies points to small sample size and poor study design as reasons for scientists’ inability to nail down a link between cannabis and cancer risk. But some suspect that such a link doesn’t exist, and that marijuana may even have cancer-preventive effects. A 2008 study, for example, suggested that smoking marijuana may reduce the risk of tobacco-associated lung cancer, calculating that people who smoke both marijuana and tobacco have a lower risk of cancer than those who smoke only tobacco (though still a higher risk than non-smokers).
But even Pletcher isn’t sanguine about marijuana’s effects on the lungs, and suspects that there may still be long-term lung damage that can be hard to detect. “We really can’t reassure ourselves about heavy use,” he explained.
Your brain on drugs
There is some evidence to suggest that stoned subjects exhibit increased risk-taking and impaired decision-making, and score worse on memory tasks—and residual impairments have been detected days or even weeks after use. Some studies also link years of regular marijuana use to deficits in memory, learning, and concentration. A recent and widely discussed report on the IQs of New Zealanders followed since birth found that cannabis users who’d started their habit in adolescence had lower IQs than non-users.
In this study, led by researchers at Duke University, “you could clearly see as a consequence of cannabis use, IQ goes down,” said Derik Hermann, a clinical neuroscientist at the Central Institute of Mental Health in Germany who was not involved in the research.
But not 4 months later, a re-analysis and computer simulation at the Ragnar Frisch Center for Economic Research in Oslo countered the Duke findings. Ole Rogeberg contended that socioeconomic factors, not marijuana use, contributed to the lower IQs seen in cannabis users.
Rogeberg’s conclusion counters a sizeable literature, however, which supports a link between pot use and neurophysiological decline. Studies in both humans and animals suggest that people who acquiring a marijuana habit in adolescence face long-term negative impacts on brain function, with some users finding it difficult to concentrate and learn new tasks.
Notably, most studies on the subject suggest that while there may be negative consequences of smoking as a teen, users who begin in adulthood are generally unaffected. This may be due to endocannabinoid-directed reorganization of the brain during puberty, Hermann explained. The intake of cannabinoids that comes with pot use may cause irreversible “misleading of the neural growth,” he said.
In addition to the consequences for intelligence, many studies suggest that smoking marijuana raises the risk of schizophrenia, and may have similar effects on the brain. Hermann’s group used MRI to detect cannabis-associated neuron damage in the pre-frontal cortex and found that it was similar to brain changes seen in schizophrenia patients. Other studies further suggest that weed-smoking schizophrenics have greater disease-associated brain changes and perform worse on cognitive tests than their non-smoking counterparts.
But much of this research can’t distinguish between brain changes resulting from marijuana use and symptoms associated with the disease. It’s possible that cannabis-smoking schizophrenics “might have unpleasant symptoms [that precede full-blown schizophrenia] and are self-medicating” with the psychotropic drug, said Roland Lamarine, a professor of community health at California State University, Chico. “We haven’t seen an increase in schizophrenics, even with a lot more marijuana use.”
In fact, other research suggests that cannabis-using schizophrenics score better on cognitive tests than non-using schizophrenics. Such conflicting reports may be due to the varying concentrations—and varying effects—of cannabinoids in marijuana. In addition to tetrahydrocannabinol (THC), a neurotoxic cannabinoid that is responsible for marijuana’s mind-altering properties, the drug also contains a variety of non-psychoactive cannabinoids, including cannabidiol (CBD), which can protect against neuron damage. Hermann found that the volume of the hippocampus—a brain area important for memory processing—is slightly smaller in cannabis users than in non-users, but more CBD-rich marijuana countered this effect.
A deadly cocktail?
While data supporting the harmful effects of marijuana on its own are weak, some researchers are more worried about the drug in conjunction with other substances, such as tobacco, alcohol, or cocaine. Some studies suggest, for example, that marijuana may increase cravings for other drugs, leading to its infamous tag as a “gateway drug.” A study published earlier this month supported this theory when it found that, at least in rats, THC exposure increases tobacco’s addictive effects. Furthermore, marijuana may not mix well with prescription drugs, as cannabis causes the liver to metabolize drugs more slowly, raising the risk of drug toxicity.  
Despite these concerns, however, Lamarine thinks it’s unlikely that the consequences of cannabis use are dire, given the amount of research that has focused on the subject. “We’re not going to wake up tomorrow to the big discovery that marijuana causes major brain damage,” he said. “We would have seen that by now.”
Posted by
Robert Karl Stonjek

U.S. vets with Gulf War Syndrome need individualized treatment, report says



U.S. vets with Gulf War Syndrome need individualized treatment, report saysThe Institute of Medicine calls the syndrome a 'very real, highly diverse' condition.
(HealthDay)—A one-size-fits-all approach to treating U.S. veterans with Gulf War Syndrome does not work, and therapy needs to be tailored to meet each patient's needs, according to a new Institute of Medicine report released Wednesday.
The document—written as part of the institute's congressionally mandated Gulf War and Health series—evaluates the various treatments for Gulf War Syndrome in veterans of the 1991 conflict and recommends best approaches to managing their care.
The official name for Gulf War Syndrome is chronic multisystem illness (CMI), which is defined as having symptoms in at least two of six categories—fatigue, mood and cognition (thinking ability and memory), musculoskeletal, gastrointestinal, respiratory and neurologic—for at least six months.
The condition affects at least one-third of veterans of the 1991 Persian Gulf War. Similar symptoms have been reported in many military personnel who served in the more recent wars in Iraq and Afghanistan.
"Based on the voluminous evidence we reviewed, our committee cannot recommend using one universal therapy to manage the health of veterans with chronic multi-symptom illness, and we reject a one-size-fits-all treatment approach," committee chairman Bernard Rosof, chairman of the board of directors at Huntington Hospital, in Huntington, N.Y., said in an institute news release. "Instead, we endorse individualized health care management plans as the best approach for treating this very real, highly diverse condition."
The report listed many treatment approaches that might help these veterans, including certain antidepressant drugs and cognitive behavioral therapy. Other possibilities mentioned for further research include biofeedback, aerobic exercise and acupuncture.
The U.S. Department of Veterans Affairs should adopt a new strategy of creating "CMI champions" to help its health care providers better assist Gulf War Syndrome patients, who often have complex symptoms and needs, the report said.
To improve the government's ability to identify veterans with Gulf War Syndrome, patients' electronic medical records should prompt health care providers to ask patients about possible symptoms, the report recommended.
In addition, veterans should undergo a comprehensive health examination immediately after they leave active duty, and the results of these exams should be available to health care providers both within and outside the VA health system to ensure continuity of care.
The cause or causes of Gulf War Syndrome will never fully be determined, the report said, but this does not mean that veterans' reports of symptoms are not legitimate.
More information: The U.S. Department of Veterans Affairs has more about Gulf War veterans' illnesses.
Copyright © 2013 HealthDay. All rights reserved.
"U.S. vets with Gulf War Syndrome need individualized treatment, report says." January 23rd, 2013. http://medicalxpress.com/news/2013-01-vets-gulf-war-syndrome-individualized.html
Posted by
Robert Karl Stonjek

பிரபஞ்சன்: எப்போதுமிருக்கும் நட்பு - எஸ்.ரா

அலைந்து திரிந்த நாட்களில் எழுத்தாளர்களை வைத்தே சென்னை நகரின் ஒவ்வொரு பகுதியையும் பிரித்திருந்தேன். உதாரணத்திற்கு அசோகமித்திரன் என்பது தி.நகர். திருவல்லிக்கேணி என்பது ஸ்ரீரங்கம்கண்ணன், ராஜமார்த்தாண்டன், மயிலாப்பூர் என்பது சி.மோகன், திலீப்குமார், லஸ்கார்னர் என்றால் நாகார்ஜுனன், லாசரா என்பது அம்பத்தூர், நங்கநல்லூர் என்பது வண்ணநிலவன், மற்றும் மா. அரங்கநாதன், மந்தைவெளி என்றால் சுகுமாரன், சாருநிவேதிதா, நந்தனம் என்றால் சா.கந்தசாமி, டிராட்ஸ்கி மருது, கே.கே.நகர் என்றால் வெளி ரங்கராஜன்praban, ஆழ்வார்பேட்டை என்றால் கணையாழி அலுவலகம் மற்றும் இ.பா, நுங்கம்பாக்கம் பிரமீள், கொட்டிவாக்கம் ந.முத்துசாமி, இந்த வரிசையில் ராயப்பேட்டைக்கு பிரபஞ்சன்.
இப்படிப் பகுதி வாரியாகப் பிரித்துக்கொண்டதற்கான முக்கிய காரணம் அந்தப் பகுதிக்குள் பிரவேசித்தவுடன் மேற்கண்ட எழுத்தாளர்களில் எவரையாவது சந்தித்துப் பேசி எப்படியாவது அவர்கள் செலவில் சாப்பாடு காபி என்று ஒரு நாளை ஓட்டிவிடலாம் என்பதுதான். அநேகமாக  எழுத்தாளர்கள் எதிர்பாராத நேரங்களில் அவர்கள் வீட்டை முற்றுகையிட்டு அவர்களது மனவிருப்பம் பற்றிய கவலையின்றிக் கேட்டுவாங்கி காபி சாப்பிட்டு இலக்கிய விவாதம் வம்பு செய்த நாட்கள் அவை.
வந்தேறியாக சென்னை மாநகரில் சுற்றிக்கொண்டிருந்தபோது போக்கிடம் கிடையாது.  இலக்கியம் பேசுவது, இலக்கியவாதிகளைச் சந்திப்பது என்ற இரண்டு விஷயங்களைத் தவிர வேறு நோக்கங்களும் கிடையாது.
அப்படி வெயிலேற நடந்து திரிந்த நாட்களில் தன் அறையின் கதவை எப்போதும் நண்பர்களுக்காகத் திறந்து வைத்திருந்தவர் பிரபஞ்சன். பதினைந்து வருடங்களுக்கு முன்பு சென்னை நகரின் வெவ்வேறு மேன்ஷன்களில் பிரபஞ்சன் தங்கியிருந்த நாட்களிலும் சரி அரசுக் குடியிருப்பு கிடைத்து பீட்டர்ஸ் காலனிக்கு மாறிய பிறகும் சரி பிரபஞ்சனின் வீடு எப்போதுமே நண்பர்களுக்கான புகலிடவெளி தான்.
அன்றிலிருந்து இன்று வரை அவர் தனித்திருந்து நான் கண்ட தேயில்லை. எப்போதும் யாராவது  சில நண்பர்கள் அவரோடு இருப்பார்கள். உற்சாகமான பேச்சும் சிரிப்பும் நிரம்பி வழியும் இடம் அவரது வசிப்பிடம்
சென்னையின் முக்கிய மேன்ஷன்கள் அத்தனையும் அறிந்தவர் பிரபஞ்சன் ஒருவரே. அதிலும் திருவல்லிக்கேணி, மேற்குமாம்பலம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, தி.நகர் என்று அவர் வெவ்வேறு பகுதிகளில் இருந்த மேன்ஷன்களில் வாழ்ந்திருக்கிறார். அந்த நாட்களைப் பற்றி அவர் நினைவு கூறும்போது ஆயிரத்தொரு இரவுக் கதைகளை விடவும் அதிகமான கதைகள் பிரபஞ்சனிடம் எழுத இருக்கின்றன என்று தோன்றும்.
பேச்சு, உபசரிப்பு, நண்பர்களின் மீதான இயல்பான அக்கறை என்று  தன்னைச் சுற்றியுள்ளவர்களைத் தொடர்ந்து மகிழ்ச்சி கொள்ளச் செய்ய சிலரால் மட்டுமே முடியும். அப்படி நான் கண்டவர்களில் மிக முக்கியமானவர் பிரபஞ்சன்.
தமிழ் இலக்கியம், சினிமா, பத்திரிகை, தான் சந்தித்த மனிதர்கள் என்று அவர் விவரிக்கும் எதிலும் அடக்க முடியாத சிரிப்பு பீறிடும். குரலை மிக லாவகமாகவும் உயர்த்தாத முகபாவங்களுடனும் அவர் விவரிக்கும் அழகு அற்புதமானது.
சாகித்ய அகாதமி பரிசு, பாஷா பரிஷித் பரிசு உள்ளிட்ட பலமுக்கிய பரிசுகளைப் பெற்றிருந்தபோதும் தன்னைப் பற்றிய மிகைபாவனை எதுவுமின்றி எளிமையாகப் பழகக்கூடியவர். அவரது வீடு நிறைய புத்தகங்களுடன் பெரிய நூலகம் போலிருக்கும். முறையாக இசை பயின்றவர். இசையைப் பற்றி அவரது உரையாடல்களைக் கேட்பதே சங்கீதமாக இருக்கும்.
சென்னையின் மேன்ஷன்களில் அழையாத விருந்தாளியாக ஒளிந்து தங்கி நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தேன். அதிலும் நண்பன் ராஜகோபால், ஸ்ரீரங்கம் கண்ணன் போன்றவர்களின் அறையில் இரவில் தங்கிக் கொள்வதும் பகலில் கால்போன சாலையில் சுற்றியலைவதுமே அன்றாடச் செயல்பாடு.
வாரம் ஒரு நாள் நிச்சயம் பிரபஞ்சன் அறைக்கு போய்விடுவேன். சில நாட்கள் காலை எட்டு மணிக்குத் துவங்கி இரவு பன்னிரண்டு, இரண்டு மணி வரை  அவரோடு இருப்பேன். அன்றாடச் செலவிற்குக்கூட என்னிடம் காசு இல்லாதது போலவே அவரிடமும் காசு இல்லாமல் இருக்கக்கூடும். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார். பிரபஞ்சன் கையில் பணம் வந்து சேர்ந்தால் அடுத்த சில மணி நேரங்களில் பறந்தோடிவிடும்.
எழுத்தாளர்களுக்கு ஆயிரம் பக்க நாவல் எழுதுவதைவிடவும் பெரிய சவால் பதிப்பாளர்களிடமிருந்து மனம்நோகாமல் பேசி ராயல்டி தொகையை வாங்குவது. எளிதில் பணம் கைக்கு வந்து விடாது. இதில் பெரிய எழுத்தாளர் சின்ன எழுத்தாளர் என்ற பேதம் கிடையாது. அப்படியே பெரிய பதிப்பகம் சின்னப் பதிப்பகம் என்ற பேதமும் கிடையாது. அந்த சவாலில் அதிர்ஷ்டவசமாக வென்று கையில்  சிறிய ராயல்டி தொகை வந்தவுடன் பிரபஞ்சனின் கனவுலகம் விழித்துக் கொண்டுவிடும்.
நண்பர்களைத் தேடி அழைத்து உபசரித்து, நல்ல உடை,  விரும்பிய புத்தகங்கள், இசைநாடாக்கள் என்று அவர் கடைசிப் பைசாவரை செலவு செய்துவிட்டு எப்போதும் போலவே எளிமையாக சாலையின் ஓரங்களில் மெதுவாக நடந்தபடியே, சென்னை நகரின் பரபரப்பைத் தனக்குள் ஒரு போதும் நிரப்பிக் கொள்ளாமல் தன்னியல்பாக வீடு திரும்புவதைக் கண்டிருக்கிறேன். காலைச் சுற்றும் பிரச்சினைகள் நிரம்பிய மாநகரில் எப்படி இவரால் எதையும் இயல்பாகச் சந்தித்து பதற்றம் அடையாமல் கடந்து செல்ல முடிகிறது என்று வியப்போடு பார்த்துக் கொண்டிருப்பேன்.
பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதுவது. புத்தகங்களுக்கான ராயல்டி தவிர அவருக்கென நிரந்தரமான மாத ஊதியம் கிடையாது.  குடும்பம் பாண்டிச்சேரியிலும் அவர் சென்னையிலுமாகப் பல வருடங்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார். சென்னையில் அவர் வசிக்க வேண்டிய ஒரே காரணம் இலக்கியத்தின் மீதான விருப்பமும் நண்பர்களைச் சந்திக்க முடியும் என்ற ஆசையும் மட்டுமே.
பாண்டிச்சேரியில் பிரபஞ்சனைச் சந்தித்தால் முற்றிலும் வேறு மனிதரைச் சந்திப்பது போல இருக்கும். அவர் பிறந்து வளர்ந்த நகரம் என்பதால் கையில் ஓடும் ரேகைகள் போல பாண்டிச்சேரியின் அகம்புறம் அவருக்குத் துல்லியமாகத் தெரியும். குறிப்பாக அதன் நூற்றாண்டுகால வரலாறு, இன்றைய நிலை, அங்குள்ள குடியிருப்புகள், வீதிகள், அதன் பின்னால் உள்ள மறக்கமுடியாத நிகழ்வுகள் என்று சொல்வதற்கு நிரம்பிய விஷயங்கள் அவரிடம் உள்ளன. பாண்டிச்சேரியைப் பற்றி அவரது இலக்கியப் பதிவுகள் மிக முக்கியமானவை.
ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் சரித்திரச்சான்றுகளாக மட்டும் அறியப்பட்டு வந்ததை, தனது வானம் வசப்படும் நாவலின் வழியே முக்கியமான புனைகதையாக்கி தமிழின் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நாவல்களில் ஒன்றாக எழுதிக்காட்டியவர் பிரபஞ்சன்.
இன்றைக்குப் பரவலாக ஆனந்தரங்கம்பிள்ளையின் டயரி பொது வாசகர்களால் வாசிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் பிரபஞ்சன் என்றே சொல்வேன். இந்த நாட் குறிப்புகள் பற்றித் தொடர்ந்து சொல்லியும் எழுதியும் வந்ததோடு இதைப் புதுச்சேரி அரசின் உதவியோடு பதிப்பிக்கும் பணியிலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார் பிரபஞ்சன். புதுச்சேரியின் வரலாற்றைப் பாட நூலாக எழுதியதிலும் இவரது பங்கு மிக முக்கியமானது.
புனைகதைகள், கட்டுரைகள் என்பதில் மட்டும் சஞ்சாரம் கொள்ளாமல் தன்னைச் சுற்றிய அன்றாட வாழ்வின் நெருக்கடிகள், சமகால அரசியல், கடந்த கால சரித்திரத்தின் உண்மையை அறியும் மீள்வாசிப்பு, உலக இலக்கியத்தின் மீதான தொடர்ந்த வாசிப்பு, சமூக மாற்றங்களுக்கான இயக்கங்களோடு சேர்ந்து செயல்படுவது என்று அவரது விருப்பம் பன்முகப்பட்டது.
ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு மட்டுமில்லை. தனக்குப் பிடித்த கதை அல்லது நாவல் என்று எதைப் பற்றியும், சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் மிகுந்த பாராட்டுடன் சொல்லக்கூடியவர் பிரபஞ்சன். அதை எழுத்தில் பதிவு செய்வதோடு ஏதாவது ஒரு நிகழ்வில் பேசியும்விடுவார். அப்படி அவரால் கொண்டாடப்பட்ட எழுத்தாளர்கள் கவிஞர்கள் நிறைய உண்டு. இதில் சிலர் தங்களது முதல் கதையை மட்டுமே எழுதியவர். சிலரை அவர் சந்தித்ததுகூட இல்லை. ஆனால் படைப்பின் வழியாக அவர் கொள்ளும் ஆனந்தத்தை உடனே மற்றவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துவிடுவார்.
இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சமீபத்தில் அவர் பவா செல்லதுரையின் முதல்சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதியுள்ள முன்னுரை. நவீனச் சிறுகதைகளில் புதிய வரவாக உள்ள பவா செல்லதுரையின் சிறுகதைகளை மதிப்பிட முயன்ற பிரபஞ்சன் தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றையே நாலைந்து பக்கங்களில் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
பவாவின் சிறுகதைகளை எவ்வளவு ரசனையோடு வாசித்திருக்கிறார் என்பதற்கு  இந்த வரிகளையே சான்றாகச் சொல்லலாம்.  பவாவின் கதை உலகம், ரசனையோடு வடிவமைக்கப்பட்ட, எளிமையின் பேரழகோடு செய்யப்பட்ட உணவுவிடுதியின் குறைந்த வெளிச்சம் பழக்கப்பட்டுப் பின் இதமும் ஆசுவாசமும் தரும் ஒளிப்பரப்பாவது போலக் கதைகள் ஒவ்வொன்றும் வாசித்து முடிந்த பின் தரும் கலை இதம் வசீகர அனுபவங்கள் நிலைபேறுடைய பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
ஒரு எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பை இப்படி மனம் நிறைந்து பாராட்ட எத்தனை பேரால் முடியும். அவ்வகையில் பிரபஞ்சன் ஒரு முன்னோடி.
பவாவின் கதைகளை மட்டுமில்லை. தமிழ் நவீனச் சிறுகதையுலகின் முன்னோடிப் படைப்பாளிகளைப் பற்றிய அவரது அவதானிப்பு மிக முக்கியமானதாகும். இதில் ஜானகிராமனைப் பற்றிய அவரது பதிவு திரும்பத் திரும்ப என்னை வாசிக்க வைத்தது. ஜானகி ராமன் எந்த அளவு பிரபஞ்சனின் அகவுலகிற்கு நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பதற்கு இந்த வரிகளே சாட்சி.
தமிழ்மொழியில் தனிப்பெரும் வியக்தி தி.ஜானகிராமன், மனித அழகுகள் ஒவ்வொன்றாகப் பொறுக்கிச்சேர்த்து அழகைப் பேரழகாக மாற்றிய பெரும்கலைஞர் தி.ஜா. வார்த்தை அழகு, உச்சரிக்கும் அழகு, நிற்கும் அழகு, நிகுநிகு உடம்பழகு, பாட்டு அழகு, மனப்பரிமள வாசனை அழகு, காமம் விகசித்துச் சூரியனையே போகத்துக்கு அழைக்கும் அழகு, என அனைத்து அழகுகளாலும்  பெண்களைப் படைத்த ஜம்பொன்குயவர் அவர். பெண்களின் விகாசம் தாங்காமல் ஆண்களைத் தற்கொலை செய்ய வைத்த நேசத்துக்குரிய தன்பால் துரோகி அவர், அதனாலே அவரை எனக்குப் பிடிக்கும்.
இது போலவே தனக்குப் பிடிக்காத விஷயத்தை அவர் நேரடியாகப் பிடிக்கவில்லை என்று சொல்லும் மனவுறுதி கொண்டவர். அவரோடு ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். தன்னை எந்த விழாவிற்கு அழைத்தாலும் அந்தப் புத்தகத்தை முழுமையாக வாசித்து அதன் நுட்பங்களை ஒன்றுக்கு இரண்டுமுறை அவதானித்து அழகாகப் பேசக்கூடியவர்.
அன்று மேடைக்கு வரும்வரை அமைதியாக இருந்தார். புத்தக வெளியீடு நடந்தது. அவரைப் பேசவரும்படியாக அழைத்தார்கள். மேடைக்கு வந்த பிரபஞ்சன் அந்தக் குறிப்பிட்ட புத்தகம் தனக்குப் பிடிக்கவில்லை என்பதோடு அதை எழுதியவர் தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமான சுயபெருமை செய்துகொண்டிருக்கிறார். புத்தகம் மிகவும் குப்பையானது, அபத்தமும் அர்த்தமற்ற உளறல்களும் நிரம்பியது என்பதால் அதைப் பாராட்டிப் பேச, தன்னால் இயலவில்லை. விரும்பி அழைத்த காரணத்திற்காக வந்திருந்தேன். தொடர்ந்து இதைப் பாராட்டிப் பலர் பேசுவதைக் கேட்க எனக்கு விருப்பமில்லை, கிளம்புகிறேன் என்று மேடையில் அந்தப் புத்தகத்தை வைத்துவிட்டு சபையை விட்டு வெளியே கிளம்பி நடந்தார். சபை அதிர்ந்து போனது.
சாலையில் அவரோடு நடந்த படியே அந்த எழுத்தாளர் உங்கள் மீது கோபம் கொள்வாரே என்று கேட்டேன். அதற்கு பிரபஞ்சன்  முதலில் எழுத விரும்புகின்றவன் தன்னைப் பற்றிய சுயபெருமைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கையில் பணமிருந்தால் மட்டும் எல்லாவற்றையும் வாங்கி விட முடியாது. இப்போது அதை அவர் புரிந்துகொண்டிருப்பார் என்றபடியே எதுவும் நடக்காதவர் போல இயல்பாக எங்காவது காபி சாப்பிடலாமா என்று கேட்டார் பிரபஞ்சன்.
தன் வாசிப்பின் வழியே தான் அடையும் உண்மைகளை அவர் ஒருபோதும் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. அதுபோலவே வாசிக்கக் கிடைக்காத புத்தகங்களுக்காக வெளிப்படையாக ஆதங்கப்படுகின்றவரும்கூட. சில வேளைகளில் அவரைத் தேடிவருகின்றவர்கள் கையில் வைத்துள்ள புத்தகங்களை ஆசையுடன் வாங்கிப் புரட்டிப் பார்த்து இதைப் படிக்காமல் விட்டுவிட்டேனே எங்கே கிடைக்கிறது என்று உடனே பதிப்பக முகவரியைக் குறித்துக்கொள்வதைக் காணும்போது வீடு நிறைய புத்தகங்களுடன் வாழ்ந்துகொண்டிருந்தும் எதற்காக இவ்வளவு ஆதங்கப்படுகிறார் என்று தோன்றும்.
தன் உடல் உபாதைகள் பற்றியோ, குடும்பச் சூழல் குறித்தோ அதிகம் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடியவரில்லை. மிக அரிதாக அதைப்பற்றிப் பேசக்கூடியவர். அதுவும் எவ்விதமான எதிர் பார்ப்புகளும் அற்றதாக இருக்கும்
பிரபஞ்சன் நினைத்திருந்தால் அவரது நண்பர்கள் ஆர்வலர்களின் வழியே அதிகாரத்தின் உச்ச நிலைக்கு அடைந்திருக்கக்கூடும். பெரிய பதவிகள் பட்டங்கள் பெற்றிருக்கக் கூடும். ஆனால் அதை முற்றிலும் நிராகரித்தவர். கிடைக்கவில்லையே என்ற குறைகூட இல்லாதவர்.
பிரபஞ்சனின் சிறுகதைகள் தனித்துவமானவை. அன்றாட வாழ்வில் நெருக்கடிகளையும் அந்த நெருக்கடிக்கு உள்ளேயும் மனிதர்களின் மீதமிருக்கின்ற அன்பையும் வெளிப்படுத்தக்கூடியவை. கதா பாத்திரங்களின் மனோநிலையைப் பின்தொடர்ந்து சென்று எழுதக்கூடியது அவரது எழுத்து வகை.
மெல்லிய கேலியும் விமர்சனமும், குரலை உயர்த்தாமல் செல்லும் கதை சொல்லும் முறையும் அவருக்கு உண்டு.  வாழ்க்கை கருணையற்றது என்பது அவரது கதைகளின் சில நிகழ்வுகளின் வழியே திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. ஆனால் இப்படிக் கருணையற்ற வாழ்வின் ஊடாகவும் சிலர் தங்களது சுய அடையாளங்களை இழப்பதில்லை. அவரது ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள், மனுஷி பிரும்மம், குமாரசாமியின் பகல்பொழுது, மரி என்கிற ஆட்டுகுட்டி போன்றவை எனக்கு விருப்பமான கதைகள்.
sra343 பிரபஞ்சனுக்கு உருவாகும் பிரச்சினைகள் ஆச்சரியமானவை. ஒருநாள் நானும் நண்பன் ராஜகோபாலும் அவரைச் சந்திப்பதற்காக பீட்டர்ஸ்காலனி வீட்டிற்குச் சென்றிருந்தோம். படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் வரவேற்று மாடி ஏறி, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். எங்கே இறங்கிச் செல்வதாக இருந்தார் என்று நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை. ஒரு மணி நேரப் பேச்சிற்குப் பிறகு காபி சாப்பிடப் போகலாமா என்றார்.  சரி என்று கிளம்பிய போது அங்குமிங்குமாகத் தேடிவிட்டுச் சொன்னார்,
"ஒரு மணி நேரம் முன்னாடி என்னை ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசுவதற்கு அழைப்பதற்காக நாலு பேர் வந்திருந்தார்கள். அதில் யாரோ ஒரு ஆள் என்னுடைய புதுச் செருப்பைப் போட்டுவிட்டு சென்றுவிட்டான். இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் ஆசைப்பட்டு புதிதாகச் செருப்பு வாங்கியிருந்தேன்.  செருப்பைப் போட்டுக் கொண்டுபோன ஆள் பழைய செருப்பு எதையாவது விட்டுச் செல்வான் இல்லையா அதையும் தேடிப் பார்த்துவிட்டேன். திருடிக் கொண்டுபோன ஆள் செருப்பே போட்டுவரவில்லை போல. அவனுக்கு என்னுடைய சைஸ் செருப்பு எப்படி சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. சரி திருடுவது என்று முடிவு செய்தபிறகு சைஸ் பார்த்தா திருட முடியும். ஒரு எழுத்தாளன் வீட்டில் திருடுவதற்குச் செருப்பைத் தவிர ஒன்றும் கிடைக்கவில்லை என்பதுதான் நிஜமில்லையா? வெறுங்காலோடு நடக்கப் பழகிக்கொள்ள வேண்டியது. அதை நிச்சயம் இன்னொரு ஆள் திருட முடியாது இல்லையா" என்று சொல்லிச் சிரித்தார்.
நடந்து சென்று சரவணபவனில் காபி சாப்பிட்டோம். அவரை உணவகத்தில் உள்ளவர்கள் அறிந்திருந்தார்கள். அவரது நாவின் சுவைக்கு ஏற்ப காபியைத் தயாரிக்கும் நுட்பம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. வரும்வழியில்  சில வருடங்களுக்கு முன்பாகத் தனக்கு நடந்த  சம்பவம் ஒன்றை விவரித்துச் சொல்லத் துவங்கினார்.
"இலக்கியக் கூட்டத்திற்கு அழைப்பதற்கு வருகின்றவன் இப்படியிருக்கிறான் என்றால் அழைத்து போனவன் ஒருவன் கதையிருக்கிறது. அதையும் கேளுங்கள். சாகித்ய அகாதமி விருது கிடைத்தவுடன் கடலூர்  அருகில் உள்ள ஒரு இலக்கிய அமைப்பு எனக்கு ஒரு பாராட்டு விழா நடத்துவதாக அழைத்தது. நானும் கலந்துகொண்டேன்.
விழா நடப்பதாகச் சொன்ன இடத்திற்குப் போனபோதுதான் தெரிந்தது அது ஒரு இரண்டு தெருக்கள் சந்திக்குமிடம் என்று. நான் போனபோதுதான் மேடை அமைத்துக்கொண்டிருந்தார்கள். எப்படியும் மூன்று மணிநேரமாகும் என்றதால் விழா நிர்வாகிகளைத் தேடினேன்.
எனக்காக அறை ஒன்று ஒதுக்கப்பட்டிருப்பதாக போனில் சொல்லியிருந்தார்கள். அதனால் அங்கே சென்று காத்திருக்கலாம் என்று தேடியபோது அமைப்பாளர்களில் ஒருவரையும் காணவில்லை. ஒரு வழியாகக் கண்டுபிடித்தபோது அறை கிடைக்கவில்லை என்பதால் டீக்கடை ஒன்றில் காத்திருக்கும் படியாகச் சொன்னார்கள்.
இரவு பத்து மணிக்குக் கூட்டம் ஆரம்பம் ஆனது. சிறுவர்கள் நடன நிகழ்ச்சி, உள்ளூர்ப் பிரமுகர்களின் வாழ்த்து முழக்கங்கள், ஆடல்பாடல் நிகழ்ச்சி என்று நீண்டு கொண்டிருந்ததேயன்றி பாராட்டுவிழா துவங்குவதற்கான அறிகுறியே இல்லை. இதில் வந்தவர்கள் இரவு உணவு தரவில்லை என்பதால் பசிவேறு காதை அடைக்கத் துவங்கியிருந்தது.
முடிவில் நள்ளிரவில் பாராட்டு விழா அரங்கேறத் துவங்கியது. ஆள் உயரப் பாராட்டுப் பத்திரம் ஒன்றை பிரேம் செய்து தந்தார்கள். அதை வாங்கிக்கொண்டு நன்றியுரை சொல்லிவிட்டு ஊருக்குப் புறப்படலாம் என்று நினைத்து வழிச்செலவிற்கான தொகைக்காக அழைப்பாளர்களைத் தேடினால் ஒருவரையும் காணவில்லை. கூட்டம் முடிந்த மறுநிமிசம் மாயமாக மறைந்து போய்விட்டார்கள்.
ஆள் உயரப் பாராட்டுப் பத்திரத்தைத் தூக்கிக்கொண்டு எப்படி நடப்பது என்று தெரியவில்லை.  பேருந்தில் இதை வைத்துக்கொண்டு எப்படி ஊருக்குப் பயணம் செய்வது என்று வேறு குழப்பமாக இருந்தது.
இங்கேயே ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டுப் போய்விடலாம் என்றாலும் எங்கே வைப்பது யாராவது பார்த்துவிட்டால் என்ன நினைப்பார்கள் என்றும் தோன்றியது. வேறுவழியில்லாமல் அந்தப் பாராட்டுப் பத்திரத்தைத் தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு நடந்தேன்.
இத்தனை ஆண்டுகாலம் தமிழில் எழுதி விருது வாங்கியதற்குக் கொடுக்கப்பட்ட தண்டனை இது தானோ என்று நினைத்தபடியே யாரும் அறியாமல் ஒரு விளக்குக்கம்பத்தின் அருகே வைத்துவிட்டு அவசர அவசரமாகப் பேருந்து பிடித்து பாண்டிச்சேரிக்குப் போய்ச் சேர்ந்தேன்.
ஆள் உயரப் பாராட்டுப் பத்திரம் செய்ய ஆசையிருந்தவர்களுக்கு அழைத்து வந்த எழுத்தாளருக்கு உணவு வாங்கித் தரவோ, வழியனுப்பி வைக்கவோ விருப்பமில்லை. பாராட்டுப் பத்திரத்தில் உள்ள வாழ்த்துப்பாடலை எழுதிய நபர், பிரேம் போட உதவிய நபர் என்று நாற்பது பெயர்கள் அதில் இருந்தது. அவர்கள் நோக்கம் தங்களைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்வது. அதற்கு நான் பலியானதுதான் வேடிக்கை" என்று உரக்கச் சிரித்தார்.
தனது அவமதிப்புகளைக்கூடப் பரிகாசமாக மாற்றிவிட முடியும் மனது அவருக்கு இருந்தது.
பிரபஞ்சன் முறையாகத் தமிழ் படித்தவர், சங்க இலக்கியம் துவங்கி காப்பியங்கள் வரை எதைப் பற்றிக் கேட்டாலும் விளக்கமாகச் சொல்லுவார். ருஷ்ய இலக்கியங்களைப் பற்றிப் பேசத் துவங்கினால் வியப்பும் பெருமையாக அவர்கள் படைப்புகளை விவரித்துக் கொண்டிருப்பார். அவரது அப்பா கள்ளுக்கடை வைத்திருந்த நாட்களைப் பற்றியும் சீட்டு விளையாட்டில் ஆர்வம் அதிகமாகி பகலிரவாக சூதாடிய மனிதர்களைத் தன் பிராயத்தில் கண்டதைப் பற்றியும் அவர் விவரிக்கும் போது இதை எல்லாம் இன்னும் எழுத்தில் முழுமையாக பிரபஞ்சன் கொண்டுவரவில்லையே என்று ஆதங்கமாக இருக்கும்.
நல்ல எழுத்தாளர் என்பது போலவே பிரபஞ்சன் ஆகச்சிறந்த பேச்சாளர். கூட்டத்தைத் தன் பேச்சில் மயக்கும் வித்தை அவரிடம் கைகூடியிருந்தது. பல்கலைக்கழக ஆய்வு அரங்கமாக இருந்தாலும், பொது நிகழ்வாக இருந்தாலும் அவர் பேச்சு எப்போதுமே சுவாரஸ்யமானது. பலமுறை அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். என்னுடைய புத்தக வெளியீட்டு விழாக்களில் அவர் பேசியிருக்கிறார்.
பிரபஞ்சன் நேர்த்தியான ஆடைகள் அணிவதிலும் தன் தோற்றப் பொலிவிலும் அக்கறை காட்டக் கூடியவர். எழுத்தாளர்களில் அவர் ஒரு அழகன் என்று நண்பர்கள்  சொல்வார்கள். அதை மெய்யாக்கும் விதமாக அவரது தோற்றத்தில் எப்போதுமே தனிவசீகரம் இருக்கும்.
நல்ல காபி, சிறந்த இசை, விருப்பமான புத்தகங்கள், நிறைய நண்பர்கள் இதுதான் பிரபஞ்சனின் உலகம். இன்றைக்கு அவரது அறைக்குச்  சென்றாலும்  யாரோ சில இளம் எழுத்தாளர்கள் வாசகர்கள் சந்தித்துப் பேசி விவாதித்து, தங்களைப் பகிர்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். இதற்கான முக்கிய காரணம் தன்னைத் தேடி வருகின்றவர்களிடம் அவர் காட்டும் நிஜமான அக்கறையும் தன் விருப்பங்களைப் பகிர்ந்துகொள்ளும் இயல்பான தன்மையும், புதிதாக எழுத வருகின்றவர்களை அழைத்துப் பாராட்டி, தொடர்ந்து எழுதச்சொல்லி உற்சாகப்படுத்தும் பாங்குமேயாகும்.
அவ்வகையில் பிரபஞ்சனின் இல்லம் நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கிய பகிர்வு வெளியாகும். அந்த அறை தந்த கதகதப்பும் உபசரிப்பும் எனக்குமட்டுமல்ல நண்பர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரது நினைவிலும் எப்போதும் தன் பசுமையோடிருக்கிறது. அவ்வகையில் பிரபஞ்சனின் இருப்பு எழுத்தாளனின் உயரிய தோழமை என்றே சொல்வேன்.
***
நன்றி: வாசகபர்வம் – உயிர்மை வெளியீடு

வால்மீகி இராமாயணத்தில் வரலாறு


உண்மை வரலாற்றை மறைக்க; இராமாயணப் புனைவுக்கு அடித்தளமாக விளங்கும் மந்தரை; கேகயியிடம் பரதனுக்குப் பட்டம் சூட்டக் கட்டாயப்படுத்துவதாகக் காணப்படும் நிகழ்வு எப்படிக்காட்டப்படுகிறது: திரு இராசாசி அவர்கள்: "முன்னொரு காலத்தில் உன்புருஷன் தசரச் சக்கரவர்த்தி தெற்கே சம்பரனோடு யுத்தம் செய்தது நினைவு இருக்கிறதா? நீயும் கூட இருந்தாயே? இந்திரனுக்கு உதவியாகப் போனான் அல்லவா உன் புருஷன்? வைஜயந்தி நகரத்து சம்பரனை இந்திரன் சமாளிக்கமுடியாமல் தசரதனுடைய உதவியை நாடினான். தசரதன் சென்று சண்டையிட்டு (இதன்பிறகான இராமாயணம் வரலாற்றை மறைக்க வேறு எங்கோ போய்விடுகிறது. போரின்முடிவு என்ன? தகவல்கள் இல்லை) உடம்பெல்லாம் காயப்பட்டு நினைவிழந்து போனான் அல்லவா? அப்போது அவனுடைய தேரை நீயே நடத்தி சாமர்த்தியமாக யுத்தகளத்திலிருந்து வெளியே கொண்டுபோய், அரசன் உடலில் பாய்ந்திருந்த அம்புகளையெல்லாம் மெதுவாக எடுத்து, நினைவு தெளியச்செய்து, அவன் உயிரைக் காப்பாற்றினாய். மறந்து விட்டாயா?" அப்போது அவன் என்னசொன்னான்? ' இரண்டு வரங்களைக் கேள், எதைக்கேட்டாலும் தருவேன்' என்று அவன் சொல்ல, 'எனக்கு வேண்டும்போது கேட்கிறேன் இப்போது வேண்டாம்' என்று நீ சொல்ல, 'அப்படியே' என்று அவன் கூறினான் அல்லவா? நீயே எனக்கு இதைச் சொல்லியிருக்கிறாய். நீ மறந்துவிட்டாய் நான் மறக்கவில்லை. அதைவைத்து இப்போது காரியத்தைச் சாதிக்கலாம்." என இராமாயணத்தில் உள்ளதைக் குறிப்பிடுகிறார்.
உண்மைவரலாற்றை அறியச் சிலசொற்களின் பொருளையும் படிமவடிவில் உள்ளவற்றுக்கான விளக்கங்களையும் அறிந்தாக வேண்டும். 2000 ஆண்டுகற்கு முற்பட்ட பழந்தமிழ்ப் பாடல்கள் திருத்திச் சிதைக்கப்பட்டிருப்பினும்; அகத்தியர்கள், அமணர், பிராமணர், அமணம், சந்திரகுப்தன், அலெக்சாந்தன், புத், சிவ், புத்தன், தீர்தங்கரர், மாவீர், இந்திரர்கள், வசிட்டர்கள், விசுவா மித்திரன் பரசுராமன் ரிஷி, மகரிஷி, ராஜரிஷி, பிரமரிஷி, க்ஷத்ரியர், க்ஷேத்ரியர், வைஷியர், சூத்ரர், சுரர், தேவர், அசுரர், ராட்சசர், அரக்கர், வஸு, சிரவஸு, திரிசிரவஸு, வைச்சிரவஸு, வஸுதேவன் போன்ற சொற்களும், பிறவும்; பெருமளவில் எவருடைய இயற்பெயரும், வழிபடு பெண்தெய்வங்களும், அவர்களது வரலாறுகளும் இல்லை. மேலும் பிராமணருடன் சேர்ந்த வடவர்; ல் ழ் ற் ன் போன்ற தமிழரின் மெய் எழுத்துக்கள் பயன்பாட்டுக்கு வந்தபிறகும் மேலும்சில குறில் எழுத்துக்களையும் ஒதுக்கிவிட்டு ள் ள் ர் ண் என்பவற்றையே இன்றும் பயன்படுத்துகின்றனர்; எவரும் இதனை உணர்ந்து சீராக்கவில்லை. அந்தணரையும் பிராமணரையும், முனிவரையும் ரிஷியையும் பிரித்தறியாத தமிழரும் வரலாற்றை அறியாத ஆய்வாளார் பலரும் குழப்பங்களை ஏற்படுத்தினர். இவைகுறித்த கருத்துக்களும் கட்டுரைகளில் தேவைப்படும் இடங்களில் வெளிப்படுத்தப்படும்.
இராமாயணம்; முதலில் பாலகாண்டம் அயோத்யாகாண்டம் ஆரண்யகாண்டம் கிஷ்கிந்தாகாண்டம் சுந்தரகாண்டம் யுத்தகாண்டம் என ஆறு காண்டங்களும்; பின்னர் ஏழாவதாக உத்தரகாண்டம் சேர்க்கப்பட்டதாகவும் வரலாற்றாளர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழன் கரிகால்சோழன்= இராமனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதாயினும்; உருவப்பல்தேர் சேத்சென்னி=தசரதனின் மகன் இராமன் காடாளவேண்டும் என கேகயி பிடிவாதமாக வேண்டுவதன் காரணம் என்ன? பரதன் நாடாளுவது குறித்து மணம் செய்தபோதே கேகயியின் மகனுக்கு மட்டுமே நாடாளும் உரிமை கொடுக்கப்படும் என்னும் நிபந்தனையை ஏற்றதாகவும், சம்பரன்=பிரகத்தனுடன் போரிட்டபோது பெற்ற வரங்களாலும் கேகயிக்குக் கட்டுப்பட்டுள்ளான் என எத்தனை காரணங்களை அடுக்கிய போதிலும் இராமன் காடேக வேண்டிய அவசியம் இல்லை எனக் காண்கிறோம். தக்கன்=இளஞ்சேத்சென்னியின் வேள்வியில் நிகழ்ந்த தகாத நிகழ்வுகளும், முசுகுந்தனின் வழிகாட்டலின்படி பரசுராமனால் நிகழ்த்தப்பட்ட; சமதக்கினியின் துணைவி ரேணுகா, கரிகால்=இராமனின் மனைவி ஸ்ரீ=திருமகள் மற்றும் ஏழு கன்னிப் பெண்களின் கொலைகளும்; பரசுராமனுக்கு எதிராக மக்கள் சமதக்கினியையையும் பார்கவ பிராமணரையும் கொலை செய்ததும், முசுகுந்தனுக்குத் துணை நின்ற பிரமணரின் தகா நடத்தைகளும் என; அனைத்தையும் மறைத்ததோடு, பார்கவ பிராமண சமதக்கினியின் கொலைக்குக் கரிகால்=இராமன்மீது குற்றம் சுமத்தி; மனுநீதிப்படி விதித்த 12ஆண்டு தண்டனை யையும் மறைக்கவே கேகயியை மிகக் கொடூரமாகக் காட்டிப் பல பொய்யான காரணங்களைக் கற்பித்துள்ளனர்.
மனு 11-75: "வேதமோதினவர்களாய் அக்னிஹோத்திரிகளாய் இருக்கிற மூன்றுவருணத்தரும் ஒழுக்கமில்லாபிராமணனை அக்ஞானத்தால் கொன்றுவிட்டால் தோசம்நீங்க ஜிதேந்திரியாளாய் கொஞ்சமாகப் புசித்துக்கொண்டு ஏதாவதொரு வேதத்தை முழுவதுஞ் சொல்லிக்கொண்டு நூறுயொசனைதூரம் யாத்திரைசெய்து, புன்னியந்தேடவேண்டும்"(நாடுகடத்தப்படுவான்)
11-78: "பன்னிரண்டு வருசம்வரை (நாடுகடத்தப்பட்டவன்) விதிப்படி சவுளம்செய்துகொண்டு, அவ்வூர் ஓரத்தில் இருக்கப் பட்ட மாட்டுத்தொழுவத்தில் இருந்து கொண்டு பசு, பிராமணர் இவர்களுக்குபகாரஞ் செய்துகொண்டு இருக்கவேண்டியது."
11-81: "இவ்விதமாக நாள்தொறும் உறுதியான விரதமுள்ளவனாய் மனதை அடக்கி, 12வருஷம் வரையில் ஸ்திரீ போகமில்லாமல் சீவித்தால்(உயிருடன் இருந்தால்) தோசத்தினின்றும் நீங்குவான்."
இவ்விதிகளால் பாதிக்கப்பட்ட இந்தியர் மற்றும் தமிழரின் வரலாற்றை எங்குமே காணமுடியாதது வியப்பாக உள்ளது.
பாலகாண்டத்தின் தொடக்கத்திலேயேயே இராவணேசுவரனால் துன்பமடைந்த தேவர்கள் இந்திர(முசுகுந்த)னுடன் நான்முக(விசுவாமித்திர)னை அடைந்து இராவண(நெடுஞ்செழிய)னிடமிருந்து தங்களைக் காக்கும்படி வேண்டியபோது; அங்குவந்த திருமால் தசரதனுக்கு மகனாகப் பிறந்து இராவணனை கொன்றுவருவதாகக் கூறினார் என உள்ளது. இதற்குக் காரணமாக ஒரு நிகழ்வும் இராமாயணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது; ஒருசமயம் பிருகுவின் மனைவியைத் திருமால் கொன்று விட்டார்; அதனால் திருமாலை மனிதனாகப் பிறந்து மனைவியை இழந்து வருந்தும்படி பிருகு சபித்துவிட்டார் என்பதாக. இது வரலாற்றை மறைக்கப் பொய்யாக எழுதிச் சேர்க்கப்பட்டது; பிருகு=சமதக்கினி தன் துணைவி ரேணுகாமீது ஐயம்கொண்டு அவளது தலையை வெட்டிவரும்படி உத்தரவிட்டபோது எவரும் முன்வராததால் உத்தரவை ஏற்ற பரசுராமன் ரேணுகாவின் தலையை வெட்டிவந்தான்; பின்னர் திருமால்=கரிகாலின் மனைவியின் தலையையும் வெட்டிவிட்டு உடலை எடுத்துச்சென்ற போது, தடுக்கவந்த ஏழு கன்னிப்பெண்களையும் கொலைசெய்துவிட்டுச் சென்றான். இவற்றை முற்றிலுமாக நீக்கிவிட்டனர்.
அடுத்து; தசரதன் செய்த யாகம் உள்ளது; அதில் தனது மாபெரும் நாட்டைக் காக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் படிமவடிவில் உருவகங்களாகக் காட்டப்பட்டுள்ளன. இப்படிமங்களையும் உருவகங்களையும் சரியாக உணர்ந்து பொருள்காண எந்த வரலாற்றாளராலும் இயலவில்லைபோல் தெரிகிறது. தசரதன் செய்த யாகத்தைப்போன்றே; அவனது மனைவியின் அண்ணன் சந்திரகுப்தனைப் பலி உயிராக்கித் தேவர்களும் முசுகுந்தனின் தந்தையான அன்றைய இந்திர=பூர்ண காசியப்பன் =அலெக்சாந்தனும் நடத்திய யாகம் ரிக்வேதத்தில் உள்ளது. இதனை மாபாரத வரலாற்றில் விரிவாகப் பின்னர் காண்போம்.
இராசகோபாலாச்சாரி - நூல் இராமாயணம்: வெளியீடு வானதி பதிப்பகம் ஜனவரி 1973: தகவலும் பக்க எண்ணும்: (இயற்றப்பட்டகாலத்தில் மாற்றி மறைக்கப்பட்டவை கொட்டை எழுத்திலும் அடைப்புக்குள்ளும் காட்டப்பட்டுள்ளன)
இராசாசி: 'நான் இராமாயணம் எழுதுவது வால்மீகி ராமாயணத்தின்படி 166; வால்மீகி, இராமனை ஈஸ்வர அவதாரமாக வைத்து எழுதவில்லை11; ஒரு வீர புருஷனாகத்தான் சித்தரிக்கப்படுகிறான்; அவதாரமாகவல்ல; எல்லாப் பாத்திரங்களும் அபூர்வ குணம்கொண்ட மானிடர்கள்167;
விசுவாமித்திரர் முனிவராவதற்கு முன்பு கௌசிக(குசிக, கோசல) ராசாவாக இருந்தவர்; தனது சைந்யத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தவர்; வசிட்டரின் சாபத்தால் வருந்திய இச்சவாகு குலச் சண்டாளன்(மனுநீதிப்படி 12 ஆண்டுகள் தண்டிக்கப்பட்ட கிருஷ்ணன்=கரவேலன்) திரிசங்குவுக்காக ஒரு புதிய (குருதிப்பலியற்ற)வேள்வியில் பிரம்மாவை உண்டாக்கி, பிரபஞ்சத்தையும் சிருட்டித்து தென்பாகத்தில் நிலைக்கச்செய்தவர் 20; இந்த வேள்வியில் கலந்துகொள்ள அனைவரையும் அழைத்திருந்தார், வசிட்டரின் புதல்வர்கள் விசுவாமித்ரரை அவமதித்ததோடு ஒரு சண்டாள(கரவேல)னுக்கு வேள்வியை, சத்திரியரான அவர் எப்படி நடத்த முடியும், அதுவும் ஒரு சண்டாளனுக்கு இதனை எப்படி செய்யமுடியும் என ஆட்சேபித்தனர் 26; இறுதியில் திரிசங்குவிற்காக நிர்மானிக்கப்பட்ட புதிய தென்துருவத்தில் புதிய இந்திரனையும் தேவர்களையும் உண்டாக்க முயன்றபோது (பிற ஆட்சியாள)தேவர்களும் (முசுகுந்தன் அல்லது முசுகுந்தனின் தந்தை)இந்திரனும்அவரை வேண்டிப் பணிந்து கொண்டதால் அத்துடன் நிறுத்திக்கொண்டார் 28; (முசுகுந்தனின் தந்தை=அலெக்சாந்த)வசிட்டரால் அவமாணப் படுத்தப்பட்டவர் விசுவாமித்திரர், இவரது புதல்வர்கள் வசிட்டரை கொலைசெய்ய முயன்றனர் 22;
(பல இன்னல்களுக்குப்பின்)தவவலிமையால் பிரம்மரிசி ஆகிவிட்டதாக வசிட்டரால் விசுவாமித்திரர் பாராட்டப்பட்டார் 30;
(அகத்தியமுனிவர்)விசுவாமித்திரரைப்போலவே (அகத்தியன்=சத்தியவிரதன்=திரிசங்கு=கரவேலன்)மூவுலகிலும் புகழ் பெற்றவர்; இமயமலை முதல் விந்தியமலைவரை உள்ள அறிவும் தவவன்மையும் ஒரு தட்டில் வைத்து, அகத்திய முனிவர் ஒருவர் தென்தட்டில் அமர்ந்தால் தென்தட்டு கீழே இறங்கிவிடும்; அகத்தியர் தெற்கே இருந்துகொண்டு பூமியின் நிலையைக் காத்தார் என்று சொல்லப்படுவது அவரது மகிமையைக்காட்டும் 199;
விசுவாமித்திரர் இக்ஷவாகு குல (இளஞ்சேட்சென்னி)தசரதனின் (சோழ)நாட்டுக்குவந்து தனது வேள்விக்கு தொல்லை கொடுக்கும் மா(றீ)ரீசன்(பரசுராமன்) சுபாகு என இரு அரக்கர்களை அழிக்கவும், தவம்செய்யும் முனிவர்களுக்கு உதவவும் (திருமா-கரிகால்)இராமனைஅனுப்பவேண்டுகிறார் 31; (திராவிட அந்தணர்க்கும் பிராமணர்க்குமான வேள்விப்பூசல்)
அயோத்தியாகாண்டம்: தசரதன் நதிக்கரையில் யானைவேட்டைக்குச்சென்று கண்ணில்லாத முனிவனின் மகனை அம்பெய்து கொன்ற தவறான செயலுக்காக வருந்தும்போது அம்முனிவன்; தனது தந்தை வைசியன், தாய் சூத்திரப்பெண் என்பதால் தசரதனுக்கு, பிராமணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோசம்(12 ஆண்டு தண்டனை) இல்லை எனக் குறிப்பிடுவதையும் அவர்களனைவரும் வேதத்தைப்பயின்றவர்கள் என்பதையும் காண்கிறோம்.
(தண்டகாரணியம் பகுதியில் சம்பர மகா சுரன்(பிரகத்தன்=மீனவன் செல்யுக்கஸ்நிக்கந்தன் அல்லது அவனது மகன்) மீனக்கொடியுடன் வாழ்ந்ததும், மகத தென்னக வேந்தர்களுடனும் அசோக=முசுகுந்தன் முதலான இந்திரர்களுடன் போரிட்டதும் உள்ளன)
ஜனகன்-சுரன்(விதுரனின் தந்தை வியாசன் தெற்கே வந்து கல்விபயின்றான்; விதுரன் மகன் இராவண நெடுஞ்செழியனும் சுரனாகவே உள்ளான்) 43; சனகமகாராஜா யாகம் செய்வதற்கான இடத்தைத் தேர்வுசெய்து சுத்தப்படுத்தும்போது மண்ணில் ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார், அதனை பூதேவியாகக் கருதினார்; பூதேவியாக சீதையைக்கண்டார் 43-44; {காவிரிபாயும் துவாரசமுத்திரம் பகுதி முதலாக அன்றைய சோழ நாட்டை நீர் பெருக்கி விவசாயம் பெருகச்செய்து; வளர்த்த பகுதியை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் போட்டி இருந்துள்ளது; போட்டிக்குரிய நாடே சீதையாக உருவகப்படுத்தப் பட்டது; கொழுமுனையில் விவசாயம் பெருக்கப்பட்டதாலேயே யோனிவாய்ப்படாமல் ஏர்க்காலின் கீழ் அகப்பட்ட(சீதை) நாட்டை மண்மகளாக இராமாயணம் குறிப்பிடுகிறது. இராவணன்; 'மண்ணோடு பெயர்த்துச் சென்றான்' என்றான் கம்பன்}
சீதையை மணக்கவிரும்புபவன் ஜனகரிடம் உள்ள வருணனின் ருத்திர வில்லை எடுத்து வளைத்து நாண் பூட்ட வேண்டும் என நிபந்தனை விதித்தார் 45; {போட்டி இருந்ததாலேயே விசுவாமித்திரர் இராமனை அங்கு அழைத்துச்சென்று போட்டிகளில் வென்று அந்நாட்டைப் பெற்றதாக இராமாயணம் குறிப்பிடுகிறது. மறையோர் தேயத்து மன்றல் எட்டனுள் அசுர முறையிலேயே இராமன் சீதையை மணம்புரிந்தான்} சனகனின் வில்லை வளைத்து ஒடித்துவிட்ட நிலையில் சீதையை(சோழ நாட்டைப்பெற) மணம் முடிக்க தசரதனை அழைத்துவர நான்குநாளில் தசரதனின் நாட்டைத் தூதர்கள் அடைந்ததாக உள்ளது
கும்பகர்ண வதைப்படலத்தில் அவன் இறந்ததை அறிந்தபோது இராவணனின் பெயருக்கான காரணத்தைக் கம்பன்: "படைத்ததன் நாமத்தின் காரணத்தைப் பாவித்தான்" எனக் குறிப்பிடுகிறான். இராவணன் தனது கைகளால் மலையைத் தூக்கமுயன்றபோது மலை அழுத்தப்பட்டதால் கண்ணீர்விட்டு அழுததாகும் (இராவணம்=அழும் ஓசை)
பாலகாண்டம்: சிவனுக்கும் பார்வதிக்கும் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளையை எவன் பொறுப்பான் என பிரம்மா முதலான தேவர்கள் அஞ்சிச் சிவனிடம் "உமக்குப்பிள்ளை பிறந்தால் உலகங்கள் தாங்கமாட்டா" என உரைத்தனர். சிவன் வீரியத்தை நழுவவிட்டதால் உண்டான பிள்ளையை ஸ்கந்தன் எனவும் கார்த்திகேயன் எனவும் தேவர்கள் அழைத்தனர்.
சக்கரவர்த்தித்திருமகன் மிதிலையிலிருந்து திரும்பிய போது பரசுராமனுடைய சந்திப்பு நிகழ்ந்தது 470, தோளில் வில்லும் கோடரியும் கையில் மின்னலைப்போல் ஜொலிக்கும் ஒரு அம்புமாக திரிபுரம் எரித்த ருத்திரனைப்போலவே பார்த்தவர்கள் நடுங்க தலையில் ஜடையுடன் பரசுராமன் விளங்கினான், பரசுராமன் எங்குசென்றாலும் பூகம்பமும் பெருங்காற்றும் அவனுக்கு முன் செல்லும், க்ஷத்திரியர் குலம் நடுங்கும் 63; பரசுராமன்(தனது பாட்டன், சமதக்கினியின் தந்தை ரிஷிகன் கொடுத்த வில் தன்னிடம் உள்ளதாகக் கூறுகிறான்) 'ஜனகர் சபையில் பரமசிவனுடைய(வில்லைப் பலபெயர்களில் குறிப்பிட்டுள்ளனர்) தனுசை வளைத்து ஒடித்துவிட்டதைக் கேள்வியுற்றேன், இதோ என்னிடம் அதற்குச் சமமான ஜமதக்கினி அடைந்த விஷ்ணுதனுசு, இதனை வளைத்து நாண் ஏற்றி என்னுடன் யுத்தம் செய்வாய்' 63; தசரதன்: "நீர் பிராமணர்; சத்திரிய ஜாதியின் பேரில் உமக்கிருந்த கோபம் முந்தியே தணிந்து விட்டதல்லவா? பின்பு தவம்செய்யப் புகுந்தீர் அல்லவா? இனி ஆயுதம் எடுப்பதில்லை என்று தேவராசனிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டீர். (முசுகுந்த)காசியபருக்குப் பூமண்டல ஆதிபத்தியத் தையும் தந்துவிட்டு மகேந்திர பர்வத்தில் தவம்செய்யப் போனீர் அல்லவா? பிரதிக்ஞை தவறலாமா? 63,64; இாமனின் பதில்: 'ஜமதக்கினி புத்திரரே! தந்தை கொல்லப்பட்ட கோபத்தால் பழிவாங்கினீர், அதில் நான் குற்றம் காணவில்லை. ஆனால் மற்றவர்களைப்போல் என்னை நீர் அடக்க முடியாது, வில்லைக்கொடும்' 64; பரசுராமன் இராமனிடம்: 'உன் கையிலிருக்கும் விஷ்ணு தனுசில் ஏற்றப்பட்ட அம்புக்கு எனது தவ வலிமை அனைத்தும் இரையாகக்கடவது, என்னை சூரியன் மறைவதற்குள் காசியபருக்குக் கொடுத்துவிட்ட பூமியைவிட்டு நீங்கி மகேந்திர மலைக்குச் செல்ல அனுமதிப்பாயாக' 65; அத்துடன் பரசு ராமனின் (பொய்யாகப் புனைந்துரைக்கப்பட்ட) விஷ்ணு அவதாரம் முடிந்ததாகப் பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்; ஒரு தேசத்து மக்களின் நம்பிக்கைகளினின்று இதிகாச புராண திவ்யபிரபந்தங்கள், உண்டாயினவா? இதிகாச புராணங்களால் மக்களின் கொள்கைகளும் நம்பிக்கைகளும் உண்டாயினவா? என்பது கேள்வி 470-471; (ராமனுக்கும் சீதைக்கும் திருமணம் முடிந்து) மிதிலையில் தசரதனிடம் ராமனையும் இலக்குவனையும் ஒப்படைப்பதோடு விசுவாமித்திரரின் பங்கு முடிகிறது 62;
(சித்திரை மாதத்தில் இராமன் பிறந்தததும் சித்திரை மாதத்தில் ராமனுக்குப் பட்டம் கட்டத் தசரதன் முயன்றதும் உள்ளன) தசரதன்-இராமனிடம்: 'உனது பட்டாபிசேகத்தை நாளைய தினமே நடத்தியாகவேண்டும், பரதன் ஊரில் இல்லை, அவனது மாமனது ஊர் கேகயதேசம்(கேரளம்-சேரலம்) வெகுதூரத்தில் இருப்பதால் வரவழைக்க அவகாசம் இல்லை 71; அசுவமேத யாகம்செய்து இந்திரனாக முடியும், ஆயினும் அதனைத் தடைசெய்வது தேவர்களின் பழக்கம். அதன்படி சகரன்(தக்ஷன்=தச ரதன்=உருவப்பல்தேர் இளஞ்சேத் சென்னி) செய்த யாகத்திற்கான (பசுவை)குதிரையை இந்திரன் (பரசுராமனின் உதவியுடன் முசுகுந்தன்) கடத்திப் போய்விட்டான், காரணம் இந்திரப்பதவி பறிபோய்விடும் என்கிற பயம் 47;
விசுவாமித்ரன்: "அயோத்தியாண்ட சகரன் அசுவமேதயாகம் செய்தபோது யாகக்குதிரையைக் கெட்ட எண்ணம் கொண்ட இந்திரன் இராக்கத உருவில் திருடிவிட்டான். தேடியவர்கள் குதிரையைக் கபிலமுனி(சமதக்கினி) அருகில்கண்டனர்."
அயோத்தியைவிட்டு இராமன் காட்டுக்குச் சென்றபோது தெற்கு முகமாகச் சென்றான் 123; தசரதன் இறந்தபோது புதல்வர்கள் யாரும் பக்கத்தில் இல்லை, இராமனும் லக்ஷ்மனனும் காட்டுக்குப் போய்விட்டார்கள், பரதனும் சத்துருக்கனனும் வெகு தூரத்திலுள்ள மாமனின் கேகய நாட்டில் பாட்டன் வீட்டில் இருக்கிறார்கள் 143; பரதனும் பரிவாரமும் மாமனின் கேகய நாட்டில் வெகுதுரிதமாகப் புறப்பட்டு குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களில், எட்டாவது தினம் அதிகாலையில் வைஜயந்தம் என்னும் கோட்டை வாயில் வழியாக அயோத்தி நகரை அடைந்தார்கள் 147; பரதனின் கேள்வி: 'இராமன் என்ன குற்றம் செய்து (தண்டிக்கப்பட்டான்)தவம்செய்யச் சென்றான்? எந்தப் பிராமனனின் சொத்தை அபகரித்தான்? எந்த நிரபராதியை இம்சித்தான்? எந்த அந்நிய ஸ்திரீயை விரும்பிப் பிழைசெய்தான்? எதற்காக தண்டகாரண்ய (வேங்கடமலைக்காடு)வனம் போகவேண்டிவந்தது?' 151; பரதன் தனது தாய் கேகயியிடம்: 'புருஷனைக்கொன்ற கொலைபாதகியே, உனக்கும் எனக்கு மான பந்தம் அறுந்துவிட்டது, தர்மராஜாவான பாட்டனார் அசுவபதியின் பெண்ணல்ல, நீ ஒரு அரக்கி 153; கோசலை (நலங் கிள்ளி) பரதனிடம்: ' உன் முன்னோர் பலர் அரசு புரிந்து பெரும்புகழ் பெற்றுள்ளார்கள், அரசு வேண்டாம் எனச்சொல்லும் உனக்கு நிகரானவர்கள் எவரும் இல்லை, நீதான் மன்னர்களுக்கு மன்னன் பரதனே! 158; பரதன்: 'எனக்கு உரிமையற்ற பொருளை எப்படி அபகரிப்பேன்? தகாதகாரியத்தை செய்யச்சொல்கிறீர்களே, சரியல்ல 160; ராமனை அழைத்துவரக் காட்டுக்குச் சென்ற பரதனை வரவேற்ற பரத்துவாசர்: 'ஏ (தென்திசைத் தலைமைக் காவலன்)விசுவகர்மனே, ஏ மயனே பரதனுக்கு விருந்து செய்ய ஏற்பாடுசெய்'; எமன் அக்னி குபேரன் வருணன் (பிற ஏழு காவலர்கள்)முதலிய தேவர்களிடம்: 'பரதனுக்கு அதிதிபூசை செய்ய உதவுங்கள்' 169; தெற்கே சித்த்ரகூடமலை இருக்கிறது, அங்கு ராம லக்ஷ்மன சீதை உள்ளனர் 170; பரதன் பரத்வாஜரிடம்: 'இதோ எங்களது துக்கத்துக்குக் காரணமான எனதுதாய், ஆர்யவடிவம்கொண்ட அனார்யை'171;
{இராஜாஜி: பரதன் துக்கத்தோடு காட்டிற்குச் சென்று இராமனைக் கண்டபிறகு வால்மீகி இராமாயண அத்தியாயங்கள் கிரமம் தவறி முன்னும் பின்னுமாக அமைந்துள்ளன, பழைய உரைகாரர்களும் இதனைக் கண்டிருக்கிறார்கள் 179}
வைஸ்ரவனனுடைய தம்பியாகிய ராவணன் சீதையைக் கவர்ந்துசென்றான் 248; அப்போது சூரிய(குலக் கரிகால்சோழ)ன் தனது பிரகாசத்தை இழந்தான் இருள் சூழ்ந்தது சர்வ பூதங்களும் புலம்பின 249; வால்மீகி இராமாயணத்தில் சீதையை ராவணன் கையால் தூக்கி எடுத்துப் போனதாக வால்மீகியும்; கம்பராமாயணத்தில் சீதையைத் தீண்டாமல் தரையோடு அப்படியே எடுத்துப்போனான் எனக் கம்பரும் சொல்லியிருக்கிறார்கள் 471;
இராமன் தெற்கேசென்று; அகத்தியரின் ஆசிரமத்தைக் கண்டு மகிழ்ந்தான் 201; (பத்து ஆண்டுகளுக்குப்பிறகு ராமன் அகத்தியனை(காரவேலனை)க்காணத் தெற்கே சென்று; வாதாபி, வில்வலன் என்னும் சுரர்களை அழித்த இடத்தில் அகத்தியன்; இருந்தது; ராமன், இலக்குவன், சீதை மூவரும் கோதாவரிநதிக்கு நீராடச்சென்றதும் உள்ளது) அகத்தியர் ராமச்சந்திரனுக்கு மகா விஷ்ணுவின் வில்லையும், என்றும் குறையாத அம்பராத்துணியையும், கத்தியையும் (அருவாளர் வேலிர் படை-விசும்புசெல் இவுளிப்படை)கொடுத்து, ராக்ஷ்சசர்களை ஒழிப்பாயாக! என ஆசீர்வதித்தார் 201; மார்கழிமாதத்தில் பரதனையும் ஊரையும் நினைத்து இராமனும் பிறரும் கோதாவரியில் ஸ்னானம் செய்தார்கள் 207;
மா(றீ)ரீச(பரசுராமன்) இராவண(நெடுஞ்செழிய)னிடம்: 'நான் தேகபலம்கொண்ட செருக்கினால் (முனிவர்களை)ரிசிகளைக் கொன்று அவர்களது (குருதிப்பலியற்ற)யாகங்களை அழித்துவந்தேன்; விசுவாமித்திரமுனிவர் இராமனின் உதவிடன் என்னை விரட்டினார். இராமனின் அம்பு என்னை (சேரலமலைநாட்டின்)சமுத்திரக் கரையில் கொண்டுபோய் தள்ளிவிட்டதோடு வெகு நேரம் பிரக்ஞையற்றுக் கிடந்தேன் 234; (பறவைகளின் தலைவன் சடாயுவான, புலவர்களின் தலைவன் மாங்குடிமருதன்; இராவணனுடன் விவாதம்செய்து தவறுகளைச்சுட்டிக்காட்டி அறிவுறுத்தியதும் (மதுரைக்காஞ்சியில்)உள்ளன. (சோழர்களின் தமிழ்ச் சங்கத்தின் தலைவர்களும்) காசியப்பபனும், மகன் அருணனும் அவர்களது மக்கள் சடாயுவும், சம்பாதியும் என உள்ளனர்) (இராவணன்-செழியன் சோழநாட்டை 12 ஆண்டு தண்டனை முடிந்த நிலையில் திருப்ப ஒப்படைக்க மறுத்து; தானே கவர்ந்துகொள்ள, பரசுராமனின் உதவியை நாடினான்) இராவணன் சீதையைக் கடத்திச்சென்ற பிறகு தேடியபோது ஒரு மான்(பெண்கள்) கூட்டம் சைகையால் தெற்கு முகமாகப்போய் தேடுங்கள் எனக் குறிப்பிடவே தெற்கே தேடப்போனார்கள் 267; அனுமன் பம்பாசரஸ்=பம்பாநதியைக் கடந்து கடலைத் தாண்டி லங்கா நகரில் பிரவேசித்தான் 250; கழுகரசன்(தமிழ்ப் புலவர் அவையின் தலைவன் மாங்குடி மருதன்)சடாயு: ராமா நீ சீதையை மீண்டும் பெறுவாய், ஒருசேதமும் ஏற்படாது, இழந்த செல்வத்தை மறுபடியும் பெற்றுப் பெருமகிழ்ச்சி அடைவாய் 265; சுக்ரீவன் சீதையை எங்கு மூடிவைத்திருந்தாலும் கண்டு பிடித்துத்ருவோம் 274; (சேரலத்தின் உதியஞ்சேரல்)இந்திரனின் புத்திரன் (பெருஞ்சேரலாதன்)வாலியால் மகிச சுரன் (மைசூரான்=எருமையூரான்)=துந்துபி கொல்லப்பட்டான் 282;
சீதை(சோழநாடு) 12ஆண்டுதண்டனை முடிந்தபிறகும் இராவணனின் கட்டுப்பாட்டில் 10 மாதம் இருந்ததாக உள்ளது.
நான்முகனிடம் தேவர்கள்: 'இராவணன்(நெடுஞ்செழியன்) தங்களிடம் பெற்ற வரங்களால் எல்லாரையும் அவமதித்து; (கரிகால்)இந்திரனையும் துரத்திவிட்டு தேவலோகத்தையே(சோழநாட்டையும், மகதத்தையும் சேர்த்து) கைப்பற்ற(தேவேந்திர பதவியடைய) எண்ணுகிறான்; இதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்' 16; (கரிகால்)இராமன் (செங்குட்டுவன்) லக்ஷ்மனனிடம்: 'தம்பி [அஞ்சன ஏயன்=செங்குட்டுவன்=முருகன், இவனது தாய் அஞ்சனை- கரிகாலின் தங்கை பாவை] ஆஞ்சனேயனின் பேச்சைக் கேட்டாயா? எவ்வளவு இலக்கண சுத்தமும் சுரமுமாக பேசுகிறான், வேதங்கள் முழுதும் அத்யாயனம் செய்து, வியாகரணம் சம்பூரணமாகக் கற்றவனைப்போல் பேசுகிறான்; இவனைப்போல் அல்லவா தூதன் இருக்க வேண்டும் 271; ரிஸ்ய முகத்திலிருந்து (கேரள)மலையமலை ஏறிப்போய் (நெடுஞ்சேரலாதன்)சுக்ரீவனிடம் ஆஞ்சனேயன், ராம லக்ஷ்மனர்கள் காத்திருப்பதாகச் சொன்னான் 272; (சேரலத்தின் பம்பைநதிக்கரையில் வாலி வாழ்ந்தான் என உள்ளது) சுக்ரீவன் ராமனிடம்: 'தேவகணங்கள் அவ்வளவுபேரும், (நெடுஞ் செழிய)இந்திரனைத் தலைமைகொண்டு உன்னை எதிர்த்தாலும் உன் வெற்றி நிச்சயம்' 284; இராமனுடைய பாணத்தால் மரணகாய மடைந்த வாலியின் மார்பில் இந்திரனால் கொடுக்கப்பட்ட தங்கமாலை பிரகாசித்துக்கொண்டு அவன் உயிரையும் அவன் பொலிவையும் தாங்கிப் பொலியச்செய்தது 289; கடைசியாக வாலி ராமனுக்கு ஒரு வார்த்தை சொன்னான் 'எனக்கு மிகப்பிரியமான குமாரன் அங்கதன், அவனை நீயும் சுக்ரீவனும் பார்த்துக்கொள்ளவேண்டும், உன்வசம் ஒப்படைத்தேன் காப்பாற்றுவது உன்கடமை' 291; (வாலி, சுக்ரீவன், அங்கதன், வானரங்கள் எல்லாம் சேரலநாட்டில் பரசுராமனால் தொல்லைக்கு ஆட்பட்ட சேரல்ஆதனின் தம்பி அல்லது மகனும் வீரர்களும் ஆவர்) இராசாசி: வால்மீகியின் 18 ஆவது அத்தியாயத்தில் ராமன் வாலியிடம், தான் நிரபராதி என வாதித்துப் பேசியதாக உள்ளவை; பிறகு எவரோ எழுதிச்சேர்த்தவை 292; சீதையைப் பிரிந்த இராமனும் இலக்ஷ்மனனும் மாரிக்காலமான நான்குமாதகாலம் (சேரல=பொதியை)வனத்தின் குகையில் வாழ்ந்து வந்தார்கள் 301-302; விபீசனன் சொன்னதைக்கேட்டு பொறுமை இழந்த இந்திரஜித்து: 'நம்முடையகுலம் என்ன? சக்தி என்ன? புலஸ்திய குலத்தில் பிறந்த சித்தப்பா இப்படிப்பேசுவது வியப்பாக இருக்கிறது' 404; (கிட்கிந்தாகாண்டம் : சுக்ரீவனை வாலி ஒற்றை ஆடையுடன்( பாதுகாப்பற்று, மனைவியை-நாட்டை இழந்து, படைகளற்றவானாக) துரத்தியதும்; வாலி இறக்குமுன்னர் அங்கதனிடம் 'சுக்கிரீவனின் எதிரிகளுடன் சேரவேண்டாம்' என வலியுறுத்தி (எதிரிகள் யார் என்பதை இராமாயணத்தில் காண முடியும்); வாலியும் சுக்கிரிவனும்; இந்திரனுக்கும் சூரியனுக்கும் பிறந்ததாகவும் உள்ளது. வாலி ஏழு ஆச்சாமரங்களை(ஏழு மலைநாட்டு எல்லைக் காவலர்கள்) அரசர்களின் படையினர்) வீழ்த்தியவன். இராமனும் வாலியுடன் போரிட்டு ஏழு மரங்களையும்(ஏழுவள்ளல்களின் படையினரை) வீழ்த்தியதாக உள்ளது. இக்காண்டத்தில் ஏழுமலைக் காடுகளின் வரலாறும், அங்கு கரிகால்வளவனின் பாட்டனார்(கரவேலன்) நான்முகன்(விசுவாமித்திரன்) வாழ்ந்ததும், தனது நகரைத்தனது பேத்தி [கரிகாலின் தங்கை பாவைக்கு) ஏமைக்கு வழங்கியதையும், மயன் மண்டோதரியை இராவணனுக்குக் கொடுத்ததையும், இந்திரன் மயனைக் கொன்றதும், (பாவை காரவேலனைக்காண பொதியைக்குச்சென்றதும்) உள்ளன] சுக்கிரீவனின் உத்தரவுப்படி வானரவீரர்கள் காடு மலை சமுத்திரக்கரைகளிலிருந்து பெருங்கூட்டமாக வந்தார்கள் 306; ஆஞ்சனேயன் அங்கதன் தாரன் ஆகியோர் சீதையைத்தேடி தெற்கே நோக்கிச் சென்றார்கள்; 309-310; ஜாம்புவான் ஆஞ்சனேயனிடம்: 'உன்னுடைய பலமும் புத்தியும் உனக்குத் தெரிவில்லை, உன் தாயார் அஞ்சனை தேவலோக அப்சரஸ், ரிஷியின் சாபத்தால் வானரமாகப் பிறந்தாள், (முசுகுந்தன்)வாயுபகவானின் மானச ஸ்பரிசத்தால் நீபிறந்தாய்' 319; (சுந்தரகாண்டம் அனுமன் இலங்கைக்குச் செல்லுமுன் மைனாக மலைச்சிகரத்தைத் தனது வாலால் அடித்து நொறுக்கினான்; புத்தரின் ஆலயம்போன்ற உயர்ந்தமேடையில் ஒற்றை ஆடையுடன் (உரியவனின் பாதுகாப்பில்லாமல்)சீதை(பொன் ஆரம்) இருந்தாள் எனவும்; இராமனும் இலக்குவனும்; சீதையை எட்டுக்காளைகள் பூட்டிய(சூரியனின்)தேரில் அழைத்துச்சென்றனர் என வீடனன் மகள் திரிசடை கணவுகண்டதும் (சிலம்பு: ஒருதனி ஆழிக்கடவுள் தேர்மிசைக் காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என, மாலைத் திங்கள் வழியோன் ஏறினன்:"); அசோகவனத்தில் சீதையைக்கண்ட அஞ்சன ஏயன் சமஸ்கிருதத்தில் பேசினால் தன்னையும் இராவணன் என எண்ணி விடுவாள் என்பதால் அவளது மொழியிலேயே இராமனின் வரலாற்றைப் பேசினான் எனவும்; சீதையைக் கண்டபிறகு அஞ்சன ஏயன் வடக்கு நோக்கிச்சென்றதும்; இராவணனின் அமைச்சன், படைத்தலைவன் என இடம்பெறும் பிரகத்தனின் மகன் சம்புமாலி, அனுமனுடன் போரிட ஏழு படைகளை அனுப்பியதும் உள்ளன) இந்திரசித்து நான்முகனின்(விசுவாமித்திரனின் அர்ருவாளர் படையின் ஒரு பிரிவினர் கொடுக்கப்பட்டிருந்தனர்) படையின் உதவியால் அஞ்சன ஏயனைப்பிடித்தான்; இராவணன் அனுமனிடம் 'நீ பிராமணரால் வேள்வியிடை அனுப்பப் பட்ட பூதமோ? நான்முகன் விடுத்த திகிரித்தெய்வமோ?' என வினவுகிறான். இலங்கை செல்லும் வழியில் கபாடபுரமும், தாமிரபரணி நதியும், பாண்டியனின் நாடும், மகேந்திரமலையும், மைனாகமலையும் இருந்ததாக உள்ளது) நெடுஞ்செழியன் அல்லது முசுகுந்தன்)இந்திரன்; வானவர்களின் விசுவகர்மன்=மயன் மேல் பகைகொண்டு வதம் செய்துவிட்டான்; அவனால் கட்டப்பட்ட அரண்மனையை இந்திரன் ஹேமைக்குக் கொடுத்துவிட்டான் 312; ஹனுமான் பூமியை மிதித்து கடலைத்தாண்ட ஏற்ற இடம் மகேந்திரமலை என்று மகேந்திரமலைமீது ஏறினான் 321; இராவணனுடைய தேசத்தில் (இந்திர முசுகுந்தனின்) அமராவதி நகரத்துக்குச் சமமான அழகையும் வளத்தையும் ஹனுமான் கண்டான் 325; (நெடுஞ்செழிய இராவணனிடம் ஒப்படைக்கப்பட்ட சோழநாட்டை ஆளும் தகுதிக்கான இந்திர ஆரத்தை)சீதையைத் தேடிச்சென்ற அஞ்சனஏயன்(செங்குட்டு வன்); புத்தனின் ஆலயம் போன்ற மேடையில், ஒற்றை ஆடையுடன்(உரிமையாளன்/ கணவன் பாதுகாப்பின்றி பொன் ஆரம்)சீதையைக் கண்டு; இராமன் சொன்னபடி நகைகளெல்லாம் மரக்கிளைகளில் உள்ளதைக் கண்டு; அவளே சீதை என உறுதிசெய்தான்.
காவற்பெண்டிர்: 'இராவணனை யார் என்றுநினைத்தாய், பிரம்மாவின் வம்சத்தில் நேராகப் பிறந்தவன்; புலஸ்தியப் (வியாசன்) பிரசாபதியின் சொந்தப்பேரன்'; மற்றொருத்தி: '(விதுரன்)விச்சிரவஸு தான் ராவணனின் தந்தை' 341; (இராவணன் தனது தம்பி குபேரனிடமிருந்து படைகளைக்கைப்பற்றி குபேரனை விரட்டியதும் உள்ளன)
(சீதையைக்கண்ட அனுமன்; இராவனனது பார்ப்பன(சிங்கள?)மொழியில் பேசினால் 'இராவணன்; மாறுவேடத்தில் வந்திருப்பதாக எண்ணிவிடுவாள்' என எண்ணி 'அவளது மொழியிலேயே' பேசினான் என உள்ளது)அனுமன் சீதைக்குக்கேட்கும்படி மிருதுவாக: 'ராசா தசரதன் இக்ஷவாகுலத்து ஏழு பூமண்டல அரசர்களின் அதிபதி' 348;
பிரகத்தனின் மகன் ஜம்புமாலியைக் கூப்பிட்டு; வானரத்தை அடக்கிவிட்டு வா என்றான் இராவணன் 366; ராவணனின் மகன் அக்ஷன் 369; அனுமனுடன் மோத தனது மகன் இந்திரசித்தை அனுப்பினான் இராவணன்; அவன் பிரம்மாஸ்திரத்தால் அனுமனைப் பிணித்தான் 370; ராவணனின் நிறம் கருப்பு என அனுமன் காண்கிறான் 374; சுக்ரீவனும் வாலியும் ராவணனுக்குச் சகோதரர்களைப் போன்றவர்கள் 375; பெரிய கருத்த தேகம் கொண்ட சேனாபதி பிரகத்தன் 395; ஸ்ரேஸ்ட மான பண்பு அடைந்து ராமன் தனுர்வேதம் நன்றாகக்கற்று எல்லோராலும் விரும்பப்பட்டான் 348; இராவணனின் சபைபயில்: 'மயன்(தென்திசைத் தலைமைக் காவலன் விசுவகர்மன்) தங்களுக்குப் பயந்து நட்புக்கொண்டு மகளையே விவாகம் செய்து கொடுத்தான் அல்லவா?' 395;
[அனுமனிடம் தன்னைக்கண்டதற்குச் சான்றாகச் சீதை குறிப்பிடுவது: 'இராமனுடன் இருக்கும்போது ஒரு காகம் தனது மார்பில் கொத்திக்கொத்தி குருதிவடியச் செததாகவும் அதனைக்கண்ட இராமன்; நான்முகன்(விசுவாமித்திரனின்) மந்திரம்சொல்லி ஒரு வைக்கோலை (வை கோல் = கூர்மையான கோல், செங்குந்தம்; வேளிரின் சிறுபடையை) விடுத்ததாக வும், காகம் தனது தந்தை (பூர்ணகாசியப்பன்=இந்திரனிடம் தஞ்சமடைந்தும், அத்தருப்பைப் புல் காகத்தின் வலதுகண்ணை இழக்கச் செய்ததாகவும், காகம் இந்திரனின் மகன் (காசியப்ப=முசுகுந்த)சயந்தன் எனவும் உள்ளது]
(அனுமன் ஒரு மண்டபத்தில் புகுந்து காவலரைக் கொன்றான்; பெருஞ்சேனையோடு வந்த இராவணனின் அமைச்சன் பிரகத்தனின் மகன் சம்புமாலி அனுமனின் முகத்தில் அம்புகளால் அடித்தான்; அனுமன் சம்பு மாலியையும் சேனைகளையும் கொன்றான்; இதனையறிந்த இராவணன் அமைச்சனின் ஏழுமக்களை அனுப்ப; அவர்களையும் அனுமன் கொன்றான்; ஐந்து சேனைத்தலைவர்களை அனுப்பினான்; அவர்களையும் அழித்தான்; அதனால் மகன் அக்கனை அனுப்பினான்; அவனையும் கொன்றான் அனுமன்; இதனால் மூத்த மகனாகிய இந்திரசித்தை அனுப்பினான்; இந்திரசித்து; நான்முகனின் அம்பை(விசுவாமித்தரனின் வேளிர்படை) எய்து அனுமனை மூர்ச்சையடையச்செய்து கட்டி இழுத்து வந்தான்]
(இலங்கையில் அனுமன்செய்த கொலைகளால்வாட்டமுற்ற இராவணன்; பிரகத்தன் துர்முகன் வச்சிரதம்புரன் நிகும்பன் முதலான துரத்தப்பட்டோருடன்; "சீதையைக்கொண்டுவந்தபோது ஒரு ஆண்டு அவகாசம்" கேட்டதகச் சொல்கிறான்? கும்பகர்ணன்; 'நீ ராமனையும் இலக்குவனையும் கொன்றுவிட்டுச் சீதையை அடைந்திருக்க வேன்டும்'; 'நான் அவர்களைக் கொன்றபிறகு சீதை வசப்படுவாள்' என்றும் சொல்கிறான்.
உத்தரகாண்டம்: அகத்தியர்; நான்முகனின்(?) மகன் புலத்தியன்(வியாசன்) தவம்செய்யும் இடத்துக்கு வரும் பெண் யாராயினும் கருத்தரிப்பாள் என நான்முகன் சொன்னான். திருணபிந்துவின் மகள் அறியாமல் சென்று கருத்தரித்ததால் புலத்தியனுக்கே மனைவியாக்கினான். அவளுக்கு விச்சிரவசு(விதுரன்) பிறந்து; பரத்துவாசனின் மகளை மணந்து பெற்ற வைச்சிரவணன்-குபேரன்(இராவணனுக்கு அண்ணன்); நான்முகனிடம் வரம் பெற்று இலங்கையின் வடதிசைக் காவலும் பொருளுக்குத் தலைமையும் பெற்றுத் தந்தையின் கட்டலைப்படி அரசாண்டிருந்தான். நான்முகன் கடலை(லங்கா புரியை)ப் படைத்து ராட்சசரையும் இயக்கரையும் படைத்தான்; இயக்கர் 'காப்போம்' என்றனர்; ராட்சசர் 'தின்போம்' என்றனர்; (குபேரனும் இராவணனும் புலத்தியனின் மகன் விச்சிரவசுவின் புதல்வர்கள் என இராமாயணம் பல இடங்களில் குறிப்பிடுகிறது)
இராவணன் சீதையை வலுவில் அடையாததற்குக் காரணமாக; 'முன்னர் ஒரு புஞ்சிகத்தலை என்னும் (மயன்=விசுவகர் மனின்)அப்சரப் பெண்ணை (நாட்டைக்)க்கூடி அவளது ஆடைகளை நீக்கினேன்; நான்முகன் இதனை அறிந்து; "அதுபோல் (சோழநாட்டுப்) பெண்ணைப் பலவந்தம் செய்தால் தலைநொறுங்குமென்று சபித்தான்" என்கிறான். இவையும்; சீதை பெண்ணல்ல என உறுதிப்படுத்துகின்றன; சோழநாட்டின் எந்தப்பகுதியைக் கைப்பற்றமுயன்றாலும் கொல்லப்படுவான் என விசுவாமித்திரன் எச்சரித்துள்ளான்; விசுவாமித்திரனால் கொடுக்கப்பட்ட சேனை இலங்கையில் இருந்துள்ளது. இராவணனின் மகன் இந்திரசித் அச்சேனையைப் பயன்படுத்தி; அனுமனைப் பிணித்ததாகக் காண்கிறோம். (இவ்விடத்தில் ராஜீவ்காந்தியை யும் இந்தியப்படையினரையும் பிரபாகரனையும் நினைவுகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல)
அனுமன் இலங்கையிலிருந்தி வடக்குத்திசையில் திரும்பிவந்து; "அரிட்டம் என்ற மலைமேல் ஏறியதால் அதிலிருந்த சிங்கங்கள் (சிங்களர்கள்) நசுங்கி அழிந்தன; மலையும் தரையோடு தரையாயிற்று" எனவும்; "வழியில் மைநாக மலையிடம் நடந்தைக்கூறி; அங்கதன் சாம்பவன் ஆகியோரிடமும் நடந்தைக் கூறினான்; "போகும்போது மைநாக மலைச் சிகரத்தை வாலால் அடித்தேன் அது பணிந்தது; கரசையையும் சிம்மிகையையும்(சிங்களப்பெண்) இலங்கையில் தேவதையும் கொன்றேன்; சீதையிடம் மோதிரம் தந்து சூடாமணியைப்பெற்று இலங்கைக்குத் தீமூட்டித் திரும்பினேன்" என்கிறான்.
இராமனுடன் தெற்கேசென்று; மகேந்திரமலை(திருநெல்வேலியருகில் குறுங்குடி)யை அடைந்தார்கள். இராமன் கடலைத் தாண்டிச்செல்ல யோசித்தபோது அனுமனும் சுக்ரீவனும் விபீசனனை வழிகேட்டனர்; அவன் இராமனை; (வருணன்)கடல் அரசனைச் சரணடையச் சொன்னான். இராமன் கடலரசனை நோக்கித் தவம்செய்தான்; மூன்று நாள் ஆகியும் வராததால் கடலரசன்மீது அம்புதொடுத்தான்; இதனால் கடலரசன் தோன்றி; 'கடலில் அணைகட்டினால் அதனை அசையாமல் இருக்கச் செய்வேன்' என்றான். தொடுத்த அம்புக்குப் போக்குக் கேட்டான் இராமன்; அதற்கு வருணன் வடக்கே ஒரு தீவில் (லட்சத் தீவு) ஆபிர-மகாசூத்ர சாதியரான (சிங்களர்?)திருடர் உள்ளனர்; அவர்கள் எனது நீரைக்குடிப்பதில் விருப்பமில்லை, அவர்களை அம்பு அழிக்கட்டும் என்றான். அப்படியே செய்யப்பட்டது. அணைகட்ட விசுவகர்மா=மயன், நளனை ஏவினார்.
வானரங்களைக்கொண்டு பெரிய பாறைகளும் மரங்களும் கொண்டுவரப்பட்டு சேதுப்பாலம் கட்டப்பட்டது; விசுவகர்மனின் மகன் நளனும் உதவினான் 418; மால்யவான் இராவணனுக்குத் தாய்வழிப் பாட்டன் 421;
மகாபாரதம், ராமாயணம் இரண்டிலும் யுத்தகாண்டக்கதைகளில், ஒரேவிதச் சித்திரம் திரும்பத் திரும்ப வருகின்றன 442; (யுத்தகான்டம் பிரகத்தன் இராவணனின் சேனைத்தலைவனாக உள்ளான். அனுமன் பெயருக்கான காரணமாக; சூரியனைப் பிடிக்க முயன்று கிழேவிழுந்து தாடை ஒடிந்ததாகவும், இந்திரனின் வச்சிராயுதத்தால் அடிபட்டதால் தாடை உடைந்ததாகவும்; அதனால் அனுமன் எனப்பட்டதாகவும் மாறுபட்ட தகவல்கள் காணப்படுகின்றன; உத்தரகாண்டத்தில் இராவணாதியரை வென்ற வரலாற்றை அகத்தியர்(காரவேலன்) விரித்துரைத்ததாக உள்ளது. வாயு அஞ்சனையுடன் கூடியதால் பிறந்த (செங்குட்டுவன்)அஞ்ச ஏயன் (கரிகால்)சூரியனுக்கு எதிரே சென்று பலகலைகளையும் கற்றான் எனவும் உள்ளது.
அனுமான் கேசரியின்(முசுகுந்தனின்)-காற்றின் மூத்தமகன்; சிறுபிள்ளையாய் இருக்கும்போது சூரியனைப் பழம் என மயங்கிப்பாய்ந்தால் வெப்பத்தால் களைத்து உதயகிரி(திரு உண்ணாமுலை)மலையில் விழுந்து தாடை ஒடிந்ததால் அனுமன் எனப்பட்டான் என உள்ளது; மாறாக உத்தரகாண்டத்தில்: அகத்தியர்; 'மேருமலையின் வானரவரசன் கேசரியின் மனைவியை வாயு கூடியதால் அனுமன் பிறந்தான்; பசியால் வாடி; (கரிகால்சோழ)சூரியனைப் பழமென எண்ணிப் பாய்ந்தான், சூரியன் சிறுவனைச் சுடவில்லை; அங்குவந்த இராகு, அனுமனைக்கண்டு பயந்து இந்திர(முசுகுந்த)னிடம் முறை யிட்டான்; இந்திரன் இராகுவை முன்னேவிட்டு வந்தான்; அனுமன் இராகுவைப் பெரியபழமென எண்ணிப் பாய்ந்தான்; இராகு ஓட, இந்திரன் அனுமனை வச்சிராயுதத்தால் அடித்தான்; அனுமனின் தாடை முறிந்து பாறைமேல் விழுந்தான்; வாயு அனுமனை எடுத்துச்சென்று ஒரு குகையில் மறைந்துகொண்டான்.. .. அனுமன் ரிஷிகளைத் துன்புறுத்தினான்; அஞ்சனையும் கேசரியும் சொல்லியும் கேட்கவில்லை; அதனால் ரிஷிகள் அவனது வலிமையை அறியாது ஒழிக எனச்சபித்ததால் வலிமையறியாதவன் ஆனான். சூரியனிடம் சென்று; ஒரேநாளில் பலகலைகளையும் கற்றான்.
இதில் பல பொய்யுரைகள் புராணவடில் உள்ளன; அனுமன் =செங்குட்டுவனின் மாமன், சோழர்குலக் கரிகால்-சூரியன்;. செங்குட்டுவனின் தந்தை முசுகுந்தனைக் கேசரி எனவும், நெடுஞ்செழியனை வாயு எனவும் பல பெயர்களில் மறைத்து; இந்திர முசுகுந்தன், செங்குட்டுவனை வச்சிராயுதத்தால் தாக்கி, தாடை எலும்பு உடைந்து அறுமுகனாகி; நான்முகனால் சரிசெய்யப் பட்ட போதிலும் முகத்தின் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு அனுமன் எனப்பட்டான். ராகு என்பது கரிகாலுக்கு எதிராக முசுகுந்தனுக்காதரவளித்த பார்ப்பனப் புலத்திய இராவண அமணரையும்; நான் முகன் என்பது பெருமளவில் சந்திரகுப்தனின் புதல்வர் நால்வருள் விசுவாமித்திரனையே குறிக்கும்.
இராவணன்: 'ராமனின் பராக்கிரமம் விளங்காத விந்தையாக இருக்கிறது, இவன் நாராயணனே என்று எண்ணுகிறேன்' 451; இராவண அரக்கன் உயிர் மாய்ந்தது 460; மண்டோதரி இராவணன் வீழ்ந்துகிடப்பதைக் கண்டு புலம்பினாள்; 'உமக்குக் கோபம் வந்தால் இந்திரனும் எதிரில் நிற்க மாட்டானே, ஒரு மானிடன் உன்னை வீழ்த்திவிட்டானே, மூன்றுலோகங்களிலும் பரவிய உமது வீரபராக்கிரமமும் இதை எப்படிப்பொறுத்தது? இந்திரனும் அக்னிதேவனும் யமனும்கூட உம்மை வெல்ல முடியாது; உன் சகோதரன் கரனைத் தரையில் நின்று வதம்செய்தபோதே இராமன், ஆதி இடை அந்தம் அற்ற மகாவிஷ்ணுவே என்று சொன்னேனல்லவா? மகன் இந்திரஜித் இந்திரனை வென்றவன் எனக் கர்வம்கொண்டு மோசம் போனேனே 461-462;
சீதை: 'ந கஸ்சித் ந அபராத்யதி' தவறு செய்யாதவர்கள் உலகத்தில் யாரே உளர்? பிராட்டியின் இந்தச் சொற்களை வைணவ பக்தர்கள் அமிருத மாகப் பாவிக்கிறார்கள் 462-463; 'பரிசுத்தத்தில் பரதாழ்வானுக்கு ஒப்பாகார் பெருமாள்; யோக்யதையில் பரதாழ்வானுக்கு ஒப்பாகார் பெருமாள்' என திவ்யபிரபந்தங்களில் ராமனுக்குமேல் பரதனை வைத்துச் சொல்லப்படுகிறது 467;
இராசாசி: "ஞான சாகரமான ஸ்ரீசங்கரர் சொன்னார் 'ராமாவதாரத்துக்குப் பிறகு மஹா சௌலப்ய மூர்த்தியாக மீண்டும் அவதரித்தான் பகவான்(கிருஷ்ணன்); கோவிந்தனாக இடையர்களுடன் வாசம்செய்து வளர்ந்து அர்ச்சுனனுக்கு வார்பிடித்துக் கோல் எடுத்துத் தேர் ஓட்டினான்' " 468.
இராமாயண வெற்றிக்குப்பிறகு பகைவரை எல்லைவரை துரத்தியடித்த தமிழர்கள் கரிகால்சோழன் தலைமையில் செங்குட்டுவனைக்கொண்டு பாரத நாட்டைச் சிறப்பாக ஆட்சிசெய்தனர்; துரத்தப்பட்ட ஹெலனின் வாரிசுகள் ஹெலனைத் தஞ்சமடைந்தனர்; ஹெலனின் வேண்டுதலை ஏற்றுப் பிரகத்தனிடம் மகதம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் பரசுராமனின் துணையுடன் கிரேக்கரின் உதவிபெற்றுச் சோழருடன் பூசலிட்டுத் தோற்ற வரலாறே மாபாரதம்; பரசுராமனே துர்யோதனன். கரிகாலே தர்மன்=யுதிற்றன்; செங்குட்டுவனே அர்ச்சுனன்; இதற்கான சான்றுகள் மாபாரதத்திலும் வேதங்களிலும் உள்ளன.
இந்தியா வரலாறற்றுப் பலநூற்றாண்டுக் காலமாக இருப்பதை எவருமே உணர்ந்து காரணங்களைக் காண முன்வர வில்லை. எனவே வரலாற்றைக் காணவேண்டியது நமது கடமையாக உள்ளது; காண்போம்.

Thanks
 http://nhampikkai-kurudu.blogspot.com

Saturday, January 25, 2014

தாய்ப்பால் சுரக்க மூலிகை சூப்..!

பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.

தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.

மூலிகை கசாயம்:

அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

முருங்கை கீரை:

முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.

மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை!

பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.
அறிகுறிகள்:
சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.
அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.
கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.
வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம்.
வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.
15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம்.
ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.
சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.
செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம்.
சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.
மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.
அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம்.
நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருகலாம்.
பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம்.

சேர்க்க வேண்டியவை:
சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.

தவிர்க்க வேண்டியவை:
அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்.
மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை!

பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:
சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
அரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.
அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.
கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.
சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.
வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம்.
வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.
நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.
15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம்.
ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.
சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.
செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம்.
சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.
மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.
அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம்.
நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருகலாம்.
பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம்.

சேர்க்க வேண்டியவை:
சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.

தவிர்க்க வேண்டியவை:
அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்.

Horror Tamil Short Film - AAKARUSHI (ஆகருஷி)