Search This Blog

Monday, January 9, 2012

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம் வாங்க!


அறியாத சில விசயங்களை
தெரிந்து கொள்வோம் வாங்க! 


ஆய்வுகளும் கண்டுபிடிப்புக்களும்

1) தொலைநோக்கியை (Telescope) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தார்?
Galileo Galilei, Italy, 1593.

2) ஆகாய விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு ஆகாய விமானத்தை கண்டுபிடித்தார்?
Wright Brothers, America, 1903.

3) துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தார்?
Macmillan, Scotland, Year ?.

4) மின்பிறப்பாக்கியை (Dynamo) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்பிறப்பாக்கியை கண்டுபிடித்தார்?
Michael Faraday, England, 1831.

5) டைனமைற்றை (Dynamite) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு டைனமைற்றை கண்டுபிடித்தார்?
Alfred Nobel, Sweden, 1867.

6) ஒக்சிஜனை (Oxygen) கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு ஒக்சிஜனை கண்டுபிடித்தார்?
Joseph Priestley on 01 - August - 1774.

7) தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தார்?
John Logie Baird, England, 1926. (Born in Scotland)

8) தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைபேசியை கண்டுபிடித்தார்?
Alexander Graham Bell, 1876.

9) தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார்?
Henry Mill, England, 1714.

10) பென்சிலினை (Penicillin) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு பென்சிலினை கண்டுபிடித்தார்?
Allen Fleming, Scotland, 1928.

11) மின்மாற்றியை (Transformer ) கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்மாற்றியை கண்டுபிடித்தார்?
Michael Faraday, 1831 -- William Stanley, 1885 (Modern Transformer)

12) மின்கலத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்கலத்தை கண்டுபிடித்தார்?
Anastasio Volta , Italy, 1807.

13) குருதிச் சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு குருதிச் சுற்றோட்டத்தை கண்டுபிடித்தார்?
William Harvey, 1628.

14) புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தார்?
Isaac Newton, England, 1687.

15) Transistor இனை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு Transistor இனை கண்டுபிடித்தார்?
மூன்று பௌதீகவியலாளர்களின் கூட்டு முயற்சியால் Transistor கண்டுபிடிக்கப்பட்டது அவர்களின் பெயர் விபரம்:- John Bardeen, Walter Brattain, William Shockley, 1947.

16) கணனியை (Automatic Calculator) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு கணனியை கண்டுபிடித்தார்?
Wilhelm Schickard , German, 1623.

17) எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்த முதல் பெண் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்தார்?
Junko Tabei, Japan, 16 - May - 1975.

18) இரசாயணவியலில் நோபல் பரிசு பெற்ற தம்பதிகள் யார்? அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? அவர்கள் எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசினை பெற்றார்கள்?
Frederic Joliot & Irene Curie, France, 1935.

19) வட துருவத்தை சென்றடைந்த முதல் மனிதன் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எந்த ஆண்டில் வட துருவத்தை சென்றடைந்தார்?
Robert Edwin Peary, American, 06 - April - 1909.

20) துணைக்கோள்களற்ற (Moons) இரண்டு கோள்கள் எவை?
Mercury, Venus.

21) அணு குண்டை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு அணு குண்டை கண்டுபிடித்தார்?
Robert Oppenheimer, America, 1945.

22) மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின் விளக்கை கண்டுபிடித்தார்?
Thomas Alva Edison, America, 1879.

23) ஒலிபெருக்கியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு ஒலிபெருக்கியை கண்டுபிடித்தார்?
Horace Short, Britain, 1900.

24) நுணுக்குக்காட்டியை (Microscope) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு நுணுக்குக்காட்டியை கண்டுபிடித்தார்?
Janssen, Netherlands, 1590.

25) பக்ரீரியாவை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு பக்ரீரியாவை கண்டுபிடித்தார்?
Leeuwenhock, Netherlands, 1683.

26) வாயு அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு வாயு அடுப்பை கண்டுபிடித்தார்?
Robert Wilhelm Bunsen, Germany, 1855.

27) இரும்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு இரும்பை கண்டுபிடித்தார்?
Henry Bessemer, England, 1856.

28) Benzene இனை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு Benzene இனை கண்டுபிடித்தார்?
Michael Faraday, England, 1825.

29) X - ray இனை கண்டுபிடித்தவர் யார்?அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு X - ray இனை கண்டுபிடித்தார்?
Wilhelm Conrad Rontgen, German, 1895.

30) X - ray இனை கண்டுபிடித்தவருக்கு எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது?
1901 ஆம் ஆண்டு (First Nobel Prize for Physics In History)


Engr. சுல்தான்

அழுக்கின் அழகு



 
கண்ணாடிகளே சுவராகப் பதிக்கப்பட்டு, பிரமாண்டமாக எழுந்து நின்றது அந்தப் பத்து மாடிக் கட்டடம். முகப்பில் இருந்த ஆங்கிலப் பெயர்ப் பலகை, அது ஒரு மென்பொருள் நிறுவனம் என்பதைக் கூறியது. அதன் இடப்புற வாசலில், இன்னும் கட்டட வேலைகள் நிறைவு பெறாமல் தொடர்ந்து கொண்டு இருந்தன. ஆண்களும் பெண்களுமாக செங்கல்லையும், சிமென்ட்டையும் கட்டடமாக உருமாற்றிக்கொண்டு இருந்தனர்.

இந்தப் பக்கம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணி நேரம் துவங்கியிருந்தது. பிரதான வாசலில் கார்களும் பைக்குகளுமாகக் கடந்துகொண்டு இருந்தன. அடையாள அட்டைகள் ஊசலாட, காதுகளில் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பொருத்திய அழகிய யுவன்களும் யுவதிகளும் பரபரப்பாக நடை பயின்றுகொண்டு இருந்தனர்.

ஸ்வப்னா இறுக்கமான ப்ளூ ஜீன்ஸ் அணிந்திருந்தாள். அதைக் காட்டிலும் இறுக்கமான வெள்ளை நிற டாப்ஸ் அவளது அழகை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. ஜீன்சுக்கும் டாப்சுக்கும் இடையே இரண்டு விரற்கடை அகலத்தில் அழகு 'இடை'வெளி. காலில் கறுப்பு நிற ஹைஹீல்ஸ். சுருள் தலைமுடியை பாண்ட் செய்திருந்தது அவளுக்குக் கூடுதல் கவர்ச்சியைத் தந்தது. ஸ்லீவ்லெஸ் என்பதால் வழவழப்பான கைகளும், பளபளப்பான முகமும், 'ஒன்ஸ்மோர் பார்க்கலாமா மச்சான்?' என்று இளசுகளைச் சுண்டி இழுத்தன. ஸ்வப்னாவுக்கு எந்தக் குறையும் இல்லாத அழகில், அருகில் ஜீன்ஸ் குர்தா வர்ஷா.

“என்ன ஸ்வப்ஸ், இன்னிக்கு ஜொலிக்கிறே... என்ன விசேஷம். டாப்ஸ் புதுசா?”

“நத்திங் ஸ்பெஷல். டாப்ஸ் ஓ.கே-வா?" சிரித்தாள்.

“கிளாஸ்! நெக் ரொம்ப நெருக்கமா இருக்குது. இன்னும் கொஞ்சம் இறக்கமா இருந்தா, சூபர்ப். பசங்க தெறிச்சு ஓடிடுவாங்க!"

"அப்படியா சொல்ற... பண்ணிடலாம்!" - கண்ணடித்தாள். இருவரும் பேசிக்கொண்டே அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.

அதே நேரம் இடதுபுறம் கட்டட வேலை நடந்துகொண்டு இருந்த தலத்தில்... நைந்து அழுக்கான சேலையில் இருந்தாள் சாந்தி. அவள் தலையில் கிழிந்த சாக்குத் துணி சும்மாடும், கைகளில் செங்கல் சட்டியும், கால்களில் பிய்ந்த ரப்பர் செருப்புகளும்... உடம்பு முழுக்க சிமென்ட்டும், செங்கற்தூளும் அப்பியிருந்தன!

"அண்ணே... செங்கல் சட்டியைத் தலைக்கு மேலே வெச்சுக்கிட்டு, ரெண்டு கையாலயும் பிடிச்சுத் தூக்கிட்டுப் போவ ஒரு மாதிரியா இருக்குது. சுத்தியும் ஆம்பளைங்களா இருக்காங்க. நாளைக்கு வீட்லேர்ந்து நானே எடுத்துட்டுவந்திடுறேன். இன்னிக்கு ஒருநாள் மட்டும் மேல போட்டுக்கிடறதுக்கு ஒங்க பழைய சட்டை எதுனா இருந்தா குடுங்கண்ணே" - மேஸ்திரியிடம் கெஞ்சிக்கொண்டு இருந்தாள் சாந்தி.
 

சிறுநீரக கோளாறு



நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS)(கழுத்து,முழங்கை,முன்கை மணிக்கட்டு,கீழ்முதுகு வலி,முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி),சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது.இதை வாத நோய்கள் என்பார்கள்.

பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.

அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக
அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின்,(ஆக்ஸிஜன்,OXIGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.

பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.

அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.

சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.

இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.

விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.

மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகிறது.

இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படையான இது போன்ற விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

G. செல்வராஜ் 

Miracle in Shirdi - Sai Baba's Image appears on Wall !

Friday, January 6, 2012

Long intervening non-coding RNAs play pivotal roles in brain development



 by  

Whitehead Institute scientists have identified conserved, long intervening non-coding RNAs (lincRNAs) that play key roles during embryonic brain development in zebrafish. They also show that the human versions of the lincRNAs can substitute for the zebrafish versions, which implies that the functions of these non-coding RNAs have been retained in humans as well as fish.
Until now, lincRNAs have been studied primarily in cell lines rather than at the organismal level, which has precluded research into how lincRNAs affect growth and development.
“These studies show that zebrafish, an animal that is frequently used to study the genetics of animal development, can also serve as a tool to uncover in systematic fashion the functions of lincRNAs,” says Whitehead Member David Bartel, who is also a Howard Hughes Medical Institute investigator and a professor of biology at MIT. “This is another case in which a phenomenon in zebrafish provides insight into what’s probably happening in humans, as has been established in many studies of protein-coding genes.”

Only a minority of RNAs transcribed in a human cell goes on to template protein production, according to a 2007 assessment of the human genome by the Encyclopedia of DNA Elements (ENCODE) Project Consortium, which was funded by the National Human Genome Research Institute. The rest of the RNAs are dubbed non-coding RNAs (ncRNAs), with those located between protein-coding genes and with lengths of 200 base pairs or longer referred to as lincRNAs.
Despite their prevalence in the cell, lincRNAs have been referred to as the “dark matter” of all the transcribed RNAs because little is known of their functions or mechanisms. One limitation to studying this class of RNAs is their low sequence similarity between species. Unlike protein-coding genes, which are frequently well-conserved between species, lincRNA genes typically have a very small bit of conserved DNA between species, if any. This lack of conservation makes identification of related lincRNAs difficult in closely related species and nearly impossible in distantly related species.
For example, Bartel lab scientists Igor Ulitsky and Alena Shkumatava identified more than 500 lincRNAs in zebrafish but found that only 29 of these have homologs in both humans and mice.
Ulitsky and Shkumatava, who report their findings in this week’s issue of the journal Cell, tested the function of two of the 29 lincRNAs by knocking them down in zebrafish embryos. Both knockdowns had striking effects on the zebrafish’s brain development. Reduction of one of the lincRNAs, which they called cyrano, caused the zebrafish to have enlarged snouts, small heads and eyes, and short, curly tails, while the zebrafish lacking the lincRNA they called megamind had abnormally shaped heads and enlarged brain ventricles.
To test if the human homologs of the cyrano and megamind lincRNAs are functionally equivalent, Shkumatava injected the human versions into the knocked-down zebrafish. Remarkably, the human lincRNAs rescued the zebrafish and restored brain development and head size for both lincRNAs, indicating that the human lincRNAs may have the same role in embryonic development as their zebrafish analogs.
“This work represents a major advance because it provides a framework for studying lincRNAs, a poorly understood, but abundant class of molecules,” says Michael Bender, who oversees RNA processing and function grants at the National Institutes of Health’s National Institute of General Medical Sciences, which partially funded the work. “The discovery that human lincRNAs appear to function much like their zebrafish counterparts in embryonic development suggests that the framework will prove valuable in bringing new insights on the roles played by lincRNAs in mammalian organisms.”
The zebrafish is already a powerful tool for studying genetics. Whitehead Member Hazel Sive, who collaborated with Bartel and his lab members on the Cell paper, uses zebrafish to study brain development and genetic mutations linked to autism.
Says Sive, “The zebrafish is a fantastic, facile system for discovering the mechanisms by which genes work.”
“We humans share with zebrafish this subset of ancient, peculiar genes, and the functionality has been retained in them,” says Ulitsky. “We can perturb them in zebrafish and then replace them with the human ones and, at least in the lincRNAs we look at, the human ones function to restore proper development.”
“Because of this functional conservation of lincRNAs between zebrafish and humans, we’re introducing the zebrafish as a new vertebrate tool that could be used basically to uncover the functions of other lincRNAs,” says Shkumatava.
FINDINGS: Whitehead Institute scientists have identified conserved, long intervening non-coding RNAs (lincRNAs) that play key roles during brain development in zebrafish, and went on to show that the human versions of these RNAs can substitute for the zebrafish lincRNAs.
RELEVANCE: Despite their prevalence in the cell, lincRNAs have been referred to as the “dark matter” of all the transcribed RNAs because little is known of their functions or mechanisms. Until now, lincRNAs have been studied primarily in cell lines rather than at the organismal level, which has precluded research into how lincRNAs affect growth and development.
This work was supported by the National Institutes of Health’s (NIH’s) National Institute of General Medical Sciences (NIGMS), European Molecular Biology Organization (EMBO), Human Frontiers Science Program, and the National Science Foundation (NSF).
_____________
Written by Nicole Giese Rura
David Bartel is a Member at Whitehead Institute for Biomedical Research, where his laboratory is located and all his research is conducted. He is also a Howard Hughes Medical Institute Investigator and a professor of biology at Massachusetts Institute of Technology.
Full Citation:
“Conserved function of lincRNAs in vertebrate embryonic development despite rapid sequence evolution” Cell, December 23, 2011
Igor Ulitsky (1,2,3,5), Alena Shkumatava (1,2,3,5), Calvin H. Jan (1,2,3,4), Hazel Sive (1,3), David P. Bartel (1,2,3).
1. Whitehead Institute for Biomedical Research, Cambridge, Massachusetts 02142, USA.
2. Howard Hughes Medical Institute.
3. Department of Biology, Massachusetts Institute of Technology, Cambridge, Massachusetts 02139, USA.
4. Present address: Howard Hughes Medical Institute and Department of Cellular and Molecular Pharmacology, UCSF, Genentech Hall S472C, 600 16th St, San Francisco, California 94143, USA.
5. These authors contributed equally to this work.

New Materials Remove Carbon Dioxide from Smokestacks, Tailpipes and Even the Airsci


Car exhaust pipe. (Credit: � Dmytro Panchenko / Fotolia)
Science Daily  — Scientists are reporting discovery of an improved way to remove carbon dioxide -- the major greenhouse gas that contributes to global warming -- from smokestacks and other sources, including the atmosphere. Their report on the process, which achieves some of the highest carbon dioxide removal capacity ever reported for real-world conditions where the air contains moisture, appears in the Journal of the American Chemical Society.

Alain Goeppert, G. K. Surya Prakash, chemistry Nobel Laureate George A. Olah and colleagues explain that controlling emissions of carbon dioxide (CO2) is one of the biggest challenges facing humanity in the 21st century. They point out that existing methods for removing carbon dioxide from smokestacks and other sources, including the atmosphere, are energy intensive, don't work well and have other drawbacks. In an effort to overcome such obstacles, the group turned to solid materials based on polyethylenimine, a readily available and inexpensive polymeric material.
Their tests showed that these inexpensive materials achieved some of the highest carbon dioxide removal rates ever reported for humid air, under conditions that stymie other related materials. After capturing carbon dioxide, the materials give it up easily so that the CO2 can be used in making other substances, or permanently isolated from the environment. The capture material then can be recycled and reused many times over without losing efficiency. The researchers suggest the materials may be useful on submarines, in smokestacks or out in the open atmosphere, where they could clean up carbon dioxide pollution that comes from small point sources like cars or home heaters, representing about half of the total CO2 emissions related to human activity.

Study finds wild hybrid sharks



THE UNIVERSITY OF QUEENSLAND   

christopher_marin_-_black_tip_shark
"Wild hybrids are usually hard to find, so detecting hybrids and their offspring is extraordinary."
Image: christopher_marin/iStockphoto
A group of leading marine scientists has discovered that sharks on Australia's east coast display a mysterious tendency to interbreed, challenging several accepted scientific theories regarding shark behaviour.

In a joint-UQ research project, scientists have discovered widespread hybridisation in the wild between two shark species commonly caught in Australia's east coast shark fisheries.

The Australian black tip shark (Carcharhinus tilstoni) and the common black tip shark (C. limbatus) have overlapping distributions along the northern and eastern Australian coastline.

Using both genetic testing and body measurements, 57 hybrid animals were identified from five locations, spanning 2000km from northern NSW to far northern Queensland. Although closely related, the two species grow to different maximum sizes and are genetically distinct.

Dr Jennifer Ovenden, an expert in genetics of fisheries species and a member of the scientific team said this was the first discovery of sharks hybridising and it flagged a warning that other closely related shark and ray species around the world may be doing the same thing.

"Wild hybrids are usually hard to find, so detecting hybrids and their offspring is extraordinary," Dr Ovenden said.

"To find 57 hybrids along 2000km of coastline is unprecedented.

"Hybridisation could enable the sharks to adapt to environmental change as the smaller Australian black tip currently favours tropical waters in the north.

"While the larger common black tip is more abundant in sub-tropical and temperate waters along the south-eastern Australian coastline."
Editor's Note: Original news release can be found here.

Heat leaving species homeless



THE UNIVERSITY OF QUEENSLAND   

emesilva_-_deforestation
"It is becoming increasingly apparent that ecosystems and species are not at risk from a single threat but rather a multitude of factors.
Image: emesilva/iStockphoto
In a world first, University of Queensland and CSIRO scientists have measured the relationship between current climate, climate change and habitat loss on plants and animals on a global scale.

Their results, published recently in Global Change Biology indicate that areas with high temperatures and where average rainfall has decreased over time increase the chance of a species being negatively affected by habitat loss and fragmentation.

“Human population growth has caused significant habitat degradation across the globe, typically in support of agriculture and urban development,” lead researcher Chrystal Mantyka-Pringle from UQ's School of Geography, Planning and Environmental Management said.

“This alone has negatively impacted many species, but combined with rises in temperature and reduced rainfall as a result of a changing climate, there could be catastrophic results for some populations. Serious declines are already a reality for many species.”

The findings have important implications for the conservation of biodiversity under climate change.

“Conservation policy and management strategies that don't take into account the combined effects of habitat loss and a changing climate may be inefficient and at worst ineffective,” Ms Mantyka-Pringle said.

The study suggests the negative effects of interactions between habitat loss and climate on higher order species, such as mammals, reptiles and amphibians are universal.

Ms Mantyka-Pringle said drastic measures may be needed to preserve the world's wildlife for future generations.

“In areas where the effects of climate change and its interactions with habitat loss are expected to be severe, our current management approaches may be inadequate,” she said.

“In these cases more proactive management strategies such as moving species, engineering habitat, and even abandoning our efforts to save certain species in one area in favour of other areas may be more effective.”

The authors argue it is becoming increasingly apparent that ecosystems and species are not at risk from a single threat but rather a multitude of factors.

“Understanding the synergistic effects between climate change and other threatening processes has critical implications for our ability to support and incorporate climate change adaptation measures into policy development and management response," Ms Mantyka-Pringle said.
Editor's Note: Original news release can be found here.

Study finds how HIV hijacks us



THE UNIVERSITY OF MELBOURNE   

Henrik5000_-_virus
"Knowing the structure of the enzyme revealed details on how viruses hijack human enzymes using them to replicate and cause infection."
Image: Henrik5000/iStockphoto
Scientists have determined the structure of the enzyme endomannosidase, significantly advancing our understanding of how a group of devastating human viruses including HIV and Hepatitis C hijack human enzymes to reproduce and cause disease.

The findings open the door to the development of new drugs to combat these deadly viruses that infect more than 180 million people worldwide.

The team of international scientists led by Associate Professor Spencer Williams from the University of Melbourne’s Bio21 Institute and Professor Gideon Davies from the University of York in the UK, studied bacterial endomannosidase as a model for the same human enzyme and successfully determined the three dimensional structure of the enzyme using state of the art synchrotron technology.

Dr Williams said that knowing the structure of the enzyme revealed details on how viruses hijack human enzymes using them to replicate and cause infection.

“If we understand how the viruses use our enzymes, we can develop inhibitors that block the pathway they require, opening the door to drug developments,” he said.

“In the past the problem has been that this group of viruses including HIV, Hepatitis C, Dengue Fever and West Nile virus, are able to bypass the main pathway if inhibited and replicate via a second pathway using this enzyme. Thus for a treatment to be effective, both pathways need to be blocked.

“It was already known how to block the main pathway for these viruses but until now, this endomannosidase bypass pathway has proved a considerable challenge to study.

“Combining international resources and expertise, we were able to determine the endomannosidae structure and this has revealed how we can block the bypass route, stopping the viruses from hijacking human enzymes.”

Professor Davies from the University of York said that the team hopes that the work will lead beyond viruses and will point the way towards similar treatments for other diseases including cancer.

The study is published in the international journal, Proceedings of the National Academy of Sciences (PNAS) this week.
Editor's Note: Original news release can be found here.

கூகுள் குரோமின் புதிய பதிப்பு 16 தரவிறக்கம் செய்வதற்கு




போட்டி என்று எடுத்துக் கொண்டால் குரோம் பிரவுசரை மிஞ்சிட யாரும் இல்லை என்று சொல்லும் வகையில் கூகுள் தன்னுடைய குரோம் பிரவுசரின் பதிப்பு 16னை வெளியிட்டுள்ளது.
அதிக கூடுதல் வேகத்துடன் இயங்குவதுடன் அனைத்து நவீன இணையத் தொழில்நுட்பத்தினையும் இணைத்து செயல்படுவது இதன் முதன்மைச் சிறப்பாக உள்ளது.
பயர்பொக்ஸ் பிரவுசரின் சில நுண்ணியமான செட்டிங்ஸ் அமைப்பு இதில் இல்லை என்றாலும், புதிய தொழில் நுட்பங்களான நேடிவ் கிளையண்ட்(Native Client) மற்றும் எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பத்துடன் இயங்குவதில் சிறந்த பிரவுசராக இது விளங்குகிறது.
தற்போது குரோம் பிரவுசர், குரோம் பீட்டா, குரோம் டெவலப், குரோம் கேனரி மற்றும் குரோம் ஸ்டேபிள் என நான்கு வகைகளில் கிடைக்கிறது. இங்கு குரோம் ஸ்டேபிள் குறித்து தகவல்கள் தரப்படுகின்றன.
இணையத்தின் புதிய தரப்பட்டுத்தப்பட்ட வரைமுறைகளுடன் இணைந்த செயலாக்கம், தானாக முகவரிகள் மற்றும் சொற்களை அமைக்கும் திறன், மற்ற பிரவுசர்கள் தரும் சிறப்புகளைச் சீராக்கி தரும் போட்டி செயல்பாடு, குறைந்த அளவில் பைல், அசாத்திய வேகம் எனப் பல்வேறு சிறப்புகளுடன் இந்த பதிப்பு வெளியாகியுள்ளது.
Native Client தொழில்நுட்பத்தினை தன் பதிப்பு 14ல் கூகுள் வழங்கியது. NaCl எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த தொழில் நுட்பம் மூலம் சி மற்றும் சி ப்ளஸ் ப்ளஸ் குறியீடுகளை ஒரு பிரவுசரில் பாதுகாப்பாக இயக்கலாம்.
குரோம் 16 பல முனைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஒரே நேரத்தில் பல அக்கவுண்ட்களைத் திறந்து வைத்துப் பயன்படுத்தும் வசதி கிடைக்கிறது. அதாவது ஒரே நேரத்தில் பல ஜிமெயில் அக்கவுண்ட்களைத் திறந்து வைத்துப் பயன்படுத்தலாம். ஆனால் இதில் சிக்கல் உள்ளது.
ஒருமுறை நீங்கள் உங்கள் அக்கவுண்ட்டில் நுழைந்து மெயில்களைப் பார்த்துவிட்டால் அக்கவுண்ட் தகவல்கள் கூகுள் சர்வர்களில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் அடுத்து நீங்கள் உங்கள் அக்கவுண்ட் தகவல்களைத் தராமலேயே, மெயில்கள் உங்களுக்கு கிடைக்கும், குரோம் பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் கிடைக்கும்.
பதிப்பு 16 பதியப்படுவது இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்திலேயே நடைபெறுகிறது. டேப்கள் இன்னும் மேலாக இடம்பிடித்துள்ளன. ஆம்னிபாக்ஸ் (Omnibox) என அழைக்கப்படும் தள முகவரியிடம் மிகவும் குறைந்த இடத்தைக் கொண்டுள்ளது.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே கண்ட்ரோல் பட்டன்கள் கிடைக்கின்றன. பல முக்கிய செயல்பாடுகளுக்கானபட்டன்களும் டூல்ஸ் துணை மெனுவில்(Tools submenu) மறைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
பயர்பாக்ஸ் பிரவுசர் தன் ஆட் ஆன் தொகுப்புகள் மூலம், அதன் தோற்றத்தைப் பல வகைகளில் மாற்ற வசதி தருகிறது. ஆனால் குரோம் பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்புகள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளது.
இதனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான பிரவுசர் தோற்றமே கிடைக்கிறது. சைட்பார் போன்ற வசதிகள் இதில் இல்லை. இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்ட் திறக்கையில், ஒவ்வொருவருக்கான ஐகான் மேல் இடது மூலையில் டேப்களின் வரிசையில் காட்டப்படுகின்றன.
குரோம் பிரவுசரின் வசதிகள் அனைத்தையும்,நேவிகேஷன் பாரின் வலது பக்கம் உள்ள பைப் ரிஞ்ச் ஐகான் கிளிக் செய்து பிரிபரன்சஸ்(Preferences) மெனு வழியாகப் பெறலாம். பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.
டேப் பிரவுசிங், புதிய விண்டோ உருவாக்கம், இன்காக்னிடோ(Incognito) என அழைக்கப்படும் பிரைவேட் பிரவுசிங், எக்ஸ்டன்ஷன் சப்போர்ட் மற்றும் பிற வழக்கமான பிரவுசிங் வசதிகள் கிடைக்கின்றன. பிரைவேட் பிரவுசிங் மூலம் குக்கீ வழி நம் தேடல்கள் மற்றும் தளங்களைக் கண்டறிவது தடுக்கப்படுகிறது.
குரோம் பிரவுசர், ஆப்பிள் சபாரி பயன்படுத்தும் ஓப்பன் சோர்ஸ் இயக்கமான வெப்கிட் சாப்ட்வேர் தொகுப்பினையே பயன்படுத்துகிறது. ஆனால் கூகுள் குரோம் தனக்கே உரித்தான வகையில் சில மாறுதலான புரொகிராம்களையும் தன்னு டன் இணைத்துள்ளது.
குரோம் பிரவுசரின் டேப்கள் தான் அதன் மிகச் சிறப்பான அம்சமாகும். அவற்றைப் பிரித்து எடுக்கலாம். அதே போல தனித்தனி விண்டோக்களுடன் அவற்றை மாற்றிக் கொள்ளலாம். தனியே பிரிக்கப்பட்ட ஒரு டேப்பினை எங்கும் இழுத்துச் சென்று ஒட்ட வைக்கலாம். ஒவ்வொரு டேப்பின் இயக்கமும் தனியான இயக்கமாக உள்ளது. இதனால், ஒரு டேப்பின் இயக்கம் முடங்குகையில், மற்றவை பாதிக்கப்படுவதில்லை.
குரோம் பிரவுசரில் திறக்கப்படும் டேப்களின் எண்ணிக்கை 30ஐத் தாண்டுகையில், இதன் இயக்கம் சற்று மந்தப்படுத்தப்படுகிறது. ஆனாலும் இது பெரும்பாலும் கம்ப்யூட்டரின் ப்ராசசர் திறனைப் பொறுத்தே அமைகிறது.
குரோம் பிரவுசரின் சில வசதிகள் மிக மென்மையாகக் கையாளப்பட்டு இயக்கப் படுகின்றன. எடுத்துக்காட்டாக இணையப் பக்கம் ஒன்றில் தகவல்களைத் தேடுகையில், பிரவுசரின் வலது மூலையில் டெக்ஸ்ட் டைப் செய்வதற்கான கட்டம் திறக்கப்படுகிறது. சொல் டைப் செய்திடுகையில் அதன் எழுத்துக்களைப் பின்பற்றி ஏற்கனவே மேற்கொண்ட தேடல்கள் காட்டப் படுகின்றன. அவை இணையப் பக்கத்திலும் ஹைலைட் செய்யப்படுகின்றன.
பயர்பாக்ஸ் பிரவுசரைப் போலவே சர்ச் இஞ்சின் மற்றும் அவற்றை நம் வசப்படுத்துவதில் குரோம் நமக்கு வசதிகளைத் தருகிறது. எந்த சர்ச் இஞ்சின் நம்முடைய மாறா நிலை சர்ச் இஞ்சினாக இருக்க வேண்டும் என்பதனையும், ஷார்ட் கட் கீ தொகுப்புகளையும் வரையறை செய்திடலாம். கூகுள், பிங்கோ மற்றும் யாஹூ தளங்களுக்கான ஆப்ஷன்கள் பிரவுசரிலேயே கிடைக்கின்றன.
எக்ஸ்டன்ஷன் மேனேஜர், புக்மார்க் மேனேஜர் மற்றும் டவுண்லோட் மேனேஜர் ஆகியவை புதிய டேப்களில் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தேடல், நீக்கல் ஆகிய பணிகளை மேற்கொள்ளலாம். எடுத்துக்காட்டாக புக்மார்க் மேனேஜரில் மவுஸ் கர்சர் மேலாகச் செல்கையில், அந்த இணையப்பக்கத்தின் முகவரி காட்டப் படுகிறது. தேவைப்படின் ஒரு முகவரியை அதில் நிலையாக அமைக்கலாம்.
தானாக அப்டேட் செய்திடும் வசதி இதில் தரப்பட்டுள்ளது. இதனால், பிரவுசர் அப்டேட் செய்யப்பட்ட பின், பழைய பதிப்பிற்கு மாற இயலவில்லை. ஆனால், குரோம் பிரவுசரைப் பொறுத்தவரை, யாரும் முந்தைய பதிப்பிற்கு மாற வேண்டிய சூழ்நிலையைச் சந்தித்ததில்லை. அடுத்ததாக, கூகுள் தரும் மொழி பெயர்ப்பு வசதி இந்த பிரவுசரில் தானாகவே இணைத்துத் தரப்படுகிறது.
பிரவுசர் இயக்கத்தில் எச்.டி.எம்.எல்.5 தொழில்நுட்பத்தினை அமல்படுத்தியதில் முன்னிலையில் இயங்கி வருகிறது. பாதுகாப்பினைப் பொறுத்த வரை, குரோம் பிரவுசர் தானாகவே, மோசமான இணைய தளங்களை தடுத்து ஒதுக்கி வைக்கிறது, ஆபத்து கொண்டவை என அடையாளம் காட்டி வைக்கிறது.
வெப்கிட் தொழில் நுட்பம் மற்றும் கூகுளுக்குச் சொந்தமான வி8 ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் இஞ்சின் இணைந்து, குரோம் பிரவுசர் அதிவேகத்தில் செயல்பட திறன் அளிக்கின்றன. இதனைப் பல பிரவுசர் ஆய்வு நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.
அதிவேகமான முதல் பிரவுசர் என சான்றிதழும் கொடுத்துள்ளன. வேகமான, பாதுகாப்பான மற்றும் எளிமையான இந்த பிரவுசரை இயக்கிப் பார்த்து நீங்களும் இதனோடு உங்கள் இணையப் பயணத்தைத் தொடரலாம்.

பல் பிரச்னைகளுக்கான தீர்வுகள்




பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும், முக அழகும் கெட்டுப் போய்விடும்.
பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்க செய்து பல்லை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும்.
தற்பொழுது உள்ள சிகிச்சை முறைகளின் மூலம் பல்லின் வேர்ப்பகுதியை பாதுகாத்து பல்லை விழாமல் காத்துக் கொள்ள முடியும். சொத்தைப் பல்லுக்கு ஆரம்பத்திலேயே வேர் சிகிச்சை செய்வதன் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை பாதுகாக்க முடியும்.
சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது.
குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.
சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உட்பட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது. எச்சிலில் உள்ள ஏசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது.
பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.
பல்லில் சொத்தை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லது பல் சொத்தை வாயில் தொந்தரவை ஏற்படுத்தும் போதே பல் மருத்துவரிடம் காட்டி வேர் சிகிச்சை மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
வேரின் தன்மையைப் பொறுத்து பல்லின் ஆயுள் கூடும். பல்லின் வேர்ப்பகுதியில் பாதிப்பு ஆரம்பித்த உடன் கண்டறிந்தால் செயற்கை வேர் வைத்து பல்லை உறுதியாக்கி அதன் மீது உரை போட்டு பல்லை உயிருடன் காப்பாற்றி விட முடியும்.
இந்த வேர் சிகிச்சையின் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை காப்பாற்றலாம். வேர் சிகிச்சை என்பது எந்த வயதினருக்கும் செய்யலாம். சிறு வயது குழந்தைகளுக்கு கடைவாய்ப்பல் சொத்தை ஏற்பட்டால் அந்தப் பல் 12 வயது வரை அவர்களுக்குத் தேவைப்படும். அதற்கும் வேர் சிகிச்சை உள்ளது.
பொதுவாக வயதானவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் ஏற்கனவே உடலில் உள்ளவர்களுக்கும் அதற்கான அடிப்படை பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் வேர் சிகிச்சை செய்யப்படும்.
வேர் சிகிச்சையின் பின்னர் பல்லில் வலி மற்றும் சேதம் எதுவும் இன்றி நார்மலான பல் போலவே பயன்படுத்தலாம். இதே போல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்யத்தையும், முகத்தில் அழகையும் பாதுகாக்க முடியும்.

திராட்சை விதையில் இருந்து புது வித சிகரெட் கண்டுபிடிப்பு




அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய வகை சிகரெட் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர்.
திராட்சை விதையில் இருந்து இதை உருவாக்கி உள்ளனர். புகையிலையால் தயாரிக்கப்பட்ட சிகரெட் போல இந்த சிகரெட் உடல் நலத்தை பாதிக்காது.
புகையிலை சிகரெட்டில் விஷத்தன்மை கொண்ட ரசாயணம் உள்ளது.  இதனால் புற்றுநோய் ஏற்படுகிறது.
ஆனால் புதிய வகை சிகரெட்டில் விஷத்தன்மை இருக்காது. இருந்தாலும் புகையிலை சிகரெட்டை புகைத்தால் என்ன உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு இந்த சிகரெட்டிலும் ஏற்படும்.
அதே நேரத்தில் புதிய சிகரெட் மூலம் புகையை உள்ளே இழுப்பதால் அதனால் சில பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆனால் புகையிலை சிகரெட் போல அதிக பாதிப்பு ஏற்படாது என்பதால் புகை பழக்கத்தை கைவிட முடியாதவர்கள் இந்த சிகரெட்டை புகைக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.


ஓன்லைனில் பயோடேட்டாவை உருவாக்குவதற்கு




என்ன தான் பெரிய படிப்பு படித்தாலும் தமக்கென்று ஒரு பயோடேட்டா(Bio-data) உருவாக்க வேண்டும் என்றால் பலபேரின் பயோடேட்டாக்களை பார்த்து அதில் எது சிறந்ததாக இருக்கிறதோ அதன்படி தான் பலபேர் பயோடேட்டா உருவாக்குகின்றனர்.
ஆனால் மேலதிகாரிகளை ஈர்க்கும்படி நமக்கு பயோடேட்டாவை 10 நிமிடத்தில் ஒரு தளம் உருவாக்கி கொடுக்கிறது.
பலமணி நேரம் செலவு செய்தாலும் சரியாக பயோடேட்டா அமைய மாட்டேன் என்கிறதே என்று சொல்லும் நம்மவர்கள் கூட இனி தன் திறமையை எங்கு எந்த இடத்தில் காட்டினால் மேலதிகாரிகளை கவரலாம் என்று சொல்லி நமக்கு பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம்.
இத்தளத்திற்கு சென்று முகப்பில் இருக்கும் Get Started என்ற பொத்தானை சொடுக்கி நாம் பயோடேட்டா உருவாக்க ஆரம்பிக்கலாம். நம் பெயர், முகவரி, கல்வித்தகுதி, இதரதகுதிகள் என ஒவ்வொன்றாக கேட்டு வேலை செய்ய விரும்பும் துறைகள் வரை அனைத்தையும் கேட்ட பின் நம் பயோடேட்டாவை எப்படி கொடுத்தால் சிறப்பாக இருக்குமோ அப்படி கொடுக்கிறது.
பல்வேறு வகையான பயோடேட்டாவின் மாடல்கள் இங்கு இருக்கிறது இதில் எது வேண்டுமோ அதை நாம் ஒரே சொடுக்கில் தேர்ந்த்தெடுத்துக் கொள்ள்லாம்.
மேலதிகாரிகளின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்று அழகாக வகைப்படுத்தி கண்ணால் பார்பதற்கு அழகாகவும் சிறப்பாகவும் பயோடேட்டா உருவாக்கி கொடுக்கிறது.
எந்தவிதமான கட்டணமும் இல்லை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இணையம் வழியாக அனைவரும் பார்க்கும் வண்ணமும் தேவைப்படும் போது பிரிண்ட் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

Yatra Shirdi - Shirdi Yatra, Shani Shignapur Yatra I By T-Series Bhakti ...

Sai Baba is Spiritual Guru for us. Baba Showed us The Path of Shraddha and Saburi. If Devotee is on the same Path, He Can Feel The Existence of Baba Everywhere.
Shridi is Paawan Dham of Baba. Utter the name "Om Sai Namo Namah'' and Watch Shirdi Yatra only on T-Series Bhakti Sagar.

If You like the video Please don't forget to share with others & also share your views.

Thursday, January 5, 2012

கடவுச்சொல்லுடன் கூடிய மின்னஞ்சலை அனுப்புவதற்கு




மின்னஞ்சல் அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன, அதில் மிகவும் பிரபலமான தளங்கள் யாஹு, ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவை ஆகும்.
இவற்றின் மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்களை நாம் சாதாரணமாக ஒப்பன் செய்து பார்க்க முடியும். இதற்கு உரிய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் இருந்தால் போதுமானது.
நாம் வேர்ட், பிடிஎப் மற்றும் ஒரு சில கோப்புகளை காப்பதற்காக கடவுச்சொல்லுடன் உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கும் கோப்புகளை கடவுச்சொல் இருந்தால் மட்டுமே ஒப்பன் செய்ய முடியும்.
இதனால் அவற்றில் உள்ள தகவல்கள் திருடப்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் கடவுச்சொல் இல்லாமல் உள்ள கோப்புகளை மிகவும் எளிமையாக மற்றவர்களால் பார்க்கவோ அல்லது திருடிவிடவோ முடியும். இதுபோல் நாம் அனுப்பும் மின்னஞ்சல் ஒவ்வொன்றுக்கும் கடவுச்சொல் இட்டால் எவ்வாறு இருக்கும்.இதற்கு LOCKBIN என்னும் தளம் உதவி செய்கிறது.
சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு செல்லவும். அங்கு தோன்றும் விண்டோவில் உங்களுடைய பெயர், உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிடவும்.
பின் நீங்கள் குறிப்பிட வேண்டிய செய்தியை தட்டச்சு செய்து பின் வேண்டிய கோப்பினை பதிவேற்றம் செய்து, மேலும் CAPTCHA கோடினை உள்ளிட்டு இறுதியாக ஒப்பந்த செக்பாக்சில் டிக் செய்து SUBMIT பொத்தானை அழுத்தவும். உங்களுடைய மின்னஞ்சல் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றுவிடும்.
பின் அந்த மின்னஞ்சலை ஒப்பன் செய்யும் போது ஒரு விண்டோ ஓபன் ஆகும். அந்த கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலமாக உங்களுடைய நண்பர்கள் அந்த மின்னஞ்சலை பெற்றுக்கொள்வார்கள். இதன் மூலம் மின்னஞ்சலையும் கடவுச்சொல் கொண்டு மூட முடியும்.

தொழிலதிபர்களுக்கு உதவும் பயனுள்ள மென்பொருள்




புதிதாக ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பித்தாச்சு, எடுத்த உடனே மிகப்பெரிய தொகை செலவு செய்து அக்கவுண்டிங் மென்பொருள் உருவாக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாமல் ஓன்லைன் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும்படி இணையவழி அக்கவுண்டிங் மென்பொருள் இணையதளம் ஒன்று உள்ளது
நம் நிறுவனத்தின் வரவு செலவுகளை சரிபார்த்துக் கொள்வதற்கும் நம்மிடம் வேலை செய்யும் நபர்களின் விபரங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் ஓன்லைன் மூலம் சேமித்து நம் நேரத்தை பெருமளவு மிச்சப்படுத்துவத்ற்கு வசதியாக அக்கவுண்டிங் மென்பொருள் தளம் ஒன்று உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Register Now For Free என்ற பொத்தானை சொடுக்கி தேவையான தகவல்களை கொடுத்து ஒரு இலவச கணக்கை திறந்து கொள்ளவும். அதன் பின் எளிதாக நம் நிறுவனத்தின் அக்கவுண்டிங் தகவல்களை கொடுக்க வேண்டியது தான்.
இணைய இணைப்பு மட்டும் தான் தேவை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களுகுக்கு பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது.
பல பயனார்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு அக்கவுண்ட் உருவாக்கி கொடுத்து அவர்கள் துறை சம்பந்தப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்யலாம். தேவைப்படும் தகவல்களை Report எடுத்து பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
புதிதாக ஒரு மென்பொருள் வாங்கி அதை நம் கணணியில் நிறுவி குறிப்பிட்ட தகவல் தேவைப்படும் நேரத்தில் அங்கு சென்று தேடுவதற்கு பதில் ஓன்லைன் மூலம் நம் அக்கவுண்டிங் தகவல்களை பாதுகாப்பாக சேமித்து மொபைல் போனில் உள்ள இணையம் வழியாகவும் நம் தகவல்களை அப்டேட் செய்யலாம்.
இதை எல்லாம் விட இத்தளத்தில் கூடுதல் சிறப்பு ஒன்றும் உள்ளது, அதாவது இத்தளத்தில் இருக்கும் Video Tutorials என்பதை சொடுக்கி ஆரம்பம் முதல் இந்த அக்கவுண்டிங் மென்பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று Screen video உடன் சொல்லி கொடுக்கின்றனர்.

தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம்




அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்திருக்கிறது பெரண்டி கோயில்.
 இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடுவே பச்சைப் புல்வெளியில் பாழடைந்து காணப்படுகிறது.
கருவறை, அர்த்த மண்டபம் ஆகியனவும் சிதைவடைந்த கற்களும், கல்வெட்டுக்களும் கோயிலின் பழைமைக்குச் சான்றாக விளங்குகின்றன.
இது முதலாம் இராஜசிங்கன் (1581-1592) கட்டிய கோயில் எனக் கூறப்படுகிறது. கண்டி இராச்சியத்தை ஆண்ட இராஜசிங்க மன்னன் இந்து தெய்வங்களில் நம்பிக்கை கொண்டிருந்தான். குறிப்பாக சிவ வழிபாட்டில் தன்னைக் கூடுதலாக ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.
தனது இராச்சியத்தை தக்க வைத்துக்கொள்ளவும் பாதுகாப்புக்காகவும் கிராமிய தெய்வ வழிபாட்டு முறைகளையும் செய்துள்ளான். இந்நிலையிலேயே சீதாவாக்கை ஆற்றை அண்மித்ததாக பைரவர் கோயிலை அமைக்கத் திட்டமிட்டான்.
மக்களின் ஆதரவை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவும் மட்டுமல்லாது காவல் தெய்வத்தின் அவசியமும் இந்தக் கோயில் கட்டப்படுவதற்கு முக்கிய காரணமாகும்.
அதற்காக இந்தியாவிலிருந்து நிபுணர் ஒருவரை இராஜசிங்கன் வரவழைத்தான். அவரது பெயர் அரிட்டுகே வெண்டு என்கிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் அதிகாரிகள்.
அரிட்டுகே வெண்டு சிற்பத்துறையில் மட்டுமல்லாது சாஸ்திரங்களிலும் சிறந்து விளங்கியுள்ளார். சீதாவாக்கை ஆற்றை இடைமறித்து அதனை வேறு திசைக்குத் திருப்பி பைரவர் கோயில் கட்டப்பட வேண்டும் என அவரிடம் மன்னன் கோரிக்கை விடுத்துள்ளான்.

ஆற்றைத் திசைதிருப்புதல் பாவச்செயல் என்பதுடன் அதனால் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்றும் சாஸ்திரத்தின் பிரகாரம் அவ்வாறு உள்ளதாக அரிட்டுகே வெண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் தான்இஅரசன்இஆறு இந்த மூன்றில் ஒன்று இல்லாமல்போகும் எனத் தெரிவித்துள்ளார். (இதனை சிங்கள மொழியில் "மாவோஇரஜாவோஇகங்காவோ' என்று சொல்வார்கள். இந்தக் கூற்று இப்போதும் வழமையில் உள்ளது
அரிட்டுகே வெண்டுவின் எச்சரிக்கையை ஏற்றுக்கொள்ளாத இராஜசிங்கன் கோயிலைக் கட்டுமாறு பணித்துள்ளான். அதன்பிரகாரம் கடுமையான உழைப்பின் பின்னர் ஆற்றை மறித்து பைரவர் கோயில் உருவாகியுள்ளது.
சுமார் 2 ஆயிரம்பேர் 20 ஆண்டுகள் கடுமையாக உழைத்து இந்தக் கோயிலைக் கட்டியதாக "அசிரிமத் சீதாவக' எனும் சிங்கள நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரிட்டுகே வெண்டுவின் எச்சரிக்கையின்படி கோயில் அமைக்கப்பட்ட பின்னர் இராஜசிங்க மன்னன் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தகவல் தந்தார்கள்.

இலங்கைக்குப் படையெடுத்த போர்த்துக்கேயர் இந்து ஆலயங்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். அதில் இந்த பைரவர் கோயிலும் உடைக்கப்பட்டது.
கோயில் சிலைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் அழிக்கப்பட்டன. அப்போது தொடக்கம் சிதைவுற்ற நிலையிலேயே இந்தக் கோயில் காணப்படுகிறது. இராஜசிங்கனின் தந்தை மாயாதுன்னையின் கட்டளையின்பேரில் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் இன்னுமொரு தகவல் கூறுகிறது. எவ்வாறாயினும் இந்த ஆலயம் சுமார் 500 வருட கால பழைமை உடையது.
கோயிலின் பிரதான வாயில் உட்பட நான்கு வாயில்கள் காணப்படுகின்றன. உள்வீதியுடன் வெளிப்பிரகாரம் கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. கருவறைத் தளம் உட்பட அனைத்துப் பகுதிகளுமே மிகச் சிறந்த சிற்பவேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.
பைரவர் கோயில் பெரண்டி கோயிலானது எப்படி?
தல்துவையில் கோயிலுக்கு அருகில் வசிக்கும் மக்கள் பெரண்டி கோயில் என்றே அழைக்கிறார்கள். ஆனால் அந்தப் பெயர் எப்படி வந்தது? அதற்கான அர்த்தம் என்ன? போன்ற கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை.
"பைரவர் காவல் தெய்வமாதலால் ஆரம்பகாலங்களில் வாழ்ந்த மக்களிடையே ஓர் அச்சம் காணப்பட்டது. இரவில் நடமாடுவதற்குக்கூடப் பயப்பட்டனர். அந்த மக்கள் அதிகமான நேரங்களில் "பைரவயா எனவோ' (பைரவர் வாறார்) என சிங்களத்தில் பேசிக்கொள்வதுண்டு' என்கிறார் பிரதேசவாசி ஒருவர்.
இந்தப் பெயர் மருவி பெரண்டி கோயில் எனத் தற்போது அழைக்கப்படலாம் எனவும் சிந்திக்கத் தோன்றுகிறது. இது பற்றி ஐ.டி.ஏ.பி.தனபால (வயது79) என்பவர் எம்மோடு சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
"மாயாதுன்னை மன்னனின் மகனான முதலாம் இராஜசிங்கன் வீரம் பொருந்தியவனாக விளங்கினான். ஓர் இராச்சியம் அமைக்குப்போது எந்தெந்தப் பகுதியில் என்னென்ன இருக்க வேண்டும் என்பதையும் அறிந்துவைத்திருந்தான்.
அதன்படி சீதாவாக்கை இராச்சியத்துக்கு வடக்காக காவல் தெய்வம் அமைக்க வேண்டும் எனத் தீர்மானித்தான். சிவனுடைய உருவங்களில் ஒன்றான பைரவருக்குக் கோயில் கட்டி வழிபட்டான். ஏழு அடுக்கு மாடிகளைக் கொண்டதாக அந்தக் கோயில் கட்டப்பட்டதாகவும் எமது மூதாதையர்கள் சொல்வார்கள்' என்றார் தனபால.
தல்துவை பகுதியில் தொல்பொருள் சான்றாக விளங்கும் இந்த ஆலயம் பற்றி அநேகர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் இது தொடர்பாக ஆழமாக ஆராய்ச்சி செய்வதன் மூலம் எமது பாரம்பரியத்தின் பல்வேறு சான்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை எனலாம்.