Search This Blog

Tuesday, September 20, 2011

Managing the Colonial Economy 1948-1956 Study Guide


Lesson Objectives
v  To survey the economic, social and political landscape of Ceylon in 1948.
v  To surface comparable data for 1956.
v  To identify and analyse the factors which contributed to changing the situation between 1948 and 1956.
Lesson Structure
v  Why Colonial Economy?
v  1948 – 1956 Landmarks:
Ø  General Election of September 1947.
Ø  Birth of Independent Ceylon on the 4th of February 1948.
Ø  1949 – Introduction of the Rice Subsidy.
Ø  1950 – Admission of Denominational of Schools into the   Free Education Scheme.
Ø  1950 - Introduction of the GPS Scheme for Paddy.
Ø  1951 – Resignation of Mr. S.W.R.D. Bandaranaike from the U N P and the formation of the S L F P
Ø  1952  - 21st March  - Death of Prime Minister  D.S. Senanayake
Ø  1952 - 26th March – Appointment of Dudley Senanayake as Prime Minister.
Ø  1952 - June – First General Election of Independent Ceylon
Ø  1951 - Commissioning of the first Hydro-power project and the commencement of  the rural Electrification Scheme.
Ø  1952 - Commencement of the Base Hospitals Programme.
Ø  1953 - S W  R D Bandaranaike changes “Sinhala and Tamil in 24 hours” to “Sinhala  only in 24 hours.”
Ø  1953 - 12th August  - Hartal
Ø  1954 - 11th October – Resignation of Dudley Senanayake as Prime Minister.
Ø  1955 - 4th February – Release of the Buddhist Commission Report.
Ø  1956 - February – U N P adopts Sinhala only Policy.
Ø  1956 – General Elections.
Ø  Dissolution of Parliament (due to end in June  1957 only)
1948 – Salient Features
v  Economy
Ø  Duality
Ø  Continuity of the features of a colonial economy.
Ø  Non national dominance over the Plantation Sector.
Ø  Trading Partners
Ø  Trading Basket.
Ø  Fiscal Policy used only as a means of revenue.
Ø  Predominance of Agriculture in the GDP.
v  Society
Ø  Was there a duality?
Ø  Social mobility resulting from the spread of Education.
Ø  Social impact of the growth of an urban working class
Ø  Lack of attempts at diversifying the economy.
v  Political Scene
Ø  Demise of the Ceylon National Congress – Birth  of  UNP - Birth of Sinhala Mahajana Sabha and its amalgamation with the UNP.
Ø  The Political significance of the 1953 Hartal.
Ø  The Language Issue.
Ø  What caused the UNP rout and the MEP landslide win  at the 1956 General Elections?
v  Conclusion
Ø  The Political Leadership of Ceylon, no sooner it received political authority, opted for Free Education. It was to be foreseen that Free Education would throw up an educated young population. The reluctance of educated youth to participate in traditional Agriculture should have been foreseen.
Ø  The leaders  chose to keep Sri Lanka a predominantly agricultural country.  1952 World Bank Report. How do you explain the lukewarm attitude of the leadership to industrialization when the country had sufficient  resources to move into a major industrialization programme as India did ?
Ø  What, in hindsight, are the consequences of the failure to industrialize? Economic ? Socio-political ?

Sorkkathile Mudivaanathu சொர்க்கத்திலே முடிவானது

Sugam Aayiram En Ninaivile சுகம் ஆயிரம் என் நினைவிலே

ஹோ……லிட்டில் பிளவர் பாடல் Oh little flower


பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர் ஆண் : ஓஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர் ஆண் : ஓஹோ…..சிவக்கச் சிவக்கச் சிரிக்கும் அழகிலே தளுக்கிக் குலுக்கி மினுக்கும் நடையிலே நடக்க நடக்கத் துடிக்கும் இடையிலே ஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா ஆண் : ஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர் ஆண் : ஆஹா கனியக் கனிய வளர்ந்த பருவமே கருத்த விழியில் மிரட்டும் உருவமே உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே ஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா ஆண் : ஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர் ஆண் : அழகு அழகு சுகத்தை எடுத்து வடிக்கவா அருகில் இருந்து விருந்து கொடுக்கவா அடுத்த கதையைப் படித்து முடிக்கவா ஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா ஆண் : ஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்

Enathu Vazhkkai Vijayabhaskar KJ Yesudas எனது வாழ்க்கை

Sangeetham Vijayabhaskar SPB Vanijeyaram சங்கீதம்ராகங்கள்

Mudhal Mudhal Vijayabhaskar SPB Vani Jeyaram முதல் முதல் Muthuraman

Hare nandha hare nandha-Naan Avanillai.wmv

Aval Oru Pachaikuzhanthai அவள் ஒரு பச்சைக்குழந்தை

Manthara malare மந்தார மலரே மந்தார மலரே

Maathamo Aavani MSV SP Bala P Susheela Ravi Kaanchana மாதமோ ஆவணி

mullai poo povathu engea(spb hits)

Engal Veeddu Thangatheril எங்கள் வீட்டு தங்கத்தேரில்

kaalam ponnanathu(spb hits)

Vazhvil Chowbhakiyam வாழ்வில் சௌபாக்கியம் வந்தது

poonkoodiae poonkoodiae(spb hits)

Red wine ‘doesn’t protect heart’



VICHEALTH   



Coinciding with the 19 September 2011 United Nations (UN) meeting on non-communicable diseases, the Alcohol Policy Coalition (APC) has released a paper challenging the commonly-held belief that red wine is beneficial for preventing cardiovascular disease. 

“After reviewing all the scientific evidence, it appears any positive effects of alcohol in reducing the risk of cardiovascular disease have been hugely overestimated. In particular, red wine has no special, protective qualities related to cardiovascular disease,” said Kathy Bell, CEO of Heart Foundation (Victoria).

“The Heart Foundation does not recommend red wine or other alcoholic drinks to prevent or treat cardiovascular disease. Drink no more than two standard drinks daily to reduce your lifetime risk of alcohol-related harm.”

More than half of all alcohol-related deaths globally are from cardiovascular disease, cancer or liver cirrhosis. For the second time in its history, the UN is convening a high-level meeting to address the problem of non-communicable diseases, including those caused by alcohol consumption (the only other high-level meeting to tackle a health issue was in 2001, when the focus was AIDS and HIV).

On a global scale, 545,000 people died of alcohol-related cardiovascular disease in 2004. In Australia, five per cent of all cancers are caused by alcohol, including one in five breast cancers.

Australian Bureau of Statistics data shows a sharp increase in wine consumption in Australia.

“It’s no surprise that wine consumption has gone up – price influences consumption and wine is taxed by value not alcohol content. So when Australians can buy cask wine for less than soft drink, it’s little surprise we have a $15billion drinking problem on our hands,” said Todd Harper, CEO of Cancer Council Victoria.

“But there is something the Government can do to help fix the problem - with an effective alcohol tax, Australia can lead the world in reducing alcohol related diseases, including heart disease and cancer.”

The Australian Government is reviewing Australia’s taxation next month and this will be the perfect opportunity to develop a system to tax drinks based on alcohol content with a premium price for more harmful products.

“At the moment, alcohol taxation in Australia is inconsistent and confusing. We know that by taxing alcohol by volume we can reduce drinking to safer levels, which will have a marked effect on heart disease and cancer rates.”

The UN Summit will be held in New York on 19-20 September 2011.

The APC’s paper, titled Cancer, Cardiovascular Disease and Alcohol Consumption is available for download from www.alcoholpolicycoalition.org.au 
Editor's Note: Original news release can be found here.

என் இனிய இந்தியா




உலகத்தைப் படைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார் கடவுள். படைப்புத் தொழிலின் சூட்சுமங்களை தன்னுடனிருந்த மற்ற தேவதைகளுக்கு விளக்கிக்கொண்டிருந்தார் அவர். 
எல்லா படைப்பிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும், ஆக்கமும் அழிவும் சேர்ந்தே படைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
உதாரணமாக, 10 மான்களைப் படைத்தால் 1 சிங்கத்தைப் படைக்க வேண்டும். 100 சாதுக்களைப் படைத்தால் அவற்றுக்கு ஒரு வைரியைப் படைக்க வேண்டும்.

இதோ பாருங்கள், இதுதான் அமெரிக்கா. உலகிலேயே மிக்க செல்வச் செழிப்பான, பணக்காரர்கள் நிறைந்த நாடாகப் படைத்திருக்கிறேன். ஆனால், அதே நேரம் பாதுகாப்பின்மையையும் பதற்றத்தையும் தந்துள்ளேன்.

இது ஆப்பிரிக்கா. இங்கே எழில் கொஞ்சும் இயற்கையழகையும், வற்றாத கனிம வளங்களையும் படைத்துள்ளேன். ஆனால் அதே நேரம், மிக மோசமான பருவ நிலைகளையும், எதிரிகளையும் அளித்துள்ளேன்.

அடுத்தது தென் அமெரிக்கா. மிக அடர்ந்த கானகப் பகுதிகள் உண்டு. ஆனால், குறைவான நிலப்பகுதிகள் காரணமாக அவர்கள் காடுகளை அழித்தே வாழ வேண்டும். ஆபத்தும் உண்டு.

இது ஜப்பான். அறிவார்ந்த மக்கள். நல்ல வளமை. ஆனால் எண்ணற்ற எரிமலைகள். எப்போதும் உயிர் பயம். ஆகவே, நண்பர்களே, எந்தப் படைப்பிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்," என்றார்.

உடனே ஒரு தேவதை கேட்டது - "கடவுளே, இவற்றில் மிகவும் அழகான தேசம் எது?"
புன்னகைத்தபடியே சொன்னார் கடவுள் - "எல்லாவற்றுக்கும் மகுடம் போல் அமைந்திருக்கும் இந்தியா தான் அது. என்னுடைய படைப்புகளிலேயே மிக உயர்வான ஒன்று. அனைத்து வகை கலாசாரங்களும் இணைந்த நாடு, மிகுந்த இயற்கை வளங்கள், தொழில்வளம், தொழில்நுட்ப வளம், மக்கள் வளம், நல்ல கலாசாரம் என அனைத்து வளங்களையும் ஒருசேர அளித்துள்ளேன்," என்றார்.

ஆச்சரியமடைந்த தேவதை கேட்டது - "ஆனால் நீங்கள் எல்லாவற்றிலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்றீர்களே? இந்தியாவுக்கு எல்லாமே வளமையான விஷயங்கள் தானா? பிரச்னைகளே கிடையாதா?"

பதிலாக உரக்கச் சிரித்தபடியே கடவுள் கூறினார்...
"ஹா. ஹா. ஹா., அதற்குத்தான் இந்தியாவுக்கு அண்டை நாடுகளைக் கொடுத்திருக்கிறேனே!"

எழும்பூர் ரயில் நிலையம்



 
Join Only-for-tamil
ன்று முதல் இ
ன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராமத்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந்தால், அவர்கள் முதலில் கால்பதிக்கும் இடம் அநேகமாக எழும்பூர் ரெயில் நிலையமாகத் தான் இருக்கும். சென்னையின் மையப் பகுதியில் பரந்து விரிந்து, அந்தக் கால கம்பீரத்துடன் ஓங்கி நிற்கும் இந்த ரெயில் நிலையக் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லும் பல கதைகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றன.

ங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் மிகச் சில கட்டிடங்களில் முக்கியமானது எழும்பூர் ரெயில் நிலையம். கூவம் ஆற்றின் வட பகுதியில் அமைந்திருந்த எழும்பூர் என்ற கிராமத்தில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வந்தனர். ஜார்ஜ் கோட்டையில் குடியேறிய ஆங்கிலேயர்கள், தண்டையார் பேட்டை, புரசைவாக்கம் என அருகில் உள்ள கிராமங்களை விலைக்கு வாங்கி, மெல்ல மெல்ல தங்கள் குடியிருப்பை விஸ்தரித்தனர். அந்த வகையில் அப்போதைய மெட்ராசின் ஆளுநர் எலிஹூ யேல் (அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு இவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது), நவாப் சூல்பிகர் கான் என்ற முகலாய வைஸ்ராயிடம் இருந்து 1720ஆம் ஆண்டு விலைக்கு வாங்கிய ஊர் தான் எழும்பூர். இந்த ஊரின் பெயர் ஆங்கிலேயர்களின் வாய்க்கு நுழைய மறுத்ததால், எழும்பூரை அவர்கள் `எக்மோர்’ ஆக்கிவிட்டார்கள்.

Join Only-for-tamil

ந்த ஊரில் ஆங்கிலேயர்கள் முதலில் கட்டிய பிரம்மாண்டமான கட்டிடம் எழும்பூர் அருங்காட்சியகம், அடுத்தது எழும்பூர் ரெயில் நிலையம். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை போன்று எழும்பூரிலும் ஓர் பெரிய ரெயில் நிலையம் கட்ட வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 1908ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது. முதலில் ராயபுரம் ரெயில் நிலையத்தில் இயங்கி வந்த அப்போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வேயின் தலைமையகம் பின்னர் இங்கு மாற்றப்பட்டு, 1951ஆம் ஆண்டு வரை இங்கு தான் செயல்பட்டது.
இந்திய, முகலாய மற்றும் கோதிக் கட்டிடக் கலைகளை ஒன்று கலந்து உருவாக்கப்பட்ட இந்தோசாராசனிக் பாணியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தை கட்டியவர் சாமிநாதப் பிள்ளை என்ற தமிழ் கான்ட்ராக்டர். ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm) என்ற ஆங்கிலேயர் கட்டிடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.

Join Only-for-tamil

சாமிநாதப் பிள்ளை அக்காலத்தில் மெட்ராஸ் ராஜ்தானியில் மிகவும் புகழ்மிக்க காண்ட்ராக்டராக விளங்கி வந்தார். பெங்களூர் நகரில் இவர் கட்டிய பல கட்டிடங்கள் மிகவும் சிறப்பாக இருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் நற்சான்றிதழ் அளித்ததை அடுத்து, இந்த பணி சாமிநாதப் பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டது. தான் கட்டும் கட்டிடங்களில் பயன்படுத்துவதற்காக பூந்தமல்லியில் தனியாக செங்கல் சூளைகளை வைத்திருந்தார் சாமிநாதப் பிள்ளை. இங்கு பிரத்யேகமான முறையில் உறுதியான செங்கல்கள் தயாரிக்கப்பட்டன.
வழக்கமான ஸ்டேஷன் மாஸ்டர் அறை, அலுவலர்களின் அறைகளைத் தாண்டி நீண்ட, காற்றோட்டம் மிக்க காத்திருக்கும் அறைகள், சிற்றுண்டி விடுதி, பயணிகளின் உடமைகளை வைக்கும் அறை என எழும்பூர் ரெயில் நிலையம் நன்கு விஸ்தீரணமாக கட்டப்பட்டது. இதற்கு அக்காலத்திலேயே 17 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவானதாம்.

Join Only-for-tamil

க்காலத்தில் மெரினா கடற்கரை, மூர் மார்க்கெட்டிற்கு அடுத்தபடியாக சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் இந்த ரெயில் நிலையம் இருந்திருக்கிறது. மாலை வேளையில் இங்குள்ள சிற்றுண்டி விடுதியில் எதையாவது கொறித்துக் கொண்டு கதை பேச, ஒரு பெரிய கூட்டம் கூடுமாம். கொல்லங்கோடு மகாராஜா உள்பட பல மகாராஜாக்களும், ஜமீன்தார்களும், செல்வச் சீமான்களும் இங்குள்ள ஓய்வு அறையில், ரெயில் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருந்திருக்கின்றனர். 
அக்கால ரெயில்களில் நான்கு வகுப்புகள் இருந்திருக்கின்றன. முதல் வகுப்பு, இந்தியப் பணக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்குமானது. அடுத்தது இரண்டாம் வகுப்பு, அதற்கடுத்தது இண்டர் கிளாஸ் எனப்படும் இடைப்பட்ட வகுப்பு. இரண்டாம் வகுப்புக்கும், இடைப்பட்ட வகுப்புக்கும் இருக்கைகள் தான் வித்தியாசம். இரண்டாம் வகுப்பில் இருக்கை குஷன் சற்று தடிமனாக இருக்கும், பிந்தையதில் மெல்லியதாக இருக்கும். கடைசியாக பெரும்பாலானோர் பயணிக்கும் மூன்றாம் வகுப்பு பெட்டி. இதில் நீளமான மரப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். இதுதான் அன்றைய ரெயில் பயணம்.
 இங்கு
ள்ள இரண்டு 
நடைமேடைகளில் மட்டும் நேராக கார்களை செலுத்திக் கொண்டு போய், தேவையான கம்பார்ட்மெண்டிற்கு அருகில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடும் வசதி ஒரு காலத்தில் இருந்தது. இந்தியாவிலேயே ஹவுரா ரெயில் நிலையத்திற்கு அடுத்து எழும்பூரில்தான் இந்த வசதி இருந்தது. அகல ரெயில் பாதைகள் வந்த பிறகு இந்த வசதி பறிபோய்விட்டது. இப்படி கார்களில் வந்து ரெயில்களுக்கு அருகில் இறங்குபவர்களை வேடிக்கை பார்க்கவே அக்காலத்தில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு கூட்டம் இருக்குமாம்.

ழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டு விடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரெயில் தயாராக காத்திருக்கும். 1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.


Join Only-for-tamil

சி
க்காகோவில் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக உரையை ஆற்றிய சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வந்தார். அப்போது கல்கத்தா செல்லும் வழியில் அவர் சென்னைக்கு வருகை தந்தார். எழும்பூர் ரெயில் நிலையத்தில் அவருக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விவேகானந்தரின் வருகையை ஒட்டி ரெயில் நிலையமே விழாக் கோலம் பூண்டிருந்தது. இப்படி நிறைய வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாய் விளங்கிய எழும்பூர் ரெயில் நிலையம், இன்றுதானே ஒரு வரலாற்று பெட்டகமாய் நின்று கொண்டிருக்கிறது.

நன்றி-தினத்தந்தி
 Engr.Sulthan

காதலில் ஆறு வகை... அதில் நீங்கள் எந்த வகை?



 
"காதல்" இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் `அவனும், அவளும்' பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை எத்தனை?
கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது, குட்டிக்கரணம் அடிப்பது, கலையாத தலையை கலைத்துவிட்டு சீவிக் கொள்வது, சோகமாக இருக்கும் அவன் முகம் அவளைக் கண்டதும் மலர்ந்துவிடுவது என எத்தனை `ரொமான்டிக்' காட்சிகள் ஒவ்வொரு இளைஞனின் வாழ்விலும்.
அப்படி, நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் `ரொமான்டிக்' செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எத்தகையது என்பதை விவரிக்கிறார்கள் இங்கே...
Join Only-for-tamil

மன்மதன் காதல்

காதல் பாடல் பாடிக் கொண்டிருக்கிறீர்களா? அதிலும் உணர்ச்சி ஊட்டும் வரிகளை அழுத்தமாக உங்கள் உதடுகள் உச்சரிக்கிறதா? அப்படியெனில் உங்களுக்கு காதல் உணர்வுகள் அதிகம். காதல்வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம். உங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த வகை ரொமான்டிக்கை ஆய்வாளர்கள் `மன்மதன் காதல்' என்கிறார்கள். இந்த வகையில் உள்ள ஒரே ஒரு குறைபாடு காதலர் இருவரில் ஒருவரது ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனாலும் உங்களுக்குள் நல்ல புரிதலும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தலும் நிகழும். இப்படி தீவிர காதலுணர்வு கொண்ட காதலர்கள் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.

கவன ஈர்ப்பு காதல்

நீங்கள் காதலிக்கும் பெண்ணை தினமும் பார்க்கிறீர்கள். ஓரளவுதான் பழக்கம். ஆனால் நெருக்கமில்லை. மற்றவர்களோடு கூட்டத்தோடு கூட்டமாக மட்டுமே சந்திக்க முடிகிறது. அப்போது அவளை கவருவதற்காக, அவள் விரும்பும்படியாக அல்லது அவள் கேட்கும் படியாக பாடுவது, பேசுவது என்று கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறீர்களா? உங்கள் பேச்சை அவளும் ரசித்து புன்னகைக்கிறாள். ஆனால் பதில் எதுவும் சொல்வதில்லை. இப்படி இருக்கிறதா? உங்கள் நிலைமை.
ஆராய்ச்சியாளர்கள் இதனை `கவனஈர்ப்பு காதல்` என்கிறார்கள். இது முழுமையான காதல் அல்ல. உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது. நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள். அவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ விரும்பமாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கிறார்கள் ஆய் வாளர்கள்.

சேமிப்பு காதல்

அவள் மீது அன்பு, அக்கறை, மரியாதை எல்லாமே இருக்கிறது. இளமையின் குறுகுறுப்பு இல்லாத பார்வையே பார்க்கிறீர்கள். பேசவும் செய்கிறீர்கள். அதில் உள்ளர்த்தமோ, ரகசியமோ எதுவுமில்லை. அவளும் அப்படியே பழகுகிறாள். `இது எந்த வகை காதல்?' என்றுதானே கேட்கிறீர்கள்.
இப்படிப்பட்ட காதலை, ஆய்வாளர்கள் `சேமிப்பு காதல்' என்று வகைப்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. இருவரும் ஆழமான அன்பு வைத்திருப்பார்கள். காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள். `காதலி கிடைத்தால் இவளைப்போல கிடைக்கவேண்டும்' என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள். நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழுவதும் நீடிக்கவும் செய்யலாம்.

திட்டக்காதல்

உங்களை பிடித்திருக்கிறது' என்று உங்கள் காதலி சொல்லிவிட்டாள். உங்களுக்கும் அவளைப் பிடித்திருக்கிறது. நன்றாகவே பேசிக் கொள்கிறீர்கள். ஆனால் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் எல்லை மீறல் இல்லவே இல்லை. காமத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள் ஆனால் விரசம் இல்லை. பிரச்சினையைப் பற்றி பேசுகிறீர்கள், உங்கள் குறையை அவளும், அவளது குறையை நீங்களும் சுட்டிக்காட்டி பேசிக் கொள்கிறீர்கள், முரண்பாடு ஏற்பட்டாலும் முட்டிக் கொள்வதில்லை...!
உங்கள் காதல் இந்த நிலையில் இருக்கிறதா?
இது `திட்டக் காதல்'. வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.

இனிப்பு காதல்

அடிக்கடி தீண்டிக் கொண்டும், சீண்டிக் கொண்டும் இருப்பார்கள் சில காதலர்கள். பெரும்பாலும் சீண்டல்கள் எல்லைமீறும். இருந்தாலும் ஒருவரை ஒருவர் தடுப்பதில்லை. அந்த சீண்டலை அனுமதிக்கிறீர்கள்.
இப்படிப்பட்ட காதலராக நீங்கள் இருந்தால்?
இதனை `இனிப்பு காதல்' என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் உணர்வு இருக்கும். அதிக உணர்ச்சி கொண்டவராகவும், கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார்கள். இவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார். இவர்களுக்குள் தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

வெற்றிக்காதல்

காதலி போனில் பேசும்போது லேசாக இருமும் சத்தம் கேட்டால் போதும் உடனே ஆபீசுக்கு விடுமுறை எடுத்துவிட்டு காதலியை நேரில் பார்க்க கிளம்பிவிடுகிறீர்களா? அவள் விளையாட்டுக்காக `உடனே பார்க்க வேண்டும் போலிருக்கிறது வருவாயா?' என்றால் என்ன வேலையிருந்தாலும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு அவளிடம் போய் ஆஜராகி விடுகிறீர்களா? இதுபோன்ற ஆழ்ந்த காதலை அவளும் உங்களிடம் வைத்திருக்கிறாளா?
உங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இதனை `வெற்றிக் காதல்' என்கிறார்கள், ஆய்வாளர்கள். இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயாராவார்கள்.

சரி.. இதில் உங்கள் காதல் (காதலி) எந்த வகை என்று நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதும்!