Search This Blog

Tuesday, May 10, 2011

கதாபாத்திரத்தின் வருகை

மனுஷ்ய புத்திரன்
இன்று காலை
எட்டரை மணிக்கு
ஒரு கதாபாத்திரம்
என் வாழ்க்கையில் நுழைந்தது
நான் இந்த வாக்கியத்தை
சரியாக எழுதியிருக்கிறேனா?
சரியாகத்தான் எழுதியிருக்கிறேன்
நான் கதை எழுதுபவன் அல்ல
மேலும் என்னைப் பற்றியும்
எந்தக் கதைகளும் இல்லை
ஒரு கதாபாத்திரத்திற்கு வேறு வழியில்லை
அது நேராக
என் வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டது
நான் எனக்கு மிகவும் பிடித்த
ஒரு எழுத்தாளனின் கதையைச் சொல்லி
அங்கிருந்துதானே வருகிறாய் என்று கேட்டேன்
கதாபாத்திரம்
வேறொரு எழுத்தாளனின் பெயரைச் சொன்னது
அந்த எழுத்தாளன் எல்லா கதாபாத்திரங்களையும்
பாதியிலேயே கொன்றுவிடுபவன் என்பதால்
அது பொய் சொல்கிறது என்பதைக் கண்டுபிடித்தேன்
கதாபாத்திரம் தனக்கு
ஒரு பெயர் இருப்பதைச் சொன்னது
அந்தப் பெயர்கூட
எனக்கு சந்தேகத்திற்கு உரியதாகவே இருந்தது
அந்த மாதிரியான தோற்றமுள்ள
கதாபாத்திரங்களுக்கு
அந்த மாதிரியான பெயர்களை
எந்த எழுத்தாளனும் சூட்டுவதில்லை
இதிலெல்லாம் சில திட்டவட்டமான
ஒழுங்குகள் இருக்கின்றன
ஆனால்
அது ஒரு கதாபாத்திரம்தான் என்பதில்
எனக்கு சந்தேகமே இல்லை
ஒரு கதாபாத்திரம்
எப்படி ஒரு நாற்காலியில் அமருமோ
அதுபோலவே அதுவும் அமர்ந்தது
ஒரு கதாபாத்திரம்
முதல் வாக்கியத்தை எப்படிப் பேசுமோ
அப்படியே அதுவும் பேசியது
ஒரு கதாபாத்திரம்
எந்த இடத்தில் நம் இதயத்தைத் தொடுமோ
அதுபோலவே அதுவும் தொடுகிறது
கதாபாத்திரத்தின் ஆடைகள்
ஏன் கசங்கியிருக்கின்றன என்று கேட்டேன்
அதற்கு அது
ஒரு கதையைச் சொன்னது
அதன் டைரியில்
ஏன் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன
என்று கேட்டேன்
அதற்கு அது
இன்னொரு கதையைச் சொன்னது
அது ஏன்  எப்போதும்
பதட்டத்துடன் திரும்பித் திரும்பிப் பார்க்கிறது
என்று கேட்டேன்
அதற்கு அது சொன்ன கதைதான்
எல்லாவற்றையும்விட விசித்திரமானது
அது எங்கிருந்து வருகிறது என்று கேட்டபோது
மௌனமாக இருந்தது
எப்போதும்
கதாபாத்திரங்களின் மௌனங்கள்
சொற்களைவிட நம்மை மனம் கசியச் செய்வது
இல்லையா?
எனக்கு ஒரு கதாபாத்திரத்திடம்
எப்படி உரையாடுவதென்றே தெரியவில்லை
எல்லாவற்றையும் கதைகளாய் மாற்றிவிடும்
என் நண்பனிடம் அதை அழைத்துச் செல்லட்டுமா
என்று கேட்டேன்
எல்லா கதாபாத்திரங்களிடமும்
தன்னுடைய உணர்ச்சிகளைக் கலந்துவிடுபவனிடம்
என்னை ஒப்படைத்துவிடாதே என்று
அது கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டது
நீ ஏன் உன் கதையை விட்டு
வெளியே வந்தாய் என்று கேட்டபோது
அரைகுறையாக உருவாக்கப்பட்ட
கதாபாத்திரங்களின் துக்கத்தை
ஒரு வாசகனுக்கு
ஒருபோதும்
புரியவைக்க இயலாது என்றது
கதாபாத்திரம்
என் கண்களை நேராகப் பார்த்துப் பேசுகிறது
நான் மனிதர்களின் கண்களை
ஒருபோதும் சந்திப்பதே இல்லை
நாம் யாருடைய கண்களைப் பார்க்கவில்லையோ
அவர்களைப் பற்றிய எல்லா பொறுப்புகளிலிருந்தும்
விடுபட்டு விடுகிறோம்
ஆனால்
ஒரு கதாபாத்திரத்தின் கண்களை
நம்மால் தவிர்க்க முடிவதே இல்லை
அது பல நேரங்களில்
நமது கண்களைப்போலவே இருக்கிறது
அல்லது நம்மால் ஒருபோதும்
மறக்க முடியாதவர்களின் கண்களாக இருக்கிறது
புத்தகத்திலிருக்கும்
ஒரு கதாபாத்திரத்தை துண்டிப்பது எளிது
நீங்கள் அந்தப் பக்கத்தை
மூடி வைத்துவிடுகிறீர்கள்
நாடகத்திலிருக்கும்
ஒரு கதாபாத்திரத்தை விலக்குவது எளிது
திரைகள் விழுந்துவிடுகின்றன
சினிமாவில் இருக்கும்
ஒரு கதாபாத்திரத்தை அழிப்பது எளிது
விளக்குகள் எரியத் தொடங்கிவிடுகின்றன
வாழ்க்கைக்குள் ஒரு கதாபாத்திரம் வரும்போது
எல்லா ஒழுங்குகளும் குலையத் தொடங்கிவிடுகின்றன
ஒவ்வொரு சிறிய செயலும்
ஒவ்வொரு சிறிய எண்ணமும்
ஒரு புனைவாகத் தொடங்கிவிடுகிறது
ஒரு மனிதனை வெளியேற்றுவதைப்போல
ஒரு கதாபாத்திரத்தை செய்யமுடியாது
ஒரு அன்பைப் புறக்ணிப்பதுபோல
ஒரு கதாபாத்திரத்தின் இருப்பை புறக்கணிக்க இயலாது
ஒரு நிஜ மனிதனும்
ஒரு கதாபாத்திரமும்
எப்படி ஒன்றாக
ஒரு வாழ்க்கையைப்
பகிர்ந்துகொள்ள முடியும் என
கதாபாத்திரத்திடம் துக்கத்தோடு கேட்டேன்
எந்த ஒரு கதாபாத்திரமும்
எப்போதும் ஒரு மனிதனாவதில்லை
ஆனால்
எல்லா மனிதனும்
ஒரு கதாபாத்திரம் ஆகலாம்தானே
என்று அது
என்னை நோக்கிப் புன்னகைத்தபோதுதான்
நான் அதன் வருகையைப்
புரிந்துகொள்ளத் தொடங்கினேன்

There is something always beyond the seing eyes.







1.jpg
2.jpg

Azhagiya Thamizh Magan - Ponmagal Vandhaal -HD

Ponmagal vanthaal

Ponmagal vanthal

Thiyagam Movie Song Download or Watch Nallavarkellam satchigal rendu

Thiyagam Movie Song Download or Watch Nallavarkellam satchigal rendu

Saroja Devi & Sivaji Ganesan in Palum Pazhamum

Sivaji Ganesan & Malini - Chithiram Pesudadi - Sabash Meena

ARODUM

Mudhal mariyaathai - Poongaaththu thirumbumaa - Ilaiyaraaja

பாசமலரே அன்பில் விளைந்த Paasa Malare

Neramithu Neramithu நேரமிது நேரமிது

Classical hit 'Neerodum vaigaiyile... song!

VetiVeruVaasam - Mudhal Mariyathai

அமைதியான் நதியினிலே ஓடும் Amaithiyana Nathiyinilee.

Amar Aawaz - Sumaithaangi - Manithan enbavan deivamagalam

Aaru Manamay Aaru Andavan katalai Sivaji Ganesan_xvid.avi

!

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்
[ திங்கட்கிழமை, 09 மே 2011, 01:46.15 பி.ப GMT ]
எலுமிச்சையில் செடி எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகை உண்டு. வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து கொண்டுள்ள எலுமிச்சை பல்வேறு பலன்களை தருகிறது.
தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.
நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.
மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.
எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை(கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.
நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும். சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.
எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.
சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.