Search This Blog

Wednesday, August 3, 2016

ஆத்திகமும் நாத்திகமும் AASTHIKAM AND NAASTHIKAM


இருபதாண்டுகளுக்கு முன்னர் மலேசியாவிலிருந்து வெளிவந்த 'மயில்' இலக்கியப் பத்திரிக்கையில் வந்த நாத்திகம் -ஆத்திகம்' பற்றிய கேள்வி பதில்.
இந்து சமய விளக்கம்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி
மயில் இலக்கிய இதழ்
1992

கேள்வி:
எம்.இந்திரன்,
கம்போங் போகூல்,
பூச்சோங்

கேள்வி: நம்மிடையே ஒரு சாரார் கடவுள் இருக்கிறது என்றும் மற்றொரு
சாரார் கடவுள் இல்லையென்றும் கூறும் நிலைமை எப்படி ஏற்பட்டது?

பதில்: 'அஸ்து' என்றால் இருக்கிறது என்று பொருள். 'ந அஸ்து' என்றாலோ 'இல்லை' அல்லது 'இல்லாமல் இருக்கிறது' என்று அர்த்தம். இருக்கிறது என்போர் ஆஸ்திகர். இல்லை என்போர் நாஸ்திகர்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்து சமயத்தில் ஒரு மாபெரும் சரிவு ஏற்பட்டது. பெருமளவில் ஊழல்கள், மனிதன் மானிதனை மதிக்காத நிலைகள், சடங்கு சம்பிரதாயங்களின்மூலம் மக்களிடையே சிந்தனை முடக்கத்தைத் தோற்றுவித்துவிட்டனர். சமுதாயத்தில் ஒரு பிற்போக்கு வாதம் நீடித்து நிலவ ஆரம்பித்தது.

அந்த நிலையைத் தக்ர்ப்பதற்குப் பல சிந்தனையாளர்கள் தோன்றினர். சமுதாய வாழ்வை முடக்கிவைத்துக்கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளினின்றும் மக்களை விடுபடச் செய்வதற்காகப் பலவித முயற்சிகளை மேற்கொண்டு பலவித வழிகளைக் கண்டுபிடிக்கலாயினர். இந்து சமயத்திற்கு ஆணிவேராக விளங்குபவை நான்கு வேதங்கள். அந்த வேதங்களை அனுசரித்து மேலும் ஆறு நூல்கள் உள்ளன. இவற்றை 'அங்க நூல்கள்' என்பர். 'சடங்கு' என்னும் சொல்லும் 'சாங்கியம்' என்னும் சொல்லும் இதிலிருந்து ஏற்பட்டவைதாம் வேதங்கள்

நான்கினின்றும் தோன்றிய பகுதி நூல்களாகப் 'பிராமணங்கள்' ஆரண்யகங்கள்', உபநிடதங்கள், முதலியவைகளும் விளங்கின. இவை தவிர தர்ம நூல்கள் புராணங்கள் இதிகாசங்கள் முதலிய நூல்களும் ஏற்பட்டன. பிராம்மணர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. சமுதாயத்தின்மீது இரும்புப்பிடியொன்றை அவ்வர்க்கத்தினர் போட்டுவிட்டனர்.
வேதங்களில் சொல்லப்பட்டுள்ள தத்துவக் கருத்துக்களைவிட, , அவற்றில் காணப்படும் தெய்வங்களை எளிமையாகத் துதிக்கும் முறைகளை விட, அவற்றில் உள்ள வாழ்வியல் உண்மைகளை விட, சடங்குகள் தட்சணைகள் போன்றவையே முக்கியத்துவம் பெற்றன.

    இந்தத் தேக்கநிலைகள்மீது பலதுறைகளைச்சேர்ந்த அறிஞர்கள் பல்முனைத் தாக்குதல்களை நடத்தினர்.
    அவர்களில் புத்தர் மகாவீரர் பொன்றோர் வேதங்களை அறவே மறுத்து,
சடங்குகளைப் புறக்கணித்துப் புதிய சமயங்களைத் தோற்றுவித்தனர். புத்தர் தோற்றுவித்த மதத்தில் கடவுள் கொள்கையும் கிடையாது. வேதங்களும் புறக்கணிக்கப்பட்டன.
    சமணத்தில் அருகன், மலர்மிசை ஏகினான், எண்குணத்தான், வாலறிவன், பொறிவாயில் ஐந்தவித்தான் போன்ற பல பெயர்களில் ஒரு பேரிறைவனையும் அவனுக்குப் பரிவார சக்திகளாகப் பல தெய்வங்களையும் வணங்கினர். ஆனால் வேதங்களுக்குப் பதில்
இவர்கள் 'ஸ்ரீபுராணம்' என்னும் நூலையும் அதன் தொடர்பாக உள்ள பல வழி நூல்களையும் அவர்கள் பின்பற்றினர். 

    வேதங்கள் மார்க்கத்தில் கர்ம காண்டம், ஞானகாண்டம் என்ற இருவேறுபாடுகள் உண்டு. கர்மகாண்டத்தைப் பூர்வமீமாம்சை என்று ஞானகாண்டத்தை உத்தரமீமாம்சை என்றும் சொல்வ்துண்டு. பூர்வமீமாம்சையை கடைபிடிப்பவர்களை பூர்வமீமாம்சகர் அல்லது கர்மகாண்டர் என்றும் குறிப்பிடுவார்கள். வேதங்களில் குறிப்பிடப்பட்ட பூஜை, புனஸ்காரம், கடமைகள் சடங்குகள் முதலியவற்றை மட்டுமே இவர்கள் செய்தனர். பூர்வமீமாம்சையில் கடவுள் கொள்கையே கிடையாது. தேவர்கள் போன்றவர்கள் உண்டு. ஜைமினி என்னும் பெரும் ரிஷி நிறுவியது.  இந்தக் கோட்பாடு. குமாரில பட்டர், மண்டனமிசிரர் போன்ற பெரும் பெரும் மேதைகள் இந்த மதத்தில் இருந்தனர்.
    இவர்களை ஆதிசங்கரர் வாதத்தில் வென்று கடவுள் கொள்கையை ஏற்றுக்கொள்ளச்செய்தார்.
    வேதங்களையும் கடவுட் கொள்கையையும் ஏற்றுக்கொள்ளாத இன்னொரு மதமும் இருந்தது. அதன் பெயர் லோகாயாதம். 'கண்டதே காட்சி; கொண்டதே கோலம்; அனுபவிப்பதே உண்மை. நோக்கத்தின் வழி காரணம்; காரணத்தால் காரியம்; காரியத்தின் மூலம் பலன் - இவ்வாறுதான் தர்க்கரீதியாக அதன் தத்துவங்கள் செல்லும்.
    இதில் இறைவனுக்கே இடமில்லை. பச்சையான நாஸ்திக வாதம். இதில் உயிர், இறைவன், மறுமை, பாவம், புண்ணியம், கற்பு முதலிய விஷயங்கள் கிடையாது. வல்லவன் வகுத்ததே சட்டம், வழி, நியதி, நீதி, எல்லாமே. உடலும் உலகுமே மெய். இப்படியாக மிக விரிவாகவும் ஆணித்தரமாகவும் விவரித்துக்கொண்டே இவ்வாதம் போகும். .
    இந்த வாதத்தைச் 'சார்வாகம்' என்றும் குறிப்பிட்டனர். இந்த மதத்தில் ஆறு உட்பிரிவுகள் இருந்தன.
    அவற்றுள் ஒன்று 'பார்ஹஸ்பத்யம்' எனப்படுவது. அசுரர்களின் குரு சுக்கிரன். அசுரர்களின் விரோதிகள் தேவர்கள். தேவர்களின் குரு பிரஹஸ்பதி. சுக்கிரன் தவம் செய்யச் சென்றிருந்த காலத்தில் சுக்கிரனின் வடிவத்தில் பிரஹஸ்பதி அசுரர்களிடம் வந்தார்.
தேவர்களுடைய மாபெரும் சக்திகளையும் தவவலிமைகளையும் ஆன்மீக ஆற்றலையும் குன்றச்செய்து, அவர்களின் பலத்தையும் பராக்கிரமத்தையும் அழிப்பதற்காக சுக்கிரன் உருவில்
வந்த பிரஹஸ்பதி அவர்களிடம் தவறான முறைகளையும் வழிகளையும் நாஸ்திக வாதத்தையும் பரப்பிவிட்டார்.
    போலி சுக்கிரனாக வந்த பிரஹஸ்பதி பரப்பிவிட்ட மதமாதலால் அதற்கு 'பார்ஹஸ்பத்யம்' என்ற பெயர் ஏற்பட்டது.
 


    உபநிடதங்கள் மிகச்சிறந்த உள்ளர்த்தங்களை உள்ளடக்கியவை. இவற்றில் உள்ள சில தத்துவங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு, அவற்றை விவரித்து, வியாக்கியானம் செய்த உட்சமயங்களும் உண்டு. அவற்றில் ஒன்று ஸாங்க்யம், இதை நிறுவியவர் 'கபிலர்' என்னும் முனிவர். வேதங்களை ஸாங்க்யம் ஏற்றுக்கொண்டது. ஆனால் கடவுள் கொள்கையை இது ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே இதை நிரீஸ்வர சாங்க்யம் என்று அழைத்தார்கள்.
    பிற்காலத்தில் வந்த ஸாங்க்யர்கள் கடவுள் தத்துவத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களை 'சேஸ்வர ஸாங்க்யர்' - 'ச ஈஸ்வர ஸாங்க்யர்' என்பர்.
    கோயில்களையும் சடங்குகளையும் சாஸ்திரங்களையும் அறவே வெறுத்து மிகக்கடுமையாகக் கண்டித்திருக்கின்றனர் சிவவாக்கியர் போன்ற சித்தர்கள்.
    இந்து சமயத்தில் மட்டுமே நாஸ்திக வாதம் உண்டு என்று எண்ணி விடவேண்டாம்.
    இரண்டாயிரத்து ஐந்நூற்று ஆண்டுகளுக்கு முன்னரேயே கிரேக்க நாட்டில் 'எப்பிக்யூரஸ்', ஸீனோ, டெமாக்ரிட்டஸ் போன்ற ஞானிகள் அவரவர் பாணியில் நாஸ்திக வாதங்களை ஏற்படுத்தினர். ஸ்க்கெப்டிக்ஸ் என்ற வகை நாஸ்திக வாதிகளும் இருந்தனர்.
    கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்த சிலர் ஏக்நோஸ்ட்டிக் எனப்படும் நாத்திகத்தை ஏற்படுத்தினர். அதலை சிறந்த அரசியல் ராஜ தந்திரிகளாகிய மாக்கியவெல்லி, ரேனே டேய்கார்ட் போன்றோரின் கொள்கைய்களில் இதன் சாயல் அதிகமாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் நீட்ஷவின் சித்தாந்தங்களை புதுமை வாதத்தை விரும்பிய இளைஞர்கள் படித்தனர்.
    பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த அறிஞர் இங்கர்ஸால். ஒரு மாலை நேரச் சொற்பொழிவுக்கு அந்தக் காலத்திலேயே மூவாயிரத்து ஐந்நூறு டாலர்கள் வாங்கியவர். 'Why I Am Agnostic' - 'நான் ஏன் நாத்திகன்' என்னும் நூல் பகுத்தறிவு பூர்வமாகச் சிந்திக்கும் ஆத்திகர்களாலும் கட்டாயமாகப் படிக்கப்படவேண்டிய புத்தகம். பேரறிஞர் அண்ணதுரையின் சிந்தனையில் மிகப் பெரிய தக்கத்தைத் தோற்றுவித்தவர் இங்கர்ஸால்தான்.
    ஐரோப்பிய சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் வால்ட்டேய்ரும் ரோஸோவும். இவர்களில் வால்ட்டேய்ர் சிறந்ததொரு நாத்திகவாதி.
    இவர்களுடைய சிந்தனைகளைத் தூண்டிவிட்டவர் 'பெனடிக் தே ஸ்ப்பிநோஸா'. இவர் ஒரு யூதர். இவருடைய கொள்கைகள்தாம் இன்றளவும் ஐரோப்பிய பகுத்தறிவு வாதச் சிந்தனைகளில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
    நாஸ்திக வாதம் எப்போதுமே இந்து மதத்தில் இருந்து வந்திருக்கிறது. கடவுள் இல்லை என்று கூறுபவர்களை 'நிரீசுவர வாதிகள்' என்று எண்பது தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள் குறிப்பிட்டனர்.
    எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் என் தந்தையார் சின்னமுத்து பிள்ளையவர்களை அவ்வாறுதான் தென்கிழக்காசியாவில் அன்று வாழ்ந்த இந்து சமயப்பிரமுகர்கள் அழைத்தனர்.
    அதன் நிமித்தம் 'கடவுளின் உண்மைத் தோற்றம்' என்ற தலைப்பில் 1936-ஆம் ஆண்டில் அவர் ஒரு சிறிய விளக்க நூலை எழுத நேரிட்டது. அந்தச் சிறிய நூலின் தாக்கத்தைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்தக் காலத்துத் தமிழ் நேசன் பத்திரிக்கை அச்சிறு  நூலைத் தாக்கி தலையங்கங்களையே எழுதிவிட்டது.

    பெரியாரைப் பற்றி யார் யாரோ ஏதேதோ கூறுவார்கள். ஆனால் உண்மையிலேயே பெரியாரின் நாத்திக வாதத்தால் இந்து சமயம் நன்மையே பெற்றது என்பதுதான் ஆணித்தரமான அசைக்கமுடியாத யதார்த்தமாகும்.
    நாஸ்திக வாதம் இந்து சமயத்துக்கு எந்தக் காலத்திலேயுமே மிரட்டலாக விளங்கியதே கிடையாது. உண்மையிலேயே அதனால்தான் அவ்வப்போது இந்துசமயம் புத்துணர்வு பெற்றே வந்திருக்கிறது. இதுதான் உண்மை.
    நம் சமுதாயத்தில் பல நாஸ்திகர்கள் தங்களை ஆஸ்திகர்கள் என்று கருதிக் கொள்பவர்களைவிடச் சிறந்த நேர்மையாளர்களாகவும் பெரும் சிந்தனையாளர்களாகவும், மேதைகளாகவும் விளங்கியிருக்கின்றனர்.
    சமுதாயத்தில் மலிந்துவிட்ட பிற்போக்கு வாதத்தைத் தைரியமாக எப்போதுமே எதிர்த்து வந்துள்ள வீரம் மிகுந்த சிறுபான்மையினர் அவர்கள். Thanks
http://jaybeestrishul11.blogspot.com.au

Tuesday, August 2, 2016

Wolf pack & strategy

The first 3 are the older or sick & they set the pace of the group. If it was on the contrary, they would be left behind and lost contact with the pack. In ambush case they would be sacrificed. The following are the 5 strongest. In the center follow the remaining members of the pack, & at the end of the group the other 5 stronger. Last, alone, follows the alpha wolf. It controls everything from the rear. That position can control the whole group, decide the direction to follow & anticipate the attacks of opponents. The pack follows the rhythm of the elders & the head of command that imposes the spirit of mutual help not leaving anyone behind.

நம்மாலான தொகை, எவ்வளவு சிறிதாயினும், நம் தமிழ் மொழிக்கான இருக்கைக்கு நிதியாக கொடுப்போம்.

அமெரிக்காவின் ஹாவர்டு பல்கலைக்கழகம் நம் தமிழ் மொழிக்கென ஒரு இருக்கை ஒதுக்கியுள்ளது.இது நம் தமிழ் மொழிக்கான மிகப்பெரிய அங்கீகாரம்.தமிழ் இருக்கைக்கான நிதி திரட்டும் பணி நடந்து வருகிறது,நடிகர் சிவகுமார்,வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது உள்ளிட்டோர் இது குறித்து காணொளி பேசி அனுப்பியுள்ளனர்.நீங்களும் அனுப்புங்கள் என்றார் எழுத்தாளர் அ.முத்துலிங்கம். என் பேச்சின் மீது பெரும் மதிப்பு கொண்ட அவர் தமிழ் இருக்கை குறித்து நீங்கள் தொடர்ந்து மேடைகளில் பேச வேண்டும் என வேண்டுகோள் வைத்த போது,தமிழ் சார்ந்த பணிகளை வேண்டுகோளாக அல்லாமல்,கட்டளையாகவே நீங்கள் சொல்லலாம் என்றேன்.
நண்பர்கள் காணொளியைப் பார்க்க வேண்டுகிறேன்.நம்மாலான தொகை, எவ்வளவு சிறிதாயினும்,உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில், நம் தமிழ் மொழிக்கான இருக்கைக்கு நிதியாக கொடுப்போம்.
Sumathi Srri

The Nightmare,Henry Fuseli's 1781 & Nicolai Abraham Abildgaard, 1800


Henry Fuseli's 1781

Nicolai Abraham Abildgaard, 1800

A great advice for the team leaders.மேலாளர்கள்

நான் முன்னர் பணியாற்றிய இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் டிசைன் பிரிவில் இருந்த மேலாளரை பெரும்பாலான பணியாளர்களுக்குப் பிடிக்காதுதிறமையானவர்ஆனால் யாரிடமும் முகஸ்துதியாகப் பேசமாட்டார்அதற்கு நேர்மாறாக புரடக்ஷன் பிரிவில் இருந்த மேலாளரை அனைவருக்கும் பிடிக்கும்எல்லோரிடமும் சுமுகமாக பழகுவார்சிறிய செயல்களைக் கூட பாராட்டிவிடுவார்.டிசைன் பிரிவு மேலாளர்ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்ற ஆவலுடனே இருப்பார்ஆனால் புரடக்சன் மேலாளரோ அதான் நல்லாப் போயிக்கிட்டு இருக்கில்லஅப்படியே மெயிண்டையின் பன்ணுவோம் என்று சொல்லிவிடுவார்.

டிசைன் பிரிவில் எந்நேரமும் புது முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கும்ஐந்துக்கு ரெண்டு பழுதில்லை என்பது போலத்தான் வெற்றி விகிதமும் இருக்கும்எப்பொழுதாவது ஜாக்பாட் போல அவர்கள் டிசைனில் உருவான இயந்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றுவிடும்சில சமயம் அவர்கள் மிக அட்வான்ஸாக டிசைன் செய்துஅங்கிருக்கும் குறைவான தொழில்நுட்பத்தால்  சரியாக பெர்பார்மன்ஸ் கொடுக்காமல் தோல்வி அடைவதும் உண்டுபல ஆண்டுகளுக்கு முன்னரே,தமிழ்நாட்டின் பல கிராமங்களில் மின் வசதி கூட இல்லாத காலத்தில்,சிறிய ஜெனெரேட்டர்களை தயாரிப்பதற்கு டிசைன் எல்லாம் செய்தார்.இதற்கு இப்போது என்ன தேவை என போர்டு மீட்டிங்கில் நிராகரித்து விட்டார்கள்.

இந்த டிசைன் மேனேஜரால அப்பப்ப நஷ்டம் வந்துவிடுகிறது என பேச்சாக இருந்தாலும்அவர்கள் எடுக்கும் முயற்சிகளால் மற்ற தொழிலாளர்களுக்கு கூடுதல் அறிவு கிடைத்ததுவெற்றியடைந்த சில பிராடக்ட்களால் கம்பெனிக்கு நல்ல பிராண்ட் நேம் கிடைத்ததுஎனவே கம்பெனி அவருக்கு பெரிய தொந்தரவு கொடுக்கவில்லைஇந்த நேரத்தில் புரடக்ஷன் மேனேஜருக்கு நல்ல பெயர் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருந்ததுநிர்வாகத்திடமும்.தொழிலாளர்களிடமும் தன்மையாக நடந்து கொண்டதால் இருந்த மேலாளர்களிலேயே சிறந்தவர் என பெயர் கிடைத்தது

அந்த சமயத்தில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த பலர் வெவ்வேறு நிறுவனங்களுக்குச் சென்றார்கள்நிறுவனமும் விரிவடையத் தொடங்கியிருந்ததால் ஏராளமான புதுமுகங்கள் உள்ளே வந்தார்கள்வந்த அனைவருக்குமே புரடக்ஷன் மேலாளர் ஏற்கனவே பெற்றிருந்த நற்பெயரால் அவர் மீது ஒரு நல் அபிப்ராயம் இருந்தது.அவரும் என்னப்பா எப்படி இருக்கீங்க என புதியவர்களைச் சந்திக்கும் போது அளாவளாவ அவருக்கு இன்னும் மரியாதை கூடியதுடிசைன் மேலாளரோ திறமையானவர்கள்நல்ல உழைப்பாளிகள் என்றால் ஒரளவு பேசுவார்மற்றவர்களிடம் பாராமுகமாய் இருப்பார்நான் சில காலம் அவரிடம் இருந்தேன்நிறைய கற்றுக்கொண்டேன்

அடுத்த தலைமுறை உதவி மேலாளர்கள் எல்லாம் புரடக்ஷன் மேலாளரைப் போலவே வேலை பார்க்கத் துவங்கினார்கள்இருக்கும் தொழில்நுட்பத்தை அப்படியே வைத்துக் கொள்வோம்புதிய முயற்சிகள் வேண்டாம்நம்மால் நஷ்டம் வந்தது என்ற பேச்சு வரக்கூடாது என்ற எண்ணத்திலேயே வேலை பார்த்து அவர்களும் மேலாளர்களானார்கள்.டிசைன் பிரிவுக்கு போவதற்கு மிகவும் தயக்கம் காட்டினார்கள்ஓரிரு பிராஜக்ட்களில் இருந்துவிட்டு பின்னர் வேறு பிரிவிற்கு மாறிக்கொண்டார்கள்.

புரடக்சன் மேலாளர் இப்போது சீனியர் வைஸ் பிரசிடெண்ட் ஆகிவிட்டார்டிசைன் மேலாளர் வைஸ் பிரசிடெண்ட்அந்த நேரத்தில்,நான் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டேன்பெண்கள் திருமணமாகி வேறு ஊருக்குச் சென்றாலும்தங்கள் தெரு வம்புகளை அடிக்கடி கேட்டுத் தெரிந்து கொள்வது போலநானும் எனக்கு நெருக்கமாய் இருந்த அக்கவுண்ட்ஸ் மேலாளரிடம் நிறுவனத்தில் என்ன நடக்கிறது என அடிக்கடி கேட்டுத் தெரிந்து கொள்வேன்,
சில ஆண்டுகளில்டிசைன் சாப்ட்வேர்கள் எல்லாம் கம்பெனியில் வாங்கி இருப்பதாகவும்முன்போல பேப்பரில் வரைவது போல் சிரமப்படாமல் இப்போது டிசைன் டீம் எளிதாக வேலை செய்வதாகவும் சொன்னார்புதிதாக வேலைக்குச் சேர்ந்த சிலர் டிசைன் பிரிவில் இப்போது ஆர்வம் காட்டுவதாகவும்  சொன்னார்டிசைன் மேலாளர் முன்னர் செய்து வைத்திருந்த ஏராள முயற்சிகளால் புதிதாய் வந்தவர்கள் எளிதில் அதை கற்றுக் கொண்டு அவருக்கு இணையாகவும்ஏன் அவரைவிட சிறப்பாகவும் பணியாற்றத் துவங்கினார்கள்தற்போது வைஸ் பிரசிடெண்ட் ஆக இருந்தாலும்,அவர்களுக்கு இணையாக அவரும் சில முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டே தான் இருந்தார்

இப்போது புரடக்சன் துறையிலும் புது முயற்சிகளை செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகி இருந்ததுவழக்கமான முறையிலேயே செயல்பட்டால் லாபம் குறையும் நிலை இருந்ததுஎனவே இப்போது சீனியர் வைஸ் பிரசிடெண்ட்புது முயற்சிகளை மேற்கொள்ளும் உதவி மேலாளர்களுடன் இணைந்து சில முயற்சிகளைச் செய்தார்அதிக லாபம் கிடைக்கவும் அவருக்கு இன்னும் பெரிய பேர் கிடைத்தது.
நிறுவனத்தில் உள்ளவர்களிடம் எல்லாம் இதேதான் பேச்சாக இருக்கிறதாம்இவர் மட்டும் ஆரம்பத்திலேயே டிசைன் பிரிவுக்கு போயிருந்தால் இந்நேரம் இந்த நிறுவனத்தின் டிசைன் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும் என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்களாம்.

கால ஓட்டத்தில் நானும் மேலாளர் ஆகிவிட்டேன்.  சென்ற வாரம் நந்தனம் ட்ரேட் செண்டரில் ஒரு இண்டஸ்டிரியல் எக்ஸ்போவுக்குப் போயிருந்தேன்சுற்றி வந்து கொண்டிருந்த போது,  பழைய நிறுவனத்தில் என்னிடம் பணியாற்றிய ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது.அவரும் தற்போது இன்னொரு நிறுவனத்தில் மேலாளர்தொழில்துறை பற்றி பொதுவாக பேசிக் கொண்டிருந்தோம்எங்களின் டிசைன் மற்றும் புரடக்ஷன் மேலாளர்கள் பற்றித்தான் அதிகம் பேசிக் கொண்டோம்.விடைபெறும் போது அவர்நீயும் இப்போது மேலாளர் ஆகிவிட்டாய்,யார் பாணியை பின்பற்றுகிறாய்உனக்குப் பிடித்த டிசைன் மேலாளரைப் போலத்தானே நீயும் இருப்பாய் எனக் கேள்வியையும் கேட்டு பதிலையும் அவரே சொல்லிக் கொண்டார்நான் சிரித்த படியே,அவரைப் பிடிக்கும் தான் ஆனால் நான் வேலையில் பின்பற்றுவது புரடக்சன் மேலாளரின் வழி என்று சொல்லிவிட்டு அவரின் ஆச்சரியப் பார்வையுடன் விடை பெற்றேன்.   

ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம்

ஆகஸ்ட் 2 செவ்வாய்க்கிழமை வரலாற்றில் மிகச் சிறந்த நாள். ஒரே நாளில் 6 உன்னத நிகழ்வுகள்.
1. குருப்பெயர்ச்சி
2. ஆடிப்பெருக்கு
3. ஆடி அமாவாசை
4. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் பெருவிழா
5. திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்த லட்சதீப திருவிழா
6. ஆடிசெவ்வாய்
நமது வாழ்க்கையில் வரும் மிக அரிதான இப்புனித நாளில் இறைவனை துதிப்பதும், ஆலயங்கள் செல்வதும், கிரிவலம் சுற்றுவதும், பித்ருகடன் தீர்ப்பதும் மிகச் சிறந்த பலனைத் தரும். 

ஆடி மாதத்தில் (தமிழ் மாதம்) கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் -சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன்) அமையும் தினமே ஆடி அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் பெறுகின்றது. இந் நிகழ்வு இவ் வருடம்  02.08.2015 செவ்வாய்கிழமை அமைவதாக வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ளது.
நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு தர்ப்பணம்
ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம்என்று பெயர்.
இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களுமே!  அமாவாசை தினம் பிதிர் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்றது என்பது ஐதீகம்.
நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.



ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி தெரியாதவர்கள், ஆடி அமாவாசை அல்லது தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று. அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையளையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.
சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது.
திருவாதிரை, புனர்பூசம்,பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பன்னிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.
அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ருபூஜையானது, பித்ருக்களுக்கு தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும்.
மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால், அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்ககூடிய காலமாகும்.
மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால், அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும். அன்று நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால்!!!
மாசி மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.
மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் வந்து, அப்போது அந்த நன்னாளில் சிரார்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணுபுராணம் கூறுகிறது.
திதிகள் தோன்றுவதற்கான காரணம்:
வானவியல் கணிப்பின் படி பூமியை சந்திரன் வலம்-சுற்றி வருவதும் பூமியும் சந்திரனும் இணைந்து சூரியனை வலமாக சுற்றி வருவதும் நிரூபிக்கப்பெற்ற உண்மைகள். பூமி தன்னைதானே சுற்றுவதால் பூமியில் இரவு, பகல் ஏற்படுகின்றன. அத்துடன் தன்னைத் தானே சுற்றும் பூமி, சூரியனையும் சுற்றி வருவதானது நாமும் உறுண்டு கொண்டு ஆலயத்தைச் சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போன்ற நிகழ்வாகும். சந்திரன் பூமியை வலம் வருவதோடு பூமியுடன் இணைந்து சூரியனையும் சுற்றி வருவருகின்றமையால் பூமியில் திதிகள் தோன்றுகின்றன. பூமி தனது அச்சில் 231/2 பாகை சரிவாகச் சுற்றுவதனால் பருவகாலங்கள் உண்டாகின்றன.
சில இரவுகளில் பூமியில் உள்ளோருக்கு சந்திரனைக் காண முடிவதில்லை. காரணம் சந்திரன் பூமியைச் சுற்றுவதால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் 29.53 நாட்களுக்கு ஒரு முறை ஒரே நேர்கோட்டில் வருகின்றது. அப்போது பூமியில் உள்ளோருக்கு சந்திரன் தெரிவதில்லை. வேறு விதமாக கூறுவதாயின் சந்திரன் தானாக ஒளிர்வதில்லை சூரியனின் ஒளியைப் பெற்று பிரதிபலிப்பதனால் ஒளிர்வது போல் தோற்றமளிக்கின்றது. அதனால் பூமிப்பக்கம் இருக்கும் சந்திரனின் ஒருபக்கம் (சூரியனின் பக்கத்திற்கு மறு பக்கம்) சூரிய ஒளி படாது இருட்டாக இருப்பதனால் எம்மால் சந்திரனைப் பார்க்க முடிவதில்லை. ஆனால் சூரியனின் பக்கம் இருந்து பார்ப்போருக்கு பிரகாசமாக தெரியும். அன்றைய தினமே அமாவாசை திதி என அழைக்கப்பெறுகின்றது.
ஆனால் சில இரவுகளில் சந்திரனின் முழுத் தோற்றத்தையும் பூமியில் உள்ளோரால் பார்க்க முடிகிறது. காரணம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சஞ்சரித்த சந்திரன் சுமார் 15 நாட்களில் பூமியின் மறுபக்கத்திற்கு சென்று விடுகின்றது, அதாவது; சந்திரன், பூமிக்கு ஒருபக்கத்திலும், சூரியன் மறுபக்கத்திலுமாக, மூன்றும் ஒரே நேர் கோட்டில் வருகின்றது. இப்போது பூமியை நோக்கி இருக்கும் சந்திரனின் பகுதியில் சூரியக் கதிர்கள் பட்டு ஒளிர்கின்றது. அதனால் சந்திரன் பூமியில் உள்ளோருக்கு பிரகாசமாகத் தோற்றமளிக்கின்றது. இந் நாளை பூரணை அல்லது பௌர்ணமி திதி என்று அழைக்கப்பெறுகின்றது.
சூரியனும் சந்திரனும்
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். சூரியனைப் “பிதிர் காரகன்” என்றும், சந்திரனை “மாதுர் காரகன்” என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்.
இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபடிகின்றனர்.
அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பூரணை தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராதன காலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும்.
அமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாதத்திலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.
இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
அதேபோல், சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் தொடக்க மாதமாக தை மாதம் அமைவதால், அந்த மாதத்தில் வரும் அமாவாசைத் திதியும் பிதுர் வழிபாட்டிற்கு சிறப்பானது எனக் கொள்ளப்படுகிறது.
ஆடி அமாவாசை என்பது முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாக இருப்பதனால், அன்றைய தினம் தந்தையை இழந்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கின்றனர்.
இந்துக்களின் நம்பிக்கை

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து தோஷ நிவர்த்தி பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.
அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும் முறையே காலமான தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து அவர்களின் (சந்ததியினரால்) பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் இந்த விரதங்களுக்குரிய தினங்கள் வருகின்றன. இவ்விரதங்களை அனுஷ்டிப்பவர்கள் ஆசார சீலர்களாக உபவாசம் இருந்தும் அவ்வாறு இருக்க இயலாதவர் ஒரு பொழுது உண்டும் அனுஷ்டிப்பர்.
இத்தினத்தில் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடித் தூய்மையாராய் பிதிர், தருப்பணம் செய்தும் பிண்டதானம், சிரார்த்தம் செய்தும் இறைவனை வழிபட்டும் அந்தணர்களுக்குத் தானமும், விருந்தினர், சுற்றந்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவும் அளித்தும் அவர்களுடன் போசனம் செய்து விரதக் கொள்கையுடன் இருப்பர்.
இறந்த தந்தை, தாயார் நற்கதி அடைதற் பொருட்டும், பிதிகளாக எம்மைச் சுற்றும் அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசி பெறவும் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் பிள்ளைகள் விரதங்களை அனுஷ்டிக்கிறார்கள். பிதிர்கள் மகிழ்வுற்றால் அம்மனை சிறக்கும் என்பது ஐதீகம். யாழ்ப்பாணத்தில் சிறப்பான நாட்கள் (கனத்த நாட்கள்) என அழைக்கப்படும் விளக்கீடு, தீபாவளி போன்ற தினங்களில் “வீட்டுக்குப் படைத்தல்” என்னும் நிகழ்வு வழக்கத்தில் உள்ளது. அண்மையி யாரவது அந்த வீட்டில் இறந்திருந்தால் தவறாது வீட்டுக்குப் படைத்து பிதிர்களை மகிழ்விப்பர்.
சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியும், ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசையும் சிறப்புப் பொருந்தியன என்று சைவ நுல்கள் கூறுகின்றன.
அவரவர் தந்தை, தாயார் இறந்த திதிகளைத் தவற விட்டவர்கள் ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை நோக்கியும், சித்திரைப் பெளர்ணமி தினத்தில் தாயின் பொருட்டும் சிராத்தம், தருப்பணம், பிண்டதானம் என்பவற்றைச் செய்வர்.
யாழ்ப்பாணம் பகுதியில் வாழும் மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்திலும் (கீரிமலைக் கேணி, கடல்), திருவடிநிலை தீர்த்தக் கரையில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தும்;
மன்னார் பகுதியில் வாழும் மக்கள் பாலாவியில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து  பிதிர் கடன் செலுத்தியும்;
மட்டக்களப்பு பகுதியில் வாழும் மக்கள் மாமாங்கப் பிள்ளையார் கோவில் அமிர்தகழியில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து  பிதிர் கடன் செலுத்தியும்;
திருகோணமலை பகுதியில் வாழும் மக்கள் கோணேஸ்வரர் ஆலய தீர்த்தக் கரையில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து  பிதிர் கடன் செலுத்தியும்;
கொழும்பு வாழ் மக்கள் மோதர-முகத்துவாரம்-கடலில் தீர்த்தமாடியும் தம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து  பிதிர் கடன் செலுத்தியும்;
கனடா-ரொறொன்ரோ வாழ் மக்கள் றிச்மன் -கில்ஸ் இந்து ஆலயத்ததில் அமைந்துள்ள தீர்த்த வாவியில் விஷேடமாக ஒழுங்கு செய்யப்பெற்றுள்ள புரோகிதர் மூலம் தங்கள் பிதிர் கடன்களைச்செலுதி வருகின்றனர்.
மற்றைய இடங்களில் இருப்போர் தமக்கு அண்மையில் இருக்கும் கடற்கரை, ஆறு, குளம் போறவற்றில் நீராடி தமது பிதிர் கடன்களை செலுத்துகின்றனர்
இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை.
இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். மருந்து உண்ணுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன.
எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது.
சங்க காலத்திலும் இதுபோன்ற விடயங்களும் நடைமுறையில் இருந்துள்ளது. முன்னோருக்கு திதி செய்வது, தர்ப்பணம், ஆற்றில் புனித நீராடுவது போன்றவை அமாவாசை தினத்தில் மேற்கொள்ளப்பட்டதை சங்க கால நூல்களும் உறுதி செய்துள்ளன.
மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால் தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட, இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய, அவரோடு இரண்டறக் கலக்க முடியாது.
ஆக, இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு, நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் ஒரு விழாவாக அமாவாசை, பௌர்ணமியை எடுத்துக் கொள்ளலாம். சூரியனின் வடக்கு திசை பயணம் துவங்கும் உத்ராயண காலத்தின் துவக்கமான தை மாதம், மிகவும் புனிதமானது. அந்த மாதத்தில் வரும் அமாவாசையில், கடற்கரை தலங்களுக்குச் சென்று, முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வரலாம்.