Search This Blog

Sunday, September 4, 2011

OBJECTS OF ABHISHEKAM (அபிஷேகப் பொருட்கள்)







தமிழில் சதக நூல்கள் என்ற வகை உண்டு. 
நூறு பாடல்களுடன் காப்புப் பாடல் ஒன்றும் கொண்ட நூல்கள். 
இவற்றில் உலகியல், வாழ்வியல் யதார்த்தவாதக் கருத்துக்கள் கொண்ட பாடல்கள் இருக்கும். பல பாடல்கள் உள்ளத்தை உருக்கும். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழுத்தி அந்த தெய்வத்திடம் சரண் அடைவது போல் பாடல்களை அமைத்திருப்பார்கள். 
சதக நூல்களில் மிகவும் பிரபலமானது குமரேச சதகம்.  
சதகநூல்களில் அறப்பளீசுர சதகம், குமரேச சதகம், தண்டலையார் சதகம் ஆகியவை பிரபலமானவை. 
அண்ணாமலையார் சதகம் என்றொரு நூலும் இருக்கிறது. இது அவ்வளவு 
பிரபலமானதல்ல. 


உலக நடப்பு, வாழ்வியல், யதார்த்தம், லௌகீகம், நீதி, தர்மம் ஆகியவற்றைப் பற்றி பெரும்பாலும் பேசும். 
ஆனாலும் தண்டலையார் சதகம் சற்று வித்தியாசமானவற்றைப் பேசும். 
தொண்டைமண்டல சதகம் தொண்டை மண்டலத்தைப் பற்றி பேசும். 

அபிஷேகத்தை எதெதைக் கொண்டு செய்யலாம் என்பதை அண்ணாமலையார் சதகத்தின் ஒரு பாடல் சொல்லுகிறது.


சுத்தஜலம் அபிடேகம், நல்லெண்ணெய், அரிசி, மா
தூள் மஞ்சள், நெல்லி, முள்ளி,
தூபஞ்சகவியமோடு ஆவின் நெய், பால் தயிர்,
சுவையான பஞ்சாமிருதம்,
உத்த பலா மா, கதலி மாதுளையும் எலுமிச்சை,
ஓங்கு தமரத்தை நாரத்தை
ஒண்கனிச்சுளை, குளஞ்சி, தேன், திரட்டுப்பால்,
உயர் கருப்பஞ்சாற்றுடன்
மெத்தும் இளநீர், அன்னம், வில்வநீர், தபனநீர், 
மிளிர்பொன், இரத்நோதகம்,
மென்பசுங்கர்ப்பூர நற்பன்னீர், சந்தனம்,
விளங்கு தாராபிடேகம்
அத்தநிற் கித்தகைய அபிடேக மதுபுரிந்
தருள்பெறு சைந்தராயர்
அண்ணாவினில் துதிசெய் உண்ணாமுலைக்குரிய 
அணணாமலைத் தேவனே


எளிமையான பாடல். பொருள்கூற அவசியமில்லை. 
இதை மட்டும் சொல்லலாம்.


'மிளிர்பொன்' - இதனை ஸ்வர்ணாபிஷேகம் என்று சொல்வார்கள். 
கனகாபிஷேகம் என்றும் சொல்லப்படும். சிறு பொன் நாணயங்களாகச் செய்துகொண்டு அவற்றை வைத்து அபிஷேகம் செய்வார்கள். காசுகளில் தாமரை முத்திரை இடப்பட்டிருக்கும். சங்கு சக்கரம் பொறிப்பதும் உண்டு. 
'பொற்பூ' என்றொன்று உண்டு. பொன்னாலேயே மலர்களைச் செய்து அவற்றால் அபிஷேகம் செய்வார்கள். இதனை ஸ்வர்ணபுஷ்பம் என்றும் அபிஷேகத்தை 'ஸ்வர்ணபுஷ்பாபிஷேகம்' அல்லது ஸ்வர்ணாபிஷேகம்  என்றும் சொல்வார்கள். 
பெரிய மனிதர்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு உரிய மரியாதை செய்யும்போது தாம்பூலம், பழம், மஞ்சள் போன்றவற்றுடன் பொன்னால் ஆகிய பூவையும் வைத்துக் கொடுக்கவேண்டும். 
பொற்பூ வைக்கமுடியாதபோது அதன் இடத்தில் மலர் வைப்பார்கள்.
'பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது' என்பது ஒரு பழஞ்சொல் வழக்கு. 





இந்த ஸ்வர்ணபுஷ்பம் வழங்குவது தென்கிழக்காசியாவிலும் இருந்தது. 
பண்டைய மலாயாவில் உள்ள சில பகுதிகள் தாய்லந்து பேரரசின் கீழ் இருந்தன. மலாயாவிலிருந்து ஆண்டு தோறும் அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையேனும் அன்பளிப்புகள், கப்பம் போன்றவற்றைத் தாய்லந்து மன்னருக்கு அனுப்பிவைக்கவேண்டும். இதனை பூஙஆ  மாஸ் Bungah Mas அல்லது Bungah Emas  என்பார்கள். பல சந்தர்ப்பங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட பொற்பூக்கள் கொண்ட சிறிய மரத்தைப் போலவே பொன்னால் செய்து அனுப்பிவைப்பார்கள்.

DISAPPEARING MYSTICAL ARTS-காணாமற் போகும் கலை




         சரம், சர ஓட்டம், சரநூல் என்று உங்களில் சிலராவது கேள்விப் பட்டிருப்பீர்கள். இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'சரம்' என்பது அடிப்படையில் மூச்சும்(சுவாசம்) அதன் நடைகள், ஓட்டங்கள், மடை மாற்றங்கள் முதலியவையும்.
மூச்சை சித்தர் பரிபாஷையில் 'ஆறுகால் குதிரை' என்று குறிப்பிடுவார்கள். 
சித்தர் நூல்களில் 'ஞானசரநூல்' என்றொரு நூல் இருக்கிறது.
திருமந்திரத்திலும் பல இடங்களில் திருமூலர் இதனைப் பற்றி குறிப்பிடுகிறார். 
சரத்தை அறிந்தவர்களுக்குப் பலவகையான சித்திகள் கைவரப் பெறும்..
நடிகர் 'சரத்'குமார் எந்த வகையான சரத்தைப் பிடித்து சித்தியைக் கைப்பிடிக்கப் பெற்றார் என்பது தெரியவில்லை. 
"சரம் ஆடுபவனிடம் சுரம் பாடாதே; வாராஹிக்காரனிடம் வாயாடாதே", என்ற சொல் வழக்குகள் இருக்கின்றன. சரத்துக்கு அவ்வளவிற்கு முக்கியத்துவம் இருக்கிறது.
மூக்கில் இரண்டு துவாரங்கள். அவற்றை நாசித் துவாரங்கள் என்று சொல்வார்கள். 
ஒரு விஷயத்தை மிகப் பெரும்பாலோர் கவனித்திருக்க மாட்டார்கள். 
இரு பக்கத்து நாசிகளிலும் ஒரே சமயத்தில் சமமாக மூச்சு ஓடாது. 
சில சமயங்களில் வலது பக்க நாசியில் மூச்சு அதிகமாக வரும். வேறு சமயங்களில் இடது பக்க நாசியில் வரும். அவ்வப்போது வலமிருந்து இடப் பக்கத்துக்கு மாறும். இடமிருந்து வலத்துக்கும் மாறும். 
இடப் பக்கத்து நாசியில் சுவாசம் அல்லது மூச்சு ஓட்டத்துக்கு 'இடகலை' என்றும் வலப் பக்கத்து மூச்சு ஓட்டத்துக்குப் 'பிங்கலை' என்றும் சொல்வார்கள். 
இடகலையைச் 'சந்திர கலை' என்றும், பிங்கலையை 'சூரியகலை' என்றும் குறிப்பிடுவார்கள்.
இது ஓர் அரிய கலை. அற்புதக் கலை. அதிசயக் கலை. 
மனிதனை 'அதிமனிதன்' என்னும் Superman ஆக ஆக்கக்கூடியது. 
இந்தக் கலைகளின் கலையைப் பற்றிய அறிவும் திறமையும் பலவகைக் காரணங்களுக்குப் பயன்படும். காரியங்களுக்கும் பயன்படும். 

ஒருமுறை மலேசியாவின் இந்து சமய இயக்கம் ஒன்றின் தலைவர்களில் ஒருவர் 'வடகலை, பிங்கலை' என்று குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தார். 
கேட்கவே வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. 
'வடகலை', 'தென்கலை' என்னும் சொற்கள் ஸ்ரீவைஷ்ணவம் என்னும் சமயத்தின் இரு பெரும் பிரிவுகள். 'இடகலை', 'பிங்கலை' என்பன சர சாஸ்திரம் சம்பந்தப்பட்டவை. 
இரண்டையும் சேர்த்துக் குழப்படி செய்துகொண்டிருந்தார். 

மலேசியாவில் சமய இயக்கத் தலைவர்களாக இருப்பவர்களுக்கு விஷயம் தெரிந்திருக்க வேண்டியதில்லை என்று சொல்லப்படுகிறது.  
அந்த குறிப்பிட்ட தலைவரைக் கேட்டபோது அவர்களுக்கே உரிய வழக்கப்படி,"We are executives. We run the organisation. You people have vast knowledge. You can deal with that. Since you are there, we dont have to meddle with such matters", என்று சமத்காரமாகச் சொன்னார். ("நாங்கள் நிர்வாகிகள். சமய இயக்கத்தை நாங்கள் நடத்துவோம். உங்களுக்குப் பரந்த ஞானம் இருக்கிறது. நீங்கள் அவற்றைக் கவனித்துக் கொள்ளுங்கள். நீங்களெல்லாம் இருப்பதால் நாங்கள் ஒன்றும் அந்த விஷயங்களில் தலையிட வேண்டியதில்லை"). 
அதெல்லாம் வஞ்சகப் புகழ்ச்சி. வஞ்சப் புகழ்ச்சியல்ல. 
மற்றவர்களென்றால் உச்சி குளிர்ந்துபோய் வடிந்திருப்பார்கள்.

ஆங்கிலத்தில் அல்லவா சொன்னார். ஆகவே, நான் பதில் சொன்னேன், "I am also an executive. I am a CEO of a hospital. I know about these things and was trained for this stuff. And as you have put it nicely, I also possess vast knowledge. And I am involved with religious movements and organsations and I also do organisational work and I teach and give lectures in religion. Don't you think that I would make a better president? With my vast knowledge, expertise, experience, and leadership qualities?" (நானும் ஒரு நிர்வாகிதான். ஒரு மருத்துவ மனைக்குத் தலைமை நிர்வாகி. இந்த மாதிரி நிர்வாகத்தில் பயிற்சி பெற்றவன்.  
நீங்கள் மிக அழகாகச் சொன்னமாதிரி பரந்த ஞானமும் இருக்கிறது. சமய இயக்கங்கள், சமய நிகழ்ச்சிகளின் ஏற்பாடு முதலியவைபற்றி தெரியும். அத்துடன் சமயத்தைச் சொல்லிக் கொடுப்பதோடு, பல சமய உரைகளையும் நிகழ்த்துகிறேன். அப்படியிருக்கும்போது, பரந்த ஞானம், திறமை, அனுபவம், தலைமைத்துவ நிபுணத்துவம் ஆகியவற்றை அதிகமாகக் கொண்ட நான், இந்த இந்து இயக்கத்திற்கு இன்னும் சிறந்த தலைவராக இருப்பதற்கு, எனக்கு அதிகத் தகுதி இருக்கிறது அல்லவா?)
அந்த ஆளின் திமிர் எங்கே போகும்?
ஆனானப்பட்ட இந்து சமயத் தலைவர் அல்லவா?
சொன்னார்.
"Sure, sure. This year we have elections. You can file your nomination."("நிச்சயமாக, நிச்சயமாக. இந்த ஆண்டு நாங்கள் தேர்தலை வைத்திருக்கிறோம். நீங்கள் நாமினேஷனைப் போடலாமே!"). 
ஓர் அரசியல் தேர்தலைவிட மோசமான தேர்தல். அதில் நின்று ஜெயிக்கவா? 
இதெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்.
எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால், நம் அரியகலைகளில் பல இந்த மாதிரி 'ஸெட்டாப்பு'களால்(set-up) அழிந்துகொண்டு வருகின்றன. 
அதனால்தான் ஓர் அரியகலையின் பெயர்கூட அறிந்து கொள்ளப் படாமல் இருக்கிறது.

தங்கபஸ்பம் என்னும் சொர்ண பற்பம்





தங்கபஸ்பம் பற்றி.......





       தாதுபுஷ்டியைத் தொடர்ந்து தங்கபஸ்பத்தைப் பற்றி கேள்வி ஏற்படும்.
                சில உரைகளின்போதும் தனிப்படவும் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள்:


1. தங்க பஸ்பம் என்று ஒன்று இருக்கிறதா? அல்லது சித்தரியலில் கண்ட உருவகமா?


2. தங்க பஸ்பத்தில் உண்மைலேயே தங்கம் சேர்கிறதா?


3. இதைச் சாப்பிடுவதால் இளமை திரும்புமா?


4. இது விஷத்தன்மை படைத்ததா?


                தங்கபஸ்பம் என்பது ஆயுர்வேத மருந்துகளில் ஒன்று. 
                அதனைச்செய்யுமுறைகள் வேறுபடும். தற்சமயத்தில் மூன்று முறைகளைப் பயன்படுத்துவார்கள்.

 

தங்க ரேக்கை முள்ளுக்கீரை சாற்றில் 3-நாள் ஊறவைத்து ரவியிற் (இரவில்) காயவைத்து கல்வத்திலிட்டு சித்திரப்பாலாடை சாற்றில் மைபோல அரைத்து வில்லை தட்டிக் காயவைத்து அதற்கு கடம்பிலையை அரைத்து கவசஞ்செய்து அகலில்வைத்து ஏழுசீலை மண்செய்து நூறெருவிற் புடம் போடப் பற்பமாகும். சவுரியிலைச்சாறு படி-8, சிறுக சிறுக ஒரு சட்டியிலிட்டுக் காயவைத்துத் திரட்டி நிறுத்தி அந்தவிடை ஆடாதொடையிலையும், 1-பலம் புனுகும் 2-கழஞ்சு மேற்படி பற்பமும் சேர்த்து மெழுகுபோலரைத்து நெல்லிக்காய்போலுருட்டி எள்ளெண்ணெயில் போட்டு அந்தி சந்தி ஒவ்வொரு உருண்டை வீதம் 6 மாதம் சாப்பிட்டு மேற்படி எண்ணெயை வாரத்துகிரண்டுமுறை ஸ்நானஞ்செய்து சையோகமும் கரப்பன் பதார்த்தமும் தள்ளிவைக்க வெண்குட்ட முதலான சகல குட்டமும் தீரும்.

கிராம்பை மயானமாய்ப் பொடித்து ஆவின்நெய்யில் மத்தித்து அதிற் பண்வெடை தங்கபற்பம் வைத்து சாப்பிட்டு பாலும் அன்னமும் பொசித்து வர விந்தூரும் தாதுகட்டும் தேகம் பலக்கும்.
                தங்க ரேக்குதான் மூலப்பொருள். தங்கரேக்கு என்பது சுத்தமான தங்கத்தை மெல்லிய தகடாக அடித்துச்செய்யப்படுகிறது. தாளைவிட மெல்லியதாக இருக்கும்.
                தங்கரேக்கை எடுத்து தனலில் வைத்து பழுக்கக் காய்ச்சுவார்கள். பின்னர் அதனை அப்படியே நல்லெண்ணெயில் முக்கி எடுப்பார்கள்.
                இதுபோன்று ஏழு தடவைகள் செய்வார்கள்.
                அதே மாதிரி, பழுக்கக்காய்ச்சி புளித்த மோரில் ஏழு முறை இட்டு எடுப்பார்கள். பின்னர் பசுவின் மூத்திரத்தில் அவ்வாறு செய்யப்படும். இறுதியாக கொள்ளு தானியத்தின் கொதிக்க வைத்த வடி தண்ணீரில் விட்டு எடுப்பார்கள்.
                'ரச கர்ப்பூரம்' என்று ஒன்று இருக்கிறது. 'Mercuric Chloride' என்னும் ரசாயனப் பொருள் அது. நவபாஷாணத்தில் ஒன்றாகும்.
                'நவ பாஷாணம் நவ பாஷாணம் என்று சொல்கிறார்களே, அது என்ன?' என்று கேட்கும் முன்னர் சொல்லிவிடுகிறேன்.
                சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், தாரம், கெந்தி, ரஸகர்ப்பூரம், வெள்ளைப்பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டிப் பாஷாணம் ஆகியவை.
                ரஸகர்ப்பூரத்தை எலுமிச்சம் சாற்றுடன் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்வார்கள்.
                இதனை எடுத்துத் தங்க ரேக்கின் மீது அப்பிவிடுவார்கள்.
                அடுத்தபடியாக மண்சிமிழில் கந்தகத்துடன் சேர்த்து வைத்து வாய்ச்சீலை யிட்டு மண்பூசி மூடிவிடுவார்கள். அது காய்ந்தவுடன் புடம் போடுவார்கள்.
                எட்டு முறையாவது புடம் போடுவார்கள். எட்டு முறையும் ரசகர்ப்பூரத்தைச் சிறிது சேர்த்துக்கொள்வார்கள்.  பஸ்பத்தின் தன்மையைப் பொறுத்து இன்னும் அதிகமாகவும் புடம் போட நேரிடலாம்.
                இன்னொரு முறையும் இருக்கிறது. 'மஞ்சள் கடம்பு' என்னும் தாவரம் ஒன்று இருக்கிறது. அதிலிருந்து ஒருவகையான உப்பு தயாரிப்பார்கள். ஒரு வகைக் கள்ளியின் பாலுடன் இதனைச் சேர்த்து கலவையொன்றைச் செய்வார்கள். இந்தக் கலவையுடன் தங்க ரேக்கைச் சேர்த்து அரைப்பார்கள். அதனைக் காயவைத்த பின்னர், 'கபில நிறம்' போன்ற வண்ணத்தைக்
கொண்டதொரு பஸ்பம் கிடைக்கும்வரை இரு முறையோ அல்லது அதற்கும் மேலாகவோ அதனைப் புடம் போடுவார்கள்.


                வேறொரு முறையில் தங்கரேக்கின் மீது எலுமிச்சஞ்சாற்றுடன் கலந்த ரச கர்ப்பூரத்தை அப்பிப் பழுக்கக் காய்ச்சி, அதனை முள்ளுக்கீரையின் பொடியுடன் கலந்து புடம் போடுவார்கள்.


                இதனை சிறிய அளவில் உட்கொள்ளவேண்டும்.
                அமுக்குராக் கிழங்கு, பூனைக்காலி, கஸ்தூரி ஆகியவற்றுடன் சேர்த்து அதனைச் சாப்பிடவேண்டும். அந்த மூன்றையும் 'அனுபானம்' என்று சொல்வார்கள்.
                முதுமை ஏற்படமாட்டாது. தாது புஷ்டியைத் தோற்றுவிக்கும். பாலுணர்வை அதிகரிக்கும். வீரியத்தையும் ஏற்படுத்தும்.


                மேலே கண்ட விபரத்தின் மூலம் முதல் மூன்று கேள்விகளுக்கும் பதில் சொல்லியாகிவிட்டது.
                அடுத்து,  'இது விஷத்தன்மை படைத்ததா? '


                விஷத்தன்மை படைத்தது என்று சொல்வதற்கில்லை.
                அதைத் தயாரிக்கும்போது ரச கர்ப்பூரம் சேர்கிறது. இது ஒரு விஷம். நவபாஷாணத்தைச் சேர்ந்தது. கந்தகம் போன்றவையும் வேறு சில மூலிகைகளும் சம்பந்தப்படுகின்றன.
                செய்முறையில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் 'ஹோகயா' - 'HOgayaa'-தானுங்களே? இல்லீங்களா?






               

                'தங்க பஸ்பம்' என்பது ஒரு முக்கியமான மருந்து. இது தமிழர்களிடையே புழக்கத்தில் இருந்தது. 'தெரிந்த பெயர், தெரியாத விஷயம்' என்று சொல்வார்கள்.

                ஆகவே இதைப் பற்றி என்னிடம் இருந்த சில நூல்கள், நான் கேள்விப்பட்ட விஷயங்கள் முதலியவற்றை வைத்து சுருக்கமாகத் 'தங்கபஸ்பத்தை' எழுதி வெளியிட்டேன்.



                இதன் தொடர்பாகக் காயகல்பம், Rejuvenation, Longevity, அதிபலம், அதிவேகம்,

அதிபோகம், அதிபுத்தி, புலன்களின் தீட்சண்யம் போன்றவற்றைப் பற்றிய கேள்விகள், டிஸ்ஷன் போன்றவை இருந்திருந்தால் திருப்தியாக இருந்திருக்கும்.



                நான்தான் அந்தக் கட்டுரையின் முடிவிலேயே, 'சரியான முறை இல்லாமல் போனால் 'ஹோகயா' என்று எழுதிவிட்டேனே.



                தங்கபஸ்பம் மட்டுமில்லை..... எந்த மருந்துமே - உங்கள் Aspirin-இலிருந்துZopiclone வரைக்கும் எல்லாவற்றுக்குமே டாக்ஸிஸிட்டி உண்டு.



                ரொம்ப நாளைக்கு முன்னால் ஒரு படம். 'மிஸ் மாலினி'. ஹீரோயின் புஷ்பலதா. அவருடைய வேலைக்காரி சுந்தரிபாய்.

                சுந்தரிபாய் ஒரு பாட்டுப் பாடுவார்......



"பலே ஜோர்... பலே ஜோர்.... பட்டனவாசம்

நான் பாத்துப்பிட்டேன் பாத்துப்பிட்டேன், பணத்துக்கு நாசம்"



என்ற பாட்டு.



                அதில் வரும் அடிகள்,

"தலவலிக்கொரு மாத்திரெ, தடுமனுக்கொரு மாத்திரெ

தவறிப்போயி போட்டுக்கிட்டா தர்மலோக யாத்திரெ"



என்று இருக்கும்.



                இதேதான் எல்லா மருந்துக்கும். அமுதம்கூட விஷமாகும்.

                தங்க பஸ்பம் இதற்கு விதிவிலக்கல்ல.

                இந்த நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்தியர்கள் தங்கபஸ்பத்தைப் பயன்படுத்தியே வந்திருக்கின்றனர்.

                தங்க பஸ்பத்தால் கெடுதல் மட்டுமே உண்டு என்றிருந்தால் இத்தனை ஆண்டுகளாக அதைப் பயன்படுத்தி வந்திருப்பார்களா?

                அரசர்களில் பலர் தங்கபஸ்பம் சாப்பிட்டவர்கள்தாம். அவர்களுக்கு அந்த மருந்து ஊறு செய்திருந்தால், அதைக் கொடுத்த வைத்தியர்களைத் தோலை உரித்திருப்பார்கள், அல்லது போனால் போகட்டும் என்று கழுவில் ஏற்றியிருப்பார்கள்.

                தங்கபஸ்பம் என்னும் உருப்படியே இண்டியன் ·பார்மக்கோப்பியாவில் இருந்து அகற்றப்பட்டிருக்கும்.

                அதற்குப் பதில் 'விஷ சாஸ்திர சிந்தாமணி'யில் இடம் பெற்றிருக்கும்.

                அந்தக் காலத்தில் Slow Poison வகையறாவுக்கு மிகவும் கிராக்கி இருந்தது.

Posted by JayBee

Mountains to climb



August was a nerve-racking month for the world economy. September and October will be no better

CENTRAL bankers are not known for seeking solace in the heavens. But at their annual symposium in Jackson Hole, organised by the Federal Reserve Bank of Kansas City, the world’s leading monetary mavens could be found, after dinner, peering enthusiastically into telescopes set up by the local astronomy club. As he spied the M82 galaxy, 12m light-years away, one central banker remarked: “That puts our problems into perspective.”
On the ground, though, those problems are as big as ever. Christine Lagarde, the new managing director of the IMF, voiced a collective sentiment when she said the world economy found itself in a “dangerous new phase”. Things could get riskier still in the coming weeks.

Many central bankers, including Ben Bernanke, the Fed’s chairman, think it is time for fiscal policy to do more. He gave Congress a scolding at Jackson Hole, arguing that politicians need to address the medium-term fiscal mess while leaving room to cushion the economy now. Barack Obama is working on a jobs plan but the chances of a political rapprochement on issues like America’s payroll-tax cut, due to expire soon, remain uncertain. No deal implies sharply tighter fiscal policy.
In America, the worry is dashed expectations. The Federal Reserve’s policy-setting committee next meets on September 20th and 21st and has scheduled an extra day’s discussion on its arsenal of unconventional monetary weapons. Wall Street hopes it will mark the onset of “QE3”, another big bout of bond-buying. The mood in Jackson Hole suggested that any action will be modest and incremental.
Far more serious danger lies in Europe. Policymakers there put great faith in an agreement they struck on July 21st, which promised more money for Greece as well as more resources and a broader remit for the European Financial Stability Facility (EFSF). That expanded role is due to be ratified by euro-zone parliaments in the next few weeks. The European Central Bank (ECB) regards its recent decision to buy Spanish and Italian bonds as a stopgap until the expanded EFSF is up and running.
But three shadows hang over the EFSF. First, the political timetable for its ratification could slip. Potential causes include Finnish demands for collateral against its contribution to the Greek bail-out and a vote by Germany’s constitutional court, due on September 7th, on the legality of the rescue package (see table).
Second, there is growing confusion about what the revamped rescue fund should do. Europe’s central bankers are desperate for it to take over the bond-buying duties if markets stay skittish over Italy and Spain. Ms Lagarde is pushing another priority. She thinks Europe’s banks urgently need more capital to “cut the chains of contagion” and wants a mandatory recapitalisation, using public funds if necessary and the EFSF in particular. In effect, the IMF wants a repeat of what America’s Treasury did in 2008, when it bullied big banks into taking capital injections.
Many Europeans were furious at Ms Lagarde’s comments, denying any serious capital shortage and arguing instead that if there is a problem, it is one of attracting funding from skittish wholesale markets. Jean-Claude Trichet, the ECB’s president, tried to damp down even that concern, pointing out that banks could tap unlimited liquidity at the ECB and that they had ample collateral left to post in return.
Mr Trichet is right, but only up to a point. The sheer scale of European’ banks’ funding needs (about €1.7 trillion, or $2.5 trillion, in the next three years) is daunting: an idea from Morgan Stanley, to use the EFSF to offer European guarantees on new bank debt, has gained traction recently. And illiquidity is a symptom of concerns about solvency. So Ms Lagarde is right that strengthening banks’ buffers is important. The July stress tests, which did not allow for sovereign defaults, offer scant guidance. Using the market price of sovereign bonds, the IMF thinks that European banks could have unrecognised losses of €200 billion, meaning lots more capital would be needed. The EFSF is one sensible source.
The third and biggest reason to worry is that the EFSF is too small. The fund is being increased to €440 billion. But subtract the money already committed to bail-outs as well as the extra Greece might need if “voluntary” private debt-restructuring falls short (seearticle), and only around €200 billion may be left. At the ECB’s current pace of bond-buying (€6 billion-22 billion a week), that will not last long, especially if some is also set aside for banks.
European politicians are unlikely to cough up more, so much discussion behind the scenes is about how to lever up the rescue facility. Daniel Gros of the Centre for European Policy Studies and Thomas Mayer of Deutsche Bank think the EFSF should be registered as a bank and allowed to borrow from the ECB, using the government bonds it buys as collateral. That kind of arms-length arrangement, they argue, would be much better than having the ECB buy bonds itself, and would give the EFSF huge firepower. Conservative central bankers worry that it would still break the rule that bans direct purchases by the ECB, in spirit at least.
An alternative, quietly touted by some North American officials, is to tempt investors into buying bonds by giving them access to non-recourse loans from the ECB. The model is another American innovation from the financial crisis—the Term Asset-Backed Securities Loan Facility, or TALF. Soft loans from the Fed were designed to tempt investors into buying securities; the Treasury promised to take the first tranche of any losses, thus protecting the Fed. In a European version, cheap, non-recourse loans would encourage investors to buy Italian or Spanish bonds and bring down yields. The ECB would provide leverage, but any initial losses would be borne by the EFSF. The facility’s resources would be magnified, private investors would be drawn in and the price of bonds would still be set by the market.
Dusting off America’s crisis-management ideas makes sense: they were effective. But Europe’s task is far harder, not just because there are many more parties involved but because the end goal is so unclear. American officials were battling the temporary collapse of a financial system. European politicians need to create a new one, either with a more integrated fiscal union or a break-up of the current euro area. Without political leadership, the technocrats cannot solve the problem.