Search This Blog

Friday, July 22, 2011

Automakers Hope to Make Money on Used EV Batteries



Test pack: GM has wired a Volt battery to electronics from ABB to study how used EV batteries could provide backup power for the electrical grid.
Credit: GM

ENERGY


GM and Nissan tout systems to reuse the expensive battery packs.
  • BY KEVIN BULLIS
At $10,000 a piece, electric-car batteries are too expensive to throw out or recycle into scrap materials. And even after a decade of use, when they can't perform well enough to meet the vehicle's demands, they could still be valuable for other uses. Nissan and GM have both recently announced ways they might make some money from them.
Many issues remain unresolved, not the least of which is whether the automakers would need to buy back the batteries from car owners, or whether dealers would simply lease the batteryrather than sell it, which would allow the car company to reclaim it for secondary uses later on.
This week, GM announced a new system that came from its partnership with power electronics and automation giant ABB. The system pairs a battery designed for the Chevrolet Volt with a commercial inverter for interfacing with the power grid. The system employs five to 10 used batteries and could provide a few hours of backup power for homes or small businesses. It could also be used by utilities to help keep the electrical grid working smoothly. Meanwhile,Nissan, as part of a joint venture with the Japanese industrial company Sumitomo, recently announced a system that uses solar panels to charge up batteries. The batteries could then be used to charge electric vehicles, such as the Nissan Leaf, even at night. The system already supplies power to seven charging stations at Nissan's headquarters in Japan, and the company plans to eventually sell smaller charging systems.  
But how long the used batteries would last is still in question. The GM-ABB system is being designed to deliver 15 years of use for utilities who want backup energy storage, which can be used to smooth out fluctuations on the grid caused by the variability in power output from solar panels and wind turbines. Over the next few years, GM plans to extensively test the batteries, as well as the electronics that would connect the system to the grid. Pablo Valencia, GM senior manager for battery life-cycle management, says GM will add more battery cells than the system really needs as a way of ensuring that it can deliver adequate energy for 15 years. He thinks the system can last that long because most of the loss in energy capacity happens in the first few years, "then it levels off."

According to battery researchers, as electrodes and electrolytes age, they undergo changes in structure and chemistry that can make their performance harder to predict. That's one reason that warranties on electric-car batteries are limited to eight years. Although lab tests give researchers some idea of how long the batteries will last, no Volts have been on the road long enough to adequately test the batteries' durability.
The economic benefits of reusing the batteries aren't clear, either. Pamela Fletcher, global chief engineer for the Volt, says it's too early to say which options GM might find viable. One challenge is that since the latest EVs just went on sale, their used batteries won't be available in large numbers for eight to 10 years. If the cost of new batteries decreases significantly over that time, as expected, it will be harder for used batteries to compete. Although the used batteries will already have been paid for, there will still be costs involved: they'll have to be removed from the cars and repackaged for grid use, and automakers may also need to pay the car owners for the batteries

கூகுள் +, பேஸ்புக்கிற்கு போட்டியாக மைக்ரோசொப்டின் இணையம்




பேஸ்புக் மற்றும் கூகுள் வரிசையில் மைக்ரோசொப்டும் சமூக வலையமைபொன்றினை உருவாக்கி வருவதாக ஆதாரங்கள் கசிந்துள்ளன.இதற்கான ஆதாரமாக www.socl.com என்ற இணைய முகவரி வெளியாகியுள்ளது. இம்முகவரியினை மைக்ரோசொப்ட் அண்மையில் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது மைக்ரோசொப்டின் சமூக வலையமைப்பின் முன்வடிவம் எனவும் தவறுதலாக வெளியாகியிருக்கலாம் எனவும் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இச்சமூக வலையமைப்பின் பெயர் "டுலாலிப்" ஆக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. காரணம் அப்பக்கத்தில் "With Tulaip you can find what you need and share what you know easier than ever" எனக்குறிப்பிடப்பட்டுள்ளமையாகும்.
இதேவேளை இப்பக்கம் அத்தளத்திலிருந்து பின்னர் அகற்றப்பட்டுள்ளதுடன் வேறொரு பக்கம் காட்சி படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது மைக்ரோசொப்டின் சமூகவலையமைப்பு என்பதினை உறுதி செய்யும் பல ஆதாரங்கள் உள்ளதாக இணையத்தளங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அதாவது இதன் பெயர் "Tulalip" என்பது அமெரிக்க வொசிங்டனின் ரெட்மொண்ட் நகரின் பூர்வீகக் பழங்குடியினரைக் குறிக்கும் பெயர் எனவும் இங்கேயே மைக்ரோசொப்ட்டின் தலைமையகமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மைக்ரோசொப்டின் தேடல் பொறியான bing நான்கு எழுத்துக்களை கொண்டதுடன் தற்போது அது socl.com தளமும் 4 எழுத்துக்களை கொண்டதாகும்.
சமூக வலையமைப்புகளுக்கிடையிலான போட்டியில் பேஸ்புக் ஏற்கனவே ஜாம்பவானாக உள்ள நிலையில் கூகுள் தனது கூகுள் + ஐ அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் மைக்ரோசொப்டின் இரகசிய முயற்சியும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலக்கை அடைய நினைப்பவர்களுக்கு உதவிடும் இணையம்



இன்று நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று தினந்தோறும் இந்த கேள்வியை தான் ஒரு இணையதளம் கேட்கிறதுஅந்த கேள்விக்கு பொறுப்பாக நாள் தவறாமல் பதில் அளித்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையே மாறிவிட வாய்ப்பிருக்கிறது. நீங்கள் நினைத்ததை முடிப்பவராகலாம்.
இணையதளம் கேட்கும் கேள்விகெல்லாம் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று ஆவேசபடவோ குழப்பமடையவோ வேண்டாம். காரணம் இந்த இணையதளம் உங்கள் நலனில் அக்கறை கொண்டு தான் கேள்வி கேட்கிறது. தவிர இந்த தளத்தின் நோக்கத்தை அறிந்து கொண்டால் நீங்களும் ஆர்வத்தோடு இந்த கேள்விக்கு பதில் அளிக்கவே விரும்புவீர்கள்.
திட்டமிடல் சேவையை வழங்கும் ஐ டன் திஸ் எனும் தளம் தான் "இன்று என்ன செய்தீர்கள்?" என்ற கேள்வியை உரிமையோடு கேட்கிறது. இதற்கு பதில் அளிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையை திறம்பட நிர்வகித்து கொள்ள முடியும் என்றும் சொல்கிறது. இந்த கருத்தை நீங்களும் ஏற்று கொள்வீர்கள்.
எப்படி என்றால் திட்டமிட்டு செய்லபடுவதில் உள்ள இயல்பான சிக்கலுக்கு இந்த தளம் அழகான எளிமையான தீர்வை முன்வைக்கிறது.
தினசரி வாழ்க்கையை திட்டமிட உதவும் இணைய சேவைகள் பல இருக்கின்றன. ஆனால் திட்டமிடல் என்பது பாதி கிணறு தாண்டுவது போல தான். திட்டமிட்டதை திட்டமிட்டபடியே செய்து முடித்தால் தான் வெற்றிப்படிகளில் ஏற முடியும்.
வரிசையாக செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு அவற்றை செய்து முடிக்கும் உறுதியோ உக்கமோ இல்லாவிடில் எந்த பயனும் இல்லையே. இந்த இடத்தில் தான் அ டன் திஸ் இணையசேவை கைகொடுக்கிறது.
செய்ய நினைப்பவற்றை செய்து முடிக்க உதவுகிறது இந்த சேவை. அதிக அதிக்கம் செலுத்தாமல், அழுத்ததையும் ஏற்படுத்தாமல் எளிமையாக இதற்கு உதவுகிறது.
இந்த தளத்தில் உறுப்பினரானதுமே உங்களுக்காக ஒரு நாட்காட்டி பக்கத்தை உருவாக்கி தருகிறது. அந்த நாட்காட்டியில் நீங்கள் குறித்து வைக்க வேண்டியதில்லை. அந்த பொறுப்பை இந்த தளமே ஏற்று கொள்கிறது.
உறுப்பினரானவுடன் இன்று என்னவெல்லாம் செய்தீர்கள்? என்று கேள்வியோடு ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைக்கும். அன்றைய தினம் செய்ததை எல்லாம் நினைவுபடுத்தி பதில் அனுப்பி வைத்தீர்கள் என்றால் மறுநாள் உங்கள் சார்பாக நாட்காட்டியில் அந்த செயல்களை குறித்து வைக்கும்.
இப்படியாக தினமும் மின்னஞ்சலுக்கு பதில் அளித்தீர்கள் என்றால் நாட்காட்டியில் உங்கள் செயல்கள் பதிவாகி கொண்டே இருக்கும்.
ஒரு கட்டத்தில் திரும்பி பார்த்தீர்கள் என்றால் உங்கள் செய்லகளுக்காக டைரி போல இந்த நாட்காட்டி அமைந்திருக்கும். நீங்கள் செய்தது செய்யாதது எல்லாவற்றையும் இந்த நாட்காட்டியை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
நினைத்ததையெல்லாம் செய்து முடித்திருந்தால் இந்த நாட்காட்டி விவரங்களை பார்க்கும் போதே உற்சாகமாக இருக்கும். இல்லை என்றால் குற்ற உணர்வு வாட்டி எடுத்து முடிக்கி விடும். குறிப்பிட்ட இலக்கை அடைய நினைப்பவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும்.
இணையதள முகவரி

முல்லை பூவின் மருத்துவ குணங்கள்

மருத்துவ செய்தி


முல்லைப் பூ தலையில் சூட மட்டும் அல்லாமல் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

இதன் மருத்துவ குணங்கள் பின்வருமாறு:

1. முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு அதன் மணத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

2. முல்லைப் பூவின் சாறு பிழிந்து 3 துளி மூக்கில் விட தலைவலி தீரும்.

3. முல்லைப் பூவின் சாற்றினை 2 அல்லது 4 துளி வீதம் கண்ணில் விட்டு வர கண் பார்வை குறைவு குணமாகும்.

4. ஒருகைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.

5. உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.

6. முல்லைப் பூ கொண்டு தயாரிக்கப்பட்ட கஷாயம் கருப்பை நோய்களை போக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

7. முல்லைப் பூ மட்டுமல்லாமல் அதன் இலை, வேர்ப் பகுதிகளும் அதிக மருத்துவ குணம் கொண்டது.

ஸ்டெம் செல் மூலம் தனக்குத் தானே சிகிச்சை அளித்துக் கொள்ள முடியும்: ஆய்வாளர்கள் தகவல்



நோயால் பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு பதிலாக ஸ்டெம் செல் என்கிற ஆதாரச் செல் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்த ஸ்டெம் செல் மூலம் உடல் உறுப்பில் திசுக்கள் மீண்டும் வளர்ச்சி பெறுகின்றன.
தற்போது நோயாளியின் செல்லில் இருந்தே ஸ்டெம் செல்களை உருவாக்கலாம். இந்த புதிய முறை மூலம் நோயாளியின் பாதிக்கப்பட்ட திசுக்களை மாற்ற முடியும்.
இந்த புதிய கண்டுபிடிப்பை உயிரியல் ஆய்வுக்கான சல்க் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த ஆய்வாளர்கள் நோயாளிகளின் சொந்த செல்லில் இருந்து புதிய தொழில்நுட்பத்தில் பெருமளவு ரத்தச் செல்களை உருவாக்கி உள்ளனர்.
இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் வரவிருக்கும் ஸ்டெம் செல் ஆய்வில் பயனுள்ள பலன்களை பெற முடியும்.
புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளில் இந்த புதிய ஸ்டெம் செல் முறை பயன்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

பெண்ணுக்கு ஏற்ற உடை எது?



சொல்ல நினைக்கிற எல்லாவற்றையும் அப்படி யப்படியே சொல்லிவிட முடிவதில்லை. நாகரீகம் கருதி சிலவற்றை மனதில் பூட்டி வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும் ஒரு விவாதமாவது வர வேண்டும், அந்த விவாதம் மாற்றங்களுக்கு வழி கோல வேண்டும் என்ற நினைப்புடன் சில கருத்துக்களைச் சொல்லியே ஆக வேண்டும். பெண்ணே நீ உன் பண்பாட்டு அடையாளமாகப் பூட்டப்பட்ட சங்லிகளை அறுத்தெறிவதன் ஒரு நடவடிக்கையாக உன் சேலையை வீசிவிடு என்பது அப்படிப்பட்ட ஒரு கருத்து.



பண்பாட்டுப் பாதுகாவலர்கள் கேலியாகப் பார்க்கிறார்கள். “இப்பெல்லாம் எந்தப் பொண்ணு சேலை கட்டுறா? எல்லாரும் சுடிதார், சல்வார்னு மாறி தமிழச்சி அடையாளத்தையே அவுத்துப்போட்டுட்டு நிக்கிறாங்களே,” என்ற விமர்சனம் அந்தக் கேலிப் பார்வையில் இருக்கிறது. சுடிதார் அணியும் பழக்கம் அதிகரித்திருக்கிறது, கிராமங்களில் கூட பரவி வருகிறது என்பது ஓரளவு உண்மைதான். ஆனால் சுடிதாரோடு வரும் அந்தத் துப்பட்டா? அதையும் கடாசிவிட வேண்டும் என்பதே நான் சொல்ல நினைப்பது.



முற்போக்கான சிந்தனையுள்ளவர்களில் கூட பலர் அதை மட்டும் ஒப்புக்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். உலக மயமாக்கல், ஒற்றைப் பண்பாட்டு ஆதிக்கம் முதலியவற்றை எதிர்ப்பவர்கள் சுடிதார், சல்வார், பேண்ட்-சட்டை போன்ற உடைகள் தமிழ்நாட்டுத் தாவணிகளையும், சேலைகளையும் ஒழித்துக்கட்ட வந்த எதிர்க் கலாச்சார ஆயுதங்களாகச் சித்தரிக்கிறார்கள். திருமண விழா ஒன்றில் வாழ்த்திப் பேசிய ஒரு பிரமுகர்,“நம்முடைய கலாச்சாரமாகிய பட்டுச்சேலை, பட்டுத்தாவணி, பாவாடை போன்றவற்றை இதுபோன்ற நிகழ்ச்சிகளில்தான் பார்க்க முடிகிறது. சேலையும் தாவணியும் வெறும் சடங்குப் பொருள்கள் அல்ல. அவை நம் பண்பாட்டு அடையாளம். அத்தோடு சேலை - தாவணியின் அழகு வேறு எந்த உடைக்காவது வருமா,” என்று கேட்டார். பெண்கள் உட்பட அதை ஆமோதித்துக் கை தட்டினார்கள்.



(நல்ல வேளையாக) அவருக்குப் பிறகு பேச அழைக்கப்பட்ட நான், இந்த விழாவுக்கு வந்திருக்கிற பட்டுச்சேலைப் பெண்களைவிட சுடிதார்ப் பெண்களை எனக்குப் பிடித்திருக்கிறது. அவர்களையும்விட அந்த ஒரே ஒரு ஜீன்ஸ் பேண்ட் - டீ  ஷர்ட் சிறுமியை ரொம்பவும் பிடித்திருக்கிறது,” என்று கூறியபோது அங்கே ஒரு சிறிய சலசலப்பு ஏற்பட்டது. விழா முடிந்து பந்தல் நிழலில் சற்று ஓய்வாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது சில பெண்கள் அருகில் வந்து, “சார், எங்க டிரஸ் பற்றி நல்லாச் சொன்னீங்க,” என்று மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தினார்கள்.



ஏன்.. நீங்க பேண்ட் - சட்டை பேடுறதில்லையா,” என்று கேட்டபோது,“வீட்ல வச்சிருக்கோம் சார், எப்பவாவது போடுவோம்,’’ என்றனர். சர்வ சாதாரணமாக பேண்ட்-சட்டை அணிந்துகொண்டு எங்கும் போக முடியவில்லையே என்ற அவர்களது ஏக்கம் எனக்குப் புலப்பட்டது. அம்மா சம்மதித்தாலும் அனுமதிக்காத அப்பா, நைட்டியுடன் பக்கத்துக் கடைக்குச் செல்லும் மனைவியிடம், “மேல துப்பட்டா போட்டுட்டுப் போயேண்டி,” எனக் கூறும் கணவன்...





என்னென்னவோ சாதிக்க வேண்டிய பெண்ணின் கைகள், ஆணுக்குச் சமமாக உயர வேண்டிய பெண்ணின் கைகள், சேலை மாராப்பையும், சுடிதாரின் துப்பட்டாவையும் இழுத்துவிட்டுக் கொண்டிருப்பதிலேயே முக்கால்வாசி நேரத்தைக் கைவிட்டுக் கொண்டிருக்கின்றன. கைகள் இந்த வேலைகளை அனிச்சைச் செயல்போல் செய்து கொண்டிருக்கின்றன. உண்மையில் பெண்ணின் மூளையில் ஒரு சிறு பகுதி இதற்கென ஒதுக்கப்பட்டு அவளுடைய கைகளை இப்படியே இயக்கிக் கொண்டிருக்கிறது.





பெண்பாடு பற்றிக் கவலைப்படாத பண்பாடு, சமுதாயத்தின் சரிபாதி மூளையை  இப்டியே முடக்கிவிட்டது. மனித மூளையின் வளர்ச்சிக்கே அடிப்படை கைகளின் இயக்கம்தான் என்பது பரிணாம அறிவியல், சமுதாய நாகரீக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்த விவசாயத்தைக் கண்டுபிடித்ததே பெண்ணின் மூளைதான் என்பது வரலாறு. ஆனால் பெண்ணின் அந்த மகத்தான பங்களிப்பை, முளைப்பாரி திருவிழாவோடு மூழ்கடித்துவிட்டோம்.





வேளாண் உற்பத்தி, சமைத்த உணவு இவ்விரண்டும் வராமலிருந்திருந்தால் மனிதர்களுக்கு இன்றைய பல துறை வளர்ச்சிகள் இல்லாமல் போயிருக்கும். ஏன் இன்றைய முகத்தோற்றமே கூட தோன்றாமல் போயிருக்கும்! இவ்விரண்டையும் கண்டுபிடித்தது பெண்தான் என்கிறபோது, அவளது சிறகுகள் வெட்டப்படாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!





அரசியல், அறிவியல் என எல்லாத் துறைகளிலும் திருப்பங்களை ஏற்படுத்தியது பெரும்பாலும் ஆண்கள்தான். அந்தப் பாதி மூளையின் பங்களிப்பிலேயே உலக சமுதாயம் இத்தனை முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறது என்றால், மீதி மூளையின் ஆற்றலும் சுதந்தரமாக முழுமையாகச் செயல்பட விட்டிருந்தால் இன்னும் எத்தனை முன்னேற்றங்களைக் கண்டிருக்க முடியும்! இத்தனை வளர்ச்சிக்குப் பிறகும்கூட மானுட சமுதாயம் இன்னும் ஏன் இருட்டில் தடுமாறுகிறது என்ற கேள்விக்கான விடையும் கூட அந்தப் பாதி மூளை இருட்டடிப்புக்குள்தான் இருக்கிறது.





பேருந்தில் சங்கடமின்றி ஏறி இறங்க முடிவதில்லை என்பது முதல், ஆண்களின் திருட்டுப் பார்வை பற்றிய உறுத்தலின்றி வேலைகளைச் செய்ய இயலுவதில்லை என்பது வரையில் சேலை பெண்ணுக்கு ஒரு மிகப்பெரிய இடைஞ்சல். எழுத்தாளர் சு.சமுத்திரம் ஒரு சிறுகதையில், பெரியபுராணத்தைக் கொஞ்சம் மாற்றியிருப்பார். பரமசிவனோடு நடனப் போட்டியில் குதிக்கும் பார்வதி, எல்லா நுட்பங்களிலும் சரிசமாக ஈடுகொடுக்க, கடைசியில் பரமசிவன் தனது காலை உயரத் தூக்கி நிற்க, அப்படிச் செய்ய முடியாமல் நாணத்தோடு அவள் தோல்வியை ஒப்புக் கொள்கிறாள் என்பது புராணம். புதிய கதையில் பார்வதி கூச்சமின்றிக்  காலைத் தூக்கி ஆடி வெற்றி பெறுவாள்! அதற்குக் காரணம் நவீன பார்வதி சுடிதார் அணிதிருந்ததுதான் என்று முடித்திருப்பார் சமுத்திரம்.





சேலையைவிட சுடிதார் நிச்சயம் பெண்ணுக்கு வசதியான, கண்ணியமான உடைதான். அதையும்விட வசதியான கவுரமான, உறுத்தலற்ற இயல்பான உடை பேண்ட் - சட்டை அவளது கைகளை விடுவிக்கும் உடை.





அடிமைத்தன அலங்காரம்தான் அழகென்றால் சேலை அழகானதுதான். ஆனால் உண்மையில் ஆபத்தான, பெண்ணின் கண்ணியத்தைக் குலைக்கிற உடை, பாத்ரூம் அவசரத்துக்கும், பெட்ரூம் அவசரத்துக்கும் மட்டுமே அது தோது என்று கூட பச்சையாக சொல்லத்தான் நினைக்கிறேன்....



இன்றைக்கு சில இடங்களில், குறிப்பாக மகளிர் கல்லூரிகளில், தாவணித் திருவிழா நடத்துகிறார்கள். இதற்கென்றே வாங்கப்பட்ட பாவாடை - தாவணியோடு அல்லது அம்மாவின் பாதிச் சேலையோடு மாணவிகள் என்னவோ உற்சாகமாகத்தான் விழாவிற்கு வருகிறார்கள். சில பத்திரிகைகள் பல வண்ணப் பூக்களின் கதம்பம்போல் இருக்கும் பலவண்ணத் தாவணித் தேவதைகளைப் படமெடுத்து அட்டையிலேயே வெளியிடுகின்றன. மறைந்து வருகிற ஒரு பண்பாட்டு அடையாளம் இதன்மூலம் மீட்கப்படுவதாகப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் சொட்டச் சொட்ட கவர்ச்சியில் ஊறிய தாவணி-பாவாடைக்குள் மாட்டிவிட்டு, வருங்கால கிரண்பேடிகளையும், சானியா மிர்சாக்களையும், பாமாக்களையும்,முளையிலேயே கிள்ளுகிற கைங்கர்யம் இத்தகைய விழாக்களின் அடியிழையாக இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.




இத்தகைய தாவணித் திருவிழாக்களை,இந்துத்துவக் கூடாரங்களின் ஆசீர்வாதம் பெற்ற சில கல்லூரி நிர்வாகங்களும் நடத்துவது தற்செயலானது அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.





நான் சொல்ல நினைப்பது உடை விவகாரம் மட்டுமல்ல, “இன்னிக்குத் தலைக்குக் குளிச்சேன்... அதான் சளி பிடிச்சுக்கிச்சு,’’  என்று அவ்வப்போது சொல்ல வேண்டியிருக்கிற நிலைமையிலிருந்தும் பெண் விடுபட வேண்டும். நீண்ட கூந்தல் பற்றிய மயக்கங்களிலிருந்து விடுபட வேண்டும்.





இது உங்க பையனா?’’



இல்லை, என்னோட பெண்’’



....ஸாரி சார்.’’



நான் சார் இல்லை, மேடம்....’’





பெண்ணின் உடையும் முடியும் மாறிவிட்டதைக் கிண்டலடிக்கிற இப்படிப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள் அருவருக்கத்தக்கவையாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். தனிமையில் செல்லஅச்சம், மற்றவர்கள் முன் நிற்கநாணம், ஆணைவிட கூடுதலாக ஏதும் அறியாதமடம், வாரிசுகளை பெற்றுத்தரும் விளை நிலமாக மட்டுமே பிழைத்திருக்கிறபயிர்ப்பு.... ஆகிய நற்குணங்கள் கொண்டவளாய்ப் பெண்ணின் பரிணாமத்தைப் பின்னுக்குத் தள்ளுகிற அடையாளங்கள் தேவையில்லை.





இதை ஏற்க இயலாதர்கள் முன்வைக்கிற வாதம். “இப்படி எல்லாத்தையும் மாத்திக்கிட்டே போனா நம்ம பண்பாடு என்னாகிறது’’ என்பதுதான். நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருப்பதாலேயே ஒரு பழக்கம் புனிதப் பண்பாடாகிவிட்டது. மேற்படி தாவணி-சேலைக்கு முன், நீண்ட சடை-கூந்தலுக்கு முன் நம் ஆதித்தாத்திகள் எப்படி இருந்தார்கள்? ரவிக்கை அணிவதற்குக் கூட ஒரு பகுதி பெண்கள் அனுமதிக்கப்பட்டதில்லை என்பது ஒரு பண்பாடாக இருந்ததே! இதையெல்லாம் யோசித்தால் பண்பாடு என்பது சமுதாய வளர்ச்சிக்கேற்ப மாறி வந்திருப்பது தெளிவாகும்.





நம் சமுதாயத்தின் பாதி மூளை முடக்கப் பட்டிருப்பதற்கு முடிவு கட்டுவோம். அதற்கு பெண்ணின் கைகளை மாராப்பு-துப்பட்டா இழுப்பிலிருந்தும், கூந்தல் கோதலிலிருந்தும் விடுவிப்போம்.





( ‘பெண்ணே நீமாத ஏட்டில் வெளியான எனது கட்டுரை)



--
. குமரேசன்