Search This Blog

Thursday, June 2, 2011

வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!!!! பொருட்பால்:கூழியல்!!!! பொருள்செயல்வகை:அதிகாரம் 76/133

வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!!!! பொருட்பால்:கூழியல்!!!! பொருள்செயல்வகை:அதிகாரம் 76/133


வாழ்க வள்ளுவம்:வளர்க தமிழ்!!!!
பொருட்பால்:கூழியல்!!!!
பொருள் செயல்வகை:அதிகாரம் 76/133

751.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177324"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Nothing exists save wealth, that can
Change man of nought to worthy man.
Explanation :
Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance.
*********************************************
752.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177325"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Those who have nought all will despise;
All raise the wealthy to the skies.
Explanation :
All despise the poor; (but) all praise the rich.
***********************************************
753.
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177326"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Wealth, the lamp unfailing, speeds to every land,
Dispersing darkness at its lord's command.
Explanation :
The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein).
***********************************************
754.
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177327"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Their wealth, who blameless means can use aright,
Is source of virtue and of choice delight.
Explanation :
The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.
***********************************************
755.
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177328"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Wealth gained by loss of love and grace,
Let man cast off from his embrace.
Explanation :
(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.
****************************************************
756.
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177329"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues,
The spoils of slaughtered foes; these are the royal revenues.
Explanation :
Unclaimed wealth, wealth acquired by taxes, and wealth (got) by conquest of foes are (all) the wealth of the king.
***************************************************
757.
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177330"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
'Tis love that kindliness as offspring bears:
And wealth as bounteous nurse the infant rears.
Explanation :
The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth.
****************************************************
758.
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
As one to view the strife of elephants who takes his stand,
On hill he's climbed, is he who works with money in his hand.
Explanation :
An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top.
***************************************************
759.
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177322"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Make money! Foeman's insolence o'ergrown
To lop away no keener steel is known.
Explanation :
Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.
****************************************************
760.
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177323"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Who plenteous store of glorious wealth have gained,
By them the other two are easily obtained.
Explanation :
To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition).
******************************************************
குறட்பா இணைப்புக்களை சேமித்துக் கொள்ளுங்கள் நண்பரே!!! எப்போது வேண்டுமானாலும் எந்த குறள் வேண்டுமானாலும் உங்கள் குழந்தைகளுடனோ, நண்பர்களுடனோ இனிய இசையில், விளக்கத்துடன் தமிழில் கேட்டு மகிழ உதவியாக இருக்கும். ஆங்கிலத்திலும் போப், அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேறு மொழிகளில் பதிவுகள் கிடைத்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் உண்டு. விருப்பம் உள்ள அன்பர்கள் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். நன்றி.......அன்புடன் கே எம் தர்மா...

வாழ்க வள்ளுவம்: வளர்க தமிழ் !!! பொருட்பால்:அரணியியல் !!! அரண்:அதிகாரம்75/133

வாழ்க வள்ளுவம்: வளர்க தமிழ் !!! பொருட்பால்:அரணியியல் !!! அரண்:அதிகாரம்75/133


வாழ்க வள்ளுவம்: வளர்க தமிழ் !!!
பொருட்பால்:அரணியியல் !!!
அரண்:அதிகாரம்75/133
741.
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177314"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
A fort is wealth to those who act against their foes;
Is wealth to them who, fearing, guard themselves from woes.
Explanation :
A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.
*********************************************
742.
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177315"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
A fort is that which owns fount of waters crystal clear,
An open space, a hill, and shade of beauteous forest near.
Explanation :
A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.
**********************************************
743.
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177316"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Height, breadth, strength, difficult access:
Science declares a fort must these possess.
Explanation :
The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz., height, breadth, strength and inaccessibility.
***********************************************
744.
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177317"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
A fort must need but slight defence, yet ample be,
Defying all the foeman's energy.
Explanation :
A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes.
*************************************************
745.
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177318"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Impregnable, containing ample stores of food,
A fort for those within, must be a warlike station good.
Explanation :
A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.
*************************************************
746.
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177319"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
A fort, with all munitions amply stored,
In time of need should good reserves afford.
Explanation :
A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).
***********************************************
747.
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177320"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
A fort should be impregnable to foes who gird it round,
Or aim there darts from far, or mine beneath the ground.
Explanation :
A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.
*********************************************
748.
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177321"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Howe'er the circling foe may strive access to win,
A fort should give the victory to those who guard within.
Explanation :
That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it.
********************************************
749.
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177322"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
At outset of the strife a fort should foes dismay;
And greatness gain by deeds in every glorious day.
Explanation :
A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.
*********************************************
750.
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
இணைப்பினை அழுத்தி குறட்பாவினை இனிய இசையில் விளக்கத்துடன் கேட்டு மகிழுங்கள்.
<a onClick='window.open("http://www.raaga.com/player4/?id=177323"
Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis
Howe'er majestic castled walls may rise,
To craven souls no fortress strength supplies.
Explanation :
Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action.
************************************************
குறட்பா இணைப்புக்களை சேமித்துக் கொள்ளுங்கள் நண்பரே!!! எப்போது வேண்டுமானாலும் எந்த குறள் வேண்டுமானாலும் உங்கள் குழந்தைகளுடனோ, நண்பர்களுடனோ இனிய இசையில், விளக்கத்துடன் தமிழில் கேட்டு மகிழ உதவியாக இருக்கும். ஆங்கிலத்திலும் போப், அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு விளக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேறு மொழிகளில் பதிவுகள் கிடைத்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் உண்டு. விருப்பம் உள்ள அன்பர்கள் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். நன்றி.......அன்புடன் கே எம் தர்மா....

தொடர்ந்து வரும் மூன்று கிரகணங்கள்! செய்தி

தொடர்ந்து வரும் மூன்று கிரகணங்கள்! செய்தி

தொடர்ந்து வரும் மூன்று கிரகணங்கள்!




ஒவ்வொரு 15 நாட்கள் கழிந்ததும் தொடாச்சியாக முன்று கிரகணங்கள் வரவிருக்கின்றன. இதனால் ஒரு மாத காலத்தில் மூன்று கிரகணங்களைக் காணும் வாய்ப்பு மனித குலத்திற்கு கிடைத்துள்ளது.

முதலில் இன்று ஜூன் 1ல் பகுதி சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது.  இது,  இன்று புதன்கிழமை நள்ளிரவு 12.55 மணி முதல் நாளை வியாழன் அதிகாலை 4.37 மணிவரை ஏற்படுகிறது. இரவு நேரத்தில் இது ஏற்படுவதால் இந்தியாவில் இதை காணும் வாய்ப்பு இல்லை. சைபீரியா, வடக்கு சீனா, அலாஸ்கா, நோவா ஸ்காட்டியா ஆகிய நாடுகளில் தெரியும். அடுத்து இரண்டாவதாக, ஜூன் 15ல் முழு சந்திரக கிரகணம் ஏற்பட உள்ளது. இக்கிரகணம் இரவில் நிகழ்வதால், இதை இந்தியாவிலும், மத்திய கிழக்கு, கிழக்கு ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பார்க்கலாம். மூன்றாவதாக, ஜுலை 1ஆம் திகதி பகுதி சூரிய கிரகணம்  மீண்டும் ஏற்பட உள்ளது. ஆக, ஒரு மாத காலத்திற்குள் மூன்று கிரகணங்களைக் காணும் வாய்ப்பு மனித குலத்திற்கு கிடைத்துள்ளது.

மனஒத்திகை:கற்பனை செய்ய ஆரம்பிச்சாச்சு-அடுத்து? கற்பனைகளை நம் முன்னேற்றத்திற்கு எப்படி உபயோகிப்பது?

by Keyem Dharmalingam


மன ஒத்திகை:
கற்பனை செய்ய ஆரம்பிச்சாச்சு - அடுத்து?
கற்பனைகளை நம் செயல்பாடுகளின் முன்னேற்றத்திற்கு எப்படி உபயோகிப்பது?

ரீடர்ஸ் டைஜஸ்டை (Reader’s Digest) அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆங்கிலப் பத்திரிகை. பத்திரிகை நடத்துபவர்களுக்கென்று அசாத்திய கற்பனைத் திறன் இருக்க வேண்டும். புதுசு புதுசாய் யோசிக்க வேண்டும். அப்பொழுதுதான் வாசகரைக் கவர, தக்க வைத்துக் கொள்ள முடியும்; இல்லையா? எனவே யோசித்தார்கள். பத்திரிகையின் சார்பில் ஆய்வொன்று செய்வது என்று முடிவு செய்தார்கள்.

எதைப் பற்றி? மன ஒத்திகையைப் பற்றி!
ஒரு பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிட்ட சில மாணவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அந்த மாணவர்களை மூன்று அணிகளாகப் பிரித்துக் கொண்டு முதல் அணி ஒரு மாத காலத்திற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் கூடைப்பந்தைக் கூடையினுள் வீசும் பயிற்சியை மேற்கொள்ளச் செய்தார்கள். அடுத்த அணிக்கு எந்தப் பயிற்சியும் கிடையாது. சும்மா இருக்க வேண்டும். மூன்றாவது அணி பந்து வீசும் பயிற்சியைத் தினமும் ஒரு மணி நேரம் மனதில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஆய்வின் முடிவில் தினமும் பந்து வீசிப் பயிற்சி பெற்ற அணியின் திறமை சராசரியாக இரண்டு சதவிகிதம் உயர்ந்திருந்தது. வெறுமே இருந்த அணியின் திறமை இரண்டு சதவிகிதம் மட்டுப்பட்டிருந்தது. மனதளவில் தினமும் பயிற்சி பெற்றதே மூன்றாவது அணி, அவர்களின் திறமை மூன்றரை சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆச்சரியமாயில்லை? செய்முறைப் பயிற்சியைவிட மனப் பயிற்சிக்கு அதிக மகத்துவம் உள்ளது என்று முடிவுரை வாசித்தது அந்த ஆய்வு!

யதார்த்தம் என்னவென்றால் நாம் இதெல்லாம் அறியாமலேயே நமது வாழ்க்கையில் தன்னிச்சையாக மனப் பயிற்சி மேற்கொள்ளத்தான் செய்கிறோம். அலுவலகத்திற்குச் செல்ல மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன்னமேயே எந்தச் சாலை வழியே போகப் போகிறோம், மீட்டிங்கிற்குத் தாமதமாகி விட்டதே அதனால் எவ்வளவு விரைவாக ஓட்டப் போகிறோம், என்பதைப் போன்ற சிறிய ஒத்திகைகள் மனதளவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதை நம் மனம் உணர்வதில்லை. ஆனால் சில சமயங்களில் மட்டும் நீங்கள் உணரக்கூடும். எப்பொழுது? மனைவியிடம் பொய் சொல்லும்போது! லேட்டாக வீட்டிற்குத் திரும்ப நேர்ந்தாலோ,மனைவிக்குத் தெரியாமல் நண்பருடன் சினிமா அது இது என்று சுற்றிவிட்டு வந்தாலோ, நுழைந்ததுமே “ஏன் லேட்டு?” என்று ஆரம்பித்து, போலீஸ் விசாரணையாய் வந்து விழப் போகும் கேள்விகளை என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று மனதில் ஓர் ஒத்திகை ஓடுமே, கவனித்ததில்லை?

நாம் அனைவரும் அறிந்த கிரிக்கெட் விளையாட்டு உதாரணமொன்றைப் பார்ப்போம். சுழன்று வரும் பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்று உங்கள் மூளையிலுள்ள செல்கள் கட்டளையிடுகின்றன. கம்ப்யூட்டர் ப்ரோகிராம் போல் வருகிறது கட்டளை. உங்கள் உடல் அதற்கேற்ப அந்தக் கட்டளைகளை நிறைவேற்றுகிறது. உங்கள் மனதிலுள்ளது நல்ல ப்ரோகிராம் என்றால் நீங்கள் நல்ல ஆட்டக்காரர். பந்து பவுண்டரி கோட்டைத் தொட்டிருக்கும். “என்னால் இந்த ஸ்பின்னையெல்லாம் தாங்க முடியாது”, என்று மனதில் கற்பனையிருந்தால் ஒன்றிரண்டு ஸ்டம்புகள் காலி! தினசரி இந்த விளையாட்டிற்கானப் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளும் போது, சந்தேகமேயின்றி உங்களின் திறமை மேம்படும். நிச்சயம் மேம்படும். ஆனால், உடல்ரீதியான பயிற்சி மட்டுமே போதும், என்று நீங்கள் நினைத்தால், “போதாது” என்கிறார்கள் மன ஆய்வாளர்கள்.

நாள்தோறும் உடல்ரீதியான பயிற்சியை மேற்கொள்வதுடன் சேர்த்து மனப் பயிற்சியையும் சரியான முறையில் செய்தால் விரைவாகம் சிறப்பாகவும் திறமையை மேம்படுத்த முடியும் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறார்கள். ஒரு காரியத்தைச் செய்வதுபோல் நீங்கள் கற்பனை செய்யும்போது அதை உண்மையிலேயே நிகழ்த்துவதைப் போல் உங்கள் மனதிலுள்ள ப்ரோகிராம்களை நீங்கள் வடிவமைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் மூளையிலுள்ள செல்களில் ரசாயண மின்மாற்றம் நிகழ்கிறது. அவை உங்கள் மனதில் புதிய மாற்றத்தைத் தோற்றுவிக்கிறது. மனம் உங்களுக்கு ஆற்றும் மாபெரும் உதவி அது என்பது அவர்களது வாதம்.

நேர்முகத் தேர்விற்குத் தயாராகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கூகுளிலில் ஆரம்பித்துப் பல புத்தகங்கள் வரை பிரித்து மேய்ந்தாச்சு! அந்த ஹோம்வொர்க் மட்டும் போதுமென்றா இண்டர்வியூவிற்குச் செல்வீர்கள்? அவர்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு எப்படியெல்லாம் பதில் அளிக்க வேண்டும், அல்லது எப்படி பதில் அளிக்கக் கூடாது, எவ்விதம் அமர வேண்டும், என்ன சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளாடை முதற்கொண்டு ஒரு மன ஒத்திகை நிகழ்ந்திருக்குமில்லையா? இவ்விதம் நாம் தன்னிச்சையாய் மேற்கொள்ளும் இந்த மன ஒத்திகையை முறைப்படுத்தி, வளப்படுத்தி செய்முறைப் பயிற்சியுடன் சரியானபடி ஜோடி சேர்த்தால் நம் ஆற்றலை எளிதாய், முழுமையாய் வெளிக்கொணரலாம். மன ஒத்திகைகளின் மூலம் நிறைவான செயற்பாட்டிற்கு உண்டான வகையில் நாம் நமது மனதை வடிவமைக்க முடியும். மனதில் நிகழும் அத்தகு ஒத்திகைக் கற்பனைகளில நாம் தவறிழைக்கப் போவதில்லை. எனவே மனம் சரியான செயற்பாட்டிற்குத் தயாராகிறது. அதேபோல் மனதில் தப்புத் தப்பாய்க் கற்பனை செய்து ஒத்திகை பார்த்தால் நிகழ்வும் அப்படியே அமையும். இதைத்தான் பயந்தது போலவே நடந்துவிட்டது என்கிறோம். எனவே தப்புக் கற்பனை தப்பு. அதைத்தவிர்க்க வேண்டும். ஆக, இதனலாலெல்லாம் நாம் அறிய வேண்டியது யாதெனில்,

 மனதில் கற்பனை ஒத்திகைகள் நிகழ்த்தி அதன்மூலம் நமது திறமைகளைத் தூய்மையாக்கும் முயற்சியை நாம் ஆரம்பிக்க வேண்டும். பரிட்சைக்குத் தயாராவதுஇண்டர்வியூபுதிதாய் மேடையில் பேசவிருப்பதுதிருமணமாகி முதன் முதலாய் மனைவியிடம் பேசப் போவது என்று எதுவாக இருந்தாலும் முற்கூட்டியே நேரம் செலவழித்து மனதில் ஒத்தகை நிகழ்த்திவிடுங்கள். நடப்பவை நலமே நிகழும்.

திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி ?


திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி ? 

நமது வாசக அன்பர்கள் அனைவருக்கும், வணக்கம். வேலைப் பளு அதிகமான காரணத்தால், முன்பு போல் தினமும் கட்டுரைகள் பதிவிட இயலவில்லை. ஆனாலும், இனி வரும் நாட்களில் முடிந்தவரை முயற்ச்சிக்கிறேன்.

தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி - தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்கிறார். மக்கள் விரும்பும் வகையில் , தர்ம நியாயங்களுக்கு உட்பட்டு நல்லதொரு ஆட்சி அமைய வாழ்த்துவோம். 

சிம்ம ராசி நேயர்களுக்கு , மீண்டும் புத்துணர்வும், குதூகலமும் பொங்கும் நேரமிது. குருவின் பார்வை, ஏழரை சனி முடிவு என்று இனி வசந்தம் ஆரம்பிக்க இருக்கிறது. கடந்த ஏழு வருடங்களில் , உங்களுக்கு கிடைத்த படிப்பினையை மறக்காது, நிதானமுடன் செயல்பட்டால் , ஒவ்வொரு சிம்ம ராசி நேயரும் , உங்கள் சுற்று வட்டாரத்தையே கலக்குவீர்கள். வாழ்த்துக்கள் !

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு  - இன்று திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது , என்று இரத்தின சுருக்கமாகப் பார்க்க விருக்கிறோம். 

பத்துப் பொருத்தம் பார்த்தும் -  சில மணங்கள் முறிந்து போய்விடுகின்றன . பொருத்தம் பார்க்காமல் மணந்தவர்கள்  கூட , மனம் ஒருமித்து வாழ்வதால் , வெற்றிகரமான தாம்பத்ய வாழ்வு வாழ்கின்றனர்.  பூர்வ புண்ணியம் பலமாக இருந்தால் , இறை அருள் என்றும் துணை நிற்கும். விதிப் படி நடக்கட்டும் என்று விட்டு விட்டால் , நல்லதோ , கெட்டதோ எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளவேண்டியது தானே.
வீட்டில் முதல் திருமணம் பொருத்தம் பார்க்காமல் செய்துவிட்டு, ஏதோ காரணத்தால் - மண முறிவு ஏற்பட்டு விட்டால், அடுத்த திருமணம் அவ்வாறு செய்ய துணிவு வராது. பொருத்தமில்லா ஜாதகமாக இருந்ததும் ஒரு காரணமோ? என்று நொந்து போகின்றனர்.

என் அனுபவத்தில், ஜாதகம் உண்மையோ , பொய்யோ - ஆனால் இவர் தான் மனைவி / கணவன் என்று அமைவது இருக்கிறதே , அது நிச்சயம் ஜென்மாந்திர தொடர்பு தான். திருமணம் ஆனா அன்பர்களுக்கு இது புரியும் என நினைக்கிறேன். அதே போல் , தான் குழந்தை பிறப்பும். கணவன் , மனைவி கையில் மட்டும் இல்லாத ஒரு விஷயம் . திருமணம் முடிந்து , உடனே / ஒரு வருடத்துக்குள் குழந்தை பிறந்து இருந்தால் , அவர்களுக்கு இந்த உண்மை தெரியாது. ஒரு ஆறு மாதம், ஒரு வருடத்திற்கு பிறகு கரு உருவாகி இருந்தால், அவர்களுக்கு இது புரியும்.

சரி எதற்கு , இவ்வளவு பில்ட் அப் என்று  கேட்கிறீர்களா? நம் முன்னோர்கள், சித்த புருஷர்கள் கூறிய படி , ஜாதகப் பொருத்தம் பார்ப்பது - இதற்கு ஒரு பொருத்தமான அணுகுமுறை என்று தோன்றுகிறது. சரி, பாடத்தைப் பார்ப்போம்.

திருமணப் பொருத்தம் என்பது; கணவன் மனைவியாக இணையும் இருவருக்கும் நிலையான மன ஒற்றுமை, மகிழ்ச்சி, இன்பமான தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, சுபிட்சமான  எதிர்காலம் என்பன அமையுமா? என இருவருடைய ஜாதகங்களின் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தைக் (நிலைகளைக்) கொண்டு கணித்து அறிதல் .

விவாகப் பொருத்தம் பார்க்கும் பொழுது மணமகன், மணமகள் ஆகிய இருவருடைய ஜாதகங்களிலும், பிறந்த நட்சத்திரங்களை வைத்து 10-பொருத்தங்களும், ஜாதக-கிரக நிலையை கொண்டு கிரக-தோஷங்களும் பார்த்து விவாகம் முடிவு செய்யப்படுகின்றது.

இன்பமான குடும்ப வாழ்க்கைக்கு; மனப் பொருத்தம், புரிந்துணர்வு, அன்பு , பெருந்தன்மை, பரஸ்பர நம்பிக்கை, பிள்ளைப் பேறு, மகிழ்ச்சியான சிற்றின்ப வாழ்க்கை, அதிர்ஷ்டம்  ஆகியன அடிப்படைத் தேவைகளாகும். இவற்றுடன் மாரக தோஷம் அற்றவர்களாகவும் அமையப் பெற்றவர்களின் குடும்ப வாழ்க்கை ஆயுட் காலம் வரை மகிழ்ச்சியாக இருக்கும் என்பது அனுபவ உண்மை.

எனவே திருமணத்திற்கு மன பொருத்தமும், ஜாதகப் பொருத்தமும் மிக முக்கியமானதாகும். கிரகப் பொருத்தம் இல்லாத மன பொருத்தம் தற்காலிகமானது. காலப் போக்கில் கிரகநிலை மற்றங்களினால் மனம் மாற்றமடைந்து குழப்பங்கள் ஏற்படலாம். ஆதலினால், நீடித்த மகிழ்ச்சியான தி்ருமண வாழ்க்கையை உறுதி செய்வதற்கு " ஜாதகப்  பொருத்தம்" மிக கட்டாயமாகின்றது.

முக்கியமான பத்துப் பொருத்தங்களாவன:

1. நட்சத்திரப்-பொருத்தம், 2. கணப்-பொருத்தம், 3. மகேந்திரப்-பொருத்தம், 4. ஸ்திரி தீர்க்க-பொருத்தம், 5. யோனிப்-பொருத்தம், 6. ராசிப்-பொருத்தம், 7. ராசி அதிபதிப்-பொருத்தம், 8. வஸ்யப்-பொருத்தம், 9. ரச்சுப்-பொருத்தம், 10. வேதைப்-பொருத்தம் என்பனவாம்.

1. நட்சத்திரப்-பொருத்தம்: (ஆயுள் ஆரோக்கிய விருத்தி) 
இதனை தினப்பொருத்தம் என்றும் சொல்வார்கள். இந்தப் பொருத்தம் ஆண் பெண் இருபாலாருடைய ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக் கூடியது.

பெண்ணின் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26 ஆக வரின் உத்தமம். இந்த அமைப்பில்  இல்லாதிருந்தால் பொருத்தம் இல்லை.

ஜன்ம நட்சத்திரம் முதல்:
10வது நட்சத்திரம் கர்ம நட்சத்திரம்
7-வது நட்சத்திரம் வதம்
19-வது நட்சத்திரம் அனு ஜென்மம்
22-வது நட்சத்திரத்தின் 4ம் பதம் வைநாசியம்
27-வது நட்சத்திரம் மருத்யு நட்சத்திரம்
27-வது நட்சத்திரம் வேறு ராசி எனில்  நீக்கவும், ஒரே ராசியாகில் உத்தமம்

ரோகினி, திருவாதிரை, மகம், விசாகம், திருவோணம், ஹஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உத்தமம்.

பூரம், உத்திரம், சித்திரை, புனர்பூசம், பூசம், அஸ்வினி, கார்த்திகை, பூராடம், உத்திராடம், மிருகசீர்ஷம், அனுஷம் ஆகிய 11 நட்சத்திரங்களும் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் மத்திமம். 

ஒரே ராசியாக இருந்தால் புருஷ நட்சத்திர பாதம் முந்தி இருந்தால் உத்தமம்.
மற்றைய நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் இல்லை. விலக்கப் படவேண்டும்.

ஸ்திரீ நட்சத்திரத்தில் இருந்து 7வது நட்சத்திரமாக புருஷ நட்சத்திரம் வரின், வதம் என்றும், புருஷ நட்சத்திரத்தில் இருந்து 22வது நட்சத்திரமாக ஸ்திரீ நட்சத்திரம் வரின், வைநாசிகம் என்றும் சொல்லப்படும். இந்த வதம், வைநாசிகம் ஆகிய இரண்டும் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால்; திருவாதிரைக்கு - உத்திரமும், பூரத்திற்கு - அனுஷமும்; பூசத்திற்கு - சித்திரையும்; புனர்பூசத்திற்கு - ஹஸ்தமும்; பூரட்டாதிக்கு - ரோகினியும் வதம்; வைநாசிகமானால் சுபம். கெடுதல் இல்லை.

உத்தராடத்திற்கு - ரேவதியும்; மூலத்திற்கு -பூரட்டாதியும்; பரணிக்கு - பூசமுமானால் வதம்-வைநாசிக தோஷம் இல்லை.

ஏக-ராசியில் பெண் நட்சத்திரம் முந்தியது விரும்பத்தக்கதல்ல. ஏக-ராசியிலும் பரணி, அவிட்டம், பூசம் இவை புருஷ நட்சத்திரங்களாக வந்து பெண் நட்சத்திரத்திற்கு முந்தியதானாலும் விலக்கப்பட வேண்டியவை.

சதயம், அசுவினி, ஹஸ்தம், ஸ்வாதி, கிருத்திகை,பூராடம், ரோகினி, மகம் இந்த 8ம் ஏக ராசிகளாகில் ஸ்திரீ முன்வந்தால் செய்யலாம்.

2. கணப்பொருத்தம்: (மங்களம்)
இப்பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகள் சுப பலன்களை அடைந்து சுகமாக வாழ்வார்கள். தம்பதியின் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி ஏற்படுத்துவது இப்பொருத்தமே யாகும்.

இதை; குணப்பொருத்தம் என்றும் அழைப்பார்கள். பரந்த மனப்பான்மை, உயர்ந்த லட்சியங்கள், நன்னடத்தை, நல்ல குணங்கள் கொண்டவர்களை தேவகணம் என்றும்; சாதாரணமான குணமும், புத்தியும், லட்சியங்களும், நோக்கங்களும் உடையவர்களை மனுஷகணம் என்றும்; முரட்டு குணமும், மட்டமான எண்ணங்களும் கொண்டவ்ர்களை  ராட்சத கணம் என்றும் மூன்று கணங்களாக பிரிக்கப்ப்ட்டுள்ளது. 

ஸ்திரீ, புருஷருக்கு ஒரே கணமாக இருந்தால் பொருத்தம் உண்டு. ஸ்திரீ மனுஷ கணமும் புருஷர் தேவ கணமுமாய் இருந்தால் பொருந்தும்.

ஸ்திரீ தேவ கணமும் புருஷர் மனுஷ கணமுமாய் இருந்தால் பொருந்தும். ராக்ஷஸ கணத்திற்கு மனுஷகணமும், தேவ கணமும் பொருந்தாது.
(நட்சத்திரங்களும் அவற்றிற்கான கண விபரங்களையும் பஞ்சாங்கத்தில் பார்க்கவும்)

3. மகேந்திரப் பொருத்தம்: (சம்பத்து விருத்தி)
இப்பொருத்தம் இருந்தால் புத்திரவிருத்தி உண்டாகும். மக்கட் செல்வங்களை உண்டாக்கி, அவர்கள் மேன்மையாக வாழ்கின்ற யோகத்தை உண்டாக்குவதே, இந்த மகேந்திரப் பொருத்தமாகும்.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வரின் பொருந்தும். சம்பத்து கொடுக்கும்.

4. ஸ்திரீ தீர்க்கம்: (சகல சம்பத் விருத்தி)
இதன் மூலம் திருமகள் கடாட்சமும், சுபீட்சமும் நீடிக்கும். ஸ்திரீதீர்க்கப் பொருத்தமிருந்தால் சகலவிதமான சம்பத்துகளும் விருத்தியாகும்.

பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 13 நட்சத்திரங்களுக்குக் கீழாக ஆண் நட்சத்திரம் இருந்தால் பொருந்தாது. 13க்கு மேல் இருந்தால் உத்தமம். 9-க்கு மேல் 13 வரை மத்திமம். 9 வரை (7க்கு மேல் இருந்தால் பொருந்தும் என்று அபிப்பிராயம் தெரிவிப்பாரும் உளர்.)

5. யோனிப் பொருத்தம்: (தம்பதிகளின் அன்யோன்ய நட்பு - மகிழ்ச்சியான சிற்றின்ப உறவு)
இது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும்.

இருவருக்கும் ஒரு யோனியாயினும், பகையில்லாத யோனிகளாகில்  ஆண் யோனி ஆணுக்கும் பெண் யோனி பெண்ணுக்குமாயினும், இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம். இருவருக்கும் பகையில்லாத ஆண் யோனியாயின் மத்திமம். ஆணுக்கு பெண் யோனியும் பெண்ணுக்கு ஆண் யோனியுமாயினும் ஒன்றிற் கொன்று பகையோனி யாயினும் பொருந்தாது.

ஒன்றிற்கொன்று பகை யோனிகள்:
குதிரை - எருமை; யானை - சிங்கம்; குரங்கு - ஆடு; பாம்பு - கீரி; மான் - நாய்; எலி - பூனை; மாடு - புலி; பெருச்சாளி - பூனை.

( இது எல்லாமே நமது பழைய பாடங்களில் கொடுத்துள்ளவை தான்.எந்த  நட்சத்திரத்திற்கு என்ன யோனி - என்று refer பண்ணுங்க.   )

6. ராசிப் பொருத்தம்: (வம்ச விருத்தி)
இந்த இராசிப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும்.

பெண்ணும் புருஷனும் ஒரு ராசியாயினும்; பெண் ராசிக்கு புருஷன் ராசி 6-க்கு மேற்படினும் உத்தமம்.
பெண் ராசிக்கு புருஷன் ராசி 2-ஆயின் மிருத்து; 3-ஆயின் துக்கம்; 4-ஆயின் தரித்திரம்; 5-ஆயின் வைதவ்வியம்; 6-ஆயின் புத்திர நாசம். ரிஷபம்  முதலான இரட்டை ராசிகளில் பிறந்த பெண்ணுக்கு 6-ம் ராசி புருஷ ராசியாக வரினும் மத்திமமான பொருத்தத்தை கொடுக்கும்.

பெண்ணும் புருஷனும் ஒரே ராசியாகும் போது பெண் நட்சத்திரத்திற்கு புருஷ நட்சத்திரம் பிந்தியதாகிற் பொருந்தாது.

7. ராசி அதிபதிப்-பொருத்தம்: (சந்ததி விருத்தி) 
இராசியாதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும். இப் பொருத்தம் இருந்தால் தம்பதிகளிடயே ந்ல்ல ஒற்றுமையும் சந்தோஷமான வாழ்க்கையும் அமையும. பொருத்தம் மத்திமமாயின் அவ்வப்போது சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து போகும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள். 

இருவர் இராசிகளும் ஒருவராயினும்; ஒருவருக்கொருவர் மித்துருக்களாயினும் உத்தமம். மித்துருக்கள் அல்லாதவை சத்துருக்கள் - பொருந்தாது.

யார் யாருக்கு நண்பர்கள்..? பழைய பாடம் --- again ..!!

8. வஸ்யப்-பொருத்தம்: (அன்யோன்ய வசியம் - இணைபிரியா அன்பு) 
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். பெண்ராசிக்கு புருஷ ராசி வசியமானால் உத்தமம். புருஷ ராசிக்கு பெண் ராசி வசியமானால் மத்திமம். வசியமில்லாதது பொருந்தாது. இதுவும் ஒரு முக்கியமான பொருத்தம்.

பெண் ராசி :  ஆண் ராசி 
மேஷம்  : சிம்மம் , விருச்சிகம்
ரிஷபம் :  கடகம், துலாம்
மிதுனம் :  கன்னி
கடகம் :  விருட்சிகம், தனுசு
சிம்மம் :  மகரம்
கன்னி :  ரிஷபம், மீனம்
துலாம் : மகரம்
விருச்சிகம் :  கடகம், கன்னி
தனுசு : மீனம்
மகரம்  : கும்பம்
கும்பம்  : மீனம்
மீனம்  : மகரம் 

9. ரச்சுப் பொருத்தம்: (தீர்க்க சுமங்கலியாய்  இருப்பது) ரச்சுப் பொருத்தம் மிக முக்கியமானது.

கணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது.

சிரோ ரச்சு (சிர்ச்சு): மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
கண்ட ரச்சு (கழுத்து): ரோகினி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்
நாபி ரச்சு (உதரம்) :  கிருத்திகை , புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி
ஊரு ரச்சு (துடை) பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி
பாத ரச்சு (பாதம்): அஸ்வினி, ஆயில்யம்,  மகம், கேட்டை, மூலம், ரேவதி

ஸ்த்ரீ, புருஷ நட்சத்திரங்கள் ஒரே ரச்சுவாக இல்லாமல் இருப்பது உத்தமம். 

ஒரே இரச்சுவானால்: பொருந்தாது.

சிரோ ரச்சு: புருஷன் மரணம் 
கண்ட ரச்சு: பெண் மரணம்
நாபி ரச்சு: புத்திர தோஷம்
ஊரு ரச்சு: பண நஷ்டம்
பாத ரச்சு: பிரயாணத்தில் தீமை

10. வேதைப்-பொருத்தம் (இடையூறு அற்ற இன்ப வாழ்க்கை)
தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.

வேதை என்றால் ஒன்றிற்கொன்று தாக்குதல் என்று பொருள். எனவே வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாது மாறி இருப்பின் பொருத்தம் உண்டு. ஸ்திரி புருஷருடைய நட்சத்திரங்கள் கீழே குறித்தவாறு ஒன்றிற்கொன்று வேதையாய் இருப்பின் பொருந்தாது.

அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகினி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயிலியம் - மூலம்
மகம் - ரேவதி 
பூரம் - உத்தராட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஒன்றிற்கொன்று வேதை

இந்த 10-பொருத்தங்களையும், ஜாதகங்களின் கிரக நிலைகளையும் கவனத்தில் கொண்டு விவாஹ பொருத்தம் தீர்மானிக்கப்படல் வேண்டும்.
==========================================================

இந்த பாடம், மேல்நிலைப் பாடம் தான் . நமது பழைய பாடங்களை படிக்காமல் இருப்பவர்களுக்கு , கொஞ்சம் கடினமாக இருக்கும். எனவே, பழைய பாடங்களை மீண்டும் ஒரு முறை படியுங்கள். 

ஜோதிட பாடங்கள் பற்றிய முந்தைய கட்டுரைகளைப் படிக்க


Read more: http://www.livingextra.com/2011/05/020.html#ixzz1O5H8V0XL

தீர்க்க முடியாத பிரச்னைகள் விரைவில் தீர - ஒரு ஆன்மீக ஆலோசனை.




கீழே கொடுக்கப்பட்டுள்ள வழி முறைகளை உணர்ந்து , அதை நடை முறைப் படுத்தினால் - உங்கள் கஷ்டங்கள் காற்றாய் பறந்து ஓடும். சொல்வது எளிது. செய்வது அரிது.  இதெல்லாம் நடைமுறைக்கு வருமா என்று தயங்கி தயங்கி நின்றால், கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதுதான். 

உங்கள் குழந்தைகளுக்கு  இந்த நடைமுறைகளை சின்ன வயதில் இருந்தே பழக்கப் படுத்துங்கள். வருங்கால சந்ததி வளமாகட்டும்.

பாரதத்தில் பிதாமகர் பீஷ்மருக்கும், தருமருக்கும் - இடையே நடந்ததாக கூறப்படும் , இந்த சம்பவம் - இந்த கலியுகத்தில் , நம் அனைவருக்கும் தேவையான ஒரு வரப்ரசாதம் .

தருமர் 'கடினமான துன்பங்களைக் கடப்பது எப்படி?' என பீஷ்மரிடம் வினவ..பீஷ்மர் உரைக்கிறார்.
http://www.sawf.org/newedit/edit11212005/mahabharat1.jpg
'யார் மன அடக்கமாய் அற நூலில் சொன்னபடி நடக்கிறாரோ..அவர்..கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.
யார் தருமத்தை ஆடம்பரத்திற்காகச் செய்யாமல் தம் தேவையைக் குறைத்துக் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் ஐம்புலன்களை அடக்கும் வல்லமை பெற்றவரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தன்னை பிறர் நிந்தித்தாலும் மறுமொழி கூறாமல் இருக்கின்றாரோ,தமக்குத் துன்பம் செய்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ,யார் பிறருக்குக் கொடுத்துக் கொண்டும் தான் யாரிடமும் யாசிக்காமலும் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் விருந்தினரை நன்கு உபசரிக்கின்றாரோ, யார் வேதம் ஓதுகின்றாரோ,யார் எதற்கும் அருவருப்பு அடையாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தருமத்தை உணர்ந்து தாய்,தந்தையைப் போற்றுகின்றாரோ யார் பகலில் உறங்காமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் பாவத்தை செய்யாமல் இருக்கின்றாரோ, உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் பிறர் பொருளைக் கவராமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தன் மனைவியிடம் மட்டும் உரிய காலத்தில் சேர்க்கைக் கொண்டு, பிறர் மனைவியைக் கனவிலும் கருதாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் மரணத்தைக் கண்டு அஞ்சாமல் பயத்தை விலக்கி, போர்க்களத்தில் வெற்றி பெற விரும்புகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உயிரே போனாலும் பொய் சொல்லாது உண்மையையே பேசுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் நிந்திக்கத் தகாத செயல்களை உடையவராக இருக்கின்றாரோ, யார் தம் பொருளைச் சாதுக்களுக்கு வழங்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் இளமையில் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் கல்வி கற்றுப் பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் பிறரை அச்சுறுத்துவதில்லையோ, பிறர் அச்சுறுத்தலுக்கு பயப்படுவது இல்லையோ, யார் தம்மைப் போல பிறரையும் கருதுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார். 

யார் தான் இன்புறுவது போல் பிறரும் இன்புற வேண்டும் என எண்ணுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் எல்லா தேவர்களையும் வழிபட்டு, எல்லாத் தருமங்களையும் கேட்டு அடக்கம் உடையவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் தற்பெருமையை விரும்பாமல் பிறரைப் பெருமைப்படுத்திப் புகழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தம் முன்னோர்களுக்காகத் தூய மனத்துடன் ஒவ்வொரு திதியிலும் சிரார்த்தம் செய்கிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தம் கோபத்தை அடக்கி, பிறரையும் கோபம் அடையாமல் இருக்கச் செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் மது, மாமிசம் மகளிர் போகம் இவற்றை விலக்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு உட்கொண்டும்,சந்ததிக்காகவே மனைவியுடன் கூடியும்,உண்மை பேசுவதற்காக மட்டுமே பேச்சையும் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் எல்லா உயிர்களுக்கும் நாதனாயிருப்பவரிடம் பக்தி செலுத்துகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் எல்லாக் கர்மங்களையும் கண்ணனிடம் அர்ப்பணம் செய்துவிட்டு அச்சமின்றி இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உலகங்களைப் படைத்தவரும் சாதுக்களுக்கு நாதரும் யாகங்களால் வழிபடத்தக்கவருமான பிரம்மனை பக்தியுடன் வழிபடுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் இந்திரனும்,விஷ்ணுவும்,ருத்திரரும் போற்றும் மாகாதேவரான சிவபெருமானை எப்போதும் துதி செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் கடினமான துன்பத்தை கடக்கத்தக்க இந்த உபதேசத்தை படிக்கின்றாரோ, யார் கேட்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
தருமா! மனிதன் இவ்வுலகிலும், மேலுலகிலும் கொடுந் துன்பங்களைக் கடந்து செல்ல ,  செய்யத்தக்க செயல்களில் சிலவற்றை உனக்கு உபதேசித்தேன்.நீயும் இவ்வாறு நடந்து துன்பங்களைக் களைவாயாக!" என்று கூறி முடித்தார் பிதாமகன்.

நாமும், முயற்சி செய்ய ஆரம்பிக்கலாமே !


Read more: http://www.livingextra.com/2011/06/blog-post_01.html#ixzz1O5GV0C58

மனிதனின் மரணம் எப்போது ? அகத்தியர் அருளிய அபூர்வ குறிப்புகள்...




பிறப்பும், இறப்பும் நம் கையில் இல்லை. ஆனால், இன்னும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நடக்கும் எந்த விஷயங்களும், நம் கையில் இல்லை. எல்லாம் மாயை என்கிறார்களே , அதைப் போல  -  காலம் நம்மை வைத்து ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது என்பதே உண்மை. மனித முயற்சிகள் இருப்பதற்கும், அவன் தலை விதி ஒத்துழைக்க வேண்டும். என்கிறார்கள். உங்கள் வாழ்வில் நடைபெறும் எந்த ஒரு முக்கியமான செயலுக்கும் , உங்கள் செயல் வினைகளே - பின்னிருக்கும். நல்ல படியாக யோசித்து நடந்து இருந்தால் , எத்தனையோ இழப்புகளை நீங்கள் சரி செய்து இருக்கக் கூடும். 

நல்ல மனதுடன், அடுத்தவருக்கு துன்பம் இழைக்காது - ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடிந்தாலே , உங்களுக்கு அந்த இறைவனின் ஆசி உண்டு என்று நம்புங்கள். அப்படி இருக்க முடியவில்லை என்றால் , முறையான  இறை வழிபாடு ஆரம்பியுங்கள்.   நாம் தான் அந்த பரிகாரம் செய்து விட்டோமே, இறைவனை வழிபடுகிறோமே இன்னும் அந்த இறைவன் கருணை காட்ட வில்லையே என்று உடனடி பலனை எதிர் பார்க்காதீர்கள். முறையான இறை வழிபாடு என்பது , ஒரு மரத்தை நட்டி - அதற்க்கு நீர் ஊற்றி , உரம் போட்டு வருவதற்கு ஒப்பானது. அதி விரைவில் , உங்களுக்கு அதற்குரிய பலன்கள் கிடைக்கும். ஒரு சந்ததிக்கே அதற்குரிய பலன்கள் கிடைக்கும்.

ஆண்டவன் அருளால் , எனக்கு தனிப்பட்ட முறையில் எவ்வளவோ நல்ல சம்பவங்கள் நடந்துள்ளன. வாழ்க்கை முழுவதும் வேதனைப் பட்டு இருக்க வேண்டிய சில சம்பவங்களில் மயிரிழையில் தப்பித்து , ஆசுவாசப் பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறேன். இதற்க்கு பின்னணியில் இருந்தது வெகு நிச்சயமாக அந்த ஆண்டவன் அனுக்கிரகம் தான். அந்த சக்தியின் மேல் எனக்கு இருந்த நம்பிக்கை , முழு மனதுடன் கூடிய வழிபாடு, சரணாகதி.  

அதனால் , கொஞ்சம் கூட நம்பிக்கையை தளர விடாது , உங்கள் மனதை இன்னும் பலப்படுத்துங்கள். நிச்சயம் கருணைமழை பொழியும்.

சமீபத்தில் இணையத்தில் சில தகவல்கள் தேடியபோது - இந்த அரிய தகவல்கள் கிடைத்தன. உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி .
இதை தெரிஞ்சு என்ன பண்ணப் போறோம் ? பின்னாலே எப்போவாது இந்த தகவல் பயன் படலாம்... தெரிஞ்சு தான் வைச்சுப்போமே. உங்களுக்கு ரொம்ப வேண்டியவங்க யாருக்காவது இந்த அறிகுறி இருந்தால், சீக்கிரம் உயில் ரெடி பண்ணவாது ஒரு சந்தர்ப்பம்  அமையுமே.
உண்மை என்று நீங்கள் உணரும் பட்சத்தில், சித்தர்கள் பற்றி மேலும் ஒரு தேடல்  உங்களுக்கு அதிகரிக்கலாம்...

மரணம் ஒருவருக்கு இயற்கையில் எப்போது நெருங்க்குகிறது என்பதை - அகத்திய மாமுனிவரின் - நயனவிதி கூற்றின்படி ,  மரணத்தை நெருங்கியவர்கள்  உடலில் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்று சொன்னவற்றில் ஒரு சில தகவல்கள் : 

"நாக்குச் சிவந்து முன்பிறந்த 
நன்னீரி னிறம்போல் சிவந்திருக்கும்
தேக்கிக் காயும் தாகமுண்டு 
தெளிந்தே வேர்வு சிகமென்னே
ஊக்கி உடலும் நொந்திருக்கும் 
உலகோர் அறிய உரைத்தோம் 
நாம் பாக்குத் தின்னும் துவர் 
வாய் பரிந்தே நாளும் ஏலேன்னே" 


http://agathiyar.org/Agathiyar1.jpg
நாக்கு சிவத்து மூளைக் கட்டுக்கள் முள்போலத் தோன்றி இரத்தம் போலச் சிவந்திருக்கும், காய்ச்சல் குறையாமல் தகிக்கும், அளவுக்கதிகமான தாகம் இருக்கும், உடல் வியர்க்கும் , உடல் முழுதும் வலிப்பது போல் இருக்கும் , பாக்கு தின்பது போல நாக்கில் துவர்ப்புச்சுவை தெரியும், இந்த அறிகுறிகள் தெரிந்தால் ஏழு நாளில் உயிர் துறப்பார்கள் என்று உலகத்தவர்கள் தெரிந்துகொள்ள சொல்கிறேன். 


"சிவேத சிவக்கச் சுரமுண்டாம் 
சிதற வேர்வை மறுமையுண்டு
நீத நாக்கு பசுத்து முள்ளு 
நிறைந்தே வெடித்து ரோகமுண்டாம்
ஓதத்தத் தொண்டை நேரிகுரலாம் 
ஒளிசெர்நாளும் பதினைந்தாம்
நாதப் பண்சொல் மொழிமடவாய் 
நாடிக் கொள்வாய் நாள்குறியே" 


உடல் சிவந்து காணப்படும் சுரம் உண்டாகி , வியர்வை பெருகும், நாக்கு நிறம் மாறி முள் போல் முளைகள் நிறைந்து வெடித்து காணப்பட்டு அதிக வேதனை தரும், தொண்டை இறுகி குரல் மாறிவிடும், நாத மொழி பேசும் பெண்ணே இந்த அறிகுறிகள் கண்டால் பதினைந்து நாளில் மரணம் என்று அறிந்து கொள். 


"எண்ணியஅவத்தை சொல்வேன் 
இனியகை மார்பும் மூக்கும்
நண்ணிய செவியினோடு 
நலம்பெற குளிர்ந்து காட்டி 
திண்ணமா உச்சி யங்கி 
யாயிடிச் சிலேத்தும மோடி
மண்ணினிக் கடிகை ஐந்தில் 
மரணமேன்றறிந்து சொல்லே" 

கை, மார்பு, மூக்கு, காது, முதலான உறுப்புக்கள் குளிர்ந்து காணப்படும், உச்சந்தலையில் இடி இடிப்பது போல வலி ஏற்படும், சிலேத்தும நாடி மிகுந்து ஓடும் இவ்வகை அறிகுறிகள் காணப்பட்டால் இந்தப் புவியில் ஐந்து நாழிகையில் மரணம் என்று அறிந்துகொள். ( இரண்டரை நாழிகை என்பது - ஒரு மணி நேரத்தைக் குறிக்கும் ) 

"அறிந்தபின் மமர்ந்து வாத 
சிலேத்தும மதிக மாகில் 
நிறைந்தோர் வார்த்தை தானும் 
நேர்பட வெடிப்பாய் பேசும் 
சிறந்திடு முகம்வெளுத்து 
மார்ப்பது குடில்போல் சென்றால் 
மறந்தனார்க்கடி கைதொண்ணுறா
மளவிலே மரண மெய்யே" 


பித்த நாடி அடங்கி வாத சிலேத்தும நாடிகள் அதிகரிக்குமானால், நல்ல மொழிகளைப் பேசும் நிலையில் இருப்பவர் வார்த்தைகள் சீற்றத்தோடு அதாவது கோபமானவையாக இருக்கும், முகம் வெளுக்கும், மார்பானது குழல் போல் குறுகும், இத்தகு அறிகுறிகள் தோன்றினால் தொண்ணூறு நாழிகையில் மரணம் என்று அறிந்துகொள்.


Read more: http://www.livingextra.com/2011/06/blog-post.html#ixzz1O5G0e900