Search This Blog

Showing posts with label short story. Show all posts
Showing posts with label short story. Show all posts

Friday, April 17, 2020

அர்த்தம் நிறைந்த ஒரு குட்டிக் கதை!

ஒரு முகாம் ஒன்றில் புதிய தளபதி நியமிக்கப்பட்டார்.
அவர் அந்த இடத்தை ஆய்வு செய்தபோது , 2 காவலாளிகள் ஒரு பெஞ்சை காவல் காத்து கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர் அருகில் சென்று
அவர்கள் ஏன் அதைக் காவல் காக்கிறீர்கள் என்று கேட்டார்.
அதற்கு அவர்கள்...
"எங்களுக்குத் தெரியாது சார். முன்னாள் தளபதி அவ்வாறு செய்யச் சொன்னார், அதனால் நாங்கள் செய்கிறோம்!"
அவர் உடனே
அந்த முன்னாள் தளபதியின் தொலைபேசி எண்ணைத் தேடி அழைத்து பேசினார். மேலும் இந்த குறிப்பிட்ட பெஞ்சை ஏன் காவலர்களை கொண்டு காத்தார் என்று அவரிடமே கேட்டார்.
"எனக்குத் தெரியாது. முந்தைய தளபதியிடம் இரண்டு காவலர்கள் இருந்தனர். அவர்கள் மிகவும் அதை சிரத்தையாக பாதுகாத்தனர். அதனால், நான் பாரம்பரியத்தை உடைக்காமல் வைத்திருந்தேன்" என கூறினார்.
ஏன் என்று தெரியாமல் போனால் ஆர்வத்தில் மண்டை வெடித்துவிடும் போல இருந்தது , புதிய தளபதிக்கு.
அதனால்...மேலும் 3 முன்னாள் தளபதிகளை சந்தித்து பேசினார்.
அவர்களுக்கும் ஒன்றும் தெரியாமல் போக.... ஆனால் ,
அவர்கள் சொன்ன விவரங்களை வைத்து...
ஒரு 100 வயதான ஓய்வுபெற்ற முன்னாள் தளபதியைக் கண்டுபிடித்தார்.
அவர்தான்
இந்த பழக்கத்தை தோற்றுவித்தார்
என கூறியதன் பேரில்,
அவரிடம் சென்று...
"மன்னிக்கவும் ஐயா....
நான் உங்கள் முகாமின்
இப்போதைய தளபதி.
ஒரு சாதரணப் பெஞ்சை காக்க
இரண்டு காவலர்கள் இன்னமும் நியமிக்கப்பட்டிருப்பதைக் கண்டேன்.
நீங்கள் தான் அதற்கு தொடக்கம் என அறிந்தேன்.அவர்களை ஏன் அவ்வாறு செய்ய வைத்தீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?"
என்று தயக்கத்துடன் கேட்டார்.
"என்ன...? அந்த பெயின்ட் இன்னுமா காயவில்லை..... ?!?"

Saturday, April 11, 2020

படித்துப் பாருங்கள் உருசிக்கும் சின்னஞ் சிறுகதை !

”விமலா… ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி; அப்புறம், சூடா ஒரு கப் காபி கொடு.”
தண்ணீரையும், காபியையும் கொண்டு வந்து வைத்தாள் விமலா.
“விமலா… அப்பா ஏன் கொல்லைப் புறத்தில் உட்கார்ந்து இருக்கார்?”
”ம்… நீங்களே கேளுங்க அந்த கண்றாவியை.”
காபியை ஒரே மடக்கில் குடித்தவன், தந்தையின் அருகில் வந்தான். அவரது தோளை ஆதரவாக பற்றினான்.
“அப்பா… எழுந்திரிச்சு உள்ளே வாங்க.” தந்தையின் கையை மென்மையாக பிடித்து அழைத்து வந்து, சோபாவில் அமர்த்தினான்.
“ஏம்பா என்னமோ மாதிரி இருக்கீங்க?”
அவர் சொல்லத் தயங்கினார்.
“எதுவா இருந்தாலும் சொல்லுங்கப்பா.”
“அவர் சொல்ல மாட்டார்… நானே சொல்றேன்… கரன்ட் பில்லும், ஸ்கூல் பீசும் கட்டிட்டு வாங்கன்னு குடுத்த, பத்தாயிரம் ரூபாயை தொலைச்சுட்டு வந்து நிக்கறார்.
கேட்டா, “எங்கே வெச்சு தொலைச்சேன்னே தெரியலைமா…’ ன்னு சொல்றார்.”
அவர் முகத்தைப் பார்க்க பாவமா இருந்தாலும், 10 ஆயிரம் ரூபாய் போனதில், அவனுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
விமலா மேலும், அவனை சூடேற்றினாள்…
“இந்த அளவுக்கு அஜாக்கிரதையும், பொறுப்பில்லாமையுமா ஒருத்தர் இருப்பாங்க. இவர், பேங்கில வேறெ கேஷியரா இருந்தாரு. எப்படித்தான் இத்தனை காலம் கேஷியர் வேலை பார்த்தார்னே தெரியலை.”
”விமலா… நீ கொஞ்சம் பேசாம இரு. நான்தான் விசாரிச்சிட்டு இருக்கிறேன்ல்ல.”
”எங்க வெச்சுப்பா தொலைஞ்சிச்சு?” தந்தையிடம் கேட்டான் கதிரேசன்.
”அதுதாம்பா எனக்கும் புரியலை. விமலா கிட்டே பணத்தை வாங்கிட்டு, ஈ.பி., ஆபீசுக்கு போயிட்டு இருக்கும் போது, நம்ம எதிர்த்த வீட்டு ரிட்டையர்டு போஸ்ட் மாஸ்டர் சேஷாத்ரியை வழியில பார்த்தேன்.
அவரும், ஈ.பி., ஆபீசுக்கு தான் போறேன்னு சொன்னதும், நானும், அவருமா பேசிட்டே நடந்து போனோம். அங்க ஒரே கூட்டமா இருந்தது.
கூட்டம் குறையட்டும்ன்னு, நானும், அவருமா ஒரு மர நிழல்ல உட்கார்ந்தோம். தாகமா இருக்குன்னு, ரெண்டு பேரும், ஆளுக்கு ஒரு இளநியை குடிச்சிட்டு, நானே காசைக் குடுக்கலாம்ன்னு திரும்பிப் பார்த்தா, “பேக்’கை காணோம். கடைசியில, இளநீருக்கு போஸ்ட் மாஸ்டர் தான் காசை கொடுத்தார்.”
”அந்த இளநீர்க்காரன் எடுத்திருப்பானோ!"
“இல்லப்பா… அவன் என் முன்னாலதான் இருந்தான். பின்னால, இருந்த வேற யாரோ தான், எனக்குத் தெரியாம எடுத்திருக்காங்க.”
விமலா குறுக்கிட்டாள்…
”பணப் பைய யாராச்சும் பின்னால வைப்பாங்களா? சுத்த கோமாளித்தனமா இருக்கு. சொந்தமா சம்பாத்தியம் இருந்தாத்தானே, காசோட அருமை தெரியும். என்னோட புருஷன் சம்பாதித்ததை, வேறெ எவனோ திங்கணும்ன்னு விதி.”
”இந்த ஒரு தடவை தானம்மா இப்படி நடந்திச்சு. ரிட்டையர்டு ஆனதுக்கப்புறம், இத்தனை நாளா, நான்தானே கஷ்டப் பட்டுட்டு வர்றேன். அப்பெல்லாம், ரொம்ப ஜாக்கிரதையாத்தானே இருந்தேன்.”
”ஒரு தடவை தொலைத்தாலும், மொத்தமா, 10 ஆயிரம் ரூபா… சர்வ ஜாக்கிரதையாத்தான் இருக்கணும். அங்க, என்னோட வேலை பார்த்தவங்க நின்னுட்டு இருந்தாங்க. இங்க, என்னோட சிநேகிதனை பார்த்தேன்னு சொல்லி, நாள் முழுக்க வெட்டிப் பேச்சு பேசிட்டு நிற்கக் கூடாது,” என்று பொரிந்து தள்ளினாள் விமலா.
”விமலா… கொஞ்சம் மரியாதை குடுத்து பேசு. என்ன இருந்தாலும், அவர் என்னோட அப்பா.”
”ஆமா நீங்க தான் மெச்சிக்கணும். சும்மாதானே வீட்டில இருக்காரு. காலைலயும், சாயந்தரமும் குழந்தைகள ஸ்கூல்ல கொண்டு விடச் சொன்னா, “வயசான காலத்தில என்னால முடியலை…’ன்னு வயசை ஒரு சாக்கா வெச்சிட்டு, ஜகா வாங்கிக்கிறது; உருப்படியா பண்ணிட்டு இருந்தது, ரேஷன்ல பொருள் வாங்கறதும், கரன்ட் பில், ஸ்கூல் பீஸ் கட்டறதும் தான். இனி, இந்த ஒரு காரணத்தை வெச்சு, இந்த வேலையிலிருந்தும் ஜகா வாங்கிக்கலாம்ல்ல.”
கதிரேசன் குறுக்கிட்டான்.
“விடு விமலா… அவருக்கு முடியலைன்னா, நானோ, நீயோ போயி கட்டிட்டு வந்திடலாம். இதுக்குப் போயி…”
“ஆமா, நானோ, நீங்களோ போயி எல்லா வேலையும் செஞ்சிட்டு வந்திடலாம். இங்கே, இந்த பெரிய மனுஷன், நல்லா சாப்பிட்டுட்டு, அந்த கோவில், இந்த கோவில்ன்னு சுத்திட்டு வரட்டும். நேரத்திற்கு சமைச்சுப் போடத்தான் நான் இருக்கேன்ல.”
”ஏய் இப்ப என்ன பண்ணனும்ங்கற?” எரிச்சலுடனேயே கேட்டான் கதிரேசன்.
“எம்மேல ஏன் எரிஞ்சு விழறீங்க? கொஞ்ச நாள், உங்க தங்கச்சி வீட்டில கொண்டு போயி விடுங்க. அப்பத்தான்; நம்ம வீட்டோட அருமை தெரியும்.”
”என்ன மாப்பிள்ளே… ஏதோ, சூடான விவாதம் போல தெரியுது… சிவபூஜைல கரடி நுழைஞ்சிருச்சோ கேட்டபடியே வீட்டினுள் நுழைந்தார், விமலாவின் தந்தை சிவராமன்.
”அப்பா வாங்கப்பா… இந்த, வேகாத வெயில்ல ஏம்பா நடந்து வந்தீங்க? ஒரு ஆட்டோ புடிச்சா, பஸ் ஸ்டாண்டிலிருந்து, நம்ம வீட்டிற்கு மிஞ்சிப் போனா, நாற்பதோ, ஐம்பதோ கேட்பான்.”
”நடக்கிறது உடம்புக்கு நல்லதுதானேம்மா. சரி…சரி… இந்த பையில பழங்களும், சிப்சும் இருக்கு. குழந்தைகள் வந்தா குடு. மொதல்ல, இதை போயி உள்ளே வெச்சிட்டு வா.”
பையை கிச்சனில் வைத்து விட்டு, தந்தைக்கு லெமன் ஜூசை எடுத்து வந்தாள் விமலா.
”அப்பா இந்தாங்க, “ஜில்’லுன்னு குடிங்க.”
“அதை இப்படி வெச்சிட்டு இந்தப் பக்கம் வாம்மா!”
ஜூஸ் நிரம்பிய கிளாசை, மேஜையின் மேல் வைத்து விட்டு, தந்தையின் அருகில் வந்தாள் விமலா.
“என்னப்பா?”
இரண்டு உள்ளங்கையையும் ஒன்றோடு ஒன்று நன்றாக தேய்த்து சூடாக்கி, “பளார்’ என்று, தன் மகளின் கன்னத்தில் அறைந்தார் சிவராமன்.
சிவராமனின் ஐந்து விரல்களும், விமலாவின் கன்னத்தில், அச்சு பதித்தாற்போல் பதிந்தன.
விம்மி அழுது கொண்டே, ”என்னப்பா…” என்றாள் விமலா.
கதிரேசனும், ராமநாதனும் அதிர்ச்சியுடன் சிவராமனையே பார்த்தனர்.
”மாமா… வந்து…” என்று வார்த்தை கிடைக்காமல் திக்கினான் கதிரேசன்.
” நான் வந்து இருபது நிமிஷம் ஆச்சு மாப்பிள்ளே.. பொண்டாட்டி பேச்சுக்கு மதிப்பு குடுக்க வேண்டியதுதான். தப்பில்ல..
ஆனா, எந்த காலத்திலேயும், எந்த நேரத்திலேயும், தன்னைப் பெத்தவங்களையும் விட்டுக் குடுக்கக் கூடாது. குடும்பத்தில் முதல் மரியாதை அவங்களுக்குத்தான். அதுவும் அவுங்க மனைவிய இழந்தவங்க.. அதுக்கப்புறம்தான் பொண்டாட்டி, குழந்தைகள்..
நீங்களோ, சம்பந்தியோ அவளை அடிச்சா, புருஷன் வீட்டில எல்லாருமா சேர்ந்து, என்னை கொடுமை பண்ணறாங்கன்னு இவ போலீஸ்ல கம்ப்ளைன்ட் குடுக்கலாம். ஆனா, நானே ரெண்டு சாத்து சாத்தினா, எவன் கேட்கப் போறான்?😳
நான் வர்றேன் மாப்பிள்ளே,
வர்றேன் சம்பந்தி.
காத்தால நடக்கும் போது, அப்படியே நம்ம வீட்டுக்கும் அடிக்கடி வாங்க. கொஞ்ச நேரம் ஜாலியா பேசிட்டு இருக்கலாம்,” என்று கூறியபடியே, நடையைக் கட்டினார் சிவராமன்.
”அப்பா…” என அழுதபடியே கூப்பிட்டாள் விமலா.
”என்னம்மா?”
“இந்த ஜூசையாவது குடிச்சிட்டு போங்கப்பா”
இந்த வீட்டை கட்டிக் காத்து உன் கணவனை வாழ வைத்து விட்டு,இப்போது மனைவியை இழந்து நிக்கும் மாமனார, எப்போ நீ நல்ல மனசோட அப்பான்னு நினைக்கிறீயோ..அப்போ என்னைக் கூப்பிடு, சாப்பாடே சாப்பிட்டுட்டு போறேன்.” சரியா...
கம்பீரமாக நடந்து செல்லும் தன் சம்பந்தியை, வாஞ்சையுடன் பார்த்தார் ராமநாதன்..
Thanks 
Abdul Majeed

Saturday, April 4, 2020

நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு








நன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு



1. காஞ்சனை  :  புதுமைப்பித்தன்

2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்  :  புதுமைப்பித்தன்

3. செல்லம்மாள்  :  புதுமைப்பித்தன்

4. அழியாச்சுடர்  :மௌனி

5. பிரபஞ்ச கானம்  :  மௌனி

6. விடியுமா  :  கு..ரா

7. கனகாம்பரம்  :  கு..ரா

8. நட்சத்திர குழந்தைகள்  :பி. எஸ். ராமையா

9. ஞானப்பால்  :  பிச்சமூர்த்தி

10. பஞ்சத்து ஆண்டி  :  தி.ஜானகிராமன்

11. பாயசம்  :  தி.ஜானகிராமன்

12. ராஜா வந்திருக்கிறார்  :  கு. அழகிரிசாமி

13. அன்பளிப்பு  :  கு. அழகிரிசாமி

14. இருவர் கண்ட ஒரே கனவு கு. அழகிரிசாமி

15. கோமதி  :  கி. ராஜநாராயணன்

16. கன்னிமை  :  கி.ராஜநாராயணன்

17. கதவு. கி.ராஜநாராயணன்

18. பிரசாதம்  :சுந்தர ராமசாமி

19. ரத்னாபாயின் ஆங்கிலம்  :சுந்தர ராமசாமி

20. விகாசம்  :  சுந்தர ராமசாமி

21. பச்சை கனவு  :லா..ராமாமிருதம்

22. பாற்கடல்  :லா..ராமாமிருதம்

23. ஒரு ராத்தல் இறைச்சி  :  நகுலன்

24. புலிக்கலைஞன்  :அசோகமித்ரன்

25. காலமும் ஐந்து குழந்தைகளும்  :  அசோகமித்ரன்

26. பிரயாணம்  :  அசோகமித்ரன்

27. குருபீடம்  :  ஜெயகாந்தன்

28. முன்நிலவும் பின்பனியும்  :  ஜெயகாந்தன்

29. அக்னிபிரவேசம்  :ஜெயகாந்தன்

30. தாலியில் பூச்சூடியவர்கள்  :  பா.ஜெயபிரகாசம்

31. காடன் கண்டது  :  பிரமீள்

32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல்  :  ஆதவன்

33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்  :  ஆதவன்

34. பைத்தியக்கார பிள்ளை  :  எம்.வி. வெங்கட்ராம்

35. மகாராஜாவின் ரயில்வண்டி  :  . முத்துலிங்கம்

36. நீர்மை  :  .முத்துசாமி

37. அம்மா ஒரு கொலை செய்தாள்  :  அம்பை

38. காட்டிலே ஒரு மான்  :அம்பை

39. எஸ்தர்  :  வண்ணநிலவன்

40. மிருகம்  :  வண்ணநிலவன்

41. பலாப்பழம்  :  வண்ணநிலவன்

42. சாமியார் விற்கு போகிறார்  :  சம்பத்

43. புற்றில் உறையும் பாம்புகள்  :  ராஜேந்திரசோழன்

44. தனுமை  :  வண்ணதாசன்

45. நிலை  :  வண்ணதாசன்

46. நாயனம்  :  .மாதவன்

47. நகரம்  :சுஜாதா

48. பிலிமோஸ்தவ்  :சுஜாதா

49. தக்கையின் மீது நான்கு கண்கள்  :  சா.கந்தசாமி

50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர்  :  ஜி. நாகராஜன்

51. ஒடிய கால்கள்  :  ஜி.நாகராஜன்

52. தங்க ஒரு  :  கிருஷ்ணன் நம்பி

53. மருமகள்வாக்கு  :  கிருஷ்ணன் நம்பி

54. ரீதி  :  பூமணி

55. இந்நாட்டு மன்னர்  :  நாஞ்சில் நாடன்

56. அப்பாவின் வேஷ்டி  :  பிரபஞ்சன்

57. மரி எனும் ஆட்டுக்குட்டி  :  பிரபஞ்சன்

58. சோகவனம் : சோ.தர்மன்

59. இறகுகளும் பாறைகளும்  :மாலன்

60. ஒரு கப் காப்பி  :  இந்திரா பார்த்தசாரதி

61. முங்கில் குருத்து  :  திலீப்குமார்

62. கடிதம்  :  திலீப்குமார்

63. மறைந்து திரியும் கிழவன்  :  சுரேஷ்குமார இந்திரஜித்

64. சாசனம்  :  கந்தர்வன்

65. மேபல்  :தஞ்சை பிரகாஷ்

66. அரசனின் வருகை  :  உமா வரதராஜன்

67. நுகம்  :  எக்பர்ட் சச்சிதானந்தம்

68. முள்  :  சாரு நிவேதிதா

69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்  :  சுப்ரபாரதி மணியன்

70. வனம்மாள்  :அழகிய பெரியவன்

71. கனவுக்கதை  :  சார்வாகன்

72. ஆண்மை  :  எஸ்பொ.

73. நீக்கல்கள்  :  சாந்தன்

74. மூன்று நகரங்களின் கதை  :கலாமோகன்

75. அந்நியர்கள்  :  சூடாமணி

76. சித்தி  :  மா. அரங்கநாதன்.

77. புயல்  :  கோபி கிருஷ்ணன்

78. மதினிமார்கள் கதை  :  கோணங்கி

79. கறுப்பு ரயில்  :  கோணங்கி

80. வெயிலோடு போயி  :  தமிழ்செல்வன்

81. பத்மவியூகம்  :  ஜெயமோகன்

82. பாடலிபுத்திரம்  :  ஜெயமோகன்

83. ராஜன் மகள்  :  பா.வெங்கடேசன்

84. தாவரங்களின் உரையாடல்  :  எஸ்.ராமகிருஷ்ணன்

85. புலிக்கட்டம்  :  எஸ்.ராமகிருஷ்ணன்

86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும்  :வேல.ராமமூர்த்தி

87. ஒரு திருணையின் பூர்வீகம்  :சுயம்புலிங்கம்

88. விளிம்பின் காலம்  :  பாவண்ணன்.

89. காசி  :  பாதசாரி

90. சிறுமி கொண்டு வந்த மலர்  :  விமாலதித்த மாமல்லன்

91. மூன்று பெர்நார்கள்  :  பிரேம் ரமேஷ்

92. மரப்பாச்சி  :  உமா மகேஸ்வரி

93. வேட்டை  :  யூமா வாசுகி

94. நீர்விளையாட்டு  :  பெருமாள் முருகன்

95. அழகர்சாமியின் குதிரை  :  பாஸ்கர் சக்தி

96. கண்ணியத்தின் காவலர்கள்  :  திசேரா

97. ஹார்மோனியம்  :  செழியன்

98. தம்பி  :  கௌதம சித்தார்த்தன்

99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா

100. பூனைகள் இல்லாத வீடு  :  சந்திரா
http://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_07.html

Thursday, January 30, 2020

முகம் – குட்டிக்கதை


நீ தொலைந்துபோய்விட்டாய். செய்தித்தாள்களில் வரும் உன் முகத்தின் பாவனைகள் மூலம் உன் மன நிலையை நான் கணிக்கிறேன். வலைதளங்களிலும் நீ பதிவிடும் படங்களிலும் காணொளிகளிலும் உன் இயல்பை நான் அறிந்துகொள்கிறேன். உன் பாதைகள், உன் ஆசைகள், உன் உண்மைகள், உன் பொய்கள், உன் நம்பிக்கைகள், உன் துரோகங்கள், உன் அறியாமைகள், உன் நுட்பங்கள், உன் உயரங்கள், உன் சமரசங்கள், உன் சரிவுகள் எல்லாம் எனக்குத் தெரிந்துவிடுகின்றன. உனக்குள் விரியும் புன்னகைகள், உனக்குள் உடையும் அழுகைகள், ஆர்ப்பரிப்புகள், ஆராதனைகள், அச்சங்கள், அதிர்வுகள் என்று எல்லாம் உன் படங்கள் வாயிலாகவே எனக்குப் புரிந்துவிடுகின்றன. மனிதர்களை பிம்பங்கள் மூலமாகவே எடைபோடத் தெரிந்தவன் நான். படங்களில் இருக்கும் முக பாவனை, கண்ணோர ஒளி, புன்னகைகளின் அளவு, மூக்கு மடல்களின் கனம், உதடுகளின் வளைவு, காதுகளின் விடைப்பு, தொண்டை நாளங்களின் இறுக்கம் என்று பல அம்சங்கள் எனக்கு அனைத்துச் செய்திகளையும் சொல்லிவிடுகின்றன. உன்னை அறிந்துகொள்ள எனக்கு உன் படங்கள் மட்டுமே போதுமானவை. என்னை அறிந்துகொள்ள ஒரு முறை கண்ணாடியில் என் முகம் பார்க்கிறேன். அதில் வேறு முகம் தெரிகிறது. கண்ணாடி, முகம் ஆக முடியாது.
-நிஜந்தன்
-முன்றில் இதழ்
விலை:25ரூ
ஆண்டுச் சந்தா 275ரூ
தொடர்புக்கு
muntilmagazine@gmail.com
thanks 

Mubeen Sadhika

Monday, October 14, 2019

ஒரு கதை


ஒரு விழாவில் இளைஞா ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார். 

இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.

 " நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். _ " ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனை திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாக போய்விட்டது. 

ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள் , ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டு பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை. 

பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றி கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னை திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியை கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படி தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும் , கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார். 

மீண்டும் அந்த இளைஞர் கேட்டார் , "இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை" ? என்றார். "ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். ஆசிரியர் கூறினார், "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.

Thursday, February 7, 2019

பன்றிகளின் வாழ்க்கை ஒரு குட்டிக்கதை..


அவர் ஒரு பெரிய துறவி இளம் வயதிலேயே ஐம்புலன்களை அடக்கி தவநெறி தவறாமல் ஞான ஜோதியாய் வாழ்ந்தார்.
ஊருக்கு வெளியே அவருடைய ஆஸ்ரமம் இருந்தது. ஏராளமான சீடர்கள் இருந்தார்கள்.
ஆஸ்ரமத்துக்கு அருகில் பன்றி ஒன்று, தன் குட்டிகளுடன் வசித்து வந்தது. அதைத் துரத்த துறவியின் சீடர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள்
அது அசைந்து கொடுக்கவில்லை.
"பரவாயில்லை, இருந்துவிட்டுப் போகட்டும். பன்றியும் இறைவன் படைப்புத்தானே! அது தன் வாழ்க்கையை வாழட்டும்! நாம் நம்
வாழ்க்கையை வாழ்வோம்,'' என்று சொல்லிவிட்டார் துறவி.

ஆனாலும், பன்றியோ அதன் குட்டிகளோ ஆஸ்ரமத்திற்குள் நுழைந்துவிட முடியாதபடி ஆஸ்ரமத்தின் வெளிப்புறக் கதவைப் பலப்படுத்தினார்கள்.
காலம் நகர்ந்தது. துறவி தினமும் காலையிலும் மாலையிலும் சீடர்கள் புடைசூழ சற்றுத் தொலைவில் இருந்த ஆற்றுக்குக் குளிக்கச் செல்வார்.
அப்படிப் போகும்போதும் வரும்போதும் அந்தப் பன்றியின் குடும்பத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்.
அசிங்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பன்றிக் குட்டிகளைப் பார்த்துத் துறவியின் சீடர்கள் முகம் சுளிப்பார்கள்.
இறைவன் ஏன்தான் இந்த ஈனப் பிறவியைப் படைத்தானோ குருதேவா! பார்க்கும்போதே வயிற்றைக் குமட்டுகிறதே பாருங்கள்!
பன்றிக்குக் கொஞ்சமாவது சுத்த உணர்வு இருக்கிறதா என்று என்றான் பிரதான சீடன்.
தவறு செய்கிறாய் மகனே! மனிதனின் கண்களைக் கொண்டு பன்றியின் வாழ்க்கையைப் பார்க்கிறாய்.
அதனால்தான் உனக்கு அருவருப்பாக தெரிகிறது. பன்றிக்கு அதன் வாழ்க்கை சொர்க்கம்தான்.
ஒருவேளை அந்தப் பன்றிகள் நம்மைப் பார்த்து, இறைவன் ஏன்தான் இந்த ஈனமான மனிதப் பிறவியைப் படைத்தானோ? என்று பேசிக்கொண்டிருக்கிறதோ என்னவோ! யாருக்குத் தெரியும்?
துறவியை பன்றிகளின் வாழ்க்கை அதிகமாக ஈர்த்தது. அவை தினமும் உணவு தேடும் அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.
பன்றியின் குடும்பம் பெருகியது. அவ்வப்போது அந்தப் பன்றிகளுக்கு ஆஸ்ரமத்திலிருந்து உணவும் அளிக்கச் சொல்வார் துறவி.
காலம் ஓடியது...
துறவி நோய்வாய்ப்பட்டடார்...
இன்னும் சில நாட்களில் தனக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது என்பதைத் தன் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார்.
அவருக்கு இருந்த அபரிமிதமான யோக சக்தியால், தான் அடுத்த பிறவியில் ஒரு பன்றியாகப் பிறக்கப் போகிறோம் என்பதையும் தெரிந்து கொண்டார்.
அதுவும் ஆஸ்ரமத்திற்கு அருகில் வசித்து வந்த பன்றிக்கூட்டத்திலேயே பிறக்கப் போகிறோம் என்பதைத் தன் நுண்ணுணர்வால் உணர்ந்து கொண்டார்...
திடுக்கிட்டார்...
இறைவனை வேண்டினார்...
வாழ்நாள் முழுவதும் தவநெறி தவறாமல் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என்று புலம்பினார்.
நாளெல்லாம் நீ பன்றிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் ஒரு பிறவி மட்டும் நீ பன்றியாகப் பிறந்து பன்றி வாழ்க்கை வாழ வேண்டும்.
அந்த வாழ்க்கையை உடனே முடித்துக் கொண்டால், அதன்பின் உனக்குப் பிறவி கிடையாது. நேராக என்னிடம் வந்துவிடலாம்.
ஆனால், பன்றி வாழ்க்கையில் திளைத்து உன் உண்மை நிலையை மறந்தால் உனக்கு விமோசனமே இல்லை.'' என்று இறைவன் மனமொழியாகப் பேசியருளினார்.
தான் இறக்கப் போகும் நேரம் நெருங்கியவுடன் மற்ற சீடர்களை வெளியே அனுப்பிவிட்டுப் பிரதான சீடனிடம் ரகசியக் குரலில் பேசினார்.
அப்பனே! இது தேவ ரகசியம். வேறு யாரிடமும் சொல்லிவிடாதே. நான் இன்று இரவு சாகப் போகிறேன்...
உடனே எதிரே வசிக்கும் ஒரு பெண் பன்றியின் கருவில் நுழைவேன்...
குறித்த காலத்தில் ஒரு பன்றிக் குட்டியாகப் பிறப்பேன். நீ பன்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும்...
நமது சாஸ்திரங்களின்படி ஒரு பன்றியின் கர்ப்பகாலம் 120 நாட்கள்...
இன்றிலிருந்து 120 நாட்களில் பிறக்கப் போகும் குட்டியை அடுத்த இரண்டு மூன்று தினங்களில் கொன்றுவிடு...
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பன்றியின் வாழ்க்கையை இரண்டு நாளாவது வாழ்ந்து பார்த்து விடுகிறேன்.
அன்று இரவே துறவி மாண்டார்...
பன்றியின் கருவினுள் புகுந்தார்...
துறவியின் பிரதான சீடன் கையில் கத்தியுடன் காத்திருந்தான். குறித்த
காலத்தில் பன்றி குட்டி போட்டது. தன் குருவின் மேல் உள்ள கருணையினால் அந்தப் பன்றிக்குட்டி ஒரு வாரம் நன்றாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டான் சீடன்...

பிறகு ஒரு நாள், அந்தக் குட்டியைக் கொல்லக் கத்தியை ஓங்கியபோது பன்றியாக இருந்தும் யோக சக்தி நிறைந்த அந்தத் துறவி அழாத
குறையாகக் கெஞ்சினார்...

பெரிய பிழை செய்துவிட்டேன். நான் சொன்னது எல்லாம் தப்பு. இந்தப் பன்றி வாழ்க்கைதான் எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா?
இதை முழுமையாக வாழ விரும்புகிறேன்.
ஆனால் குருவே! நீங்கள் உடனே உயிரை விட்டால்தானே இறைவன் திருவடியை அடைய முடியும்?
இறைவன் திருவடி யாருக்கு வேண்டும்?
இந்தப் பன்றிக்குட்டியின் வாழ்க்கையைப் போல் இறைவன் திருவடி சுகமாக இருக்குமா என்ன?
இது சொர்க்கமாக இனிக்கிறதடா! இனி நான் எடுக்கப் போகும் எல்லாப் பிறவிகளிலும் ஒரு பன்றியாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன்.
என் கூற்றில் சந்தேகமிருந்தால் நீயும் வேண்டுமானால் ஒரு முறை பன்றியாகப் பிறந்துதான் பாரேன்.
தப்பித்தோம் பிழைத்தோம் என்று சீடன் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான்...
அந்தத் துறவி செய்த ஒரே தவறு. தான் பிறந்த உடனேயே தன்னைக் கொன்று போட்டுவிட வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும்.
இரண்டு நாட்கள் பன்றியாக வாழ்ந்து பார்க்கிறேன் என்று சொன்னார்...
அதில் பற்று வந்துவிட்டது...
ஆம்...
இந்தக் கதையில் ஒரு பெரிய வாழ்வியல் #உண்மை ஒளிந்திருக்கிறது...
இன்று பலரும் #மது, #புகை போன்ற தீய பழக்கங்களுக்கு எப்படி அடிமையா கிறார்கள் தெரியுமா????
அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்ற ஆர்வத்தில் ஆரம்பித்துத் பின்
அதைவிட்டு விலக முடியாத அளவிற்குத் தங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்...

இன்றைய இளைஞர் கூட்டம் மது, #புகைப்பிடித்தல், தவறான உறவு என்று அனைத்தையும் ஒரு முறையாவது சுவைத்துப் பார்க்க விரும்புகிறது...
அது இரண்டு நாட்கள் பன்றியாக வாழும் கதைதான்...
பன்றியாக இல்லாத வரைக்கும் தான், பன்றியைக் கண்டால் அருவருப்பாக இருக்கும்...
பன்றியாகிவிட்டால் அதுவே சுவர்க்க லோகமாக தான் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது...
விளையாட்டிற்குக் குடித்தாலும் விஷம், தன் வேலையைக் காட்டிவிடும்...
#விஷம் என்று தெரிந்தபின் விலகி இருப்பது நல்லது.

Monday, November 13, 2017

நல்லதோர் திருப்புமுனை படித்ததில் மனதை தொட்டது :


ஓர் வார இறுதிக்குபின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை சுமதி அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது.
அதுதான் வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப்பார்த்து 'Love you all!' என்று சொல்வது. அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்கே தெரியும்.
ஏனெனில் அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்கமுடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக்காட்டுவதற்கு எந்தவொரு பொசிடிவ் அட்டிடியூடும் இல்லாத 'டெடி'என்கிற தியோடர்! அவனுடன் மட்டும் ஆசிரியை சுமதி நடந்துகொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விஷயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விஷயத்திற்கும் அவனை நிராகரித்தார்.
அவ்வாண்டிற்கான காலாண்டு பரீட்சை வந்தது. முன்னேற்ற அறிக்கைகள் வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்து க்கு அனுப்பப்பட்டது.
ரிப்போர்ட்களை ,மேற்பார்வை செய்து கையொப்பமிடுத்துக்கொண்டிருந்த தலைமை ஆசிரியர் ,ஆசிரியை சுமதியை அழைப்பு விடுத்தார்.
அவர் வந்ததும், 'முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்கவேண்டும். தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை பெற்றோருக்கு தரவேண்டும்! நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும்போது பெற்றோர் அவன்மீது நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!’ என்று கேள்விக்குறியுடன் டெடியின் முன்னேற்ற அறிக்கையை காட்டிக்கேட்டார்.
உடனே சுமதி 'என்னால் ஒன்றுமே செய்யமுடியாது. அவனைப்பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விஷயம்கூட இல்லை!' என்றார்.
உடனே தலைமை ஆசிரியர் அங்குள்ள நிர்வாக ஊழியர் ஒருவரிடம் கடந்த ஆண்டுகளுக்கான டெடியின் முன்னேற்ற அறிக்கைகளை சுமதிக்கு கொடுக்குமாறுபணித்தார். அறிக்கைகள் வருகிறது. ஒவ்வொரு ஆண்டாய் விரித்துப்படிக்கிறார் சுமதி
மூன்றாம் வகுப்பறிக்கை சொன்னது ' வகுப்பின் மிகத்திறமையான மாணவன் டெடி'. தான் வாசித்ததை நம்பமுடியாமல் அதிர்ச்சியில் உறைந்துபோனார் சுமதி
நான்காம் ஆண்டறிக்கை சொன்னது. ' டெடியின் தாய் இறுதிநிலை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் டெடி மீது முன்னர்போல அவரால் கவனம் செலுத்தமுடியவில்லை. அதன் விளைவு அவனிடம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. '
ஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது, "டெடியின் தாயார் இறந்துவிட்டார்.அவனுக்கு அவசரமாய் வழிகாட்டல் தேவைப்படுகிறது. இல்லையேல் நாம் அந்தக்குழந்தையை இழந்துவிடுவோம்.!'
கண்களில் கண்ணீருடன் சுமதி தலைமை ஆசிரியரைப்பார்த்து சொன்னார். 'என்ன செய்யவேண்டுமென்று எனக்கு தெரியும்.'
அடுத்த திங்கள் காலை ஆசிரியை வகுப்புக்கு சென்று பிள்ளைகளை பார்த்து வழக்கம்போல் 'Love you all 'என்றார். இம்முறையும் அவர் பொய் சொல்கிறார் என்று அவருக்குத்தெரியும். ஏனென்றால், தற்போது மற்றக்குழந்தைகளைவிட டெடி மீதிருக்கும் அவரது அன்பு அளவுகடந்திருந்தது... டெடியுடனான தன் அணுகுமுறையை உடனே மாற்றுவதென்று அவர் தீர்மானித்திருந்தார். அதன் பின்னர் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் டெடியின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின்போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது…
அவ்வாண்டின் பள்ளி இறுதிநாள்
வந்தது. எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென பரிசுகள் கொண்டுவந்திருந்தார்கள். அதற்குள் ஒரு பொட்டி மட்டும் ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது. ஆசிரியை சுமதி க்கு அதை பார்த்ததுமே அது டெடியிடமிருந்துதான் வந்திருக்கவேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது. முதலில் அதையே பிரித்தார். பிரித்ததும், அதனுள் பாதி உபயோகித்த சென்ட் பாட்டில் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது. அது டெடியினது என்று புரிந்துகொண்ட முழு வகுப்பறையுமே சிரித்தது. ஒன்றுமே சொல்லாமல் ஆசிரியை சுமதி அந்த வாசனைத்திரவியத்தை தன்மீது பூசிக்கொண்டார். அந்த பிரேஸ்லெட்டை எடுத்து கையில் அணிந்துகொண்டார்.
மெல்லியதாய் ஒரு கால்வாசி புன்னகையுடன் டெடி சொன்னான்.'' இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் வருகிறது. இறக்குமுன் அவர் இறுதியாய் பாவித்த சென்ட் இதுதான். இந்த பிரேஸ்லெட்தான் பெட்டியுள் வைக்குமுன் அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது!”
ஓராண்டு கழிந்தது. ஆசிரியை சுமதி மேசையில் ஓர் கடிதம் கிடந்தது. ''
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது. அதே வரிகளுடன்…
‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.
ஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்துபோனது. ஆசிரியை சுமதி ஓய்வுபெற்றிருந்தார். பல ஆண்டுகளின் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. கடிதம் டாக்டர் தியோடரிடமிருந்து...
Mrs. Sumathi
‘I have seen many more people in my life. are the best teacher I have ever seen’, I am getting married. I cannot dream of getting married without your presence. This is your Teddy.
Dr. Theodore
அத்துடன் போய்வர விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன.ஆசிரியை சுமதிக்கு இருப்பு கொள்ளவில்லை. அவரிடம் அந்த சென்ட் பாட்டில் தற்போது இல்லை. பிரேஸ்லெட் பாதுகாப்பாய் இருந்தது. அதை அணிந்துகொண்டு churchற்குப்புறப்பட்டார்.
அங்கு சென்று பின் இருக்கையொன்றில் அமர முற்பட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டுகொண்டு முன் வரிசையில் இருந்த ஆசனம் ஒன்றை நோக்கி அழைத்து சென்றனர். அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்பட்டிருந்தது ''MOTHER ".
திருமணம் முடிந்தது. தியோடர் தன் புது மனைவியிடம் ஆசிரியை சுமதியை அறிமுகம் செய்துவைத்தார். ''இவர் மட்டும் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் நின்றிருக்கவே முடியாது' தியோடரின் கண்களில் கண்ணீர்.
ஆசிரியை சுமதி பெண்ணைப்பார்த்து சொன்னார் ' டெடி இல்லையென்றால், ஒரு ஆசியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்கவேண்டுமென்பதை நான் அறிந்திருக்கவேமுடியாது!''.
உங்கள் வகுப்பிலும் ஒரு டெடி இருக்கிறான். உங்கள் உதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறான். உங்களாலும் அந்த ஆசிரியை சுமதியாக இருக்கமுடியும்!
இனி அடுத்த திங்கட்கிழமை காலை வகுப்பறைக்குள் நுழையும்போது ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாய் நுழைந்துபாருங்கள்! உங்களால் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் நல்லதோர் திருப்புமுனையாய் இருக்கமுடியும்.

Saturday, July 29, 2017

உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்


நீல வானின் திட்டுத் திட்டான வெண்மேகங்கள் அங்குமிங்கும் கொட்டிக் கிடப்பதைப் போலவே, நகரம் சார்ந்த மனித உறவுகள் தேவைக்கதிகமான இடைவெளியில் உருக்கொண்ட தனித் தீவுகள் போல் சிதறிக் கிடக்கின்றன. எவ்வளவிற்கு எவ்வளவு இருப்பிடங்கள் குறுகியதாகவும் நெருக்கமானதாகவும் இருக்கின்றனவோ, அவ்வளவுக்கு நேரெதிர் முரணாக சகமனித இடைவெளி என்பது சமுத்திரம் போல் நீள்கிறது. அருகில் இருந்தும் அன்னியர்களே என்ற மன நிலையை நகரங்கள் சுலபமாக ஏற்படுத்தி விடுகின்றன. ஆகவேதான் நகர மனிதர்கள் தம்மை நிலை நிறுத்திக்கொள்ள மனிதம் கடந்த எல்லைக்குச் செல்வதற்குக் கூட தயங்குவதே இல்லை. என்றாலும் வாழ்வின் கோரத்தை வெளிப்படுத்தும் அதே அயோக்கிய முகங்கள்தான் அன்பின் ஊற்றையும் சுரக்கின்றன. போலித்தனங்களால்தான் சமூக இருப்பானது நிலைக்கும் என்று வரும்பொழுது எமாற்றுக்காரர்களையும், ஜேப்படித் திருடர்களையும், போக்கிரிகளையும், ஊழல்வாதிகளையும், குண்டர்களையும், சமூக விரோதிகளையும் உலகமானது சந்தித்தே ஆக வேண்டும். எனினும் அவர்களும் சமூகத்தின் அங்கமாகத்தானே வாழ்ந்தாக வேண்டும்.

தமிழ் புனைவுலகில் சிறுநகர மற்றும் மாநகர வாழ்வு சார்ந்த அறியப்படாத முகங்களின் பதிவுகள் மிகக் குறைவு என்ற வாதம் பரவலாக இருக்கிறது. அதிலும் அடித்தட்டு, நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் என்ற பண்புக் கூறுகளை முன் வைத்து ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. சென்னை வாழ் நடுத்தர மக்களின் இருப்பு சார்ந்த பிரச்சனைகளையும், உளவியல் சிக்கல்களையும் ஆழமாக அலசி முன்வைக்கப்பட்ட ஏராளமான படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. என்றாலும், அடித்தட்டு மக்களின் அகச்சிக்கல் மற்றும் அறியாமை சார்ந்து பொலிவிழந்த முகங்களை முன்வைத்த பதிவுகள் மிகக் குறைவுதான். அந்த வகையில் “உப்பு நாய்கள்” நாவலானது மனதாலும், உடலாலும், இருப்பாலும் வாழ்வின் சுழலில் வதைபடும் எளிய மனிதர்களைப் பற்றி நிறையவே பேசுகிறது. விதியின் சாட்டை எப்படி சக மனிதர்களை பம்பரமாகச் சுழற்றிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது என்பதை இந்நாவல் துல்லியமாக விவரிக்கின்றது.

கதையும், கதைப்பின்னலும் ஒரே பொருள்பட இருப்பதைப் போல் தோன்றினாலும் உண்மையில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. எது இந்த நாவலை செதுக்கி இருக்கிறது என்று சொல்வதும் சற்றே சிரமமான வேலைதான். விரசம், யதார்த்தம், மரபு மீறல் என்று எல்லா வகையிலும் இதனை உட்படுத்திப் பார்க்க முடியும். நாவலில் கதையானது ஒரே சீராக வளர்ந்து நேர்க்கோட்டில் செல்லவில்லை. மாறாக துண்டிக்கப்பட்ட பல நிகழ்வுகளுக்குள் முன்பாதியில் பயணித்து, இரண்டாம் பாதியில் முக்கிய காரணங்கள் ஏதுமின்றி அதே போன்ற நிகழ்வுகளால் தொடர்ந்து பின்னப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்பவனான சம்பத் மற்றும் அவனுடைய சக கூட்டாளிகள் எல்லோரும் சென்னையில் வளர்ந்தவர்கள். செல்வி மற்றும் தவுடு ஆகியோரின் குடும்பம் ஜேப்படித் திருட்டில் மாட்டிய நிர்பந்தத்தின் காரணமாக தென் தமிழகத்திலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தவர்கள். ஆர்மீனியன் தேவாலய பாதிரிகளும், கன்னியாஸ்திரிகளும் இறைதேடலின் பொருட்டு பல்வேறு இடங்களிலிருந்து நகரத்திற்கு வந்து சேர்கிறார்கள். எல்லோரையும் நகரம் (சென்னை) என்ற புள்ளிதான் ஒன்றாக இணைக்கிறது.

மனித ஆசை எந்த நிலையிலும் தீர்வதேயில்லை என்பதுதான் நிஜம். மீசை அரும்பும் வயதில் சம்பத்திற்கு என்ன தேவைப்பட்டதோ அதே இச்சைதான் அவனுடைய அம்மாவிற்கும் தேவைப்படுகிறது. அதற்காக தன்னுடைய மகனின் நண்பனையே (மணி) சல்லாபிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். பாதிரியாருக்கும் துறவறம் மேற்கொண்ட இளம் கன்னியாஸ்திரிகள் இச்சையை தீர்த்துக்கொள்ள தேவைப்படுகிறார்கள். திருடிவிட்டு சிறைக்குச் சென்றபோது அறிமுகமாகும் முத்துலட்சுமி செல்வியை ஓரினச் சேர்க்கையில் புணரத் துடிக்கிறாள். சுய இன்பம் அனுபவிக்கும் கன்னியாஸ்திரி, பிச்சைக்காரிகளை மோகித்துத் திரியும் பாஸ்கர் என நாவலின் முதல் பாதியில் கட்டுப்பாடற்ற காமமும், சமூகக் குற்றங்களும் மைய நீரோட்டமாக பெருக்கெடுத்து ஓடுகின்றன. வாதையெனும் மூலத்திலிருந்துதான் அவையும் ஊற்றெடுக்கின்றன.

இரண்டாம் பாதியில் சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் ஆதம்மாவின் குடும்பம் மூலம் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் இன்றைய கடைநிலைத் தொழிலாளர்களின் இடர்பாடுகளை நாவல் பிரதானமாக முன்வைக்கிறது. குழந்தை தொழிலாளர்களுக்கான உபாதையை எதிர்கொள்ளும் ஆதம்மா - ஏதும் அறியா விடலையாகச் சுற்றிவருகிறாள். கிராமத்தின் கண்களைக் கொண்டு நகரத்தை அளக்க விழைகிறாள். அவளுடைய குறும்பாலும், அதன் மூலம் கிடைக்கும் உறவாலும் வாழ்வை சுவைக்கத் துவங்குகிறாள். கணவனுக்கு நிகராக உழைத்தாலும் ஆணாதிக்க மனோபாவத்தால் அவளுடைய அம்மா ஒடுக்கப்படுகிறாள். இவர்களுடைய பார்வையில்தான் நாவலும் நகர்கிறது. என்றாலும் இந்த குடும்பத்திற்கு அறிமுகமாகும் ஆர்த்தி கதாபாத்திரம் படைப்பின் இயல்பை மீறி ரொமாண்டிச வகைக்கு படைப்பைக் கொண்டு சென்றுவிடுகிறது. அத்தருணங்களில் ‘யதார்த்தத்தில் இது நடக்கக் கூடியதா?’ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆட்டிறைச்சிக்கு பதில் நாயின் மாமிசத்தை விற்பனை செய்யும் கோபால் கதாபாத்திரம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. ஆரம்பத்தில் சம்பத்துடன் குருவியாகச் சென்று கஞ்சா கடத்தினாலும், ‘அது நமக்கு சரிப்பட்டு வராத பெரிய வேலப்பா’ என்ற மனநிலையில் நாய்களை வேட்டையாடும் தொழிலை கையிலெடுக்கிறான். உணவு விடுதிகளுக்கு நாயின் இறைச்சியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை அவனுடைய மனம் எந்த சந்தேகங்களும் இன்றி ஏற்றுக்கொள்கின்றது. அதுபோலவே காவல் நிலையத்தின் விசாரணையின்போது செல்விக்கு அறிமுகமாகும் பாபு என்ற கதாபாத்திரமும் சிறு பகுதியாக வந்து சென்றாலும் நாவலின் சிறப்பான வளர்ச்சிக்கு உதவுகிறது.

மகேஷ் – ஷிவானி உறவு மிகுந்த கவனத்திற்கு உட்படுத்த வேண்டிய ஒன்று. முதல் சந்திப்பிலேயே, ஒரு பொது இடத்தில் இருவரும் உடலளவில் காம இச்சையுடன் உந்தப்படுகிறார்கள். அந்த நொடி முதல் கணவன் தரமுடியாத உடல் சுகத்தை மகேஷ் மூலம் ஷிவானி கண்டடைகிறாள். பெண்களைக் காம வேட்டையாடும் மகேஷ், அதன் பிறகான சந்திப்புகளில் ஷிவானியுடனான பாலியல் வேட்கைகளை செல்பேசியில் அசையும் படங்களாக எடுத்துவிடுகிறான். ஷிவானியைப் போலவே பலரையும் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறான். இது சம்பத்திற்கு தற்செயலாக தெரியவருகிறது. எனவே இக்கட்டிலிருந்து ஷிவானியைக் காப்பாற்ற விரும்புகிறான். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் சம்பத் – ஷிவானி உறவு பலப்படுகிறது.

கதையின் முதல் அத்தியாயத்தில் சக நண்பனிடம் தின இதழை சம்பத் பிடுங்குவது போல ஓர் இழை வருகிறது. அதைத் தவிர்த்து வேறெங்கும் அவனுடைய அறிவுப் பெருக்கம் சார்ந்த தகவல்கள் இல்லை. பதினேழு வயதில் கஞ்சா விற்கத் துவங்குகிறான். அதற்கு முன்னர் சில காலம் வட இந்தியரிடம் வேலை செய்கிறான். அங்குதான் ஷிவானியையும் சந்திக்கிறான். செல்பேசியில் பாடல்களை சேமிக்கக் கூட அடுத்தவர் உதவியை நாடுபவன், கணினியில் இருக்கும் ஆபாச வீடியோவை திடீரென எப்படி அழிக்கிறான் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதேபோல செல்வியின் உறவுப் பெண் ‘தவுடு’, முத்துலக்ஷ்மியின் வீட்டை எரித்துவிட்டு அறுபது பவுன் நகைகளைத் திருடிக்கொண்டு போன பிறகான முத்துலட்சுமியின் உளவியல் தன்மைகள் நாவலில் சரியாகக் கையாளப்படவில்லை. போலி மருத்துவரான முத்துலக்ஷ்மி விபச்சாரத் தரகராக திடீரென மாறுவதும் நாடகத் தன்மையை ஏற்படுத்துகிறது. அவசர நோக்கில் புத்தகத்தைக் கொண்டு வராமல், அதற்கான நேரம் கொடுத்து படைப்பைக் கொணரும்போது இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்கலாம். (நாவலாசிரியரின் முன்னுரையிலிருந்து இதனை உணர முடிகிறது.)

படைப்பாளிக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே நுட்பமாக காலத்தை உணர்த்துவதில்தான் இருக்கிறது. பல ஆண்டுகள் தொடரும் கால நகர்த்தலை, கதைக் களத்தின் உண்மையான தகவல்களைக் கொண்டு மறைமுகமான புரிதலை வாசகனுக்கு அவன் உணர்த்தியாக வேண்டும். ஆகவே சம்பவம் நடக்கும் இடங்களை சரியாகவும், நுட்பமாகவும் பயன்படுத்த வேண்டும். பழைய சிறைச்சாலை இடிக்கப்படுவதற்கு முன்பாகவும், ஸ்கைவாக் வர்த்தக வளாகம் திறக்கப்பட்ட பின்னரும் நடக்கும் கதை இது. ஆகவே இடைப்பட்ட காலகட்டத்தை மனதில் இருத்தித்தான் நாவலை அணுகவேண்டி இருக்கிறது. அடித்தட்டு மக்களின் செல்பேசி பயன்பாடும் காலத்தினை ஊர்ஜிதம் செய்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற வார்த்தை படைப்பின் முதல் அத்தியாயத்திலேயே தவறுதலாக இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனைத் தவிர்த்திருக்கலாம். குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறுசிறு குறைகள் இருந்தாலும் மொழியின் செழுமையான ஆளுகையானது நாவலை வேறு தளத்திற்கு நகர்த்துகிறது. இந்நாவலுக்காக லக்ஷ்மி சரவணகுமாருக்கு சென்ற ஆண்டின் சுஜாதா நினைவு விருது கிடைத்துள்ளது.

நன்றி: சொல்வனம் (இணைய இதழ் 81 | 28-01-2013) http://online-tamil-books.blogspot.com.au

Sunday, July 2, 2017

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…- A Musical Love Story

ஒரு சிறந்த இசையை கேட்கும்போது நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்
யாரோ ஒருவன்
ரவீந்தர் அந்த வெள்ளைக் காகிதத்தை பிரித்துப் பார்த்தான். அதில் ஆங்கிலத்தில், “தயவுசெய்து ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ பாடலைப் பாடவும்” என்று எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட்ஸ் பார் அது. வழக்கமான ஈஸிஆர் பார்களைப் போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாரித்து சம்பாரித்து களைத்துப்போன… “வீட்டுக்கு கிளம்பிட்டீங்களா?” என்று ஃபோனடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன… ஆண்டுக்கொரு முறை ஐஃபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன… நடுத்தர வயது பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார்.
ரவீந்தர், அங்கு தினமும் நடைபெறும் ஆர்கெஸ்ட்ராவில் பாடுபவன். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ்… என்று மூன்று மொழிகளிலும் பாடுவார்கள். கடந்த ஒரு வாரமாக ஒருவன், தினமும் இப்பாடலைப் பாடச் சொல்லி சீட்டு கொடுக்கிறான். பாடி முடித்தவுடன், ரவீந்தரின் அருகில் வந்து, ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுவான்.
ரவீந்தர் அவனைத் தேட… அவன் ஒரு மரத்தடியிலிருந்து கையை உயர்த்திக் காட்டினான். அவனுக்கு ஏறத்தாழ 40 வயதிருக்கும் கொஞ்சம் குண்டாக… தாடி வைத்த மோகன்லால் போல் இருந்தான். ரவீந்தரைப் பார்த்து “பாடு…” என்பது போல் கை காட்டினான். கீபோர்டில் ஜான், ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ பாடலுக்கான ப்ரீலூடை வாசித்து முடித்தவுடன், ரவீந்தர் பாட ஆரம்பித்தான்.
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…
நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி…
என்று ரவீந்தர் பாடலுக்குள் நுழைந்து… கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுப்புறத்தை மறந்து… முற்றிலும் அந்தப் பாடலுக்குள் ஆழ்ந்துவிட்டான். “உயிரே… வா…” என்று பாடலை முடித்தவுடன், படபடவென்று கைத்தட்டும் சத்தம் கேட்டது. அவன்தான். பாரில் அனைவரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். ரவீந்தருக்கு ஆச்சர்யமாக இருந்தது. தினமும் அமைதியாக பணத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவான். இன்று என்ன கைத்தட்டல்? ரொம்ப ஓவராக குடித்துவிட்டானோ? என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவன் எழுந்து மேடையை நோக்கி வந்தான். நடை தள்ளாடியது. மேடைக்கருகில் வந்து, “உன் பேர் என்ன?” என்றவனின் குரலில் நிறைபோதை ததும்பியது.
“ரவீந்தர்…”
“நோ… இன்னைலருந்து உன் பேரு ஹரிஹரன்… இன்னைக்கி ரொம்ப அற்புதமா பாடுன. சில இடங்கள்ல ஹரிஹரன தாண்டிட்ட…” என்றவனுக்கு நிற்க முடியவில்லை. ஜானைப் பார்த்து, “நீ தப்பான ஸ்கேல்ல வாசிக்கிற.…” என்றவனை ரவீந்தர் ஆச்சர்யமாக பார்த்தான். இசை தெரிந்தவன். அவன் பர்ஸை எடுத்து பிரித்தபிறகு ஒரு வினாடி யோசித்தான். சட்டென்று ரவீந்தரின் கையில் பர்ஸை திணித்துவிட்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தான். பர்ஸை திறந்து பார்த்த ரவீந்தர் அதிர்ந்தான். உள்ளே ஏகப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டுகள். பதறிப்போன ரவீந்தர் ஜானிடம், “ஒரு நிமிஷம்…” என்று கூறிவிட்டு வேகமாக மேடையிலிருந்து இறங்கி ஓடினான்.
அதற்குள் அவன் தோட்டத்தை விட்டு வெளியேறி, கடல் மணலுக்குச் சென்றிருந்தான். ரவீந்தர், “சார்… சார்… “என்று பின்னால் ஓடினான். அவன் திரும்பிப் பார்ததுவிட்டு நின்றான். கடல் காற்றில் அவன் முடிகள் கலைந்தாட… அலைகளின் சத்தம் இரைச்சலாக கேட்டது.
“சார்… இதுல நிறைய பணம் இருக்கு. இவ்ளோ பணம் எனக்கு வேண்டாம்” என்று ரவீந்தர் பர்ஸை நீட்டினான். அவன் பர்ஸை வாங்கியபடி, “உன் பேர் என்ன சொன்ன?” என்றான்.
“ரவீந்தர் சார்… உங்க பேரு?”
“மனோஜ்… மனோஜ்குமார்”
“நான் ஒண்ணு கேக்கலாமா சார்?”
“கேளு…”
“இந்தப் பாட்ட ஏன் தினமும் கேக்குறீங்க?”
“ம்ஹ்ம்…” என்று சிரித்த மனோஜ், “ரவீந்தர்… இது பாட்டு இல்லை. வாழ்க்கை… இளையராஜாவோட ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு வாழ்க்கை..” என்றவன் உடனே “நோ…” என்று கூறி… இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி விரித்து, “லட்சம் பேரோட வாழ்க்கை… கோடி பேரோட வாழ்க்கை…” என்றான் சத்தமாக.
“இன்னொரு விஷயம் கேக்கணும். நீங்க… லவ் ஃபெயிலியரா?” என்று கேட்டுவிட்டு ரவீந்தர் நாக்கைக் கடித்துக்கொண்டான். அவன் இந்தப் பேச்சை ஆரம்பித்திருக்கக்கூடாது. காதல் தோல்வி குடிகாரர்களிடம் சிக்கினால், சிதைத்து சின்னாபின்ன படுத்திவிடுவார்கள். ஓரிரவு முழுவதும், “அவ கண்ணு இன்னும் என் கண்ணுலயே நிக்குது” என்பதை மட்டுமே ஆயிரம் தடவைச் சொல்லி சாகடிப்பார்கள். “நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா பாஸ்?” என்று கேட்டுவிட்டு, தங்கள் காதல் கதையைக் கூறுவார்கள்… என்று ரவீந்தர் நினைத்து முடிப்பதற்குள், “நீங்க லவ் பண்ணியிருக்கீங்களா ரவீந்தர்?” என்றான் மனோஜ்.
“இல்ல சார்… வீட்டுல பொண்ணு பாத்துகிட்டிருக்காங்க…”
“ம்…” என்ற மனோஜ் கடற்கரையை நோக்கி நடந்தான். ரவீந்தர் அவன் பின்னாலேயே சென்றான். அலைகள் அருகில் வந்தவுடன் மனோஜ் நின்றுவிட்டான். அரை நிலா வெளிச்சத்தில் சத்தமிட்டுக்கொண்டிருந்த கடல் அலைகளை பார்த்தான். பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஓட்கா பாட்டிலை எடுத்து மடமடவென்று குடித்தான். அப்படியே மணலில் அமர்ந்துகொண்டு ரவீந்தரைப் பார்த்து, “இங்க உக்காரு ரவீந்தர்” என்றான். ரவீந்தர் தயக்கத்துடன் நின்றான்.
“ஏய்… ஏன் சங்கடப்படுற? நான் பணக்காரன்னுல்லாம் நினைக்கவேண்டாம், இளையராஜாவோட இசை நம்மள ஒண்ணாக்கிடுச்சு…. உக்காரு..” என்றவன் மீண்டும் ஒரு மடக்கு குடித்துவிட்டு, “அப்ப எனக்கு சரியா 25 வயசு. அப்ப நான் கொல்கத்தாவுல இருந்தேன்…” என்று ஆரம்பித்தான்.
2000, பிப்ரவரி 22, செவ்வாய்கிழமை. அப்போது கொல்கத்தா, கல்கத்தாவாகத்தான் இருந்தது. தெற்கு கல்கத்தா, ராஸ் பிஹாரி அவென்யூ. தேசப்பரியா பார்க்கிலிருந்த டென்னிஸ் கிளபில் நான் ப்ரமோத் வருவதற்காக காத்துக்கொண்டிருந்தேன். அப்போது வேகமாக என்னை நோக்கி வந்த ப்ரமோத், “மனோஜ்… தாராதாரி எஷோ… ப்ரியா தியேட்டரெர் ஷாம்னே ஜமேலா சோல்ச்சே…(வேகமா வா… ப்ரியா தியேட்டர் முன்னாடி கலாட்டா நடக்குது…)” என்று என் கையைப் பிடித்து இழுத்தான்.
“கீ நியே ஜமேலா ஹொச்…(என்ன கலாட்டா…)” என்றேன்.
“உங்க கமல்ஹாசனோட ‘ஹே ராம்’ ஹிந்தி படத்துக்கு எதிரா…” என்று வங்காளத்தில் கூறிய ப்ரமோத் என்னை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்தான்.
ப்ரியா தியேட்டர் வாசலில் பயங்கர சத்தமாக இருந்தது. ஏராளமான காங்கிரஸ்காரர்கள், கையில் காங்கிரஸ் கொடியுடன், காந்தியை அவதூறாக சித்தரிக்கும் ஹே ராம் படத்தை தடை செய்யவேண்டும் என்று கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள். போலீஸ்காரர்கள், “ஷோரே ஜான்… ஷோரே ஜான்…” என்று தொண்டர்களைத் தள்ளிக்கொண்டிருந்தார்கள். அருகில் சம்பந்தமில்லாமல் நான்கைந்து இளம் பெண்கள், ஏதோ “ஜிபன நந்த தாஸ்…” என்று கத்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நடுவே ஒரு இளம்பெண், மிரட்சியான கண்களுடன் அங்கு நிலவிய ஆவேசத்திற்கு சம்பந்தமில்லாமல் இருந்தாள். ஆனால் அழகாக இருந்தாள். வங்காளப் பெண்களுக்கே உரிய அதீத மேக்கப் இல்லாமல், லாவண்டர் நிற சல்வார் கமீஸில் எளிமையாக இருந்தாள். அவளை ப்ரமோத்திடம் காண்பித்த நான், “அழகான பெண்கள் போராடுறப்ப, அந்த போராட்டத்தோட மதிப்பு அதிகரிக்கும்” என்று கூற… ப்ரமோத் சத்தமாக சிரித்தான்.
போராட்டக்காரர்கள் திடீரென்று தியேட்டரை நோக்கி கற்களை வீச… அந்த இடத்தின் சூழல் மாறியது. சிலர் தியேட்டரின் வின்டோபேன்களை உடைக்க ஆரம்பிக்க… போலீஸ் தடியடியில் இறங்கியது. கும்பல் நாலாபக்கமும் சிதறி ஓட… போலீசார் கையில் கிடைத்தவர்களைப் பிடித்து வேனில் ஏற்றினர். கும்பலில் நாங்களும் நெருக்கித் தள்ளப்பட… ப்ரமோத் எங்கே போனான் என்றே தெரியவில்லை. ப்ரமோத்தைத் தேடியபோதுதான் மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்த்தேன்.
அந்த அழகிய, லாவண்டர் நிற சல்வார் கமீஸ் பெண் நானிருக்கும் திசையை நோக்கித்தான் ஓடி வந்தாள். அப்போது போலீஸ் அந்தப் பெண்ணின் தலையில் தடியால் தாக்க… அவள் தலையிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது. “ஆ…” என்று அலறியபடி நின்றுவிட்ட அந்தப் பெண்ணைப் பிடித்து போலீஸ்காரர் இழுக்க… நான் சட்டென்று அந்த முடிவை எடுத்தேன். அவளை வேனில் ஏற்ற விடக்கூடாது. வேகமாக அவளருகே சென்ற நான், அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓட ஆரம்பித்தேன். “தாராதாரி தௌரே எஷோ… கம் ஃபாஸ்ட்…” என்று கத்தியபடி ஓடினேன். எங்களோடு பலரும் ஓடி வர… போலீஸ் எங்களைத் துரத்தியது. தியேட்டருக்கு பின்பக்கம்தான் என் வீடு.
எங்கள் வீதிக்குள் நுழைந்த நான், என் வீட்டை நோக்கி ஓடினேன். வேகமாக வீட்டுக் கதவைத் திறந்தேன். அந்தப் பெண்ணைப் பிடித்து வீட்டுக்குள் இழுத்து கதவைச் சாத்திய பிறகுதான் என் பதட்டம் தணிந்தது. இப்போது நிதானமாக அவளைப் பார்த்தேன். அவள் கண்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை. அவள் நெற்றியில் ரத்தத்தைப் பார்த்து, வேகமாக ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வந்தேன். பஞ்சால் ரத்தத்தை துடைத்தேன். அவள் கைவிரலை வாயில் வைத்து தண்ணீர் கேட்டாள். நான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன். வேக, வேகமாக அவள் தண்ணீரைக் குடித்து முடித்தவுடன், காயம் பட்ட இடத்தில் பிளாஸ்திரியை ஒட்டினேன். வலியில் ‘ஸ்…” என்று முகத்தை சிணுங்கியபோது மேலும் அழகாக தெரிந்தவளை, இப்படி சுருக்கமாக வர்ணிக்கலாம். மற்ற அழகிகள் எல்லாம் ‘அழகி’ என்றால், இவள் ‘அழகி’
“அமர் நாம் மனோஜ்… அப்னார் நாம்?” என்று அவள் பெயரைக் கேட்டேன்.
“அமோதிதா…”
“அமோதிதா… பியூட்டிஃபுல் நேம்”
“அமோதிதா மீன்ஸ் ஹேப்பினெஸ்”
நான் வங்காளத்தில், “எப்போதும் ஹேப்பியா இருக்கவேண்டிய பொண்ணு, இங்க எப்படி போராட்டத்துல? உங்களப் பாத்தா… அரசியலுக்கும், உங்களுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியல” என்றேன்.
“நான் பார்ட்டி ஆள் இல்ல. ‘ஹே ராம்” படத்துல வர்ற ‘ஜன்மோன் கி ஜ்வாலா’ பாட்டுல(தமிழில் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’) ஜிபன நந்த தாஸ் கவிதையை ஆபாசமா பிக்ச்சரைஸ் பண்ணியிருக்கிறதா கேள்விப்பட்டு, ஆர்ப்பாட்டம் பண்ண வந்தோம்…”
“அப்படியா? நான் இன்னும் படத்தைப் பாக்கல. லிட்ரேச்சர் படிக்கிறீங்களா?”
“லாஸ்ட் இயர் படிச்சு முடிச்சுட்டேன். ஸ்காட்டிஸ் சர்ச் காலேஜ். பிஏ ஹானர்ஸ் இன் பெங்காலி… தினமும் அலிப்பூர் நேஷனல் லைப்ரரில, நாங்க ஃப்ரண்ட்ஸ்ல்லாம் மீட் பண்ணுவோம். இந்த மாதிரி போராட்டம் நடத்தப் போறாங்கன்னு கேள்விப்பட்டு வந்தோம்.” என்றவள் சட்டென்று எழுந்தாள்.
“கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாமே…” என்றேன்.
“இல்ல… நான் கிளம்புறேன். நீங்க தனியா இருக்கீங்க…” என்று இழுத்தாள்.
“நீங்க பயப்படவேண்டியதில்ல. நான் காலேஜ் படிக்கிறப்ப, கூட படிக்கிற ஹிந்திக்கார பொண்ணுங்க ராக்கி கட்ட வர்றப்ப… அத்தனை பசங்களும் தலைமறைவாயிடுவாங்க. நான் மட்டும் நானா போய் ராக்கி கட்டிக்குவேன்” என்ற நான் அவளருகில் சென்று மெதுவாக, “ஒருத்தரும் நல்லாருக்கமாட்டாங்க” என்று கூற… அவள் மெலிதாக சிரித்தாள். தொடர்ந்து, “நான் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணத் தவிர, இந்த கல்கத்தா ஸிட்டில இருக்கிற அத்தனை பொண்ணுங்களையும் சகோதரியாத்தான் பாப்பேன். ஆனா அந்தப் பொண்ணு யாருன்னு தெரியாததால, இப்போதைக்கு யாரையும் சகோதரியா பாக்கமுடியாது.” என்றவுடன் அவள் சத்தமாக சிரித்துவிட்டு, “ஆ…” என்று பிளாஸ்திரியின் மீது கைவைத்து அழுத்தினாள்.
“என்னாச்சு?”
“சிரிக்கிறப்ப வலிக்குது. நீங்க மதராஸியா?”
“அசல் சென்னை மதராஸி” என்றபோதுதான் அந்த ஹாலிலிருந்த பியானோவைப் பார்த்த அமோதிதா, “வாவ்…” என்று வேகமாக பியானோவை நோக்கிச் சென்றாள். முகமெல்லாம் மலர, அந்த யமஹா பியானோவை ஆசையுடன் தடவியபடி, “நான் வாசிச்சு பாக்கட்டுமா?” என்றாள்.
“உங்களுக்கு வாசிக்கத் தெரியுமா?”
“பியானோ கிரேட் ஃபோர். கல்கத்தா ஸ்கூல் ஆஃப் மியூசிக்ல படிச்சேன். ”
“நான் பியானோ… கிரேட் ஸிக்ஸ்” என்றவுடன் அவள் கண்களில் மரியாதை. பிறகு பரபரப்புடன் பியானோவுக்கு கீழிருந்த பெஞ்சை இழுத்து அமர்ந்தாள். கீழே பார்த்து பியானோவின் பெடலில் காலை வைத்துக்கொண்டாள். பிறகு அவள் கீ போர்டில் கையை வைத்து வார்ம் அப் செய்தபோது… பியானோவிலிருந்து வந்த சத்தத்தைக் கேட்டு அமோதிதாவின் கண்கள் லேசாக கலங்கியது போல் இருந்தது.
“ஹலோ… என்னாச்சு?” என்றேன்.
“பியானோவ கையாலத் தொட்டு ஆறு மாசமாவுது. என்னோட பியானோவ வித்துட்டாங்க. ஸ்டெய்ன்வே அன்ட் ஸன்ஸ். B 1994 மாடல்…. Satin ebony colour” என்றவளை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். நிச்சயமாக பணக்கார வீட்டுப் பெண். ஸ்டெய்ன்வே அன்ட் ஸன்ஸ் பியானோ B மாடல், செகண்ட்ஸிலேயே பல லட்சங்கள் இருக்கும்.
“ஏன் வித்துட்டாங்க?”
“கடன்… தலை வரைக்கும் கடன் வர இருந்துச்சு. என் பியானோவ வித்து, கழுத்தோட கடன நிறுத்திட்டாங்க. கோடிஸ்வரரா இருந்தோம். இப்ப கோடிகள்ல கடன்தான் இருக்கு” என்றவளை அனுதாபத்துடன் பார்த்தபடி, “என்ன பிரச்னை?” என்றேன்.
“பிசினஸ்ல லாஸ்…” என்றவள் பியானோவில் வாசிக்க ஆரம்பித்தாள், என்னை நோக்கி கண்களால் “என்னான்னு தெரியுதா?” என்றாள். சற்றே யோசித்துவிட்டு, “பீதோவன்… மூன்லைட் ஸொனாட்டா…” என்று நான் கூற… புன்னகைத்துவிட்டு இசையில் ஆழ்ந்தாள். முழுமையாக வாசித்து முடித்துவிட்டு, “ஹௌ இஸ் இட்?” என்றாள். “அங்கங்க பிசிறு தட்டினாலும் ஓகே…” என்று சத்தமின்றி கைத்தட்டினேன்.
“நீங்க எதாச்சும் வாசிங்க” என்று எழுந்தாள். சற்றே யோசித்த நான், அவள் எந்தப் பாடலை எதிர்த்து போராட வந்தாளோ அதையே வாசிக்க முடிவு செய்தேன்.
சில நிமிடங்கள் வார்ம் அப் செய்தேன். பிறகு C மைனர் கீயில் ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ பாடலின் ப்ரீலூடை வாசிக்க ஆரம்பித்தேன். இடையில் கண்களால், “என்னெவென்று தெரிகிறதா?” என்றேன். அவள் உதட்டைப் பிதுக்கினாள். முதலில் சாதாரணமாக பார்க்க ஆரம்பிததவள்… பிறகு பாடல் வளர வளர… பிரமிப்பாக பார்த்தாள். கடைசியாக நான் “உயிரே… வா,..” என்று முடித்தவுடன் படபடவென்று கைத்தட்டினாள். “Great music and well played...” என்று என் கையைப் பிடித்து குலுக்கினாள்.
“இது வரைக்கும் இதை நான் கேட்டதே இல்ல…
.யாரோட மியூசிக்?” என்றாள்.
“நீயே சொல்லு”
“மார்த்தா?” என்றாள்.
“இல்ல”
“ஆர்த்தர் ரூபின்ஸ்டெய்ன்?”
“இல்ல…. இளையராஜா…”
“யா… கேள்விப்பட்டிருக்கேன். தி க்ரேட் மதராஸி மியூஸிக் டைரக்டர்”
“ஓகே… இது எப்படி இருந்துச்சு?”
“ஃபன்ட்டாஸ்ட்டிக்… லாட் ஆஃப் மூவ்மென்ட்ஸ்…”
“எஸ்… அப்புறம் கடைசில… அந்த B மேஜர் கார்டு…. சான்ஸே இல்ல. அதுதான் அந்த பாட்டுக்கு ஒரு ஹோல்னெஸ கொடுக்குது…”
“யா… யா…”
“இந்த பாட்டுக்கு முன்னாடிதான் அந்த கவிதை வருது…”
“எந்த கவிதை?” என்றாள் சட்டென்று புரியாமல்.
“இப்ப நீங்க போராட வந்தீங்களே…. அந்தக் கவிதை. இந்த பாட்டு ‘ஹே ராம்’ படத்துலதான் வருது” என்றவுடன் அவள் முகம் மாறி, “அதை எப்படி எடுத்துருக்காங்கன்னு தெரியல. ஆனா இப்ப இந்தப் பாட்டக் கேட்டதும், பழைய கோபம் குறைஞ்சுடுச்சு…” என்றாள்.
“தி பவர் ஆஃப் மியூசிக்” என்றேன்.
“எனக்கும் அந்த பாட்ட வாசிக்கணும் போல இருக்கு. நோட்ஸ் இருக்கா?”
“நாளைக்கு வாங்க… நான் நோட் எழுதி வைக்கிறேன்”
“சரி… நாளைக்கு இதே டைம் வரேன்…”
“நான் தனியாதான் வீட்டுல இருப்பேன்” என்றேன் சிரித்தபடி.
“பரவால்ல… உங்க ஃபேமிலில்லாம்…” என்று இழுத்தாள்.
“அப்பா டெல்லில ஐஏஎஸ் ஆஃ.பிஸர். அம்மா… இங்க ஐஆர்எஸ் ஆஃபிசர். ஒரு அண்ணன், அஹமதாபாத்ல எம்பிஏ பண்றான். நான் ஸ்கூல் வரைக்கும், சென்னைல பாட்டி வீட்டுல தங்கிதான் படிச்சேன். காலேஜ்ல்லாம் இங்க… எம்.ஏ. மாஸ் கம்யூனிகேஷன். ரெண்டு வருஷம் ஹெச்டிஏ-ல ஒர்க் பண்ணினேன். இப்ப சொந்தமா அட்வர்டைசிங் கம்பெனி தொடங்குறதுக்காக ஆஃபிஸ் பாத்துகிட்டிருக்கேன்” என்றேன்.
“ஓகே… நாளைக்கு பாக்கலாம்” என்று கிளம்பினாள் அமோதிதா.
மறுநாள் வந்தவுடன், “நோட் எழுதிட்டீங்களா?” என்றாள். நேற்றிரவே நெடு நேரம் கண் விழித்து, போராடி எழுதிவிட்டேன். ஆனால் இதை வைத்துதான் அவளிடம் பழக்கத்தை நீட்டிக்கவேண்டும் என்பதால், “இன்னும் இல்ல” என்றேன். “அப்ப சரி…” என்று வேகமாக செருப்பை மாட்டினாள்.
“ஹேய்… என்ன கிளம்பறீங்க?”
“பின்ன… நோட் எழுதல… கிளம்பறேன்?”
“இல்லன்னா என்ன? வேற எதாச்சும் பேசலாம் இல்ல?”
“வேறன்ன பேசணும்?”
“’வாட்டர் படத்தோட டைரக்டர் தீபா மேத்தா, ஸிஎம் ஜோதிபாஸப் பாக்கப்போறாங்க. அதைப் பத்தி பேசலாம். இல்லன்னா சௌரவ் கங்குலியோட கேப்டன்ஸிப் பத்தி பேசலாம்”
“ஸாரி… அதைப் பத்தில்லாம் எனக்குத் தெரியாது”
“சரி… உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தைப் பத்தி பேசுங்க…”
“ம்….” என்று யோசித்தவள், “ஜிபன நந்த தாஸ் பற்றி பேசலாமா?” என்றவுடன் “ஜிபன நந்த தாஸா?” என்று நெளிந்தேன்.
“அதான்… ஹே ராம் பாட்டுல வர்ற அந்த கவிதை…. ஆகாஷே ஜ்யோட்ஸ்னா…”
“அவரா? ம்… சொல்லுங்க…” என்றேன் ஆர்வமின்றி.
“வாழும் காலத்துல அதிகம் பேசப்படாத பெங்காலி கவிஞன். நாவல்லாம் கூட எழுதியிருக்காரு. 1927-ல அவரோட ‘ஜாரோ பாலக்’-ங்கிற முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்துச்சு. அப்புறம்... அவரோட ‘ருபாஸி பங்ளா’ கேள்விப்பட்டிருக்கீங்களா? ஆக்ச்சுவலா அது 1934-ல எழுதினது. ஆனா அவரு இறந்த பிறகு, 1957-லதான் புத்தகமா வந்துச்சு. அதுக்கு ரேப்பர் டிசைன் பண்ணது யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க”
“யாரு?”
“தி கிரேட் சத்யஜித்ரே…”
“ஓ….”
“அந்தக் கவிதைய பங்களாதேஷ் போராட்டத்தப்ப பயன்படுத்தினாங்க. அது வங்காளத்தோட கிராமப்புறங்களோட….” என்று அவள் கூறிக்கொண்டேச் செல்ல… நான் கஷ்டப்பட்டு கொட்டாவியை அடக்கினேன். எனது முகத்தைக் கவனித்த அமோதிதா, “போரடிக்கிறனா?” என்றாள்.
“சேச்சே…”
“அப்ப சரி…. நிறைய கவிஞர்களப் போல, இவருக்கும் காதல் தோல்வி. அவர் ஷோவனாங்கிற அவரோட சொந்தக்காரப் பொண்ண காதலிச்சிருக்காரு. ஆனா அந்தப் பொண்ணு, கல்யாணம் பண்ணிக்கிற முறை கிடையாது. அதனால அந்த லவ் ஃபெயிலியராயிடுச்சு. அவரோட முதல் தொகுப்பை அந்தப் பொண்ணுக்குதான் டெடிகேட் பண்ணியிருக்காரு…” என்று தொடர… அதற்கு மேல் பொறுக்கமுடியாத நான், “அமோதிதா… நௌ வீ ஆர் இன் 2000. வேற ஏதாச்சும் பேசலாமே…” என்றவுடன் முகம் மாறிய அமோதிதா, “அப்ப நான் போறேன்” என்றாள்
“எங்க?”
“அலிப்பூர் லைப்ரரிக்கு”
“டெய்லி வீட்டுல இருக்கமாட்டீங்களா?”
“ம்ஹ்ம்… வீடு நரகம். தினம் கடன்காரங்க வந்து சத்தம் போட்டுட்டு போவாங்க. அதனால தினம் வெளியதான் சுத்திகிட்டிருப்பேன்”
“நானும் உங்க கூட சுத்தட்டுமா?”
“தாராளமா சுத்தலாம்”
சுற்றினோம். தினம் தினம் சுற்றினோம்.
விக்டோரியா மெமோரியல் ஹாலுக்கு வெளியே இருந்த தோட்டத்தில் நடந்தபடி, “உங்களுக்கு பெங்காலி பெண்களப் பிடிக்குமா? தமிழ் பெண்களப் பிடிக்குமா? என்றாள்.
“ஒரு பெங்காலிப் பொண்ணு இந்தக் கேள்வியக் கேட்டா, பெங்காலிப் பெண் பிடிக்கும்பேன். தமிழ்ப் பெண் கேட்டா தமிழ்ப் பெண் பிடிக்கும்பேன்”
அமோதிதா சத்தமாக சிரித்தாள்.
மார்பிள் பேலஸின் பிரமாண்டமான தூணில் சாய்ந்துகொண்டு, “நீங்க யாரையாச்சும் லவ் பண்ணியிருக்கீங்களா?” என்றாள்.
“ஸ்கூல் டேஸ்ல… அதை லவ்வுன்னு சொல்லமுடியாது. ஒரு பொண்ணு மேல ஒரு சின்ன க்ரஸ்… அவளோட ஒவ்வொரு கண்ணுக்குள்ளயும் ரெண்டு ரெண்டு கண்ணு…. பாத்தான்னா மனசுக்குள்ள பூ உதிரும். “உன் பென்சிலக் கொஞ்சம் தர்றியா?’ன்னு கேட்டா, “நம்ப கல்யாணம் பண்ணிக்கலாம் வர்றியா?”ன்னு கேட்ட மாதிரி புல்லரிச்சுப்போயிடும்… க்ளாஸ்ல சும்மா சும்மா திரும்பி என்னைப் பார்ப்பா… ஆனா அப்புறம்… ஒரு நாள் என்னைத் தனியா கூப்பிட்டு, ‘உன்னைப் பாத்தா ஆக்ஸிடென்ட்ல செத்துப்போன என் அண்ணன் மாதிரியே இருக்கு. உனக்கு ‘எல்லாமே… என் தங்கச்சி…’ பாட்டுத் தெரியுமா?”ன்னு கேட்டா”
“ம்… அப்புறம்” என்றாள் அமோதிதா சிரிப்பை உதட்டுக்குள் அடக்கியபடி.
“வேற வழி… அந்தப் பாட்ட பாடிட்டு வந்துட்டேன்”
அமோதிதா வெடித்துச் சிரித்தாள்.
ட்ராம் வண்டியில் மெதுவாகச் செல்லும்போது, “இந்த பார்க்லருந்து க்ராஸ் பண்றப்பதான்…” என்ற அமோதிதா, “வேண்டாம்… விடுங்க…” என்றாள்.
“பரவால்ல… சொல்லு…”
“ட்ராம் வண்டி மோதி இறந்துபோய்ட்டாரு”
“யாரு?”
“ஜிபன நந்த தாஸ்…” என்று அவள் கூற… நான் “துர்காமாதாஜி… என்னைக் காப்பாத்து…” என்றபடி எழுந்து வேறு சீட்டில் அமர்ந்துகொண்டேன். வேகமாக என் அருகில் வந்து அமர்ந்தபடி, “ஸாரி… ஸாரி…” என்றாள். நான், “வாழ்க்கை தினமும் எதாவது ஒரு பாடத்தக் கத்துத் தருது” என்றேன்.
“யா… யா… இட்ஸ் ட்ரூ. இன்னைக்கி என்ன பாடம் கத்துகிட்டீங்க?”
“லிட்ரேச்சர் படிச்சப் பொண்ணுங்களோட பழகக்கூடாது…” என்று கூற… சத்தமாக சிரித்த அமோதிதா, “தேங்க் யூ மனோஜ். நீ என்னை ரொம்ப நாள் கழிச்சு சிரிக்க வைக்கிற… வீட்டுக் கவலைய மறக்க வைக்கிற…” என்ற அமோதிதாவை உற்றுப் பார்த்தேன்.
எனது வாழ்க்கையின், மிக மிக அழகான நாட்கள் அவை. கடவுளால் சிறகுகள் பொருத்தப்பட்ட… பூக்கள் கோர்க்கப்பட்ட… நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட…. நாட்கள் அவை. பனிப்புகை வீட்டிற்குள் நுழைவது போல், அமோதிதா மெல்ல மெல்ல என் மனதிற்குள் நுழைந்து, நாள் முழுவதும் என்னைச் சில்லிட வைத்த தருணங்கள் அவை.
நான் எனது காதலை அவளிடம் சொல்ல முடிவெடுத்த பிறகுதான், ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’-யின் பியானோ ஸ்கோர் தாளை அவளிடம் கொடுத்தேன். அமோதிதா வாசிக்க ஆரம்பித்தாள். ப்ரீலூட் முடிந்தவுடன், ராணி முகர்ஜியை விட அற்புதமான குரலில் அமோதிதா அந்தக் கவிதையை உச்சரிக்க ஆரம்பிக்க… எனக்கு சிலிர்த்துப்போனது.
“ஆகாஷே ஜ்யோட்ஸ்னா…
புலேர் பதே… சித்தா பாகர் காயர்…”
என்று அவள் உச்சரிக்க… உச்சரிக்க… அவள் முகம் பரவசமாக மாறி, கண்கள் அந்தரத்தில் ஏக்கத்துடன் சஞ்சரித்தது. அவள் கவிதையை முடித்துவிட்டு “ஆஹாஹஹா… ஆஹாஹஹா…” என்று பாடலை ஆரம்பித்தாள். அவள் பியானோ வாசிக்க… இருவரும் சேர்ந்தாற் போல் தமிழிலும், ஹிந்தியிலும் மாற்றி மாற்றி பாடினோம்.
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…
மில்னே கி த்ரிஷ்னா தி மன் மெய்ன்…
அயராத இளமைச் சொல்லும் நன்றி நன்றி…
அபுனா… ரஹி மனுமெய்ன் கோயி ஹல்ச்சல்…
தொடர்ந்து பாடினோம். இரண்டாவது சரணத்தின் முடிவில், “உயிரே… வா…”” என்று நான் முடித்தபோது, என் உயிர் பியோனோவிலிருந்து எழுந்து என்னருகில் வந்திருந்தது. நெருக்கமாக நின்றுகொண்டு அமோதிதா என்னை உற்றுப் பார்த்தாள். அப்போது அவள் கண்களில் தெரிந்த காதலை, கொஞ்சம் முயன்றால் தனியாக கையில் எடுத்து, புகைப்படமாக எடுத்துவிடலாம் போல் தோன்றிது. அதற்கு மேல் பொறுக்கமுடியாத நான் சட்டென்று அவளை இழுத்து அணைத்தபடி, “ஐ லவ் யூ… ஐ வான்ட் டு மேரி யூ…” என்றேன். சில வினாடிகள் மௌனமாக என்னை அணைத்திருந்த அமோதிதா என்ன நினைத்தாளோ? சட்டென்று என்னிடமிருந்து விலகினாள். அவள் கண்களில் இப்போது அந்த காதல் இல்லை.
“ஸாரி மனோஜ்… உன் காதல ஏத்துக்கிற சூழ்நிலைல நான் இல்ல…” என்றாள் தலையைக் குனிந்தபடி.
சில வினாடிகள் மௌனமாக அவளைப் பார்த்த நான், “நீ என்னைக் காதலிக்கலையா? இல்ல… என் காதல ஏத்துக்கிற சூழ்நிலைல இல்லையா?” என்றேன். அமோதிதா கண்களைத் துடைத்துக்கொண்டு, “நான் மூழ்கிட்டிருக்கிற கப்பல்ல இருக்கேன் மனோஜ்…” என்றாள்.
“நான் உன் கையைப் பிடிச்சு காப்பாத்துவேன் அமோ….”
“என்னைக் காப்பாத்துவ… என் தங்கை… தம்பி… அம்மா… அப்பா…. இப்ப எங்க வீடு இருக்கிற சூழ்நிலைல காதலப் பத்தி என்னால நினைச்சுக் கூட பாக்கமுடியாது…”
“நீ என்னைக் காதலிக்கலன்னா விட்ருவேன் அமோ… ஆனா நீ என்னைக் காதலிக்கிற… ஏத்துக்கத்தான் தயங்குற… ஸோ… ஐ வில் நாட் லீவ் யூ…” என்ற நான் செல்ஃபிலிருந்து அந்த நகைப் பெட்டியை எடுத்தேன். அதில் அஞ்சலி ஜீவல்லர்ஸில் நான் வாங்கிய வளையல்கள் இருந்தது. “என்னோட காதல் பரிசு…” என்று அவளிடம் வளையல்களை நீட்டினேன்.
“வேண்டாம். என்னை விட்டுரு…” என்ற அமோதிதா தனது ஹேண்ட்பேகை எடுத்துக்கொண்டாள்.
“நோ…” என்ற நான் அவள் ஹேண்ட்பேகில் வலுக்கட்டாயமாக அந்த வளையல்களை திணித்துவிட்டு, “நல்லா யோசி…. ஓகேன்னா நாளைக்கு இந்த வளையலப் போட்டுட்டு வா… இல்லன்னா எப்பவும் என்னைப் பாக்க வராத….” என்றேன்.
“மனோஜ்… ப்ளீஸ்…. நான் சொல்றத புரிஞ்சுக்க…”
“இப்ப நீ போகலாம்…” என்ற நான் முகத்தை திருப்பிக்கொண்டேன்.
மறுநாள் காலை, ஒன்பது மணிக்கு மேல் எனக்கு ஃபோன் செய்த ப்ரமோத்தின் குரலில் பதட்டம்.
“மனோஜ்… ஒரு ஷாக்கிங் இன்ஃபர்மேஷன்… கடன் பிரச்னையால நேத்து கோர்ட்ல, அமோதிதாவோட அப்பா வீட்ட அட்டாச் பண்ணி, ஏலம் விடச் சொல்லிட்டாங்களாம். அதனால…” என்று இழுத்தான்.
“அதனால?” என்ற எனக்கும் பதட்டம் தொற்றிக்கொண்டது.
“ஏற்கனவே நிறைய கடன்… இப்ப வீட்டையும் அட்டாச் பண்றாங்கன்னவுடனே… அவங்க… அவங்க… விஷம் குடிச்சு தற்கொலைப் பண்ணிகிட்டாங்க” என்றவுடன் அமிலத்தில் நனைத்த ஊசியை யாரோ என் நெஞ்சில் செருகியது போல் இருந்தது. “அமோதிதா?” என்ற என் குரல் குழறியது. “தெரியல…” என்ற ப்ரமோத் ஃபோனை வைத்துவிட்டான். நான் பைக்கை எடுத்துக்கொண்டு, அமோதிதாவின் வீடிருக்கும் ஹிந்துஸ்தான் பார்க் பகுதியை நோக்கி பறந்தேன்.
அந்த விக்டோரியன் ஸ்டைல் பங்களா வாசலில் பெரும் கூட்டம். பங்களாவிற்கு முன்பிருந்த தோட்டத்தில் திட்டு திட்டாக ஜனங்கள். நான் பதட்டத்துடன் தோட்டத்தைக் கடந்து, பங்களா வாசலை நோக்கிச் சென்றேன். வாசலில் போலீசார் கைகளைக் கோர்த்து வேலி போட்டிருந்தனர். எங்கிருந்தோ வந்த ப்ரமோத், “உள்ள விட மாட்டன்ங்கிறாங்க மனோஜ்” என்றான். வேகமாக அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்த நான், “அமோதிதாவுக்கு என்ன ஆச்சு?” என்றபோது என் குரல் தழுதழுத்தது.
“தெரில. சில பேரு அமோதிதாவோட அப்பா, அம்மா மட்டும் தற்கொலைப் பண்ணிகிட்டாங்கன்னு சொல்றாங்க. கொஞ்ச பேரு…. எல்லாரும் தற்கொலை…” என்ற ப்ரமோத்தின் நெஞ்சில் கைவைத்து வேகமாக தள்ளினேன். பொங்கி வந்த அழுகையை, உள்நாக்கால் உள்கன்னத்தில் அழுத்தி அடக்கினேன். அப்போது ஜனங்கள் சலசலப்புடன் பங்களா வாசலை நோக்கிச் செல்ல… நான் திரும்பிப் பார்த்தேன். வீட்டுக்குள்ளிருந்து ஒரு ஸ்ட்ரெச்சர் வருவது தெரிந்தது. நானும், ப்ரமோத்தும் வீட்டு வாசலை நோக்கி ஓடினோம். மக்கள் கும்பலாக ஸ்ட்ரெச்சரை நெருங்க… போலீஸ் பெரிய அணை போல் தடுத்து நிறுத்தியது.
நான் ஆவேசத்துடன் போலீஸைக் கடந்து செல்ல முயற்சிக்க… போலீஸார் என்னை நெட்டித் தள்ளினர். ப்ரமோத் என்னைப் பிடித்து நிறுத்தினான். முதலில் வந்த ஸ்ட்ரெச்சரில் அமோதிதாவின் அப்பா… அடுத்து வந்த ஸ்ட்ரெச்சரில் அமோதிதாவின் அம்மா… எனக்கு தொண்டையில் ஏதோ செய்து வாந்தி வருவது போல் இருந்தது. அதன் பிறகு, வேறு எந்த ஸ்ட்ரெச்சரும் வராமல் இருக்க… நான் சற்று நிம்மதியானேன். சில நிமிடங்களில் வீட்டுக்குள்ளிருந்து அடுத்தடுத்து ஸ்ட்ரெச்சர் வர… அதிர்ந்தேன்.
அழுவது போல் முகம் மாறியிருந்த ப்ரமோத், என் கையை இறுகப் பிடித்து அழுத்தினான். அந்த மூன்றாவது ஸ்ட்ரெச்சர் நெருங்கியது. அதில் இ……ரு…..ந்…..த….வ….ள்…… அமோதிதா. நெஞ்செல்லாம் வெடித்து சிதற…. நான் “அமோ…” என்று பாய்ந்து ஓட… போலீஸ்காரர்கள் என்னைத் தடுத்தனர். நான் அவர்களைப் பிடித்துத் தள்ளிவிட்டு, ஸ்ட்ரெச்சரை நெருங்கினேன். “அமோ…” என்று அலறிக்கொண்டே உயிரற்ற அவள் உடல் மீது அழுதபடி பாய்ந்தேன். போலீஸ்காரர்கள் மிகவும் சிரமப்பட்டு என்னைப் பிடித்து இழுத்தனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளில், ஸ்ட்ரெச்சரிலிருந்த அமோதிதாவின் உடல் நகர்ந்து… சட்டென்று அவள் கை ஸ்டட்ரெச்சருக்கு வெளியே வர…. அதில் நேற்று நான் கொடுத்த வளையல்களை அமோதிதா அணிந்திருந்தாள். “அமோதிதா…” என்று நான் அலறிய அலறலில் மொத்த இடமும் அமைதியானது.
மனோஜ் கூறி முடித்தபோது, ரவீந்தரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. மனோஜ் வானத்தை நோக்கியபடி கண்களை மூடியிருந்தான். கண்ணோரம் நீர்த்துளிகள். அலைகளின் சத்தம் இப்போது மெதுவாகத்தான் இருந்தது.
தொடர்ந்து மனோஜ், “என் வளையலோட அவள் கையப் பார்த்த அந்தக் காட்சி, இன்னும் என் கண்ணுலயே இருக்கு ரவீந்தர். அந்தக் காட்சிய கடவுள் பர்மனன்ட்டா என் கண்ணுல ஃபிக்ஸ் பண்ணிட்டாரு. அவள ஆம்புலன்ஸ்ல ஏத்துற வரைக்கும், அந்த வளையல் கை அப்படியே நீட்டிட்டுதான் இருந்துச்சு. ஆம்புலன்ஸ்ல ஏத்துன பிறகும், அந்தக் கை வெளியவேதான் நீட்டிகிட்டிருந்துச்சு. ஆம்புலன்ஸ் கதவைச் சாத்துறப்பதான் கைய உள்ளத் தள்ளினாங்க. இப்பவும் அடிக்கடி கனவுல, அந்த வளையல் கை என் முகத்துல மோதும்…” என்ற மனோஜ் கண்ணீரைத் துடைத்துக்கொண்டான். மீண்டும் ஓட்கா பாட்டிலை எடுத்து அப்படியே வாயில் கவிழ்த்துக்கொண்டு, காலி பாட்டிலைத் தூக்கி எறிந்தான்.
இப்போது திரும்பி ரவீந்தரின் முகத்தைப் பார்த்த மனோஜ், “தட் வாஸ் எ பியூட்டிஃபுல் லவ் ரவீந்தர். Love in its purest form. அவ இறந்தப்பவே நானும் இறந்துருக்கணும். ஆனா… இந்த பாட்டுதான் எனக்கு உயிர் கொடுத்தது. இந்தப் பாட்டக் கேக்குற ஒவ்வொரு முறையும் நான் அவளோட வாழுறேன். நான் வாழ்றதுக்காகத்தான் இந்தப் பாட்ட கேக்குறேன்…” என்று பேசி முடித்தான்.
“சார்… நீங்க… கல்யாணம்…” என்று ரவீந்தர் இழுத்தான்.
“இல்ல… அவ இறந்த பிறகு, நான் கல்கத்தாவ விட்டு வரவே இல்ல. இப்ப எங்க பாட்டி உடம்பு சரியில்லாம இருக்காங்கன்னுதான் சென்னை வந்தேன். மரணப் படுக்கைல அவங்க, “நீ கல்யாணம் பண்ணிக்கோ’ன்னு சொன்னப்ப கூட சரின்னு சொல்லல. மறுபடியும், மறுபடியும் மறக்க நினைச்சாலும், மறக்கமுடியாத காதல் அது…” என்ற மனோஜ், நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக திடீரென்று பாடினான்.
நாடகம் முடிந்த பின்னாலும்
நடிப்பின்னும் தொடர்வது என்ன?
ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே…
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே…
உயிரே…. வா….
***