Search This Blog

Showing posts with label short story. Show all posts
Showing posts with label short story. Show all posts

Tuesday, June 20, 2017

திருடன் மணியன்பிள்ளை


இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். கேரளத்தில் வீடுகளுக்குள் புகுந்து திருடுவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. இரவுகளை வேதனையில் கழிக்கும் ஏராளமான பெண்களைக் கொண்ட ஒரு நாடு இது. நான் புரிந்து கொண்டிருக்கிற வரையில் உடல் தேவையை நிறைவு செய்தபின் இயல்பாகவே எதையோ இழந்துவிட்டதான ஒரு உணர்வு தோன்றுகிறது. இதன் பிரதிபலிப்பு பல்வேறு விதமாக வெளிப்படுகிறது.சில மனங்கள் தன் இணையை மனோரீதியாக துன்புறுத்த நினைக்கின்றன. சிலர் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். பாலியல் தாக்குதலுக்குப் பிந்தைய வன்முறை தான் இம்மனோபாவத்தின் உச்சநிலை. முத்தத்தில் துவங்கி முத்தத்தில் முடியும் உறவு மிகவும் அபூர்வமாகவே வாய்க்கிறது.
-திருடன் மணியன்பிள்ளை
அண்ணன் விஜயகுமார் இந்த புத்தகத்தை கொடுத்தபோது சொன்னார் , ஐந்து திரைப்படத்தை உருவாக்குவதற்கான கதைக்கரு இந்த புத்தகத்தில் இருக்கிறது என்று...
மொத்தம் 88 பாகங்கள் கொண்ட இந்த புத்தகத்தில், என்வரையில் ஒவ்வொரு பாகத்தையும் திரைக்கதையாக்கலாம். சொல்கிற விஷயத்தில் அத்தனை தெளிவு அத்தனை நேர்த்தி.
இந்த புத்தகத்தில் சில சுவாரஸ்யமான திருடர்களை மணியன் பிள்ளை நமக்கு அறிமுக படுத்திவைக்கிறார். முதலிரவு அறையில் ஒளிந்திருந்து, காட்சியை பார்த்துவிட்டு திருடும் மணவறை திருடன், பால்மாவை மட்டும் திருடும் பால் பொடித் திருடன், கோட்டயம் கான், தற்கொலை செய்துகொண்ட சூரியன் எனும் திருடன், அழகனான மயக்கு சுகு, திருடுவதற்கு முன்பு திருடும் வீட்டில் இயற்கை உபாதையை கழிக்கும் திருடன், தேங்காய் பாபு என திருடர்களின் விசித்திர உலகத்தையும், சில போலீஸ்க்காரர்கள், நீதிபதிகள், பாலியல் தொழிலாளர்கள் என சாதாரணவர்கள் பார்க்காத உலகத்தை பார்வைக்கு வைக்கிறார் மணியன்பிள்ளை . 17 வயதில் ஏற்பட்ட முதல் திருட்டு அனுபவம் ஒரு பெண்ணின் மூலமாக நிகழ்வது ஒரு பெண்ணின் நிலையிலிருந்து வருத்தமாகவே நான் உணர்ந்தேன்.
தற்போது தன் மகனின் ஆதரவில் வசித்து வரும் மணியன்பிள்ளை தொடந்து நிழல்போல தன்னை தொடர்ந்து வரும் பழைய வாழ்க்கையோடு இன்றும் போராடி வருகிறார். சமூகத்தின் எல்லாருமே இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என நினைக்கிறேன்.

காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த புத்தகத்தை குளச்சல் மு.யூசுப் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மிக அழகாக பொறுப்போடு மொழிபெயர்த்திருக்கிறார்.
ஒருவரிடம் எத்தனை சாகசங்கள் இருக்கும்? தெரிந்துகொள்ள ஒருமுறை வசித்துவிடுங்கள் திருடன் மணியன்பிள்ளையை

 Yogi Sandru

Wednesday, May 10, 2017

கவசம்

 (ராணியில் வந்துள்ள அன்னையர் தின சிறப்பு சிறுகதை)
கூடத்தில் பெட்டி தயாராக இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் அவள் கிளம்ப வேண்டும். லட்சுமியம்மாள் கனத்த மனதோடு பேத்தியைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். புறப்பட்ட இடத்திற்கே திரும்பிச் செல்வதுதான் வாழ்க்கையோ? எல்லாவற்றையும் விழுங்கியாக வேண்டும் என்பதுதான் விதியோ? ஆறு மாதத்திற்கு முன்பு மனசுக்குள் பெருகிய மகிழ்ச்சி இத்தனை சீக்கிரம் வடிந்து விடும் என்று அவள் நினைக்கவில்லை.
அன்றொரு நாள் திருமதி மாதங்கி அழைத்துச் சொன்ன விஷயத்தைக் கேட்டதும் லட்சுமியம்மா நம்பமுடியாமல்தான் அவளைப் பார்த்தாள்.
“நிஜமாவா சொல்றீங்க?
“சந்தியம் பண்ணி சொன்னாத்தான் நம்புவீங்களா?
“அய்யோ அப்டி இல்ல”
“நிஜமா உங்க பிள்ளையும் மருமகளும் அமெரிக்காலேர்ந்து வராங்களாம். உங்களை இங்கேர்ந்து கூட்டிட்டு போய் வெச்சுக்கப் போறதா ஈ மெயில் அனுப்பி இருக்கார் உங்க பிள்ளை. பாக்கறீங்களா?”
“”எனக்கு இங்கிலீஷ் எல்லாம் படிக்கத் தெரியாது. நீங்க சொல்றதே போதும்.இதை விட வேறென்ன சந்தோஷம் இருக்கப் போகிறது”
“இன்னும் ஒரே வாரம்தான். உங்க பொருட்களை எல்லாம் எடுத்து வெச்சுக்கிட்டு தயாரா இருங்க. என்னவோ இப்பவாவது உங்க பிள்ளைக்கு இங்க திரும்பி வரணும், உங்களை இங்கேர்ந்து கூட்டிக்கிட்டு போகணும்னு தோணிச்சே.” மிஸஸ் மாதங்கி பிரின்ட் எடுக்கப்பட்ட கடிதத்தை லட்சுமியிடமே கொடுத்தாள். அதையே பிள்ளை மாதிரி நினைத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் லட்சுமியம்மா.
எட்டு வருடமிருக்குமா சந்துரு அமெரிக்கா சென்று! அதற்கு மேலும் கூட இருக்கலாம். மேற் படிப்பிற்காகச் சென்றவனுக்கு அங்கேயே நல்ல வேலை கிடைத்தது. சில ஆண்டுகளில் பச்சை அட்டையும் கிடைத்துவிட, அங்கேயே ஒரு மலையாளி பெண்ணை காதலித்து மணந்து கொண்டான். திருமணத்திற்கு முன் ஒரு முறை இந்தியா வந்து அம்மாவின் ஆசியைப் பெற்றுக் கொண்டான். தஞ்சாவூரில் இருந்த பரம்பரை வீட்டில் இருந்தாள் லட்சுமியம்மா. புருஷன் என்ன காரணம் என்று சொல்லாமலே ஒரு நாள் வீட்டை விட்டு போய் விட, மாமனார் மாமியார்தான் ஆறுதலாக இருந்தார்கள். அவர்கள் துணையோடு பிள்ளையை வளர்த்தாள். அவனது பத்தாவது வயதில் அவர்களும் ஒருவர் பின் ஒருவராக மறைய, பின் தனியே பாரம் சுமந்தாள். அவனை நன்கு படிக்க வைத்தாள்.
அவன் படிப்புச் செலவுக்கும், அமெரிக்க பயணத்திற்காகவும் பணம் தேவைப்பட்டதால் வீட்டை விற்று விட்டு அதே வீட்டின் ஒரு அறையில் சொற்ப வாடகைக்கு தனிக் குடித்தனம் செய்து கொண்டிருந்தாள். பிள்ளையின் முன்னேற்றமும் நலமும் மட்டுமே அவளது நித்திய பிரார்த்தனையாக இருந்தது. புருஷன் எங்கே இருக்கிறான் என்றே தெரியாது. உயிருடன்தான் இருக்கிறானா இல்லையா என்றும் தெரியாது. ஒரே பிள்ளையும் எங்கோ தூர தேசத்தில் இருந்தது அவள் மனதின் ஓரத்தில் ஏக்கத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அங்கேயே அவன் தங்கி விடுவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
திருமணத்திற்கு ஆசி வாங்க ஊருக்கு வந்தவனை அக்கம் பக்கம் பிலு பிலுவெனப் பிடித்துக் கொண்டது.

“ஏண்டா சந்துரு லட்சுமிக்கு, கருவேப்பிலைக் கொத்தாட்டமா நீ ஒரே பிள்ளை. அவள் கண்குளிரப் பார்த்து ஆசி கூறி அட்சதை போட, இந்த ஊர்ல ஜாம் ஜாம்னு உன் கல்யாணம் நடக்க வேண்டாமா?”
“எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? நானும் அவளும் நாலஞ்சு வருஷமா பழகறோம். அவங்க அப்பா அம்மா எல்லாரும் அங்க இருக்கறவங்க. அங்க வெச்சு கல்யாணம் பண்றதுதான் அவங்களுக்கு வசதி. அம்மாவுக்காக இங்க வந்தா ஏகப்பட்ட செலவுகள். அம்மாவைக் கூட்டிகிட்டு போகணும்னாலும் பாஸ்போர்ட் கூட இன்னும் எடுக்கலை. அப்டியே கிடைச்சாலும் விசாவுக்காக நாள் முழுக்க தூதரக வாசல்ல நின்னு, கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல அம்மாவால முடியாது. அமெரிக்க குளிரும் அம்மாக்கு தாங்காது. என் கல்யாண வீடியோவை அனுப்பறேன். அதுலயே ஆனந்தமா பார்த்து ஆசீர்வதிப்பா எங்கம்மா. ஏம்மா நீ என்னம்மா சொல்ற?”
பிள்ளை கெஞ்சலாகக் கேட்டு நிறுத்த, லட்சுமியம்மா தன் உரிமையையும், ஏமாற்றத்தையும் உமிழ்நீரோடு சேர்த்து விழுங்கிக் கொண்டாள்.

“நீ எங்க இருந்தாலும் நல்லார்க்கணும்டா சந்துரு. என் ஆசி எப்பவும் உனக்கு உண்டு”
“அப்பறம் நீ இங்க தனியா இருப்பது மனசுக்கு கஷ்டமா இருக்கு. உனக்கு ஒண்ணுன்னா உன்னை யார் பாத்துக்குவாங்க? அதனால நா ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.

“என்ன?”
என் சிநேகிதனுக்கு உறவுக்காரங்க இதே தஞ்சாவூரில் ஒரு முதியோர் இல்லம் நடத்திட்டு இருக்காங்க. மாசா மாசம் நா பணம் அனுப்பிக்கறேன். உன்னை நல்லா பார்த்துக்குவாங்க. இங்க இருக்காப்பலயே நீ அங்கயும் இருக்கலாம். காவேரி ஸ்நானம் பண்ணிக்கலாம். கோவில் குளத்துக்கு போய்க்கலாம். நிறைய மனுஷங்களோட அங்க சேர்ந்து இருக்கலாம். உனக்கு ஒண்ணுன்னா கவனிச்சுக்க ஆள் இருக்காங்கன்னு நானும் அங்க நிம்மதியா இருப்பேன். நா எல்லா ஏற்பாடும் பண்ணி முன் பணமும் கட்டியாச்சு. இன்னும் ரெண்டு நாளில் உன்னை அங்க விட்டுட்டு நான் திரும்பிப் போகணும்.”
பிள்ளை உத்தரவு போடுகிறான் என்பது லட்சுமியம்மாவுக்குப் புரிந்து விட்டது. அதை மீறும் சக்தியோ உரிமையோ அவளுக்கு ஏது? கிளம்புவதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொன்றாகச் செய்தாள். பரம்பரையாய் ஆண்டு வந்த பெரிய பெரிய பித்தளை, செப்பு, வெண்கலப் பாத்திரங்கள், தண்டு விளக்குகள், அண்டா குண்டாக்கள் எல்லாவற்றையும் எடைக்குப் போட்டாள். மனசு கனத்தது. வீட்டுப் பெரியவர்களை எல்லாம் எடைக்குப் போட்டாற்போல் இருந்தது. கிடைத்த பணத்தோடு கூடப் பணம் போட்டு, பிள்ளையின் கல்யாணப் பரிசாக அவனுக்கு ஒரு தங்கச் சங்கிலியும், மருமகளுக்கு ஒரு பட்டுப் புடவையும் வாங்கிக் கொடுத்தாள். அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு முதியோர் இல்லத்திற்குக் கிளம்பினாள்.
அப்போது வந்தவள்தான் இங்கு. அவன் சொன்னாற்போல் ஒரு குறையும் இல்லைதான். நன்கு கவனித்துக் கொள்கிறார்கள். சுத்தம் சுகாதாரம், காற்றோட்டம் எல்லாம் இருக்கிறது. அடிக்கடி மருத்துவப் பரிசோதனை நடக்கிறது. பூஜை புனஸ்காரம் எதற்கும் குறைவில்லை. இருப்பினும் உள்ளூர ஒரு புத்திர பாசம் அலைக்கழித்துக் கொண்டுதான் இருந்தது. அவனைப் பார்க்க முடியாத ஏக்கம் மனதை அழுத்திக் கொண்டிருந்தது.
எட்டு வருடப் பிரிவு. கல்யாணமாகி ஐந்து வருடம் குழந்தை வேண்டாம் என்று இருந்தவர்களுக்கு மூன்றாண்டுக்கு முன்புதான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதை போட்டோவில் பார்த்ததோடு சரி. இதோ பிள்ளை குடும்பத்தோடு வருகிறானாம். அவள் ஏக்கமெல்லாம் தீரப்போகிறது. மனம் குழந்தையாய் மாறி குதூகலித்தது. கடிகார முள்ளின் சுழற்சியில் யுகமே மிக மெதுவாகச் சுழல்வது போலிருந்தது.
சனிக்கிழமை பிள்ளை மட்டும் ஒரு டூரிஸ்ட் காரில் வந்தான். அவனை விழுங்கி விடுவது போல் பார்த்தாள். என்னப்பா இளைச்சா மாதிரி இருக்க. சரியா சாப்பிடறயா இல்லையா? கவலையுடன் கேட்டாள். அவன் பதில் கூறாமல் ஒரு புன்னகையுடன் போலாம்மா வா என்றான். லட்சுமியம்மா பூரிப்புடன் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அவனோடு கிளம்பினாள். நாம சென்னைக்குப் போறோம்மா என்றவன் நேராக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றான்.
சென்னையில்தான் வீடெடுத்து தங்கியிருந்தான். மருமகள் அழகாக இருந்தாள். தமிழ் பெரிதாகத் தெரியவில்லை. குழந்தை சிநேகமாக சிரிக்க வாரியணைத்துக் கொண்டாள் அதை.
இரவு டின்னர் முடிந்ததும், மருமகளும் குழந்தையும் ஒரு அறைக்குச் செல்ல, பிள்ளை அம்மாவிடம் வந்தான்.

“நா எதுக்கு இந்தியா வந்திருக்கேன் தெரியுமா?
“அமெரிக்கா அலுத்துப் போயிருக்கும். அம்மாவோட இருக்கணும்னு தோணி இருக்கும். அதான் வந்துட்ட. சரியா?
“இல்ல. உன்கிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன்”
“என்..கிட்ட உதவியா....என்ன உதவி? நா என்ன செய்ய முடியும் உனக்கு?
“சொல்றேன். நீ அதிர்ச்சியடையக் கூடாது”
“என்னடா பயமுறுத்தற?”
“என்னோட ஒரு கிட்னி வேலை செய்யலாம்மா. இன்னொன்றிலும் கொஞ்சம் தொற்று இருக்கு. இப்பதான் ஆரம்பம். டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கேன். மாற்று கிட்னி பொருத்தினா பிழைச்சுக்கலாம்னு சொன்னங்க. ஹோம்ல உன்னை சேர்க்கும் போது எடுத்த உன்னோட முழு மெடிகல் டெஸ்ட் ரிசல்ட்டும் என் கிட்ட இருந்துது. உன் இரத்தமும் என் இரத்தமும் ஒரே வகைதான். உன் கிட்னி எனக்கு பொருந்தும்னு சொன்னங்க. நீ ஒரு கிட்னி எனக்கு தானமாக் கொடுத்தா நான் உயிர் பிழைக்க சான்ஸ் இருக்கு. தருவயாம்மா?”
லட்சுமியம்மா அதிர்ச்சியில் உறைந்து போனாள். பதறிப் போயிற்று அவள் மனது. ‘’என்னடா சொல்ற கண்ணா....” என்றவள் குரல் பிசிறியது. கண்கள் அருவியாயிற்று. ஒரு கிட்னி என்னடா? என் உசிரையே தரேன். எடுத்துக்கோ. உனக்கு ஏதானம் ஆய்ட்டா நா உசிரோட இருக்க மாட்டேன். அதனால என்ன வேணும்னாலும் என் உடம்புலேர்ந்து எடுத்துக்கோ. நீ நல்லார்ந்தா போதும் எனக்கு.... அடி...மாரியம்மா...என் குழந்தைக்கு ஒரு கஷ்டமும் வரக் கூடாது. உனக்கு ஒரு உசிர் வேணும்னா என்னை எடுத்துக்க. அவனை விட்டுடு. அவன் நல்லபடியா வாழணும்” கண்ணீருக்கிடையே அரற்ற ஆரம்பித்தாள்.
அனைத்து சம்பிரதாயங்களும் மளமளவென்று நடந்தன. குறித்த நாளில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அம்மாவின் கிட்னி அவன் உடம்பில் வெற்றிகரமாக செயல் படத் துவங்கி விட்டது.
உங்க பிள்ளை நல்லார்க்கார். இனி எந்த ஆபத்தும் இல்ல” டாக்டர் சொன்ன போது அவனை மீண்டும் பெற்று விட்டாற்போல் மனசு புளகாங்கிதம் அடைந்தது. ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

ஒரு மாத மருத்துவ கவனிப்பில் இருவர் உடலும் நன்கு தேறிற்று. மேலும் ஐந்து மாதங்கள் பிள்ளையோடும் பேரக் குழந்தையோடும் மகிழ்ந்திருந்தாள். மருமகள் கூட நன்கு சிரித்துப் பேசினாள். லட்சுமியம்மா தினமும் அவனுக்காக சுந்தரகாண்டம் படித்தாள். ஒரு நாள் பிள்ளை அவளிடம் வந்தான்.
தயங்கியபடி அவளிடம் சொன்னான். “என் லீவு முடியுதும்மா. நாங்க திரும்பிப் போகணும்.”
அவள் இதை எதிர்பார்க்கவில்லை. “நீ இங்கயே இருப்பன்னு இல்ல நினைச்சேன்?”
“அதெப்டிம்மா. இப்போ நா அமெரிக்க பிரஜை.அப்டி எல்லாம் இங்க தங்கிட முடியாது. எனக்கு அங்கே கிட்னி கிடைக்கலை. தவிர அங்கே அறுவை சிகிச்சை செய்ய எக்கச்சக்க செலவாகும். உன்னை இங்கேர்ந்து கூட்டிட்டு போறதை விட நான் இங்க வந்து ஆபரேஷன் செய்துக்கிட்டா செலவும் கம்மி. ஆபரேஷனும் வெற்றியடையும்னு ஒரு செண்டிமெண்ட்டல் நம்பிக்கை. கம்பெனி ஆறு மாசம் லீவும், செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பி வெச்சுது. மெடிகல் ரிப்போர்ட்ஸ் எல்லாம் முதலிலேயே இங்க அனுப்பி வெச்சதால உடனடியா ஆபரேஷன் தேதி நிச்சயம் பண்ண முடிஞ்சுது. நீ நிச்சயம் எனக்கொரு கிட்னி தராம இருக்க மாட்டன்னு நம்பித்தான் முன்கூட்டி உன்கிட்ட எதுவும் சொல்லி உன்னை அதிர்ச்சியடைய வைக்க வேணாம்னுதான் வந்த பிறகு சொன்னேன். கடவுள் அருளால, எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. என் விசாவும் முடியுது.. உன்னை ஹோம்ல கொண்டு விடறேன்னு மாதங்கி மேடம்க்கு போன் பண்ணி சொல்லிட்டேன்”
லட்சுமியம்மா அமைதியாக அமர்ந்திருந்தாள். விழிகள் சுந்தரகாண்டத்தில் நிலைத்திருந்தது. புருஷன் பிரிந்து சென்றாலும், பிள்ளைகள் பிரிந்து சென்றாலும் சீதை அமைதியாக இருந்தாள். தன் அன்பை சுருக்கிக் கொள்ளவில்லை.
வாசலில் ஆட்டோ வந்து நின்றது. பிள்ளையும் மருமகளும் அவள் காலில் விழுந்தார்கள்.
“எங்களை ஆசீர்வதி அம்மா”
“நல்லாருங்க. எங்க இருந்தாலும் எல்லாரும் நல்லா இருப்பீங்க. இனி உனக்கு ஒரு கஷ்டமும் வராது. நா சொல்ற மந்திரங்கள் உங்களைச் சுத்தி கவசமா இருந்து காக்கும்.” குரல் நடுங்க ஆசீர்வதித்தாள்.
பிள்ளை பெட்டியை எடுத்து ஆட்டோவில் வைத்து விட்டு தானும் ஏறிக் கொண்டான் அம்மாவைக் கொண்டுவிட. மருமகளும் பேத்தியும் வாசலில் இருந்து கையசைக்க ஆட்டோ புறப்பட்டது. ஆறு மாத சந்தோஷ தருணங்கள் மனசில் உள்ளது,. ஆயுளுக்கும் அவற்றைக் கொண்டு மிச்ச வாழ்வைத் தள்ளிக் விடலாம். லட்சுமியம்மா அன்போடு பிள்ளையின் தலையைத் தடவிக் கொடுத்தபடி புன்னகைத்தாள்

Tuesday, April 25, 2017

இழப்பு


- சல்மா -

மழையினால் நசநசத்துக் கிடக்கிறது வீடு. மொஸைக் தரையில் கால் வைக்க முடியாதபடி நெறுநெறுக்கிற மணல், பற்களைக் கூச வைப்பதாயிருக்கிறது. கூட்டத்தின் அடர்த்தியைச் சிரமத்துடன் விலக்கியபடி வெளியில் வந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறேன். இழப்பின் துயரத்தாலும் மனித நெரிசலின் இறுக்கத்தினாலும் புழுங்கிக்கிடந்த உடலும் மனமும் தெருக்காற்றின் குளிர்ச்சியில் சிலிர்த்துக்கொள்கின்றன என்றாலும் ஓர் அடிகூட எடுத்துவைக்க இயலாதபடிக்குக் கனத்து நடுக்கமுறுகிறது பாதம். ஒரு நிமிடமேனும் அங்கேயே நின்று ஆசுவாசம்கொள்ள விரும்பினாலும் அதற்குச் சாத்தியமில்லாதபடி அவ்விடத்தினூடாக நடமாடித் திரியும் கூட்டத்தினருடைய இருப்பு சங்கட முண்டாக்குவதாயிருக்க, வலுக்கட்டாயமாக வீட்டை நோக்கிக் கால்களை எடுத்துவைத்து நடக்கிறேன். பத்தடி தூரத்தில் இருக்கும் வீட்டை அடையக் கடும் பிரயத்தனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

வீடு தன்னை நெருங்கவிடாதபடிக்குத் தள்ளித் தள்ளிப் போவதான கற்பனை மனத்தில் ஓட இன்னும் தீவிரமாக எட்டி நடந்து நெருங்கிவிட முயற்சி செய்கிறேன். நீண்ட முயற்சிக்குப் பிறகே வீட்டை அடைவது சாத்தியமாகிறது. இந்த இரவின் முழுமையான இருளையும் தன்மீது போர்த்திச் சாந்தமாக அமர்ந்திருக்கிறது வீடு. தளர்ந்த நடையோடு கதவின் மீது சாய்ந்து ஒரு நொடி தாமதித்தவள், புடவையை விலக்கி இடுப்பின் பக்கவாட்டில் சொருகியிருந்த சாவியை உருவி எடுத்துப் பூட்டைத் திறக்க முயல்கிறேன். பூட்டின் துளை தட்டுப்படாது தடுமாறுகிறேன். "ப்ச்" என அலுத்துக் கொண்டபடி மறுபடியும் அதனைத் திறக்க முயற்சிக்கிறேன். சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகே பூட்டைத் திறக்க முடிகிறது என்றாலும், கனமான பித்தளைத் தாழ்ப்பாளை இழுத்துத் திறப்பது பெரும்பாடாக இருக்கிறது. தினமும் திறக்கும் தாழ்ப்பாளைத் திறக்க இன்று முழுபலத்தையும் திரட்ட வேண்டியிருக்கிறது.

கதவு திறந்து உள்ளே நுழைகிற என்னை எதிர்கொள்கிறது இன்னும் அதிக அடர்த்தியான இருள். "அக்கா நாளைக் காலையில வந்திடுவேன்" - அவனது குரல் இன்னும் செவியிலிருந்து நீங்காமலிருக்க, சுவற்றின் மீது சரிந்து நழுவித் தரையில் அமர்ந்துகொள்கிறேன். சில்லிட்டுக் கிடக்கும் தரையின் குளிர்ச்சி தாங்கமுடியாமல் நடுக்கமுறுகிறது பலவீனமான உடல். சற்று நேர ஓய்விற்குப் பிறகே அவ்விடத்திலிருந்து எழுந்துகொள்ள முடியும் எனத் தோன்றுகிறது. சற்று நேர ஆசுவாசத்திற்குப் பிறகும்கூட அவ்விடத்திலிருந்து எழுந்துகொள்ளக் கடும் பிரயத்தனம் தேவை யாகவேயிருக்கிறது. கைகளிரண்டையும் தரையில் ஊன்றிச் சிரமத்துடன் எழுந்து, அடுத்து என்ன செய்வது என்கிற தடுமாற்றம் உண்டாக, இலக்கில்லாதபடி இருளில் ஊடுருவி ஹாலின் குறுக்காக நடந்து சென்று அங்கிருக்கும் ஜன்னலை அடைகிறேன். கண்களுக்குப் பழகிவிட்ட இருள் பெரிதாகத் துன்புறுத்தாதது நிம்மதியைத் தருகிறது. திறந்திருக்கிற ஜன்னல் கதவிýருந்து உள் நுழைகிற காற்றில் படபடக்கும் திரையைத் தொட்டு நிறுத்தி ஜன்னலின் ஓர் ஓரமாக அதனை நகர்த்தி ஒதுக்குகிறேன். விரல்கள் பற்றும் ஜன்னல் கம்பியின் குளிர்ச்சியை உணர்ந்தபடி தெருவையும் அதனைத் தாண்டி எதிர்த் திசையில் இருக்கும் கபர்ஸ்தானையும் நோக்கிப் பார்வையைச் செலுத்துகிறேன்.

அவன் புதைக்கப்பட்ட இடம் எதுவாக இருக்கும் என்பதைப் பதற்றத்துடன் அவசரமாகத் தேடுகிற என் கண்களுக்கு மல்லிகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புதைகுழி பளிச்செனப் பார்வையில் தட்டுப்படுகிறது. தெருவை ஒட்டிய சுற்றுச்சுவருக்கு அருகில் என் வீட்டு ஜன்னலுக்கு எதிராகவே அவன் புதைக்கப்பட்டிருப்பது தாங்க முடியாத அதிர்ச்சியாய் உருவெடுக்க, இனி எக்காலத்திலும் என்னால் இத்துக்கத்திýருந்து விடுபடவே முடியாதோ என்கிற பீதி பெரும் துயரமாய் எழுகிறது.

"நீ எத்தனை அடி உயரம்?" அவனது கட்டைக் குட்டையான உருவத்தைப் பார்த்துக் கேட்ட இவளிடம், "அஞ்சு அடிக்கா" கூச்சத்துடன் சொல்லித் தலைகுனிந்து கொண்ட அவனது முகம் நினைவில் மேலெழுகிறது. மழையினால் சொதசொதத்துக் கிடக்கும் ஆறடிக் குழிக்குள் அவ்வுடல் இன்று புதையுண்டு கிடக்கிறது. நேற்றிரவு வீட்டில் தனது படுக்கையில் சகல செüகர்யங்களுடன் படுத்து உறங்கியவனை இன்று பாம்புகள் ஊர்ந்து திரிகிற பாதுகாப்பற்ற இருளில் மூழ்கியிருக்கிற குழிக்குள் கிடத்தியிருப்பதன் யதார்த்தத்தை ஏற்கத் தயங்கும் மனத்தைச் சரிசெய்ய மிகுந்த பிரயாசை வேண்டியிருக்கிறது.

மரணம் எங்கே ஒளிந்துகொண்டிருந்து எங்கிருந்து வருகிறது? ஒரே பாய்ச்சலில் கொத்தித் தூக்கிக்கொண்டு எங்கே போகிறது? பதிலில்லாத கேள்விகளால் தலை வெடித்துவிடும் போலிருக்கிறது. அக்கேள்விகளிலிருந்து விடுபடத் தலையை இடவலமாக ஆட்டித் தன் நிலைக்கு வருகிறவளின் பார்வை, அவனது கபர்ஸ்தானிலிருந்து மீண்டு உள்புறமாகச் சென்று அலைந்து மெர்க்குரி விளக்கின் ஒளி வரிசையாய் அணி வகுத்து நிற்கும் தென்னை மரங்களின் மீது விழுகிறது. அதன் கிளைகள் தீட்டப்பட்ட ஓவியங்களைப் போலத் துளிக்கூட அசையாமல் மெüனித்திருக்கின்றன. ஏதோ ஒரு மரத்திலிருந்து ஒலிக்கும் பறவையொன்றின் ஒலி காதில் விழுகிறது. வழக்கமாக அவ்வொலி திகிலை உண்டுபண்ணுவதாயிருக்கும் என்றாலும் இன்று வெற்று ஒலியாய் மனத்தில் நிரம்புகிறது. வீடு இன்னும் இருளில் மூழ்கியிருக்கிறது. சுவிட்சைத் தட்டி விளக்கை எரியவிட வேண்டும் என்கிற எண்ணமே தோன்றாததால் தொடர்ந்து அங்கேயே நின்றுகொண்டு எதெதையோ யோசிக்க முற்படுகிறேன்.

"செத்துப்போறதுன்னா என்ன?" பகலில் குழந்தை என்னிடம் கேட்ட கேள்வி நினைவுக்கு வருகிறது. எனக்கு எத்தனை வயதிருக்கும்போது இதே கேள்வியை அம்மாவிடம் கேட்டேனெனக் கணிக்க முயல்கிறேன். ஐந்து அல்லது ஆறு? குழப்பமாக இருக்கிறது.

தாழ்வாரத்தில் கிடந்த கட்டிலில் அம்மாவின் மடிமீது தலைவைத்துப் படுத்துக்கொண்டு ஓட்டுச் சரிவிலிருந்து வழிந்து முற்றத்தில் கொட்டிக்கொண்டிருக்கிற மழை நீரிலிருந்து எழும் முட்டைகளைச் சத்தமாக எண்ணத் தொடங்குகிறேன். பதினாறோடு தடைப்படுகிற எண்ணிக்கை அம்மாவுக்குச் சிரிப்புண்டாக்குவதாயிருக்கிறது.

"என்னாச்சு அவ்வளவுதானா?" என்கிறாள். வெட்கம் பிடுங்கித் தின்ன அம்மாவின் மடியில் இறுக்கமாய்ப் புதைகிறது முகம்.

"பக்கத்து வீட்டுப் பானுவுக்கு அம்பது வரைக்கும் எண்ணத் தெரியும். நான் உனக்குச் சொல்ýத் தரட்டுமா?"

வேகமாக முகம் உயர்த்தித் தலையாட்டி அதனை ஆமோதித்தபடி "அவளுக்கு அவங்க ராதி சொல்ýத் தந்தாங்க. ஆனா எனக்கு ராதி ஏன் இல்லை?" ஆர்வமாக கேட்கிறேன்.

சற்று நேர அமைதிக்குப் பிறகு அம்மா சொல்கிறாள். "அவங்க நீ பொறக்கு முன்னே மெüத்தாப் போய்ட்டாங்க." முதன் முதலாகக் கேள்விப்படுகிற வார்த்தையின் அர்த்தம் புரியாத குழப்பத்துடன், "அப்டின்னா?" என்று விழித்தவளிடம், "அப்டின்னா செத்துப் போறது . . . அதாவது இறந்து போறது . . . அல்லாட்டப் போறது . . ." இவளுக்குப் புரியும் விதமாகச் சொல்லவியலாத வருத்தம் தொனிக்கும் அம்மாவின் குரலில் இனி எதுவும் கேட்கக்கூடாது என்கிற கண்டிப்பும் கலந்தே இருப்பது புரிய, மெüனமாக அது குறித்த யோசனைக்குள் ஆழ்ந்துபோகிறேன்.

அன்றில்லாமல் எல்லாக் காலத்திற்குமாகத் தன்னுள்ளாகப் பொதிந்துள்ள புதிரினைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதிலேயே அதன் வசீகரம் தேங்கியிருப்பதாக நினைத்தபடி நெடிய பெருமூச் சொன்றினை விடுவிக்கிறேன்.

"அம்மா" எனக் கத்தியபடி ஓடி வந்து இறுக்கிக் கட்டிக்கொள்ளும் யாஸர் என்னைத் தன் உணர்வுக்குக்கொண்டு வருகிறான். வீடே இருளில் மூழ்கியிருப் பதைக் கண்டு பதறியவள் அவனை இறுக அணைத்துப் பிடித்தபடி சுவிட்ச் இருக்கும் இடம் நோக்கி நகர்கிறேன். பயத்தில் உறைந்திருந்த குழந்தையின் முகம் வெளிச்சத்தில் இறுக்கம் தளர்ந்து பிரகாசம்கொள்கிறது என்றாலும் தாயின் முகத்தில் வெளிப்படும் கலக்கம் புரியாத தடுமாற்றத்துடன் ஓடிப்போய் சோபாவில் அமர்ந்து என் முகத்தையே உற்றுக் கவனிக்கிறான்.

அவனது பயத்தைப் போக்கும் விதத்தில் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்து இதமாகச் சிரிக்கிறேன். அச்சிரிப்பு துளிக்கூட என்னோடு ஓட்டவில்லை என்பது அவனுக்குத் தெளிவாகவே புரிகிறது என்பதை அறிந்தவளாக அவனருகே சென்று அமர்ந்து அவனை இறுக அணைத்துக்கொள்கிறேன். என் மடியின் மீது தனது பாதுகாப்பை உறுதி செய்தவனாகத் தூங்க ஆரம்பிக்கிற அவனது தலைமுடியை வருடிக்கொடுத்தவாறே அண்ணாந்து சுவர்க் கடிகாரத்தில் மணி பார்க்கிறேன். நேரம் பத்தைத் தொட்டிருக்கிறது. "பாவம் குழந்தை" என முணுமுணுத்தபடியே அவனைக் கொண்டுபோய்ப் படுக்கையில் விடுகிறேன். ஜரினாவின் வீட்டில் சாப்பிட்டிருப்பான் என்கிற நிம்மதியோடு அவனுக்கு அருகிலேயே படுத்துக்கொள்கிறேன்.

தூங்க முடியும் என்கிற நம்பிக்கை சுத்தமாக இல்லை என்றாலும் சும்மாவேனும் படுத்துக்கொண்டிருக்க விருப்பமுண்டாகிறது. மரணத்தை நெருக்கமாகப் பார்த்த பிறகு வாழ்க்கை எப்படி இத்தனை அர்த்தமற்றதாகவும் அபத்தமானதாகவும் மாறிவிடுகிறது என்கிற கேள்வி பீறிட்டு எழ, மரண வீட்டிýருந்து வந்த பிறகு, கை கால் முகம் கூடக் கழுவாதது நினைவுக்கு வருகிறது. இதைக் கூடச் செய்யாமல் அப்படி என்ன அலுப்பு எனத் தனக்குள்ளாக முனகிக் கொண்டவளுக்கு, அதற்குக் காரணம் அலுப்பு மட்டும்தானா என்கிற யோசனை எழுகிறது. உடுத்தியிருக்கும் புடவையெங்கும் யார் யாருடைய கண்ணீர்த் துளிகளோ தேங்கிக் கனப்பதாகத் தோன்றினாலும் கொஞ்சம்கூட அசூயை கொள்ளாமல் உடையைக்களையும் எண்ணத்தைப் புறக்கணிக்கிறேன். படுக்கையின் மீதான எனது இருப்பு துளியும் அசைவற்றிருக்கிறது.

இப்படியே தூங்கிவிட முடிந்தால் எத்தனை நன்றாயிருக்கும் என நினைத்தவளுக்கு உடனேயே அதிலுள்ள சாத்தியமின்மையையும் யோசிக்க முடிகிறது. இந்தத் துக்கத்திலிருந்து விடுபட எத்தனிப்பதில் உள்ள சுயநலத்தை எண்ணிக் கூச்சம் உண்டாகிறது.

தூங்கிக் கடக்கும் அளவுக்கு அற்பமானதா இந்த இழப்பு எனக் கேட்டுக் கொள்கிறவளுக்கு, ரொம்பவும்தான் அலட்டிக்கொள்கிறோமோ என அவமானமாக இருக்கிறது. எதையுமே நினைக்காமல் இருக்க முயற்சிக்கிறேன். அது மட்டும் சாத்தியமாகக் கூடியதா என்ன என நினைத்தபடி படுக்கையில் புரண்டு படுத்தவாறு கடிகாரத்தில் மணி பார்க்க முயல்கிறேன். இருளில் ஒன்றும் தெரியவில்லை என்றாலும், பரவாயில்லை, தெரிந்து என்ன செய்யப் போகிறேன் எனச் சமாதானம் செய்துகொள்கிறேன்.

வயிறு பசிப்பதான உணர்வு மேலிடக் காலையிலிருந்தே ஒன்றுமே சாப்பிடவில்லை என்பது நினைவுக்கு வருகிறது. சாப்பாடு மட்டுமா, தண்ணீர்கூடக் குடிக்கவில்லை என நினைத்தவளுக்கு வியப்பு உண்டாகிறது. என்றைக்காவது ஒரு நாள் இதுபோல முழுப் பட்டினி இருந்திருக்கிறோமா என யோசிக்கிறேன். அப்படி ஒரு நாள்கூட இருந்ததில்லை, ரம்ஜான் மாதத்தில்கூட என்பது நினைவுக்கு வர, பின்னர் அதுவே தீராத வியப்பாக மாறுகிறது. இது எப்படி சாத்தியமாயிற்று என்கிற கேள்வியோடு பெரிய சாதனையொன்றினைச் செய்தது போன்றதொரு பெருமித உணர்வுக்கு ஆட்பட்டவள் உடனே உடலைக் குலுக்கி அவ்வுணர்விலிருந்து விடுபடுகிறேன்.

பகலில் குழந்தையைச் சாப்பிட வைத்த பொழுது ஜரினா "இந்தா பார், நீயும் கொஞ்சம் சாப்பிட்டு வயித்தை நனைச்சு வை. நல்ல பையன்தான், பக்கத்து வீட்டுக்காரன்தான், பாசமாத் தான் இருப்பான் எல்லார்கிட்டேயும். வருத்தமாகத் தான் இருக்கு, என்ன செய்ய? அவன் அம்மா, பொண்டாட்டியே ஒரு முறைக்கு நாலுமுறை காப்பி குடிச்சுக்கிட்டாக. ஒனக்கென்ன?" சலிப்போடு கெஞ்சினாள். இவள்தான் பிடிவாதமாக மறுத்துவிட்டாள். ஓர் உயிர் அநியாயமாகப் போய்விட்ட நிலையில் பசியை உணர்வதும் சாப்பிடுவதும் பெரிய குற்றவுணர்ச்சியை உண்டு பண்ணுவதாயிருக்கிறது. கடுமையான பசியை உணர்கிற இந்த நேரத்தில் கூட அவ்வெண்ணம் வலுப் பெறவே செய்கிறது.

பசியும் தூக்கமும் மனித இயல்பு தானே? இதில் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது என்கிற கேள்வி எழ எனக்கே அந்த அசட்டுத்தனமான வாதத்தை நினைத்து சிரிக்கத் தோன்றுகிறது. என்றாலும் அவனது உடலை அடக்கம் செய்த கையோடு கறியும் சோறும் சாப்பிட உட்கார்ந்த கூட்டத்தைப் பார்த்துத்தான் பயந்து நடுங்கியதும் ஞாபகம் வருகிறது. ஜன்னலுக்கு வெளியே கொட்டும் மழையின் ஓசை கேட்கிறது. குளிர்ந்திருக்கிற இரவில் படுக்கையின் மெத்தென்ற இதமும் குழந்தையின் அருகாமையும் உறக்கம் தன்னை நெருங்குவதற்கான சாத்தியங்களை உறுதி செய்வதை நம்பியவளுக்கு இந்த மழையில் நனையும் குழிக்குள் அவனது உடல் கிடத்தப்ட்டிருப்பதும் நான் சொகு சாகப் படுக்கையில் படுத்திருப்பதும் தாங்கவியலாத துயரமாக உருவெடுக்கின்றன. இரவின் அனைத்துப் பக்கங்களின் மீதும் மரணத்தைப் பற்றிய அச்சுறுத்தல் நீக்கமற நிறைந்திருப்பதனை மறக்க முயன்றவளாக உறங்கிப் போகிறேன்.

****

பாதித் தூக்கத்தில் திடுக்கிட்டு விழித்தவளுக்குத் தொலைபேசியின் ஒலிதான் தன்னை எழுப்பியதோ என்கிற சந்தேகம் தோன்ற, பயத்துடன் உற்றுக் கவனிக்க, தொலைபேசி ஒலிக்கவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்கிறேன். வழக்கமாக நடு இரவில் வரக்கூடிய தொலைபேசி அழைப்பு ஏன் இன்னும் வரவில்லை என்கிற கேள்வி விஸ்வரூபம் கொள்ள, இனிமேல் வரக்கூடும் என்கிற உறுதியோடு கவலையும் சூழ்கிறது.

"இதை நினைச்சு எதுக்காகக் கவலைப்படுற? நீ தனியா இருக்கிற இல்லெ, பொறுக்கி நாய் ஏதாவது வம்பு பண்ணும். பேசாம ரிஸீவரை எடுத்துக் கீழே போட்டுட்டுத் தூங்கு" என்று சொல்லும் ஜரினா, “ஆமாம் அதுவும் முடியாது இல்லெ. ஒம் புருஷன் சவுதியிலிருந்து ராத்திரி நேரந்தான ஒனக்குப் போன்ல பேசுவாரு” என்று அதன் சாத்தியமின்மைகளையும் சொல்லி அலுத்துக்கொள்வாள்.

பிறகு அவளே "ஆமாம், ஒரு வார்த்தையும் பேசித் தொலைக்க மாட்டேங்கிறான். அப்புறம் எதுக்குப் போன் பண்ணுறான் . . ." கெட்ட வார்த்தை சொல்லி நக்கலாகச் சிரித்துக்கொள்வாள்.

மறுபடியும் தூக்கம் வருமென்று தோன்றவில்லை. எனக்கென்னவோ இந்தத் தருணத்தில் எனது விழிப்பு இன்னும் வராத அந்தத் தொலைபேசி அழைப்புக்காகக் காத்திருப்பது போலிருந்தது சங்கட முண்டாக்குவதாயிருக்கிறது. படுக்கையிலிருந்து எழுந்துகொள்ள வேண்டுமென்கிற நிலை கொள்ளாத தவிப்பு மேலிடுகிறது. மெத்தையின் இதம் தரும் குற்றவுணர்வோடேயே என்னை அதனுள்ளாகப் புதைத்து அத்தவிப்பிலிருந்து விடுபட முயல்கிறேன்.

""ரொம்ப நாளா ஆசை இதே மாதிரி விலையுயர்ந்த கட்டில் மெத்தை வாங்கணும்னு, வாங்கிட்டேன்க்கா"" -பெருமை யோடு ஒýத்த அவனது குரல் திடீரென நினைவில் தட்டுப்பட, உடனேயே பழையபடி குற்றவுணர்வுக்குள் தள்ளப்படுகிறேன்.

கடந்துகொண்டிருக்கிற ஒவ்வொரு நொடியிலும் என் விழிப்பு தொலை பேசி அழைப்பிற்கான காத்திருத்தலாக மாறுகிறதோ என்கிற ஐயம் பெருகிக்கொண்டிருக்கிறது. இதுநாள்வரை நான் அவ்வழைப்பினை விரும்பியே எதிர்கொண்டு வந்திருக்கிறேனோ என்கிற கேள்வி உருவாகிவிடாமல் துரத்த பதற்றமுறுகிறது மனம். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்கிற கவலையூடே, நான் யாரென அறிந்துகொண்டுவிடக்கூடாதென்கிற பயமும் ஒன்றிணைய, குழப்பத்தில் ஆழ்கிறேன்.

ஒரு வார்த்தை பேசாவிட்டால் என்ன? அந்த அழைப்பில் மிகுந்திருப்பது எனக்கான வேட்கையும் விருப்பமும் தானே? தினமும் கலையும் தூக்கத்தினூடே மனத்தின் அமைதி அழிவதற்குப் பதிலாக ஓர் ஓரத்தில் தனக்குள்ளாகப் பெருமித உணர்வு துளிர்த்ததா இல்லையா? என்னை நோக்கியே என்னால் எழுப்பப்படுகிற கேள்வியினால் சிதைவுறும் என் பிம்பத்தை நேர் செய்யும் விதமாகத் தலையணையின் மீதாகத் தலையை இடவலமாகப் பலமாக ஆட்டிக் கொள்கிறேன்.

ஒவ்வொரு நாளுமே என்னை அழைப்பது யாராக இருக்கும் என்கிற கேள்வியும் அதனை அறிவதற்கான ஆர்வமும் என்னை எத்தனை துன்புறுத்தியிருக்கிறது? இன்றோ யார் என்கிற கேள்வியோடு இன்னும் வரவில்லை என்கிற வருத்தமும் தானே சேர்ந்திருக்கிறது. நினைக்க நினைக்கக் குழப்பம் மட்டும் மிச்சமாகப் படுக்கையிýருந்து எழுந்து அமர்கிறேன். வெற்று வயிறோடு இருப்பதுதான் இப்படித் தூக்கம் வராமல் சித்ரவதை செய்கிறது என யோசித்தவள், கட்டிலைவிட்டு எழுந்து தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்று சொம்பிýருந்த தண்ணீரை எடுத்து வேகவேகமாகக் குடிக்கிறேன்.

பசியினாலும் தாகத்தினாலும் ஒடுங்கிக் கிடந்த வயிற்றில் தண்ணீர் விழுந்த மறு நிமிடமே வýயுண்டாக, அடி வயிற்றைப் பிடித்தபடியே மறுபடியும் வந்து படுக்கையில் சரிகிறவளுக்கு, வழக்க மாக வரும் தொலை பேசி அழைப்பில் ஒரே ஒருமுறை தான் கேட்க நேர்ந்த பெண்ணின் குரல் நினைவிலாட, அன்று நிகழ்ந்த விஷயத்தை நினைவூட்டிக் கொள்வதன் வழியே, இந்த நாளின் இறுக்கத்தைச் சற்றேனும் தளர்த்திக்கொள்ள முடியும் என்கிற எண்ணம் உண்டாகிறது. அவள் தான் அன்று எத்தனை அற்புதமாகப் பாடினாள்! ரிஸீவரை எடுத்ததுமே என் காதில் விழுந்த பாடýன் வரிகள் அரை குறை விழிப்பில் புரியாத தடுமாற்றத்தை உண்டாக்குவதாயிருக்கிறது. ஒரு சில நொடியில் நிதானத்திற்கு வந்த பிறகே அது ஒரு மலையாளப் பாடல் என்பதும் கொஞ்சிக் குழையும் அக்குரýýருந்தே அது ஒரு காதல் பாடல் என்பதையும் என்னால் கணிக்க முடிகிறது. பாடலுக்கு இடையிடையே அவள் யாரையோ முத்தமிடுவதும் பிறகு பாடலைத் தொடர்வதுமாக சுவாரஸ்யம் கொள்கிறது அத்தருணம். அவளது குரலின் வசீகரம் மயக்க மூட்டுவதாய் இருக்க, அதனை ரசித்தபடியே தொடர்ந்து கவனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறேன், என் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அக்குரலைக் கேட்டிருக்கிறோமா என்கிற தீவிர யோசனையோடு.

முழுப்பாடலையும் பாடி முடித்தவள், "உஸ். கிள்ளாதீங்க வலிக்குது" எனச் சிணுங்குகிறாள். என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது புரிய, குழப் பத்திலும், பயத்திலும் நா வறண்டு போகிறது என்றாலும் அக்குரýன் வழியே எனக் குள்ளாக உருக்கொள்ளும் கூடýன் சித்திரம் அந்நேரத்தை சுவாரஸ்யம் மிக்கதாய் மாற்றுகிறது. அவள் மறுபடி ""ச்சீ போங்க"" எனச் செல்லமாய்க் கொஞ்சுகிறாள். பிறகு மலையாளத்தில் ஒரு வார்த்தை சொல்கிறாள். முத்தமிடுகிறாள். மறுபடியும் பாடத் துவங்குகிறாள். இம்முறை தமிழ் சினிமாவின் காதல் பாடல். நான் எத்தனையோ முறை அப்பாடலை ரேடியோவில் கேட்டிருந்தாலும், இன்று அவளது குரýல் அப்பாடல் அற்புதம் கொள்கிறது. காதýல் இன்புற்றிருக்கும் அக்குரýல் நனைந்திருக்கும் காதல் உணர்வு கூச்சத்தை உண்டுபண்ணக் கூடியதாயிருந்தாலும் ரசிக்கக் கூடியதாய் இருக்கிறது.

ஒரு சில நிமிடங்களிலேயே என்ன நடக்கிறது, இங்கே நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்கிற கேள்வி திடுமென எழ, அவமானத்தினால் குலுங்குகிறது உடல். யாருடைய படுக்கை அறைக்குள்ளோ தான் ஒளிந்துகொண்டுவிட்டதான அருவெறுப்பும், என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதும் இப்படி நடப்பதற்கான காரணமும் சட்டென உறைக்க, ஆத்திரமாக ரிஸீவரை வைக்கிறேன். என் நம்பரைக் கூப்பிட்டு படுக்கையினருகாக வைத்திருப்பவனது எண்ணத்தை, இத்தனை நேரமாகக் கேட்டுக்கொண்டிருந்ததன் வழியாக நான் பூர்த்தி செய்திருக்கிறேன் என்பது புரிய, ஆத்திரத்தில் பொங்கிப் பொங்கி எழுகிறது உடல்.

அவன்தான் அப்பெண்ணுக்கு எத்தனை பெரிய நம்பிக்கை துரோகத்தினைச் செய்திருக்கிறான். அவளை நினைத்துப் பரிதாபம்கொண்டாலும் ஒரு குற்றவுணர்வுமின்றி இத்தனை நேரமாக அவளது அந்தரங்க உணர்வுகளைக் கேட்டுக்கொண்டிருந்தது மட்டும் எவ்வகையில் நியாயமாயிருக்க முடியும்? அவன் அவளுக்குச் செய்ததற்கு எந்த விதத்திலும் குறைவானதில்லையே நான் செய்தது.

அதன் பிறகு எஞ்சிய இரவு நெடுக அப்பெண்ணின் குரல் என்னைச் சுற்றியே ஓடிக்கொண்டிருக்க, தூக்கம் எங்கோ ஓடி மறைந்தேவிடுகிறது.

நினைவுகளின் சுமையிýருந்து விடுபட்டவளாகப் படுக்கையில் அமர்ந்திருக்கிறேன். மனமும் உடலும் ஒருசேர அயர்ச்சிக்குள்ளாக, இருளையே வெறிக்கிறேன். உடனேயே தூங்க முடியாவிட்டால் பைத்தியமே பிடித்துவிடக்கூடுமென்கிற அச்சம் உண்டாக, ஒன்று இரண்டு மூன்று என மனதிற்குள்ளாக எண்ண ஆரம்பிக்கிறேன். இதுவரை எங்கோ ஒளிந்திருந்து போக்குக் காட்டியபடியிருந்த தூக்கம் ஒரு பறவையின் சிறகென என் மீதாகப் படர்ந்து என்னை அரவணைத்துக் கொள்கிற அற்புதம் நிகழாதா என்கிற ஆதங்கத்துடனே தொடர்கிறது எனது எண்ணிக்கை.

ஒரு பொழுது இத்தனை வெறுமையோடு விடியுமா என்பது போலத் தொடங்குகிறது இந்த அதிகாலை. அடி வயிற்றில் தசைகள் இறுக்கிப் பிடித்து வýப்பதை உணர்கிறேன். வறட்டுப் பிடிவாதத்தினாலும் குற்ற உணர்வினாலும் பட்டினி கிடந்ததன் விளைவைப் பற்களை இறுகக் கடித்து எதிர்கொள்கிறேன். சக்கையைப் போலப் படுக்கையின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடக்கிற உடல், எத்தனையோ ஆண்டுகளாக நோயுற்றுக் கிடப்பது போன்ற பலவீனத்தை அடைந்திருக்கிறது. என்னால் படுக்கையிýருந்து எழுந்துகொள்ள முடியுமா என்கிற பயம் பிடித்தாட்ட நான் இத்தனை தூரம் தன்னைத்தானே தண்டித்துக்கொள்வதன் முட்டாள்தனம் புரிய வெகுவான சிரமத்துடனேயே எழுந்துகொள்ள முடிகிறது.

அவ்வீட்டின் முன்பாகப் போடப்பட்டிருக்கிற பிரமாண்டமான பந்தல் அவனது மரணத்தை உறுதி செய்வதாய் இருக்க, எனக்குள்ளாக உருக்கொள்கிற பீதியையும் நடுக்கத்தையும் மறைக்க முயன்றவளாக வீட்டினுள்ளே நுழைபவளைப் பல்வேறு விதமான குரல்களுடனேயே அரவணைக்கிறது வீடு. வீடு முழுக்க நிரம்பியிருக்கிற மனிதக் கூட்டத்தினால் அது தன் சவக்களையை முற்றிலுமாக இழந்துவிட்டிருக்கிறது. மண வீட்டிற்கும் மரண வீட்டிற்குமிடையிலான இடை வெளியைக் காற்றில் மிதந்து வருகிற சுவையான உணவின் மணம் இட்டு நிரப்ப, சிறிது நேரக் குழப்பத்திற்கு ஆட்படுகிறேன்.

ஹாýன் ஒரு மூலையில் அமர்ந்திருக்கும் அவனுடைய தாய் தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும் மற்ற பெண்களிடம் தன் மகனைப் பற்றிய நினைவுகளைக் கதைகளாகச் சொல்ýக் கொண்டிருக்கிறாள். இடையிடையே தனக்கு அருகாக இருக்கும் எச்சில் பணிக்கத்தை எடுத்து, தான் மென்று கொண்டிருக்கும் வெற்றிலை எச்சிலைச் சாவகாசமாகத் துப்பியபடி இருக்கிறாள். நான் யாராலும் கவனிக்கப்படாதது எனக்குப் பெரிய நிம்மதியைத் தருவதாக இருக்க, ஹாýன் வடக்குப்புறமாக எனக்கெதிராக இருக்கும் அறையை நோக்கி அவசரமாகவே நடக்கிறேன். அறையை மறைத்தபடி தொங்கும் பச்சை நிறத் திரைத்துணியை விலக்கி உள்நுழையும் தருணத்தில் அவனுடைய மனைவிக்கு ஆறுதல் சொல்லக்கூடிய நிலைக்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டேனா என்கிற கேள்வி எழுந்து அடங்க, திரைத் துணியை விலக்கி அறைக் குள்ளாக நுழைகிறேன்.

பாதத்தில் சற்று முன் கழுவிவிடப்பட்ட தரையின் ஈரமும் குளிர்ச்சியும் தட்டுப்படுகின்றன. வெளி வெளிச்சம் வராமல் அடைக்கப்பட்ட அறை விடிவிளக்கின் ஒளியினால் ஒளியூட்டப்பட்டதாயிருக்கிறது. அறை ரொம்பவும் சிறியதாக இருப்பது மூச்சு முட்டுவது போýருக்கிறது. சமீபத்தில் கட்டிய வீடு என்றாலும் இத்தனை பெரிய வீட்டில் இவ்வளவு சிறியதாகவா அறையிருக்கும் என யோசித்தபடி அப் பெண்ணை நோக்கிச் செல்கிறேன். தரையின்மீது விரிக்கப்பட்டிருக்கிற பிளாஸ்டிக் பாயின் மீது தலைகுனிந்தபடி அமர்ந்திருக்கிறாள் அவள். அவள் அமர்ந்திருக்கும் தோரணை யாரையோ எதிர்பார்த்திருப்பதைப் போýருக்கிறது. அறை நடுவே இருக்கும் தொட்டிýல் கிடக்கிறது குழந்தை. அவளருகே அமரும் முன்பாக அக்குழந்தையை ஒருமுறை பார்க்கலாமா என ஓர் அடி தொட்டிலை நோக்கி எடுத்துவைத்தவள் மனம் சகிக்காமல், நின்றுகொள்கிறேன். குழந்தையின் முகத்தைப் பார்த்ததும் துக்கத்தின் அழுத்தம் தாளாமல் கதறி விடுவோமோ என்கிற பயம் பிடித்துக்கொள்ள, அவ்வெண்ணத்தைக் கைவிட்டு அவளை நோக்கி நடந்து அவளருகே அமர்கிறேன்.

வந்திருப்பது யார் என அறியும் பொருட்டுத் தலைநிமிர்ந்து ஒரு நொடி என்னைப் பார்த்தவள் மறுபடியும் தலையைக் குனிந்துகொள்கிறாள். அந்த ஒரு நொடியிலேயே நான் வந்திருப்பது குறித்த திருப்தியை அவள் முகம் காட்டிவிடுவதைக் கவனிக்க முடிகிறது. இருவருக்குமிடையே நீடிக்கிற மெüனத்தைக் கலைக்கும் வழியறியாது அவள் முகத்தை உற்றுக் கவனிக்கிறேன். இருபது வயதிருக்குமா? நிச்சயமாக அதற்கும் குறைவாகத்தானிருக்கும் என்கிற முடிவுக்கு வருகிறேன்.

ரத்தமேயில்லாததுபோல வெளுத்துக் கிடக்கிறது அவளது முகம். நகைகளில்லாமல் மொட்டையாகக் கிடக்கும் கைகளும் காதும் மூக்கும் கழுத்தும் எனது அதிகபட்ச மனத் தைரியத்தை உறுதி செய்வதாயிருக்கின்றன. தலை முடியை வெளித்தெரியாதபடிக்கு முக்காடிட்டு மறைத்துப் புடவையைக் காதுகளுக்குப் பின்புறமாக ஒதுக்கியிருக்கிறாள். அது மேலும் அவளை விகாரப்படுத்துவதாகயிருக்கிறது. கைக்கு அடக்கமான சின்னஞ்சிறிய வட்டமான முகத்தின்மீது படுகிற என் பார்வை நழுவி நழுவிச் சரிய, அதனை மறுபடியும் நகர்த்தி அம்முகத்தின் மீதே பதியவைக்கத் தீவிரமாகவே முயன்றுதோற்கிறேன். அவளது கழுத்துக்குக் கீழே நிலைக்கும் என் பார்வையில்படுகின்றன தாய்மையினால் ததும்பும் கனத்த மார்பகங்களும் அதனை மறைக்க முயன்று தோற்கும் புடவையும். நிறமில்லாத புடவையின் மீது மார்பிýருந்து கசிந்த பாýன் கறை திட்டுத் திட்டாய்த் தேங்கியிருக்க அந்தப் பகுதியே விறைப்புத்தன்மையோடிருக்கிறது. இத்தனை நேரமில்லாமல் திடீரென எனது நாசியில் வந்து மோதுகிற பால் கவிச்சி காற்றில்லாத அறையின் உள்ளே அடைந்திருக்கும் மக்கிய வாடையோடு சேர்ந்து குடலைப் புரட்டுகிறது. அவள் இருக்கிற நிலையில் நான் அருவெறுப்புணர்வினை அடைவதன் நியாயமின்மையை மனத்தில் இருத்தி, குமட்டýன் வேகத்தை உள்ளுக்குள்ளேயே அடக்குகிறேன்.

என்னைப் போலவே அவளும் என்னையே கவனித்துக்கொண்டிருக்கிறாள். பேசவியலாதபடி மெüனத்திருக்கும் எனது நிலைக்கு இரங்குவது போýருக்கிறது அவளது பார்வை. மேலும் சற்று நேர அமைதிக்குப் பிறகு மெýதாக உதடு பிரியாமல் சிரித்து, ""இப்பதான் வர்றீங்களா"" என்கிறாள்.

அவளது இயல்பான சிரிப்பு எனது பதிலைத் தாமதப்படுத்துவதாயிருக்க, ""உம் இப்பதான், நேர உள்ளேயே வந்திட்டேன்"" என்கிறேன்.

""பாருங்க எங்க கதிய. எப்புடி நிர்க்கதியா நிக்கிறோம்னு"" கலக்கமின்றிக் கணீரென ஒýக்கிறது குரல். ""போதாக் குறைக்கு இந்தக் கிழடுக கிட்ட வேற மாரடிக்கணும், நான் பாட்டுக்கு நிம் மதியா இருந்தேன், நஸீபு இங்கெ இழுத்துப் போட்டிருச்சு.""

சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் அவளே, ""பாத்திங்களா அந்தப் பொம்பளை வெத்திலை போடுற அழகையும் பேச்சழகையும். வெனை காரி, துளியாச்சும் கலங்கியிருக்காளா பாருங்க. அவ சதையில மண்ணு விழுக."" கைவிரல்களை ஓன்று சேர்த்து நெட்டி முறித்தவள், ""எம் புருஷனுக்கே இந்தப் பொம்பளைன்னா ஆகாது. நான் என் புருஷன்கூடப் போய்க் குடித்தனம் பண்றது சகிக்காம, எதுக்குடா அவளை டவுண்ல கொண்டுபோய்க் குடித்தனம் வைக்கிற தண்டமா வீட்டு வாடகை குடுத்து. இங்கெ இவ்ளோ பெரிய வீடு சும்மா கிடக்குது விட்டுட்டுப் போ, எனக்கும் துணையா இருக்கும். வாரத்துல ஒரு நாளக்கி வந்துட்டுப் போவேயில்ல. ஊரு ஓலகத்துலப் பொண்டாட்டி புள்ளைய விட்டுட்டு சவுதியில போயி இருக்கறது இல்லன்னு எப்பொப் பாரு பொருமல். இப்ப ஒரேயடியா இங்கெயே வந்துட்டேன் இல்ல, இனிமேயாவது சந்தோஷமா இருக்கட்டும்"" மிகமிக அழுத்தமாக ஒýக்கிறது அவளது குரல்.

இத்தனை நேரமாக மிகுந்த பரிதாபத்துடன் கேட்டுக்கொண்டிருந்த என்னைத் திடுமென ஒருவிதமான பயம் பிடித்துக்கொள்ள வேறு எவரேனும் அறைக்குள் வந்துவிடுவார்களோ என்கிற பதற்றத்துடன் தலையைத் திருப்பி எனக்குப் பின் புறமாகப் பார்வையை அலையவிடுகிறேன். என் பார்வையில் தெரியும் ஜாக்கிரதை உணர்வையோ எனது தர்ம சங்கடமான நிலையையோ அவள் சிறிதேனும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற பாவனையை முகத்தில் இறுத்தியவளாக அவளை மறுபடியும் நிமிர்ந்து பார்க்கிறேன்.

அவளுக்கு எனது நிலை குறித்த கவனம் கொஞ்சமும் வாய்த்ததாகவே தெரியவில்லை என்பதைத் தொடர்கிற அவளது பேச்சு ஊர்ஜிதம் செய்வதாகவே இருக்கிறது.

""இப்ப நீங்களே இருக்கீங்க, யாரோ ஒரு மூணாவது ஆளு, உங்களுக்கு அவரு மேல எம்புட்டுப் பிரியம், அதுகூட இந்தப் பொம்பளக்கி அவரு மேல கிடையாது தெரியுமா? பணத்துக்காக எம்புள்ள எம்புள்ளன்னு ஒறவு கொண்டாடுனாச் சரியாப் போச்சா? ஒங்கள மாதிரித் தான் எம் புருஷனும். நீங்கன்னா ஒரு பிரியம். ஒங்களுக்கு ஞாபகமிருக்கா, எனக்குக் குழந்தை பிறந்ததும் எங்க வீட்டுக்கு வர்றதா சொல்ýயிருந்தீங்களே.""

எனது ஆமோதிப்புக்கெனப் பேச்சை நிறுத்துபவளிடம் ஒன்றும் புரியாத குழப்பத்துடன், ""ஆமாமாம் சொல்ýயிருந்தேன்"", என்கிறேன்.

""அவருக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா, சொன்னா நீங்க நம்பக்கூட மாட்டீங்க. அக்கா வரப்போறாங்கன்னு ஒரே சந்தோஷம். அக்காவுக்குத் தங்குறதுக்கு இந்தச் சின்ன வீடு வசதிப்படாது. பெரிய வீடா பார்த்துக் குடி போகணும்னு உடனே வீடு மாத்தினார். ஒரு நாள் வந்து தங்கறதுக்கு, எதுக்குங்க இந்த ஆடம்பரம், ஏற்கனவே உங்க அம்மாகிட்ட பேச்சு வாங்கிக்கிட்டு இருக்கறப்போன்னு நானும் எவ்வளவோ தடுத்தேன். கேட்டாதான? அதோட மறுநாளே காரை வாங்கி நிறுத்திட்டாரே மனுஷன்! பக்கத்து ஊர்ல இருக்கற தர்காவுக்கெல்லாம் உங்களக் கூட்டிப்போயிக் காட்டறதுக்காம் என்னுடைய நம்பிக்கையைப் பெறுகிற உத்வேகத்துடன் ஆர்வமாகச் சொல்ý நிறுத்தியவள், கடைசியில, "சாகிறதுக்குன்னுன்னு அந்த காரை வாங்கினாப்புல ஆயிருச்சு"" என வருத்தத்துடன் முடிக்கிறவளின் முகம் விரக்தியினால் சுண்டிப்போய்க் கிடக்கிறது.

எனக்குள் இன்னும்கூட என்ன செய்வதென்கிறக் குழப்பம் நீடிக்கிறது. ஏதோ ஒருவிதத்தில் எனது பேரில் தனக்கும் தன் கணவனுக்கும் உள்ள அதீதப் பிரியத்தைச் சொல்ýவிட முடிந்ததில் உண்டான நிம்மதியோடு சுவற்றில் சாய்ந்து அமர்ந்துகொள்கிற அவளிடம் தனக்கு ஆதரவான ஒரு நிலையை என்னிடத்தில் கோரும் தன்மையிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கென்னவோ, இது வரைக்குமில்லாதபடியான கருணை அவன் பேரில் ஊற்றெடுக்க, என்ன அற்பமான மனிதர்கள் என சýப்புண்டாகிறது. இங்கு வருவதற்கு முன்பிருந்த மனநிலைக்கும் இப்போதைய மன நிலைக்குமிடையேயான மாற்றத்தினை யோசிக்கிற எனக்கு அங்கிருந்து சென்றுவிட வேண்டுமென்கிற ஆவல் மிகுந்துகொண்டிருக்கிறது. எனது இருப்புக்கொள்ளவியலாத மனநிலையை அவள் அறிந்துகொண்டு விடக்கூடாதென்கிற கவனமுடனும் மூன்றாவது நபரான என்னிடம் அவள் வேண்டி நிற்கும் ஆதரவு எப்படிப்பட்டதாக இருக்க முடியும் என்கிற யோசனையுடனும் அமர்ந்திருக்கிறேன். எத்தனை நிராதரவான ஒரு நிலையிýருந்து இந்த வேண்டுகோள் வரக்கூடும் என்கிற அதிர்ச்சி மட்டுமே எஞ்சியிருக்கிறது.

அவளைத் தைரியப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தோடும் அவளது தொடர்ச்சியான பேச்சின் மீது குறுக்கீடொன்றை நிகழ்த்திவிட்டு அவ்விடத்திýருந்து தப்பிச் சென்றுவிட வேண்டுமென்கிற நிர்ப்பந்தத்துடனும், ""சரி நடந்தது நடந்து போச்சு. உன் குழந்தைக்காகவாவது நீ தைரியமா யிருக்கணும். நாங்கல்லாம் உனக்கு இல்லெ"" அவளது மெýந்த கையைப் பற்றியபடி ஆறுதல் சொல்கிற எனக்கே, அவ்வார்த்தைகள் ஒப்புக்குச் சொல்லப்படுவதாகவே இருக்கின்றன.

நான் சொல்கிற ஆறுதல் வார்த்தைகளில் உணரும் பாதுகாப்பை அனுப வித்தவளாகத் தனது கையை எனது கைக்குள்ளாக, மேலும் அழுத்தமாகவே பிணைத்துக் கொள்கிறாள்.

""எனக்குத் தாய் தகப்பன் இல்லாத குறையை நீங்கதான் போக்கணும்."" தனக்குள்ளாகச் சத்தமின்றி அழுகிறாள். ""ப்ச், சும்மாயிருங்கறேன் இல்லெ"" அவளது உள்ளங்கையை அழுத்திச் சமாதானம் செய்கிறேன்.

""அந்தக் காருதான் வெனையா இருந்துச்சு அந்த மனுஷனுக்கு. மலையாளி முண்டை தேவுடியா என்னா மருந்து போட்டாளோ அவ வீடே கெதியா கிடந்து, கடைசியில ஒரேயடியா போய்ச் சேர்ந்துட்டாரு. அவ வீட்டுக்குப் போறப்போதான ஆக்ஸிடெண்ட் ஆச்சு"" அழுகையினூடே ஆத்திரம் கொப்பளித்து வெடிக்க, சுர்ரென மூக்கை உறிஞ்சி எச்சிலைக் கூட்டிப் புளிச்செனப் பக்க வாட்டுச் சுவற்றின் மீது துப்புகிறாள்.

"மலையாளி!" எனக்குப் பொட்டில் அடித்தாற் போýருக்கிறது. அதற்கு மேல் எனக்குத் தெரிய வேண்டியது எதுவுமேயில்லாமல் போக, அதிர்ச்சியில் துடிக்கும் இதயத்தைக் கட்டுப்படுத்தும் வழியறியாது மார்பின் மீது கைவைத்து அழுத்திக்கொள்கிறேன். இந்த நிமிடத்தில் எனக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்கிற பயம் பிடித்துக்கொள்ள அப்படியே அசையாமல் அமர்ந்திருக்கிறேன்.

அதன் பிறகு எப்படி அவளது கையிýருந்து என்னுடைய கையை விடுவித்துக்கொண்டேன் என்பதோ வீடெங்கும் நிறைகிற பாத்திஹாவின் சப்தங்களோ சாம்பிராணி மணமோ எதுவுமே நினைவில் பதியாமல் கடந்துகொண்டிருக்க முதல் நாளைப் போன்றே நடுக்கமுறும் பாதங்களை வீட்டை நோக்கி நகர்த்திச் செல்கிறேன்.

எனக்குத் தெரியவில்லை அவனைப் பற்றிய நினைவுகளை இனி வெறுப்புடன் என்னால் ஸ்பரிசிக்க முடியுமா என. அவன்மீதான எனது பிரியத்தின் அளவு இனி வற்றிப்போகுமா என அவனது மரணம் குறித்த துக்கம் எனக்குள் இனி உலர்ந்தேவிடுமா என . . .

வீட்டில் நேற்றுப் பாதி இரவில் ஒலிக்காத தொலைபேசி அமைதியாக என்னை எதிர்கொள்ள, இனி ஒரு நாளும் குரலில்லாத அந்த அழைப்பு வரப்போவதில்லை என்பது உறுதியாக ஏனோ எனக்குள்ளாகப் பெருகுகிறது அழுவதற்கான வேட்கை.

Quelle -Kalachchuvad

Monday, April 17, 2017

*குற்றமும் தண்டனையும்!*



*ஆசிரியர் பணிதான் இருப்பதிலேயே கொஞ்சம் சிரமமான பணி என்பது எமது கருத்து.*
*வளரும் தலைமுறையை வார்த்தெடுக்கும் பொறுப்பு என்பது சாதாரணமல்ல..! அதற்குப் பொறுமையும் நிதானமும் அவசியம்.*
*ஓர்ஆசிரியர் மாட்டிக்கொள்வதைப் போன்று வேறு எவரும் மாட்டமாட்டார்கள். "கற்ற கல்வியைவைத்து என்ன செய்தாய்?” என்ற கேள்விக்கு பதில் கூறாமல் ஓர் அடிகூட நகரமுடியாது என்பதை நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் நடுங்குகிறது.*
*ஃபிலிபோஸ் மார் கிரிசோஸ்டம் என்பவர் தமது சுயசரிதை நூலில் குற்றமும் தண்டனையும் எனும் பகுதியில் (மலையாளம்) மூன்றாம் வகுப்பில் நடைபெற்ற நிகழ்வு குறித்து கூறுகின்றார்:*
*அது ஒரு தேர்வு நேரம். வகுப்பில் மாதாந்திரத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. தேர்வு எழுதிக்கொண்டிருந்த ஒரு மாணவன் காப்பி அடித்துக்கொண்டிருந்தான். வகுப்பாசிரியர் டி.பி. தோமஸ் மாஸ்டர் அதைக் கவனிக்கவில்லை.*
*ஆயினும் திடீரென அங்கே வந்த தலைமை ஆசிரியர் அந்த மாணவனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார். உடனடியாக அவனுக்குத் தண்டனையும் அறிவித்தார். தண்டனை என்ன தெரியுமா..? பள்ளிக்கூட அசெம்ப்லி ஒன்றுகூட்டப்பட்டு அனைவர் முன்னிலையிலும் குச்சியால் கையில் ஆறு அடி அடிப்பதுதான் அன்றைய பெரும் தண்டனை. அசெம்ப்லி கூட்டப்பட்டது.*
*ஆனால் இந்த முடிவை தோமஸ் மாஸ்டர் பலமாக எதிர்த்தார். "அவன் தவறு செய்தமைக்குக் காரணம் நான்தான். ஆகவே எனக்கே அந்தத் தண்டனையைத் தாருங்கள். எனது பணியையும் கற்பித்தலையும் நான் சரியாகச் செய்திருந்தால் இந்த மாணவன் காப்பி அடித்திருக்க மாட்டான். ஆகவே அவனுக்குக் கொடுக்க வேண்டிய தண்டனையை எனக்கே தாருங்கள்” என்று அனைவர் முன்னிலையிலும் ஆசிரியர் கூறவும் ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் திகைத்தது.*
*தலைமை ஆசிரியரோ தோமஸ் மாஸ்டரை கண்ணியத்துடன் பார்த்தலும் மாணவனுக்குத் தண்டனைக் கொடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. தோமஸ் மாஸ்டரும் விடவில்லை. இறுதியில் ஆசிரியரின் நிர்ப்பந்தத்திற்கு தலைமை ஆசிரியர் அரைமனதுடன் சம்மதித்தார்.*
*அந்த மாணவனை சுட்டிக்காட்டியவாறு தலைமை ஆசிரியர் ஏனைய மாணவர்களிடம் கூறினார்: "இவன் செய்த தவறுக்காக இப்போது இந்த ஆசிரியர் தண்டிக்கப்படுகிறார்”.*
*உடனே தாமஸ் மாஸ்டர் கூறினார்: "இல்லை.. இல்லை.. இவன் செய்த தவறுக்காக அல்ல... நான் செய்த தவறுக்காக என்னைத் தண்டியுங்கள். எனது பணியை நான் சரியாக செய்திருந்தால் இவன் காப்பியடித்திருக்க மாட்டானே” என்று கூறியவாறு அனைத்து மாணவர் முன்னிலையிலும் கை நீட்டியவாறு அந்த ஆசிரியர் நின்றார்.*
*தலைமை ஆசிரியர் அவருடைய கையில் ஓர் அடி கொடுத்தார். பள்ளிக்கூடமே திகைத்தது மாணவர்கள் நடுங்கினர். அந்த ஓர் அடியில் ஒட்டுமொத்த மாணவர்களும் அழுதனர். உடனே அந்த மாணவன் அழுதவண்ணம் தலைமை ஆசிரியர் முன்னால் முட்டுக்குத்தி நின்றவாறு, "இனியும் ஆசிரியரை அடிக்க வேண்டாம்..” என்று கெஞ்சினான்.*
*பின்னர் தோமஸ் மாஸ்டரின் காலைக் கட்டிக்கொண்டு கதறினான்: "நான் செய்தது தவறுதான். நான் செய்த தவறுக்கு நீங்கள் தண்டனை பெறுவதைக் காண எனக்கு சக்தி இல்லை. தோற்றாலும் சரியே இனி ஒருபோதும் நான் காப்பி அடிக்க மாட்டேன் மாஸ்டர்..!”*
*இந்தக் காட்சியைக் கண்ட ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் கண்ணீர் விட்டது. குற்றத்தைக் குறித்தும் அதற்கான தண்டனை குறித்தும் ஓர் புதிய பாடத்தை அன்றுதான் பள்ளிக்கூடமே கற்றுக்கொண்டது. அறிவும் அனுபவமும் ஒருங்கே பெற்ற ஒரு நிகழ்வு இது.*

Friday, October 7, 2016

தேடல்



        இரண்டு கதைகளை இங்கே போட்டிருக்கிறேன். 
முதல் கதை சீனாவில் வழங்கும் கதை. அங்கு நிலவிய தாஓஇஸம் என்னும் சமயத்தில் காணப் படுவது.
இரண்டாவது கதை இந்தியக் கதை. உபநிஷதத்தில் காணப்படும்.

முதல் கதையைப் படித்துவிட்டு, அடுத்த கதையை அடுத்தாற்போல் உடனே படித்து விடுங்கள்.
ஒற்றுமை தெரியும்.


முதற்கதை -


Taoism என்றொரு சமயம் இருக்கிறது. சீனாவில். லாவோட்ஸ என்பவரால் தோற்றுவிக்கப் பட்டது என்பார்கள். மிகவும் பழமையான சமயம். 

தாஓயியர்களிடையே வழங்கும் ஒரு கதை. 
இதை ஏற்கனவே அகத்தியத்தில் போட்டு, இறுதியில் ஒரு கேள்வியையும் கேட்டிருந்தேன். 
யாருமே இன்றுவரை பதில் சொல்லவில்லை.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


ஒரு சன்னியாசி காட்டில் ஒரு கல்லைக் கண்டெடுத்தார். 
அதை அவருடைய தொங்கு மூட்டையில் வைத்துக்கொண்டு வந்தார். ஓர் ஊரை ஒட்டிய பெரிய மரத்தடியில் இருந்த கல்மேடையில் தம்முடைய மூட்டையை வைத்துக்கொண்டு படுத்திருந்தார். 


அப்போது ஒருவன் வேகமாக ஓடிவந்தான். 


அவன் அந்த சன்னியாசியைக் குலுக்கி எழுப்பி, "எங்கே அந்தக் கல்? அந்த அரிய கல் எங்கே? அதை கொடு" என்றான்.
"என்ன கல்?" என்று சன்னியாசி கேட்டார். 
நேற்று இரவு நிதிக் கடவுள் என் கனவில் வந்தார். அவர் " இந்த ஊருக்கு வெளியில் தங்கியிருக்கும் சன்னியாசியிடம் ஒரு கல் இருக்கும். அது உன்னை மிகப் பெரிய செல்வந்தனாக ஆக்கும்", என்று என்னிடம் சொன்னார், 

    சன்னியாசி தம்முடைய மூட்டைக்குள் குடைந்து அந்தக் கல்லை எடுத்தார். 


"நான் இந்தக் கல்லைத்தான் காட்டில் கண்டெடுத்தேன். விசித்திரமான கல். ஆகவே கையில் எடுத்துக்கொண்டு வந்தேன். இந்தா. உனக்கு வேண்டுமென்றால் எடுத்துக்கொள்," என்று சொல்லிவிட்டு அந்தக் கல்லை அவனிடம் கொடுத்துவிட்டு, கொட்டாவி விட்டுக்கொண்டே மீண்டும் மூட்டையைத் தலைக்கு வைத்துக்கொண்டு படுத்து, மறுபுறம் திரும்பிக் கொண்டு முழங்கால்களை மடக்கிக்கொண்டு, நிம்மதியாகத் தூங்கலானார். 


அந்த மனிதன் தன் கையிலிருந்த கல்லை மிகவும் வியப்புடன் பார்த்தான். 

அவனுடைய உள்ளங்கையை நிரப்பிக்கொண்டு அந்தக் கல் இருந்தது. 
உலகிலேயே மிகப் பெரிய வைரக்கல்!


வீட்டுக்குத் திரும்பினான். 
தூக்கமே வரவில்லை.
இப்படியும் அப்படியுமாகப் புரண்டுகொண்டேயிருந்தான். ஒரே குழப்பம். சிந்தனை. 
        
விடிந்தவுடன் வேகமாக அந்த மரத்தடிக்குச் சென்றான். சன்னியாசி இன்னும் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார். 


அவரைக் குலுக்கி எழுப்பிச் சொன்னான், 


  "இந்த மகத்தான விலை மதிப்பில்லாத உயர்ந்த வைரத்தை, கூழாங்கல்லை எறிவதுபோல சர்வசாதாரணமாக எறியச் செய்த மிகப்பெரும் அரிய செல்வம் எதையோ நீ வைத்திருக்கிறாய். 
அதை எனக்குத் தா!"

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


இந்தக் கதையைப் போல பிருஹதாரண்யக உபநிஷதத்தில் ஒரு சம்பவத்தைக் காணலாம். 


யக்ஞவல்கியர் என்னும் ரிஷிக்குக் காத்யாயனி என்பவர் மனைவி. இவர் சாதாரணமான பெண்களுக்கு உரிய கடமைகளை மேற்கொண்டு குடும்பத்தை நடத்தினார். 
மைத்ரேயி என்ற இளம்பெண் ஒருநாள் காத்யாயனியிடம் வந்தார்.
யக்ஞவல்கியரோடு உடன் இருந்து ஞானத்தைக் கற்றுக்கொள்ள அனுமதி கேட்டார். 
காத்யாயனியின் அனுமதியின் பேரில் யக்ஞவல்கியருடைய மாணவியாகவும் மனைவியாகவும் உடன் இருந்தார் மைத்ரேயி.
சில காலம் கழித்து யக்ஞவல்கியர் தம் மனைவியரை அழைத்து, தாம் பூரண துறவறம் பூண வேண்டியிருப்பதால் குடும்பத்தை விட்டு விட்டுப் போகப்போவதாகக் கூறினார். 
அதற்கு முன்னதாக தம்முடைய பசுக்கள், சொத்துக்கள் ஆகியவற்றை மனைவியரிடம் கொடுத்தார். 
காத்யாயனியின் பங்குக்குக் கிடைத்தவற்றை அவர் வாங்கிக்கொண்டார்.


ஆனால் மைத்ரேயி அவ்வாறு செய்யவில்லை. 
யக்ஞவல்கியரைக் கேட்டார்.
"ரிஷிகளில் எவ்வளவோ செல்வம் படைத்தவர் நீவிர். இவ்வளவையும் க்ஷணப்பொழுதில் உதறித் தள்ளிவிட்டுப் போகிறீர். அப்படியானால் இவையெல்லாவற்றையும் விட மிகப் பெரிய அரிதான விஷயம் இருக்கிறது. சொல்லுங்கள். உலகில் பரப்பிவைக்கப்பட்ட அனைத்து செல்வங்களும் இறவாத்தன்மையை நல்குமா?" 
யக்ஞவல்கியர், "அவை கொடுக்கமாட்டா. நீ அதிக செல்வம் படைத்தவளாக இருப்பாய். அவ்வளவுதான். அவை அனைத்துமே உனக்கு இறவாத்தன்மையைக் கொடுக்கமாட்டா", என்றார். 
"அப்படியானால் நீவிர் இவற்றையெல்லாம் துச்சமாக மதித்து, விட்டு விட்டு எதை நாடிப்போகிறீரோ, அதை எனக்குக் கொடும்", என்று பிடிவாதமாச் சொல்லிவிட்டு, அவருடன் புறப்பட்டார். 
பின்னர் யக்ஞவல்கியர் மைத்ரேயியிடம் "நீ எப்போதுமே என் அன்புக்கு உரியவள். இப்போது இந்தக் கேள்வியால் இன்னும் எனக்குப் பிரியமானவள் ஆகிவிட்டாய். வா..., இப்படி அமர். நான் உனக்கு அதைச் சொல்கிறேன். அதை நீ கேட்டுக்கொண்டவுடன் அதை நீ தியானம் செய்", என்றார்
பிறகு பிரம்ம ஞானத்தை மைத்ரேயிக்கு யக்ஞவல்கியர் உபதேசம் செய்தார்.

Tuesday, October 4, 2016

எழுத்தாளர் (சிறுகதை)


எழுத்தாளர் பக்கி (அதுதான் அவர் புனைப்பெயர்) அன்று கொஞ்சம் உற்சாகமாகவே இருந்தார். அவருக்கு நாற்பது வயது. வயதைக் குறிப்பிடுவது எதற்கென்றால் அவரைப் பற்றிய சரியான பிம்பத்தை உங்களுக்கு அளிக்க!

பக்கி இதுவரை ஏழோ எட்டோ புத்தகங்கள் போட்டிருக்கிறார். வித்தியாசமாகத் தலைப்பு வைத்தால் தான் மக்கள் வாங்குவார்கள் என்று 'சூனியத்தில் முளைத்தெழும் வெளி' , 'விட்டில் பூச்சியின் கனவுகள்' 'ஒளியற்றதன்   நிழல்கள்' 'கடலில் பிறக்கும் நதி' என்றெல்லாம் தலைப்பு வைத்து கவிதை என்ற பெயரில் எதையோ எழுதி இருக்கிறார். இந்த முறை புத்தகக் கண்காட்சியில் ஹேமாவின் பூனை என்ற வரலாற்று சிறப்பு மிக்கதொரு  புதினத்தை (?) எழுதி வெளியிட்டு இருக்கிறார். புதினம் என்றால் புதினா சட்னியின் சுருக்கப்பட்ட பெயர் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ரசனையற்ற மக்களுக்கு மத்தியில் அவர் புத்தகம் வெளியிடப்பட்டதே பெரிய விஷயம் என்று தன் குல தெய்வம் குருத்தாம் பாளையம்  வேலி காத்த அய்யனாருக்கு தினமும் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நிற்க. அவர் உற்சாகமாக இருக்கிறார் என்று நாம் சொல்லியதற்குக் காரணம் மறுதினம் புத்தகக் கண்காட்சியில் அவரது வாசக வட்ட (?) நண்பர்கள் ஒரு சின்ன சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது தான். வா.வ என்றதும் ஏதோ சாரு போல 15000 வாசகப் பெருமக்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். UKG குழந்தை போல டூ, த்ரீ , பைவ், எய்ட் என்று எடக்கு மடக்காக எண்ணினாலும் அவரது வாசக வட்டம் 100 ஐத் தாண்டாது.

அவரது மிகத் தீவிர வாசகர் குளுவான் குஞ்சு என்பவர் . அவர் ப்ளாக்கில் போஸ்ட் போடும் போதெல்லாம் அவருக்கு இமெயில் அனுப்பி கன்னா பின்னா என்று புகழ்பவர். அவர் இருக்க வேண்டியது சென்னை மண்ணடி குறுக்கு சந்தே அல்ல. ஜெர்மனியின் முனீச் சந்து தான் என்று தவறாமல் சொல்பவர். பக்கி தன் ப்ளாக்கில் கமெண்டுகளை disable செய்து விட்டார். இல்லை என்றால் இந்த அறிவு ஜீவிகளின் தொல்லை தாங்க முடியாது. ஒருவாரம் கங்குல் பகலாக யோசித்து ஒரு கருத்தாழமிக்க (?) பதிவு போட்டால் உடனே சண்டை போட ரெடியாக பின்னூட்டத்தில் வந்து விடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா என்று பக்கி நினைப்பார். இது தப்பு அது தப்பு என்று நொட்டை சொல் சொல்கிறார்களே தவிர உருப்படியாக எதுவும் எழுத மாட்டார்கள். இவர்களுக்கு இருக்கும் இந்த அறிவுக்கு ஏன் இன்னும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வரவில்லை என்று யோசிப்பார்.

பக்கிக்கு அறிவியல் என்றால் அலர்ஜி. இன்னும் கூட இவ்வளவு பெரிய பூமி அந்தரத்தில் ஒரு நட்சத்திரத்தை சுற்றும் என்பதை அவர் நம்பவில்லை. ஒரு நாள் தெரியாத் தனமாக ஏதோ ஒரு நல்ல மூடில் 'பொருள் என்பது சூனியம் தான்' என்ற நவீன இயற்பியல் தத்துவத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேதம் சொல்லி விட்டது என்று தன் ப்ளாக்கில் ஒரு பிட்டைப் போட்டு வைத்தார். அதற்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்து விட்டுத் தான் தமிழ் நாட்டில் இத்தனை விஞ்ஞானிகள் இருக்கிறார்கள் என்பதை பக்கி உணர்ந்தார். ஒரு விமர்சகர் இப்படிக் கமெண்ட் போட்டிருந்தார். அதைப் பார்த்த நிமிடத்திலேயே அவசர அவசரமாக கமெண்ட்ஸ் ஐ disable செய்து விட்டார்.

ஞானதேசிகன் commented on 'பொருள்-சூனியம்-பொருள்'..

view 59 more comments

"அன்பின் பக்கி, இது எந்த உபநிடதத்தில் எந்த சர்கத்தில் வருகிறது என்று reference சொல்ல முடியுமா? சூனியம் என்ற ஒன்றை குவாண்டம் தத்துவம் நம்புவதில்லை. காசிமிர் வாக்யூம் என்று எண்ணிலடங்கா ஆற்றல் துகள் எதிர்த்துகள் பேரணிகள் சூனியத்தில் நிலை கொண்டுள்ளன.உதாரணமாக மேல் குவார்க் மற்றும் வேறுபடு (strange )குவார்க்குகள் கொண்ட கேயான் ஒன்று பையான் -ஆக சிதைந்து இடைநிலையில் W போசானும் குளுவான்களும் வருகின்றன"

Comments disabled ..


பக்கி ரொம்ப பில்ட் அப் கொடுக்காமல் ஒரு எல்லைக்குள்ளாகவே இருப்பது என்று தீர்மானித்தார்.கொஞ்சம் intellectual ஆன விஷயங்களை இப்போது அவர் தொடுவதே இல்லை.கவிதை எழுதினால் பிரச்சினை இல்லை பாருங்கள். தன் சமீபத்திய ஹேமாவின் பூனை புத்தகத்தில் அவர் அகநானூறு, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் , பிஸி பேளா பாத் செய்வது எப்படி , The count of Monte kristo , குற்றியலிகரம், சிவ வாக்கிய விளக்கம், பார்முலா ஒன் ரேஸ், ஓரினச் சேர்க்கை, 12 years a slave ,இலங்கைத் தமிழர்கள், பரிணாமம், சுவாதிஸ்டானம் , நரேந்திர மோடி, எமிலி டிக்கின்சன் ,வர லக்ஷ்மி விரதம்,ice age ,gravity 3டி ,சிந்து பைரவி, ஜக்கி வாசுதேவ், குட்டி ரேவதி, இளையராஜா ,முடி உதிர்வதைத் தடுப்பது எப்படி என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார்.

நிலவின்
மங்கிய வெள்ளொளியில்
எனக்குள் பீறிட்டுக் கிளம்பிய
தனிமையின் ஏகாந்தத்தை
நிரப்ப வரும்
சம்பூரணத்தின்
சிறகுகளின் நறுமணத்தில்
பூத்துப் படரும்
உன் நினைவு!

என்றெல்லாம் கவிதை எழுதினால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் பாருங்கள்.

குளுவான் குஞ்சு அலை பேசியில் அழைத்து , 'சார் நாளைக்கு ஒரு சின்ன கூட்டம் போடலாம். இருபது முப்பது வாசகர்களை அழைத்து வருகிறேன்' அடையாளம் பதிப்பகத்தின் அருகில் கூட்டம் என்றார்.எழுத்தாளர் பக்கிக்கு உற்சாகம் பொங்க ஆரம்பித்து விட்டது. சந்திப்பில் என்ன பேசுவது , 'இலக்கியம் என்பது என்ன, பெர்னாட்ஷா என்ன சொல்கிறார் என்றால் ..' என்று பேசுவது என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டார். ஆட்டோக்ராப் கேட்பவர்களுக்கு கீழ்க்கண்ட வரிகளை எழுதித் தரலாம் என்றெல்லாம் கற்பித்துக் கொண்டார்.

"உங்கள் தலையெழுத்தை  மாற்ற முடியும் ஒரு எழுத்தாளனின் கையெழுத்து!! "

-உங்கள் அபிமான பக்கி


அன்று இரவு 1 மணி வரை என்னென்னோவோ புத்தகங்களை வைத்து குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டார். " எழுத்தாளர் பக்கியை சந்திக்க வரும் வாசகர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் வாசகர்கள் தங்கள் உடைமை, செல் போன் , புத்தகங்கள் , பிஸ்கட், குழந்தை முதலியவைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும்' என்று மைக்கில் அறிவிப்பதாகக் கனவு கண்டார்.

மறுநாள் காலை ஆறு மணிக்கே எழுந்து கொண்டு ஷேவ் செய்து கொண்டு பேன்டீன் சாம்பூ போட்டுக் குளித்து விட்டு சிறப்பான உடைகளை அணிந்து கொண்டார் பக்கி.புதிய பெல்ட் அணிந்து கொண்டு டக் இன் செய்து கொண்டார். வாட்ச் கட்டிக் கொண்டார். 8 மணிக்கு குஞ்சுக்கு போன் செய்த போது 'The number you are trying to call is not reachable' , என்று வந்தது , அந்த அழகான பெண் குரல் அதைத் தமிழில் பெயர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதற்குப் பாதியிலேயே 'நீங்கள் அழைக்கும் நபர் தற்போது தொடர்பு எல்லைக்...' கட் செய்தார். 9 மணிக்கு மீண்டும் போன் செய்த போது அதே பெண் குரல், வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்றது.சரி தொந்தரவு செய்ய வேண்டாம். வாசக வட்ட நண்பர்களை சேர்த்துக் கொண்டு கண்காட்சிக்கு வந்து விடுவார் என்று பக்கி சுய சமாதானம் சொல்லிக் கொண்டார்.கண்காட்சிக்குத் தனியாகவே போவது என்று முடிவு செய்து டாக்ஸி ஒன்றைப் பிடித்து 11 மணியளவில் அங்கே ஆஜரானார்.அலீப் டிபன் சென்டரில் மூன்று இட்லி ஒரு பரோட்டா ஒரு காபி சாப்பிட்டுக் கொண்டார்.

அன்று கண்காட்சிக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து பக்கிக்குத்  தன் கண்களையே நம்ப முடியவில்லை.தமிழ்நாடு கேரளாவை முந்திக் கொண்டு எங்கோ இலக்கிய ராஜ பாட்டையில் 5th கியரில் போய்க் கொண்டிருப்பதாகத் தோன்றியது.வாக்கிங் ஸ்டிக் வைத்துக் கொண்டு நடக்கும் 90 வயது முதியவரில்  இருந்து சாக்கோ பார் கடித்துக் கொண்டு நடக்கும் 10 வயது சிறுவன் வரை எல்லாரையும் காண முடிந்தது அவ்விடத்தில் .எது எடுத்தாலும் இருபது ரூபாய் என்று கூவி அழைக்கும் பொருட்காட்சிக்குக் கூட இவ்வளவு கூட்டம் வராது போலிருந்தது. இன்னொரு ஆச்சரியம் 'Im a machine; but I used to be a person long long ago' என்பன போன்ற பொன்மொழிகள் பொறிக்கப்பட்ட தேநீர் சொக்காய்களை அணிந்த யுவன்களும் யுவதிகளும் வந்திருந்தது. கத்திரிக்காயில் 90 வகை சமையல், லக்ஷ்மி சஹஸ்ரநாமம்  போன்ற புத்தகங்களை வாங்க வந்திருந்த மாமிகளை பக்கி கண்டு கொள்ளவேயில்லை.

பக்கி நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு ஸ்டால்களுக்குள் நுழைந்து நிதானமாக நடந்து பார்வையிட்டார். முதல் முறையாக 'யாருமே தன்னைக் கண்டு கொள்ளவில்லை' என்ற உண்மை அவருக்கு மெதுவாய் உறைக்க ஆரம்பித்தது. குஞ்சுக்கு போன் செய்தார். மூன்று முறையும் ரிங் போயிற்றே தவிர அவர் attend செய்யவில்லை.நான்காவது முறை குஞ்சு எடுத்து பதட்டத்துடன் , 'சார்,,ரொம்ப சாரி,,,,நண்பர் ஒருவருக்கு ஆக்சிடெண்ட் ஆகி எமெர்ஜென்சியில் இருக்கிறார். ஆஸ்பிடலில் இருக்கிறேன், ஈவினிங் கூப்பிடுகிறேன் சாரி ' என்று சொல்லி போனை வைத்து விட்டார். இன்னொரு வாசகருக்கு போன் செய்ததில் சுவிட்ச் ஆப் என்று வந்தது. பக்கி தனியாளாக கண்காட்சியை நோட்டம் விடுவது என்று தீர்மானித்தார்.

தன் வ .சி.மிக்க புத்தகமான 'ஹேமாவின் பூனை' யை யாராவது வாங்குகிறார்களா என்று ஒவ்வொருவராக நோட்டம் விட்டார். எல்லாரும் கொற்கை, பொன்னியின் செல்வன்,ஓநாய் குலச் சின்னம் உப பாண்டவம்  என்று வாங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னும் மக்கள் பொன்னியின் செல்வன் ,  படிக்கிறார்களா அதில் என்ன தான் இருக்கிறதோ என்று பக்கி வியந்தார்.அவர் புத்தகத்தை வெளியிட்டிருந்த தமிழன்னை பதிப்பகத்தில் ஈயாடியது. அதற்கு நித்தியானந்தா பதிப்பகத்தில் கூட ரெண்டு பேர் நின்று கொண்டு டி.வி.டி இருக்கா என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு அந்த அம்மணி அவர்களிடம் அட்ரஸ் வாங்கிக் கொண்டு டி .வி.டி. அனுப்புவதாகவும் எக்ஸ்ட்ராவாக குண்டலினியை எழுப்பித் தரலாமா என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். குறும்பு மிக்க இளைஞர் ஒருவர் ரஞ்சிதா மேடத்தைக் காணலியே என்று கமெண்ட் செய்து கொண்டே கடந்து சென்றார்.

பக்கி ஒரு லிட்சி ஜூஸ் குடித்து விட்டு கண்காட்சியை மீண்டும் வலம் வந்தார்.தன்னை யாரேனும் அடையாளம் கண்டு கொள்கிறார்களா என்று நோட்டம் விட்டார். அழகான இளம் யுவதி ஒருவள் வந்து 'சார், நான் உங்க தீவிர ரசிகை , உங்கள் 'விட்டில் பூச்சியின் கனவுகள்', சான்சே இல்லை சார், வாட் எ லிடரசர் ஆட்டோ கிராப் ப்ளீஸ் என்று சொல்வாள் என்று கண்டிப்பாக எதிர்பார்த்தார்.ஆனால் சற்றேறக்குறைய அப்படிப்பட்ட யுவதி ஒருத்தி இவர் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல்  தன் ஆண் நண்பரிடம் தன் whatsapp இல் அனுப்பிய குறுந்தகவல் வரவில்லையா என்ற தத்துவ வேந்தாந்த விசாரத்தைப் பேசிக் கொண்டிருந்தாள் .மக்கள் தொடர்ந்து நடுப்பகல் மரணம் கம்ப்யூட்டர் கிராமம் அனிதாவின் காதல்கள்  போன்ற அலுத்துப் போன சுஜாதா புத்தகங்களை வாங்கிய வண்ணம் இருந்தனர். பக்கிக்கு அந்த ஆள் மேல் எரிச்சலாக வந்தது. நல்ல வேளை  அந்த ஆள் இப்போது உயிருடன் இல்லை இருந்திருந்தால் யாரையும் எழுத விட்டிருக்க மாட்டார் என்று ஆறுதலும் வந்தது.உயிர்மை ஸ்டாலின் வெளியே அமர்ந்திருந்த மனுஷ்ய புத்திரனை கண்டும் காணாமல் வந்து விட்டார். ஏனென்றால் மூன்று நான்கு பேர் அவரை சுற்றி நின்று கொண்டு கையெழுத்து வாங்க முயன்று கொண்டிருந்தனர். அப்படியென்ன பிரமாதமாக எழுதறார் என்று தனக்குள் சலித்துக் கொண்டார். தானும் உட்காரலாம் என்று ஏதேனும் நாற்காலியைத் தேடினார். மாற்றுத் திறனாளியாக இருந்தால் மட்டுமே நாற்காலி தருவார்கள் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டார்.கண்காட்சியின் உள்ளே நிலவிய வெக்கை மின் விசிறிகளையும் மீறி உறுத்தியது.

பக்கி வாரியார் பதிப்பகம் சென்று 'வாரியார் சொன்ன குட்டிக் கதைகள்' புத்தகத்தை வாங்கினார்.தன் அடுத்த புத்தகத்துக்கு உதவும் என்று தமிழ் மொழி வரலாறு என்று 600 ரூபாய்  குண்டு புக்கையும் வாங்கினார்.மக்கள் 'அரசு பதில்கள்' 'பக்தி யோக விளக்கம்' 'யானைகள் காணாமலாகின்றன ,சில்க் சுமிதாவின் கதை , கொக்கோக சாஸ்திரம் ,பீக்கதைகள் போன்ற புத்தகம் எல்லாம் வாங்குகிறார்கள், நம் புத்தகத்தை வாங்குவார் இல்லை என்று தனக்குள் அலுத்துக் கொண்டார்.இதற்கும் தன் புத்தகத்தின் பின் அட்டையில் தான் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு மைசூர் ஜூவில் நின்றிருக்கும் போட்டோவை கலரில் போட்டிருக்கிறார்.

மதியம் இரண்டு மணியளவில் பக்கி புத்தகக் கண்காட்சி கேண்டீனுக்குள் நுழைந்தார். முக்கால் வாசிக் கூட்டம் அங்கே தான் இருப்பது போல் இருந்தது.
பக்கி ஒரு ரவா தோசை டோக்கன் வாங்கி தோசை வேகும் வரை அசுவாரஸ்யமாய் காத்திருந்து வாங்கிக் கொண்டு உட்கார்ந்து கொள்ள நாற்காலிகளைத் தேடினார். காலி நாற்காலி ஒன்று கூட இல்லை. யாரேனும் எதிர் வந்து , சார், உட்காருங்க ப்ளீஸ், உங்க 'ஹேமாவின் பூனை'....என்று சொல்வார் என்று எதிர் பார்த்தார்.ஆனால் மக்கள் நூடூல்ஸ் ஐயும் சூடான மசால் தோசையையும் டெல்லி அப்பளத்தையும்  உள்ளே தள்ளுவதிலேயே குறியாக இருந்தனர். கொடுமை என்ன என்றால்  தோசையை தின்று முடிந்ததும் எழும்பிப் போகாமல் மக்கள் அங்கேயே அமர்ந்து தாங்கள் உள்ளே வாங்கிய புத்தகங்களை , ப்ரீயாக வந்த காலண்டர்களை , துண்டுப் பிரசுரங்கள் இத்யாதிகளை  பிரித்துப் படிக்கவும் செய்தார்கள். உங்கள் இலக்கிய ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லையா என்று பக்கி நினைத்துக் கொண்டார். ஒரு நாற்காலி காலியாய் இருக்கவே பக்கி உடனே போய் அங்கு ஏறக்குறைய அமர்ந்தே விட்டார்.அருகில் அமர்ந்திருந்த பெண் விரோதமாக 'ஆள் வருது' என்றாள் . பக்கி பேரவமானமாக உணர்ந்து நின்று கொண்டே சாப்பிட்டு விட்டு அவ்விடத்தினின்றும் வெளியேறினார்.

கண்காட்சிக்கு வெளியே ஒரு இலக்கியக் கூட்டம் (?)நடந்து கொண்டிருந்தது.
தெலுங்கு, கன்னட கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்து சொல்லிக் கொண்டிருந்தனர். ஸ்லீவ்லெஸ் அணிந்த கன்னடப் பெண் கவிஞர் தன் கவிதையை வாசிக்கும் போது கிட்டத்தட்ட நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அதில் பக்கிக்கு 'கொத்தில்லா கொத்தில்லா' என்பது மட்டும் புரிந்தது. அதை மொழி பெயர்த்து சொல்லிக் கொண்டிருந்த பெண் 

என்னை 
துலைத்த உன் விழிகல் 
குலத்தின் கரையில் 

என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். ல ள வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் இலக்கியக் கூட்டத்துக்கு வந்து விடுகிறார்கள் என்று சலித்துக் கொண்டு பக்கி அவ்விடம் விட்டு கோபத்துடன் சாரி அறச் சீற்றத்துடன் வெளியே வந்தார்.

என்னமோ போடா மாதவா என்று விரக்தியுடன் சலித்துக் கொண்டார்.

கண்காட்சியை விட்டு வெளியே போகுமுன் சுண்டல் வாங்கிச் சாப்பிடலாம் என்ற ஆசை அவருக்குள் துளிர் விட்டது. சுண்டல் விற்பவன் டாய்லெட் போய் விட்டு சானிடைசரில் கை கழுவுவானா என்பன போன்ற  மனச்சாட்சியின்  கேள்விகளைப் புறம் தள்ளி விட்டு  சுண்டல் விற்ற பையனை அழைத்தார். ஒரு சுண்டல் குடு என்று பத்து ரூபாயை நீட்டினார்.

அவரை நிமிர்ந்து பார்த்த சுண்டல் பையன் 'சார் , நீங்க எழுத்தாளர் பக்கி தானே'? என்றான்.



சமுத்ரா

Monday, September 12, 2016

அன்பை உணராதவர்கள் இக்குட்டிக்கதையை வாசித்து சாகட்டும்!


ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.
ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.
குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.
நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன்,அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.
மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.
இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன்.
எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.
“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தி யதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.
இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.
அவன் சென்ற பிறகு,
ராணி“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என்றாள்
“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”
அரசன் சொல்ல,ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்…. “சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.
“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன்.
பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான். எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது.
அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம்வேதனைப் பட்டிருக்கும். அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று. நீங்கள் வாழ்க்கையில் அது போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!
மனித உணர்வுகளை
நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும் . நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும்.
இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.
இன்றைய காதலுக்கும் இது மிகவும் பொருந்தும்….
அன்பை உணராதவர்கள் இக்குட்டிக்கதையை வாசித்து சாகட்டும்!
ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.
ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.
குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.
நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன்,அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.
மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.
இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன்.
எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.
“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தி யதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.
இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.
அவன் சென்ற பிறகு,
ராணி“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என்றாள்
“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”
அரசன் சொல்ல,ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்…. “சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.
“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன்.
பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான். எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது.
அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம்வேதனைப் பட்டிருக்கும். அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று. நீங்கள் வாழ்க்கையில் அது போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!
மனித உணர்வுகளை
நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும் . நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும்.
இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.
இன்றைய காதலுக்கும் இது மிகவும் பொருந்தும்….
அன்பை உணராதவர்கள் இக்குட்டிக்கதையை வாசித்து சாகட்டும்!
ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.
ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.
குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.
நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன்,அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.
மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.
இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன்.
எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.
“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தி யதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.
இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.
அவன் சென்ற பிறகு,
ராணி“இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என்றாள்
“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”
அரசன் சொல்ல,ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்…. “சே… சே… என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.
“தேவி… நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன்.
பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான். எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது.
அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம்வேதனைப் பட்டிருக்கும். அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, உள்ளிருக்கும் முத்தை அறியாமல் சிப்பியை ஒதுக்குவது போன்று. நீங்கள் வாழ்க்கையில் அது போன்று எத்தனை முத்துக்களை தவறவிட்டிருக்கிறீர்கள் தெரியுமா? இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!
மனித உணர்வுகளை
நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும் . நம் குழந்தைகளுக்கும் அவற்றை கற்றுத் தரவேண்டும்.
இதயப்பூர்வமாக தருப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.
இன்றைய காதலுக்கும் இது மிகவும் பொருந்தும்….

Friday, August 19, 2016

விலகிய கால்கள் சி. மோகன்

தனியான காகமொன்று எங்கோ தொலைவில் கரைந்து கொண்டிருக்கும் சத்தம் வெகு சன்னமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. ஆளரவமற்ற வெட்ட வெளியில் வெற்றுடம்போடு ஒடுங்கிப் படுத்துக் கொண்டிருந்தவரின் காதுகளில் அந்த மெல்லிய ஓலம் சலனத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. கரைதல் ஒலி மெல்ல மெல்ல அண்மித்தபடி இருந்தது. ஒன்று இரண்டாகியது; இரண்டு பலவாகியது. காகங்கள் கூட்டம் கூட்டமாய் கூடிக் கரைந்து அவரை நெருங்கிக்கொண்டிருந்தன. பெருத்த ஓலம். அந்தக் காட்டுக் கூச்சல் அவரை நெருங்கி வர வர, அவருடைய உடல் சம்மட்டியால் பிளக்கப்படுவதைப் போல் துடிதுடித்தது. அந்த வேதனையை உடல் அனுபவித்தபோதிலும் அது வலியாக இல்லை. இம்சையாகவே இருந்தது. அவருடைய உடலில் இருந்து எவ்வித எதிர்வினையும் வெளிப்படவில்லை; அல்லது அது காட்டிய எதிர்வினையேதும் வெளித் தெரியவில்லை. அவருடைய உடலைச் சூழ்ந்து நின்றும், வட்டமடித்தும், குறுக்கும் மறுக்குமாகத் திரிந்தும் கூப்பாடு போட்டன எண்ணற்ற காகங்கள். பெரும் இரைச்சல். ஆர்ப்பரிக்கும் இரைச்சல். திடீரென ஒரு காகம் அவருடைய உடலைக் கொத்தியது. பின் ஒவ்வொன்றாய்... கூட்டம் கூட்டமாய் கொத்திக் குதறின. அது சகிக்க முடியாததாக இருந்தாலும் வலி ஏதுமில்லை. அவை கொத்திப் பிடுங்கியதில் உடலெங்கும் ரத்தம் கசியத் தொடங்கியது. கசிந்து பெருகியது.
பெரும் அசூயையில் சலனமற்றுக் கிடந்தது உடல். அவற்றை விரட்ட அவர் எடுத்த பிரயத்தனங்கள் எதுவும் செயல்படவில்லை. கைகளை ஆட்டியும், உஷ், உஷ் என சத்தமிட்டும் பார்த்தார். கைகள் அசையவில்லை, குரல் வெளிப்படவில்லை. அவர் உடல் இறந்து கிடப்பதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறதென்று எண்ணிக்கொண்டார். தான் உயிருடன் இருப்பதாகக் காட்டிக்கொண்டால், எழுந்து உட்கார்ந்தமர்ந்து விட்டால், அவை பறந்து விடும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. பெரும் சிரமமெடுத்து எழுந்து உட்கார்ந்தார்.
ஒரு சிறிய அழுக்கடைந்த அறையின் ஒரு மூலையில் கிடந்த நைந்திருந்த பாயில் அவர் எழுந்து உட்கார்ந்திருந்தார். நெஞ்சைப் பிளந்து வெளிப்பட்டது போன்ற கடுமையான இருமலுடன் சளியைக் காறி, பக்கத்தில் மண் நிரப்பப்பட்டிருந்த கொட்டாங்குச்சியில் துப்பினார். கெட்ட வாடையடித்தது சளி. வாயைக் கழுவிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால் எழுந்து செல்ல மனம் இடம் கொடுக்கவில்லை. சுற்றிலும் காலியான சார்மினார் சிகரெட் பாக்கெட்டுகள் குவிந்தும் சிதறியும் கிடந்தன.
அழுக்கடைந்த தலையணையோரம் கிடந்த சிகரெட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை வெளியில் எடுத்தார். ஜிப்பா பாக்கெட்டிலிருந்து ஒரு சிறு பொட்டலத்தை வெளியில் எடுத்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டார். சிகரெட்டை லேசாகவும் பக்குவமாகவும் கசக்கி அதிலிருந்த புகையிலையைக் கொட்டாங்குச்சியில் கொட்டினார். பொட்டலத்தைப் பிரித்து, அதிலிருந்து கொஞ்சம் கஞ்சாவை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, மறுபடியும் அந்தச் சிறு பொட்டலத்தைக் கவனமாக மடித்து ஜிப்பா பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். இடது உள்ளங்கையிலிருந்த கஞ்சாவிலிருந்து கழிவுகளை நீக்கினார். பின் வலதுகைக் கட்டைவிரலால் அழுத்தித் தேய்த்துத் துகளாக்கி, அதை சிகரெட் சுருளுக்குள் பாந்தமாய் நிரப்பினார். அதிகாலை பூஜைக்கான ஆயத்தம் போல வெகு பவ்யமாகவும் சிரத்தையோடும் அக்காரியம் நடந்தேறியது. கஞ்சா அடைத்த அந்த சிகரெட், கனகச்சிதமாக அசல் சிகரெட் போல, உப்பலோ மெலிவோ இன்றி அச்சு அசலாக அப்படியே இருந்தது. பல்லாண்டு கால செய்நேர்த்தி, அதை அவர் பற்ற வைத்தபோது, நெஞ்சைக்கீறிக்கொண்டு இருமல் வெளிக்கிளம்பியது. இடது கையால் நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டார். இருமல் தணிந்ததும் ஆசுவாசமாகப் புகையை இழுக்கத் தொடங்கினார். வற்றி ஒடுங்கிய உடலுக்குள் புகை பரவத் தொடங்கியதும் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்றது போல் அவர் முகம் மலர்ந்தது. உடம்பில் தெம்பேறுவது போல் உணர்ந்தார். அவர்மீது வாஞ்சையோடு இருக்கும் இரு இளைஞர்களும் இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரைக் கூட்டிக்கொண்டு போக வந்துவிடுவார்கள். அதற்குள் தயாராகிவிட வேண்டுமென்று எண்ணிக்கொண்டார். தயாராக என்ன இருக்கிறது. முகத்தைக் கழுவி வேறு உடுப்பு மாற்ற வேண்டும். அவ்வளவுதான்.
அவருடைய இந்த முடிவு அவருக்கே கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே இப்போதைக்கு இந்த ஒரு மார்க்கம்தான் ஒரே வழி என்ற எண்ணம் அவருக்கு நிச்சயமாகிவிட்டிருந்தது. உடல் இனியும் தாங்காது என்பது தெளிவாகவும், விடை பெறும் தருணம் வந்து விட்டதென்பது சூட்சுமமாகவும் அவருக்குத் தெரிந்துவிட்டிருந்தது. இப்போது ஆஸ்பத்திரிக்குப் போவதன் மூலம் உடலொன்றும் சீரடைந்துவிடப் போவதில்லை. ஆனாலும் ஏதாவது ஒரு முயற்சி எடுத்துத்தானே ஆக வேண்டும். குறைந்தபட்சம் எங்காவது ஒரு கூட்டத்துக்குள் முடங்கிக் கொண்டுவிட வேண்டுமென்று இருந்தது. அரசு பொது மருத்துவமனைதான் இப்போதைக்குத் தோதான இடமும். சிகிச்சை, பராமரிப்பு, கூடவே கும்பல். மிகத் தோதான இடமென்பதில் சந்தேகமில்லை. தாக்குப் பிடிக்க முடியாவிட்டால் அதிலிருந்து வெளியேறியும் விடலாம். எந்தவொரு கட்டுப்பாட்டு அரணுக்குள்ளிருந்தும் வெளியேற அவரிடம் அநேக உபாயங்கள் எப்போதுமிருந்தன. படுக்கையில் இருந்தபடியே ஒரு சிகரெட் பற்றவைத்தால் போதும். வெளியில் அனுப்பிவிடுவார்கள். இப்போதைக்கு அங்கு போய்ச் சேர்ந்துவிடவேண்டும். அவ்வளவுதான்.
சிகரெட்டை அணைத்துவிட்டு வெளியில் வந்தார். வெளிவராந்தாவின் கடைசி மூலையில் இருந்த பாத்ரூம் நோக்கிச் சென்றார். அந்த அறையில் அப்போது அவர் மட்டுமே இருந்தார்.
இதுவும் அவருடைய இடமில்லை. அவருக்கென்று ஒரு இடம் இல்லாமலாகி ஏழெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த ஊரின் இரண்டு இடுக்குகள் கூட அவருக்கு அத்துபடி என்பதால் எங்காவது படுத்துக்கொண்டுவிடுவார். இந்த இடம், ஒரு பெரிய அலுவலகத்தின் காவலாளி அறை. அதன் உரிமையாளர் இவருடைய முன்னாள் மாணவர். சில நாட்களுக்கு முன்பு அவரைச் சந்தித்தபோது அவர் செய்த உதவி இது. முன்புபோல நடந்து திரியவோ, அங்கும் இங்குமாகப் படுத்துக்கொள்ளவோ இயலாதபடி உடல் மிகவும் தளர்ந்துவிட்டிருந்தது. அதனால் ஏதாவது ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டதால், காவலாளி அறையில் ஒண்டிக்கொள்ள இடம் கொடுத்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஊருக்குப் போன வாட்ச்மேன் இன்னும் திரும்பவில்லை, ஒருவேளை, இப்போது தான்தான் இங்கு வாட்ச்மேனோ என்று நினைத்துக்கொண்டார், சம்பளமில்லாத வாட்ச்மேன் என்று எண்ணி சிரித்துக்கொண்டார். ஒவ்வொரு எட்டாய் எடுத்து வைத்து நடப்பதும் மிகவும் சிரமமாகத்தான் இருந்தது. எதற்கு இந்தப் பாடு என்று எண்ணிக்கொண்டார். ஒரு வழியாக, பாத்ரூம் சென்று, ஜிப்பா கையிரண்டையும் மேலே இழுத்து விட்டுக்கொண்டு வாளியில் இருந்த தண்ணீரில் முகம் கழுவி வாய் கொப்பளித்தார். இரண்டு மூன்று முறை நன்றாகக் கொப்பளித்துத் துப்பினார். கைகளில் அப்பிக்கிடந்த சொறி சிரங்கைப் பார்த்ததும், 'காகங்கள் கொத்திய புண்கள்' என்று சொல்லிக்கொண்டார். அந்த தொடர் மனதில் உருவானபோது, தன்னை விழித்தெழச் செய்த அசூயையான அந்த அதிகாலைக் கனவு மங்கலாக நினைவுக்கு வந்தது. அது கனவுக் காட்சியா, மனம் உருவாக்கிய பிம்பமா என்பதும் தெளிவில்லாமல் இருந்தது. இப்போதெல்லாம் மனம் விரிக்கும் காட்சிகள் கனவின் புதிரோடுதான் இருப்பதாக எண்ணிக்கொண்டார், எல்லாமே குழம்பிப்போய் விட்டதாகத் தோன்றியது.
மீண்டும் அறைக்குத் திரும்பினார். நடப்பது போல் அல்ல, ஊர்வது போல் இருந்தது. அறைக்கு வந்து சலவை செய்த வேட்டி ஜிப்பாவை எடுத்து மாட்டிக்கொண்டார். கொஞ்சம் பழுப்பேறியிருந்தது என்றாலும் சலவை செய்தது. பழைய ஜிப்பாவிலிருந்து கஞ்சா பொட்டலத்தை எடுத்து, இந்த ஜிப்பா பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். சிகரெட் பாக்கெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்துக்கொண்டார். ஜிப்பா பாக்கெட் விளிம்பு கிழிந்திருப்பதை அப்போதுதான் கவனித்தார். இதைத் தவிர நல்ல உடுப்பேதும் இப்போது அவரிடமில்லை. மெல்ல நடந்து அக்கட்டிடத்தின் பிரதான வாசலுக்கு வந்தார். நன்றாக விடிந்து போக்குவரத்தும் ஜன நடமாட்டமும் தொடங்கிவிட்டிருந்தது. வாசலில் நின்று தெரு பார்த்தபடி, ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டார். திடீரென, இன்று என்ன தேதி, கிழமை என்று நினைத்துப் பார்த்தார். அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்து என்ன ஆகப்போகிறது என்று விட்டுவிட்டார்.
ஒரு ஸ்கூட்டர் அவர் முன்னால் வந்து நின்றது. அவர் தயாராக நின்றுகொண்டிருந்ததைப் பார்க்க, ஓட்டி வந்த சிவராமனுக்கும் பின்னால் இருந்த மோகன கிருஷ்ணனுக்கும் பெரும் ஆச்சரியமாக இருந்தது.
'என்ன ஆச்சரியமா இருக்கா?' என்று லேசான புன்னகையுடன் அவர்களைப பார்த்துக் கேட்டார் ராஜன்.
'நம்பவே முடியலை' என்றான் கிருஷ்ணன் சிரித்தபடி.
'சரி, எப்படி போறோம்' என்றார் ராஜன்.
'இருங்க, ரிக் ஷா கூட்டிட்டு வர்றேன். நீங்க அதுல வந்திருங்க. நாங்க ஸ்கூட்டர்ல போயிடுவோம்' என்றான் ராமன்.
சரி என்பது போலத் தலையசைத்தபடி, 'பின்னால பஸ் ஸ்டாண்டு பக்கத்துல ரிக் ஷா நிக்கும்' என்றார்,
தலையாட்டியபடியே கிளம்பிச் சென்றான் ராமன். ஸ்கூட்டரிலிருந்து இறங்கி அவருக்கருகே நின்றிருந்த கிருஷ்ணன், ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு, 'நல்லா தூங்கினீங்களா?' என்று கேட்டான்,
காதில் விழாதவர் போல அவர், 'நேத்து போட்டுக் கொடுத்த சிகரெட் எப்படி இருந்துச்சு... ஏதாவது வேலை பண்ணுச்சா?' என்று கேட்டார்.
'ஒண்ணுமே இல்லை... ஏமாத்திட்டீங்க...' என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான் கிருஷ்ணன்.
பதிலேதும் சொல்லாமல் அவர் சிரித்துக்கொண்டார்.
இன்று காலை மருத்துவமனை போகவிருப்பதைத் தெரிவிப்பதற்காக நேற்று இரவு அவரைப் பார்க்க சிவராமனும், கிருஷ்ணனும் சென்றிருந்தார்கள். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். இடையில் ராஜன், கஞ்சா போட்டு ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டபோது, 'எனக்கு ஒண்ணு போட்டுக் கொடுங்களேன்... குடிச்சுப் பாக்கிறேன்' என்றான் கிருஷ்ணன்.
'இதுக்க முன்னாடி அடிச்சிருக்கியா' என்று கேட்டார் ராஜன்.
ம்ஹூம் என்று தலையசைத்தான் கிருஷ்ணன்.
'சரி, ஷேஃப் டோஸ் போட்டுத் தர்றேன்' என்று கூறி சிகரெட்டிலிருந்த புகையிலையோடு கொஞ்சம் கஞ்சாவும் கலந்து போட்டுக் கொடுத்தார்,
கிருஷ்ணனுக்கு ஆசையாகவும் இருந்தது; தயக்கமாகவும் இருந்தது. பதற்றத்துடன் அதை வாங்கிப் பற்றவைத்து, அவர் இழுக்கும் பாணியிலேயே இழுத்தான். நடக்கப் போகும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்தபடி பரபரப்புடன் அதைச் சுண்டச் சுண்ட இழுத்து முடித்தான். முடித்த கையோடு அவரிடமிருந்து விடை பெற்று சிவராமனும், கிருஷ்ணனும் கிளம்பிவிட்டார்கள். வீட்டுக்கு போன பின்பு கூட, ஏதோ நடந்துவிடும் என்று மிகுந்த கவனத்துடனேயே இருந்தான் கிருஷ்ணன். எதுவுமே நிகழவில்லை. ஒருவகையில் ஏமாற்றமாக இருந்தாலும் கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்தது.
சிவராமனின் ஸ்கூட்டர் வந்து நின்றது. பின்னாலேயே ஒரு ரிக் ஷாவும் வந்தது. சிவராமன் ரிக் ஷாக்காரரிடம், 'சாரை ஏத்திக்கங்க. கேட் கிட்ட நாங்க வெயிட் பண்றோம். வந்திடுங்க' என்றான்.
'சாமிய நல்லாத் தெரியுமே... ஏறிக்கங்க சாமி' என்றார் ரிக் ஷாக்காரர்.
ஏற சிரமப்பட்டார். இருவரும் சேர்ந்து கைத்தாங்கலாக ஏற்றிவிட்டார்கள், ரிக் ஷா கிளம்பியது.
'ஒரு சிகரெட் அடிச்சுட்டுக் கிளம்பலாம்' என்றபடி ராமன், கிருஷ்ணனிடம் ஒரு சிகரெட் வாங்கிப் பற்றவைத்துக் கொண்டான்.
ரி்க் ஷாவை ஓட்டியபடியே ரிக் ஷாக்காரர் பேச்சு கொடுத்தார். 'சாமி என்னத் தெரியுதுங்களா...?'
'தெரியாம என்னப்பா... மாணிக்கம்தானே நீ...'
'இப்படி ஆயிட்டீங்களே சாமி... முன்னாடிலாம் நீங்க நடந்து வந்தா, நாங்கள்லாம் அப்படியே மலைச்சுப் போயி பாப்பம்... சரி சாமி, போனது போகட்டும். உடம்பை தேத்திட்டு வாங்க... எல்லாம் சரியாயிடும்.'
'எதுவுமே இனி சரியாகாது மாணிக்கம். என்னமோ அங்க போய் படுத்துக்கணும்னு தோணுது. போறேன். அவ்வளவுதான்.'
'அப்படிலாம் சொல்லாதீங்க சாமி. உங்களுக்குத் தெரியாததில்ல... பெரிய படிப்பெலாம் படிச்சவங்க நீங்க...?
ராஜன் லேசாக சிரித்துக்கொண்டார். 'ஒரு காலத்துல என்னைப் பெரிய புத்திசாலினு நினைச்சிகிட்டு ரொம்ப கர்வத்தோடதான் திரிஞ்சேன். ஆனா இப்பதான் புரியுது... இந்த ஊர்லயே நான்தான் பெரிய மக்குனு... ஒரு சாமர்த்தியமும் இல்லாம வாழ்ந்திருக்கேன்ன இப்ப தெளிவா தெரியுது...?''
'அப்படிலாம் பேசாதீங்க சாமி. திரும்ப ஜம்முனு வருவீங்க. நீங்க மனசு வச்சா போதும்... எல்லாம் சரியாயிடும்.'
'நான் என்ன மாணிக்கம் மனசு வைக்கிறது. அது என்ன நினைக்குதோ அதுதான். இப்ப ஆஸ்பத்திரில போய் படுத்துக்கோனு சொல்லுது... போய்க்கிட்டிருக்கேன், அவ்வளவு தான்... சரி நீ உன் பாதையிலே கவனமாப் போ...' என்றபடி ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக் கொண்டார்.
இருவரும் மௌனமானார்கள். ரிக் ஷா ஆஸ்பத்திரியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.
ஒரு நீண்ட கூடம் போலிருந்து அந்த வார்டின் முதல் வரிசையில் அமைந்திருந்த கடைசிப் படுக்கையில் ராஜன் படுத்திருந்தார். டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. அரைத் தூக்க நிலையில் அசதியோடு படுத்திருப்பது போலிருந்தது. ஏழெட்டு வரிசைகளாக ஒவ்வொரு வரிசைக்கும் நான்கு படுக்கைகள் வீதம் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட அந்தப் பெரிய அறையின் ஏகதேசமான மத்தியில் இருந்த டாக்டர் மேசைக்குப் பக்கத்தில் சிவராமனும் மோகன கிருஷ்ணனும் நின்றிருந்தார்கள். மேசையின் ஓர் ஓரத்தில் ஒரு கால் மடித்தும் மறு காலைத் தொங்கவிட்டும் உட்கார்ந்திருந்தபடி இளம் வயது டாக்டர் அவர்கள் இருவரோடும் பேசிக்கொண்டிருந்தார்.
'இன்னைக்கு எடுத்த டெஸ்ட்டுகளோட ரிசல்ட்ஸ், எக்ஸ்ரே எல்லாம் நாளை காலைல கிடைச்சிடும். அதுக்கப்புறம் அவருக்கு ஆக வேண்டியதைச் செய்யலாம். இன்னைக்கு மட்டும் அவர் சாப்பிடறதுக்கு அவர் விரும்பியதை வாங்கிக் கொடுங்க... ரொம்ப பலவீனமா இருக்காரு. அதனால்தான் இப்போதைக்கு டிரிப்ஸ் ஏத்தியிருக்கு' என்றார் டாக்டர்.
'கொஞ்ச நாளாவே அவர் எதுவும் சாப்பிடுறதில்லை டாக்டர்' என்றான் சிவராமன். 'சாப்பிட முடியறதில்லை. ஒரு லட்டு இல்லேனா ஒரு ஜிலேபி. எப்பவாச்சும் கொஞ்சம் திரட்சை...
இதுதான் அவரோட ஒரு நாள் சாப்பாடு. மத்தபடி புகைதான் கஞ்சாதான்.'
'சரி, பார்க்கலாம்' என்றார் டாக்டர். 'இப்படி ஒரு பெர்சனாலிட்டி ஏனிப்படி தன் வாழ்க்கைய தாறுமாறா ஆக்கி வச்சிருக்காரு... மனித வாழ்க்கை ரொம்பவும் விசித்திரமானதுதான்.'
இருவரும் பதிலேதும் பேசவில்லை.
'ரோட்ல படுத்துக் கிடக்கிறது... மத்தவங்ககிட்ட காசுக்கு நிக்கறது... இதெல்லாம் அவருக்கு இழிவாத் தெரியலியா...?'
'இல்ல டாக்டர்... எனக்குத் தெரிஞ்சு, அவரைப் பொறுத்தவரை இந்த வாழ்க்கையில எந்தவொன்னும் இழிந்ததில்லை. எந்தவொன்றையும் அவர் உயர்வா நினைச்சதாவும் தெரியலை. எல்லாமே வாழ்க்கைதான். வாழ்க்கையின் எண்ணற்ற கோலங்கள்... அவ்வளவுதான். வாழ்க்கை ஒன்றுதான் பெறுமதியானது. அதில் எல்லாமும் இருந்து கொண்டுதான் இருக்கும். அவை எல்லாவற்றையும் அறிந்துகொண்டுவிட வேண்டுமென்பதுதான் அவருடைய எண்ணமாகவும் செயலாகவும் இருக்குது' என்று உணர்ச்சி வசப்பட்டவனாகப் பேசினான் கிருஷ்ணன்.
'பெரிய ரைட்டரா?' என்றார் டாக்டர்.
'சந்தேகமே இல்லாம...' என்றான் கிருஷ்ணன். ரொம்ப முக்கியமான ரைட்டர். அவரோட உலகமும் சரி, அதை அவர் கிரியேட் பண்ணியிருக்கிற விதமும் சரி, தமிழுக்கு ரொம்ப புதுசு, தமிழோட ஒரே 'Avant Garde' ரைட்டர் அவர்தான். ஆனா அவருக்குத் தன்னைப் பத்தி அப்படியான பெரிய நினைப்பெல்லாம் கிடையாது.
கிருஷ்ணன் உணர்ச்சி வசப்படுவது சிவராமனுக்கு சிறு சங்கடத்தை எற்படுத்தியது. ஆனால், சிவராமனின் நண்பரான அந்த இளம் டாக்டரிடம் ராஜனைப் பற்றி அறியும் ஆர்வம் மிகுந்திருப்பது தெரிந்தது.
'இப்படியான ஒரு பெர்சனாலிட்டியுடன் பழகக் கிடைக்கிறது பாக்கியம்தான். இன்னும் கொஞ்ச நாள் இங்கதான இருக்கப் போறார்... பாத்துக்கலாம்' என்றார் டாக்டர்.
'அப்படினா அவருக்கு ஒரு புது டோனர் கிடைச்ச மாதிரிதான் என்றான் சிவராமன்
டாக்டர் சிரித்தபடியே கிருஷ்ணனிடம் 'அவரோட ஒர்க்ஸ் இருந்தா தாங்க... படிச்சுப் பாக்கிறேன்' என்றார். ‘இல்ல, எங்க கிடைக்கும்னு சொல்லுங்க வாங்கிக்கிறேன்.’
'மூணு புத்தகங்கள்தான் வந்திருக்கு... அதுவும் அவர் நல்லா இருந்த காலத்துல அவரே போட்டது. எதுவும் முறையா விநியோகிக்கப்படலை... அதனால இப்ப எங்க கிடைக்கும்னு தெரியலை. என்கிட்ட இருக்கு... நாளைக்கு கொண்டு வந்து தர்றேன்' என்றான் கிருஷ்ணன்.
'தேங்க்ஸ்' என்றபடி டாக்டர், 'என்ன சிவராமன், ஆபீசுக்குப் போகலியா? லீவு போட்டாச்சா' என்று கேட்டார்.
'இல்ல டாக்டர், பெர்மிஷன் போட்டிருக்கேன். பையப் போய்க்கலாம்... ஒண்ணும் பிரச்சனையில்லை' என்றான் சிவராமன்.
'நல்ல வேலை சிவராமன் உங்களோடது. கொடுத்து வச்ச ஆளு. உங்க யூனியன் வேற ரொம்ப ஸ்ட்ராங் இல்லியா!' என்றார் டாக்டர்,
சிவராமன் சிரித்தபடி தலையாட்டினான். தொடர்ந்து, 'சரி டாக்டர், நாங்க அவரோட கொஞ்ச நேரம் இருந்துட்டு கிளம்பறோம்... சாயந்தரமா திரும்ப வர்றோம்' என்றான்.
'ஓகே, சிவராமன். சாயந்தரம் நான் இருக்கமாட்டேன். நாளை காலைல பாக்கலாம்' என்றபடி டாக்டர் அவர்களோடு கை குலுக்கினார்.
அவர்கள் இருவரும் ராஜன் படுத்திருக்கும் படுக்கையை நோக்கிச் சென்றார்கள். டிரிப்ஸ் சொட்டுச் சொட்டாக இறங்கிக் கொண்டிருந்தது. அவர் முகம் சற்று தெளிந்திருப்பது போல் கிருஷ்ணனுக்குத் தோன்றியது. கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த ஸ்டூலில் கிருஷ்ணன் உட்கார்ந்து கொண்டான். அடுத்த கட்டிலுக்குப் பக்கமிருந்த ஸ்டூலைக் கேட்டு வாங்கி, அவர் தலைமாட்டுக்குப் பக்கத்தில் சிவராமன் உட்கார்ந்துகொண்டான்.
'என்ன சொல்றார் டாக்டர்' என்றார் ராஜன்.
'நாளை காலைல எல்லா ரிசல்ட்சும் வந்த பிறகு, பாத்துட்டு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம்னார்' என்றான் சிவராமன்.
வார்டின் பின்புற வாசலையயாட்டி, உள்ளே தயக்கத்துடன் எட்டிப் பார்த்தபடி, மொசுமொசுவென்று புஷ்டியாக இருந்த ஒரு வெள்ளைப் பூனை 'மியாவ், மியாவ்' என்று கீச்சிட்டுக் கொண்டிருந்தது. ராஜனுடைய கட்டில் பின்புற வாசலுக்குப் பக்கமாக இருந்ததால், கிருஷ்ணன் அந்தப் பூனையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அது யாருடைய கவனத்தையோ தன் பக்கம் திருப்புவதற்காக பிரயாசைப்படுவது போலிருந்தது. நான்கைந்து கட்டிலுக்குப் பின்னாலிருந்து ஒரு நடுத்தர வயது அம்மா, ஒரு கையில் டம்ளருடனும் மற்றொரு கையில் ரொட்டித் துண்டோடும் அதை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அவர், அந்தப் பூனையை நெருங்க நெருங்க அதன் 'மியாவ்' சத்தம் வேகமெடுத்தது. அந்த அம்மா புன்னகையோடு அதைக் கடந்து, வாசல் தாண்டி ஓர் ஓரமாக இருந்த கிண்ணத்தில் டம்ளரிலிருந்த பாலை ஊற்றினார். அதன் பக்கத்தில் ரொட்டியை சில துண்டுகளாகப் பிய்த்துப் போட்டார். பூனை திரும்பி நின்று அதைப் பார்த்துக்கொண்டிருந்தது. பின், அவர் திரும்பி வாசல் கடந்து சில எட்டுகள் எடுத்து வைக்கும்வரை தன் இடம் மாறாமல் நின்றிருந்த பூனை, அவர் உள்ளே வந்ததும், கிண்ணத்தை நோக்கிச் சென்று பாலை நக்கிக் குடித்தது.
அந்த அம்மா கிருஷ்ணனைக் கடந்தபோது, நின்று லேசான புன்முறுவலுடன், 'மொதவே ஊத்தி வைச்சுருக்கணும்பா. கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அவர் உடம்ப க்ளீன் பண்றதுக்குள்ள பெரும் பாடாயிருச்சு. எல்லாக் காரியத்தையும் அந்தந்த நேரத்துல செய்ய முடியுதா என்ன... கொஞ்சம் லேட்டானதுக்கு என்ன கூப்பாடு போடுது, பாருப்பா' என்றபடி கடந்து சென்றார். கிருஷ்ணன் திகைத்துப் போய் எதுவும் சொல்லத் தோன்றாமல் உட்கார்ந்திருந்தான். அவன் எதேச்சையாகப் பூனையைக் கவனித்தபோது, அது குடிப்பதை நிறுத்திவிட்டு ஒளிரும் பசும்மஞ்சள் கண்களால் அவனை உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
'என்ன போகலாமா?' என்று கேட்டான் சிவராமன். 'போயிட்டு சாயந்தரமா வரலாம். அவர் ரெஸ்ட் எடுக்கட்டும்.'
'சரி' என்று எழுந்து கொண்ட கிருஷ்ணன், 'கஞ்சா எதுவும் வச்சிருக்கீங்களா... நீங்க பாட்டுக்கு ஸ்மோக் பண்ணி வைக்காதீங்க, வெளில அனுப்பும்படி ஆயிடும். தயவுசெஞ்சு, கொஞ்ச நாளைக்கு, இங்க இருக்கற வரைக்கும் அதைத் தொட வேண்டாம்' என்றான்.
'இருக்கு... தேவைப்பட்டா ரகசியமா டாய்லட்டுல போய் போட்டுக்கறேன்' என்றார்.
'கொடுங்க. நான் சாயந்தரமா போட்டுட்டு வந்து தர்றேன். நைட் டாய்லெட் போய் யூஸ் பண்ணீக்கங்க' என்றான்.
சரி என்பது போலத் தலையாட்டியபடி, வலது கையால், வலதுகைப் பக்கமிருந்த ஜிப்பா பாக்கெட்டிலிருந்து சிகரெட் டப்பாவையும் சிறு பொட்டலத்தையும் எடுத்துக் கொடுத்தார்.
எதையும் ஏற்றுக்கொள்ளவும், யாருக்கும் சிரமம் தராமல் அனுசரணையாக இருக்கவும் அவர் தீர்மானம் எடுத்துக்கொண்டு விட்டது போலிருந்தது அந்தச் செய்கை.
அவர் ஆஸ்பத்திரியில் இருக்கப் போகும் இந்த நாட்களில் அவருக்குத் தேவைப்படும் பொருட்களென என்னவெல்லாம் வாங்க வேண்டும் என்ற அவர்கள் இருவரும் பேசிக் கொண்டபடியே சென்றார்கள். தட்டு, டம்ளர், ப்ளாஸ்க், இரண்டு ஜோடி வேஷ்டி ஜிப்பா, துண்டு, அவரைத் தொடர்ந்து பராமரிக்க ஒரு அட்டெண்டர் ஏற்பாடு செய்வது பற்றியும் சிவராமன் யோசித்தான்.
மாலையில் மீண்டும் அவரைப் பார்க்க சிவராமனும் மோகனகிருஷ்ணனும் மருத்துவமனை சென்றார்கள். எல்லா நோயாளிகளின் படுக்கைகளைச் சுற்றிலும் உற்றார், உறவினர், நண்பர்களெனப் பலர் இருந்து கொண்டிருந்தார்கள். ஏதேதோ கொடுத்துக்கொண்டும், பேசிக்கொண்டும், மௌனமாகவும் ஆறுதலாகவும் இருந்து கொண்டிருந்தார்கள். கலகலப்பு, கலக்கம், கவலை, மகிழ்ச்சி, வேதனை, கண்ணீர், நம்பிக்கை, ஆறுதல், பராமரிப்பு என மனித மனங்கள் நெகிழ்ந்து கொண்டிருந்தன. ராஜன் மட்டும் தனியாக இருந்தார். கட்டிலின்மீது கால் நீட்டி சாய்ந்து உட்கார்ந்திருந்தபடி அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். மிகவும் அமைதியாக இருப்பது போலிருந்தது அவர் தோற்றம். அவர்கள் இருவரும் அவர் பக்கத்தில் சென்றதும் புன்னகைத்தார்.
'எப்படி இருந்தது. நல்லா ரெஸ்ட் எடுத்திங்களா?' என்று கேட்டான் சிவராமன்.
'டிரிப்ஸ் ஏத்தினது கொஞ்சம் தெம்பாதான் இருக்கு' என்றார் ராஜன். 'கூட்டத்தோடு இருக்கறதும் நல்லாதான் இருக்கு' என்றவர், கிருஷ்ணனைப் பார்த்து, 'போட்டுக் கொண்டாந்திருக்கியா' என்று கேட்டார்.
'இல்ல... டிரை பண்ணிப் பாத்தேன்... போட வரலை. நைட் நீங்களே, கண்டிப்பா வேணும்னா டாய்லட்டுல போய் போட்டுக்கங்க' என்றபடி, சிகரெட் பாக்கெட்டையும் சிறு பொட்டலத்தையும் உள்ளங்கைக்குள் பொத்தி ரகசியம் போலக் கொடுத்தான் கிருஷ்ணன். அவர் அதை சாதாரணமாக வாங்கி ஜிப்பா பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டார்.
நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இரண்டு ஸ்டூலை எடுத்துக் கட்டிலின் இரு புறமுமாகப் போட்டுக்கொண்டு சிவராமனும் கிருஷ்ணனும் உட்கார்ந்துகொண்டார்கள்.
'ஏதாவது சாப்பிடறீங்களா? வாங்கிட்டு வரவா' என்று கேட்டான் சிவராமன்.
'இப்ப ஏதுவும் வேண்டாம்... டிரிப்ஸ் ஏத்தினதில வயிறு நிறைஞ்சு இருக்குற மாதிரி இருக்கு. நாளைக்கு வரும்போது கொஞ்சம் கிரேப்ஸ் வாங்கிட்டு வா... போதும்' என்றார்.
'இங்க இருக்கும்போது ஏதோ நம்பிக்கை சுரக்கிற மாதிரி இருக்கு... ஆனா நீங்க எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டிருக்கிறீர்கள்' என்றான் கிருஷ்ணன்.
ராஜன் லேசாக சிரித்தார். 'வாஸ்த்வம்தான். நான் எந்தவொன்றின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. புதிதான ஏதோ ஒரு நம்பிக்கைக்கும் என்னிடம் இடம் இருப்பதாகத் தெரியவில்லை' என்று ஆங்கிலத்தில் சொன்னார். எது பற்றியாவது அவர் தீவிரமாகப் பேசத் தொடங்கும்போது, அதன் எடுப்பு பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கும். தொடர்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பேசத் தொடங்கினார்.
'நம்பிக்கை' என அழுத்தமாக உச்சரித்தவர், தொடர்ந்து, 'நம்பிக்கை என்பது தன்னளவில் போற்றுவதற்குரிய ஒன்றல்ல' என்றார். 'மனித இன வரலாற்றில் நம்பிக்கையின் பேரால் நடந்திருக்கும் படுகொலைகள், வேறெந்த வகை மரணத்தை வடிவும் அதிகம். மத நம்பிக்கையின் பேரில் நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல் - அரபு நாடுகளுக்கிடையேயான யுத்தங்கள் பற்றி உங்களுக்குத் தெரியும்தானே. யூதர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் என மும்மதத்து மக்களும் பல நூற்றாண்டுகளாக இந்த நம்பிக்கையில் சிக்குண்டு மடிந்துகொண்டே இருக்கிறார்கள்'. அவர் குரலில் துயரம் தோய்ந்திருந்தது. தொடர்ந்து பேசினார்.
'மோசஸ் ஏசு, முகம்மது போன்ற இறைத்தூதர்களிடம் வெளிப்பட்ட ஞானத் தெறிப்புகளிலிருந்துதான் மதங்கள் உருவாகின. ஜெருசலேம் இம்மூன்று மதங்களின் புனித பூமியாக இருந்து கொண்டிருக்கிறது. இறுதித் தீர்ப்பு நாளுக்கான நிகழ்விடமாகவும் அது புனைவு பெற்றிருக்கிறது. வாழ்வை அல்ல, மரணத்தை நினைவூட்டியபடி சலனம் கொள்ளும் நகரம் அது. இறுதித் தீர்ப்பு நாளை முன்னிறுத்தி இயங்கும் நகரம். அதைக் கைப்பற்றி தனது சொந்தமாக்கிக் கொள்ள மதங்கள் மேற்கொள்ளும் வெறியாட்டத்தில் ஜெருசலேம் காலம் காலமாக ஒரு படுகொலைக் களமாக இருந்துவருகிறது. யூத, கிறிஸ்துவ, இஸ்லாமிய அடிப்படைவாதம் நம் காலத்தில் மீண்டும் உக்கிரமடைந்துள்ளது. நம் கால உலக அரங்கில் 'இறுதித் தீர்ப்பு நாள்' என்பது அசுர பலமும் வேகமும் பெற்றுள்ளது, லேசாக மூச்சு வாங்கி, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேசினார்.
'ஜெருசலேமைக் கைப்பற்ற நடக்கும் படுகொலைகள், யுத்தங்கள், பயங்கரவாத நடவடிக்கைகள், முற்றுகைகள், பேரழிவுகள் என இடையறாது நடக்கும் போராட்டங்கள் அந்த நகரைத் தொடர்ந்து யுத்த களமாக வைத்துள்ளன, மதங்களின் கொலைக்களமாகவும் எலும்புக் கிடங்காகவும் அந்நகரம் இருந்து கொண்டிருக்கிறது'.
அவருக்கு இருமல் வந்தது. கடுமையான இருமல். ஒரு கையால் நெஞ்சையும் மறுகையால் வயிற்றையும் அழுத்திப் பிடித்துக் கொண்டு இருமினார்.
'சரி, கொஞ்சம் அமைதியா இருங்க' என்றான் சிவராமன்.
அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். கொஞ்சம் தண்ணீர் குடித்தார். மீண்டும் நன்றாகச் சாய்ந்துகொண்டு பேச ஆரம்பித்தார். பக்கத்துப் படுக்கையிலிருந்த நடுத்தர வயது நோயாளியும் அவருக்குத் துணையாக இருந்த இளைஞனும் கூட அவர் பேசுவதை ஆவலுடன் கேட்டுக்கொண்டிருப்பதை கிருஷ்ணன் கவனித்தான்.
'நடுநிலைமை என்ற பாவனையில் ஐரோப்பா இஸ்ரேல் மக்களுக்கும் அவர்களது கலாச்சாரத்துக்கும் ஆதரவளிப்பதால், அது அரபுப் பண்பாட்டைத் தாழ்மைப்படுத்தி ஒரு ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்தியுள்ளது. மிகவும் வளர்ச்சியுற்ற யூத மக்கள் தங்கள் மத்தியில் ஒரு இடத்தைப் பெற்றிருக்கும்போது, அரபு மக்களுக்கு ஒரு புதிய ஏகாதிபத்தியத்துக்கு இரையாகிவிடுவோமோ என்ற அச்சம் இருப்பது நியாயம்தான்' என்றார்.
அவர் குரல் தளர்ந்துவிட்டிருந்தது. அவர் பேசுவதைக் கேட்பதில் சிவராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஆர்வமும் கிளர்ச்சியும் இருந்த போதிலும் அவர் தன்னை வருத்திக் கொள்கிறாரோ என்ற பதற்றமும் இருந்தது.
'இறுதித் தீர்ப்பு நாள்! என்ன ஒரு அழகான கற்பனை... என்ன ஒரு மகத்தான நம்பிக்கை! ஆனால், அதன் விளைவுகள் எவ்வளவு கொடூரமானவை' என்று கூறிவிட்டுக் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்.
சிறிது நேரம் கழிந்ததும், டாய்லெட் போக வேண்டுமென்றார். அவருடைய படுக்கைக்குப் பக்கத்தில்தான் டாய்லெட் செல்வதற்கான பின்புற வாசல் இருந்தது. நடப்பதற்கு வெகுவாக சிரமப்பட்டார். கைத்தாங்கலாக இருவரும் கூட்டிப் போனார்கள். அவருடைய கைகள் மிக மோசமாக நடுங்கின. டாய்லெட்டுக்குள் நுழைந்துகொண்டதும், சுவரில் சாய்ந்து நின்றுகொண்டு, ஒரு சிகரெட்டை வெளியில் எடுத்தார். அதன் ஒரு முனையை உள்ளங்கையில் தட்டி, சிகரெட்டை விரல்களால் நீவி புகையிலையை வெளியில் எடுக்க முற்பட்டார். கை விரல்கள் மோசமாக உதறியதில், சிகரெட் பிடிமானமற்றுக் கீழே விழுந்தது. பதறி அதை எடுக்கத் தள்ளாடினார். அதற்குள் அது டாய்லெட் தரையின் ஈரச் சொதசொதப்பில் ஊறிவிட்டிருந்தது. 'ஐயோ... விடுங்க' என்று அலறினான் கிருஷ்ணன்.
அவர் மிகவும் தளர்வுற்றவராக, டாய்லெட்டில் குந்தி உட்கார முயற்சித்தார். முடியவில்லை. அவர் குனிந்து உட்கார அவர்கள் உதவிப் பார்த்தார்கள். பாதிக்கு மேல் அவரால் குனிய முடியவில்லை. அரை குறையாகக் குனிந்திருந்தபடியே முயற்சித்தார். எதுவும் வரவில்லை. எழுந்துகொண்டு, கைகளால் தலையைத் தாங்கியபடியே, 'கடவுளே, என்னைச் சீக்கிரம் உன்னிடம் அழைத்துக்கொள்' என்று கதறி அழுதார். இருவரும் செய்வதறியாது கலக்கத்துடன் அருகில் நின்றிருந்தார்கள். 'சரி, வாங்க போகலாம்!' என்றான் கிருஷ்ணன். குவளையில் தண்ணீர் பிடித்து அவருடைய பிருஷ்டத்தைக் கழுவி, கால்களிலும் நீருற்றினான் சிவராமன்.
வேட்டியைத் தூக்கிக் கட்டியபடியே அவர்களுடன் திரும்பி வந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டார். உடம்பு, கை கால்களெல்லாம் வெடுவெடுவென்று நடுங்கின.
'என்ன செய்யுது?' என்று கேட்டான் சிவராமன், 'குளிருது... ரொம்பக் குளிருது. சிதையில் போய் படுத்துக்கொண்டால்தான் இந்தக் குளிர் அடங்கும்' என்றார்.
என்ன சொல்வதென்று தெரியாமல் இருவரும் மருட்சியோடு நின்றிருந்தார்கள். சற்று நிதானித்து, 'சரி படுத்துக்கங்க'' என்றபடி வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த போர்வையைப் பையிலிருந்து வெளியில் எடுத்தான் சிவராமன். அவர் படுத்துக்கொண்டதும் போர்த்திவிட்டான். அவர்களுக்கு எவ்வித சிரமமும் தந்துவிடக்கூடாது என்று எண்ணியவர் போல ஒடுங்கிப் படுத்துக் கொண்டார் ராஜன்.
அவர் உதடுகள் ஏதோ முணுமுணுப்பது போலத் தோன்றியது.
'என்ன வேணும். டாக்டரை வேணும்னா கூட்டிட்டு வரட்டுமா?' என்று கேட்டான் சிவராமன்.
வேண்டாம் என்பது போலத் தலையசைத்தார்.
அவர் தலைமாட்டுக்குப் பக்கமாக ஸ்டூலை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தான் சிவராமன். மீண்டும் அவர் உதடுகள் முணுமுணுத்தன.
'என்ன' என்றபடி அவரை நோக்கிக் குனிந்தான் சிவராமன். கிருஷ்ணன் நகர்ந்து சிவராமனை ஒட்டி நின்று கொண்டான்.
'I fall upon the thorns of life!
I bleed....' என்றார். அதையே இரண்டு மூன்று முறை சொன்னார். கண்கள் மூடித் தூங்க முயற்சித்தார். !
சிறிது நேரம் இருவரும் அவரைப் பார்த்தபடியே இருந்தார்கள். 'சரி, அவர் தூங்கட்டும். நாளை காலைல வரலாம்' என்றான் கிருஷ்ணன். அவரிடமிருந்து விலக மனமில்லாதது போல, சிவராமன் கலக்கத்துடன் அப்படியே உட்கார்ந்திருந்தான்.
கிருஷ்ணன், சிவராமனின் தோள்மீது கை வைத்தான். 'சரி போகலாம்' என்றபடி எழுந்து கொண்டான் சிவராமன்.
பக்கத்துப் படுக்கை நோயாளிக்குத் துணையாக இருந்த இளைஞனிடம், 'கொஞ்சம் பார்த்துக்கங்க... நாளை காலைல வர்றோம்' என்று தயங்கியபடி சொன்னான் சிவராமன். அந்த இளைஞன் அசட்டையாகத் தலையாட்டினான்.
மறுநாள் காலை மருத்துவமனையில் ராஜன் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டை நோக்கி சிவராமனும் கிருஷ்ணனும் வேக வேகமாக நடந்துகொண்டிருந்தார்கள். காலை ஆறரை, ஏழு மணிக்கெல்லாம் காஃபியோடு வந்து சிவராமன் பார்த்துக்கொள்வதென்றும் எட்டரை, ஒன்பது மணியளவில் கிருஷ்ணன் வந்து கவனித்துக் கொள்வதென்றும் அவர்கள் பேசி வைத்திருந்தார்கள். ஆனால் சிவராமனுக்கு வீட்டில் ஒரு நெருக்கடி. காலையில் கிளம்ப முடியாமல் போய்விட்டது. நேரமாகிவிட்டதால் சேர்ந்தே போய்விடலாமென நினைத்து கிருஷ்ணன் வீட்டுக்குப் போய் அவனையும் கூட்டிக்கொண்டு சிவராமனின் ஸ்கூட்டரில் இருவரும் மருத்துவமனை வந்து சேர்ந்தபோது மணி எட்டரையை நெருங்கிவிட்டிருந்தது. மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அவர்கள் அந்த வார்டை நெருங்கிவிட்டிருந்த போது, சீருடைப் பணியாளர் ஒருவர் ஒரு சிறிய தகர டிரேக்கள் கொண்ட தள்ளுவண்டியில் ரொட்டி பாக்கெட்டுகளோடு அந்த வார்டிலிருந்து வெளியேறி வந்துகொண்டிருந்தார். கதவுகளற்ற நுழைவாசலருகே ஒரு பூனை நின்றுகொண்டிருந்தது. அது நேற்று அவன் பின்வாசலருகே பார்த்த பூனைபோல் தானிருந்தது. ஆனால் அப்படி உறுதியாகச் சொல்ல முடியாது என்பது போலவும் அவனுக்குத் தோன்றியது. நேற்று பார்த்த பூனை முழு வெள்ளையாக இருந்ததாகத்தான் ஞாபகம். ஆனால் இதன் உடம்பில் அங்கங்கே சில பழுப்பு வண்ணத் திட்டுகள் இருந்தன.
அவர்கள் வார்டுக்குள் நுழைந்தபோது, எல்லோருடைய பார்வையும் சட்டென அவர்கள்மீது குவிந்தது. ராஜனுடைய படுக்கை காலியாக இருந்தது. அவர்களுக்கு திக்கென்றானது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். தாக்குப் பிடிக்க முடியாமல் அங்கிருந்து நழுவிவிட்டாரோ என்ற தோன்றியது. நேற்று பூனைக்குப் பாலும் ரொட்டியும் கொடுத்த அந்த அம்மா பதற்றத்தோடு அவர்கள் முன்வந்து. 'என்னப்பா.. இப்படி விட்டுட்டுப் போயிட்டீங்களே... உங்க ஐயா உங்களை விட்டுப் போயிட்டாருப்பா...' என்று தழுதழுத்த குரலில் கூறினார்கள்.
ஒரு கணத் திகைப்பிற்குப் பின் சுதாரித்து 'எப்பம்மா... எப்படிம்மா...' என்று கிருஷ்ணன் கேட்டான்.
'ராத்திரி தூக்கத்திலேயே போயிட்டாரு போலப்பா. எங்க யாருக்கும் எதுவும் தெரியாது. யாருக்கும் தொல்லை இல்லாம... தொல்லை கொடுக்காம போய்ச் சேந்துட்டாரு. காலைல டாக்டர் ரவுண்ட்ஸ் வந்து பாத்தப்பதான் தெரிஞ்சது... நல்ல சாவுதான். என்ன நீங்கள்லாம் பக்கத்துல இல்லாததுதான் குறை...' என்றார் அந்த அம்மா.
இருவரும் என்ன சொல்தென்று தெரியாமல் அதிர்ந்து போய் நின்றிருந்தார்கள். ஒருவிதக் குற்றவுணர்வு அவர்கள் மீது இறங்கியிருந்தது. கொஞ்சம் தயக்கத்தோடு சிவராமன், 'இப்ப எங்க...' என்றான்.
'டாக்டர் பாத்துட்டு மார்ச்சுவரிக்குக் கொண்டு போகச் சொல்லிட்டாருப்பா...'
'சரிம்மா நாங்க டாக்டரைப் போய்ப் பார்க்கிறோம்' என்றான் சிவராமன்
அவர்கள் இருவரும் டாக்டருடைய அறைக்குச் செல்வதற்காகத் திரும்பியபோது, 'இந்தக் காலத்து பசங்களெல்லாம் இப்படித்தான் இருக்காங்க' என்று ஒரு ஆண் குரல் சொல்வது கேட்டது.
டாக்டரின் அறையில் அவருக்கு எதிரிலிருந்த இருக்கைகளில் சிவராமனும் கிருஷ்ணனும் அமர்ந்திருந்தார்கள். டாக்டரின் முன் ராஜனுடைய எக்ஸ்ரே மற்றும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் இருந்தன.
'என்னுடைய பதினைந்து வருட அனுபவத்தில் ஒருவருடைய மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் பார்க்கப்படும் முன்பாகவே, அவர் இறந்து போவது இதுதான் முதல் முறை... அவருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமல் போனது ஒரு இழப்புதான்' என்றார் டாக்டர். சிறிய மௌனத்துக்குப் பின் அவர் கூறினார்: 'உண்மையில் அவர் சட்டென இறந்துவிட்டதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அவர் இவ்வளவு நாள் உயிரோடிருந்ததுதான் பெரிய ஆச்சரியம். ஒரு பக்க நுரையீரலே அவருக்கு இல்லை. எப்படி தாக்குப் பிடித்தாரென்றே தெரியவில்லை... சரி, அடுத்து ஆக வேண்டியதைப் பாருங்கள்' என்றார் டாக்டர்.
'இப்ப அதுதான் டாக்டர் பெரிய பிரச்சனை' என்றான் சிவராமன். 'நேத்து ராஜனைச் சேர்த்திருக்கும் தகவலை அவரோட மனைவிக்குத் தெரியப்படுத்தி விடுவதுதான் நல்லது என என் மனைவி மாலா அபிப்ராயப்பட்டாள். அவருடைய மனைவி ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருந்து அலுவலகம் சென்று வருவதால், நேற்று மாலை அந்த விடுதிக்குச் சென்று அவர்களைப் பார்த்து சொல்லிவிடும்படி நான் மாலாவிடம் சொன்னேன். அவளும் போய் பார்த்திருக்கிறாள். ஆனால் அவர்கள் அவர் பற்றி எதுவும் கேட்க விரும்பவில்லை என்று பேச்சை முறித்துவிட்டிருக்கிறார்கள். இப்ப மறுபடியும் அவர்களைத்தான் போய்ப் பார்த்து விசயத்தைச் சொல்ல வேண்டும் என்றான். 'அது வரை உடல் இங்கு மார்ச்சுவரியில் இருக்கலாம்தானே' என்று கேட்டான்,
'அது ஒன்னும் பிரச்சனையில்லை' என்றார் டாக்டர். 'நீங்க போகும்போது, மார்ச்சுவரி போய் பார்த்துட்டு அங்கிருக்கும் ஆளையும் கவனிச்சுட்டுப் போங்க... நீங்க போய் தைரியமா அந்த அம்மாவைப் பாருங்க. ஆள் உயிரோட இருக்கிறவரைதான் வெறுப்பு, சண்டை, கோபதாபமெல்லாம்... ஆள் இறந்துட்டா, அது எல்லாப் பிரச்சனைக்கும் நிரந்தர முடிவென்பதால், அடுத்து ஆக வேண்டியதைக் கவனிப்பதற்கு மனம் தயாராகிவிடும். நீங்கள் அவருடைய மனைவியைப் பாருங்க, எல்லாம் சுலபமாக முடிந்துவிடும்.'
டாக்டரின் வார்த்தைகள் அவர்களுக்குத் தெம்பூட்டின. டாக்டரின் அறையை விட்டுக் கிளம்பி பிண அறைக்குச் செல்லும்வரை அவர்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை
மருத்துவமனையின் மரங்கள் நிறைந்த வெட்டவெளிப் பகுதியொன்றின் ஒரு மூலையில் பிண அறை இருந்தது. அந்த வெட்டவெளியில் அவர்கள் நடந்து சென்றபோது, எண்ணற்ற காகங்கள் அங்கு இருந்துகொண்டிருந்தன. அவ்வளவு காகங்களை ஒருசேர அதற்கு முன் பார்த்திருக்கவில்லை என கிருஷ்ணன் நினைத்தான். எல்லாமே ஒன்றுபோல இருப்பதாகவும், எந்தவொன்றும் தனித்து அடையாளம் காணக் கூடியதாக இல்லையெனவும் நினைத்தான். அப்படி இல்லாமல் இருக்குமா என்ன? அவனுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.
ஒரு பெஞ்சின்மீது ராஜனின் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அவர்கள் இருவரும் உடலைப் பார்த்தபடி மௌனமாக நின்றிருந்தார்கள். சிவராமனுக்குக் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. நேற்று காலை அவரை சிகிச்சைக்காக அழைத்துக் கொண்டு வந்தபோது, முறையான சிகிச்சை பெற்றால் அவர் தேறிவிடுவார் என்றுதான் அவர்கள் நினைத்திருந்தார்கள். கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஒரு இக்கட்டை அவர்கள் இப்போது எதிர்கொண்டிருந்தார்கள். அவர் வெகு நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பதாகக் கிருஷ்ணனுக்குத் தோன்றியது. மரணம் அவருடைய முகத்துக்கு ஒளியூட்டியிருந்தது. நிறைவும் சாந்தமும் அந்த ஒளியில் புலப்பட்டன. அவர் என்பது இப்போது இந்த உடல் மட்டும்தான். இந்த உடல் எரிக்கப்பட வேண்டும் அல்லது புதைக்கப்பட வேண்டும். அதை இந்த உடலுக்கு உரியவர்கள் மேற்கொள்ள வேண்டும். அவர் உயிரோடு இருந்தபோது அவருக்கு நெருக்கமாவும் அணுக்கமாகவும் இருந்த அவர்கள், உயிர் பிரிந்து உடல் என்றானதும் அந்நியமாகி விட்டார்கள். இந்த உடலோடு அவர்களுக்கு எவ்வித பந்தமுமில்லை. ஆனால் இந்த உடலை அதற்கு உரியவர்களிடம் சேர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. அதுதான் இனி அவர்கள் செய்யவேண்டியது. சில நாட்களுக்கு முன்பு ராஜன் சொன்ன ஒரு விசயம், இப்போது ஒரு பிரத்தியட்ச உண்மையாக அவர்கள் முன் இருந்து கொண்டிருக்கிறது. அன்று அவர் சொன்னது இப்போது கிருஷ்ணனின் நினைவுக்கு வந்தது. ஒரு மாதத்துக்கு முன்பு, சென்னை சென்ற நண்பர்களை எல்லாம் பார்த்துவிட்டு வரப்போவதாகச் சொல்லி சிவராமனிடம் அவர் பணம் கேட்டார். இவ்வளவு மோசமான உடல்நலத்தோடு இப்போது ஏன் அலையவேணடும் என சிவராமன் கொஞ்சம் கறாரான குரலில் சொன்னான். அப்போது கிருஷ்ணனும் உடனிருந்தான். அதற்கு அவர், 'ஏன், போற வழியில் செத்திடுவேனு பயப்படுறியா?...' இருக்கிற வரைக்கும்தான் இந்த உடம்பு என்னோட பிரச்சனை. செத்துட்டா இந்த உடம்பை என்ன செய்யணும், எங்க சேக்கணும்கிறது மத்தவங்களோட பிரச்சனை. புரியுதா...?' என்றபடி லேசாகச் சிரித்தார். இப்போதும் உள்ளுக்குள் அந்த சிரிப்பு அவரிடம் இருந்துகொண்டிருப்பது போல் கிருஷ்ணனுக்குத் தோன்றியது. இப்போது அவருடைய பிரச்சனைகளிலிருந்து அவர் வெளியேறிவிட்டார். அந்த உடல் பெரும் சுமையாய் அவர்கள் மீது ஏறிவிட்டிருந்தது.
ஒரு இளம்வயதுப் பணியாளர் வேகமாகப் பிண அறைக்குள் நுழைந்தார். ஒரு மரத்தடியில் நின்று பீடி குடித்துக் கொண்டிருந்தவர், நாங்கள் உள்ளே நுழைவதைப் பார்த்துவிட்டு வேகமாக வந்திருக்க வேணடும். அவரிடமிருந்து பீடி வாசனை குப்பென்று வந்தது.
'அய்யோவோட பசங்களா...' என்று கேட்டார் அவர்.
'இல்லை... தெரிஞ்சவங்க' என்றான் கிருஷ்ணன்
'உறவுக்காரங்க யாரும் வரலியா...? நீங்கதான் சேத்தீங்களா?'
'இருக்காங்க இனிமேதான் அவங்களைக் கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு வரணும்' என்றான் கிருஷ்ணன்
அந்தப் பணியாளரின் முகபாவம் எதுவும் புரியாதது போல் இருந்தாலும் அவர் தலையாட்டினார். பிறகு, 'ஐயாவோட ஜிப்பா பாக்கெட்டுல சிகரெட் டப்பா, தீப்பெட்டியோட ஒரு கஞ்சா பொட்டலமும் இருந்துச்சு...' என்றார்.
'இருக்கட்டும்... அத நீங்க எடுத்துக்கங்க...' என்றான் கிருஷ்ணன்,
அவர் தலையாட்டினார். ராஜனின் மரணத்தின்போது அவரிடம் எஞ்சியிருந்தது அவைதான் என்ற உண்மை அவர்களைத் தாக்கியது. கஞ்சாப் பொட்டலம் பயன்படுத்தப்படாமல் தங்கிப் போனதற்கு அவன் ஒரு காரணம் என்ற எண்ணம் ஒரு குற்றவுணர்வாகக் கிருஷ்ணனிடம் ஊடுருவியது. ஒருவேளை அவர் கஞ்சா குடித்துக்கொண்டிருந்திருந்தால் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்திருப்பாரோ... அந்தப் பிண அறைப் பணியாளர் ஏனோ திரும்பத் திரும்ப 'அய்யா பாக்கெட்டில கஞ்சாப்பொட்டலம் இருந்தது' என சொல்லிக்கொண்டே இருந்தார்.
'சரி நாங்க கிளம்பறோம். இனிமே போய்தான் அவரோட உறவுக்காரங்களைப் பார்த்து விசயத்தை சொல்லணும். அதுக்கப்புறமா வந்து 'பாடி' ய எடுத்துக்கறோம். அதுவரை இங்கேயே இருக்கட்டும். பாத்துக்கங்க' என்றான் சிவராமன்.
'அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் சார்... நீங்க போயிட்டு வாங்க ஐஸ் பார் வாங்கணும்... பணம் கொடுத்துட்டுப் போங்க...' என்றார்.
சிவராமன் பர்ஸை எடுத்து, அதிலிருந்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினான். அவர் அடைந்த புளகாங்கிதம் அவருடைய முகத்தில் தெரிந்தது. ஏதோ நினைவு வந்தவனாக சிவராமன், தன் கைப் பையிலிருந்து திராட்சைப் பழப் பொட்டலத்தை எடுத்து அவரிடம் கொடுத்தான்.
அவர் மலர்ச்சியோடு அதை வாங்கிக்கொண்டு 'அய்யாவுக்கு வாங்கி வந்ததுங்களா?' என்று கேட்டார். இருவரும் தலையாட்டியபடி கிளம்பினார்கள்.
சிவராமனின் ஸ்கூட்டர் ஓர் அலுவலகத்தின் முன் நின்றது. ராஜனின் மனைவி லட்சுமி பணியாற்றும் அலுவலகம் அது. ராஜனின் உடலை ஒப்படைக்கும் பாரத்தைச் சுமந்தபடி, இருவரும் தயக்கத்தோடு அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள். அவர்கள் மனம் கனத்திருந்தது. இருவரும் அந்த அம்மாவை இதுவரை பார்த்ததுகூடக் கிடையாது. அவரைச் சந்திப்பதிலும், ராஜனுடைய மரணச் செய்தியை அவரிடம் சொல்ல இருப்பதிலும் கடுமையான பதற்றம் அவர்களைப் பீடித்திருந்தது. அவர்கள் இதுவரை எதிர் கொண்டிராத இக்கட்டான நிலைமை. இப்போது எதிர் கொண்டாக வேண்டிய கட்டாயம்.
அவர்கள் அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, அது ஒரு விசாலமான கூடமாக இருந்தது. மூன்று வரிசைகளாக, முப்பதுக்கும் மேற்பட்டோர் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய மேசைகளிலும் ஏகப்பட்ட பைல்கள் குவிந்திருந்தன. நுழைந்ததும், முதலாவதாகத் தென்பட்ட பணியாளரிடம், திருமதி லட்சுமியைப் பார்க்க வேண்டுமென்று சிவராமன் ஆங்கிலத்தில் சொன்னான். அவர் ஒரு சிப்பந்தியை வரவழைத்து விபரம் சொன்னார். அந்த சிப்பந்தி வராந்தாவில் இருந்த ஒரு பெஞ்சில் அவர்களை உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே போனார். அவர்கள் பரஸ்பரம் எதுவும் பேசிக் கொள்ளாமல் காத்திருந்தனர். அவர்களுடைய மௌனத்தின் ஊடாக அவர் உடல் இருந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியையும் அவர்கள் உணர்ந்துகொண்டிருந்தார்கள். பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அவர்களை நோக்கி வந்தார். அவர்களுக்குப் பக்கத்தில் அவர் வந்ததும் அவர்கள் இருவரும் எழுந்துகொண்டார்கள்.
'யார் நீங்க? என்ன விசயம்?' என்று தன்மையான குரலில் அவர் கேட்டார்.
'ராஜன் சாரோடஃ ப்ரெண்ட்ஸ்...' என்று இழுத்தான் சிவராமன்
அவனை சட்டென இடைமறித்து, 'சரி என்ன விஷயம் சொல்லுங்க?' என்ற அவருடைய குரலில் கண்டிப்பு வெளிப்பட்டது.
'ராஜன் சார் இறந்துட்டாங்க' என்று வெடுக்கெனச் சொன்னான் கிருஷ்ணன்.
ஒரு கணம் அந்த அம்மா திடுக்கிட்டுப் போனார். நிதானத்திற்குத் திரும்பாமலேயே, 'எங்க... எப்ப...?' என்றார். அவருடைய குரலில் பதற்றம் வெளிப்பட்டது.
'ஜி.எச்.ல... நேத்து காலைலதான் சேத்தோம். ராத்திரி தூக்கத்துலேயே இறந்துட்டார்...' என்றான் கிருஷ்ணன்.
அவர் பெஞ்சில் உட்கார்ந்துகொண்டு, அவர்களையும் உட்காரச் சொன்னார். இருவரும் உட்கார்ந்து கொண்டார்கள்.
'நேத்து ஒரு பொண்ணு ஹாஸ்டலுக்கு வந்து அவரை ஹாஸ்பிடல்ல சேர்த்துக்கிறதா சொல்லுச்சு... அது யாரு தம்பி' என்று கேட்டார்.
'என்னோட ஒய்ப் தான் மேடம்' என்றான் சிவராமன்.
'அவரால நான் பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை தம்பி... அதனாலதான் அப்படி முறிச்சு பேசும்படி ஆயிடுச்சு... இந்த வேலைனு ஒண்ணு இருந்ததால எப்படியோ சமாளிச்சுட்டேன்... சரி, அதையல்லாம் இப்ப பேசி எனன் ஆகப்போகுது...' அவர் மெதுவாக நிதானமடைந்து கொண்டிருப்பது தெரிந்தது.
'பாடி இப்ப எங்க இருக்கு..'
'மார்ச்சுவரிலதான் மேடம்' என்றான் சிவராமன்.
ஒரு நிமிட மௌனத்துக்குப் பின் அவர், 'இருங்க எங்க அண்ணன்ட ஃபோன்ல பேசிட்டு வாறேன்... அதுக்கப்புறம் என்ன செய்யறதுன்னு முடிவு பண்ணலாம்' என்றபடி எழுந்து உள்ளே சென்றார்.
அவர் திரும்பி வரும் வரை இருவரும் மௌனமாகக் காத்திருந்தார்கள். இடையில் மௌனத்தைக் கலைத்து 'பாவம், இந்த அம்மா...' என்றான் சிவராமன், மௌனமாகத் தலையாட்டினான் கிருஷ்ணன்.
அவர் திரும்பி வந்தபோது முகம் தெளிந்திருந்தது. 'எங்க அண்ணன்ட பேசினேன். பாடிய நாளை காலை 7 மணிக்கு மார்ச்சுவரில் இருந்து நேரா தத்தநேரி சுடுகாட்டுக்குக் கொண்டு வரச் சொல்றாரு... அங்க வைச்ச சடங்கெல்லாம் செஞ்சுக்கலாம்னார்...' என்று கூறிவிட்டுக் கொஞ்ச நேரம் தயங்கினார். பிறகு தழுதழுத்த குரலில், 'தம்பி நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. கடைசி காலத்துல அவருக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கீங்க... நாளைக்கு காலைல பாடிய சுடுகாட்டுக்குக் கொண்டு வந்துட்டீங்கன்னா பெரிய உபகாரமா இருக்கும்...' என்றார்.
இருவரும் சரி என்பது போல் தலையாட்டினார்கள். அவர் கையயடுத்துக் கும்பிட்டார். அவருடைய கண்களில் நீர் ததும்பிருந்தது.
'சரிங்க மேடம், நாளைக்குக் காலைல பாடிய சுடுகாட்டுக்குக் கொண்டு வந்துடறோம்...' என்றான் சிவராமன். அவர்கள் இருவருக்கும் பின்னாலிருந்து யாரோ ஒருவர் அவர்கள்மீது சுமத்தப்பட்டிருந்த பெரும் பாரத்தை இறக்கிவைத்தது போல அவர்கள் உணர்ந்தார்கள். இருவரிடமிருந்தும் ஆசுவாசப் பெருமூச்சு வெளிப்பட்டது.