Search This Blog

Showing posts with label Sweet Mid Tamil Songs. Show all posts
Showing posts with label Sweet Mid Tamil Songs. Show all posts

Monday, January 11, 2021

உறவுகள் தொடர் கதை

 


கே. ஜே. யேசுதாஸ் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு ! '' உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை...
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே... அவள் அப்படித்தான் படத்தில் இளையராஜாவின் அற்புதமான இசை ஜேசுதாஸின் மனதை வருடும் குரல் கங்கை அமரனின் வைர வரிகள் இந்த பாடலை சாகா வரம் பெற்ற பாடலாக உருவாக்கியுள்ளது.

Thursday, December 31, 2020

இசையமைப்பாளர் ஷியாம்

கேரளத் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஷியாம். என்றாலும் இவரது பூர்வீக ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாசரேத். ஆனால் இவரது நினைவு தெரிந்த நாளிலிருந்து சென்னையில்தான் வளர்ந்தது படித்தது எல்லாம். லால்குடி ஜெயராமிடம் முறையாக வயலின் கற்றவர்..
இசையமைப்பாளர் ஷியாம் "மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்" பாட்டைக் கேட்டதுமே "அடடா இளையராஜா என்னமா இசையமைத்திருக்கிறார்" என்று என் காது படச் சொன்னவர்கள் உண்டு. இன்னும் அப்படியே நம்புபவர்களும் உண்டு. ஆனால் அந்தப் பாடல் இடம்பெற்ற "மனிதரில் இத்தனை நிறங்களா" படத்தின் இசையமைப்பாளர் ஷியாம். இந்தப் பாடலில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு பின்னணியில் ஒலிக்கும் பெண் குரல் எஸ்.பி.சைலஜாவுக்கு இதுவே முதல் பாடலாக அமைந்தது. இதே படத்தில் "பொன்னே பூமியடி" அந்தக் காலத்து இலங்கை வானொலி நினைவுகளைப் பலருக்குக் கிளப்பி விடும் அழகான பாட்டு. எஸ்.ஜானகியும் வாணி ஜெயராமும் பாடியிருப்பார்கள். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடைய இசைப் பட்டறையில் விளங்கிய வாத்திய விற்பன்னர் சாமுவேல் ஜோசப் தான் இந்த ஷியாம். கேரளத் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஷியாம். என்றாலும் இவரது பூர்வீக ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாசரேத். ஆனால் இவரது நினைவு தெரிந்த நாளிலிருந்து சென்னையில்தான் வளர்ந்தது படித்தது எல்லாம். லால்குடி ஜெயராமிடம் முறையாக வயலின் கற்றவர்.1954-இல் கிருத்தவக் கல்லூரியில் பி.ஏ., படித்துக் கொண்டிருந்தபோது தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய இசையைக் கற்றார். மக்கள் கலைஞர் ஜெய்சங்கரும் இவரும் வகுப்புத் தோழர்கள். இசை மீது ஆர்வத்தால் சட்டப்படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு திரையுலகில் நுழைந்தார். அன்றைய பிரபல இசையமைப்பாளர்களான சி.என்.பாண்டுரங்கம், எஸ்.தக்ஷிணாமூர்த்தி ஆகியோருடனும் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி ஆகியோருடனும் உதவியாளனாக இருந்து இசையறிவை வளர்த்துக் கொண்டேன். இவர் தனியாக இசையமைத்த முதல்படம் “அம்மா-அப்பா”. இப்படம் நடிகர் ரவிச்சந்திரன் – ஷீலாவின் சொந்தப்படம். பிறகு ஷீலாவின் மூலமாக மலையாளத் திரையுலகில் நுழைந்தார்.
இந்தி இசையமைப்பாளர் சலீல் சவுத்ரியிடம் பல படங்களுக்கு உதவியாளனாகப் பணிபுரிந்ததனால் இவரது இசையமைப்பில் இந்தி மெட்டு சாயல்கள் காணப்படும்.

ஷியாம் மேதமை நிறைந்த இசையமைப்பாளர். அவருடைய பாட்டுகளுக்கு சில தனித்தன்மை உண்டு. முழுமையாகவே மேலைநாட்டு இசைப்பாணி கொண்டவை. ராக், ப்ளூஸ் போன்ற பாணியிலும் இசையமைத்திருக்கிறார். ஆனால் பெரும்பாலும் கிளாஸிக் பாணியில்தான். ஆனால் அதை மிகத்திறமையாக இந்திய இசை போல ஆக்கிவிடுவார். அந்தக் கதைச்சந்தர்ப்பத்துக்கு முழுமையாகவே ஒத்துவரும்படி அந்த இசை அமைந்திருக்கும். 

சலீல் சௌதுரிக்கு நிறைய சீடர்கள் உண்டு. ஆர்.கே.சேகர், அவருடைய மகன் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்கள். ஆனால் மிகச்சிறந்த சீடர் ஷியாம்தான். அர்ப்பணிப்புள்ள சீடர் மட்டுமல்ல, அவரிடம் நெடுங்காலம் இருந்தவர். அவருடைய அந்த மரபை முன்னெடுத்தவர் சலீல் சௌதுரி பாடலில் எதிர்பாராத நோட்டுகள் விபரீதமான திருப்பம் போல வருவதுதான் அழகு. 

மலையாளத்தில் அவருடைய சாதனைப்பாடல்கள் ஏராளமாக உள்ளன. பல பாடல்களை இங்கே உள்ள இசையமைப்பாளர்கள் திரும்பப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவர் அடிப்படையில் வயலின் கலைஞர். வயலினில் ஒரு மேதை என்றுதான் சொல்வேன். அவர் இசையமைக்கும் பாடல்கள் எல்லாமே வயலின் நோட்டுகள் கொண்டவைதான். உதாரணமாக இந்த மாந்தளிரே பாடலில் மிகக் கவர்ச்சியான இடம் மாந்தளிரே மயக்கமென்ன உன்னை தென்றல் தீண்டியதோ என்ற வரியிலுள்ள தென்றல் என்ற சொல். அது ஒரு சரியான வயலின் நோட். கேட்கக்கேட்க புதுமையாக உள்ளது அது. என்னைப்போல் என்ற எதிர்நோட்டும் வயலினுக்கு உரியதுதான். நிறையப்பாடல்களை வயலினாகவே கேட்டு ரசிக்கலாம்.

எஸ்.பி.ஷைலஜா, கோவை முரளி, ராஜ்குமார் பாரதி, ஹரன் மற்றும் சுஜாதா போன்ற பாடகர், பாடகியர் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
ஐதராபாத்தில் எடுக்கப்பட்ட ஆங்கிலப் படமான ‘The Naughty Pair” படத்திற்கு இசையமைப்பாளர் இவரே.
இவரது இசையமப்பில் 1972-இல் உருவான ‘கருந்தேழ் கண்ணாயிரம்’ என்ற மாடர்ன் தியேட்டர்சாரின் படத்தில் இடம்பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மனோரமா, சதன் ஆகியோர் இணைந்து பாடிய ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே’ என்ற பாடல் இவரை மிகவும் பிரபலமாக்கியது. ஆர்.சி.சக்தியின் இயக்கத்தில் 1976-இல் வெளிவந்த ‘உணர்ச்சிகள்’ படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜானகி இணைந்து பாடிய ”நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்” என்ற பாடலும் பிரபலம். 
இதே ஆண்டில் வெளிவந்த மனிதரில் இத்தனை நிறங்கள் படத்தில் இடம்பெற்ற ‘மழைதருமோ என் மேகம்’, பொன்னே பூமியட என்ற பாடலின் மெட்டினை ஒரு மலையாளப் படத்திற்கும் பயன்படுத்தியிருந்தார். 1979-இல் ‘பஞ்சகல்யாணி’ என்ற படத்திற்கு இசையமைத்தார். இதே ஆண்டில் நீ சிரித்தால் நான் சிரிப்பேன் படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய ‘உன்னைப் படைத்ததும் பிரம்மன் ஒருகணம் மயங்கி நின்றுவிட்டான் என்ற பாடல் அனைவரையும் மயங்கச் செய்தது. இதே ஆண்டில் வெளிவந்த ‘தேவதை’, ‘நான் நன்றி சொல்வேன்’, ‘தேவைகள்’ முதலிய படங்களின் பாடல்களும் மிகவும் வரவேற்பைப் பெற்றன.
‘மற்றவை நேரில்’ [1980], ‘வா இந்தப் பக்கம்’ [1981], ’இதயம் பேசுகிறது’ [1982], குப்பத்துப்பொண்ணு [1982],’கள்வடியும் பூக்கள்’, ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது [1983], நன்றி மீண்டும் வருக, குயிலே குயிலே [1984] மலையாளத்தில் இப்படம் கூடினெத்தேடி என்ற பெயரில் வெளியானது, குழந்தை ஏசு [1984], நலம் நலமறிய ஆவல் [1984], சந்தோஷக்கனவுகள் [1985], விலாங்கு மீன் [1985], பாசம் ஒரு வேஷம் [1987],விலங்கு[1987], சலனம் [1987], ஜாதிப்பூக்கள்[1987], கல்லுக்குள் தேரை [1987] போன்ற படங்கள் ஷியாமின் இசை ஞானத்தை வெளிப்படுத்திய படங்கள்.
இவருக்கு மனைவியும் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் என 3 குழந்தைகளும் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவிலும் மகள் பாலக்காட்டிலும் உள்ளனர்.
18.11.1983 ஜெமினி சினிமா இதழிலிருந்தும், இலங்கை வானொலி வர்த்தக சேவை இன்னிசைச் சுவடிகள் நிகழ்ச்சியிலிருந்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
நாடக உலகில் இருந்து வந்தாலும் எண்பதுகளில் தன் படங்கள் ஒவ்வொன்றையும் சற்று மாறுதலான வடிவத்தில் கொடுத்துக் கவனிக்க வைத்தார் இயக்குநர் மெளலி.

Wednesday, February 21, 2018

இளையராஜாவும் மலேசியா வாசுதேவனும். ...


இளையராஜா "அன்னக்கிளி" படத்தின் மூலம் திரைப்பிரவேசம் செய்தார். அவரது உற்ற நண்பரான மலேசியா வசுதேவனுக்கு தனது "16 வயதினிலே" படத்தில் ஒரு வாய்ப்புத்தர அவரால் முடிந்தது. அதுவும்கூட தற்செயலாக நடந்ததுதான் என்றாலும் பொருத்தமாக நடந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடுவதாக இருந்த பாடலை அவருக்குத் தொண்டை சரியில்லாமல் போகவே மலேசியா வாசுதேவனைப் பாடவைத்தார் இளையராஜா. "ஆட்டுக்குட்டி முட்டை யிட்டு" என்ற பாடல் அவருக்கு ஒரு பொன் முட்டையாக அமைந்துபோனது. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் முட்டி எதிரொலித்தது அந்தப் பாடல். மலேசியா வாசுதேவன் என்றொரு பாடகரை அழுத்தமாகத் தமிழ் ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்ட பாடல் அதுதான். அந்தப் பாடல் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது என்றே சொல்லவேண்டும். முன்னெப்போதும் கேட்டிராத முற்றிலும் ஒரு புதிய அழுத்தமான குரலை அவர்கள் கேட்டார்கள். தங்களது கிராமிய இசை வடிவிலேயே கேட்டார்கள். தமிழ் ரசிகர்களின் மனங்களில் இந்தப் பாடல் வாயிலாக அழுத்தமாக அமர்ந்துகொண்டார் மலேசியா வாசுதேவன்.
நாற்பத்தாண்டுகள் ஓடிவிட்டன. மலேசியா வாசுதேவன் 8 ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாகப் பாடிவிட்டார். அதிலும் குறிப்பாக இளையராஜாவின் இசையமைப்பில் அதிகபட்சமான பாடல்கள். எல்லா வகையான பாடல்களையும், எல்லா தரப்பினருக்காகவும் அவர் பாடியிருக்கிறார். வாசுதேவனின் முழு ஆளுமையையும் வெளிக்கொணர்ந்த பெருமை இளையராஜாவையே சாரும், அவர் பல இசையமைப்பாளரிடமும் பணியாற்றியிருந்த போதிலும். தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பாடிப் பெருமை சேர்த்திருக்கிறார் மலேசியா வாசுதேவன்.
இளையராஜா அவருக்கு மென்மையான காதல் மெலடியில் நிறைய வாய்ப்பளித்திருக்கிறார். "இந்த மின்மினிக்குக் கண்ணில் ஒரு மின்னல் வந்தது..." (சிகப்பு ரோஜாக்கள்), "வான் மேகங்களே வாழ்த்துங்கள், பாடுங்கள்..." (புதிய வார்ப்புகள்), "கோடைக் காலக் காற்றே..." (பன்னீர்ப் புஷ்பங்கள்), "பூவே இளைய பூவே... வரம் தரும் வசந்தமே... மடிமீது தேங்கும் தேனே... எனக்குத்தானே..."(கோழி கூவுது), "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ..."(தூரல் நின்னு போச்சு) இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். பட்டியல் முடியாது. அத்தனையும் அழகுப் பாடல்கள், அத்தனையும் தேனாக இனிக்கும் பாடல்கள்.
இவற்றுக்கு இணையாக எம்.எஸ்.விஸ்வநாதனும் பல பாடல்களை அவருக்குத் தந்திருக்கிறார். "எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை"(சரணாலயம்), "எண்ணியிருந்தது ஈடேற..."(அந்த ஏழு நாட்கள்) போன்றவை நல்ல எடுத்துக்காட்டுகள்.
முரட்டுக்காளையில் அவர் பாடிய "பொதுவாக எம்மனசு தங்கம்" பாடல் இன்று வரையில் வரும் எல்லாக் குத்துப் பாடல்களையும் வென்றுகொண்டேயிருக்கிற அதிசயத்தைப் பார்க்கமுடிகிறது. உணர்ச்சி ததும்ப பாசம் இசைக்கும் "ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு"(தர்ம யுத்தம்) பாடல் தங்கைகளுக்காக அண்ணன்களின் அன்புக்குரல். "பட்டு வண்ண ரோசா வாம்..."(கன்னிப்பருவத்திலே), "பொன் மானத் தேடி நானும் பூவோடு வந்தேன்..."(எங்க ஊரு ராசாத்தி) போன்ற பாடல்கள் நாட்டுப்புற இசையின் நளினத்தோடு அன்பையும் சோகத்தையும் அள்ளி அள்ளி வழங்கும் பாடல்கள்.
மலேசியா வாசுதேவனுக்கு 16 வயதினிலேயில் வாய்ப்பளித்த அதே இயக்குநர் பாரதிராஜாதான் தனது "ஒரு கைதியின் டைரி" படத்தில் வில்லன் வேடம் தந்து நடிக்கவும் வைத்தார். தமிழ் சினிமாவின் மிக நல்ல குணச்சித்திர நடிகராக அவர் இன்னொரு அவதாரமெடுத்தார். 85 படங்களில் பல்வேறு பாத்திரங்களில் அவர் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். "எண்ணம் தோன்றியது எழுதத் தூண்டியது" என்பது அவர் எழுதி 2010 வெளிவந்த கவிதை நூல். ஆமாம், கவிஞராகவும் அவர் வெளிப்பட்டிருக்கிறார். படங்களுக்கும் பாடல்கள் எழுதியிருக் கிறார். அவருடன் நெருக்கமாக இருந்த சகாக்களுக்கு அவரது இன்னொரு முகமும் தெரியும். விளம்பரமின்றி பிறருக்கு உதவும் முகம்தான் அது.
சாதாரணப் பின்னணியிலிருந்து வந்தவர்தான் அவர். தன்னை உயர்த்திக்கொள்ள அவர் தனது திறமை ஒன்றையே நம்பியிருந்தார். தனது குரலால் அவர் தமிழ் ரசிகர்களை பலகாலம் கட்டிப்போட்டிருக்கிறார். கலைக்கும், இப்படிப்பட்ட கலைஞனுக்கும் எங்காவது மரணம் உண்டா?
மலேசியா வாசுதேவன் பாடவந்த காலம் குறித்துக் கொஞ்சம் பரிசீலித்தால் அவரது பங்களிப்பு எத்தகைய மகத்தானது என்பதையும் நாம் உணரமுடியும். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசை மேதை கே.வி.மகாதேவன் கோலோச்சிய காலத்தில் டி.எம்.சௌந்தரராஜன் கொடிகட்டிப் பறந்தார். மெல்லிசைக்கு செவ்வியல் இசையே அடிப்படையாக இருந்தது. சினிமாவுக்குக் காவியத் தன்மை வழங்குவதில் போட்டி நிலவிய காலம் அது. அதற்கேற்ப செவ்வியல் தன்மைகொண்ட கவித்துவமான பாடல்கள் உருவாகின. அவற்றுக்கு இசை வடிவம் தந்தபோது டி.எம்.எஸ்.ஸின் குரல் அதில் பெரும் பங்காற்றியதை மறுப்பதற்கில்லை. ஏனைய பிரபலப் பாடகர்கள் பெண்தன்மை கலந்த குரலில் பாடிக் கொண்டிருக்க, சௌந்தரராஜன்தான் முழு ஆணின் குரலை முன்வைத்தார். காலம் மாறியது. இசைஞானி இளையராஜா முன்னணிக்கு வந்த காலம் சினிமாவின் உள்ளடக்கமும் மாறத் தொடங்கிய காலம். கிராமங்களை நோக்கி காமிராக்களைத் தூக்கிக்கொண்டு போகத் தொடங்கியபோது சினிமாவின் உள்ளடக்கமும் மாறத் தொடங்கியது.
செவ்வியல் மரபிலிருந்து வந்த பழைய இசையமைப்பாளர்களுக்கு மாற்றாக நாட்டுப்புற மரபிலிருந்து வந்துசேர்ந்த இளையராஜாவின் இசையில் மண் மணம் தூக்கலாக இருந்தது இந்த மாற்றத்தைக் கட்டியம் கூறியது. இந்தப் புதிய நிலைமைக்கு ஏற்ற குரலுடன் இளையராஜாவின் தேவைக்கேற்ப வந்துசேர்ந்தவர் மலேசியா வாசுதேவன் மட்டுமே. அதாவது, காலத்தின் தேவையாக வந்தவர் மலேசியா வாசுதேவன் என்றே சொல்வேன். எத்தனை பாடகர்களைப் பாடவைத்த போதிலும் இளையராஜாவின் புதிய சூழலின், புதிய அணுகுமுறையின் தேவையை நிறைவுசெய்த ஒரே பாடகர் மலேசியா வாசுதேவன்தான்.
முன்னமே குறிப்பிட்டதுபோல, டி.எம்.சௌந்தரராஜனை ரசித்துப் பழகியிருந்த ரசிகர்களின் ஏக்கத்தைப் பூர்த்திசெய்யும் விதமாக அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடியவராகவும் மலேசியா வாசுதேவன் ஒருவரே இருந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் எவருடைய இசையமைப்பில் பாடினாலும் அது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடலாக மட்டுமே தோன்றும். இசையமைப் பாளரை இனங்காண்பது கொஞ்சம் சிரமமானதாக இருக்கும். மாறாக, மலேசியா வாசுதேவன் பாடுகிறபோதுதான் அது இளையராஜா இசையமைத்த பாடல், எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல் என்று இனம் காணஇயலும்.
அதே நேரம் அந்தப் பாடலில் மலேசியா வாசுதேவனின் முகமும் தெரியாமல் போகாது. தான் பாடும் பாடலின் இசையமைப்பாளரின் அடையாளத்தை மறைக்காமலேயே தன்னையும் வெளிக்காட்டிக்கொள்ளக்கூடிய நுட்பமான இயல்பு மலேசியா வாசுதேவனின் குரலின் தனிச் சிறப்பாக இருந்தது. இதுவே அவர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நிலைத்து நின்றதற்கான பிரதான காரணமாகப் படுகிறது. இந்தத் தனித்துவக் குரல் வளத்தோடு அவரது நல்ல தமிழ் உச்சரிப்பும் அவருக்குக் கூடுதல் பலம் தந்தது.
பின்னாளில் மலேசியா வாசுதேவனுக்கு இணையான தனித்திறன் கொண்ட இன்னொரு பாடகர் தனக்குக் கிடைக்காத நிலைமையில்தான், தானே நாயகர்களுக்கு டூயட் பாட இளையராஜா துணிந்தாரோ என்னவோ. இதற்கு முன்பெல்லாம் இசையமைப்பாளர்கள் காட்சிப் பின்னணியில் தத்துவம் ததும்பும் சோக கீதம் இசைப்பதுதானே வழக்கம்? அப்படித்தானே எம்.எஸ்.விஸ்வநாதன் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். .
இந்தப் பின்னணியில்தான் மலேசியா வாசுதேவன் நமக்கெல்லாம் வியப்பளிக்கிறார். தமிழ் சினிமாவின் வரலாற்றுத் தேவையெனவே அவர் இங்கு வந்துசேர்ந்தார். அந்தத் தேவையைத் தன்னால் இயன்றளவு நிறைவேற்றினார். இளையராஜா எனும் இசைஞானியின் உள்ளத்துக்கு நெருக்கமாக அமைந்திருந்தது அவரது குரல் வலிமை. தமிழில் எல்லா நாயகர்களுக்காகவும் அவர் பின்னணி பாடியிருக்கிறார். எல்லா வகையான கதை அமைப்புகளிலும் அவரது தெளிந்த கணீர்க் குரல் கச்சிதமாகவே பொருந்திப்போயிருக்கிறது. முதல் மரியாதை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்காக அவர் பாடியவை இவை எல்லாவற்றின் உச்சமாக உயர்ந்து நின்று இசையின் பேரின்பப் பிரவாகமாகவே பெருக்கெடுக்கிறது.
அதிலும் குறிப்பாக "பூங்காற்று திரும்புமா" பாடல் கேட்கிற ஒவ்வொரு பொழுதிலும் மனசைப் பிழிந்து ஏதேதோ செய்கிறது. இனம் தெரியாத உணர்வொன்று அப்பிக்கொள்ள நாம் செய்வதறியாது தவிக்கிறோம். உள்ளே அழுது, வெளியே சிரிக்கிற ரசவித்தையை இந்தப் பாடல் தனக்கேயுரிய வீரிய ஆற்றலின் துணைகொண்டு நிறைவேற்றிக் களிப்புறுகிறது. டி.எம்.எஸ். இல்லாத இடம் வெற்றிடமாகி விடவில்லை என்பதைச் சொல்லாமல் உணர்த்தி நிற்கிறது இந்தப் பாடல். இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் தூண்டிவிட்ட நெருப்பைக் கொளுந்துவிட்டு எரியச் செய்து கேட்போரைச் சூடேற்றி, அவர்களது எண்ண ஓட்டங்களைச் சாம்பலாக்கிப் போடுகிறது பாடுகிற இந்தப் பாட்டுக்காரனின் கிறங்கடிக்கும் குரல் இனிமை.
எத்தனைக் காலமானாலும் இறவா வரமல்லவா அந்தப் பாடல்கள் வாங்கி வந்திருக்கின்றன? பாடிவிட்டுச் சென்றவரை காலம் தின்று, ஏப்பமிட்டபோதிலும், அவர் விட்டுச்சென்ற அவரது குரலை காற்றும், காதுகளும் எப்படி மறுதலிக்கும் சொல்லுங்கள்? கலைஞன் எப்படிக் காலமாவான்? ஆமாம், காற்றிருக்கும் காலம் வரையில் மலேசியா வாசுதேவனுக்கும் மரணம் என்பது இல்லவே இல்லைதானே?.!!
நெகிழ்ச்சியுடன்...கிறிஸ்டினா......!


Tuesday, July 18, 2017

கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும் Old Song

படம்: மாணவன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலு: பீ.சுசீலா
இசை: சங்கர் கணேஷ்
வருடம்: 1970
நடிப்பு : ஜெய்சங்கர்,லக்ஷ்மி
ஆஹா ஹா ஹாஹா
லலலா லலலா லலலா
ஹே ஒஹோ ஹோ
லலலா லலலா ஆஹா ஹாஹா
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும்
காதல் வந்த நேரம் என்னவோ
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிகும்
காதல் வந்த நேரம் என்னவோ
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ
நாணம் என்ற காலெடுத்து
முன்னால் வர
நூறு வகை சீதனமும் பின்னால் வர
நாள்.. மணநாள்.. தேடினால்
தா.. சுகம்.. தா நாடி வா
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ
வைதேகி மாலையிட்டு வைபோக வாழ்வு பெற்று
தேடிக்கொண்ட இன்பம் சொல்லவோ
மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்
மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்
மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்
மன்னனுக்கு மங்கை மனம் மயில் வாகனம்
வா....
பக்கம் வா..
நெருங்கி வா...
தா...
தொட்டுத்தா...
தொடர்ந்து தா...
கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும்
காதல் வந்த நேரம் என்னவோ

Friday, March 4, 2016

Ponnaana Manam - பொன்னான மனம் எங்கு போகின்றது

Ponnenrum Pooventrum - பொன்னென்றும் பூவென்றும்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..
ஆ….ஆஹா ஹா ஹாஹா

ஆண் : பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ

ஆண் : பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப்பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம் இன்னும் நூறாயிரம்

ஆண் : மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து

ஆண் : பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப்பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம் இன்னும் நூறாயிரம்

ஆண் : கோடை வசந்தங்கள் குளிர்காலம் என்று
ஓடும் பருவங்கள் கணநேரம் இன்று
காதல் கவி பாடும் அவள் மேனி கண்டு
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று

ஆண் : கன்னி இளம் கூந்தல் கல்யாண பள்ளி
கண்கள் ஒளி வீசும் அதிகாலை வெள்ளி
கன்னி இளம் கூந்தல் கல்யாண பள்ளி
கண்கள் ஒளி வீசும் அதிகாலை வெள்ளி
தென்றல் விளையாடும் அவள் பேரைச்சொல்லி
இன்பம் அவளென்னும் அறியாத கல்வி
இன்பம் அவளென்னும் அறியாத கல்வி

ஆண் : பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப்பார்த்தால் சொல்லத் தோன்றும்
இன்னும் நூறாயிரம் இன்னும் நூறாயிரம்

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Mmmm… mmmm…
Aa aahaa haa haahaa

Male : Ponnendrum poovendrum
Thaenendrum solvaeno…

Male : Ponnendrum poovendrum
Thaenendrum solvaeno
Pennai paarthaal solla thondrum
Innum nooraayiram… innum nooraayiram

Male : Moondru kani chaaru ondraaga pizhindhu
Moga rasam konjam alavodu kalandhu
Moondru kani chaaru ondraaga pizhindhu
Moga rasam konjam alavodu kalandhu
Bodhai madhuvaaga pon maeni malarndhu
Poovai vandhaal pennaaga pirandhu
Poovai vandhaal pennaaga pirandhu

Male : Ponnendrum poovendrum
Thaenendrum solvaeno
Pennai paarthaal solla thondrum
Innum nooraayiram… innum nooraayiram

Male : Kodai vasanthangal kulir kaalam endru
Odum paruvangal kana neram nindru
Kaadhal kavi paadum aval maeni kandu
Kaana kan vendum oru kodu indru
Kaana kan vendum oru kodu indru

Male : Kanni ilam koondhal kalyaana palli
Kangal oli veesum adhikaalai velli
Kanni ilam koondhal kalyaana palli
Kangal oli veesum adhikaalai velli
Thendral vilaiyaadum aval paerai cholli
Inbam aval innum ariyaadha kalvi
Inbam aval innum ariyaadha kalvi

Male : Ponnendrum poovendrum
Thaenendrum solvaeno
Pennai paarthaal solla thondrum
Innum nooraayiram… innum nooraayiram

Thendralukku Endrum - தென்றலுக்கு என்றும் வயது

60's to 70's era golden songs

Gangai nathiyoram - Varaprasadam

Thursday, October 16, 2014

Wednesday, June 25, 2014

Wednesday, April 30, 2014

அவள் ஒரு பச்சைக்குழந்தை - Aval Oru Pachai Kulanthai - YouTube - Google-N...



அவள் ஒரு பச்சைக்குழந்தை - Aval Oru Pachai Kulanthai - YouTube - Google - Nee Oru Maharani - Sankar Ganesh - Jai Shankar , Sujatha ,Sripriya - S.P. Balasubramaniam - P. Susheela