Search This Blog

Saturday, August 19, 2017

Ismat Chughtai இஸ்மத் சுக்தாய் - யார் இவர் ?

Govindarajan Vijaya Padma

உருது இலக்கிய ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய் மரபு சாரா ஆண் - பெண் உறவு முறைகளின் இடையில் பொதிந்து இருக்கும் நுட்பமான உடலரசியல் இவரது தனித்தன்மை எனலாம் 1938 இல் ஃபஸாதி என்ற நாடகம் எழுதி உருது இலக்கிய உலகிற்கு அறிமுகமானார் இஸ்மத் சுக்தாய் . முஸ்லீம் சமூகத்தில் இருந்து ஒரு பெண் எழுத்தாளராக அங்கீகரிக்கப் படுவதே சவாலான அந்த கால கட்டத்தில் (1942) அவர் எழுதிய லெஸ்பியன் உறவு பற்றிய "லீஹாப்” என்ற சிறுகதைதான் அவரை உருது இலக்கிய உலகில் தனிப்பெரும் ஆளுமையாக அடையாளப்படுத்தியது இந்த சிறுகதையினால் அவர் பெரும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருந்தது. சுக்தாயின் கதைக்களம் முற்றிலும் புதியதொரு சிந்தனையை முன்வைத்தே அமைந்திருந்தது. எழுபது வயதான பெண் ஒருத்தி இருபத்தைந்து வயது இளைஞனைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நஈ துல்ஹன் என்னும் கதையில் எழுதியிருக்கிறார்.இது இந்திய இலக்கியங்களில் இல்லாத பெண்ணின் ஆழமன உளவியல் பதிவு இஸ்மத் சுக்தாய் மற்ற பெண் எழுத்தாளர்கள் தொடாமல் இருந்த பெண்கள் தொடர்பான பாலியல் சிக்கல்களை தன்கதைகளில் அழுத்தமாக பதிவு செய்தார் .அது அவரது துணிச்சலை வெளிப்படுத்திய அதே நேரத்தில் அவருக்கு சமூகத்தில் பல சிக்கல்களையும் ஏற்படுத்தியது அதிலும் முக்கியமாக சுக்தாயின் பிமர், சோடி அபா, கைந்தா முதலான கதைகள் இளம் வயதுப் பெண்கள் காம இச்சையில் மன அமைதி இழப்பதை சித்திரிக்கின்றன.பாலியல் அணுகுமுறையின் களங்களை மையமாக கொண்டு அவர் எழுதிய சிறுகதைகளில் ‘தோ ஹாத்’ (இரண்டு கைகள்) மிக முக்கியமான ஒரு கதையாகும் . இதில் ஒரு பெண், மிகவும் எதார்த்தமாக பல ஆண்களுடன் உறவு வைத்து கொள்வதை மிகவும் சாதாரண விசயமாக விவரித்து இருப்பார். அதற்கு இவர் சொல்லும் அழுத்தமான காரணம் ஒரு ஏழை இளம் பெண்ணிற்கு உணவிற்கான தேடலின் ஒரு வழி தான் அவளது பாலியல் தொடர்புகள் என்று குறிப்பிட்டு இருப்பார் சுக்தாயின் லீஹாப் (கனத்த போர்வை), கூன்கட் (முகத்திரை), அமரபேல் (அமரவல்லி) ஆகிய கதைகள் பொருத்தமற்ற திருமணத்தைப் பற்றியும் அதனால் பெண்களுக்கு ஏற்படும் மன சிக்கல்களையும் பாலியல் தேடல்களையும் பதிவு செய்து இருப்பார் வரதட்சனை என்பது பெண் ,ஆண் இரு குடும்பத்திற்கும் சிக்கலுக்குரியதாகவே இருக்கிறது என்பதைத் தனது (தோ ஹாத்) கதையில் பதிவு செய்திருப்பது சுக்தாயின் சமூகம் குறித்த நடுநிலைமை பார்வையை விளக்குகிறது இவை தவிர வேர்கள் என்ற கதையில் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றி, தனது படைப்புகளில் பதிவு செய்திருக்கிறார் சுக்தாய். பதினொரு புதினங்களையும் ககஜி ஹை பைரஹன் என்ற தன்வரலாற்று நூல் ஒன்றினையும் எழுதியுள்ள இஸ்மத் சுக்தாய் ஒன்பது நாடகங்களையும் நான்கு கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி இருக்கிறார் இவரது புகழ் பெற்ற கட்டுரை தொகுப்பு மேரா தோஸ்த் மேரா துஷ்மன், ஹம் லோக் மற்றும் இவரது “ கரம் ஹவா” எனும் சிறுகதை திரைப்படமாகவும் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.இஸ்மத் சுக்தாய் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். அவை இதுவரை எட்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. அவற்றுள் ஏக்பாத், தோ ஹாத் என்ற இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் புகழ்பெற்ற படைப்புகளாகக் கருதப் பெறுகின்றன.. கரம் ஹவா என்ற திரைப்படத்திற்குச் சிறந்த திரைக்கதைக்கான குடியரசுத் தலைவர் விருதும் (1973), சிறந்த இலக்கியப் பணிக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் (1976), தன்ஹாய் கா ஜஹர் என்ற நாடகத்திற்கு காலிஃப் விருதும் (1977), ஆந்திரப் பிரதேச உருது அகாதமியின் மக்தூம் இலக்கிய விருதும் (1979) இஸ்மத் சுக்தாய் பெற்றுள்ளார். இஸ்மத் சுக்தாய்க்கு சோவியத் குடியரசு 1982 ஆம் ஆண்டு சோவியத் லேண்டு நேரு விருதினை வழங்கிக் கௌரவித்துள்ளது. இத்தனை பெரிய இடத்தை தனியொரு பெண்மணியாக உருது இலக்கிய உலகில் தக்க வைத்துக் கொண்டிருந்த சுக்தாயின் இளமைக் காலம் மிக சுவாரசியமானது . தன் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்தையும் இவர் கடின சவால்களை சந்தித்து எதிர்த்து தான் முன்னேற வேண்டி இருந்தது . சுபாவத்திலேயே இவருக்கு இருந்த போர்க்குணமும் , மன தைரியமும் தான் இவரை வெற்றி பெறச் செய்தது என்றால் மிகையாகாது .உத்திரப்பிரதேசத்தில் உள்ள பதாயுன் என்னும் சிறு நகரத்தில் 1915 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 பிறந்த இஸ்மத் சுக்தாய், தனக்கு 13 வயதில் நடக்க இருந்த திருமணத்தில் இருந்து புத்திசாலித்தனமாக வெளியில் வந்து படிப்பில் கவனம் செலுத்தினார் .சுக்தாயின் படிப்புக்குப் பெற்றோர்கள் தடை விதித்தபொழுது அந்தத் தடைகளையெல்லாம் களைந்து கல்வி பயின்ற சுக்தாய் இளங்கலை பட்டத்தை லக்னோவில் உள்ள இஸபெல்லா துருபன் கல்லூரியில் 1933 ஆம் ஆண்டு நிறைவு செய்தார்.அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டம் படிப்பதற்கு எந்தப் பெண்களும் முன்வராத நிலையில் ஆண்களுடன் சேர்ந்து படித்தார். வகுப்பறையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஒரு திரை இருக்கும். பெண்கள் அந்தத் திரைக்குப் பின்னால் இருந்துதான் பாடம் கேட்க வேண்டும். ஆனால் சுக்தாய் இதனைப் பின்பற்றாமல் ஆண்கள் பகுதியில் அமர்ந்தே பாடம் கேட்டார். தன சிறுவயதில் இருந்தே பர்தா போடுவதை எதிர்த்து தானும் பர்தா போடாமலே வாழ்ந்தார் சுக்தாய்
வீட்டில் நிச்சயம் செய்த திருமணத்தை மறுத்த இஸ்மத் சுக்தாய் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான ஹாகித் லத்தீப் என்பவரை 1942 இல் வீட்டை எதிர்த்துக் காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு முன்பே எழுத ஆரம்பித்த சுக்தாய், தமது ஆசிரியத் தொழிலை விடுத்து மும்பையில் நிரந்தரமாகக் குடியேறி முழு நேர எழுத்தாளராக மாறினார்
சுக்தாய் 1991 இல் அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் தமது 76ஆவது அகவையில் மும்பையில் காலமானார்.


ISMAT Chughtai (1915-1991), one of Urdu’s most accomplished fiction writers, epitomised the 20th-century women writers of Urdu: enlightened, bold, iconoclastic, progressive and feminist.
Chughtai penned her early pieces in the late 1930s but was not much known in the literary circles until 1942, the year ‘Lihaaf’ was published. Urdu literature of that era showed a marked tendency towards Marxism and Realism. The idea of feminism in its true sense and spirit had not quite arrived in the subcontinent in the 1940s, but much of what she wrote, with a touch of progressivism, was about the social, psychological and sexual problems faced by women. Traditional feminine sensibility of the 18th and 19th centuries demanded women to be virtuous, modest and obedient. Chughtai stressed that real feminine emotions and sensitivities are hardly ever understood in an orthodox, male-dominated society such as India’s. Never before in the history of Urdu fiction were such thoughts expressed so articulately and vividly as did Chughtai in her writings.
In 1942 she emerged on the literary scene with a bang as her short story ‘Lihaaf’ appeared in Adab-i-Latif, a literary magazine published from Lahore. Its central theme was female homosexuality. Themes related to sensuality have never been a rarity in Urdu literature, especially in classical poetry, and a few Urdu masnavis (longish poems, often narrating a romance) are known for being too explicit. Male homosexuality had not been a taboo subject in Urdu poetry but somehow female homosexuality was not approved of, except for rekhti, a genre of classical Urdu poetry that depicted female homosexuality, mostly in implicit and symbolic terms. In the subcontinent’s conservative society these covert and occasionally overt expressions of sensuality were thought to be offensive but were quietly smiled upon.
‘Lihaaf’ sent tremors across the subcontinent and Chughtai had to bear with scathing criticism for it. ‘Lihaaf’ is about two women, one of whom is deprived of her husband’s love and the other is the maid servant. It is strange that ‘Chai ki pyali’, Muhammad Hasan Askari’s short story that had covert gestures to female homosexuality, published in the January 1942 issue of Adabi Duniya (Lahore), and later included in the collection of his short stories titled Jazeeray, did not invoke as much criticism as did ‘Lihaaf’; neither did rekhtis written by the male poets. In fact, Askari’s story was not taken much notice of, for reasons not known. On the contrary, Chughtai’s story was considered more offensive, perhaps because of her gender. ‘Lihaaf’ brought Chughtai much notoriety and she was even summoned by a court for the alleged ‘obscenity’. Ironically, it was exactly this kind of attitude of a male-dominated society that Chughtai used to scoff at.

Many of Chughtai’s short stories revolve around the odds faced by women. Oppressed women fighting it out on their own fascinated Chughtai. In most of her short stories she points a finger at society for unjust treatment of women. Though she did write about the problems of women from underprivileged classes too, it was women from middle-class families she was truly interested in portraying. Describing UP’s middle or lower middle-class Muslim women and homes in a parlance peculiar to the milieu was her forte. Here, Chughtai excelled, since it was the environment she was brought up in and had personal experience of.
But Chughtai’s exposure to trade unionism and political activism, unlike Rashid Jahan, a progressive female writer and a contemporary of Chughtai’s, was rather limited. She could possibly not have been as well-versed in Marxist philosophy either, as some of her contemporary progressives were. This is one of the reasons why she, at times, sounds shallow when she tries her hand at depicting economic issues at length. Considering her leftist leanings and close association with the Progressive Writers Association, her short stories, based purely on class conflict and Marxist themes, are not as many as one would have expected.
Chughtai’s flowing and spontaneous style, occasionally peppered with satirical or witty remarks, makes reading a delight. Writing idiomatic and colloquial Urdu in a seemingly effortless manner is something she is known for. Her mastery over presenting women’s parlance or expressions peculiar to native speakers of Urdu, especially women from UP, is a domain in which Chughtai is unrivalled by any male or female fiction writer. In this regard, only Qurratulain Hyder is a close second, but that too only occasionally.
This indeed can be traced to the locale in which Chughtai grew up. She was born on Aug 21, 1915, in Badaun, UP, but Agra was her ancestral hometown (her date of birth is often quoted as Aug 15 and place of birth as Agra, but, according to some researchers, Aug 21 and Badaun are more likely to be correct). She was brought up in Jodhpur, Agra and Aligarh since her father, a civil servant, was posted at different places and the family had to move quite often. From among her nine siblings, wrote Chughtai in Naqoosh (Lahore) describing her early life, her elder sisters got married when Chughtai was quite young and she spent more time in her childhood playing in the company of her brothers. This, according to her own account, turned her into a girl fond of playing hockey, football and gilli danda. In other words, she had become a tomboy, which was quite shocking to some women of Agra where the family had moved after her father’s retirement. It was equally embarrassing for her mother, wrote Chughtai, but the “culprits were my brothers”. This formative phase played a role in carving out her personality, which was marked with boldness, courage and outspokenness.
Despite fierce resistance from some of her relatives, Chughtai did her BA in 1938 from Isabella Thoburn College, Lucknow, and obtained a degree in teacher training from Aligarh the next year. In 1941, she was appointed the superintendent of Municipal Girls School, Bombay (now Mumbai). She married Shahid Lateef, a film director and scriptwriter from Mumbai, in 1942. By the time Chughtai began writing, her brother Mirza Azeem Baig Chughtai (1895-1941) had become an established novelist and humorist of Urdu. Though her brother had an influence on her, she was most inspired by Rashid Jahan and Saadat Hasan Manto. The other influence was, of course, some Western writers such as Sigmund Freud, G.B. Shaw and D.H. Lawrence. Later, she settled in Bombay and wrote dialogues for movies as well as scripts for movies in collaboration with her husband.
With a number of collections of short stories to her credit, such as ‘Kalyaan’, ‘Choten’, ‘Do haath’, ‘Aik baat’ ‘Chhui mui’ and ‘Thori si pagal’, Chughtai is ranked among Urdu’s most influential short-story writers of the latter half of the 20th century but she was not as successful in novels. Her novel Terhi Lakeer is, indeed, counted among the best Urdu novels, but her other novels, such as Ziddi, Masooma, Saudai and Dil Ki Dunya, could not impress the critics much, though they are not without their own merits.
Some of her other books, such as Dauzakh, are collections of plays, short stories and essays. In plays, too, Chughtai could not make her mark and her plays can pose some difficulties to those who want to stage them. According to Patras Bokhari, the famous humorist who was a fine connoisseur of drama too, she simply did not know how to separate scenes and acts. Yahan Se Wahan Tak includes miscellany, such as her brief memoirs, an account of her journey to Pakistan in 1976, and a few short stories. But Dauzkhi, her pen-sketch of her brother Azeem Baig, written a few days after his death, is one of the best pen-sketches ever written in Urdu. It is humorous and saddening, sentimental and analytical, all at the same time.
Chughtai died in Mumbai on Oct 24, 1991. But controversy chased the writer even after her death: she was cremated, which, according to some relatives of hers, was her will. But some contradicted this and it remains a mystery what her real will was. Chughtai is relevant even today. No study of the Urdu short story, feminism in Urdu literature or Progressive philosophy in Urdu literature can truly be called complete unless her works are taken into account.
Dream is the Royal road to the Unconsious" - Sigmund Freud
நாவலோ , சிறுகதையோ படித்த பின் சில மணி நேரம் , ஏன் சில நாவல்கள் சில நாட்கள் கூட மனதை போட்டு பிராண்டி , வேறு வேலையே செய்ய விடாமல் ஸ்தம்பிக்க வைத்து விடும் . அப்படி பட்ட ஒரு எழுத்துக்கு சொந்தக்காரர்தான் இஸ்மத் சுக்தாய் இவர் உருது இலக்கியத்தின் ஆளுமை . மரபு சாரா ஆண் - பெண் உறவு முறைகளின் இடையில் பொதிந்து இருக்கும் நுட்பமான உடலரசியல் இவரது தனித்தன்மை எனலாம்
இஸ்மத்தின் கதை யதார்த்த வாழ்வில் உள்ள பெண்களின் பாலியல் தேடல்களை அவர்களின் ஆழ் மன உளவியலை அலசி வெளிக் கொணர்ந்து படைப்பாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது என்பதை ஒருவராலும் மறுக்க இயலாது . அதிரடியாக வாழ்வை அணுகும் தீவிர பெண்ணிய எழுத்தாளர்களால் இப்படி ப்பட்ட பாசாங்கற்ற யதார்த்த வாழ்வின் இயலபான பெண்மையின் பன்முகங்களை ,அவர்களின் பாலியல் விருப்பங்களை பதிவு செய்து விட முடியுமா என்று தெரியவில்லை இவரது கதைகளை முழுவதுமாக தமிழில் எதிர் வெளியீட்டிற்காக மொழி பெயர்ப்பு செய்திருக்கிறேன் . வரும் புதிய ஆண்டில் புத்த திருவிழாவில் வெளிவரும் என் பெருமை மிகு படைப்பு இது என்று ஆனந்த கூத்தாடி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் .கடந்த சில மாதங்களாக இந்த வேலையின் தீவிரத்தால் தான் நான் வெளியுறவு தொடர்பை முற்றிலுமாக துண்டித்து கொண்டு , இஸ்மத்துடன் பயணித்தேன் . கதைகள் எல்லாவற்றையும் முடித்து அனுப்பி விட்டு என்னுரை என்ன எழுதுவது என்று கடந்த ஒரு வாரமாக மனதில் யோசித்து கொண்டே இருந்தேன் . நேற்று கனவில் இஸ்மத் வந்தார் , என்னுடன் பேசினார் . கனவில் அவர் என்னுடன் என்ன பேசினாரோ அதையே என்னுரையில் எழுதி முடித்து விடலாம் என மிகுந்த பரவசத்துடன் பாதி இரவில் (இரண்டு மணி ) கனவில் இருந்து கண் விழித்து அதிகாலை மூன்று மணிக்குள் என்னுரையை முடித்து விட்டு மீண்டும் தூங்கி விட்டேன் . காலையில் எழுந்து நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று படித்து பார்த்து பதிப்பாளர் அனுஸுக்கு அனுப்பி விட்டு , அம்மாவிடம் பேசினேன் . அவர் கூறினார் இன்று அக்டொபர் 24 எனக்கு பல் டாக்டர் கிட்டே அப்பாயிண்ட்மெண்ட் இருக்குன்னு . சரி என்று சொல்லி விட்டு இஸ் மத் பற்றிய குறிப்புகளை எழுதலாம் என்று அவற்றை படிக்க துவங்கினேன் . ஆச்சரியமாக இருந்தது "சுக்தாய் 1991 இல் அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் தமது 76ஆவது அகவையில் மும்பையில் காலமானார்." என்று அந்த குறிப்பில் இருந்தது . ஆழ் மன உணர்வுகள் தான் கனவாக வெளிப்படுகிறது என்று சிக்மண்ட்ஃ பிராயடு கூறியது உண்மை என்றே தோன்றுகிறது .என் கனவில் இஸ்மத் வந்ததும் அக்டோபர் 24,2017
உலகில் மரணம் ஒரு சம்பவம் மட்டுமே ... இஸ்மத் சுக்தாய் போன்றவர்கள் மரணிப்பதே இல்லை
மேலும் அதிக விவரம் இஸ்மத் சுக்தாய் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவார்கள் மேலும் தொடர்ந்து படிக்கலாம் . வரும் புத்தக திருவிழாவில் இந்த அருமையான நூலை வாங்கி பயனடையுங்கள் .
1938 இல் இஸ்மத் சுக்தாய் எழுதிய முதல் படைப்பு ஃபஸாதி என்ற நாடகம் என்றாலும், அவரை உருது இலக்கிய உலகில் தனிப்பெரும் ஆளுமையாக அடையாளப்படுத்தியது 1942இல் வெளிவந்த ‘லீஹாப்”(The Quilt) என்ற சிறுகதைதான் இஸ்மத் சுக்தாய் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். அவை இதுவரை எட்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. அவற்றுள் ஏக்பாத், தோ ஹாத் என்ற இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் புகழ்பெற்ற படைப்புகளாகக் கருதப் பெறுகின்றன..சுக்தாயின் கதைக்களம் முற்றிலும் புதியதொரு சிந்தனையை முன்வைத்தே அமைந்திருந்தது. எழுபது வயதான பெண் ஒருத்தி இருபத்தைந்து வயது இளைஞனைத் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நஈ துல்ஹன் என்னும் கதையில் எழுதியிருக்கிறார்.இது இந்திய இலக்கியங்களில் இல்லாத பெண்ணின் ஆழமன உளவியல் பதிவு
இஸ்மத் சுக்தாய் மற்ற பெண் எழுத்தாளர்கள் தொடாமல் இருந்த பெண்கள் தொடர்பான பாலியல் சிக்கல்களை தன்கதைகளில் அழுத்தமாக பதிவு செய்தார் .அது அவரது துணிச்சலை வெளிப்படுத்திய அதே நேரத்தில் அவருக்கு சமூகத்தில் பல சிக்கல்களையும் ஏற்படுத்தியது அதிலும் முக்கியமாக சுக்தாயின் பிமர், சோடி அபா, கைந்தா முதலான கதைகள் இளம் வயதுப் பெண்கள் காம இச்சையில் மன அமைதி இழந்து நிராதரவாக விடப்பட்டு வாழ்வை இழப்பதை சித்தரிக்கின்றன.
பதினொரு புதினங்களையும் ககஜி ஹை பைரஹன் என்ற தன்வரலாற்று நூல் ஒன்றினையும் எழுதியுள்ள இஸ்மத் சுக்தாய் ஒன்பது நாடகங்களையும் நான்கு கட்டுரைத் தொகுப்புகளையும் எழுதி இருக்கிறார் இவரது புகழ் பெற்ற கட்டுரை தொகுப்பு மேரா தோஸ்த் மேரா துஷ்மன், ஹம் லோக் மற்றும் இவரது “ கரம் ஹவா” எனும் சிறுகதை திரைப்படமாகவும் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கரம் ஹவா என்ற திரைப்படத்திற்குச் சிறந்த திரைக்கதைக்கான குடியரசுத் தலைவர் விருதும் (1973), சிறந்த இலக்கியப் பணிக்காக இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் (1976), தன்ஹாய் கா ஜஹர் என்ற நாடகத்திற்கு காலிஃப் விருதும் (1977), ஆந்திரப் பிரதேச உருது அகாதமியின் மக்தூம் இலக்கிய விருதும் (1979) இஸ்மத் சுக்தாய் பெற்றுள்ளார். இஸ்மத் சுக்தாய்க்கு சோவியத் குடியரசு 1982 ஆம் ஆண்டு சோவியத் லேண்டு நேரு விருதினை வழங்கிக் கௌரவித்துள்ளது.
உருது இலக்கியத்தின் சிறந்த ஆளுமை இஸ்லாம் பெண் எழுத்தாளரான இஸ்மத் சுக்தாய் என்றால் மிகையாகாது

No comments:

Post a Comment