Search This Blog

Wednesday, November 9, 2011

ஜேர்மனியின் விதியை மாற்றி அமைத்த நவம்பர் 9



ஜேர்மனியின் வரலாற்றில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை நினைவு கூறும் தினமாக நவம்பர் 9ம் திகதி அமைந்துள்ளது.
1923ல் நவம்பர் ஒன்பதன்று அடால்ப் ஹிட்லர் தலைமையில் நாஜிப் படைகள் மூனிச் நகரத்தில் புகுந்தன. 1938ல் அதே நவம்பர் ஒன்பதன்று இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. 41 ஆண்டுகள் கிழக்கு, மேற்கு என்று பிளவுபட்டுக் கிடந்த ஜேர்மனி 1989ல் நவம்பர் மாதம் ஒன்பதாம் நாள் மீண்டும் இணைந்தது.
மன்னராட்சி ஒழிந்தது: ஜேர்மன் நாட்டில் 1918ல் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி தோன்றியது. சோசலிசக் குடியரசுத் தலைவர் ஃபிலிப் ஸ்கீடேமன் இரண்டாம் வில்லியம் கெய்சர் என்ற மன்னரின் ஆட்சி ஒழிந்ததை பறைசாற்றினார்.
பெர்லின் நகரத்து ரீக்ஸ் டாக்கின் பால்கனியில் நின்றவாறு விடுதலைப் பேருரையாற்றினார். புதிய ஜனநாயகம் மலர்ந்தது குறித்து விளக்கினார்.
அவர் கூறுகையில், உழைப்பாளிகளே, போர் வீரர்களே இன்றைய நாளின் வரலாற்றுச் சிறப்பு குறித்து அறிந்து மகிழ்வீர். இதுவரை எந்த வரலாற்றிலும் நடைபெறாத ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. கணக்கிட முடியாத அரும்பெரும் பணிகள் நம் முன்னே இருக்கின்றன.
இனி எல்லாமே மக்களால் நடக்கும், மக்களுக்காக நடக்கும். உழைப்பாளிகளுக்கு எதிராக எதுவும் நடக்காது. ஒன்றுபடுங்கள் நம்பிக்கையோடிருங்கள், கடமையைச் செய்யுங்கள். பழைய நாற்றமெடுத்த மன்னராட்சி சிதைந்துவிட்டது. புதிய ஜேர்மன் குடியரசு நீடுழி வாழ்க என்றார்.
ஆரம்பத்தில் ஜேர்மன் குடியரசில் மக்களாட்சி நடத்துவது சற்று சிரமமாகத்தான் இருந்தது. வலது – இடது சாரிக் கட்சியினர் மக்களாட்சித் தத்துவதத்தை உடனே விலக்கி வைக்கத் துடித்தனர்.
ஆனால் 1923ல் நாஜிப் படை உள்ளே நுழைந்தது, பத்தாண்டுகளுக்குப் பிறகு உலகின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் உலகப்போரை நடத்தியது.
எரிந்து சாம்பலான யூதவழிபாட்டுக் கூடங்கள்: இரண்டாம் உலகப் போர் முறையாக 1938 நவம்பர் திங்கள் ஒன்பதாம் நாள் ஆரம்பிக்கும் முன்பே ஜேர்மனியில் யூதர்களின் வழிபாட்டுக் கூடங்கள் நாஜிகளால் தீக்கிரையாக்கப்பட்டன. யூதர்களின் தொழிற்கூடங்கள் அபகரிக்கப்பட்டன. 1942ல் இனப்படுகொலை தொடங்கும் முன்பே ஆங்காங்கே யூதர்கள் கொல்லப்பட்டுவந்தனர்.
26000 யூதர்கள் நாடு கடத்தப்பட்டனர். நூறுபேர் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையை “உடைந்த கண்ணாடியின் இரவுப் பொழுது” என்று குறிப்பிட்டனர். அந்த நிகழ்ச்சியே பின்னர் நடக்கவிருந்த பேரழிவுக்கான சோதனை முயற்சி என்று நாஜிகளின் தொழிற்சங்கத்தின் தலைவர் ராபர்ட் லே குறிப்பிட்டார்.
யூதப் பேரழிவை நியாயப்படுத்தும் வகையில் இவர், யூதர்கள் அழிக்கப்பட வேண்டும், அதுவே எங்களின் புனித நம்பிக்கை என்று உரத்த குரலில் உறுதிபடக் கூறினார்.
ஆக யூதப் பேரழிவுக்கு முன்னோடியாக 1938 நவம்பர் ஒன்பது அன்று யூதர்களைக் கொன்று அவர்களின் சொத்துக்களைப் பறித்து வழிபாட்டுக் கூடங்களைத் தீ வைத்துக் கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தேறியது.
இணைந்த ஜேர்மனி: கிழக்கு ஜேர்மனியின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவை எதிர்த்து பல மாதங்களாக அங்கு போராட்டம் நடந்து வந்தது. ஆயிரக்கணக்கானோர் ஹங்கேரி வழியாக மேற்கு ஜேர்மன் தூதரகங்களை அணுகினர்.
ஜேர்மன் டெமாக்ரடிக் ரிபப்ளிக் என்று அழைக்கப்பட்ட GDR குடிமக்களுக்குரிய போக்குவரத்துக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்ற அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்தது.
ஒரு நாள் கிழக்கு பெர்லினில் நடந்த சர்வதேச பத்திரிக்கையாளர் மாநாட்டில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த விதிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிப்பு வெளியானது.
உடனே மக்கள் அலை அலையாகப் புறப்பட்டனர். அந்த நாளின் மகிழ்ச்சியை விளக்க வார்த்தைகளே கிடையாது. மக்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
பெர்லின் சுவரிலிருந்து 1989 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் ஒன்பதாம் நாள் ஒரு கல்லைப் பெயர்த்தெடுத்ததும் மக்களிடையே இருந்து வந்த போக்குவரத்துத் தயக்கம் முற்றிலும் விலகியது. மக்கள் கடலெனத் திரண்டனர். அலைகடலென ஆர்ப்பரித்தனர். கிழக்கும் மேற்கும் சங்கமமாயிற்று. பிரிந்து கிடந்த ஜேர்மனி ஒன்றாயிற்று.

No comments:

Post a Comment