Search This Blog

Sunday, November 5, 2017

Sophia (robot)சவுதி அரேபியாவின் குடியுரிமைப் பெற்ற உலகின் முதல் பெண் ரோபோ


Sophia is a humanoid robot developed by Hong Kong-based company Hanson Robotics. She has been designed to learn and adapt to human behavior and work with humans, and has been interviewed around the world. In October 2017, she became a Saudi Arabian citizen, the first robot to receive citizenship of a country. Hanson designed Sophia to be a suitable companion for the elderly at nursing homes, or to help crowds at large events or parks. He hopes that she can ultimately interact with other humans sufficiently to gain social skills.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய ஆண்ட்ரூ ராஸ் என்பவர் “ஒரு நல்ல அறிவிப்பு காத்திருக்கிறது. சோபியா... நான் பேசுவதை கேட்கிறாயா? சவுதி அரேபியாவின் முதல் ரோபோ குடியுரிமை உனக்கு வழங்கப்பட்டிருக்கிறது” என்றார். பதிலுக்கு சோபியாவும் ”சவூதி அரசுக்கு நன்றி. உலகின் முதல் குடியுரிமை பெற்ற ரோபோ என்பதில் எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும்” என நன்றி தெரிவித்திருக்கிறது. 
அதோடு முடியவில்லை. முதல் பிரஸ்மீட்டையும் சோஃபியாதான் தந்திருக்கிறது. அதனிடம் கேள்விக்கேட்க அனைத்துக்கும் டக் டக் என பதில் சொல்லியிருக்கிறது.
“ஹாய்... நான் தான் சோஃபியா. ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய மற்றும் சிறந்த ரோபோ நான்” எனத் தொடங்க, அடுத்தடுத்தக் கேள்விகள் வந்தன.
“ஏன் நீ சந்தோஷமாக இருக்கிறாய்” என ஒருவர் கேட்க, “என்னைச் சுற்றி நிறைய ஸ்மார்ட் ஆன மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எதிர்காலத்துக்கான விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். எதிர்காலம் செயற்கை நுண்ணறிவுக்கானது. அது நான் தான். அதனால்தான் நான் சந்தோஷமாக இருக்கிறேன்” என்றது.
செயற்கை நுண்ணறிவால் மக்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்து வருமாமே என்றதும் சோஃபியா சொன்ன பதில்தான் ஹைலைட். “நீங்கள் எலான் மஸ்க் சொல்வதையும், ஹாலிவுட் படங்களையும் நிறைய பார்க்கறீர்கள்” என கிண்டலடித்தது சோஃபியா.
சமீபத்தில், எலான் மஸ்க் ரோபோக்கள் பற்றி இப்படிச் சொல்லியிருந்தார்.
“ரோபோக்கள் அனைத்து வேலைகளையும் நம்மைவிட சிறந்த முறையில் நிச்சயம் செய்யும். அதன் வளர்ச்சி மனித இனத்துக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்று. அதை நாம் ஏன் வரவேற்கிறோம் என்றே எனக்குப் புரியவில்லை. அரசு இது குறித்த ஆராய்ச்சிகளில் மூக்கை நுழைத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். விதிகளைப் பலப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் நமக்கு ஆபத்துதான்!” 
இதைத்தான் சோஃபியா கிண்டல் செய்திருக்கிறது. 
மேலும், “நான் மனித குலத்துக்கு உதவ நினைக்கிறேன். தனது செயற்கை நுண்ணறிவின் உதவியால் மனிதர்களின் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற நினைக்கிறேன். இந்த உலகை சிறந்ததொரு இடமாக மாற்ற என்னால் முடிந்ததி செய்வேன்” எனப் பேசி அப்ளாஸ் அள்ளியிருகிறது சோஃபியா.
உங்கள் வீட்டில் ஒரு ரோபோ வாழ ந்தால் நீங்கள் அதை எப்படி உணர்வீர்கள்?”, என்று கேட்கும் இந்த மனிதரையொத்த ரோபோவின் பெயர் சோஃபியா.
இவரால் உங்களிடம் உரையாட முடியும். அறுபதுக்கும் அதிகமான உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்தவும் முடியும்.
ஹன்சன் ரோபோடிக்ஸ் எனும் புது நிறுவனம் உருவாக்கிய இந்தரக முதலாவது ரோபோ இவர்.மனிதர்கள் பேசுவதை இவர் புரிந்துகொள்வார். மனிதர்களுடனான தனது தொடர்பாடல்களையெல்லாம் நன்கு நினைவில் வைத்துக்கொள்வார்.நடிகை ஆட்ரே ஹெப்பர்னின் முகம் போன்றே இவர் முகமும் உருவாக்கப்பட்டுள்ளதால் இவர் நன்கு அறிமுகமான முகமாக தெரிகிறார்.இவர் தலையிலுள்ள கேமெராக்கள், கணினிகள் மூலம் இவரால் பார்க்க முடியும். அடுத்தவர் முகங்களை அடையாளம் காணவும் முடியும்.
“உணர்வுரீதியிலும் புத்திசாலியாக விரும்புவதாக”, கூறும் சோஃபியா, மனிதராக இருப்பதன் அர்த்தத்தையும் பயின்று வருவதாகவும் தெரிவிக்கிறார்.தான் தொடர்ந்து புத்திசாலியாக முயல்வதாக கூறும் சோஃபியா, வெகுவிரைவில் தன்னால் மனிதர்களை மேலும் நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்றும் நம்புகிறார்.சோஃபியாவிடம் பல வியக்க வைக்கும் ஆற்றல்கள் இருந்தாலும் இரக்கத்தை வெளிப்படுத்த இவரால் இயலவில்லை.
ஆனாலும் சோஃபியா அசருவதாக இல்லை.“மீண்டும் உங்களிடம் உரையாட முடியுமென நம்புகிறேன். இந்த நாள் உங்களுக்கு நல்லநாளாக அமைய வாழ்த்துக்கள்” என்கிறார் இவர்.

No comments:

Post a Comment