Search This Blog

Saturday, September 3, 2016

தமிழன் என்று பெருமை கொள், அதைக்காட்டிலும் மிக கர்வம் கொள்...

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் மொழி குறித்த உணர்ச்சிகரமான கவிதையால், தமிழ்ப் பெண் ஒருவர் பார்வையாளர்களை நெகிழ வைத்தார்.
அமெரிக்காவில் இலக்கிய ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காக பள்ளி மாணவர்களில் இருந்து இளம் கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலக்கிய தூதுவர்களாக நியமிக்கப்படுகின்றனர். இதில் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட மாயா ஈஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் மாயா ஈஸ்வரன், தமிழ் மொழி குறித்தும், அமெரிக்க வாழ்வு குறித்தும் வெள்ளை மாளிகையில் கவிதை வாசித்து பார்வையாளர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார்.
நான் எனது தாய்மொழியான தமிழைப் பேசி மூன்றாண்டுகள் ஆகின்றன, "தாயே...." என்று ஆங்கிலத்தில் அவர் தனது அம்மாவிற்காக வாசித்த கவிதை அனைவரையும் உருக்கியது.

No comments:

Post a Comment