Search This Blog

Monday, October 14, 2013

வால்நட் (அக்ரூட்)வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் மாரடைப்பு உள்ளிட்ட இதய பாதிப்புகள் தாக்கும் அபாயம் ஏற்படும். உடல் பருமன் மற்றும் கொழுப்பு சத்தால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கு உணவு முறைகளே முதல் காரணமாக கூறப்பட்டாலும் போதிய உடற்பயிற்சி இன்மையும் ஒரு காரணமாகும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் அக்ரூட்டுக்கு முதலிடம் கொடுக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பென்சில்வேனியாவில் உள்ள ஸ்க்ராட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். உடலில் கொழுப்பு அதிகம் இருந்த ஆண், பெண் ஏராளமானோர் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்பட்டனர். முதல்கட்ட பரிசோதனைகளை தொடர்ந்து ஒரு வார காலம் அக்ரூட் பருப்புகள் கொடுத்து கண்காணிக்கப்பட்டனர்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைந்திருந்தது. இதன்மூலம் கொழுப்பை அக்ரூட் கரைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முந்திரி, பாதாம் உள்ளிட்ட சுமார் 7 வகையான கொட்டைகளுடன் ஒப்பிடும் போது அக்ரூட்டில்தான் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் அபரிமிதமாக இருப்பதுதான் இதற்கு காரணம்.
இவை கொழுப்பை எளிதில் கரைக்க வல்லது என்பதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இது நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளித்து ஆரோக்கியத்துக்கு வகை செய்யும்.
உடலில் கொழுப்புச்சத்து அளவாக இருப்பது அவசியம். உணவு முறைகளே உடலில் கொழுப்பு அதிகரிக்க முக்கிய காரணம். அக்ரூட், உடல் கொழுப்பை எளிதில் கரைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாரடைப்பு பயம் பலருக்கு இருக்கிறது.இதனால்தான் கடுங்குளிரிலும் காலை நேர, நடைப்பயிற்சிக்குப் பலர் அவசரம் அவசரமாக ஓடுகின்றனர். இந்தப் பயத்தை ஆறுமாதங்களில் முற்றிலும் நீக்கிவிடலாம். தினமும் 28 கிராம் முதல் 85 கிராம் அளவு வரை வால்நட் பருப்பு சாப்பிட்டு வரவும். இதனால் ஆறு மாதங்களில் கெட்ட கொலஸ்ட்ரலில் பத்து புள்ளி வரை குறைகிறது. இத்துடன் இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் குணமாகிறது.

//சரி, வால்நட் அதிகம் சாப்பிட்டால் கலோரி அதிகமாச்சே! இதனால் உடல் எடை அதிகரிக்காது. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகளும், இரத்தத்தில் உறையாத கொழுப்பும் உள்ள பருப்பு வகை இது. நீங்கள் அதிகக் கலோரி உள்ள மற்ற உணவுகளைப் புறக்கணித்து விட்டு பயமின்றி வால்நட்டைச் சாப்பிட்டு வரலாம்//

வால்நட் பருப்பில் உள்ள சுருண்ட மடிப்புகள் மனித மூளையைப் போல் தோற்றமளிப்பதாகும். இது. முதுமை மறதி, நினைவ7ற்றல் இழப்பு, மனத் தளர்ச்சி எனப்படும் டெமென்சியா நோயைத் தவிர்க்கவும் இது உதவும். அல்செமியர்ஸ் நோயுடன் தொடர்புடைய இரத்த உரைவுக் கட்டிகளை இந்த வால்நட் சத்து கரைக்கிறது என்று என்று ஒரு அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு போகவேண்டிய அவசியம் இருக்காது என்பார்கள். அதேபோல தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட் சாப்பிட்டால் படுக்கை அறையில் தம்பதிகளிடையே உறவு உற்சாகமாக கரை புரண்டு ஓடுமாம். மேலும் வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை பெருகும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வால்நட்டில் உயர்தர ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. அதுவே ஆண்களின் உற்சாகத்தையும், விந்தணுவையும் அதிகரிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டது. ஆண்மை குறைபாட்டினால் படுக்கை அறையில் சரியாக செயல்பட முடியாமல் இருந்த 21 வயது முதல் 30 வயது வரை உடைய ஆண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்,தினசரி 75 கிராம் அளவுள்ள வால்நட் அவர்களுக்கு சாப்பிட கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்குபின் அவர்களின் விந்தணுவை பரிசோதனை செய்தபோது குறிப்பிடத்தக்க அளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களின் உற்சாகமும், ஆண்மையும் அதிகரித்து இருந்தது தெரியவந்தது.

வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள்!!!
நட்ஸ் உடலுக்கு மட்டும் தான் ஆரோக்கியத்தை தரும் என்று நினைக்க வேண்டாம். நட்ஸ் சாப்பிட்டால், உடல் நலத்தை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். அதேசமயம், அதனை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை வைத்து சருமத்தை பராமரித்தால், சருமம் நன்கு பொலிவோடு அழகாக பட்டுப் போன்று இருக்கும். இதுவரை நட்ஸில் பாதாம் எண்ணெடியை வைத்து மட்டும் தான் சருமத்தை பராமரிப்பது பற்றி தெரியும். ஆனால் அந்த நட்ஸில் ஒன்றான வால்நட்டை வைத்து தயாரிக்கப்பட்ட எண்ணெயில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன.

இத்தகைய எண்ணெயில் வைட்டமின், புரோட்டீன் போன்றவை அதிகம் இருப்பதால், அது சருமத்தில் ஒரு பெரிய அதிசயத்தை உண்டாக்கும். மேலும் இதில் நார்ச்சத்து, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், இந்த எண்ணெயிலிருந்து ஒரு நல்ல பலனை நிச்சயம் பெறலாம். அத்தகைய பலன் என்னவென்று பார்ப்போமா!!!

சுருக்கங்கள்

வால்நட் எண்ணெயை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத் தரும்.

தொற்றுநோய்கள்

சருமத்தில் ஏதேனும் பூஞ்சைகள் தாக்கி, அதனால் தொற்றுநோய்கள் ஏற்பட்டிருந்தால், அவற்றை போக்குவதற்கு வால்நட் எண்ணெய் சிறந்ததாக உள்ளது. அதற்கு வால்நட் எண்ணெயை ஏதேனும் மூலிகை எண்ணெயையுடன் சேர்த்து கலந்து, சருமத்தில் உள்ள பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால், ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

தோல் அழற்சி

சருமத்தில் தடிப்புகளுடன், சிவப்பு நிறத்தில் அழற்சி போன்று இருந்தால், அவற்றை சரிசெய்ய வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதிலும் இந்த எண்ணெயை குளிக்கும் நீரில் சிறிது சேர்த்து குளித்து வந்தால், சருமத்தில் ஏற்படும் அழற்சியை சரிசெய்துவிடலாம்.

உடல் நோய்கள்

வால்நட் எண்ணெயில் ஒரு நல்ல பொருளான ஒமேகா-3 உள்ளது. இந்த ஒமேகா-3 சத்தானது, நிறைய உடல் நல நன்மைகளை உள்ளடக்கியது. அதிலும் குறிப்பாக இதய நோய், சில வகையான புற்றுநோய்கள் மற்றும் அழற்சி குறைபாடுகளான சொறி, படை, சிரங்கு போன்றவற்றை குணமாக்க வல்லது.

வால்நட் நியூட்ரி பால்ஸ்
தேவையானவை:

ஓட்ஸ் 1 கப்
பாதாம் பருப்பு 10
வால்நட் 10
முந்திரிபருப்பு 10
பிஸ்தா பருப்பு 10
கறுப்பு எள் 1 டேபிள்ஸ்பூன்
உலர்ந்த திராட்சை 10
தேன் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
வெல்லம் 1 கப் (பொடித்தது)

செய்முறை

செய்முறை:

ஓட்ஸை நெய்யில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
பாதாம் பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து அதனுடன் வால்நட்,முந்திரிபருப்பு,பிஸ்தா
நான்கையும் சேர்த்து ரவை போல உடைத்துக்கொள்ளவும்.
கறுப்பு எள்ளை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.
உலர்ந்த திரட்சையை நெய்யில் பொறித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது தண்ணீருடன் வெல்லத்தை
சேர்த்து கொதிக்கவிடவும்.கம்பி பாகுவந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்
பொடி பண்ணிய ஓட்ஸ்
ரவை போல் உடைத்த நட்ஸ் கலவை
வறுத்த எள்
பொறித்த திராட்சை
தேன்,நெய்
சேர்த்து
அதனுடன் கம்பிபாகு வெல்லத்தை ஊற்றி
நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டவும்.

இது சத்து நிறைந்த குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலை நேர சிற்றுண்டி ஆகும்

வால்நட் முந்திரி பர்ஃபி
தேவையானவை:

வால்நட் பருப்பு - ஒரு கப்,
முந்திரி - கால் கப்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
சர்க்கரை - ஒன்றரை கப்,
நெய் - அரை கப்.

செய்முறை:

வால்நட்டின் ஓட்டை உடைத்து தோலை நீக்கிக் கொள்ளவும்.
கடாயில் கால் டீஸ்பூன் நெய் விட்டு வால்நட், முந்திரிப் பருப்புகளை வறுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியை குறைந்த ஸ்பீடில் இயக்கி, பருப்புகளை பொடித்துக் கொள்ளவும்.

சர்க்கரையில் அரை கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி, கம்பிப் பதத்துக்கு வந்ததும் பொடித்த பருப்புகளை சேர்த்து நன்கு கிளறவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து நெய் சேர்த்துக் கிளறி, கடாயில் ஒட்டாமல் நுரைத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி, விரும்பிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளவும். குறைந்த நேரத்தில், சுலபமாக செய்யக் கூடிய சுவையான ஸ்வீட் இது

வால்நட் - முந்திரி பர்ஃபி: தேங்காய் துருவல் சிறிதளவு சேர்த்து செய்தால் சுவை கூடும்


வால்நட், பாதாம் பாயாசம்

வால்நட் : 25 gm
பாதாம் : 10 pcs
சர்க்கரை : 100 gm
நெய், ஏலம் : சிறிது

வால்நட் பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அந்தக்கலவையை சிறிது தண்ணீர் கலந்து அடுப்பில் வைத்து இரண்டு கொதி வந்தவுடன் அதில் சர்க்கரையைப் போட்டு கரைந்து வந்தவுடன் நெய், ஏலப்பொடி போட்டு கலக்கி இறக்கவும்.

No comments:

Post a Comment