Search This Blog

Tuesday, January 10, 2012

எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு




உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் சர்வதேச விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் எய்ட்ஸ் நோய் பரவாமல் கட்டுப்படுத்தும் புதிய மருந்தை அமெரிக்க விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள உதா பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பள்ளி ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
மனித குரங்குகளில் இருந்து உருவாகும் எச்.ஐ.வி வைரஸ் கிருமிகள் சிறிய வகை குரங்குகள் மூலம் மனிதர்களுக்கு எய்ட்ஸ் கிருமிகளாக பரவுகின்றன.
அவ்வாறு பரவும் எச்.ஐ.வி வைரஸ் கிருமிகளை இந்த மருந்து அழிக்கும் தன்மை உடையது. இதை எச்.ஐ.வி கிருமிதாக்கிய 40 குரங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்த்ததில் பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது.
எனவே எய்ட்ஸ் நோய் மேலும் உருவாகாமல் தடுக்க முடியும். தற்போது எச்.ஐ.வி கிருமிகளை அழிக்க கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த மருந்தின் மூலம் எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்தை தயாரிக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment