Search This Blog

Tuesday, August 23, 2011

உயிரினங்கள் முதன் முதலில் செவ்வாய் கிரகத்தில் தான் தோன்றியது: நிபுணர்கள் தகவல்



அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பில்பாரா மாகாணத்தின் கடைகோடி பகுதியில் ஸ்டெரெலி ஏரி உள்ளது. அங்கு சுமார் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுக்கு முந்தைய புதை படிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.
வெஸ்டர்ன் அவுஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்கள் அவற்றை ஆய்வு செய்தனர். அப்போது அதில் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்த நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருந்தன.
ஆனால் புதை படிவத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாக்டீரியாக்கள் 3 கோடியே 40 லட்சம் ஆண்டுக்கு முன்பு வாழ்ந்தவை. அப்போது பூமியில் உயிர் வாழ்வதற்கான ஆக்சிஜன் இல்லை. கடல் நீரால் மட்டுமே பூமி சூழப்பட்டு இருந்தது. கடும் வெப்பமாகவும் இருந்தது. உயிர் வாழக்கூடிய தட்ப வெப்ப சூழ்நிலை இல்லை.
எனவே உயிரினம் செவ்வாய்கிரகத்தில் தான் தோன்றியிருக்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புதை படிவம் கண்டெடுக்கப்பட்ட பில்பாரா பகுதி செவ்வாய் கிரகத்தில் இருந்து விழுந்த வண்டல் மண் சார்ந்த பாறைகளாக இருக்கலாம். அவை மண்ணில் புதையுண்டு படிவங்களாக மாறியிருக்கிறது என்றும் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment