Search This Blog

Sunday, September 30, 2018

158 வருட ஐபிசி 497 ரத்து.. பெரிய விசேஷல்லாம் ஒன்னுமில்ல...*Fight Against the Constitution IPC 497 & 377* in India


Su Po Agathiyalingam
LGTBQ ,497
இந்த இரண்டு தீர்ப்பையும் மிகச்சரியாக புரிந்து கொள்ள நான் சட்டமொழி தெரிந்தவனல்ல . ஆயினும் ஒன்றை உறுதியாகச் சொல்ல இயலும் பாலின தேர்வு ,விருப்பம் ,உறவு இவை குறித்த பஞ்சாக்கப்பார்வை உடைத்தெறியப்பட வேண்டும் .
இவை எதுவும் சமூகத்துக்கு புதிதல்ல .காலம் காலமாய் ஒரு பகுதியினரிடம் இருந்து வருவதே . புரியாமையால் வெறுப்பை உமிழ்ந்தோம் . இனி அவ்வாறின்றி அவர்கள் உணர்வுக்கும் மதிப்பு கொடுங்கள் என்பதே தீர்ப்பின் சாரம் .
கொலை ,தற்கொலை எல்லாம் தீர்வல்ல .அவரவர் பிடித்தவரோடு பிடித்தமாதிரி வாழ வழிவிடுக என்பது சரிதானே !
இதன் பொருள் சமுதாயம் மொத்தமும் இனி இப்படித்தான் போகவேண்டும் என்பதல்ல .பெரும்பாலோர் வழி இப்போது போலவே குடும்ப உறவில் திழைக்கும் . ஒரு சிறு பகுதியினர் வேறுமாதிரி வாழத்தலைப்படுவர் .அதனை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்க !
பண்பாடு ,ஒழுக்கம் என்றெல்லாம் கூப்பாடு போடுவதும் ;அந்த முகமூடிக்குள் புகுந்து எல்லாம் கெட்டுப்போச்சு எனக் கூச்சலிடுவதும் அபத்தம் .
வேடிக்கை என்னவெனில் முற்போக்கு பேசும் பலருமே இதில் தடுமாறுவது பரிதாபமாக இருக்கிறது .
ஒரு செய்தி : கார்ப்பரேட் நலம் ,பிராமணிய நலத்துக்கு எதிராக எந்தத் தீர்ப்பையும் நீதிமன்றம் ஒருபோதும் வழங்கிவிடாது என்கிற உறுத்தும் உண்மையை ஒரு போதும் மறந்துவிடாதீர் !
திரு சாலமன் பாப்பையா அவர்களின் பதிவு...
*//தன் மனைவிக்குப் பக்கத்து வீட்டுக்காரனைப் பிடித்திருக்கிறது என்றால் அவனோடு படுத்துச் சுகம் அனுபவித்துவிட்டுவா..//*
20 வயது தொட்ட பிறகும்கூட காதலைப் பற்றிய தெளிவு இல்லாமல் காமச் சகதியில் வழுக்கி விழுந்துகொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கு, விழிப்புணர்வு தர யோக்கியதை இல்லை. ஆனால்,
வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் யாரோடும் பாலுறவில் ஈடுபடலாம் என்று தீர்ப்பளிக்க முடிகிறது. இந்தத்
தீர்ப்பு அவர்கள் ஒழுக்கம் கெட்டு அலையவும் தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்ளவுமே பயன்படப் போகிறது. அதைத் தாண்டி ஒரு பயனும் இல்லை.
வயதுக்கு வந்தோர் யாரும் யாரோடும் உறவு கொள்ளலாம் அது அவர்கள் உரிமை என்பது சட்டமானால், பிள்ளையைப் பெற்றவர்களுக்கு அவர்களைக் கேள்வி கேட்க என்ன அதிகாரம் இருக்கிறது?

தன் மகளோ மகனோ எவனோடும் எவளோடும் சுற்றிவிட்டு வந்தாலும் தாய்தகப்பன் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்கிறதா நீதி மன்றம்?
இதைப் பெற்றவர்கள் ஏற்கப் போகிறீர்களா?
படிக்கும் வயதில் சாட்டிங் டேட்டிங் என்று ஊர்மேய்ந்து கொண்டு சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில், உங்களுக்குத் தேவைப்பட்டால், விருப்பம் இருந்தால் உடலுறவே கொள்ளலாம் என்பது தலைமுறைகளை நல்வழிப்படுத்தவா படுகுழியில் தள்ளவா?
கல்யாணம் ஆன ஆணும் பெண்ணும் விருப்பப்பட்டவரோடு உறவு கொள்வதற்கு ஏன் கல்யாணம் செய்ய வேண்டும். அப்படியே பிடித்தவர்களோடு போகலாமே. தினம் தனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது என்று கணவன் போவான். மனைவி கேட்பதற்கில்லை.
தினம் ஒருவனைப் பிடித்திருக்கிறதென்று மனைவி விபசாரமும் செய்யலாம். கணவனும் கேட்பதற்கில்லை. என்றால் அதென்ன வீடா, குடும்பமா?. அல்லது விபசார விடுதியா?
வீடுகளை விபசார விடுதிகளாக்கிப், பெண்களை விபசாரிகளாக்கி, ஆண்களை மேலும் ஒழுக்கம் கெட்டலைய வைப்பதுதான் நீதித் துறையின் நோக்கமா?
கணவன் இருக்க, அடுத்தவனைப்
பிடித்திருக்கிறதென்று எத்தனைப் பேரோடும் உறவு கொள்ளும் பெண்ணுக்குத் தனது கணவன் தன் கண்முன்னால் செத்தாலும் இழவுக்குக் கண்ணீர் வருமா? பெற்ற பிள்ளைகளிடம் இனிப் பாசம் வருமா? அன்பே அங்கு அற்றுப் போய்விடில் குடும்ப வாழ்க்கை இனிக்குமா? இருக்குமா?
இந்தத் தீர்ப்பையும் ஏதோ புதுமை என்றும், எதுவும் தப்பாகச் சொல்லவில்லை நுணுக்கமாகப் பார்க்கவேண்டும் என்றும் ஆதரவளிப்பவர்கள், அவர்கள் மனைவிகளையும் சகோதரிகளையும் அடுத்தவரோடு படுக்க அனுப்பிவிட்டு விவாதம் நடத்தட்டும்.
மனைவி மீது உரிமையில்லை. பிள்ளைகள் மீது உரிமை இல்லை. சகோதரிகள்மீது உரிமை இல்லை என்றால், எதன் மீதுதான், எவர் மீதுதான், எவருக்குத்தான் இங்கு உரிமை இருக்கிறது?
விருப்பப்பட்டால் வயதுக்கு வந்தவர்கள் யாரோடும் உறவு கொள்ளலாம் என்று அங்கீகரிக்கப் பட்டுவிட்ட நாட்டில், பெண்கள் இனி எப்படிப் பார்க்கப் படுவார்கள்? எப்படி நம்பப் படுவார்கள்?
இது தப்பென்று தட்டிக் கேட்க கணவன், மனைவி, பெற்றோர்கள் உண்டு என்ற நிலையிலேயே ஆயிரம் அவலங்கள் நடந்த நாட்டில் இனி தப்பில்லை அதைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்றாகிவிட்டால், யார் யாருக்குக் கட்டுப்பட்டு ஒழுங்கு வாழ்க்கை வாழப் போகிறார்கள்? கேட்க உரிமை இருந்த போதே நல்ல மனைவிகளும் சந்தேகத்திற்கு உள்ளாகி எத்தனையோ குடும்பங்கள் சிதைந்திருக்க, இனி அது அவரவர் சுதந்திரம் என்ற பிறகு எத்தனை உத்தமமான பெண்கள் வாழ்க்கையை இழக்கப் போகிறார்களோ!
காதல், கணவன், குழந்தை குடும்பம் என்ற அழகான வாழ்க்கை வேண்டும் என்று உண்மையாய் விரும்புகிறவர்களுக்கும் இனி அந்த வாழ்க்கை கிடைக்குமா அல்லது கிடைத்தாலும் நிலைக்குமா?
பொது வெளியில், இதிலென்ன இருக்கிறது அதுவும் ஓர் உணர்ச்சிதானே விருப்பம்தானே என்று யாரும் பேசலாம். அப்படிப் பேசும் யாரும் தம் மனைவிக்குப் பக்கத்து வீட்டுக்காரனைப் பிடித்திருக்கிறது என்றால்
அவனோடு படுத்துச் சுகம் அனுபவித்துவிட்டுவா என்று கூறும் அல்லது, அவனை தன் வீட்டுக்கே அழைத்து மனைவியின் உடம்புப் பசியை ஆசையை தீர்த்து வைக்கச் சொல்லி கட்டிலுக்கு அவனை அனுப்பி அழகு பார்க்கும் மனோதிடம் உள்ளதா?
குடும்ப வாழ்க்கை என்றான பிறகு, தனி மனித உரிமை எங்கே இருக்கிறது? கணவன் தவறாகப் போனால், மனைவி குழந்தைகள் வாழ்க்கைச் சீரழியாதா? மனைவி தவறாகப் போனால் கணவன் பிள்ளைகள் வாழ்க்கை கெடாதா? தன்னுடைய எந்தச் செயலின் எதிர் விளைவுகள் அடுத்தவரைப் பாதிக்காதோ அதுவே தனி மனிதச் சுதந்திரம். மற்றதெல்லாம் வரம்புக்கு உட்பட்டது என்பது நீதித் துறை அறியாதா?
பெண்ணின் ஒழுக்கக் கேட்டை விமர்சித்து ஓரெழுத்தெழுதினால் கொந்தளிக்கும் பத்தினிகள் என்னிடம் கோபிப்பதில் நியாயமில்லை. ஏதோ ஒட்டுமொத்த பெண்களும் விபசாரிகள்போல் எண்ணி யாரும் யாரோடும்
படுத்துக் கொள்ளுங்கள் என்று தீர்ப்பளித்துள்ள நீதித் துறைமுன் கோபப்படுங்கள் அத்தனைக் கற்புக்ககரசிகளாக நீங்கள் இருந்தால்!
வயதுக்கு வந்த யாரும் யாரோடும் விரும்பினால் படுக்கலாம் என்பது இந்து மக்களுக்கான சட்டமா இல்லை இந்தியாவில் இருக்கும் அனைத்து மதங்களுக்கும் பொருந்துமா? இதை இஸ்லாத்தும் கிறித்துவமும் இந்து மதமும் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறதா?
பாலியல் சுதந்திரம் எல்லோர்க்கும் உண்டு யாரும் யாரோடும் புணரலாம் எனில், இது இரத்த சம்பந்தமுள்ள உறவுகளுக்கும் பொருந்துமா? ஏனெனில், மேல் நாட்டுக் கலாசாரம் மற்றும் ஆபாசப் படங்களைப் பார்த்தும், குடும்ப உறவுகளுக்குள்ளேயே பாலுறவு கொள்ளும் வேட்கை பெருகி(incest sex) வெறியாகி மகளையே தகப்பனும், மருமகளையே மாமனாரும், சகோதரியையே சகோதரர்களும், சகோதரி கணவன், சகோதரன் மனைவியோடே புணர்ச்சியிலும் கற்பழிப்பிலும் ஈடுபடுவது எப்போதோ தொடங்கிவிட்ட நிலையில், இந்தத் தீர்ப்பு, இப்படியும் உறவு முறை பாராமல் உறவாட உரிமை அளிக்கிறதா?
தீர்ப்பு திரும்பப் பெற்றே ஆக வேண்டும். இல்லையேல் நீதி மன்றங்கள் செங்கல் செங்கல்லாகப் பிரிக்கப் படவேண்டும் அதுவே முடிவு.
தன் குடும்பம், பிள்ளைகள், மனைவி, கணவன், சகோதர சகோதரிகள் ஒழுக்க வாழ்வு வாழ்ந்து உயரவேண்டும் என்று விரும்புகிறவர்களும்,
காலம் காலமாக தன் இனம் தன் மதம் கட்டிக்காத்த அழகான நெறி மிக்க வாழ்க்கை முறை சிதைந்து போக அனுமதிக்க முடியாது என்று நினைப்பவர்களும் மற்றும்
ஒவ்வொரு இந்திய குடிமக்களும் இந்தத் தீர்ப்புக் எதிராகப் போராடுவார்கள். இல்லையேல், நாடும் வீடும் மக்களும் எதிர்காலச் சந்ததிகளும், நாம் காத்த பண்பாடும், மத ஆன்மிக தெய்வக் கோட்பாடுகள் சகலமும் நம் கண்முன்பே சரிந்து விழுவதைப் பார்க்க வேண்டியவர்கள் ஆவோம்!

158 வருட ஐபிசி 497 ரத்து.. பெரிய விசேஷல்லாம் ஒன்னுமில்ல...
மாற்றான் மனைவியுடன் ஒருவன் உறவு கொண்டால் அவனுக்கு மட்டுமே ஐந்தாண்டு சிறை.. பெண்ணை தண்டிக்க முடியாது..இதுதான் ஐபிசி 497 செக்சன் சொன்னது..
''இருவர் சேர்ந்து செய்யும் தவறில் ஆணை மட்டும் தண்டிப்பது சரியில்லை.. பெண்ணையும் தண்டிக்கவேண்டும். அல்லது இருபாலரையும் தண்டிக்கக்கூடாது'' என்று நீண்ட காலமாக நடந்த வந்த விவாதம்....
இப்போது தகாத உறவு கிரிமினல் குற்றம் அல்ல என்று
சொல்லி 497 பிரிவையே செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்துவிட்டது.
உடனே நம்ம ஆட்கள் கள்ளக்காதல் கிரிமினல் குற்றமல்ல.. எவன் பொண்டாட்டிகூட யார் வேண்டுமானாலும் போய் படுத்துக்கலாம், யாரும் ஒன்னும் கேக்கமுடியாது என்ற ரீதியில் பொங்கி வருகிறார்கள்..அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை.
திருமண பந்தத்திற்கு வெளியேயான உறவு கிரிமினல் குற்றமல்ல என்று சொன்ன அதே நீதிமன்றம்தான், இந்த மாதிரி, படுக்கையை மாத்தி போடுறது தெரிஞ்சா அதை வெச்சே கணவனோ, மனைவியோ டைவர்ஸ் கேக்கலாம்னு தெளிவா சொல்லியிருக்கு..
என்னமோ இந்த தீர்ப்பால இனிமே கள்ளக்காதல் வெள்ளமா பெருக்கெடுத்து ஓடும்ற மாதிரி சமூக அக்கறை காட்டி நெஞ்சை நக்கறா மாதிரி சீன் போட ஆரம்பிச்சிட்டாங்க.. பொங்கறவங்க வீட்ல, ''இது மாதிரி கள்ளக்காதல் நடக்கும்னு பயமா இருக்கா''?ன்னு கேட்டுப்பாருங்க..
அடிச்செருப்பால‘ எங்க குடும்பம் ஒன்னும் அப்படிப்பட்ட மட்டமான குடும்பம் இல்லேன்னு சீறிக்கிட்டு பதில் வரும்.. அதையேத்தான் நாங்களும் சொல்லவர்றோம்.. எல்லார் குடும்பமும் கௌரவமான குடும்பம்தான்..
பொண்டாட்டி, புருஷன், அப்பன், அம்மா, புள்ள, பொண்ணு, அக்கா, தங்கச்சின்னு குடும்பத்துல இருக்கிற எல்லா உறவும் தப்பு செய்யவே மாட்டாங்கன்ற நம்பிக்கையிலதான் எல்லாருமே வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்காங்க..
ஊர்ல எல்லா கடைகளிலும் பல பொருட்களோடு விஷமும் விக்கறாங்க..அதுக்காக எல்லாருமே அத வாங்கி குடிச்சிகிட்டு செத்துக்கிட்டேவா இருக்காங்க? போய்ச் சேரணும்ன்னு விரும்பறவங்கதான் வாங்கி குடிக்கப்போறாங்க..அப்படிதான் குடிப்பேன் என்றால் நாண்டுக்கிட்டு சாகட்டும்ங்கிறேன்....
போங்க பிரதர் போங்க, போய் புள்ளை குட்டியை படிக்கவைங்க......; Vasu Srinivasan



Wednesday, September 26, 2018

Galileo's Original Telescope

Galileo's Telescopes. The basic tool that Galileo used was a crude refracting telescope. His initial version only magnified 8x but was soon refined to the 20x magnification he used for his observations for Sidereus nuncius. It had a convex objective lens and a concave eyepiece in a long tube

Tuesday, September 25, 2018

மகாலய பக்ஷ பிதுர் வழிபாடு ...


புரட்டாசி மாதத்தில் சூரியன் அமரபக்ஷம் (பௌர்ணமி முதல் அம்மாவசை வரை கன்னி ராசியில் நுழையும் காலத்தில் பிரவேசிப்பது மகாலயம் எனப்படும்
அட இன்று புரட்டாசி 8 தேதி ஆகிறது இன்றுதான் சூரியன் கன்னி ராசிக்குள் 1 ஆம் தேதியே நுழைந்து விட்டானே என்று பலர் கேட்பது புரிகிறது ..

இது நாம் பலமுறை சொன்ன மாதிரி எல்லா பண்டிகையும் சந்திர மாசம் , பௌர்ணமி அன்றுதான் ஆரம்பிக்கும் , அதில் இருந்துதான் பண்டிகைகள் நிர்ணயக்க படும் .
வீட்டில் இருக்கும் பஞ்சாங்கத்தை எடுத்து கிரக பாத சாரங்கள் என்று ஒரு பக்கத்தில் ஒவ்வொரு கிரகமும் என்று எந்த நக்ஷத்திரத்தில் இருக்கு என்று போட்டு இருக்கும் அதில் ஒரு 7 or 8 தமிழ் மாதத்தில் தேதியில் கன்யாயன, துலாயன என்று போட்டு இருக்கும் .. அதுதான் சந்திர மாச ஆரம்பம் !!! (அன்று பௌர்ணமியாக இருக்கும் !!)
12 சூரிய ராசிகளில் இந்த மாதம் 6 வது .. சரிபாதி , உத்திர நக்ஷத்திர நான்காம் பாதத்தில் சூரியன் நுழைந்து சந்திரன் பூரணமாக பூரட்டாதி நக்ஷத்திரத்தில் (180* ) எதிர்புறம் நிற்கும் பொது
சந்திர உலகமாம் நமது பிதுர் உலகம் , வெறும் பொருளால் (material world) ஆனா பூமிக்கு நெருக்கமாக வருவதாக நம் முன்னோர்கள் கணித்தார்கள்
மனிதர்கள் பிறக்கும் போது பிறந்தநாளை நக்ஷத்திரகள் கொண்டு அளப்போம் , ஆனால் இறப்பை திதி (இது சந்திரனின் ஓட்டமான பௌர்ணமி அம்மாவசை கால அளவு ) கொண்டு அறிகிறோம் .
நம் முன்னோர்கள் இறந்தவர்கள் பிதுர் உலகையும் சந்தரனையும் இணைத்து அறிந்தார்கள்.
மனிதர்கள் பல பிறவிகள் எடுக்கிறார்கள் என்பதை சனாதன தர்மம் அறிவிக்கிறது ..
மனிதன் முக்கியமாக பிறக்கும் போது மூன்று உடலை பெறுகிறான் ..
பொருள் உடல் (physical body) சூக்ஷும சரீரம் (astral body) , இதை சார்ந்து இருக்கும் ஜீவன் (கர்மத்தால் சூழப்பட்ட சுத்த சத்துவமான ஆன்மா ) இதை காரண சரீரம் என்கிறார்கள் (பாவ புண்ணி யத்தின் காரணமாக பிறப்பு என்பதால் )
இதில் ஜீவன் தனது பாவ புண்ணியங்களை சுமந்து பல பிறவிகளை எடுக்கும் !!
உடல் மற்றும் சூக்ஷும சரீரம் , இறப்பிற்கு பிறகு ..... உடல் பூமியில் அழிக்கப்படும் (எரியூட்டி , புதைத்தும் ) சூட்சுமம் சரீரம் .. இதில்தான் நமது அறிவு ஆற்றல் திறமை (இது அந்த பிறந்த குடும்பத்தின் DNA ) மறுபடி பிதுர் உலகமாம் சந்திர உலகை சென்று அடையும்
நான் முன்னமே எழுதி இருப்பது போல இந்த சூக்ஷும சரீரம் ரஜினி பாட்சா பட டிரஸ் போல அந்த சினிமா கம்பெனி ஆபீசில் மட்டுமே இருக்கும் ... அதாவது பிதுர் உலகில் இருக்கும் , அந்த சினிமா கம்பெனி வேறு ஒரு படத்தில் சில பல மாற்றங்கள் செய்து வேறு படத்தில் பயன்படுத்தி கொள்வர் ..
உங்க தாத்தா இப்படிதான் அருமையா இங்கிலீஷ் பேசுவார் என்று உங்க பாட்டி சொல்வதை போல .. முழுமையாக இருக்காது.
மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஆத்மக் கடன், தெய்வக் கடன், பித்ருக் கடன் என்று மூன்று கடமைகள் உண்டு. பித்ருக் கடன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் ஆத்மக் கடன், தெய்வக் கடன், பித்ருக் கடன் என்று மூன்று கடமைகள் உண்டு.
தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும், சுற்றத்தாருக்கும், உறவினர்களுக்கும், சமுதாயத்திற்கும் செய்ய வேண்டிய கடமைகள் ‘ஆத்மக் கடன்’ என்றும், தனது குலதெய்வத்திற்கும், விருப்ப தெய்வத்திற்கும், கோவில்களில் இருக்கும் தெய்வங்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் ‘தெய்வக் கடன்’ என்றும், தன் குலத்தில் மறைந்த மூதாதையர்களுக்கு ஆண்டுதோறும் செய்யப்படும் சிரார்த்தங்கள் ‘பித்ருக் கடன்’ என்றும் சொல்லப்படுகிறது.
இந்த மூன்று கடன்களில் பித்ரு கடன் தான் மிக முக்கியமானது. நம்முடைய உடலையும், உயிரையும் கொடுத்தது நமது பெற்றோர். எனவே ஒவ்வொருவரும், தனது தாய்- தந்தை இறந்த பிறகு, ஒவ்வொரு வருடமும் அவர்கள் இறந்த திதியன்று சிரார்த்தம் செய்ய வேண்டும். ‘சிரார்த்தம்’ என்ற வடமொழிச் சொல்லுக்குச் ‘சிரத்தையுடன் மன ஒருமைப்பாட்டுடன் செய்யும் செயல்’ என்பது பொருளாகும்.
சிரார்த்தம் என்பது முன்னோர்களை வழிபடல், முதியோரை மதித்தல், தன் பிறவிக்கும், மரபு வழியினருக்கும் முதல்வர்கள் ஆனவர்களைப் போற்றுதல் என்று பொருள்.
நன்மை தரக்கூடிய சிரார்த்தம், தர்ப்பணம் முதலிய பித்ரு செயல்கள் யாரை நினைத்துச் செய்கின்றோமோ, அவர் பித்ரு உலகில் இருக்கலாம் அல்லது தேவ உலகில் இருக்கலாம். இல்லை, பூலோகத்தில் நமக்கு அருகிலேயே கூட இருக்கலாம்.
அவர்களின் நிலை தாழ்ந்ததாகவோ அல்லது உயர்ந்ததாகவோ இருக்கலாம்.
நமது முன்னோர்களான அவர்களுக்கு நம்மால் செய்யப்படும் சிரார்த்தம்,
அவர்கள் உயர்ந்த நிலையில் இருந்தால் ஆசியாக நமக்குக் கிடைக்கும். தாழ்ந்த நிலையில் இருந்தால், அவர்களின் நிலை உயர உதவும்.
மறுபிறப்பு எடுத்திருந்தால் அவர்களின் இவ் உலக துன்பம் தீர உதவும். எனவே, பித்ரு காரியங்களை ஒவ்வொரு வரும் கடமையாகச் செய்ய வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.
ஆயுள் முடிந்து போன நமது முன்னோர்கள் பரவுலகத்தில் அல்லது பித்ரு உலகத்தில் வாழ்கிறார்கள்.
அவர்கள் வசுமித்திரர்கள், ஆதித்யர்கள் என்ற பிரிவில் அடங்குவார்கள். உடல் அழிந்தாலும் பிரேத நிலையில் குறிப்பிட்ட காலம் இருந்து, தங்களது வாரிசுகள் செய்யும் நற்செயல்களால் பிரேத தோஷம் நீங்கப் பெற்று, தங்களது பூரண அன்பையும் நம் மீது காட்டலாம்.
இறந்து போன ஒருவருக்காக அவரது மகன், பேரன், சகோதரன் முதலானவர்களும் அவர்களின் சுய கோத்திரத்தில் பிறந்த ஏழு தலைமுறையினரும், கோத்திரம் மாறிய பெண் வழி மரபுரிமையினரும் சிரார்த்தம் செய்யலாம்.
சரி .. இதை படிக்கும் உங்களுக்கு அறிவு ஆற்றல் மற்றும் சுக வாழ்வு குடுத்து நடிக்க வைத்து கொண்டு இருக்கும் அந்த சினிமா கம்பெனி முதலாளி (பிதுர் உலக பெயர் அறியா தலைமைகள் ) உங்கள் வீட்டுக்கு வரும் பக்ஷம் (15 நாட்கள் )
கண்ணாடியில் நம்மை பார்த்தும் , நாலு பேரு நம்மை ஒரு செயலுக்கு பாராட்டும் பொது பெருமைப்படும் அனைத்தும் அந்த பிதுர்களையே முழுமையாக சாரும் !!!
எனவே .................. வேலை குடுத்து உடை குடுத்து சோறு போட்டு புகழ் வாங்கி குடுக்கும் முதலாளி முன்பு எப்படி நடக்க வேண்டும் என முடிவு எடுத்து கொள்ளுங்கள்

Monday, September 24, 2018

Enterprise Sri Lanka program government approved several loans with low interest and no interest


Under Enterprise Srilanka program government approved several loans with low interest and no interest for developing the individual & country.

People can request particular loans from banks for business, self-employment, farming, tourism, fisheries, solar penal installation, graduate loans, high studies,...

Please talk to nearest banks and get loans than getting high-interest loans from finance institutions & banks.

I hope many of our people not aware of this program.

Abraham Brahma Ibrahim


One of the more significant unifying decipherments is the connection between the similarities of Jewish-Christian-Islam patriarch Abraham and the Hindu creator god Brahma, which overlap in at least six ways:
(a) Both Abraham and Brahma are the said-to-be creators all humans (Ra is the main creator god of the Egyptian pantheon).

(b) Both Abraham and Brahma have the same etymology: “Father Ra son of Nun” (water-fire-earth theory).
(c) Both Abraham and Brahma derived from the Nun (Noah and Ma-Nu, respectively).
(d) Both Abraham and Brahma have the same sister-wife, in namesake, Sarai and Saraswati, respectively.
(e) Both Abraham and Brahma have the same thrice sister-wife parable (creation by incest rewrite).
(f) The slaying of son reoccurs in both cases (release of the soul rewrite / Osiris-Horus splitting rewrite).
Lorna Wilson

The differences between the common Greek (left) and Albanian (right) clothing during the Ottoman period


“மதக வன்னிய“ Mathaka Wanniya" “இப்படி ஒரு காலம்“


என்னுடைய “இப்படி ஒரு காலம்“ என்ற கட்டுரைப் புத்தகத்தின் முதல் பதிப்பில் அத்தனை பிரதிகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. இரண்டாவது பதிப்பைச் செய்யுங்கள் எனப் பலரும் கேட்டிருந்தனர். ஆனாலும் மனதில் இன்னமும் தயக்கமுண்டு. இரண்டாவது பதிப்புக்கு தமிழ்ச் சூழலில் அவ்வளவு வரவேற்பிருக்குமா என.
ஆனால், இது சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “மதக வன்னிய“ Mathaka Wanniya" என்ற தலைப்பில் வெளியாகியபோது மூன்று நாட்களிலேயே 1000 பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது பதிப்பு வெளியாகி அதுவும் அதிகமாக விற்பனையாகியுள்ளது.
இதைப்பற்றி இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்த அனுஷா சிவலிங்கம் நேர்காணல் ஒன்றில் கீழ் வருமாறு சொல்லியிருக்கிறார் -
கேள்வி - இந்த நூலுக்கு சிங்கள சமூகத்திடம் வரவேற்பு இருந்ததா?
பதில் - “நான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு கூடுதலாக இருந்தது. புத்தக அறிமுக நிகழ்வு நடத்த முன்னர் சமூக ஊடகங்கள் ஊடாக இவ்வாறு ஒரு புத்தகம் வெளியிடப்பட உள்ளதாக பகிர்ந்து மூன்று நாட்களுக்குள் 1000 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன. கொழும்பில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியில் அந்த நூலினை பலர் வாங்க முயன்ற போதும் , பிரதிகள் முடிவடைந்து விட்டன. அந்த நூலினை வாசித்த பலர் தம்மையும் தமது இனத்தையும் விமர்சனத்திற்கு உள்ளாக்க தொடங்கினார்கள். அதன் பின்னர் இந்த நூல் தொடர்பில் விமர்சனங்கள் , பாராட்டுக்கள் என பல கடிதங்கள் எனக்கு வந்தன. அவை எனக்கு மட்டும் அல்ல அந்த நூலினை தமிழ் எழுதிய கவிஞர் கருணாகரனுக்கும் பல கடிதங்கள் சென்றன. பல பிரபலமான சிங்கள எழுத்தாளர்கள் அந்த நூலினை சிங்கள மொழிக்கு மொழி பெயர்த்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன் தமது பாராட்டுக்களையும் தெரிவித்தனர். நூல் வெளியிட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றன. கடந்த வாரம் கூட ஒரு கடிதம் வந்தது. அதனை அது ஒரு சிரேஸ்ட சட்டத்தரணி எழுதி இருந்தார். அந்த நூலினை சிங்கள மொழிக்கு மொழி பெயர்த்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன் , அந்த நூலில் யாழில்.இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமரசாமியின் வழக்கு தொடர்பில் தான் தேடி வருவதாகவும் எழுதி இருந்தார். அந்த நூலினை சிங்கள மொழிக்கு மொழி பெயர்த்தமை ஊடாக சில சிங்கள மக்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தமையை நினைத்து நான் பெருமை கொண்டேன்.“
(இதைச் சிங்கள மொழிக்கு எடுத்துச் செல்வதற்கு முதன்மைப் பங்களிப்பைச் செய்தவர் விமல் சாமிநாதன். விமலின் நல் நோக்கமும் ஆர்வமும் அதற்கான உழைப்பும் எப்போதும் மதிப்புக்குரியன.
விமலின் வழிகாட்டலில் இப்படி ஒரு காலத்தை மதக வன்னிய என சிங்களத்துக்கு எடுத்துச் சென்றவர் அனுஷா. ஆச்சரியமூட்டும் வகையில் மிகச் சிறிய வயதிலேயே இந்தப் பணியை அவர் செய்திருக்கிறார்.
இருவருக்கும் எப்போதும் என்னுடைய அன்பும் நன்றிகளும்)
Karunakaran Sivarasa

How Brains understand to Smell


Unlike images, odours are unstructured, ill-defined things. What neuroscientists are learning about the olfactory system could help computer scientists develop new, more powerful machine learning algorithms.
Now, teams of scientists have developed a deep learning method that smells compounds in the human breath and detects illnesses. The AI can detect 17 diseases, including 8 different types of cancer, just from your breath. This AI is cable of recognizing chemical signatures of the diseases by their chemical structure.







Random and Sparse Networks

Olfaction differs from the vision on many fronts. Smells are unstructured. They don’t have edges; they’re not objects that can be grouped in space. They’re mixtures of varying compositions and concentrations, and they’re difficult to categorize as similar to or different from one another. It’s therefore not always clear which features should get attention.

These odours are analyzed by a shallow, three-layer network that’s considerably less complex than the visual cortex. Neurons in olfactory areas randomly sample the entire receptor space, not specific regions in a hierarchy. They employ what Charles Stevens, a neurobiologist at the Salk Institute, calls an “anti-map.” In a mapped system like the visual cortex, the position of a neuron reveals something about the type of information it carries. But in the anti-map of the olfactory cortex, that’s not the case. Instead, information is distributed throughout the system, and reading that data involves sampling from some minimum number of neurons. An anti-map is achieved through what’s known as a sparse representation of information in a higher dimensional space.

Take the olfactory circuit of the fruit fly: 50 projection neurons receive input from receptors that are each sensitive to different molecules. A single odour will excite many different neurons, and each neuron represents a variety of odours. It’s a mess of information, of overlapped representations, that is at this point represented in a 50-dimensional space. The information is then randomly projected to 2,000 so-called Kenyon cells, which encode particular scents. (In mammals, cells in what’s known as the piriform cortex handle this.) That constitutes a 40-fold expansion in dimension, which makes it easier to distinguish odours by the patterns of neural responses.
Cecile G. Tamura

கெக்கிராவ ஸஹானா

கெக்கிராவ ஸஹானாவை நான் முதலில் வாசித்தது மல்லிகையில்தான். ஸஹானாவுக்கு கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுத்து, அவரை ஊக்கப்படுத்தினார் ஜீவா. “பாரும் ஒரு சிங்களப் பகுதியில இருக்கிற முஸ்லிம் பொம்பிளைப்பிள்ளை என்ன மாதிரி எழுதுகிறா” என்று ஜீவா வாய் நிறைய, மனசு நிறையப் பெருமிதமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

யாராவது இளைய - புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் எழுதுவதைக் கண்டு விட்டால் போதும், இப்பிடித்தான், அவர்களைப் பற்றியே எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருப்பார் ஜீவா. 1980 களில் வாசுதேவன்(மட்டக்களப்பு), சோலைக்கிளி, ஜபார், சந்திரா தியாகராஜா போன்றவர்களைப் பற்றியெல்லாம் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தார்.

ஜீவாவின் வாய்பைப் பயன்படுத்தி, 1990 களில் அதிகமாக எழுதினார் ஸஹானா. சில சமயம் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் ஸஹானா மல்லிகையில் எழுதிக் கொண்டேயிருந்தார்.
பிறகு வெவ்வேறு பத்திரிகைகள், இதழ்களிலும் எழுதினார் ஸஹானா. ஸஹானாவின் கவனம் எப்பொழுதும் மனித உறவுகளுக்கிடையிலான சிக்கல்களும் உணர்ச்சிச் சுழிப்புகளுமாகவே இருந்தது. அன்பை ஆதாரமாகக் கொண்ட வாழ்க்கையை அவர் வலியுறுத்தினார். அதிக சிரமமில்லாத எளிய எழுத்து. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் கேள்விப்பட்டேன். ஸஹானாவின் கதைகளைப் பற்றிப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ஆய்வு செய்ததாக.
எழுத்துகளின் வழியே அறியப்பட்ட அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் எனப் பல தடவை யோசித்திருக்கிறேன். கடிதங்களில் எழுதும்போது நிச்சயமாகத் தனக்கும் அப்படி ஆர்வமுண்டு. வாருங்கள் என்று அழைத்திருந்தார். பல தடவை கெக்கிராவவின் வழியாகச் சென்றிருக்கிறேன். கடந்த ஆண்டு கெக்கிராவவில் ஒரு நண்பர் வீட்டில் நடந்த நிகழ்வொன்றுக்காகச் சென்றிருந்தேன். அப்பொழுது கூடச் ஸஹானாவின் வீட்டுக்குச் செல்ல வேணும், அவரைச் சந்திக்க வேணும் என்று விரும்பியிருந்தேன். நண்பர்களுடன் சென்றிருந்ததால் அதற்கான நேரம் கிடைக்கவில்லை. பிறகொரு தடவை பார்க்கலாம் என்று தாகம் நிரம்பிய நினைவோடு வந்தேன்.
இனி எப்போதுமே பார்க்க முடியாது. உங்களுக்குத் தந்த கால அவகாசம் எல்லாம் முடிந்து விட்டது என்று நிரந்தரத் துக்கத்தை உணரவைத்துச் சென்று விட்டார் ஸஹானா.
அவர் தந்து விட்டுச் சென்ற எழுத்துகள்தான் இனி அவருடைய அடையாளமும் உறவும் நினைவுகளும்.
என்றும் எங்களோடுதான் நீங்கள் ஸஹானா...Karunakaran Sivarasa

புத்தகங்கள் என்றென்றைக்கும் புதியனவாகும்.


Basheer Segu Dawood
கிடைத்தற்கரிய பழைய புத்தகங்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் சில்லறைக்கு அறிவு வாங்கலாம் வாருங்கள் தோழர்களே!

நேற்றைய அந்திப் பொழுதில் கல்கிஸ்ஸையில் இருக்கும் Chinthaka Book Shop என்ற பழைய புத்தகங்கள் விற்கும் கடைக்குச் சென்றிருந்தேன்.
அக்கடையில் கண்ணாடி அலுமாரிகளுக்குள் அடுக்கி வைக்கப்பட்டும், கீழே தரையில் பரப்பப்பட்டும் கிடந்த புத்தகங்களை கண்களால் துளாவி, பரபரப்புடன் கைகளால் அளைந்து 16 புத்தகங்களைத் தெரிந்து வாங்கிக்கொண்டேன். பின்னர் கடையின் முதலாளியாகவும்- தொழிலாளியாகவும் இரட்டைப் பாத்திரம் வகிக்கும் வீரரத்னவிடம் பேச்சுக் கொடுத்தேன்.
இந்தப் பெரிய எண்ணிக்கையிலான பழைய புத்தகங்களை எப்படிக் கொள்வனவு செய்கிறீர்கள்? என்று வினவினேன்.
இப்போதெல்லாம் பெரும்பாலானவர்களுக்கு இங்கு பழைய புத்தகங்களை வாங்கி விற்கும் கடை திறந்திருப்பது தெரியும். கணவர் இறந்துவிட்டாலோ அல்லது நடமாட முடியாதவாறு முதுமையடைந்துவிட்டாலோ அவர் வாங்கிப் பாதுகாத்து வைத்திருந்த புத்தகங்கள் மனைவியருக்குப் பெரும் சுமைகி விடுகிறது. எங்களை அழைத்து மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள்.சிலர் பணமே தரத் தேவையில்லை, இடத்தைக் காலி பண்ணினால் போதும் என்கிறார்கள். இவ்வாறே சில இடங்களில் மனைவியரின் புத்தகங்களைக் கணவர் காலி செய்து வீட்டைத் துப்புரவாக்கும் வேலையைக் கச்சிதமாகச் செய்கிறார் என்று வீரரத்ன பதிலிறுத்தார்.
பதிலைச் செவியேற்று இருண்டுகொண்டு வந்த என் கண்களுக்குள் எவரோ ஒரு பெண் தும்புத் தடியோடு நடமாடுவது தெரிந்தது.
அந்தக் கடையில் புத்தகங்களை வாங்குவதற்கும் கிழவர், கிழவியரே நின்றிருந்தனர். இது என்ன முரணோ? இவர்கள் வாங்கிய புத்தகங்கள் குறுகிய காலத்தில் இதே கடைக்கு மீளுமோ?
இளவயதுடைய எந்தப் பாலினத்தையும் அங்கு காணவில்லை என்பது கவலையளித்தது.
அங்கு பழைய ஸ்மார்ட் போன் மற்றும் லெப்டொப் ஆகியன விற்பனைக்கு விடப்பட்டிருந்தால் இளையோர் நிரம்பியும் முதியோர் இன்றியும் இருந்திருக்குமோ அவ்விடம்?

நண்பர்களே கல்கிஸ்ஸை கார்கில்ஸ் புட் சிற்றிக்கு முன்னால் அமைந்துள்ள சிந்தக்க புத்தகசாலைக்கு போய் சில புத்தகங்களை வாங்கலாமே!

A spiral staircase designed by Leonardo da Vinci in the year 1516.


Monday, September 17, 2018

முதல் லெஸ்பியன் கவி என்று புகழப்படும் சாப்போவின் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டகவிதை

முதல் லெஸ்பியன் கவி என்று புகழப்படும் சாப்போவின் 2500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, காதலின் முழுமையும் வசீகரமும் நிறைந்த கவிதை

Sappho seemingly penned these lines to a female lover in the seventh century BC, becoming one of the first notable lesbian poets in the process. In fact, the word "lesbian" derives from the name of her home: the island of Lesbos. Since Sappho's time, many famous lesbian poets have followed in her spiritual footsteps.



அவன் ஒரு கதாநாயகனை விட மேலானவன்
என்னுடைய கண்களில் அவன் ஒரு கடவுள்
உன்னருகில் உட்கார அனுமதிக்கப்படும் அந்த ஆள்
தூண்டும் உன்னுடைய குரலின்
இனிமையான முணுமுணுப்புகளை நெருக்கமாக
கேட்டுக்கொண்டிருக்கிறானே
சிரிப்பு என்னுடைய இதயத்துடிப்பையே
வேகமாக்குகிறது
உன்னைத் திடீரென்று சந்தித்தால்
என்னால் பேச முடியாது
என்னுடைய நாக்கு உடைந்திருக்கிறது
மெல்லிய தீக்கொழுந்து என்னுடைய
சருமத்தின் அடியில் பாய்கிறது
எதையுமே என்னால் பார்க்கமுடியவில்லை
என்னுடைய செவிப்பறைகள் தாளமிடுவதையே
கேட்கிறேன்
நான் வியர்வை வடிய நிற்கிறேன்
நடுக்கம் என்னுடைய உடலை அசைக்கிறது
உலர்ந்த புல்லை வெளுப்பாக மாற்றுகிறது
அது மாதிரியான நேரங்களில்
மரணம் என்னிலிருந்து தூரத்தில் இல்லை.
Kutti Revathi

கவிதைகளை எழுதுவது கவிதையாகாது

ஒரு நாட்டுப்பாடல்
~ ஜிபிக்னியூ ஹெர்பெர்ட்
மொழியாக்கம்: வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை
உழவனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
விதைத்து அறுப்பது
என்றான் உழவன்.
தையல்காரனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
கிழியாத, வெதுவெதுப்பான ஆடைகளைத் தயாரிப்பது
என்றான் தையல்காரன்
தளபதியின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
கொரில்லாவுக்கு எதிராக பூர்ஷ்வா வர்க்கத்தின்
இராணுவத்தை
வழிநடத்திச் செல்வது என்றான் தளபதி
கவிஞனின் மகன் கேட்டான்:
அப்பா, கவிதை என்றால் என்ன?
எனக்குத் தெரியாது என்றான் கவிஞன் -
ஆனால் கவிதைகளை எழுதுவது
கவிதையாகாது மகனே!
Kutti Revathi

வாழ்வோம் வாழவைப்போம்...

கருணை உள்ளம் கொண்ட பல புலம் பெயர் தமிழர்கள் ஊருக்கு வரும் போது போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் இல்லங்களுக்கு செல்கிறார்கள்.
அவர்களுக்கு அன்றைய உணவுக்கான செலவுகளை ஏற்றுக் கொள்கிறார்கள்.
உண்மையில் இது பாராட்டப்பட வேண்டிய விடயம்.
ஆனால் அதையும் விட புலம் பெயர் தமிழர்கள் மட்டுமல்ல, ஊரில் இருக்கும் வசதி படைத்தவர்கள் இன்னும் எவ்வளவோ வினைத்திறன் மிக்க விடயங்களை செய்யலாம் .
ஒரு வசதி படைத்த குடும்பம் ஒரு குழந்தைக்கான அனைத்து செலவுகளையும் பொறுப்பெடுக்கலாம்.
இதற்கு ஆரம்பத்தில்மாதம்
5000 - 10000 ரூபாய் மட்டுமே செலவாகும்.
வசதி படைத்தவர்களக்கு இது ஒரு பெரிய தொகை அல்ல.
அந்த குழந்தை தன் சொந்த காலில் நிற்கும் வரைக்கும் இதை செய்யலாம் .
ஆகக் குறைந்தது அந்த குழந்தையின் கல்விச் செலவையாவது கையில் எடுக்கலாம்.
பாதுகப்பற்ற
ஓலைக் குடிசையில் வாழும் ஒரு சிறு குடும்பத்திற்கு 500 சதுர அடிக்கு குறைவான அடிப்படையான கல் வீட்டைக் கட்டிக் கொடுக்கலாம்.
இதற்கு 10 இலட்சத்திற்கும் குறைவான செலவே யாகும்.
அவர்களுக்கு நிரந்தர தொழிலாக 10 பால் மாடுகளையோ 50 கோழிகளை யோ வழங்கலாம்.
அல்லது சிறு பெட்டிக்கடை ஒன்றை போட்டுக் குடுக்கலாம்.
இன்னும் எவ்வளவோ நிரத்தர உதவிகளை செய்யலாம் .
ஒரு நாள் உணவு புண்ணியம் என்றால் நிரந்தர உதவி மகா புண்ணியம்.
இப் பதிவு வசதியானவர்களுக்கு மட்டுமானதே.
ஒரளவு வசதி படைத்தவர்கள் கூட தங்கள் வசதிக்கேற்ப சிலவற்றை செய்யலாம் .

Sivaratnam Navatharan


*மஞ்சள் பூசி குளிங்க… கருப்பை புற்றுநோய் எட்டிக்கூட பார்க்காது!*


முகத்திற்கு பூசுவதற்கு வித விதமாய் அழகு சாதன கிரீம்கள் வந்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பது இன்றைக்கு மறந்தே போய்விட்டது. ஆனால் மஞ்சள் பூசி குளிப்பவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மஞ்சள் பூசிய முகத்துக்கென்று ஒரு தனி அழகு உண்டு. ஆனால், அது வெறும் அழகோடு நிற்காமல் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு என்பது இன்றைய இளம் யுவதிகளுக்குப் புரிவதில்லை.
இன்றைய இளம் பெண்கள் பலருக்கும் சோப்பு போட்டு குளித்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பதன் மகிமை தெரியாமல் போனதன் காரணம் அதைப் பற்றி சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் போனதுமே காரணம். எனவேதான் மஞ்சள் பூசி குளித்தவர்கள் கூட, நாளடைவில் தோழிகள் சிரிக்கிறார்களே என்று தற்போது மஞ்சளை மறந்தே விட்டார்கள்.
மஞ்சள் ஒரு கிருமிநாசினி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது பெண்களுக்கு ஏற்படும் கொடிய புற்றுநோயான கருப்பை வாய் புற்றுநோயைக் கூட கட்டுப்படுத்துகிறதாம்.
மஞ்சள் பூசி குளிக்கும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ் (எச்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் எச்பிவி கிருமிகள் கருப்பை வாயில் இருப்பது கண்டறியப்பட்ட பெண்களில் பாதி பேருக்கு மஞ்சள் கொடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. சிலருக்கு எப்போதுமான மருந்துகள் மட்டும் கொடுக்கப்பட்டது.
அதில் மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு எச்பிவி கிருமியால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகியிருந்ததும், மேலும் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இனி பெண்கள் குளிக்கும் போது, மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் விடுமுறை நாட்களிலாவது மஞ்சள் பூசுவது அவசியம்.