Search This Blog

Sunday, September 24, 2017

புராணங்களில் நமது தமிழரின் வரலாறு!

 புராணங்களில் நமது தமிழரின் வரலாறு! விஷ்ணுபுராணம், மார்க்கண்டேயபுராணம்; “அயோத்தியின் மன்னான அம்பரீசன்(இளஞ்சேத்சென்னி) ஒரு யாகத்தை நடத்திக்கொண்டிருந்தபோது இந்திரன் யாகப்பலியை எடுத்துச் சென்றான்” எனக்குறிப்பிடுகிறது. இந்திரன்-முசுகுந்தன்- பரசுராமன், யாகம் நடத்திய புரோகிதன் சமதக்கினி- ஒரு அலக்சாந்தன், யாகப்பலியை எடுத்துச்செல்ல உதவியவன் பரசுராமன். “இத்தகைய அபசகுணமான நிகழ்ச்சி ஏற்பட அரசனின் சீர்குழைந்த நிர்வாகம்தான் காரணம் என்றும், ஒரு மனிதனைப் பலிகொடுத்துத்தான் பரிகாரம் தெடவேண்டும் என்றும் குரு(சமதக்கினி) கூறினார்.” முசுகுந்தன்- பரசுராமன் பரசுப்பதவியை - இந்திரப்பதவியை; வசிட்ட சமதக்கினியிடம் வேண்டிப் பெற்றுவிட்டான், இந்த அம்பரீசன்(இளஞ்சேத்சென்னி)யாகத்திலும் பரசுராமன் இந்திரப்பதவி வகித்திருப்பான். பரசுராமனுக்குத் தெரியாமல் யாகப்பிராணி கடத்தப்பட்டிருக்கமுடியாது. இருக்கு வேதத்தில் இடம்பெறும் சுனச்சேபனைப் பலிகொடுக்கத் தேர்வு செய்தனர். சுனசேபனும் சமதக்கினியின் மகனே. உண்மை வெளிப்பட்டுவிட்டதால் வசிட்டனால் பலிகொடுக்கத் தேர்வுசெய்யப்பட்டிருக்க வேண்டும். “மன்னனின் மோசமான ராச்சிய பரிபாலனத்தால்தான் வேள்விப்பலிப்பசு காணாமல் போனது எனப் புரோகிதன் சமதக்கினி கூறினான். இந்நிலையில் அம்பரீசன்(இளஞ்சேத்சென்னி) சமதக்கினியுடன் ஆலோசனை செய்து சமதக்கினியின் புதல்வர்களில் ஒருவனைப் பலி கொடுக்க முயன்றனர்.( இதற்கான காரணம் என்ன என்பதைக் குறிப்பிடாமல் மறைத்துவிட்டனர்; காரணம் முசுகுந்த- பரசுராமன் வேள்விப்பலியைக் கடத்திச்சென்றதே) தனது மூத்தமகனை இழக்க சமதக்கினி விரும்ப வில்லை. பரசுராமனைக் கொடுக்க ரேணுகா விரும்பவில்லை. இரண்டாவது மகன் சுனசேபன் தன்னைப் பலிகொடுக்க ஒப்புக்கொண்டான்.(இவன் ரிக்வேதத்திலும் இடம்பெறுகிறான்)இதற்கு ஈடாகப் பொன் பொருட்களும், பசுக்களும், ஆடை, ஆபரணங்களும் கொடுக்கப்பட்டன. புஷ்கரம் வழியாகச் செல்லும்போது; சுனசேபன் தனது மாமனான விஸ்வாமித்திரைக்கண்டு, நடந்ததை எடுத்துரைத்தான். விஸ்வாமித்திரன் சுனசேபனை காப்பாற்றுவதாக உறுதியளித்துத் தனது மக்களில் ஒருவனைப் பலியாகும்படி கட்டளையிட்டான். அவர்களுடன் வாக்குவாதம் நடந்தது. இறுதியில் எவனும் ஒப்புக்கொள்ளாததால் அவர்களை விஸ்வாமித்திரன் சபித்துச்சென்றான். சுனசேபனுக்கு இரண்டு மந்திரங்களை (துதிப்படல்களை) கற்றுக்கொடுத்தான். விஷ்ணுவின்- சூரியனின் பலிபீடத்தில் இம்மந்திரங்களை அக்னியிடம்(சோழனிடம்) முறையிட்டுத் துதித்தால் அம்பரீசன் (இளஞ்சேட்சென்னி) யாகம் செய்யும் இடத்தில் நினைத்தது நிறைவேறும் என உறுதி கூறினார். இதன்படி சுனசேபன் காப்பாற்றப் பட்டான்.“ இந்தயாகம் மேலும் தொடர்ந்தபோது முசுகுந்தன் -பரசுராமன் தன்னால் புணர்ந்து கெடுக்கப்பட்ட சோழன் சேத்சென்னியின் மகள் பாவையுடன் வந்ததாகவும் யாகத்தைத் தடுக்க முயன்றதாகவும் தச்சனின்- சேத்சென்னியின் மகள் தச்சணி மாகாளியாகத் தீயினின்றும் வந்ததாகவும் சிவபுராணம் போன்றவற்றில் காணப்படுகிறது. [ அப்பெண் யாககுண்டத்தில் வீழ்த்தப்பட்டதை மறைத்துவிட்டனர்]; நிறைசூலியான பாவையே யாகத்தைத் தடுக்கத் தீயில் பாய்ந்ததாகவும் ஒரு தகவல் உள்ளது; அவளே பாய்ந்தாளா? அல்லது எவரேனும் யாககுண்டத்தில் வீசினரா? பாவைக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இவ்வளவு காலமும் காக்கப்பட்டுவிட்டது. இனி .. .. தக்ஷனின் யாகம் குறித்துப் பலவிதமான சிவபுராணக் கதைகள் உள்ளன. வரலாற்றில் தக்கனின்மகள் பெயரை `சதி' எனக் குறிப்பிடுகின்றனர். ரிக்வேதம் தச்சணி எனக்குறிப்பிடுகிறது; சதி என்பது பொதுவாகத் தீயில் விழுந்த பெண்களைக் குறிக்கும் சொல்லாக இருக்கக்கூடுமோ? ஐயம் தவிர்க்க முடியாதது. “தக்ஷன்(இளஞ்சேட்சென்னி)தனது பெண்ணைக் காணச்சென்றபோது தடைப்பட்டுக் கோபமுற்று; விஷ்ணு, பிரம்மன் போன்ற கடவுளரைத் தலைவர்களாக்கி யாகம் நடத்த முற்பட்டான்; தேவர், இருடியர்க்குத் தகவல் அனுப்பினான். ததீசி முனிவர், தக்ஷனைச் சிவனுக்கு(முசுகுந்த பரசுராமனுக்கு) அவிர் பாகம் கொடுக்க வேண்டினார். தக்ஷன் மறுத்துவிட்டு யாகத்தைத் தொடர்ந்தபோது, (இதற்குப்பிறகு காணப்படும் தகவல்கள் நம்பத்தக்கனவாக இல்லை) தக்ஷனின் மகள் (முசுகுந்தனால் கெடுக்கப்பட்ட பாவை நிறைசூலியாக) யாகத்தை நடத்தவிடாமல் தடுக்க முயன்றாள், முடியாமல் போகவே சபித்துச் சென்றாள். மணாளனிடம் (முசுகுந்தனிடம்) யாகத்தை அழிக்கவேண்டினாள்” எனவும் உள்ளது. தக்கயாகப்பரணி: ஒட்டக்கூத்தர்இயற்றியது; வெளியிட்டவர் உ.வே. சா. (இதிில் முசுகுந்தன் சிவனோடு அடையாளப்படுத்தப்பட்டான்) யாகத்தை அழிக்க வீரபத்திரர் அனுப்பப்பட்டார். உமா தேவி மஹாகாளியை அனுப்பினாள். வீரபத்திரர் பல்லவத்தை அணிந்து (மாந்தளிர்=இளம் பல்லவர் சேனையுடன்) சென்றார்” எனவும் உள்ளது. சிவபுராணம்: "காத்த வீரியன்(கரிகால்சோழன்) யாகத்தைக் காத்தவன், இவனை ரேணுகா மோகித்தாள், ரேணுகா சமதக்கினி யின் பத்னி, இளம் சிறுமியாக இருந்தபோது, வாழைப்பழத்துக்கு - லிங்கத்துக்கு? ஆசைகாட்டி மணந்து கொண்டார்". மஹாபாரதம்-ஆதிபருவம்: (இவை பிருகு அலக்சாந்த சமதக்கினிவம்ச பிராமணர்க்கும் சேத்சென்னி மற்றும் அவரது மகன் கரிகால்சோழனின் ஞாயிற்றுச்சோழ வம்சத்தாருக்கும் நடந்த மோதல்களை வெளிப்படுத்துகின்றன). "கிருதவீரியன் (கரிகால்சோழனின் தந்தை இளஞ்சேத்சென்னி)என்ற மன்னன் இருந்தான், வேதங்களைக் கற்றறிந்த பிருகுக்கள் இவனுக்கு புரோகிதர்களாக இருந்தனர். மன்னன் இவர்களுக்குத் தாராளமாகச் சொத்துக்களை வாரி வழங்கினான்; நூற்றுக்கணக்கான பசுக்களையும் மலைமலையான பணத்தையும் இவர்கள் சம்பாதித்துவிட்டனர். [சேத் சென்னி பண்ணிய யாகத்தில் யாகப்பலி இந்திரனாகிய முசுகுந்தனால் பரசுராமனின் துணையுடன் கடத்திச் சென்றதையும், இதற்குப் பரிகாரங்கள் செய்யப்பட்டதையும் நினைவுகொள்ளவும். காத்தவீர்யார்ச்சுனன் என்பது கரிகால் சோழன், பல பெயர்களில் சமதக்கினி இடம்பெறுவான், ஔர்வன் என இராவணனும் காணப்படுவான் (ஔர்வன் தொடையிற்பிறந்த வைசியனையும் குறிக்கும்). இராவணனின் மாமனார் மயன் என்பது நாம் அறிந்ததே, கரிகால்சோழனுக்கு மகதம், அவந்தி, வச்சிர நாட்டவர்கள் கொடுத்த கொற்றப்பந்தரும், பட்டி மண்டபமும், தோரணவாயிலும் மயன் விதித்துக் கொடுத்த மரபின, எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இராவணன்; மனைவிவழியில் இலங்கை அரசைப் பெற்றவன் எனவும் தெரிகிறது.) “சமதக்கினிக்கு அவரது துணைவி ரேணுகா; நித்திய அனுட்டானங்களுக்குத் தேவையான பசுவின் பால், நதிநீர் போன்றவற்றைக் கொடுத்து உதவிகள் செய்துவந்தாள். அதிகாலை நதிக்குச் சென்று நீராடி ரிசியின் தவவலிமையாலும் தனது கற்புத் திறத்தாலும் நதியின் மணலை ஒன்று சேர்த்துக் கும்பமாக்கி; அதில் நீர் கொண்டுவருவது வழக்கம். ஒருமுறை கிருதவீரியன் வேட்டைக்குச் சென்று திரும்பும்போது, ரிசியின் ஆச்ரமத்துக்குத் தாகசாந்திக்காக வீரர்களுடன் வந்தான். திரும்பிச் செல்லும்போது முனிவரின் பசுத் தொழுவத்தில், யாகத்தில் காணாமல்போன பசு இருப்பதைக் கண்டான். அரண்மனை சென்று மகன் காத்தவீர்யார்ச்சுனனிடம், யாகப்பசு சமதக்கினியின் ஆச்ரமத்தில் இருப்பதைக் குறிப்பிட்டான். அர்ச்சுனன் ஆச்ரமத்துக்குச் சென்று பார்த்தபோது ரிசி இல்லை. ரேணுகா மட்டுமே தனியாக இருந்தாள். காத்தவீர்யார்ச்சுனனை, ஓரை விளையாட்டின்(நீர்விளையாட்டின்)போது ஆற்றுக்கு நீர்கொண்டுவரச் செல்லும்போதெல்லாம் கவணித்திருக்கிறாள். ஆச்ரமத்தில் தனியாகக் கண்டவுடன் மனம் தடுமாறினாள்[காரணம் அந்தப்பசுவே சோழரின் வேள்வியின்போது பரசுராமனால் கடத்தப்பட்டது என்பதை அவள் அறிவாள்]. அர்ச்சுனன் கொட்டடியில் கட்டப்பட்டிருந்த பசுவை அவிழ்த்துக்கொண்டு, ரேணுகாவிடம் சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டான். அடுத்தநாள் ஓரை விளையாட்டில் ஈடுபட்டிருந்த அர்ச்சுனனைக் கண்ட ரேணுகா மனம் தடுமாறினாள். அன்று மணலைக்கொண்டு குடம் செய்ய முடியவில்லை. அச்சத்தாலும் தடுமாற்றத்தாலும் பயந்து அழுது கொண்டிருந்தாள், வீட்டுக்குத் திரும்பவில்லை.(இவளது அச்சம் இயல்பானது, காரணம் முதல் நாள் ஆஸ்ரமத்தில் அர்ச்சுனனால் பிடித்துச்செல்லப் பட்ட பசு; பரசுராமனால் கடத்திவரப்பட்டதை அறிவாள்) வெகுநேரமாகியும் ரேணுகா வராததைக் கண்ட ரிசி சினமுற்றார். தனது ஞான திருட்டியால் என்ன நடந்தது? என்பதை அறிந்துகொண்டார்.( தொடர்ச்சியாக இராவணனும் காணப்படுகிறான். மற்றொரு புராணம் குறிப்பிடுவதைக் காண்போம்) “காத்தவீரியன்(தசரதன்=உருவப்பல்தேர் இளஞ்சேத்சென்னி) ஹைகயநாட்டு மன்னன். இவனது மகன் காத்தவீர்யார்ச்சுனன் (இராமன்=கரிகால்சோழன்) பிறந்தபோது கால்கள் நடக்கமுடியாத நிலையில் இருந்தான் (இவன் “கட்டுக்களுடனேயே பிறந்தான், தேவர்களால் கட்டப்பட்டான்" என மற்றொரு புராணம் குறிப்பிடுகிறது) இந்நிலையில் [தண்டிக்கப்பட்ட ]12 வயதுக்குப்பிறகு தெய்வ அருளாலும், தத்தார்த்ரேய(கார்வேலன்= கிருஷ்ணன்)முனிவரின் ஆசியாலும் கால்கள் வலுப்பெற்றன. வலிமைமிக்கவனாக வளர்ந்துவந்தான். நர்மதை நதியில் தனது காதலியருடன்(ஓரை விளையாட்டு) விளையாடியபோது பகைமைகொண்ட இராவணன் (அரவான், ஆயுர்வான் ஔர்வன் எனவும் பலவிதமாக குறிப்பிடுகின்றனர்) அர்ச்சுனனைத் தேடி அரண்மனைக்குச் சென்று, அங்கு இல்லாததால் நதிக்கரைக்கு வந்தான். மணலில் ஒரு லிங்கம் செய்து வழிபட்டுக்கொண்டிருந்த போது, ஓரை விளையாட்டில் இருந்த அர்ச்சுனன் நதியின் நீரை வீசிவிளையாடியதால், லிங்கமும் பூசைப் பொருட்களும் நீரால் சிதைந்தன. சினமுற்ற இராவணன் அர்ச்சுனனுடன் போரிடவந்தான், அர்ச்சுனன் இராவணனைச் சிறைப்படுத்தினான். இதனை அறிந்த அர்ச்சுனனின் தாத்தா, புலத்தியர்(அகத்தியர்-புலஸ்தியர் தக்க யாகப் பரணியிலும் இடம் பெறுகின்றனர்; இந்தப்புலத்தியர் விதுரன் = வழுதி -பாண்டிய இராவண செழியனின் தந்தை=சூத்திரன் என மாபாரதம் குறிப்பிடுகிறது) கெஞ்சிக்கேட்டுக் கொண்டதால் இராவணன் விடுவிக்கப்பட்டான்.” மாபாரதம்-சாந்திபருவம்: பரசுராமன் “மன்னனின் (இளஞ்சேத்சென்னியின்) புதல்வர்கள் எனது தந்தைக்குத் தெரியாமல் பசுவை கவர்ந்து சென்றனர்.”என சினம்கொண்டான். மஹாபாரதம்-வனபருவம்: ”சமதக்கினிக்கு ஐந்துபுதல்வர்கள் உண்டு[இது பாண்டவர்களுடன் குழப்பத்தை ஏற்படுத்த இடைச்சேர்க்கையாக இடம்பெற்றது], கடைசி மகனே பரசுராமன். தங்களது தந்தையின் கட்டளைப்படி பிற நான்கு புதல்வர்கள்; ரேணுகாவின் தலையை வெட்டிக்கொண்டுவர மறுத்துவிட்டதால் மனம்பேதளிக்கும்படி சபித்துவிட்டான், இதனால் கடைசிமகன் பரசுராமன் ரேணுகாவின் தலையைவெட்டி எடுத்துவர நதிக்கரைக்குச் சென்றான், தலையை வெட்டிக் கொண்டுவந்து சமதக்கினியிடம் ஒப்படைத்தான். தனது ஆணையை நிறைவேற்றிய பரசுராமனுக்கு இரண்டு வரங்கள் தர ஒப்புக்கொண்டார் சமதக்கினி. அதன்படி தனது சகோதரர்களைப் பழையநிலைக்குத் திரும்பிவர வேண்டியது நிறை வேற்றப்பட்டது. அடுத்து ரேணுகாவை உயிர்ப்பிக்க வேண்டினான். இதற்கு அவளது உடல் தேவைப்பட்டது. நதிக்கரைக்குத் தேடிச்சென்ற பரசுராமன் திகைத்துப்போனான்; ரேணுகாவின் உடல் காணப்படவில்லை.”இதனால் தடுமாறிய பரசுராமன் ரேணுகா போன்ற தோற்றம் கொண்ட மற்றொரு பெண்ணின் தலையை வெட்டிவிட்டு உடலை எடுத்துச்செல்ல முயன்றான். (பரசுராமனால் வெட்டப்பட்ட மற்றொரு பெண்; ரேணுகாவின் தங்கையும் கரிகால்சோழனின் மனைவியுமான ஸ்ரீ ஆவாள்; இவளது தலையை வீசிவிட்டு உடலைமட்டும் எடுத்துச்சென்றான்; இத்தலையைக் கண்ட கரிகால்சோழனின் குடும்பத்தார் அதனை "அங்கலம்மா"- அங்கமில்லாத அம்மா எனக் குலதெய்வமாகக் கொண்டனர். ரேணுகாவை அந்தர/ஆந்தர மாநிலத் தோர் தங்களது குலதெய்வமாகக் கொண்டனர்) இதனைக்கண்டு திகைத்த சிறுமியரும் பிறரும் தடுக்கமுயன்றனர். சினமுற்ற பரசுராமன் பலரையும் பரசு - வஜ்ராயுதம் - மழு என்னும் கருவியால் தாக்கிக் கொன்றான். (பரசுராமன் கொலைசெய்வதைத் தடுத்ததால் கொல்லப்பட்ட ஏழுகன்னிப்பெண்கள் "கன்னிமார்" எனக் கொண்டாடப்பட்டனர்) உடலை எடுத்துச்சென்று தந்தையிடம் ஒப்படைத்தான். உடலைக் கண்ணுற்ற சமதக்கினி; ரேணுகாவின் உடல் இதுவல்ல என்பதை அறிந்தவுடன் பதற்றமடைந்தார். ஆயினும் மனைவி ரேணுகாவின் தலையுடன் உடலை ஒட்டவைத்தும்; உயிர் கொடுக்க முடியவில்லை. நதிக்கரையில் பரசுராமன் நடத்திய கொலைவெறித் தாக்குதலால் அச்சமுற்ற பலரும் திரண்டனர். நாடுமுழுவதும் செய்திபரவியதால் சினமுற்ற கூட்டம் சமதக்கினியின் ஆச்ரமத்துக்கு விரைந்தது. சந்தடியைக்கேட்ட சமதக்கினி; புதல்வர்களை மறைந்து ஓடிவிட உத்தர விட்டார். பரசுராமன் சேரலமலைநாட்டுக்கு ஓடிவிட்டான். மாபாரதம்-சாந்திபருவம்: “பரசுராமன்' எனது தந்தைக்குத் தெரியாமல் பசுவைக் கவர்ந்து கொண்டனர்,' எனச் சினமுற்று [கிருதவீர்யா]அர்ச்சுனனின் 1000 கைகளை வெட்டினான். அர்ச்சுனனின் மகன் இதற்குப் பலிவாங்கினான். சமதக்கினியைக் கொன்றான். 'திமிர் மூர்க்கத்தனம் படைத்த அவனுடைய(இளஞ்சேட்சென்னியின்)புதல்வர்கள்தான் எனது தந்தையைக் கொன்றார்கள்.' எனப் பரசுராமன் சினமுற்றான். மாபாரதம்-வனபருவம்: "பரசுராமன்(சேரல மலைநாட்டில் மறைந்துதிரிந்து)திரும்பிவந்து; தனது தந்தை, மன்னனின் புதல்வர்களால் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து அடங்காத சினமுற்றான், 'சத்திரிய இனத்தை அழிப்பேன்' எனச் சபதமுரைத்தான்."(இளஞ்சேட்சென்னியைக் கொலைசெய்தான்.) மஹாபாரதம்-ஆதிபருவம்: "இக்குரு(சமதக்கினி-பிருகு) மோச்சமடைந்த பிறகு அவருடைய வம்சாவழியினர் வறியநிலையை அடைந்தனர். பிருகுவின் குடும்பத்தாரிடம் ஏரளமான சொத்துக்கள் இருப்பதை அறிந்ததனால் தானம்கேட்டனர். இதற்குப் பயந்த பிருகு வம்சத்தார் தங்கள் செல்வத்தை மண்ணுக்குள் புதைத்து வைத்தனர், ஒருசிலர் கொஞ்சமாகக் கொடுத்தனர். ஒருசமயம்.ஒரு சத்திரியன் பிருகுவின் வீட்டில் மண்ணைத் தோண்டியபோது மண்ணுக்குள் செல்வம் புதைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். இதனை அறிந்த பிற சத்திரியர்கள் பிருகுவம்சத்தாரின் குழந்தைகள் முதல் அனைவரையும் கொலை செய்தனர். பயந்து ஓடிய பிருகுக்கள்மீது எப்போதுமே அவர்களுக்கு வெறுப்பு இருந்தது. கர்ப்பிணிப் பெண்களும் விதவைப் பெண்களும் மலைகளுக்கு (பரசுராமன் சென்ற சேரள நாட்டு மலைகளுக்கு) ஓடிவிட்டனர். இதனை அறிந்த ஆயுர்வான்(பரசுராமன்) எல்லா சீவராசிகளையும் அழித்தொழிக்கச் சபதம்பூண்டு தியானம் மேற்கொண்டான். ஆனால் பிருகுக்களின் பித்ருக்கள் இவனிடம் 'சத்திரியர்களை பலிவாங்குவது நோக்கமாகக்கூடாது, முதுமை வாட்டுகிறபோது சத்தியர்களால் கொலை செய்யப்படுவதையே நாங்கள் விரும்பினோம், புதைத்துவைக்கப்பட்டிருந்த செல்வம் பிருகுக்களலேயே சத்திரியர்களுக்குக் காட்டிக்கொடுக்கப்பட்டது, எங்கள்மீது சத்திரியர்கள் கோபம்கொண்டு கொலைசெய்யப்பட்டு மோச்சமடைவே நாங்கள் விரும்பினோம், தற்கொலை செய்துகொள்ள விரும்பாமலே இப்படிச்செய்தோம்' என்றனர். இதனால் அடங்காத கோபத்தை ஆயுர்வான் நீருக்குள்(படைவீரரைத்திரட்டச் சதி) செலுத்தினான்.” மாபாரதம்-வனபருவம்: "பரசுராமன் நாட்டைவிட்டு மலைகளுக்கு ஓடிவிட்டான். ஒரு சமயம் விசுவாமித்திரரின் பேரன் பரவாசு-ரைபியனின் புதல்வன், ஒரு சபையில் பரசுராமனைப் பழித்து இடித்துரைத்தான்; "யயாதியின் நகரத்தில் நடைபெற்ற வேள்விக்கு வந்திருந்த பிரதர்மனும், ஏனையோரும் சத்திரியர்கள் இல்லையா? உன் சபதத்தை நீ நிறைவேற்ற வில்லை. இந்தச்சபையில் வீனாகச் சம்பமடித்துக் கொள்கிறாய். வல்லமைமிகுந்த சத்திரியர்களுக்குப் பயந்துதான் நீ மலைக்கு ஓடிவிட்டாய். இப்போது பார், சத்திரிய இனம் நூற்றுக்கணக்கில் பெருகிவிட்டது” என்றான். இதனால்; இயல்பாகவே முன்கோபக் காரனான பரசுராமன், வெகுன்டெழுந்து ஆவேசத்தோடு வெளியேறினான்.” மாபாரதம்-ஆதிபருவம்: “மலைகளில் மிகச்சிறந்த மகேந்திர மலையில் சமதக்கினியின் மகன் (பரசுராமன்) தவம் செய்தான்” (மஹேந்திர மலை என்பது திருநெல்வேலியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் நான்குநெறி வட்டத்தில் திருக்குறுங்குடியில் உள்ளது, 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரியகோயிலை; நம்மாழ்வார் பாடியுள்ளார், ஸ்ரீராமானுஜரும் இங்கு வந்துள்ளார் எனத்தெரிகிறது; மகேந்திரமலை- பொதியைப்பகுதியுடன் சேர்ந்ததாகவும் இருக்கலாம், இப்பொதியைமலையை நமது புலவர்கள் இமயத்துக்கு ஈடாகப்புகழ்ந்து பாடியுள்ளனர், கபிலரும் பாடியுள்ளார் ”பொய்யா நாவில் கபிலன் பாடிய மையணி நெடுவரை” என மிகப்பரந்த பல மலைகளையும் ஆறுகளையும் கொண்டதாகக் குறிப்பிடுகின்றனர்.) மாபாரதம்-வனபருவம்: "கீர்த்தவீரியனின் மகனும் ஹைகயாசின் மன்னனுமான அர்ச்சுனன் 1000 புயங்களை உடையவன் என்று கூறப்படுகிறது.(ஆயிரத்துக்கு மேற்பட்ட அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவன் என்பதைக் குறிக்கும்.)அவன் தத்தார்த்ரேயரிடமிருந்து(காமகோட்டங் காவல்-மெய்ச்சாத்தன்-கரவேல்-குந்தகுந்தாச்சாரியார்=கிருஷ்ணன்) தங்கத்தாலான வானூர்தி(செண்டு-வலிமை மிக்க வேலாயுதம்கொண்ட வேளிர் போர்ப்படை) பெற்றான். அது முன்னேறிச் செல்லும்போது அதனை எதிர்த்து யாரும் நிற்க முடியாது. இவ்வாறு அவன் தேவர்களையும், யச்சர்களையும், ரிசிகளையும் அடிபணிய வைத்தான். எல்லா உயிர் ராசிகளையும் அடக்கி ஒடுக்கினான். தேவர்களும், ரிசிகளும்; அர்ச்சுனனால் அவமதிக்கப்பட்ட இந்திர(முசுகுந்த பரசுராம)னுடன் சேர்ந்து, அர்ச்சுனனை ஒழித்துக்கட்ட ஒரு திட்டம்தீட்டினர்." மஹாபாரதம்-ஆதிபருவம்: இதில் வசிட்ட - அலெக்சாந்தருக்கும் தமிழ்ச்சோழன் விசுவாமித்திரருக்கும் நடந்த பூசல்கள் இடம் பெற்றுள்ளன, சத்திரிய பிராமணர்க்கும் தமிழ் அந்தணர்க்கும் இடையே சச்சரவுகள் நடந்துள்ளன, காரணம் பிராமணர்; தங்களுக்கு மட்டுமே தானம் பெறவும் பரிசில்கள் பெறவும், வேதங்களைக் கற்றுத்தரவும், புரோகிதராக இருந்து; வேள்வி நடத்தித்தரவும் உரிமை உள்ளது, பிறருக்கு இதில் எந்த உரிமையும் இல்லை என்றதாகும். இவை குறித்த சச்சரவுகளைத் திரிசங்கு என்னும் சத்தியவிரதனின் விவகாரத்தில்; திரிசங்குவுக்கு வசிஸ்டர் உதவ முன்வரவில்லை. அவரது புதல்வர்களை(சமதக்கினி மற்றும் நூற்றுவர் - துர்யோதனாதியர்) நாடித் தெற்குத்திசைக்கு வந்து 100 புதல்வர்களையும் வேண்டியபோது அவர்களும் உதவில்லை. இதனால், தென் புலத்துக்கு வந்து விசுவாமித்திரரை நாடினான். உதவி செய்யவும் யாகம் நடத்திக் கொடுக்கவும் விசுவாமித்திரர் ஒப்புக்கொண்டார். வசிட்டரது குடும்பம் உட்பட அனைத்து ரிசிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. வசிட்டரின் புதல்வர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்; "ஒருசண்டாளன்(வசிட்ட அலக்சாந்தனால் 12 ஆண்டுகளுக்குத் தண்டிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டவன் கார்வேலன்)யாகம் நடத்துகிறான், ஒரு சத்திரியன் [விசுவாமித்திரன்] புரோகிதனாகிறான், யாகத்தில் பலியிடப்படும் பலி உணவைத் கடவுளரும்(சத்திரிய பிராமணர் அலக்சாந்தரும் அவனது உறவினரும் பரசுராம துர்யோதனாதியரும்) ரிஷிகளும் (பிராமணர்)எப்படி உண்ண முடியும்; விசுவாமித்திரரின் ஆசியோடு ஒரு சண்டாளன் அளிக்கும் உணவை உண்டபிறகு மேன்மை மிக்க பிராமணர் எவ்வாறு (மகதம் அல்லது இமையத்தில் மேற்கு எல்லையில் உள்ள அலக்சாந்திரியா அல்லது மேற்காசிய மத்தியதரைப்பகுதி நாடுகள்)சொர்க்கத்துக்குச் செல்லமுடியும்?” எனக் கொடிய வார்த்தைகளைக் கூறினர். இதனைக் கேள்வியுற்ற விசுவாமித்திரர்[சானக்கியர் என்கிற விஷ்ணுகுபதர் எனப்பட்ட கவுடல்யர்]; வசிட்டரையும் அவரது புதல்வர் நூற்றுவரையும் சபித்தார். அவரது சாபம் [மாபாரதப்போரின் முடிவில்] பலித்தது. ரிசிகளும் பயந்துநடுங்கி யாகத்தை நடத்திக் கொடுத்தனர். இதனால் சுதாசன்(கரிகால்சோழன்) வசிட்டரைப் பதவிலிருந்து நீக்கினான். (மனுவின்சட்டப்படி[விஸ்வாமித்திரர் சாபப்படி]12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது) மேலும் விசுவாமித்திரரைத் தனது குலகுருவாக நியமித்துக்கொண்டான்.” சத்தியாயனபிராமணம்: இதன்படி 'சுதாசன்(கரிகால்சோழன்), வசிட்டரின் புதல்வனான சக்தியை நெருப்பில் எறிந்து கொன்று விட்டான்.(இதற்கானகாரணம் தெரியவில்லை)எனினும் ரிக்வேதத்துக்கு-காத்தியாயனரின் அநுக்கிரகமணிக்கு-சத்குரு சிஷ்யர் செய்துள்ள விளக்க உரையில் உள்ளபடி, சுதாசன் ஒருயாகம் நடத்தினான், அதில் விசுவாமித்திரரும் வசிட்டரின் புதல்வர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இதனால் கோபமுற்ற சுதாசன் சக்தியை[சமதக்கினியைக் கொன்ற மக்களின் மன்னனான கரிகால்சோழனே கொன்றதாகக் கொண்டுள்ளனர்] கொன்றான். இதனால் வசிட்டரின் குடும்பத்துக்கும் சுதாசனுக்கும் பகை நீடித்தது'. (சுதாசனின் புதல்வர் அல்லது தம்பியர் மற்றும் சோழநாட்டு மக்கள்தான் சமதக்கினியை கொன்றனர்) தைத்திரீயசமிதை: இதனை உறுதிப்படுத்துகிறது: ”வசிஸ்டர், தனது புதல்வன் சமதக்கினி கொல்லப்பட்ட பிறகு தனக்கு புத்திர சந்தானம் வேண்டி; ஏகமன்ன பஞ்சாசத்தைக் கொண்டு யாகம் செய்தார், புத்திர பாக்கியமும் கிட்டியது” என உள்ளது. கௌசிதாகிபிராமணம்: ”வசிட்டர் தனது புதல்வன் கொல்லப்பட்டபிறகு சந்ததியும் கால்நடைகளும் வேண்டி, சௌதாசர்களை(கரிகால்சோழன் மற்றும் இளஞ்சேத்சென்னியின் புதல்வர்களை)அழிக்கவும் ஒருயாகம் நடத்தினார், தாம் விரும்பியதைப் (ஒரு வாரிசை - பரசுராமனைப்) பெற்றார். சௌதாசர்களையும் வெற்றிகண்டார்” என உள்ளது. இது வசிட்டனின் அப்பட்டமான சதிச்செயலை அடிப்படையாகக்கொண்டு கரிகால் - இராமனைத் தண்டித்து நாடுகடத்திய இராமாயணத்தி அடிப்படையாகக்கொண்டது]. வசிட்டன் பெற்ற வாரிசு பராசரன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரகொற்றனின் ஆசைமனைவி(ஹெலன்) சத்தியவதியைத் திருமணத்துக்கு முன்னரே ஒரு பராசரனுடன் புணரவைத்து வியாசனைப் பெற்றதாகவும் உள்ளது. பின்னர் அந்தச்சத்தியவதுயே மற்றொருவனைப் புணர்ந்து பிம்பிசார முசுகுந்த பரசுராமனை ஈன்றாவள்! சத்தியவதியின் புதல்வரின் மனைவியர் -அம்பிகா அம்பாலிகா ஆகியோருடன் வியாசனைப் புணரவைத்துத் திருதராட்சசனையும் பாண்டுவையும் பெற்றதாக மாபாரதத்தில் பொய்யுரைத்து பீஷ்மனைப் புகுத்தியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் வசிட்டன் தனது மனைவி சத்தியவதியையும் அவளது தாயையும் கொண்டு சமதக்கினியையும் விசுவாமித்திரனை யும் பெற்றதாக மற்றொரு தகவலையும் வெளிப்படுத்துகிறது. சிலப்பதிகாரம்; இளஞ்சேத்சென்னியைப் பரசுராமன் கொன்றபிறகு சோழநாட்டின் நிலையை மாடலனிடம் செங்குட்டுவன் வினவியதாக; சேத்சென்னியின் மகளான பாவையின் மைந்தனே செங்குட்டுவன் என்பதை மறைத்து வரலாற்றைப்புரட்டுகிறது. “இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர், வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு செங்கோல் தன்மை தீதுஇன் றோ'என” இளஞ்சேட்சென்னியை 'இளங் கோ' எனக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இந்நிலையில்தான் கரிகால்சோழனும் பாவையும் பிற சோழரும் தண்டிக்கப்பட்டனர். மஹாபாரதம்-வனபருவம்: மற்றும் உத்யோகபருவம்: ”ஒருசமயம் இந்திரன் (பரசுராம முசுகுந்தன்) விருத்திரன் என்ற அசுரனக் கொன்றுவிட்டான். ஒருபிராமணனை(சேத்சென்னியை அசுரன் என ரிக்வேத மொழிபெயர்ப்பாளர்களும்; பிராமணன் எனச் சிலரும் குழப்பியுள்ளது நோக்கத்தக்கது) கொன்றுவிட்டோமே, எங்கே தன்னை பிரம்மஹத்திதோஷம்(மனுவின் தண்டனையான 12ஆண்டு) பிடித்துக்கொள்ளுமோ என்று அஞ்சி நீர்நிலைகளில்(இமையத்தின் மேற்கு அடிவாரத்தில் அலக்சாந்தனால் அமைக்கப்பட்ட அல்லஃநந்தா - மானசரோவர் ஏரியில்)போய் மறைந்து கொண்டான். சோழ - பாரதநாட்டுக்கு அரசனில்லாததனால்; ரிசிகளும் தேவர்களும் [விதுரனின் மகன்] நகுச(பாண்டியசெழிய)னை அனுகித் தங்களுடைய இந்திரனாக (சோழநாட்டுக்கும் அரசனாக)இருக்கும்படி வேண்டினர், (சத்திரியனல்லாத சூத்திரன் என்பதால்) அதற்கான அதிகாரம் தனக்கு இல்லை என முதலில் மறுத்தான். மிகவும் வற்புறுத்தியதால் பொறுப்பை ஏற்கச்சம்மதித்தான். (சிலப்பதிகாரம் இவனை; ”......இளையர் ஆயினும் பகை அரசு கடியும் செருமான் தென்னர் குலமுதல் ஆகலின்........” எனக்குறிப்பிட்டு; இப்பதவியைப் பெற்றதாகக் குறிப்பிடுகிறது. மனிமேகலையில் மேலும் விரிவான தகவல்கள் உள்ளன) இந்த உன்னத இடத்தைப் பெறும்வரை ஒழுக்கசீலனாக, பண்பாளனாக இருந்தான். அதிகாரப்போதை தலைக்கேரியதும் அறவே மாறிவிட்டான். சிற்றின்பம், கேளிக்கைக் கூத்துக்களுக்கு அடிமையாகிவிட்டான். ஒருசமயம் இந்திரனின் மனைவி (கரிகால் சோழனின் சோழமண்ணின் வளமை மற்றும் அதனை ஆள்வதற்கான ஆரம் - சீதை) இவனது கண்ணில் பட்டுவிட்டாள். இந்திராணியின் அழகில்மயங்கி மனதைப் பறிகொடுத்தான், எப்படியாவது அடையவேண்டும் என்று ஆசைப்பட்டான். இவனது தகாத ஆசையை அறிந்த இந்திராணி தேவர்களின் குருவான பிரகசுபதி அங்கிரசுவிடம் (கார்வேல் -அகத்தியரிடம்) சரணடைந்தாள். காப்பாற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது [இத்தகவலே கார்வேலனின் அகத்திக்கும்பா- அகத்தியர்குகைக் கல்வெட்டுக்களில் 13 ஆண்டுகளுக்குப்பிறகு; இந்திரன் - வஜ்ரகரனால் தொல்லைக்கு ஆளான தனது உறவுப்பெண்ணை - கரிகால்சோழனின் தையையும் அவளது குழந்தை செங்குட்டுவனையும் காக்கவேண்டி தெற்கே வந்து மூவர்கூட்டணியைச் சிதைத்து சிங்களர் ஆரியர் மற்றும் மோரியரை வென்று செழிய இராவணனை அடக்கி மணியாரங்களையும் முத்தாரங்களையும் மீட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது]. இவரது தலையீட்டைக் கேள்விப்பட்ட நகுசன் எல்லையில்லாச் சீற்றம் அடைந்தான். தேவர்கள் அவனிடம் 'அடுத்தவன் (நாட்டை - சீதையை)மனைவியை அபகரிக்கநினைப்பது நெறிகெட்டசெயல்' என்றனர். அவனோ இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. 'தான் ஒன்றும் இந்திரனைவிட (பிராமணர்களால் அவ்வப்போது இந்திரனாகக் கருதப்பட்ட பல அலக்சாந்தருள் ஒருவன்) மோசமான நடத்தை கொண்டவனல்ல, ஒரு ரிசியின் தர்மபத்தினி அகலிகையை அந்த ரிசி உயிரோடு இருந்த காலத்திலேயே ஒரு இந்திரன் கற்பழித்துக் கெடுத்தான், அப்போது நீங்கள் ஏன் அவனைத் தடுக்கவில்லை? இன்னும் எத்தனையோ காட்டு மிராண்டித்தனமான நடத்தைகளில் ஈடுபட்டான், நயவஞ்சகமான, நெறியற்ற, நீசத்தனமாக நடந்துகொண்டான், அப்போ தெல்லாம் நீங்கள் தடுக்கவில்லை' என்று வாதிட்டான். ரிசிிகளால் பதில்கூற முடியவில்லை. ரிசிகளிடம் இந்திராணியை [இந்த இந்திராணி யாரென்பது புதிரானது! காரணம் முசுகுந்த பரசுராமனின் அந்தப்புரத்தில் எத்தனையோ அழகிகள் இருந்துள்ளனர்; ஆயினும் இப்பெண் ஒரு சோழநாட்டுப்பெண் எனத்தெரிகிறது.] அழைத்துவரும்படி உத்தரவிட்டான். வேறுவழியின்றி இந்திராணியை அழைத்துவரச் சென்றனர். ஆனால் பிரகசுபதி (அகத்தியர் - கார்வேலர்) அவளைக் கைவிடத்தயாரில்லை. அவர் யோசனைப்படி இந்திராணி நகுசனிடம்: 'கணவர் [பரசுராமன்] எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கும்வரை பொறுத்துக் கொள்ளவேண்டும்' என வேண்டினாள். நகுசன் இதனை ஏற்றுக்கொண்டு அவளை அனுப்பி வைத்தான். தனது கணவனைத் தேடிக்கண்டுபிடிக்க உபசுருதியின்(இரவுக்காலத்தேவதை, ரகசியங்களை வெளியிடும் தெய்வம்) உதவியோடு தேடினாள். அவன் வடக்கே ஒரு மாகடலுக்குள் இருக்கும் ஒருகண்டத்தின் ஏரியில், வளர்ந்துவரும் தாமரைமலரின் தண்டில் மிகவும் நுற்பமான வடிவத்தில் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்தாள். தனது கணவனிடம், மீண்டும் இந்திரப்பதவி பெறும்படியும், தன்னைக் காப்பாற்றும்படியும் வேண்டினாள். நகுசன் மா பெரும்(முசுகுந்த பரசுராமனின் படைகளைக் கைப்பற்றியதோடு ஆரியவரசன் பிரகத்தனின் உதவியையும் பெற்று) வல்லமை படைத்தவனாகிவிட்டதால் உடனடியாகத் தலையிடுவது இயலாது எனக்கூறினான். மேலும் அவனை பதவிலிருந்து இறக்க ஒரு உபாயத்தைக் கூறினான். அதன்படி 'தெய்வீக எழில் கொழிக்கும் ஒரு சிவிகையை [ஆரிய]ரிசிகள் தாங்கிவர, அதில் அமர்ந்து வந்தால் அவனது இச்சைக்கு இனங்குவேன்' என நகுசனிடம் கூறினாள். மேலும் 'தேவர்கோனே, நீங்கள் விஷ்ணுவோ ருத்திரனோ [அ]சுரர்களோ அல்லது ராச்சச[சிங்கள]ர்களோ இதுவரை பயன் படுத்தியிராத ஒரு சிவிகையில் பவனிவர, அதனை [ஆரிய]ரிஷிகள் தங்கிவர நான் காணும்படியாக நீங்கள் வரவிரும்புகிறேன். அதனைக் கண்டு என் உள்ளம் களியுவகை கொள்ளும்' என்றாள். இதனைக் கேட்டு, நகுசன் மனம் குளிர்ந்தான். 'ரிஷிகள் என்னைச் சுமந்துவர வைக்கும் எனது பராக்கிரமம் சாதாரனமானதல்ல, முக்காலத்திலும் வலிமையை ஆராதிப்பவன், போற்றுபவன் நான். இந்த உலகம் எனது கோபத்தைத் தாங்கமுடியாது. எல்லாம் என்னையே சார்ந்துள்ளது, ஆதலால் ஓ! தேவதேவி! உன்விருப்பத்தை நிச்சயமாக நிறைவேற்றுவேன். ஏழு முனிவர்களும், அனைத்துப் பிராமணர்களும் என்னைச் சுமந்துகொண்டு வருவார்கள், அப்போது என் அழகு ராணியே! எனது பெருமிதத்தை, எனதுமாண்பை, எனதுபுகழ் ஒளியை, எனது வன்மையை, எனதுவெற்றிப்பொலிவைப் பார்த்துத் தெரிந்துகொள்' என்றான். (இந்நிலையில்) அகத்தியமுனிவர்[கார்வேலன்] மீண்டும் இந்திரனை(பரசுராமனை)ப் பதவியில் அமர்த்த ஒரு யாகம் நடத்தப்போவதாகவும் அதில் நகுசனை அழிக்கப்போவதாகவும்' கூறினார். (இராமாயணப்போர் நடந்தது. வெற்றிபெற்றபிறகு) இந்திரனை அழைத்துவர அக்னி அனுப்பப்பட்டான். இந்திரன் வந்துசேர்ந்ததும் அவன் இல்லாதபோது (போர்நடந்த போது) நாட்டில் நடந்ததையெல்லாம் பிரகசுபதி (அகத்தியர்-கார்வேலன்) அவனிடம் விவரித்தார். பின்னர் யமன், சோமன், வருணன், குபேரன் ஆகியோருடன் இந்திரன் விவாதித்துக்கொண்டிருந்தபோது, அகத்தியர் அங்குவந்து 'இந்திரனது பகைவன்அழிந்தான்' என்னும் செய்தியை கூறிப் பாராட்டி; அது எவ்வாறு நிகழ்ந்தது என விவரித்தார்.” மாபாரதம் பாண்டியனை 'நகுஸன்' எனக்காட்டியதோடு; 'முக்காலமும் அறிந்தவனின் பக்தன்' என அவனே குறிப்பிடுகிறான் 'முசுகுந்தனின்? பக்தன்'. இந்த நகுஷனின் கதைக்கு முன்னர், இளை - முசுகுந்த பரசுராமனால் ஏமாற்றப்பட காதலி - கரிகால்சோழனின் தங்கை நல்லியற்பாவையின் மைந்தன் ப்ரூரவன் - வேலவன் - செங்குட்டுவனின் கதை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பரசுராம முசுகுந்தன் ஆட்சியைத் திரும்பப்பெற்றதாகக் குறிப்பிடுவதற்கு மாறாக இராமனே ஆட்சிபெற்றதாக இராமாயணம் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது! இதுகுறித்த தகவல்களை வெளிப்படுத்தும் பாடல்கள்; ரிக்வேதத்திலும் பழந்தமிழ்ப்பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் சிதைக்கப்பட்டுள்ளன.
Chandrasekaran Arumugam
http://nhampikkai-kurudu.blogspot.com.

Friday, September 22, 2017

The Goddess Durga

In Hinduism, the goddess Durga, also known as Shakti or Devi, is the protective mother of the universe. She is one of the faith's most popular deities, a protector of all that is good and harmonious in the world. Sitting astride a lion or tiger, the multi-limbed Durga battles the forces of evil in the world.

Durga's Name and Its Meaning

In Sanskrit, Durga means "a fort" or "a place that is difficult to overrun," an apt metaphor for this deity's protective, militant nature Durga is sometimes referred to as Durgatinashini, which literally translates into "the one who eliminates sufferings." 

Her Many Forms

In Hinduism, the major gods and goddesses have multiple incarnations, meaning they can appear on earth as any number of other deities. Durga is no different; among her many avatars are Kali, Bhagvati, Bhavani, Ambika, Lalita, Gauri, Kandalini, Java, and Rajeswari.
When Durga appears as herself, she manifests in one of nine appellations or forms: Skondamata, Kusumanda, Shailaputri, Kaalratri, Brahmacharini, Maha Gauri, Katyayani, Chandraghanta, and Siddhidatri. Collectively known as the Navadurga, each of these deities have their own holidays in the Hindu calendar and special prayers and songs of praise.

Durga's Appearance

Befitting her role as mother protector, Durga is multi-limbed so that she may always be ready to battle evil from any direction. In most depictions, she has between eight and 18 arms and holds a symbolic object in each hand.
Like her consort Shiva, the goddess Durga is also referred to as Triyambake (the three-eyed goddess). Her left eye represents desire, symbolized by the moon; her right eye represents action, symbolized by the sun; and her middle eye stands for knowledge, symbolized by fire.

Her Weaponry

Durga carries a variety of weapons and other items that she uses in her fight against evilEach has symbolic meaning important to Hinduism; these are the most significant:

  • The conch shell symbolizes the Pranava or the mystic word Om, which indicates her holding on to God in the form of sound.

  • The bow and arrows represent energy. By holding the bow and arrows both in one hand, Durga demonstrates her control over both aspects of energy—potential and kinetic.

  • The thunderbolt signifies firmness in one's convictions. Just as a real bolt of lightning can destroy anything it strikes, Durga reminds Hindus to attack a challenge without losing confidence.

  • The lotus in Durga's hand, not yet fully in bloom, represents the certainty of success but not finality. The lotus in Sanskrit is called Pankaj, which means "born of mud," reminding the faithful to stay true to their spiritual quest amid the worldly mud of lust and greed.

  • The Sudarshan-Chakra or beautiful discus, which spins around the index finger of the Goddess, signifies that the entire world is subservient to the will of Durga and is at her command. She uses this unfailing weapon to destroy evil and produce an environment conducive to the growth of righteousness.

  • The sword that Durga holds in one of her hands symbolizes knowledge, which has the sharpness of a sword. Knowledge free from all doubts is symbolized by the shine of the sword.


  • The trident or Trishul is a symbol of three qualities: Satwa (inactivity), Rajas (activity), and Tamas (nonactivity). Deva uses these to alleviate physical, mental, and spiritual suffering.

Durga's Transport

In Hindu art and iconography, Durga is frequently depicted standing atop or riding a tiger or lion, which represents power, will, and determination. In riding this fearsome beast, Durga symbolizes her mastery over all these qualities. Her bold pose is called Abhay Mudra, which means "freedom from fear." Just as the mother goddess confronts evil without fear, Hindu scripture teaches, so too should Hindu faithful conduct themselves in a righteous, courageous way.
https://www.thoughtco.com/